Category:
ANTIHERO
” நீ இப்ப என்னதான் சொல்ல வர….
நீ சந்தேகப்பட்ட ஆள் சிவா கிடையாது .
அதே நேரத்துல நம்ம தேடுற ஆள் யாருன்னு தெரியாதுன்னு சொல்ற .
ஆனா அந்த ரெண்டு பசங்க கடத்தப்பட்டது சிவா கட்டுர பில்டிங் தான் அப்படி னு சொல்ற ….
கரெக்டா அந்த பசங்களோட மொபைல் நம்பர் கட்டாகற நேரத்துல சிவாவோட மொபைல் சிக்னாலும் அங்க தான் காட்டுது…
ஒரு வேளை அவங்க இடத்தில இருக்கலாம் இல்லையா …? எப்படி அவன் இல்லவே இல்லை னு நீ சொல்ற ….
நிச்சயமா அவன் இல்ல நானும் அவனோட எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் இந்த கேஸ்ல இன்வால்வாகாமல் தான் இருந்தேன் . கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன பத்தின ஃபுல் டீடைல்ஸ் நான் கலெக்ட் பண்ணிட்டேன் .
அப்ப தான் எனக்கு இந்த பில்டிங் ல ரெண்டு பசங்க மிஸ் ஆன கேசும் எனக்கு தெரிஞ்சுச்சு .
அந்த கேசும் கரெக்டா என் கைக்கு வந்துச்சு .
ஆனா அப்ப கூட இவனோட கால் ஹிஸ்டரியை நான் செக் பண்ணாம விட்டுட்டேன் .
ஆனா அந்த பசங்க கடத்தப்பட்ட நேரத்துல தான் இவனோட மொபைல் சிக்னல் இங்க காட்டுது .
வெறும் மொபைல் சிக்னல வச்சு மட்டும் அவன்தான் கடத்திருப்பாங்கன்னு சொல்ல முடியாது …
அதே நேரத்துல கடத்தலுக்கு துணை போயிருப்பா னு சொல்ல முடியாது .
ஃபர்ஸ்ட் அவன் ஏன் அந்த ரெண்டு பசங்கள கடத்தனும் …?
அவனுக்கு கடத்தி எதுவும் ஆகப்போறது கிடையாது .
நானும் அப்படித்தான் நினைச்சேன் ஒருவேளை அந்த கடத்தல் கும்பலோட தலைவன் இவனாக இருக்குமோ அப்படின்னு ….
ஆனா அவனோட வேலை பில்டிங் கட்றது மட்டும் தான் .
அது மட்டும் இல்லாம அது எம்எல்ஏ ஓட வீடு .
இப்போ அந்த கடத்தல் நடந்ததுக்கப்புறமா அந்த காப்பு மட்டும் தான் அவன் கைக்கு கிடைச்சிருக்கு .
அத வச்சு தான் அவன் இந்த வீட்டையும் சீக்கிரமா முடிக்கணும் அப்படி னு சொல்லிட்டு வேக வேகமா வேலையை செஞ்சுக்கிட்டு இருந்தான் .
ஆனா அந்த நேரத்துல போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிடுச்சு .
எப்படியும் லாயர் வைத்து அவனை வெளியே எடுத்துட்டாலும் அன்னைக்கு அவனோட சேர்ந்து நான் அந்த இடத்துல போய் பார்த்தேன் .
அப்ப தான் எனக்கு தெரிஞ்சுச்சு .
அங்க இருந்த ஒரு சித்தாள் சொன்னாங்க .
கரெக்டா அந்த ரெண்டு பசங்களும் கடத்தப்பட்டு ஒரு வாரம் இருக்கும் .
ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஞாயிற்றுக்கிழமை ல அங்க வேலை நடந்துச்சு னு ….
அந்த வேலைக்கு சிவா வந்து இருந்தான் .
அவன் வந்துட்டு திரும்ப ஏதோ ஒரு மீட்டிங் அப்படி னு சொல்லிட்டு போற அவசரத்துல ஃபோன இங்கேயே வச்சுட்டு போனதாகவும் மறுநாள் தான் அந்த கொத்தனார் அவன் கிட்ட ஃபோன கொடுத்ததாகவும் என்கிட்ட சொன்னாரு . அப்ப தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .
நிச்சயமா நம்ம தேடுற ஆளா அவன் கிடையாது னு …
அது மட்டும் இல்லாம நம்ம நினைக்கிற அளவுக்கு அவ்வளவு ஒர்த்தான கேங்ஸ்டர் எல்லாம் அவன் கிடையாது . அவனே ஒரு முட்டா பீசு …. ” என்று அவள் பேசி முடிக்கவும் சரியாக அவளது வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்தது .
யார இவன் முட்டா பீசு னு சொல்றா….
ஒருவேளை நம்மள தான் சொல்லியிருப்பாளோ…? என்ற ரீதியில் பாதியை மட்டும் காதில் வாங்கி விட்டு வந்தவனால் ஒரு முடிவுக்கு வரவில்லை .
அவளை ஒரு முறை பார்த்தவாறு காலை உணவு சாப்பிட்டு கை கழுவு வந்தவனுக்கு அப்படியே சிங்கிள் கையையும் கழுவி விட்டு அங்கிருந்த சென்று விட்டான் .
அன்று போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு சைட்டுக்கு அவளை அழைத்து சென்றவுடன் அங்குள்ள சித்தாள் மற்றும் கொத்தனாரியிடம் பேசி அவனது மொபைல் சிக்னல் எவ்வாறு அங்கு இருந்தது என்பதை பற்றியும் தெரிந்து கொண்டவளுக்கு ஒரு முடிவும் கிடைத்துவிட்டது .
அதே நேரத்தில் முழுதாக இந்த கேஸிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் அந்த கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் .
அவர்களது நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அவளது யோசனை முழுக்க இருந்தது .
அதன் பிறகு இரண்டு நாட்கள் அவன் வேலைக்கு செல்ல மதியம் அவள் தானே உணவை எடுத்து சென்றவாறு இருந்தாள் .
அப்படியே அந்த இரு நாட்களும் கழிய அவன் சென்னை புறப்பட வேண்டிய நாளும் வந்தது .
இன்று தான் கிளம்ப வேண்டும் அதே நேரத்தில் போலீஸ் வேறு ஒரு பக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம் ஊரை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரித்ததும் அவனது நினைவிற்கு வந்தது .
அதையும் அவன் பொறுப்பெடுத்தாமல் தவறு என் மீது இல்லை என்ற ரீதியில் நான் ஏன் அவர்களுக்கு பயந்து எனது தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றவாறு சென்னைக்கு இன்று ஏற்கனவே மகேஷிடம் பேசிய விடயமாக கிளம்பி கொண்டிருந்தான் .
மகேஷ் இன்று தான் சாராவின் தந்தை இடம் தனது திருமண விடயத்தை பற்றி பேசுவதாக இருப்பதால் தனது நண்பனிடம் ஏதேதோ பொய் கூறி நீ முன்னே செல் நான் எனது வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்ற ரீதியில் கூறி இருந்தான். தனக்கு தெரியாமலா போகப் போகிறது என்ற ரீதியில் அவனும் விட்டுவிட்டான்.
ஏற்கனவே ஜெயாவிடம் இந்த விடயத்தை பற்றி கூற அவர் தான் தற்பொழுது செல்ல வேண்டாம் என்று கூறியும் , அவன் கேட்காமல் நிச்சயம் அங்கு தான் கட்டப் போகும் பில்டிங் விடயத்தை பற்றி பேசுவதற்காகவே செல்வதாக கூறியிருந்தான் .
இப்பொழுது மகேஷ் வேறு வராததன் காரணமாக ஜெயா ஷர்வானியை அழைத்து செல்லுமாறு கூறியிருந்தார் . அவனுக்கு அவனை அழைத்து செல்வது துளி கூட விருப்பமில்லை அதையும் தாண்டி தனது தாய் கூறுகிறாரே என்ற ரீதியில் அறைக்குள் சென்று தனது உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான் .
அங்கு வந்த ஷர்வானி அவனிடம் பேசினாள் .
” நீங்க இந்த கேஸ்ல சம்மந்தப்படலன்றது எனக்கு நல்லாவே தெரியும் .
அதே நேரத்துல உங்க மேல போலீசுக்கு சந்தேகம் இருக்கு தான் .
வெறும் மொபைல் சிக்னல் வச்சுக்கிட்டு அவங்க பேசுறது எனக்கே முட்டாள் தனமா தோனலாம் .
இருந்தாலும் அவங்க டுயூட்டியை அவங்க பாக்குறாங்க .
இந்த நேரத்துல நீங்க வெளியூர் போறது எனக்கு சரி னு தோனல .
அங்க வந்து ஏதாவது பிரச்சனை அப்படின்னா அது உங்க கெரியாருக்கே ஆபத்து……!
என்ன பெரிய ஆபத்தாக போகுது…?
எந்த ஆபத்தாக இருந்தாலும் நான் தனியாவே சமாளிச்சுக்குவேன் .
நீ என்கூட வரதா இருந்தா வா …
அப்படி இல்லன்னா பேசாம இங்கேயே இரு ,
அங்கேயும் வந்து எனக்கு இதே மாதிரி அட்வைஸ் பண்ணாத !
நீ வந்து என் கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல . ஏதோ அம்மா சொன்னாங்க என்ற காரணத்துக்காக தான் உன்னையும் கூட்டிட்டு போறேன்…
உன்னை கூட்டிட்டு போகலைன்னா நமக்குள்ள என்ன டீலிங் போகுது அப்படின்னு அம்மாக்கு தெரிஞ்சா அம்மா தான் வருத்தப்படுவாங்க .
கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே நமக்குள்ள இருக்கிறது அவர்களுக்கு காட்டிக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் …. ” என்று கூறியவன் தனது உடைகளையும் தனக்கு தேவையான உடைமைகளையும் தனது பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அதன் பிறகு அவளும் அவனோடு கிளம்பி போவது தான் சரி என்று அழைக்கப்பட்டது இனிமேல் அங்கு ஏதாவது பிரச்சனை என்றால் நிச்சயமாக அதை தீர்க்க வேண்டும் என்று ரீதியில் அவளும் அவனோடு தனது உடைகளை எடுத்து வைத்தவாறு மாடியில் இருந்து கீழே இறங்கினர் இருவரும் …..
ஜெயாவிற்கும் தனது மகனைப் பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் .
அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தனியாக போவது சரி இருக்காது என்ற காரணத்தினாலே இந்த பயணமாவது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கட்டும் என்ற ரீதியிலேயே அவளையும் அழைத்துச் செல்லுமாறு கூறி வைத்திருந்தார் .
அதற்கும் அவன் முடியாது என்று மறுக்க மாட்டான் என்பது அவருக்கும் தெரிந்தது.
தனது பேச்சிருக்கு இவ்வளவு மரியாதை தருபவன் தனது எண்ணத்திற்கு ஈடு கொடுக்காமல் இவ்வாறு செய்து கொண்டிருப்பது தான் அவருக்கு வருத்தத்தை கொடுத்தது .
எனினும் அவர்கள் நிச்சயமாக ஒன்றாக சேர்ந்து வாழும் காலமும் கூடிய சீக்கிரம் வரும் .
அதற்கு அடிப்படையாகவே இந்த தனிமையான பயணம் அமையப் போகிறது என்றவாறு மாடியில் இருந்து இறங்கி வரும் தனது மகனையும் மருமகளையும் நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் .
இருவரும் கீழே வந்த உடன் சிவா தனது தாயிடம் பத்திரமாக இருக்குமாறும் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுமாறும் கூறினான் .
” அம்மா நாங்க அங்க வேலை முடிஞ்ச உடனே சீக்கிரமா வந்திருவோம் .
நீங்க ஒழுங்கா டேப்லெட் போட்டுக்கோங்க .
உங்களுக்கு தனியா இருக்க ஓகே இல்லைன்னா மகேஷ் அம்மாவ வேணா கூட துணைக்கு கூப்பிட்டுக்கோங்க சரியா …. “என்று கூறியவாறு வர்வாணி அவரை கட்டியணைத்து விடை பெற்றாள் . தனது அம்மாவிடம் இவள் இவ்வாறு உரிமையாக பேசுவதும் கட்டியணைப்பதும் சிவாவிற்கு தான் கடுப்பாகி போனது .
அவரிடம் பேசி விட்டு காரில் சென்று தனது பேக்கை வைக்க சென்றவன் மறுபடி வீட்டிற்குள் வரும் போது அவர்கள் இருவரும் அணைத்து பிரிந்ததை பார்த்தபோது அவனுக்கு தான் நீ மட்டுமா தனது தாயை கட்டியணைப்பாய் …!
நானும் தான் அணைத்து விடுவேன் என்ற ரீதியில் அவள் விலகிய அடுத்த நிமிடமே அவனும் தனது தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவாறு விடை பெற்றான் .
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷர்வானி தான் கடைக்கண் பார்வையில் அவனை பார்த்தவாறு சிரித்துக்கொண்டாள் .
அவர்களது கார் வீட்டை விட்டு தாண்டும் போதுதான் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு அவர் தன்னை பார்த்து சிரிக்கிறாள் என்பது அவனால் உணர முடிந்தது .
ஜெயாவும் அவர்கள் சென்றவுடன் கேட்டையும் சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று கதவையும் அடைத்துக் கொண்டார் .
இவளுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா என்று ரீதியில் அவளை கண்டும் காணாதவாறு ரோட்டில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான் .
அவன் சொந்தமாக கார் வைத்திருப்பதால் காரிலேயே சென்றுவிடலாம் என்பது அவனது முடிவாக இருந்தது .
அதுபோக மகேஷும் அவனும் சென்றிருந்தாலும் கூட அவர்கள் இவ்வாறு காரில் செல்வது தான் வழக்கம் ,
பஸ் ட்ரெயின் என்றால் நிச்சயமாக அலைச்சல் , அது போக அசதி வேறு வந்துவிடும் .
அதன் காரணமாக அங்கு நடக்கப் போகும் மீட்டிங்கில் ஏதாவது பிரச்சினை வந்து விடக்கூடாது என்பது அவனது எண்ணமாக இருந்ததால் அவனது காரிலேயே கிளம்பி விட்டார்கள் .
பஸ் ஸ்டாண்ட் தாண்டி கார் சென்று கொண்டிருக்க அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது அழைத்தது என்னவோ மகேஷ் தான்.
ஆனால் ஏன் இவ்வளவு சீக்கிரமாக அழைக்கனும்…?
ஒருவேளை அவனது வேலை முடிந்து விட்டதா என்று நினைத்தவாறு பேசிய அவன் மறுமுனையில் கேட்ட தகவலில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருந்தான் .
காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவன் பேசி முடித்தவுடன் ஏதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்த அவள் என்ன என்று விசாரித்தாள் .
“என்னாச்சு சிவா எதுக்காக யோசிச்சிட்டு இருக்கீங்க …?
ஏதாச்சும் பிரச்சனையா….” என்று சாதாரணமாக அவன் தோள் தொட்டு பேசியது தான் அவனை நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது .
“ஹான் பிரச்சனை தான்!
மகேஷுக்கு இப்ப அவசரமா கார் தேவைப்படுதாம் .
அவனோட கார் திடீர் னு ஏதோ பிராப்ளம் ஆகிட்டு போல ….
