அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
மகேஷ் பில்டிங் வந்து பார்க்க அங்குள்ள கொத்தனார் மற்றும் சித்தாள் மூலமாக அவனை போலீஸ் கைது செய்து விட்டு சென்ற விடயம் அவனுக்கு தெரிந்தது.
உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றவன் அங்கு உள்ள காவல் அதிகாரியிடம் விசாரிக்க , ஏற்கனவே இந்த பில்டிங்கில் இரண்டு பேர் காணாமல் சென்றதும் அதற்கு காரணம் சிவா தான் என்று அவர்கள் சந்தேகப்படுவதால் காவலில் எடுத்து விசாரிக்க வைத்திருக்கிறோம் என்று தெரிவித்து வைத்தனர் .
தற்பொழுது மகேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .
உடனடியாக ஜெயாவிடம் இந்த விடயத்தை தெரிவித்தால் அவர் பதட்ட படுவார் என்று நினைத்த அவன் சர்வாணிக்கு மட்டும் அழைத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தான் .
அடுத்த பத்தாவது நிமிடத்தில் காவல் நிலையம் வந்தவள் நேராக அங்குள்ள காவல் அதிகாரியிடம் சென்று பேசினாள் .
“சார் அந்த பில்டிங் ல தான் ரெண்டு பசங்க காணாமல் போயிருக்காங்க என்ற விஷயம் எனக்கும் தெரியும் .
நானும் ஒரு டிடெக்டிவ் தான் .
ஆனா அதுக்கு காரணம் இவரு கிடையாது .
எந்த அடிப்படையில் இவர் தான் அவங்க காணாம போனதுக்கு காரணம் னு நீங்க கைது செஞ்சுட்டு வந்து இருக்கீங்க .
ஒருவேளை உங்க போலீஸ் ஆட்கள் யாராச்சும் அவரு அந்த பசங்கள கடத்துனது பார்த்தார்களா…?
இல்ல அந்த பசங்க கடத்துறப்ப அவரு கூட இருக்கிறத தான் பார்த்தார்களா…? இல்ல தானே!
அப்படி இருக்கிறப்போ எப்படி இவங்க தான் அதுக்கு காரணம்னு நீங்க சொல்லலாம்…?
ஹலோ மேடம் கரெக்டா அந்த பசங்க ரெண்டு பேரும் கடத்தப்பட்ட இடம் இவரோட பில்டிங் தான் .
அது மட்டும் இல்லாம அவங்க ரெண்டு பேரும் கடத்திருக்கிறப்போ இவரும் சைட் ல தான் இருந்திருக்காங்க .
சைட்டு ல இருந்தவங்களுக்கு எப்படி அவங்க இடத்துல ஒரு கடத்தல் நடக்கிறது தெரியாம இருக்கும் ஒன்னு இவரு தான் ஆளு வச்சு அந்த பசங்கள கடத்தி இருக்கணும் .
அப்படியும் இல்லையா கடத்தல் காரங்களுக்கு உதவி பண்ணி இருக்கணும் .
இவர ரொம்ப நாளா நாங்க கண்காணிச்சு தான் இருந்தோம் .
கரெக்டா அந்த பசங்களோட மொபைல் சிக்னல் கட்டாகறப்போ அங்க காமிச்சா இன்னொரு நம்பர் இவரோட மொபைல் சிக்னல்…!
நீங்க எங்க வேணா போய் பேசிக்கோங்க விசாரணை முடியுற வரைக்கும் இவரை எங்களால் வெளியில் விட முடியாது …..” என்று லாப கப்புக்குள் சிவாவை தள்ளி பூட்டினார் அந்த போலீஸ் அதிகாரி .
அவள் அவள் கண்காணித்தவரை கடைசியாக கடத்தப்பட்டவர்களின் மொபைல் சிக்னல் கட்டான இடம் தான் சிவாவின் பில்டிங் என்பது வரை மட்டும் தான் ….
அதை தாண்டி அவளுக்கு சிவாவின் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
அவள் அவனிடம் இருக்கும் தடயத்தை என்னவென்று கேட்டது கூட இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன எடுக்கலாம் என்பதற்காகவே கேட்டாள் .
மத்தபடி அவன் மீது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது .
ஆனால் தற்பொழுது அந்த காவல் அதிகாரி கூறும் விடயம் அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது .
நிச்சயம் இவன் இருக்கையில் இவ்வாறு ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றால் ஒருவேளை அந்த கடத்தல் கும்பல் இவனுக்கு தெரியாமல் தான் இவனது பில்டிங் லேயே அவர்களை கடத்தி இருக்க இயலும் என்பது அவளது வாதமாக இருந்தாலும் ,அதை கேட்பதற்கு காவல்துறையினர் தயாராக இல்லை .
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவனை ஜாமினில் வெளியே எடுத்தால் மட்டுமே அவனிடம் என்னவென்று பேசலாம் என்று முடிவெடுத்தல் உடனடியாக தனக்கு தெரிந்த லாயரையும் தொடர்பு கொண்டாள் . மகேஷ் லாகபின் நின்று கொண்டிருந்தது தனது நண்பனிடம் சென்று கத்திக் கொண்டிருந்தான் .
“அப்பவே உன்கிட்ட சொன்னேனே கேட்டியா இந்த விஷயத்தை அவ கிட்ட கொண்டுட்டு போகலாம் அப்படி னு…
நீ தான் கேட்கவே இல்லை .
இப்ப பாரு எங்க வந்து நிக்குது !
இப்ப வேற அவங்க என்னென்னமோ சொல்றாங்க . ஏதோ நம்ம இருக்கிறப்பயே கடத்தல் நடந்திருக்கிற மாதிரி சொல்றாங்க…!
ஏன் டா எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்குற நீ ஷர்வானிய பார்த்த ஒரு நாளிலேயே இப்படி அவ மேல வெறுப்ப அள்ளி வீசுற ….
இப்ப கூட உனக்காக அந்த போலீஸ் ஆபீஸர் கிட்ட பேசுறது அவ தான் .
உனக்கு ஏன் அது புரியவே மாட்டேங்குது எனக்கு தெரியல…. ” என்று பேசுபவனிடம் எந்த பதிலும் கூறாமல் சிறிது நேரம் அவளையே பார்த்தவன் லாக்கப்பில் ஒரு மூலையில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான் .
இதற்கு பின்பும் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் என்று நினைத்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த விர்வானியிடம் வந்தான் .
“என்னம்மா உன் சைடு ல இருந்து யாராவது நாயே வராங்களா இல்ல என் ஃபிரண்ட்ஸ் மூலமா ஏதாச்சும் ட்ரை பண்ணவா …..?
என்னோட பிரண்டு ஒருத்தன் லாயர் தான் .
நான் அவனுக்கு கால் பண்ண . அவன் இப்ப பெங்களூர்ல இருக்கானா ம வரத்