இன்னைக்கு அவன் எதுவும் முக்கியமான வேலை பார்க்க போறேன் அப்படி னு சொன்னாம் .
என்ன வேலை அப்படி னு என் கிட்ட சொல்லல .
ஆனா பர்ஸ்னலா ஏதோ பண்றான் னு மட்டும் எனக்கு தெரியுது….
நானும் என் கிட்ட விஷயம் வரப்ப தெரிஞ்சுக்கலாம் னு விட்டுட்டேன்….
சரி அண்ணா கிட்ட கார் வேணும்னா நீங்க கொடுத்து விட்டுருங்க . நம்ம பஸ்ல போய்க்கலாம் … ” என்று அவள் பேசி முடிக்க அவன் தான் ஆச்சரியமாக பார்த்தான் .
மகேஷுக்கும் இவர்கள் இருவரை பற்றிய அனைத்து விடயங்களும் தெரியும் ,
இன்னும் தெளிவாக கூற போனால் அவளை திருமணம் செய்வதற்கு முன்பாக இருந்து அவனது எண்ணங்கள் என்பது என்ன என்பது அவனுக்கு தெரிந்தும் ஆனால் ஷர்வானியிடம் அவன் நினைத்திருந்தால் பேசி இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் .
ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை .
ஏன் திருமணம் முடிந்து கூட அவனை பற்றி கூறவில்லை .
இப்பொழுது இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் விவாகரத்து ஆகப் போகிறது என்று தெரிந்தும் அதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை .
ஏன் அவனோடு சேர்ந்து வாழ் என்று கூட கூறவில்லை .
அப்படி இருக்கும் பட்சத்தில் இவள் அவனை அண்ணா என்று அழைப்பதும் அவனுக்காகவே உணவெல்லாம் சமைத்து வந்து கொடுப்பதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .
இவளிடத்தில் நிச்சயமாக வேறு ஒரு பெண் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனது நண்பனை உண்டு இல்லை என்ற செய்திருப்பாள் .
ஆனால் அவளும் அதற்கு மாறாக அவனிடம் அண்ணன் என்று பாச பொழிந்து கொண்டிருக்கிறாள்….!
ஏதேதோ சிந்தனைகளில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை மீண்டும் நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது அவளது குரல் தான் ……!
- தொடரும்🖤🖤🖤
மகேஷ் பில்டிங் வந்து பார்க்க அங்குள்ள கொத்தனார் மற்றும் சித்தாள் மூலமாக அவனை போலீஸ் கைது செய்து விட்டு சென்ற விடயம் அவனுக்கு தெரிந்தது.
உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றவன் அங்கு உள்ள காவல் அதிகாரியிடம் விசாரிக்க , ஏற்கனவே இந்த பில்டிங்கில் இரண்டு பேர் காணாமல் சென்றதும் அதற்கு காரணம் சிவா தான் என்று அவர்கள் சந்தேகப்படுவதால் காவலில் எடுத்து விசாரிக்க வைத்திருக்கிறோம் என்று தெரிவித்து வைத்தனர் .
தற்பொழுது மகேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .
உடனடியாக ஜெயாவிடம் இந்த விடயத்தை தெரிவித்தால் அவர் பதட்ட படுவார் என்று நினைத்த அவன் சர்வாணிக்கு மட்டும் அழைத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தான் .
அடுத்த பத்தாவது நிமிடத்தில் காவல் நிலையம் வந்தவள் நேராக அங்குள்ள காவல் அதிகாரியிடம் சென்று பேசினாள் .
“சார் அந்த பில்டிங் ல தான் ரெண்டு பசங்க காணாமல் போயிருக்காங்க என்ற விஷயம் எனக்கும் தெரியும் .
நானும் ஒரு டிடெக்டிவ் தான் .
ஆனா அதுக்கு காரணம் இவரு கிடையாது .
எந்த அடிப்படையில் இவர் தான் அவங்க காணாம போனதுக்கு காரணம் னு நீங்க கைது செஞ்சுட்டு வந்து இருக்கீங்க .
ஒருவேளை உங்க போலீஸ் ஆட்கள் யாராச்சும் அவரு அந்த பசங்கள கடத்துனது பார்த்தார்களா…?
இல்ல அந்த பசங்க கடத்துறப்ப அவரு கூட இருக்கிறத தான் பார்த்தார்களா…? இல்ல தானே!
அப்படி இருக்கிறப்போ எப்படி இவங்க தான் அதுக்கு காரணம்னு நீங்க சொல்லலாம்…?
ஹலோ மேடம் கரெக்டா அந்த பசங்க ரெண்டு பேரும் கடத்தப்பட்ட இடம் இவரோட பில்டிங் தான் .
அது மட்டும் இல்லாம அவங்க ரெண்டு பேரும் கடத்திருக்கிறப்போ இவரும் சைட் ல தான் இருந்திருக்காங்க .
சைட்டு ல இருந்தவங்களுக்கு எப்படி அவங்க இடத்துல ஒரு கடத்தல் நடக்கிறது தெரியாம இருக்கும் ஒன்னு இவரு தான் ஆளு வச்சு அந்த பசங்கள கடத்தி இருக்கணும் .
அப்படியும் இல்லையா கடத்தல் காரங்களுக்கு உதவி பண்ணி இருக்கணும் .
இவர ரொம்ப நாளா நாங்க கண்காணிச்சு தான் இருந்தோம் .
கரெக்டா அந்த பசங்களோட மொபைல் சிக்னல் கட்டாகறப்போ அங்க காமிச்சா இன்னொரு நம்பர் இவரோட மொபைல் சிக்னல்…!
நீங்க எங்க வேணா போய் பேசிக்கோங்க விசாரணை முடியுற வரைக்கும் இவரை எங்களால் வெளியில் விட முடியாது …..” என்று லாப கப்புக்குள் சிவாவை தள்ளி பூட்டினார் அந்த போலீஸ் அதிகாரி .
அவள் அவள் கண்காணித்தவரை கடைசியாக கடத்தப்பட்டவர்களின் மொபைல் சிக்னல் கட்டான இடம் தான் சிவாவின் பில்டிங் என்பது வரை மட்டும் தான் ….
அதை தாண்டி அவளுக்கு சிவாவின் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
அவள் அவனிடம் இருக்கும் தடயத்தை என்னவென்று கேட்டது கூட இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன எடுக்கலாம் என்பதற்காகவே கேட்டாள் .
மத்தபடி அவன் மீது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது .
ஆனால் தற்பொழுது அந்த காவல் அதிகாரி கூறும் விடயம் அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது .
நிச்சயம் இவன் இருக்கையில் இவ்வாறு ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றால் ஒருவேளை அந்த கடத்தல் கும்பல் இவனுக்கு தெரியாமல் தான் இவனது பில்டிங் லேயே அவர்களை கடத்தி இருக்க இயலும் என்பது அவளது வாதமாக இருந்தாலும் ,அதை கேட்பதற்கு காவல்துறையினர் தயாராக இல்லை .
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவனை ஜாமினில் வெளியே எடுத்தால் மட்டுமே அவனிடம் என்னவென்று பேசலாம் என்று முடிவெடுத்தல் உடனடியாக தனக்கு தெரிந்த லாயரையும் தொடர்பு கொண்டாள் . மகேஷ் லாகபின் நின்று கொண்டிருந்தது தனது நண்பனிடம் சென்று கத்திக் கொண்டிருந்தான் .
“அப்பவே உன்கிட்ட சொன்னேனே கேட்டியா இந்த விஷயத்தை அவ கிட்ட கொண்டுட்டு போகலாம் அப்படி னு…
நீ தான் கேட்கவே இல்லை .
இப்ப பாரு எங்க வந்து நிக்குது !
இப்ப வேற அவங்க என்னென்னமோ சொல்றாங்க . ஏதோ நம்ம இருக்கிறப்பயே கடத்தல் நடந்திருக்கிற மாதிரி சொல்றாங்க…!
ஏன் டா எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்குற நீ ஷர்வானிய பார்த்த ஒரு நாளிலேயே இப்படி அவ மேல வெறுப்ப அள்ளி வீசுற ….
இப்ப கூட உனக்காக அந்த போலீஸ் ஆபீஸர் கிட்ட பேசுறது அவ தான் .
உனக்கு ஏன் அது புரியவே மாட்டேங்குது எனக்கு தெரியல…. ” என்று பேசுபவனிடம் எந்த பதிலும் கூறாமல் சிறிது நேரம் அவளையே பார்த்தவன் லாக்கப்பில் ஒரு மூலையில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான் .
இதற்கு பின்பும் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் என்று நினைத்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த விர்வானியிடம் வந்தான் .
“என்னம்மா உன் சைடு ல இருந்து யாராவது நாயே வராங்களா இல்ல என் ஃபிரண்ட்ஸ் மூலமா ஏதாச்சும் ட்ரை பண்ணவா …..?
என்னோட பிரண்டு ஒருத்தன் லாயர் தான் .
நான் அவனுக்கு கால் பண்ண . அவன் இப்ப பெங்களூர்ல இருக்கானா ம வரத்துக்கு ரெண்டு நாள் ஆகும் னு சொல்றாங்க .
ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போய் இருக்கானாம்
அவன் தான் பெஸ்ட் லாயர் கூட ….
அவன் வந்தா நிச்சயமா நம்ம அவர வெளியில எடுத்து விடலாம் .
ஆனா அவன் வரதுக்கு ரெண்டு நாள் ஆகும் ,
ரெண்டு நாள் வரைக்கும் அம்மா கிட்ட என்ன பதில் சொல்றது னு எனக்கு தெரியல !
இப்பயே அவசர அவசரமா கிளம்பி வரத பாத்துட்டு எங்க போற னு கேட்டாங்க .
நான் தான் பிரண்ட பாக்க போறேன் னு சொல்லிட்டு வந்துட்டேன் .
அவங்களுக்கு அதிலேயே சந்தேகம் வந்தாலும் வந்து இருக்கும் ,
அவங்க கிட்ட இப்போ இவரு உள்ளே இருக்காரு னு சொன்னா நிச்சயமா ரொம்ப வருத்தப்படுவாங்க .
அவங்களுக்கு ஹெல்த் இஷூ இருக்குது வேற …
நீங்க உங்க சைடுல யாராவது லாயர் இருந்தா பேசி பாருங்க…
சரி இரு மா என்னோட ஸ்கூல் படிச்ச ஒருத்தன் லா காலேஜ் ல தான் படிச்சான் ,
அதுக்கப்புறம் அவனோட பேசுறது இல்ல .
நான் வேணா என் பிரண்டு மூலமா அவன் இப்போ எங்கள் லாயரா இருக்கான் னு கேட்டு பாக்குறேன்…..” என்று கூறியவன் உடனடியாக தனது நண்பனை அழைத்து அவனைப் பற்றி விசாரித்தான் .
அவனது பதிலும் என்னவோ பூஜ்ஜியமாக இருக்க நிச்சயமாக இரு நாட்கள் அவனுக்காக காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா…?
இல்லை இந்த ஊரில் வேறு ஏதாவது பெஸ்ட் லாயரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அவனை வெளியே கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
திருமணத்தன்று வந்திருந்த அவளின் நெருங்கிய தோழனுக்கு அழைத்து பேச அவனும் சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு ஒரு லாயரை வரவழைத்து இருந்தான் .
அடுத்த பத்தாவது நிமிடத்தில் சரியாக அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட , அவனும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர காவல்துறையினர் இன்னும் அவன் மீது சந்தேகத்தில் இருப்பதால் ஊரை விட்டு எங்கே வெளியேவும் செல்லக்கூடாது .
அதுபோக ஆவணி கண்காணிப்பதற்கு இன்று மட்டி போலீசையும் வைத்திருந்தனர் . இந்த விடயம் ஷர்வானி சிவா மகேஷ் என மூவருக்குமே நன்றாக தெரிந்தும் இருந்தது . ஷர்வானி அதன் பிறகு எதுவும் பேசாமல் அவள் வந்திருந்து ஸ்கூட்டிலேயே சிவாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள் .
மகேஷ் அவனது வேலையையும் ஓரம் தள்ளி விட்டு சிவா உடன் இணைந்து அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .
இந்த கேஸ் விஷயமாக நிச்சயமாக சிவா எதுவும் அவளிடம் கூறப்போவதில்லை .
ஏனெனில்அவனுக்கு அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருப்பவனை நம்புவதில் இனி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அவளிடம் இன்று பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டிற்கு சென்றான் .
வீட்டிற்குள் மூவரும் நுழைய ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை சற்று நேரத்திற்கு முன்பு அரக்க பறக்க வுர்வானி கிளம்பி போனதையும் தற்பொழுது மூவரும் வந்திருப்பதையும் பார்த்து என்னவென்று கேட்பதற்காக அவர்கள் அருகில் சென்றார் .
“என்ன டா நீ போன வேகத்திலேயே வந்துட்ட !
அது மட்டும் இல்லாம உன் கூட இவனுங்க ரெண்டு பேரும் வந்துருக்காங்க .
இந்நேரத்துக்கு அவங்க சைட்ல தானே வேலையில் இருப்பாங்க .
அது மட்டும் இல்லாம இப்போ வேலைய வேற சீக்கிரம் முடிக்கணும் னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க . அது எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்திருக்காங்க…” என்று ஜெயா பேசிக் கொண்டிருக்க அவளுக்கு தான் என்ன கூறுவது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க மகேஷ் பேசினான் .
“அது ஒன்னும் இல்லமா முக்கியமான பைல் வீட்ல வச்சுட்டு போய்ட்டானாம் .
அதனால தான் எனக்கு கால் பண்ணி எடுத்துட்டு வர சொன்னான் . நான் கொஞ்சம் வெளியில இருந்ததினால நான் வர லேட் ஆகும் .
நீயே போய் எடுத்துக்கோ அப்படி னு நான் தான் சொன்னேன் . அதுக்குள்ள என் வேலையும் முடிஞ்சு சரியா நானே போய் எடுத்துட்டு வரலாம் னு வந்தா கரெக்ட்டா இவனும் இங்க வந்துட்டான் அதாம்மா …. “
என்று கூறியவன் சிவாவையும் தள்ளி கொண்டு அவனது அறைக்குள் சென்று விட்டான் .
இதற்கு மேல் நின்னால் ஏதாவது கேள்வி கேட்பார்கள் என்று ரீதியில் ……
சரி மா ஜூஸ் போட்டு கொண்டு வரேன் என்று சமையலறைக்குள் நுழைந்த ஜெயா அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஜூஸ் உடன் வர அதை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள சிவாவின் அறைக்கு சென்றாள் .
அறை வாசலிலேயே மகேஷ் கத்திக் கொண்டிருக்கும் சத்தம் அவளுக்கு நன்றாகவே கேட்க அறைக்குள் வந்தவள் கதவையும் சாத்திவிட்டு இருவரிடம் பேசினாள் . சுற்றிலும் வயல் இருக்க தாண்டி ஒரு தென்னந்தோப்பு காணப்பட்டது தென்னந்தோப்பில் வெளிச்சத்திற்காக ஒரே ஒரு பேட்டரி லைட் மட்டும் வைக்கப்பட்டு இருக்க அங்குள்ள மரங்களில் உள்ள தென்னங் கொலையை பாதுகாப்பதற்காகவே காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .
தோப்பிற்கு உள்ளே செல்ல செல்ல வெளிச்சம் என்பதே கிடையாது . கிட்டத்தட்ட தோப்பு ஆரம்பித்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து சென்ற பிறகு ஒரு இடத்தில் அந்த உருவம் நின்றது .
அந்த உருவத்திற்கு நேர் எதிராக இருந்த இரண்டு மரங்களில் 18 பிராயம் மிக்க இரு ஆண்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர் .
தனது கையில் வைத்திருந்து பேட்டரி லைட்டை அங்கு ஓரமாக வைத்துவிட்டு அருகில் கிடந்த சாறு எடுத்து அவர்கள் இருவரின் முன்பு போட்டு அமர்ந்தது அந்த உருவம் . அந்த இருவரும் மயக்கத்தில் இருக்க அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை .
அவர்களது முகத்தில் தண்ணீரை ஊற்றி மயக்கத்தை கலைத்த அந்த உருவம் இருவரையும் நோக்கியது .
மயக்கம் தெளிந்த இருவரும் தாங்கள் எங்கிருக்கிறோம் என சுற்றி முற்றி பார்க்க அவர்களுக்கு தெரிந்தது என்னவோ அந்த கருப்பு உருவம் மட்டுமே .
அதைத் தாண்டி தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பது அவர்களால் உணரப்பட்டது .
கட்டப்பட்ட இரு ஆண்களில் ஒருவன் சீற்றம் கொண்டு அந்த உருவத்திடம் கத்த தொடங்கி விட்டான்.
“ஏய் யாருடா நீங்க எல்லாம் எதுக்காக எங்க ரெண்டு பேரையும் கடத்தி வச்சிருக்கீங்க…
நாங்க ரெண்டு பேரும் டியூஷன் போயிட்டு எப்பயும் விளையாடுற கிரிக்கெட் கிரவுண்ட்ல இருக்கும் போது எதுக்காக இப்படி எங்கள கடத்திட்டு வந்து இருக்கீங்க…?
எங்க கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க . நீங்க நினைக்கிற மாதிரி எங்க அப்பா அம்மா ஒன்னும் அவ்வளவு வசதி கிடையாது .
நீங்க கேட்கிற காசை கொடுக்குறதுக்கு …
அது மட்டும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே மிடில் கிளாஸ் தான் எங்க கிட்ட இருந்து என்னதான் எதிர்பார்க்கிறிங்க…?”அவன் பேச பேச சிரித்த அந்த உருவம் ” உங்க ரெண்டு பேரு கிட்டயும் நாங்க எதிர்பார்க்கிறது உங்கள தான்!
உங்க அப்பா அம்மா கிட்ட இருந்து எங்களுக்கு னு எதுவும் தேவை கிடையாது .
அட் தி சேம் டைம் உங்க அப்பா அம்மா எங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா அப்புறம் இங்கிலீஷ்ல அவங்களையும் சேர்க்க வேண்டியதா இருக்கும் ……!
நீ சொல்றது எனக்கு புரியல . எங்க ரெண்டு பேரு வச்சு நீங்க என்ன பண்ண போறீங்க….
அது போக போக உங்களுக்கே புரியும் …. “என்று அந்த தென்னந்தோப்பு அதிர சிரித்த அந்த உருவம் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஊசியை எடுத்து இருவருக்கும் குத்தியது திரும்பவும் இருவரும் மயக்க நிலைக்கு சென்றனர் .
அவர்கள் இருவரும் மயங்கி விட்டனர் என உறுதி செய்த அந்த உருவம் தனது கைபேசியில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தது .
“ஹலோ நீ சொன்ன மாதிரி நான் தோப்புக்கு வந்து பசங்கள பாத்துட்டேன் .
அவங்க ரெண்டு பேருமே நல்லா தான் இருக்காங்க .
என்ன ரெண்டு பேர் ல ஒருத்தன் தான் சும்மா நொய் நொய் னு பேசிக்கிட்டே இருக்கான் .
இன்னொருத்தன் சரியான பயம் தான் கொள்யா இருப்பான் போல…
அவன் பேசுவதை பார்த்து கூட பயப்படுறான் .
ஆனா இன்னொரு தடவை நிச்சயமா அவங்க கண் முழிச்சிட்டா நம்மளால சமாளிக்க முடியாது னு எனக்கு தோணுது .
இந்த தோப்புல உள்ள ஆட்களுக்கு தெரியாம தான் நம்ம இவங்கள கடத்தி வச்சிருக்கோம்.
யாருக்காவது தெரிஞ்சிருச்சுன்னா இந்த கிராமத்துல உள்ள மக்கள் நிச்சயமா நம்மள சும்மா விட மாட்டாங்க …..
ரொம்ப நாளைக்கு யாருக்கும் தெரியாம இவனுங்கள இங்க வச்சுக்கிறது இம்பாசிபிள் .
கூடிய சீக்கிரம் ஒரு பாதுகாப்பான இடத்தை பாரு நம்மை இவங்கள மாத்திடலாம் ……
இடியட் நான் சொல்றத நீ செய்யணும் .
நீ சொல்றத என்னால தான் செய்ய முடியாது .அங்க உள்ள மக்கள் யாரும் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்காம நீ தான் பாத்துக்கணும் ,
அதுக்காக தான் உனக்கு மாசத்துக்கு லட்சக்கணக்குல சேலரி கொடுத்துக்கிட்டு இருக்கேன் அந்த ரெண்டு பசங்க நமக்கு முக்கியம் தான் ஆனா அவங்கள மிஸ் பண்ணிட கூடாது . அதே நேரத்துல அவங்க நமக்கு இப்ப முக்கியம் இல்ல அப்பதான் பார்ட்டி கிட்ட கொடுக்க முடியும் .
ஓகே பாஸ் நான் இந்த கிராமத்திலேயே வேலை செய்றவன் மாதிரி இருந்து தோப்புக்குள்ள இந்த இடத்துல மட்டும் யாரும் வராத மாதிரி நான் பாத்துக்குறேன்……” என்று கூறியவன் அழைப்பையும் துண்டித்து விட்டான் .
எனினும் அவனுக்கு நிச்சயமாக இந்த தோப்பில் யாராவது பார்த்து விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தினால் , உடனடியாக அவனது ஆட்களுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் இருவரையும் அங்கிருந்த பூட்டி கிடந்த ஒரு பண்ணை வீட்டில் சென்று அடைத்தான் .
கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தவள் இருவரிடமும் பொறுமையாக பேச ஆரம்பித்தாள் .
“நீங்க ரெண்டு பேரும் கத்துக்கிட்டு இருக்கிறது கீழ வரைக்கும் கேக்குது.அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயமா டென்ஷன் ஆகுவாங்க . ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க எதா இருந்தாலும் பொறுமையா பேச தெரியாதா…?
சாரி மா எதோ ஒரு வேகத்துல நான் தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டன் ……”என்று மகேஷ் கூற சிவாவும் அவர்கள் என்ன பேசினால் எனக்கு என்ன என்று ரீதியில் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டான் . எனக்கும் இங்கு நடப்பவைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் …….
“மச்சான் இப்ப கூட அந்த பொண்ணு உன் அம்மாவுக்காக தான் பேசிகிட்டு இருக்கு ,
ஆனா நீ இங்க எதுவுமே நடக்காத மாதிரி இப்படி ஓரமாக போய் உட்கார்ந்து இருக்க…
உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க….?
இப்ப உன் கைக்கு கிடைச்ச காப்ப அவகிட்ட குடுடா .
என்ன நடந்துச்சுன்றதை தெளிவா சொல்லு அப்ப தான் இந்த பிரச்சனை ல இருந்து நம்ம முழுசா வெளியில் வர முடியும் .
ரொம்ப நாளைக்கு இந்த விஷயத்தை நம்ம அம்மா கிட்ட இருந்து மறைக்க முடியாது.
என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு தெரிய வரப்ப நிச்சயமா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க……
டேய் நான் முன்னாடி சொன்னது தான் இப்பயும் சொல்ற!
என்கிட்ட கிடைச்சது வெறும் காப்பு மட்டும் தான் அந்த காப்பு லயும் ஏதோ ஒரு ரத்தக்கரை இருந்துச்சு .
இந்த காப்ப வச்சு அவ என்ன பண்ண முடியும் . எதுவும் பண்ண முடியாது….” என்று கூறியவன் அங்குள்ள மேசையின் டிராயரில் வைத்திருந்த காப்பையும் எடுத்து அவளிடம் நீட்டினான் .
அவன் தன்னிடம் இந்த விடயத்தை பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது .
ஏனோ அவன் ஏன் இவ்வாறு யோசிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவளது சிந்தையில் ஓடிக்கொண்டே இருந்தது .
எப்பொழுதும் எவ்வளவு பெரிய சிக்கலான கேசாக இருந்தாலும் தெளிவாக யோசித்து முடிவு எடுப்பவளுக்கு இன்று அவனது ஒத்துழையாமை சற்று கோபமாக இருந்தாலும் சரி இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் இல்லை என்ற ரீதியில் மகேஷிடம் பேச ஆரம்பித்தாள் .
” அண்ணா இப்ப அவருக்கு கிடைச்சிருக்கிறது ஜாமீன் மட்டும் தான் .
இன்னும் இந்த கேஸ் ல இருந்து அவர் முழுசா வெளியில் வரல .
அதே நேரத்துல இந்த கேஸ் ல இருந்து முழுசா வெளில வரணும் அப்படின்னா நான் சைட்டு பூரா சுத்தி பார்க்கணும் .
அவரு என் கிட்ட எதையும் சொல்ற மாதிரியே எனக்கு தெரியல !அவன் சொல்லலனா என்னம்மா எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் .
நீ இன்னைக்கு சைட்டுக்கு வந்து உனக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியுதா னு பாரு! அதே நேரத்துல அவனோட மொபைல் சிக்னல் எல்லாத்தையும் நீயே டிரேஸ் பண்ணி பாரு…அந்த போலீஸ் ஆபீசர் சொன்ன மாதிரி உனக்கு ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பாரு …நிச்சயமா அவன் இது ல சம்மதப்படல அந்த காப்பை எடுத்த உடனே என் கிட்ட சொல்லிட்டான் .
அதுக்கப்புறம் அவனுக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது .
ஆனால் அன்னைக்கு நாங்க எல்லாருமே சைட்டு ல இருந்தும் நாங்க எல்லாரும் இருக்கிறப்ப எப்படி அது மாதிரி ஒரு கடத்தல் நடந்திருக்கும்…?
தெரியல அண்ணா சைட்ட சுத்தி பார்த்ததுக்கு அப்புறமா நமக்கு ஏதாச்சும் எவிடன்ஸ் கிடைச்சா மட்டும் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் …. ” என்று கூறியவள் உடனடியாக மகேஷுடன் அந்த சைட் க்கு சென்றுவிட்டாள் .
சிவாவிற்கு தான் அவள் இந்த விடயத்தை பற்றி பேசுவதும் இதில் சம்பந்தப்படுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை .
அவள் எதற்காக தன்னை பற்றி சிந்திக்க வேண்டும் தனது தாயை பற்றி சிந்திக்க வேண்டும் …?
அதுபோக தான் இதில் மாட்டிக் கொண்டால் அவளுக்கு என்ன என்ற ரீதியில் அவனது யோசனை முழுக்க இருந்தது .
எதிர்வரும் காலங்களில் அவள் தனக்காக யோசித்து சிந்தனை எல்லாம் அவன் யோசிப்பதற்கு வாய்ப்புண்டோ அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் !
அவனும் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து படி சென்றான் ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை . முதலில் அவள் வேகவேகமாக எங்கோ சென்றாள் . பிறகு மூவரும் ஒன்றாக வந்தனர் .இப்பொழுது மூவரும் கிளம்பி அவசர அவசரமாக செல்கின்றனர் என்ற ரீதியில் யோசித்தவாறு சமையல் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் .அங்கு சென்றவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிந்தது . தான் சந்தேகித்த ஆள் நிச்சயமாக சிவா கிடையாது என்று ……
சிவாவை பொறுத்தவரையும் யாராவது அங்கிருந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும் அவர்களது உடமையாக தான் அந்த காப்பு இருக்க வேண்டும் என்ற யோசனையிலேயே அவனுக்கும் ,
ஷர்வாணிக்கோ இந்த கேஸை எப்படி ஹேண்டில் செய்யப் போகிறோம் என்று அவளிடம் வந்து புது கேள்வி பற்றிய சிந்தனைகளும் கழிந்திருந்தது .
அவளிடம் தற்பொழுது கை வசம் வந்திருக்கும் கேசானது 18 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர் அதுவும் ஒரே நாளில் ஒரே இடத்தில் …..
ஆனால் அவர்களை கடத்தியவர்கள் எந்த விதமான நகையோ பொருளோ பணமோ கடத்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் கேட்டு மிரட்டவில்லை .
ஏன் கடத்தப்பட்டார்கள் என்று கூட அவர்களது போன் சிக்னல் கட்டான இடத்திலிருந்து தான் உறுதி செய்யப்பட்டது .
அப்படி இருக்கையில் யார் அவர்களை கடத்தி இருக்கக்கூடும் அவர்களது நோக்கம் என்னவாக இருக்கும் என்று பலவாறு அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது .
இரு நாட்களாக கடத்தப்பட்ட இருவரின் போன் சிக்னலை ட்ரேஸ் செய்ததில் அவர்கள் இருவரின் கைபேசியின் சிக்னலும் சிவா தற்பொழுது கட்டிக் கொண்டிருக்கும் பில்டிங்கில் சரியாக கட் ஆகி இருக்கிறது என்பதும் தெரிய வந்திருந்தது .
அதுபோக இன்று மகேஷ் சிவா இருவரும் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் கேட்டாள் .
ஏதோ கடத்தப்பட்டவர்களின் ஒரு உடைமை அவனிடம் இருக்கிறது .
ஆனால் அவன் தான் அதை தர மறுக்கிறான் இந்த விடயம் பற்றி என்னிடம் அவனுக்கு தெரிந்த விடயங்களையும் கூற மறுக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு தெரிந்த தெளிவாக புரிந்தது .
இதனால் தான் நேற்று முழுக்க அவன் யோசனையிலேயே இருந்திருக்கிறான் என்பதும் அவளுக்கு இப்பொழுது புரிந்தது .
இத்தனைக்கும் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும் அவ்வளவு வசதியும் கிடையாது அனைவருமே மிடில் கிளாஸ் தான் .
போலீஸ் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க அவர்களது பெற்றோர் இவளிடமும் தங்களது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தனர் .
ஏதாவது பெரிய தொழில் அதிபர்களாக இருந்தால் தொழில் போட்டியில் பிள்ளைகளை கடத்தி விட்டு எதிரிகள் விளையாடுவதும் உண்டு என்ற கோணத்தில் அவள் விசாரித்து பார்த்ததில் அவளுக்கு கிடைத்த தகவலும் இதுவே !
ஆனால் ஒன்று இதில் நிச்சயமாக மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது .
ஆனால் அவர்களது நோக்கம் தான் என்ன என்பதை அவளால் யோசிக்க முடியவில்லை .
அவன் இடத்தில் இருக்கும் அந்த உடைமையை பார்த்தால் மட்டுமே இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கை வைக்க முடியும் என்ற முடிவோடு அன்று காலை அவன் சைட் க்கு கிளம்பி கொண்டிருக்க காலை உணவையும் செய்து வைத்துவிட்டு மாடிக்கு சென்று அவனிடம் பேசினாள் .
கண்ணாடி முன்பு நின்று தனது கேசத்தை வாரிக்கொண்டிருந்தவனுக்கு பின்புறமாக ஷர்வாணி நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்தவன் கண்டு கொள்ளாதவாறு தனது வேலையிலேயே குறியாக இருந்தான் உள்ளே வந்தவள் கதவை சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் .
” ஏய் இப்ப எதுக்காக கதவை சாத்துற…?
அன்னைக்கு நான் உன்னை மரியாதை இல்லாம பேசினத மனசுல வச்சுக்கிட்டு இன்னிக்கு ஏதாச்சும் அடிக்கலாம் னு பாக்குறியா…..
அன்னைக்கு எதோ கோவத்துல எதுவும் புரியாமல் பேசிட்டேன் .
ரியலி சாரி ஷர்வாணி இதுக்கப்புறம் உன்கிட்ட நான் அந்த மாதிரி பேச மாட்டேன் .
இப்ப கூட தான் மரியாதை இல்லாம ஏதோ மாடு ஓட்ற மாதிரி ஏய் னு பேசுறீங்க .
நான் அதை ஏதாச்சும் சொன்னா இல்ல தானே !
நான் இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் .
அத கதவை திறந்து வச்சு கிட்ட பேசினா நல்லா இருக்காது .
யாருக்காவது தெரிந்தால் நமக்கு தான் பிரச்சனை அதனால தான் கதவை சாத்தினேன் ……”
தலையை வாரி முடித்தவன் அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டு இப்பொழுது கூட அவளிடம் ஏன் இவ்வாறு பேசினோம் யாரிடமும் இவ்வாறெல்லாம் பேசியது கிடையாது என்று நினைத்துக் கொண்டவன் மெத்தையில் அமர்ந்து கொண்டு அவள் பேசுவதையே கேட்க ஆயத்தமானான் .
அவனை பொருத்தவரை கோபம் என்று வந்து விட்டால் அதை அவ்வப்போது காட்டி விடுவான் .
ஆனால் பெண்களிடத்தில் என்றால் கூட பொறுமையாக கூறியதை புரிய வைத்துவிடான் .
ஆனால் இவள் இடத்தில் ஏனோ அதிக உரிமை உள்ளது போல் அவன் பேசுவது அவனுக்கே சற்று புதிதான விடயமாக இருந்தது .
படிக்கும் காலத்திலும் சரி தற்போது வேலை செய்து வரும் காலத்திலும் சரி அவனோடு வேலை பார்க்கும் சக பெண் ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவன்,
இவளிடம் அதிக உரிமை எடுத்து பேசுவது அவனுக்கே புதிராக இருந்தாலும் அந்த எண்ணத்தை மேலும் வளர விடாமல் அவள் பேசுவது என்ன என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் .
“இப்போ என்கிட்ட ஒரு கேஸ் வந்து இருக்கு.
அதுல ரெண்டு பசங்க கடத்தப்பட்டு இருக்காங்க .
அவங்க ஏன் கடத்தப்பட்டாங்க யாரால கடத்தப்பட்டாங்கன்றது தெரியல!
அது மட்டும் இல்லாம கரெக்டா அவங்க போன் சிக்னல் உங்க பில்டிங் ல தான் கட் ஆகி இருக்கு .
அது மட்டும் இல்லாம நீங்க இன்னைக்கு மகேஷ் அண்ணா கிட்ட பேசிகிட்டு இருக்குறதையும் நான் காதில வாங்கினேன் .
அவங்க சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் உங்களுக்கு கிடைச்சிருந்தா என் கிட்ட குடுங்க .
அத வச்சு தான் அடுத்த மூங் இந்த கேஸ் ல என்ன என்றதே தெரியும் .
தயவு செஞ்சு என்கிட்ட கொடுங்க .
அந்த ரெண்டு பசங்களோட உயிரை காப்பாத்தணும் .
அதுக்காக நீங்க இந்த கேஸ் ல பியூச்சர் ல மாட்டிக்காம இருக்கணும்ன்றதுக்காகவும் சொல்றேன் . உங்க கிட்ட இருக்கிற பொருளை என்கிட்ட கொடுத்துடுங்க…..
அப்போ என்ன நீ வார்ன் பண்ற பியூச்சர்ல இந்த கேஸ் ல நான் மாட்டிப்பண்றதும் உனக்கு உறுதியா தெரிஞ்சு இருக்கு .
அப்படியே மாட்டினாலும் இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் னு எனக்கு தெரியும்.
என்கிட்ட எதுவும் இல்ல .
அப்படியே இருந்தாலும் உன்கிட்ட கொடுக்கணும் னு அவசியம் எனக்கு இல்லை .
நான் மாட்டிக்கிட்டா உனக்கு என்ன எப்படி பார்த்தாலும் நம்ம ரெண்டு பேரும் பிரிய தான் போறோம் .
ஏதோ உண்மையான ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நீ என் மேல கேரிங்கா பேச வேண்டாம் .
இது உன்னோட ப்ரொபஷனல் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தாலும் என் பில்டிங் ல எந்தவிதமான கடத்தலும் நடக்கல னு எனக்கு நல்லாவே தெரியும் .
சோ உன் வேலையை நீ பாரு .
இந்த கேஸ் ல வேற ஏதாவது க்ளூ கிடைக்குதா னு தேடிப் பாரு . அதவிட்டுட்டு தேவை இல்லாம என்ன இதுக்குள்ள கொண்டுட்டு வரணும் னு நினைக்காத …. ” என்று கூறியவன் அவளிடம் மேற்கொண்டு பேசி விரும்பாமல் அறை கதவை திறந்து சென்று விட்டான் .
இவன் என்ன லூசா….?
நான் எப்ப இவன இந்த கேஸ் குள்ள கொண்டுட்டு வந்தேன்.. இவன் வரக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு நாழி பேசிகிட்டு இருக்கேன்….
என் வேலையை தானே பாத்துட்டு இருக்கேன் .
இவன் கிட்ட இருக்கிற எவிடன்ஸ் என்ன னு தெரிஞ்சா தானே இந்த கேஸ்ல அடுத்து எப்படி மூவாகுன்றதும் தெரியும் .
இவனுக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது என்று நினைத்ததை இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை வேறு வழியில் தான் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
காலை உணவை முடித்து விட்டு வேக வேகமாக சைட்டுக்கு வந்தவன் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்தவாறு மகேஷிற்காக காத்துக் கொண்டிருந்தான் .
அவன் காத்திருப்பிற்கு சொந்தமானவனோ காபி ஷாப்பில் அவனது காதல் தேவதைக்காக காத்துக் கொண்டிருந்தான் .
அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்த சாரா என்றும் இல்லாமல் இன்று சுடிதாரில் வந்திருந்தாள் .
அதை பார்த்தவனின் முகம் சுருங்கி விட்டது.
எப்பொழுதும் அவளை பாவடை தாவணியில் பார்த்து ரசித்தவனுக்கு இன்று இந்த சுடிதார் பிடிக்கவில்லை போலும் .
“ஏன் சாரா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சுடிதார் ல என்னை பார்க்க வந்திருக்க ..?
எப்பயும் பாவாடை தாவணியில தானே வருவ…..
அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு டைம் என்கிட்ட இல்ல .
இன்னைக்கு எங்க அப்பா ஊர் ல இருந்து வராங்க .
நீங்க அவசர அவசரமா கால் பண்ணவும் அதனால தான் உங்கள பாக்குறதுக்காக வேக வேகமா ஓடி வந்து இருக்கேன் .
சீக்கிரம் என்ன விஷயம் என்று சொல்லுங்க .
எங்க அப்பா வீட்டுக்கு வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போகணும் ….
ஓ அவர் இன்னைக்கு வீட்டுக்கு வர்றாரா சரி அப்ப அவர் கிட்டயே நான் என்ன விஷயம் என்பதை சொல்லிக்கிறேன் .
நீ காபி குடிச்சிட்டு கிளம்பு….”என்று கூறியவன் அவளுக்காக ஆர்டர் செய்து வைத்திருந்த காபியையும் அவள் புறம் திருப்பி விட்டு அவனது கோப்பை எடுத்து அருந்தி கொண்டிருந்தான் .
பைத்தியமா இவன் என்ற ரேஞ்சில் அவனைப் பார்த்தவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது .
நிச்சயம் அவனது காதல் விடயத்தை பற்றி தனது தந்தையிடம் கூற போகிறான் என்று …..
“நீங்க என்ன விஷயமா அப்பா கிட்ட பேச போறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும் .
என் அப்பா ஊருக்கு வரதே என்னோட நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு பண்றதுக்காக தான் …. ” என்று போற போக்கில் ஒரு இடியை அவன் தலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் சாரா .
அவன் அதிர்ச்சியானாலும் தன்னை சமன்படுத்திக்கொண்டு நிச்சயம் தான கல்யாணம் இல்லையே! என்று போகும் அவளையே பார்த்து சிரித்தவன் சைட்டுக்கு கிளம்பினான் .
அங்கு சிவாவை காவல்துறையினர் வந்து கைது செய்து போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்றனர் .
அத்தியாயம் 18
பங்களாவைச் சுற்றி எம்பியின் ஆட்கள் சூழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்த அதிரூபனின் முகம், போர்க்களத்திற்குச் செல்லும் ஒரு வீரனைப் போல மாறியது. ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தப் பல கார்களின் வெளிச்சம், ஒரு அழிவிற்கான முன்னறிவிப்பாகத் தெரிந்தது.
“கௌதம்! லாரா சித்தியையும், அமிர்தாவையும் பின்வாசல் வழியா அந்த ரகசிய சுரங்கப் பாதைக்குக் கூட்டிட்டுப் போ. அங்கே கார் தயாரா இருக்கும். அவங்களைச் சேஃபா பண்ணை வீட்டுக்குக் கொண்டு போய் சேரு,” என்று அதிரூபன் கட்டளையிட்டான்.
“இல்லை அதிரூபா! உங்களை விட்டுட்டு நான் வரமாட்டேன்,” என்று அமிர்தா அவனது கையைப் பிடித்துத் தடுத்தாள். அவளது கண்களில் பயம் இல்லை, அவனது உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலை மட்டுமே இருந்தது.
அதிரூபன் அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான். “என் ராவணிக்கு ஒன்னுன்னா தான் இந்த ராவணன் விழுவான். நீ பாதுகாப்பா இருக்கிற வரைக்கும் எவனாலும் என்னைத் தொட முடியாது. போ அமிர்தா… இது என் மேல சத்தியம்,” என்று அவளைக் கௌதமிடம் ஒப்படைத்தான்.
மனமில்லாமல் அமிர்தா லாரா சித்தியுடன் அங்கிருந்து வெளியேறினாள். அவர்கள் சென்ற அடுத்த விநாடி, பங்களாவின் பிரதானக் கதவு பலமாக உடைக்கப்பட்டது. எம்பியின் அடியாட்கள் துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்தனர்.
அதிரூபன் சோபாவில் மிகவும் நிதானமாக அமர்ந்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அவனது காலடியில் இருந்த அந்த மர்மமான பெட்டியும், அதில் இருந்த ஆதாரங்களும் இப்போது அவனது மிகப்பெரிய ஆயுதம்.
“எங்கேடா அந்தச் சிறுக்கி? லயாவோட டைரியையும் அந்த ஆடியோவையும் எடுத்துட்டு வந்தவன் எங்கே?” என்று கத்தியபடி ஒரு அடியாள் அதிரூபனை நோக்கி வந்தான்.
அதிரூபன் புகையை மெல்ல ஊதிவிட்டு, அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தான். “உன் எம்பி-கிட்ட போய் சொல்லு… அவன் வச்ச குறி தப்பிப்போச்சு. லயா செத்தப்போ நான் சும்மா இருந்தேன், ஏன்னா அப்போ என்கிட்ட ஆதாரம் இல்லை. ஆனா இப்போ லயாவே ஆதாரத்தை சுட்டி காட்டிட்டா. இந்த ஆதாரங்கள் நாளைக்கு காலையில டிவில ஓடும்,” என்றான் அழுத்தமான குரலில்.
அடுத்த சில நிமிடங்கள் அந்தப் பங்களா ஒரு போர்க்களமாக மாறியது. அதிரூபன் ஒரு வேட்டையாடும் மிருகத்தைப் போலச் செயல்பட்டான். அவனது ஒவ்வொரு அடியும் துல்லியமாக இருந்தது. துப்பாக்கிச் சத்தங்களும், மனிதர்களின் அலறல்களும் அந்த இரவின் அமைதியைக் குலைத்தன.
அதே சமயம், கௌதம் அமிர்தாவையும் லாராவையும் பத்திரமாகப் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கு சென்றதுமே அமிர்தா துடித்தாள். “கௌதம், இப்போவே போங்க… அவருக்கு உதவி தேவைப்படும். ப்ளீஸ்… எனக்காக அங்கே போங்க,” என்று கெஞ்சினாள்.
“மேடம், சார் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… நான் போறேன். ஆனா நீங்க உள்ளே பத்திரமா இருங்க,” என்று சொல்லிவிட்டு கௌதம் மீண்டும் கிளம்பினான்.
பண்ணை வீட்டின் தனிமையில் அமிர்தா லயாவின் டைரியை மீண்டும் புரட்டினாள். அதன் கடைசிப் பக்கத்தில் ஒரு வரி எழுதப்பட்டிருந்தது:
“அதிரூபா… உன்னோட நட்பு நான் தப்பா நினைச்சுட்டேன்..
உனக்கு என் மேல அன்பு இருக்குது ஆனா அது காதல் இல்லை.
அதுக்காக நான் உன்னை காதலிக்காமல் இருக்க மாட்டேன்.
ஆனால்,
ஒருவேளை நான் உன்னோடு இல்லையென்றால், எனக்காக வருத்தப்படாதே.
உனக்காக ஒரு தேவதை வருவாள். அவளிடம் என் காதலையும் சேர்த்து நீ கொடுக்க வேண்டும்.”
வாசிக்க வாசிக்க அமிர்தாவின் கண்ணீர் அந்த டைரியின் மேல் விழுந்தது. விடியற்காலை நான்கு மணி இருக்கும். தூரத்திலிருந்து ஒரு காரின் சத்தம் கேட்டது. அமிர்தா ஓடிச் சென்று வாசலில் நின்றாள்.
கார் நின்றது. அதிலிருந்து அதிரூபன் மெல்ல இறங்கினான். அவனது வெள்ளைச் சட்டை ரத்தக் கறைகளால் சிவந்து போயிருந்தது. ஒரு கையில் காயம் ஏற்பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது.
“அதிரூபா!” என்று கத்தியபடி ஓடிச் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் அமிர்தா.
“முடிஞ்சது அமிர்தா… எம்பி போலீஸ் கஸ்டடில இருக்காரு. லாவண்யா மனநலக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுட்டா. லயாவோட சாவுக்கு இப்போ நியாயம் கிடைச்சிருச்சு,” என்று சொல்லிவிட்டு அவளது தோளில் சாய்ந்தான்.
அதிரூபனின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. பல வருடங்களாக அவனை வாட்டிய அந்தச் சுமை இப்போது இறக்கி வைக்கப்பட்டிருந்தது.
லாரா சித்தி ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டார். “இப்போதான் முழு மனுஷனா மாறியிருக்க. இனிமே இந்த ரத்தமும் துப்பாக்கியும் நம்ம வாழ்க்கையில இருக்கக்கூடாது அதிரூபா,” என்றார்.
“ஆமா சித்தி… இனி அதிரூபனோட சாம்ராஜ்யத்துல காதல் மட்டும் தான் இருக்கும்,” என்று சொல்லி அமிர்தாவைப் பார்த்தான்.
அந்த விடியல் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்தது. லயாவின் ஆசிர்வாதத்தோடு, அதிரூபனும் அமிர்தாவும் தங்கள் புதிய பயணத்தைத் தொடங்கத் தயாராகினர்.
……
விடியற்காலைச் சூரியனின் முதல் கதிர்கள் பண்ணை வீட்டின் புல்வெளிகளில் பட்டுத் தெறித்தன. அதிரூபனின் காயங்களுக்கு மருந்திடும்போது அமிர்தாவின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் சட்டையைக் கழற்றிவிட்டு அமர்ந்திருக்க, அவனது தோளிலும் முதுகிலும் இருந்த பழைய தழும்புகளுக்கு இடையே, நேற்றிரவு ஏற்பட்ட புதிய காயத்தின் ரத்தம் உறைந்து போயிருந்தது.
“மெதுவா அமிர்தா… உன் கண்ணுல வர்ற கண்ணீர் அந்த காயத்தை விட அதிகமா வலிக்குது,” என்று அதிரூபன் அவளது கையைப் பற்றினான்.
“ஏன் இப்படி ஒரு ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தீங்க? நேத்து ஏதாவது ஒன்னு ஆயிருந்தா…” என்று அவள் விம்மி அழ, அவளை அப்படியே இழுத்துத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான். அவனது காயத்தின் வலி அவளது அணைப்பில் மறைந்து போனது.
“இனிமே அந்த ஆபத்து இருக்காது அமிர்தா. எம்பியோட எல்லா சட்டவிரோத ஆவணங்களும் இப்போ போலீஸ் கமிஷனர் கையில இருக்கு. லயாவுக்குச் செஞ்ச துரோகத்துக்கு அவன் ஜெயில்ல கம்பி எண்ணுறது மட்டும் இல்ல, அவனோட மொத்த அரசியல் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு. லாவண்யா இப்போ அவ செஞ்ச தப்புக்குத் தண்டனையா மனநலச் சிகிச்சையில இருக்கா. நாம இனிமே அமைதியா வாழலாம்,” என்றான் அவளது கூந்தலை வருடியபடி.
அன்று மதியம், பண்ணை வீடே களைகட்டியிருந்தது. லாரா சித்தியும் தேவராஜ் சித்தப்பாவும் உற்சாகமாகத் தெரிந்தனர். லாரா சித்தி இத்தாலியிலிருந்து கொண்டு வந்திருந்த சில பழங்கால நகைகளை அமிர்தாவிற்கு அணிவித்துப் பார்த்தார்.
“அதிரூபா, இந்த ரத்தம், பழிவாங்கல் எல்லாம் இத்தோட முடியட்டும். அமிர்தா வந்த நேரம், உன் மனசுல இருந்த பாரம் குறைஞ்சிருக்கு. இனிமே ஒரு நல்ல நாளா பார்த்து உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கேன்,” என்றார் லாரா சித்தி.
அதிரூபன் அமிர்தாவைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த அந்தச் சிறு நாணம் அவனுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது. “சித்தி சொல்றது சரிதான் அமிர்தா. ஆனா இந்தக் கல்யாணம் சும்மா சாதாரணமா நடக்காது. ஒரு ராவணனோட கல்யாணம் எப்படி இருக்கணுமோ அப்படிப் பிரம்மாண்டமா நடக்கும். இன்னும் பத்து நாள்ல நமக்கான முகூர்த்தம்,” என்று அறிவித்தான்.
அடுத்த பத்து நாட்களும் அந்தப் பண்ணை வீடு ஒரு திருவிழாக் கோலம் பூண்டது. அதிரூபன் தன் பிசினஸ் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமிர்தாவோடு நேரம் செலவிட்டான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் நடப்பதும், லயாவின் டைரியில் இருந்த கவிதைகளைப் பற்றிப் பேசுவதுமாக இருந்தனர். அந்த டைரி இப்போது அவர்களுக்கு இடையே ஒரு பாலமாக மாறியிருந்தது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு
இரவு, பங்களாவின் உப்பரிகையில் நிலவொளியில் இருவரும் அமர்ந்திருந்தனர். அதிரூபன் அவளது கையைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான்.
“அமிர்தா, ஒரு விஷயம் சொல்லணும். லயா அவ டைரியில கடைசியா எழுதின அந்த வரிகள்… அது இப்போ நிஜமாயிடுச்சு. எனக்காக ஒரு தேவதை வருவான்னு சொன்னா… அவ சொன்னது உன்னைத்தான்,” என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“இனி நம்ம கதையில கண்ணீர் இருக்காது அதிரூபா… காதல் மட்டும் தான் இருக்கும்,” என்று அமிர்தா அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
கல்யாணத்தன்று காலை…
திருமலைக் கோவிலின் அடிவாரத்தில் இருந்த அதிரூபனின் சொந்த மண்டபத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கௌதம் முன்னின்று எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டான். ஊர் மக்கள் அனைவரும் அதிரூபனின் தாராள மனதைப் போற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அமிர்தா, பச்சை நிறப் பட்டுச் சேலையில், பாரம்பரிய நகைகளுடன் மணமேடைக்கு வந்தாள். அவளைப் பார்த்த அதிரூபன் ஒரு நிமிடம் இமைக்க மறந்து நின்றான். வெள்ளை நிறப் பட்டு வேட்டி சட்டையில் அவன் ஒரு இளவரசனைப் போலத் தெரிந்தான்.
மேள தாளங்கள் முழங்க, லாரா சித்தியும் தேவராஜும் முன்னின்று நடத்த, அதிரூபன் அமிர்தாவின் கழுத்தில் மங்கல நாண் சூட்டினான். “இனி நீ என் சரிபாதி… என் வாழ்வின் ஓவியம்,” என்று அவளது காதோரம் முணுமுணுத்தான்.
அந்த மங்களகரமான தருணத்தில், அமிர்தாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. லயாவின் ஆன்மா எங்கோ ஒரு மூலையில் இருந்து தங்களை ஆசிர்வதிப்பதை அவள் உணர்ந்தாள்.
…..
அந்தப் பெரிய பங்களாவே மல்லிகைப் பூக்களின் வாசனையிலும், பன்னீர் தெளித்த நறுமணத்திலும் மிதந்து கொண்டிருந்தது. அதிரூபனின் அறை இன்று ஒரு சொர்க்கத்தைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அறையெங்கும் மெழுகுவர்த்திகள் மென்மையாக எரிய, ஜன்னல் வழியே புகுந்த கடற்கரை காற்று திரைகளை அசைத்து விளையாடியது.
அமிர்தா, சிவப்பு நிறப் பட்டுச் சேலையில், தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களின் பாரத்துடன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளது இதயம் ஒரு போர் முரசைப் போல அடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு, இன்று அவள் அந்த ராவணனின் சரிபாதியாக, அவனது அறையில், அவனுக்காகக் காத்திருக்கிறாள்.
கதவு மெல்லத் திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிரூபன் உள்ளே வந்து கதவைத் தாழிட்டான். அவன் அணிந்திருந்த பட்டுச் சட்டை அவனது கம்பீரத்தை இன்னும் கூட்டிக் காட்டியது. அவன் மெல்ல அவளை நெருங்கினான். அவனது ஒவ்வொரு காலடிச் சத்தமும் அமிர்தாவின் நாணத்தை அதிகமாக்கியது.
அவன் அருகில் வந்து அமர்ந்ததும், அமிர்தா இன்னும் தலை குனிந்து கொண்டாள். அதிரூபன் அவளது முகத்தைத் தன் கைகளால் மெல்ல நிமிர்த்தினான். அவனது கண்களில் தெரிந்த அந்தத் தாகம் அமிர்தாவை ஒரு நொடி நடுங்க வைத்தது.
“இப்போ ஏன் இந்த நடுக்கம் அமிர்தா? இந்த ராவணனைக் கண்டு பயமா… இல்லை உன் புருஷனைப் பார்த்து வெட்கமா?” என்று காதோரம் குனிந்து கிசுகிசுத்தான்.
“தெரியல… ஒரு மாதிரி பயமாவும் இருக்கு, சந்தோஷமாவும் இருக்கு,” என்று அவள் முணுமுணுத்தாள்.
அதிரூபன் அவளது கையில் இருந்த பால் சொம்பை வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான். “இந்தக் கைகள் எனக்காக எவ்வளவு வரைஞ்சிருக்கு… எனக்காக எவ்வளவு கண்ணீர் துடைச்சிருக்கு. இனிமே இந்த அதிரூபன் உன்னோட அடிமை அமிர்தா. இந்த நிமிஷத்துல இருந்து நம்ம உலகத்துல மூணாவதா ஒரு மனுஷன் இருக்க மாட்டான்,” என்று சொல்லி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவன் மெல்ல அவளது கூந்தலில் இருந்த பூக்களை நீக்கினான். அவனது விரல்கள் அவளது கழுத்து வளைவுகளில் பட்டபோது, அமிர்தா சிலிர்த்துப் போய் அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அதிரூபன் அவளைத் தூக்கி மெத்தையின் நடுவில் கிடத்தினான்.
“அதிரூபா…” என்று அவள் ஆசையோடு அழைக்க, அவளது இதழ்களில் தன் இதழ் பதித்து அவளது பேச்சைத் தடுத்தான். அந்த முத்தம் மென்மையாகத் தொடங்கி, பின் ஆவேசமாக மாறியது. பல காலத்துப் பிரிவும், தவிப்பும் அந்த ஒரு முத்தத்தில் கரைந்து போயின.
அறையின் விளக்குகள் அணைய, நிலவொளி மட்டும் அவர்கள் இருவரின் சங்கமத்திற்குச் சாட்சியாக இருந்தது. ராவணனின் முரட்டுத்தனமான காதலும், அமிர்தாவின் மென்மையான அர்ப்பணிப்பும் அந்த இரவை ஒரு காவியமாக மாற்றின.
மறுநாள் காலை.
அதிரூபனின் வலுவான கரங்களுக்குள் அமிர்தா உறங்கிக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி அவளது முகத்தில் பட, மெல்லக் கண் விழித்தவள், தன்னை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அதிரூபனைப் பார்த்ததும் மீண்டும் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“குட் மார்னிங் மிஸஸ் அதிரூபன்!” என்று அவன் குறும்புடன் சொல்ல, அவளது கன்னங்கள் சிவந்தன.
“நேரம் என்ன ஆச்சு? லாரா சித்தி தேடுவாங்க,” என்று அவள் எழ முயல, அவன் அவளை விடாமல் இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டான்.
“இன்னைக்கு யாரையும் பத்தி கவலைப்படாதே. இது நம்ம நாள்,” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனது போன் விடாமல் அடித்தது.
அதிரூபன் எரிச்சலுடன் போனை எடுத்தான். கௌதம்தான் கூப்பிட்டிருந்தான்.
“சார்… ஒரு கெட்ட செய்தி. எம்பி ஜெயில்ல தற்கொலை பண்ணிக்கிட்டதா தகவல் வந்திருக்கு. ஆனா அது தற்கொலை மாதிரி தெரியல. யாரோ அவரைத் தீர்த்துக்கட்டியிருக்காங்க. அதே சமயம் லாவண்யாவை ஹாஸ்பிட்டல்ல இருந்து யாரோ கடத்திட்டுப் போயிட்டாங்க!”
அதிரூபனின் முகம் சட்டென்று கல்லாக மாறியது. அமிர்தா அவனது முக மாற்றத்தைப் பார்த்துத் திடுக்கிட்டு எழுந்தாள்.
“என்ன ஆச்சு அதிரூபா?”
“எம்பி இறந்துட்டான் அமிர்தா… லாவண்யாவைக் காணோம். இது ஏதோ பெரிய சதி. எம்பியை விடப் பெரிய ஒரு ஆள் பின்னாடி இருந்து வேலை பார்க்கிறான் போல இருக்கு,” என்றான் அதிரூபன். அவனது கண்கள் மீண்டும் அந்த வேட்டைக்காரன் பார்வையை எடுத்தன.
அவர்களது முதலிரவின் சந்தோஷம் முடிவதற்குள்ளேயே, அடுத்த பகை கதவைத் தட்டியது.
…..
அத்தியாயம் 16
அந்தத் துப்பாக்கி முனை அதிரூபனை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருப்பதை அவன் அந்தப் பதற்றமான சூழலிலும் உணர்ந்தான். ஆனால், அமிர்தாவின் கண்ணீரும் அவளது அணைப்பும் அவனுக்கு ஒரு கவசமாகத் தெரிந்தது. சட்டென்று கௌதம் மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த அடியாளைத் தடுத்து நிறுத்த, அந்தத் தோட்டா குறி தவறி வானத்தை நோக்கிப் பாய்ந்தது.
அரங்கமே அல்லோலகல்லோலப்பட, அதிரூபன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமிர்தாவைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே காரை நோக்கி நடந்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கார் அந்தப் பழைய பங்களாவை நோக்கிச் செல்லவில்லை. மாறாக, கடலோரம் இருந்த அதிரூபனின் நவீனமான ஒரு தனி பங்களாவிற்குச் சென்றது. அது கண்ணாடியால் இழைக்கப்பட்ட ஒரு சொர்க்கம் போல இருந்தது.
உள்ளே நுழைந்ததும், அதிரூபன் கதவைத் தாழ்ப்பாள்போட்டுவிட்டுத் திரும்பினான். அமிர்தா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஜன்னல் வழியே தெரிந்த அலைகளைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அதிரூபன் மெல்ல அவளை நெருங்கினான். அவனது கறுப்பு நிற கோட்டை கழற்றி எறிந்துவிட்டு, சட்டையின் மேல் பொத்தான்களைத் தளர்த்தியபடி அவளுக்குப் பின்னால் நின்றான். அவனது உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தத் தகிப்பும், ஆண்மை நிறைந்த வாசமும் அமிர்தாவின் நரம்புகளை ஏதோ செய்தன.
“இன்னும் பயமா இருக்கா அமிர்தா?” என்று அவன் அவளது காதோரம் குனிந்து மிக மென்மையாகக் கேட்டான்.
அமிர்தா மெல்லத் திரும்பினாள். அவளது கண்களில் இருந்த அந்தத் தீ இப்போதில்லை, ஒருவிதமான மயக்கமும், அவன் மீதான தீராத காதலும் மட்டுமே மிஞ்சியிருந்தது. “பயம் இல்லை சார்… ஆனா நீங்க ஏன் இவ்வளவு ஆபத்தான ஒரு வாழ்க்கையை வாழ்றீங்க? உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன்?” என்று கேட்டு அவனது சட்டையைப் பற்றிப் பிடித்து அழுதாள்.
அதிரூபன் அவளது முகத்தைத் தன் இரு கைகளிலும் ஏந்தினான். அவளது கண்ணீரைத் தன் கட்டைவிரலால் துடைத்துவிட்டு, “உன்னைப் பார்க்கும் வரைக்கும் இந்த ராவணனுக்குச் சாவு மேல பயமே இல்லை அமிர்தா. ஆனா இப்போ, உனக்காகவே நான் பல ஜென்மம் வாழணும்னு ஆசைப்படுறேன்,” என்று உருக்கமாகச் சொன்னான்.
அவன் அவளது நெற்றியில் இழைத்த அந்த முத்தம் மெல்லக் கீழிறங்கி அவளது மூக்கு நுனியைத் தீண்டியது. அமிர்தா தனது கண்களை மூடிக்கொண்டாள். அவளது மூச்சுக் காற்று அதிரூபனின் முகத்தில் பட, அவனுக்குள் இருந்த அந்த மாஃபியா அரசன் காணாமல் போனான்.
மெல்ல அவளது இடுப்பில் கை வைத்த அதிரூபன், அவளைத் தூக்கி அங்கிருந்த மேஜையின் மீது அமர வைத்தான். அமிர்தாவின் கால்கள் அவனது இடுப்பைச் சுற்றி வளைக்க, இருவருக்கும் இடையே இருந்த அந்தச் சிறிய இடைவெளியும் காணாமல் போனது.
“நீ என்னை வெறுக்கிறேன்னு சொன்னப்போ, என் இதயம் உண்மையிலேயே துடிச்சது அமிர்தா. அந்த வேதனையை விட இந்த உலகம் கொடுக்கிற எந்தத் தண்டனையும் எனக்குப் பெருசில்லை,” என்று சொல்லிக்கொண்டே அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான்.
இந்த முறை அந்த முத்தம் முரட்டுத்தனமாக இல்லை. அதில் ஒரு தேடலும், மன்னிப்பு கேட்கும் பாவனையும், எல்லையற்ற காதலும் கலந்திருந்தது. அமிர்தா அவனது தலைமுடியைக் கோதியபடி அந்த அன்பில் தன்னைத் தொலைத்தாள்.
“ஐ லவ் யூ சார்…” என்று அவள் அவன் இதழ்களுக்கு நடுவே முணுமுணுத்தாள்.
அதிரூபன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, “சார்-னு கூப்பிடாதேன்னு சொல்லிருக்கேன்ல? உன் ராவணன்னு கூப்பிடு,” என்று குறும்பாகச் சொல்லி அவளது கழுத்து வளைவுகளில் முகம் புதைத்தான்.
அந்த அறையில் நிலவிய அமைதியும், கடலலையின் ஓசையும் அவர்களது காதலுக்குச் சாட்சியாக அமைந்தன.
மறுநாள் காலை, விடியல் அழகாகத் தொடங்கியது. அமிர்தா அதிரூபனின் மார்பில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அவன் அவளது தூக்கத்தைக் கலைக்காமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவனது போன் விடாமல் அதிர்ந்தது.
கௌதம்தான் அழைத்திருந்தான். “சார்… எம்பி ஜெயிலுக்குள்ளேயே தற்கொலை பண்ணிக்கப் பார்த்திருக்காரு. ஆனா லாவண்யா இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியல. அவங்க எங்கேருந்தோ ஒரு பெரிய டீம் கிட்ட டீலிங் பேசிட்டு இருக்காங்க. இது நம்ம சாம்ராஜ்யத்துக்கே ஆபத்தா முடியும் போல இருக்கு!”
அதிரூபனின் முகம் சட்டென்று மாறியது. அமைதிக்குப் பின் ஒரு புயல் வரப்போகிறது என்பது அவனுக்குப் புரிந்தது.
……
விடியற்காலையின் மென்மையான வெளிச்சம் ஜன்னல் திரைகளை ஊடுருவி அமிர்தாவின் முகத்தில் விழுந்தது. அதிரூபனின் மார்பில் சாய்ந்திருந்தவள், அவனது இதயத்துடிப்பு சீராக இருப்பதை உணர்ந்து ஒருவித நிம்மதியுடன் கண்களைத் திறந்தாள். ஆனால், அருகில் இருந்த அதிரூபன் போனில் ஏதோ செய்தியைப் பார்த்தபடி மிகவும் தீவிரமாக இருந்தான். அவனது முகத்தில் தெரிந்த அந்த இறுக்கம், ஏதோ ஒரு ஆபத்து மீண்டும் தங்களைச் சூழ்வதை அமிர்தாவிற்கு உணர்த்தியது.
“அதிரூபா… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்டபடி அவன் தோளில் கை வைத்தாள் அமிர்தா.
அதிரூபன் சட்டென்று போனை மறைத்துவிட்டு, அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான். “ஒன்னுமில்லை அமிர்தா. பிசினஸ் விஷயம் தான்… நீ தூங்கு,” என்றான்.
ஆனால் அமிர்தா அவனை விடவில்லை. அவனது முகத்தைத் திருப்பித் தன் பக்கம் இழுத்தாள். “பொய் சொல்லாதீங்க. உங்க கண்கள்ல ஒரு பதற்றம் தெரியுது. லாவண்யா ஏதாவது பண்ணிட்டாளா?”
அதிரூபன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். “லாவண்யா இப்போ தலைமறைவா இருக்கா. அவ நம்ம எதிரிங்க கூடக் கை கோர்த்துட்டு ஏதோ பெரிய பிளான் பண்றான்னு கௌதம் சொல்றான். ஆனா அதைப் பத்தி இப்போ நீ கவலைப்படாதே. உன்னை நான் இப்போ எங்கேருந்தும் வெளியே விடப்போறது இல்லை,” என்றான் உரிமையோடு.
அவன் அவளது கன்னத்தை வருடினான். அந்தத் தீண்டலில் இருந்த காதல் அமிர்தாவைச் சிலிர்க்க வைத்தது. “என்னை எப்பவும் இப்படியே அடைச்சு வைப்பீங்களா?” என்று குறும்பாகக் கேட்டாள்.
“ஆமா… என் இதயத்துக்குள்ளயும், இந்த நாலு செவத்துக்குள்ளயும் உன்னை மட்டும் தான் வச்சிருப்பேன்,” என்று சொல்லிவிட்டு அவளது இதழ்களில் ஒரு மென்மையான முத்தத்தைப் பதித்தான்.
அன்று மதியம், அதிரூபன் வெளியே செல்ல வேண்டியிருந்தது. “பத்திரமா இரு அமிர்தா, கௌதமும் செக்யூரிட்டியும் வெளியவே இருப்பாங்க. யாருக்காகவும் கதவைத் திறக்காதே,” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.
அதிரூபன் சென்ற சிறிது நேரத்தில், அமிர்தாவிற்கு ஒரு பார்சல் வந்தது. அதைக் கௌதம் சோதனை செய்துவிட்டு அவளிடம் கொடுத்தான். உள்ளே ஒரு பழைய டைரியும், ஒரு புகைப்படமும் இருந்தது. அந்தப் புகைப்படம் அதிரூபனின் இளமைக்காலப் புகைப்படம். ஆனால், அவனுடன் இருந்த இன்னொரு பெண்ணைப் பார்த்ததும் அமிர்தா அதிர்ச்சியில் உறைந்தாள். அது லாவண்யா கிடையாது, ஆனால் லாவண்யாவைப் போலவே சாயல் கொண்ட இன்னொரு பெண்.
டைரியின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது: “அதிரூபனின் முதல் காதல்… இவளை அவன் எப்படிக் கொன்றான் என்று உனக்குத் தெரியுமா?”
அமிர்தாவின் கை நடுங்கியது. அதிரூபனுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியமா? அவன் ஒரு கொலையாளியா? டைரியைப் புரட்ட முயன்றபோது, திடீரென்று பங்களாவின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருட்டில் யாரோ உள்ளே நுழையும் சத்தம் கேட்டது. அமிர்தா பயத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டாள்.
“அமிர்தா… நீ எங்கே இருக்கன்னு எனக்குத் தெரியும். அந்த ராவணனோட நிஜ முகத்தைத் தெரிஞ்சுக்க வேணாமா?” – இருட்டிலிருந்து லாவண்யாவின் குரல் கேட்டது.
லாவண்யா கையில் ஒரு துப்பாக்கியுடன் அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளது முகம் வெறியில் ஆடிக்கொண்டிருந்தது. “அவன் உன்னை நேசிக்கிறான்னு நினைக்கிறியா? இல்லை அமிர்தா… உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு அவன் கொன்ன அந்தப் பொண்ணோட ஞாபகம் தான் வருது. உன்னை அவன் ஒரு நிழலா தான் பார்க்கிறான்!”
அமிர்தா வெளியே வந்து, “நீ பொய் சொல்ற லாவண்யா! அவனைப் பழிவாங்க நீ என்ன வேணாலும் பேசுவ,” என்று கத்தினாள்.
“அப்படியா? அப்போ இந்த டைரியில இருக்கிற கடைசிப் பக்கத்தைப் படிச்சுப் பார்,” என்று லாவண்யா அந்த டைரியை அவளை நோக்கி வீசினாள்.
சரியாக அந்த நேரம், அதிரூபனின் கார் வெளியே வந்து நிற்கும் சத்தம் கேட்டது. லாவண்யா ஜன்னல் வழியே அதைப் பார்த்துவிட்டு, “உன் ராவணன் வந்துட்டான். ஆனா இன்னைக்கு இந்த வீடு ஒரு சுடுகாடா மாறும்!” என்று சொல்லிவிட்டுத் துப்பாக்கியை அமிர்தாவின் தலையில் வைத்தாள்.
அதிரூபன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது கண்ட காட்சி அவனை உறைய வைத்தது.
“லாவண்யா! துப்பாக்கியைக் கீழே போடு!” என்று அதிரூபன் கர்ஜித்தான்.
“போட முடியாது அதிரூபா! இவளுக்கு உன் உண்மை தெரிஞ்சிருக்கணும். நீ அன்னைக்கு பண்ணின அதே தப்பை இப்போ பண்ணப் போற,” என்று லாவண்யா விரலை விசைக்கு (Trigger) நகர்த்தினாள்.
அதிரூபனின் கண்களில் ஒரு பயங்கரமான வேதனையும் கோபமும் ஒருசேர மின்னியது. அவன் அமிர்தாவைப் பார்த்தான். அவளது கண்களில் தெரிந்த சந்தேகம் அவனை முத்தத்தை விட அதிகமாக வலிக்கச் செய்தது.
தோட்டா பாயப்போகும் அந்த நொடியில், அதிரூபன் ஒரு விபரீதமான முடிவை எடுத்தான்.
தொடரும்…
வீட்டிற்கு வந்த ஷர்வாணியோ இன்று நடந்த விடயங்களைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தாள் .
அப்படி என்ன இருக்கும் அவன் கிட்ட…
எவிடென்ஸ்னு ஏதாச்சும் நம்ம தேடுறது சம்பந்தப்பட்ட பைல்ஸ் கிடைச்சிருக்குமா இல்ல மிஸ் ஆன பையனோட காஸ்டியூம் காஸ்மெட்டிக்ஸ் ஏதாச்சும் கிடைச்சிருக்குமா என்று பலவாறு அவள் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது எனினும் விடை தான் தெரியவில்லை .
அதிலும் சிவா கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சத்திற்குள் ஊடுருவி கொண்டிருந்தன .
எப்படியோ அவனது உதவி இல்லாமலும் இந்த கேசை பற்றிய விடயங்களை கண்டறியலாம் என்பது அவளது முடிவாகி போனது .
மாலை 4 மணி போல வீட்டிற்கு வந்தவன் அறைக்குள் அவனது புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் ஷர்வாணியை கண்டவாறு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலிற்கு வந்து டிவியை ஆன் செய்தவர் அமர்ந்துவிட்டான் .
அவனது அறையில் வைக்கப்பட்டிருந்த கவிதை புத்தகங்கள் வரலாற்று நாவல்கள் எடுத்து பொழுதுபோக்கிற்காக படித்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை .
ஆறு மணிக்கு மேல் ஹாலுக்கு வந்தவள் சமையலறையில் நுழைந்து கொண்டு ஜெயாவிற்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள் .
அவள் சமையலறைக்குள் நுழைந்ததை கண்டும் காணாதவாறு அமர்ந்து கொண்டிருந்தான் சிவா .
அவனது எண்ணம் முழுக்க இன்று ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கும் என்று சைட் க்கு சென்றதிலேயே இருந்தது .
ஆனால் அதற்கு மாறாக எதுவுமே கிடைக்காமல் போக அவனுக்கு இன்னும் மூன்று மாதத்தில் நிச்சயமாக இந்த வீட்டை முடிக்க முடியுமா என்ற எண்ணம் வேறு வந்து விட்டது .
இத்தனை நாட்கள் முடியும் என்ற எண்ணம் இருந்தது .
ஆனால் இப்பொழுது இன்டீரியர் ஒர்க் எல்லாம் முடிப்பதற்கு தேவையான பொருட்கள் ஆர்டர் கொடுத்த இடத்திலிருந்து வருவதற்கு தாமதமாகும் என்ற பட்சத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் . மகேசன் நடவடிக்கைகளில் கூட அவனுக்கு என்று ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்றியது .
இன்று அவனை அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு அனுப்பிய விதம் ஏதோ ஒன்றாக ஒளிந்து இருக்கிறது என்பதை மட்டும் அவனுக்கு அறிவுறுத்தியது .
காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் .
அவனுக்கும் சேர்த்து காபி கலக்கி கொண்டு வந்தவள் அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் .
அதை வாங்கிக் கொண்டவன் பருகி விட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருந்தவன் பிறகு அலுவலக வேலைகளை பார்ப்பதற்காக அறைக்குள் சென்று விட்டான் .
“மகேஷ் எத்தனை தடவை உனக்கு சொல்றது உன்னோட பிரண்டு சிவாக்கு ஒரு வழியா அவங்க அம்மா எப்படியோ ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க .
அது மாதிரி உனக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா அடுத்து எங்க வேலைய பார்ப்போம் இல்ல…. “என்றும் மகேஷின் அம்மா சரஸ்வதி பேசிக்கொண்டிருக்க அவனுக்கு தான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் .
மகேஷின் அப்பா பிரம்மா வெளிநாட்டில் இருப்பதால் அவ்வப்போது அவனையும் தாயையும் பார்ப்பதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ தான் வந்து வந்து செல்வார் .
வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தனர் .
அவன் ஆசைப்பட்ட படியே இன்ஜினியரிங் படிக்க வைத்தாகி விட்டது .
தற்பொழுது தொழிலிலும் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டால் அடுத்த திருமணம் என்ற பேச்சை எடுத்தால் என்னவோ ஓடி விடுகிறான் என்பதுதான் பெற்றோருக்கு கவலையாகி போனது .
காதலுக்கு எதிரி என்றெல்லாம் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை தான் .
. எனினும் சாராவின் பதில் தானே அவனது காதலை முடிவு செய்யும் என்ற நோக்கத்திலேயே இத்தனை வருடங்கள் அவனும் காத்திருக்கிறான் .
ஆனால் அவளோ எதற்கும் புடி கொடுக்காமல் அவனைப் பார்த்துவிட்டு செல்வதே போதும் என்ற ரீதியில் உலவி கொண்டிருக்கிறாள் .
சரி இன்றாவது தனது தாயிடம் கூறி அவளது வீட்டில் சென்ற பெண் கேட்கலாம் என்ற ரீதியில் இருந்தான் .
அதற்கு முன்பு அவளிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்ற ரீதியிலேயே காபி ஷாப் க்கு அவளையும் வர சொல்லி இருந்தான் .
ஆனால் அவ்வளவு எப்பொழுதும் போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சற்று வருத்தமாகி போனது .
” அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அம்மா .
அந்த பொண்ணு கிட்ட என்னோட லவ்வ டைரக்டாகவும் இன்டைரக்ட் ஆவும் சொல்லிட்டேன் .
ஆனா அந்த பொண்ணு தான் எதுக்குமே சரிப்பட்டு வராமல் உங்க கூட லைஃப் லாங் பிரண்டா மட்டும் இருந்தா போதும்.னு சொல்லிக்கிட்டு இருக்கா….
அவளுக்கும் என்ன புடிக்கும் தான் .
ஆனா அவ அத ஒத்துக்க மாட்டேங்குற அதுக்கு மெயின் ரீசன் அவங்க அப்பா சித்தி தான் . சரி அவளை ஒரு வழியா கன்வின்ஸ் பண்ணிட்டு அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கலாம்னு பார்த்தா அவ என் மேல லவ்வே இல்லன்ற மாதிரி பேசுற அதனாலதான் இது சரிப்பட்டு வராது .
ஒரு நல்ல நாளா பாருங்க அவங்க வீட்டுக்கு போய் நம்ம பொண்ணு கேட்டுறலாம் …. ” என்று கூறியவன் சாராவின் புகைப்படத்தையும் கைபேசியில் இருந்து தனது தாயிடம் காட்டினான் .
சாராவை பார்த்தவுடனேயே சரஸ்வதிக்கு அவ்வளவு பிடித்து விட்டது .
தனது மகனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் நிச்சயமாக அவள் குணத்திலும் சிறந்தவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு அவளது புகைப்படத்தை பார்த்த உடனேயே அழகிலும் அழகிலும் சிறந்தவளாக தான் இருக்கின்றாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
பிரம்மாவும் வந்தவுடன் ஒரு நாள் நிச்சயமாக அவர்களது வீட்டிற்கு சென்ற பின் கேட்கலாம் என்று சரஸ்வதி மகேஷிற்கு வாக்கும் அளித்தார் .
“நமக்கு தேவையானது மொத்தம் மூணு பசங்க .
நீங்க ஒரு பையன மட்டும் கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவன வச்சு என்ன பண்றது இவன விட A நெகட்டிவ் உள்ள ஒரு பையனை தானே நான் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன் .
அந்த பையனை கடத்திட்டு வராம இவனை கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவனும் வேணும் தான் நான் இல்லை னு சொல்லல !
ஆனா அவன் தான் மெயின் .
அவன நம்ம கடத்தி இருந்தா தான் நமக்கு உடனே காசு கிடைச்சிருக்கும் .
இவனை ஒரு மாசம் நம்ம காவல் காக்கணும் பாருங்க…
பார்ட்டிகிட்ட ஒரு மாசம் கழிச்சு தான் இவன ஒப்படைக்க முடியும் .
இப்போதைக்கு அனுப்ப வேண்டாம்னு அவங்க சொல்றாங்க .
போலீஸ்க்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சு சொன்னா நிச்சயமா நம்ம யாரும் நம்ம நெட்வொர்க் என்னன்றத கண்டுபிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க…..
நிச்சயம் போலீஸாலலாம் நம்ம நெட்வொர்க்க அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது ……
நிச்சயம் இப்ப மிஸ் ஆன பையனோட பேரண்ட்ஸ் ஏதாச்சும் ஒரு சீக்ரட்டான டிடெக்டிவ் வச்சு நம்மள கண்காணிக்கிறதுக்கு வேணா சன்சஸ் இருக்குது .
அப்பயும் கூட நம்ம ஏன் எதுக்காக கடத்தறோம் நம்ம தான் கடத்திருக்கோம் என்ற விஷயத்தை கண்டுபிடிக்க முடியாது …..
என்னமோ சொல்றீங்க .
நான் இப்ப இந்த பையன ஒரு குடோன் ல தான் கடத்தி வச்சிருக்கேன் சீக்கிரமா அந்த ஏ நெகட்டிவ் உள்ள பையன தூக்கிருங்க……”
“இன்னைக்கு சண்டே வேற எப்படியும் சைட்டுக்கும் போக மாட்டான் .
அப்புறம் எப்படி நம்ம பில்டிங் போயிட்டு தரவா செக் பண்றது .
நேத்து போனப்பயாச்சும் ஏதாச்சும் சொல்லி இருந்தா நிச்சயமா அந்த பில்டிங் ஓரளவுக்கு பார்த்துட்டு வந்து இருக்கலாம் .
ஆனா இப்போ போகவும் முடியாது .
நாளைக்கு போய் பாக்கலாம் னு பாத்தா கேஸ் மேல இடத்துல இருந்து ரொம்ப டார்ச்சர் பண்றாங்க .
கண்டுபிடிங்க கண்டுபிடிங்க னு மிஸ் ஆன பையனோட அப்பா அம்மா எங்க போயிருக்கான் எங்க போயிருக்கா னு ரொம்ப வேதனை படுறாங்க…..
இதுக்கு ஒரே வழி ஏதாவது சொல்லி சிவாவை இன்னைக்கு அந்த சைட்டுக்கு கூட்டிட்டு போறது மட்டும் தான் . அங்க போனா தான் நமக்கு தேவையான ஏதாச்சும் ஆதாரங்கள் கிடைக்கும் . அப்ப தான் இந்த கேஸ் ல அடுத்த மூவ் என்ன அப்படி னு நமக்கே தெரியும் …..” என்று தனக்குள்ளே நினைத்தவள் கிட்சன் சென்று காலை டிபனையும் அவளே ஜெயாவுடன் இணைந்து தயார் செய்தாள் .
அவன் லேட்டாக எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வரவும் அவர்கள் டிபன் செய்து டைனிங் டேபிளில் அடக்கவும் சரியாக இருந்தது .
மூவரும் அமர்ந்து சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தனர் .
ஜெயா “கண்ணா மறு விருந்து னு நீங்க எங்கேயும் போகல அதுக்கு பதிலா இன்னைக்கு சண்டே தானே அவளை எங்கயாச்சும் வெளியில கூட்டிட்டு போயிட்டு வா…..
அம்மா எனக்கு இன்னைக்கு ஹெவி ஒர்க் இருக்கு ஆனா இன்னைக்கு சைட்டுக்கு போறேன் இன்னைக்கு போய் கொஞ்சம் வேலை இருக்காத முடிச்சிட்டு வந்துட்டேன்னா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம் நான் வர ஈவினிங் ஆகும் என ஈவினிங் அவளை கெளம்பி இருக்க சொல்லுங்க கூட்டிட்டு போறேன்.
என்னப்பா எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட்டா இருந்தாலும் சண்டே எல்லாம் எப்பவுமே லீவ் விட்ருவே . ஏதோ நேற்று சைட்டுக்கு நீ போன நான் விட்டுட்டேன் .
இன்னைக்கும் போறேன் னு சொல்ற அதுவும் மேரேஜ் ஆகி ஒரு வாரம் கூட எங்கேயும் வெளியில அனுப்பவும் இல்ல .
அதுக்குள்ள நீ பாட்டுக்கு வேலை வேலைன்னு ஓடிடுற.
அம்மா உங்களுக்கே தெரியும் நான் இப்ப கட்டிட்டு இருக்க வீடு எம்எல்ஏ ஓட வீடு .
இன்னும் மூணு மாசத்துல ஃபுல்லா வேலையை முடிச்சு அவர் கிட்ட கொடுக்கிறேன் என்று நேற்று கால் பண்ணி சொல்லிட்டேன் .
என்னடா சொல்ற மூணு மாசத்துல எப்படி வேலை முடிக்க முடியும் .
இன்டீரியர் டிசைன் எல்லாம் நிறைய இருக்கு அது மட்டும் இல்லாம கதவு செய்யறதுக்கெல்லாம் மரம் வெளியில ஆர்டர் கொடுத்து இருக்கேன் .
வரத்துக்கு எப்படியும் மாதக்கணக்கில் ஆகும் அதுக்குள்ள டிசைன் எல்லாம் ரெடி பண்ணனும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்த ….
இப்ப மூணு மாசத்துக்குள்ள எப்படி வேலையை முடிப்ப ஏன் இவ்வளவு அவசர அவசரம் வேலைய முடிக்கிற அவர் ஏதாச்சும் சீக்கிரமா பண்ணி குடுங்க டார்ச்சர் பண்றாரா…?
இல்லம்மா அவர் எதுவும் சொல்லல .
நானும் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒன் இயர் ஆகப்போகுது ,
இது பெரிய வீடு என்றதுனால தான் இவ்வளவு நாள் எடுத்துக்கிட்டன் .
அதான் இப்ப மூணு மாசத்துக்குள்ள வேலையை முடிச்சு கொடுத்திடலாம் னு பார்க்கிறேன் .
அல்மோஸ்ட் வேலை முடிஞ்சுருச்சு இன்டீரியர் டிசைன் அந்த மாதிரி தானே . ஒர்க் பண்ணா முடிச்சிடலாம் …..
என்னமோ சொல்ற சரி மதியம் சாப்பாடு ஷர்வானி கிட்ட கொடுத்து விடுகிறேன் …. ” என்று கூறியவரின் பேச்சையும் அவனால் மறுக்க முடியவில்லை அவனும் ஒப்புக்கொண்டு கிளம்பி சென்று விட்டான் .
ஏற்கனவே எவ்வாறு அவனை சைட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது பதில் சாதகமாகி போனது .
அதே நேரத்தில் ஜெயா கூறியதையும் கவனித்து தான் இருந்தாள் .
ஏன் இவன் இவ்வளவு சீக்கிரமாக வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்து விட்டது .
அது மட்டும் இன்றி நேற்று சைட்டில் இருந்து சாப்பிட வரும்போது இருந்து அவன் முகம் சரியில்லை என்பதையும் அவள் கவனித்து வைத்திருந்தாள் .
ஏதோ ஒரு தீவிரமான சிந்தனை அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவளால் யூகிக்க முடிந்தது .
அதற்கு தகுந்தவாறு சைட்டில் ஏதோ ஒரு விடயம் நடந்திருக்கிறது .
அதை மறைப்பதற்காகவே தனது சிந்தனை குதிரையை பலவாறு ஓடவிட்டு தற்பொழுது இந்த ப்ராஜெக்ட்டை அவசர அவசரமாக முடித்து கொடுக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு ஒரு வாறும் புரிந்து இருந்தது .
ஜெயாவிடம் ஏதாவது அவனை பற்றி பேசினால் தகவல் கிடைக்கும் என்று நினைத்தவள் நைசாக அவரிடம் பேசிக் கொடுக்க ஆரம்பித்தாள் .
” ஏன் மா அவர எப்பயும் ப்ராஜெக்ட் ஆரம்பிச்சா இது மாதிரி தான் வேக வேகமா பண்ணி கொடுப்பாரா…?
இல்லம்மா எப்பவுமே அவன் நல்லா டைம் எடுத்து பெஸ்ட் ஆ பண்ணி கொடுப்பான் .
ஆனா இந்த டைம் என்ன னு தெரியல எம்எல்ஏ கூட எதுவும் டார்ச்சர் எல்லாம் பண்றது இல்ல .
டைம் எடுத்துக்கிட்டாச்சும் நல்லா பண்ணி கொடுங்கன்னு சொன்னதுனால தான் ஒரு வருஷமா இந்த ப்ராஜெக்ட்டையும் பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்கான் .
ஆனா இப்ப மூணு மாசத்துல வேலையை முடிக்கணும்னு சொல்றது தான் அக்செப்ட் பண்ணிக்க முடியாத ஒரு விஷயமா இருக்குது …..
இது ல அச்சர்ப் பண்றதுக்கு என்னமா இருக்கு அதான் அவரு சொல்றாருல அல்மோஸ்ட் வேலை முடிஞ்சுருச்சு. இன்னும் மூணு மாசத்துல கொடுத்துடுவேன் அப்படின்னு …..
இல்லமா நானே அந்த சைட்டுக்கு பல தடவை போய் இருக்கேன் இப்பதான் கட்டடம் எழும்பி இருக்குது இன்னும் ரூம்லாம் எதுவும் கட்டவில்லை இங்கே இத்தனை ரூம் வரும்னு பிக்ஸ் பண்ணி மட்டும் தான் வச்சிருக்காங்க இப்ப திடீர்னு வந்து மூணு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னா எப்படி முடிக்க முடியும்…?
என்னம்மா சொல்றீங்க ஒன் இயர் ஆ இந்த ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க னு சொல்றீங்க . இப்ப தான் ஏதோ கட்டிடம் எழும்பி இருக்குற மாதிரி சொல்றீங்க . அப்ப ஒரு வருஷமா என்னதான் பண்ணாங்க…..
அதான் சொல்றேன் .
எம்எல்ஏ இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறப்ப பொறுமையா எவ்ளோ நாள் ஆனாலும் பரவால்ல நல்லா பண்ணி குடுங்க அப்படி னு சொல்லிட்டாரு .
அதனால தான் அவன் ஒரு ஆறு மாசமா இந்த வேலையை ஸ்டார்ட் பண்ணி வச்சிருக்கான் .
அதுக்கு முன்னாடி வேற வேற ப்ராஜெக்ட் வேலை தான் பார்த்துக்கிட்டு இருந்தான்…..
அப்படின்னா இன்னும் மூணு மாசத்துல வேலை முடிக்க முடியாது தானே?
எப்படி முடியும் கண்டிப்பா முடிக்க முடியாது .
எப்படி பார்த்தாலும் இன்னும் ஆறு மாசத்துக்கு மேல டைம் கிடைச்சா மட்டும் தான் அந்த வீட்டை ஃபுல்லா நம்மளால கட்டி கொடுக்க முடியும் .
என்னமோ அவசர அவசரமா எல்லாத்தையும் பண்றான் . எனக்கு ஒன்னும் புரியல நான் போய் மதியான சாப்பாடு ரெடி பண்றேன் …..”என்று கூறியவர் காளை மாத்திரையையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் .
ஆக இதிலிருந்து அவளுக்கு உருவிடையும் மட்டும் தெளிவாக புரிந்தது .
அவனுக்கு, தான் தேடிக் கொண்டிருக்கும் கேஸ் விடயமாக ஏதோ ஒரு விடயம் கிடைத்திருக்கிறது .
அதன் மூலமாகவே பின்னாளில் எதுவும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அவசரமாக இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்ற முடிவுக்கு வந்தாள் .
மதிய உணவு தயார் செய்யவும் அவர்கள் இருவரும் சாப்பிட்டவுடன் ஷர்வாணியே எடுத்து செல்வதாக கூறி சைடிற்கு சென்றாள் .
மகேஷ் “என்னடா லூசு மாதிரி இன்னைக்கும் வேலை அப்படி னு சொல்லிட்டு இங்க வந்திருக்க…. எப்படி நம்ம மட்டும் தான் இங்கே வர முடியும் . கொத்தனார் சித்தாள் எல்லாம் வரமாட்டானுங்க எக்ஸ்ட்ராவா சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னா கூட வாரத்துல ஒரு நாள் தான் லீவு கிடைக்குதுன்னு இப்ப எல்லாம் அவனுங்க கூட வர மாட்டாங்க….
நான் இங்க வேலை பார்க்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு வந்தாலும் இன்னைக்கு நமக்கு நேத்து கிடைத்த காப்பு மாதிரி வேற ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்க்கிறதுக்காக தான் வந்தேன் ….
என்னடா சொல்லிட்டு இருக்க .
நமக்கு ஆதாரம் கிடைச்சு நம்ம என்ன பண்ண போறோம் னு சொல்லு ,
இந்த விஷயத்தை ஷர்வாணி கிட்ட சொல்லுனாலும் கேட்க மாட்டேங்கிற .
நம்மளே இத தலையில தூக்கி வெச்சிட்டு பெரிய பிரச்சனை ஆக்கப்போறோமோ னு எனக்கு பயமா இருக்குது .
அது மட்டும் இல்லாம இந்த ப்ராஜெக்ட் அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியாது .
இந்த விஷயத்தை போலீஸ் கிட்டயும் கொண்டுட்டு போக முடியாது .
அப்படி கொண்டுட்டு போயிட்டோம் னா கண்டிப்பா இந்த இடத்தை அவங்க லாக் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்குது .
இந்த விஷயத்தை அவ கிட்ட எடுத்துட்டு போறது லாம் எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல …..
முடிஞ்ச வரைக்கும் இந்த கேஸ் நம்மளே ஹேண்டில் பண்ணிப்போம் .
அவளாம் ஒரு ஆளு னு அவ கிட்ட இத பத்தி எல்லாம் என்னால கேட்டுகிட்டு இருக்க முடியாது .
அப்புறம் எதுக்கெடுத்தாலும் முறைச்சிக்கிட்டே இருப்பா …..
நீ என்ன லூசா .
நம்மளே இந்த விஷயத்த எப்படி ஹேண்டில் பண்ண முடியும் …?
இது என்ன கட்டிடம் கட்றதா நம்மளே ஹேண்டில் பண்ணிக்கிறதுக்கு ….
இங்கு ஏதோ பெரிய கிரைம் நடந்திருக்குது .
அத ஒரு டிடெக்டிவோ இல்ல போலீசாலையோ தான் கண்டுபிடிக்க முடியும் .
அதை விட்டுட்டு நம்மளால எப்படி கண்டுபிடிக்க முடியும்…..
நீ என்ன வேணா சொல்லு அவ கிட்ட எல்லாம் என்னால இதை பத்தி பேச முடியாது . அவள பாத்தாலே எனக்கு கடுப்பாகுது …….”
இருவரின் பேச்சையும் கேட்டவாறு மார்புக்கு குறுக்கே கைகட்டி அவர்களுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தாள் ஷர்வாணி .
“இப்போ உன்ன நான் சாப்பாடு கொண்டுட்டு வர சொன்னனா ….
எதுக்காக எனக்கு சாப்பாடு கொண்டுட்டு வந்த .
நானே இன்னும் அரை மணி நேரத்துலயோ ஒரு மணி நேரத்திலேயே சாப்பிட வரமாட்டானா…?
எனக்கும் வீட்டுக்குள்ள இருக்க போர் அடிக்குது.
அதனால தான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போலாம் னு தான் வந்தேன் .
என் வேலையிலயும் கொஞ்ச நாள் லீவ் போட்டு இருக்கேன் .
உடனடியா வேலைலயும் ஈடுபட முடியாது .
அதனால வீட்டுக்குள்ள என்னால இருக்கவும் முடியல .
அதனால தான் அம்மா சமைக்கிறேன் என்று சொன்னாங்க நான் சமைக்கிறேன் நானே சாப்பாடு கொண்டுட்டு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் …..
சரி அம்மா சாப்டாங்களா அவங்க டேப்லட் எல்லாம் போடணும் கரெக்டான டைமுக்கு சாப்பிட்டா தான் ஹெல்த் ஆரோக்கியமா இருக்கும் னு டாக்டர் சொல்லி இருக்காங்க….
அம்மாவை சாப்பிட வச்சுட்டு அவங்களுக்கு டேப்லட் எல்லாம் கொடுத்துவிட்டு தான் நான் இங்கே வந்தேன் .
சரி எனக்கு சாப்பாடு எடுத்து வை நான் போய் மகேஷையும் கூட்டிட்டு வரேன் அவனோட சேர்ந்து சாப்பிடலாம் ……” என்று கூறியவன் சைட்டில் மூன்றாவது மாடியில் நின்று வேலைகளை சரி பார்த்துக் கொண்டிருக்கும் அதிசயம் சாப்பிடுவதற்காக கீழே அழைத்தான்.
அவளோ இருவருக்கும் இலையை போட்டு பரிமாறி வைத்திருந்தாள் .
மகேஷ் “ஏன் சிஸ்டர் உங்களுக்கு சிரமம் நீங்க ஒரு இடம் சொல்லி இருந்தால் நாங்க ரெண்டு பேரும் வந்து வீட்லையே சாப்பிட்டு இருப்போமே அதை விட்டுட்டு நீ ஏன் இந்த வெயில்ல சாப்பாடு எடுத்துட்டு அலைஞ்சிட்டு இருக்கீங்க……
இல்லை இல்லை இதுல என்னன்னா எனக்கு சிரமம் இருக்குது .
சாப்பாடு கொண்டுட்டு வரதில்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .
சொல்ல போனா அப்படியே வெளியில வந்த மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டாவும் இருக்கும் .
எவ்வளவு நேரம் தான் நானும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது .
ஒரு நாள் தான் இருந்தேன் .அதுவே என்னால இருக்க முடியல !
எப்பயுமே வேலை னு வெளியிலேயே சுத்திட்டேன் .
இப்ப திடீர் னு வீட்டுக்குள்ள இருக்கணும் னு நினைச்சாலே அது முடியாத காரியமா இருக்குது …..” என்று இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை ஏதோ ஒரு விடயத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தது என்பதை ஷர்வாணியும் கண்டுகொண்டாள் .
ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .
இருவருக்குமே வெஜ் தான் செய்து எடுத்து வைத்திருந்தாள் . சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என அனைத்துமே மணத்தை வைத்து சொல்லிவிடலாம் ருசியாக இருக்கும் என்பதை ….
சாப்பிட்டபடியே மகேஷ் அப்போது அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் .
“சிஸ்டர் உங்களுக்கு நான்வெஜ் சமைக்க தெரியுமா…?
ஹான் தெரியும் பிரதர் . ஆனா இன்னைக்கு சனிக்கிழமை னு தான் வெஜிடேரியனை சமைச்சு எடுத்துட்டு வந்தேன் .
நாளைக்கு வீட்டுக்கு வாங்க நான்வெஜ் வெச்சிடறேன்….
என்ன மச்சான் எப்பயும் சாப்பிடறப்போ லொட லொட னு பேசிகிட்டு சாப்பிடுவ .
இன்னைக்கு என்னன்னா அமைதியா இருக்க . உன் பொண்டாட்டி சமைச்ச சாப்பாடு ரசிச்சு ருசிச்சு அமைதியா சாப்பிடுறியோ…….”என்று கேட்ட மகேஷுக்கு பதிலாக என்னமோ அவனிடமிருந்து முறைப்பு மட்டும் தான் மிஞ்சியது . எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட ஆரம்பித்து விட்டான் .
“நல்லா இருக்கு சாப்பாடு ரொம்ப சூப்பரா சமைச்சு வச்சிருக்கே , இப்படியே தினமும் நீ சமைச்சு போட்டா நல்லா இருக்கும் ….
அதுக்கு என்ன தினமும் சமைச்சு கொடுத்தா போகுது….
உங்களுக்கு இல்லாததா ……” என்று கூறியவள் அதன் பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் மகேஷிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .
“ஏன்டா இன்னைக்கு எதோ நீ யோசனைல சாப்பிட்டுகிட்டு இருந்த மாதிரி எனக்கு தோணுது . எப்பயும் சாப்பிடறப்ப தான் நிறைய விஷயத்தை நம்ம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம் இன்னைக்கு நீ ஏதோ ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சா மாதிரியே எனக்கு தோணுச்சு . என்ன ஏதாச்சும் ப்ராப்ளமா….?
திரும்ப அவன் ஏதாச்சும் கால் பண்ணி மிரட்டுனானா இல்ல வேற ஏதாச்சும் ஒரு விஷயத்துல நம்ம விஷயத்துல அவன் இன்வால்வ் ஆகிறானா …..
இல்லடா அதெல்லாம் எதுவும் கால் பண்ணல .
அவன் இப்போ நம்ம கிட்ட எந்த பிரச்சனையும் பண்றது இல்ல .
சொல்ல போனா இன்னும் ரெண்டு நாள் ல நம்ம புது ப்ராஜெக்ட் பத்தி பேச போறோம் இல்ல அத பத்தி கூட அவன் இப்ப என் கிட்ட எதுவும் கால் பண்ணி பேச கூட இல்ல .
எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த யோசனையும் இல்ல . எனக்கு இப்ப இருக்க யோசனை எல்லாம் இது தான் …..”என்று கூறியவன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு வெள்ளி காப்பு எடுத்து மகேஷிடம் காட்டினான்.
“ஐ வெள்ளி காப்பு ஏது இது யாருக்கு வாங்குன எனக்காக வாங்கினியா…?
என் மேல அவ்ளோ பாசமா டா உனக்கு !
சரி வாங்கினது தான் வாங்கிட்டேன் என்கிட்ட எப்படி கொடுக்கறது னு யோசிச்சுக்கிட்டு இருக்கியா…?
உன் கல்யாணத்துக்கு எனக்கு எதுவுமே வாங்கி கொடுக்கலையே எப்படி இத அவன் கிட்ட கொடுக்கிறது னு நெனச்சியா….
டேய் ஒரு நிமிஷம் நிப்பாட்டு .
நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகாத ….
ஆமா என் கல்யாணத்துக்கு எதுக்காக நான் உனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .
நீ தான் எனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .
ஆமா நீ பண்ணது பெரிய கல்யாணம் அதுக்கு கிப்ட் ஒன்னு தான் குறைச்சல் பாரு! சரி இது எத்தனை கிராம் சொல்லுடா,
நீயே என் கையில போட்டு விடுறியா இல்ல நான் போட்டுக்கவா….” என்றவனின் கைகளில் இருந்த காப்பை பிடுங்கி தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான் .
” இது ஒன்னும் நான் வாங்குனது கிடையாது . இது மூன்றாவது மாடியில் கீழே கிடந்தது . ஒருவேளை வேலை பாக்குறவங்க யாராச்சும் போட்டு இருப்பாங்களா னு நான் எல்லார் கிட்டயும் கேட்டேன் .
ஆனா அவங்க யாருமே அவங்களோடது இல்லை னு சொல்லிட்டு போயிட்டாங்க . இங்கே நம்ம வேலை பாக்குறவங்கள தவிர வேற யாரும் வராது வேலை கிடையாது அப்படி இருக்கிறப்போ இந்த காப்பு மட்டும் எப்படி வந்திருக்கும் .
அது மட்டும் இல்லாம இது ல லேசா ஏதோ ரத்த கறை மாதிரி வேற இருக்குது .
அதான் எனக்கு அதப்பத்தின யோசனையாவே இருக்குது .
ஒருவேளை பின்னாடி இதனால ஏதாச்சும் பிரச்சனை வந்துருமோ அப்படி என்று …….
ஏய் என்னடா என்னன்னமோ சொல்ற!
நீ சொல்றதெல்லாம் பாக்குறப்ப எனக்கு பயமா இருக்குது .
நம்ம கட்டிக்கிட்டு இருக்க வீடு வேற எம்எல்ஏ ஓட வீடு . இது ல ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்துருச்சுன்னா அந்த மனுஷன் அவங்க ஆளுங்கள வச்சு நம்மள உயிரோட புதைச்சிருவான் .
வாட்ச்மேன் நைட்டு பூரா இருக்காங்க தானா அவங்க கிட்ட விசாரிச்சியா இத பத்தி ……
கேட்டேன் டா அவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இங்க யாரும் வரல தம்பி . இந்த காப்பு யாரோடதுன்னு தெரியாது , நீங்களும் உங்க ஆட்களும் தான் வந்து வேலை பார்த்துட்டு போறீங்கன்ற மாதிரி தான் பேசுறாரு ….
டேய் பேசாம நம்ம இந்த காப்பை ஷர்வாணி கிட்ட கொடுத்து அதை பத்தி விசாரிக்க சொல்லுவோமா….
இல்லடா தேவை இல்லாம அவ கிட்ட எல்லாம் கொடுத்து இதை பெருசாக வேணாம் னு எனக்கு தோணுது .
அது மட்டும் இல்லாம அல்மோஸ்ட் இந்த வீட இப்ப நம்ம கட்டி முடிக்க போறோம் .
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் வேலைய சீக்கிரமா முடிச்சு குடுத்துருவோம் .
அதுக்கப்புறம் எந்த பிரச்சனை வந்தாலும் அவரே சமாளிச்சுப்பாரு …..
நீ என்னடா பேசுற . இப்போ இந்த இடம் பூரா நம்ம கண்ட்ரோல்ல இருக்குது .
நாளைக்கு வேலைய முடிச்சு அவரு கிட்ட வீட்ட கொடுத்தா கூட ஏதாச்சும் பிரச்சனை வந்தா கண்டிப்பா நம்ம கிட்ட தான் கேட்பாங்க.
இந்த விஷயத்தை பத்தி நம்ம நமக்குள்ளேயே டிஸ்கஸ் பண்றத விட்டுட்டு ஷர்வானி கிட்ட இதை எடுத்துட்டு போறது நல்லது னு எனக்கு தோணுது….
நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் . இந்த விஷயத்தை இதோட மறந்துரு…..” என்று கூறியவன் அந்த காப்பையும் வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டான் .
ஆனால் மகேஷ் க்கு தான் அவன் செய்வது அனைத்தும் சரியான படவில்லை .
நிச்சயமாக இந்த பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது .
“மேடம் கடைசியா அந்தப் பையன் மிஸ் ஆன லொகேஷன் நீங்க இப்ப போயிட்டு வந்த பில்டிங்கில் தான் காட்டுது…..
அங்க தான் அவனோட போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு….
நீங்க அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணுங்க . நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும் .
நான் இப்பதான் அந்த பில்டிங்ல இருந்து வெளியில வந்தேன் . நாளைக்கு போய் திரும்ப செக் பண்ணிக்கிறேன் .
இப்போ நீங்க எனக்கு இன்பர்மேஷன் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!
இதுக்கு மேல நானே இந்த கேஸ் அ ஹேண்டில் பண்ணிக்கிறேன் .
அடிக்கடி எனக்கு போன் பண்ண வேணாம் நம்மள அந்த கேங் டிரேஸ் பண்றதுக்கான வாய்ப்பு இருக்குது .
சோ உடனடியாக இந்த சிம் கார்டு தூக்கி போட்டுடுங்க ……
ஓகே மேம் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்றதுக்காக தான் நான் கால் பண்ணன் .
உடனடியா இந்த நம்பர் அ அழிச்சுடறேன்….”என்ற அந்த பக்கத்தில் இருந்து கூறியவன் உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு அந்த எண்ணையும் அழித்துவிட்டான் .
அப்ப நிச்சயமா நம்ம அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணா நமக்கு தேவையான ஒரு விஷயம் கண்டிப்பா கிடைக்கும் .
செக் பண்றேன் கூடிய சீக்கிரத்துல அவனை யாரு கடத்தினா அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கிறேன் …..என்று நினைத்த ஷர்வாணி வீட்டை நோக்கி புறப்பட்டாள் .
– தொடரும்🖤🖤🖤🖤
Newer Posts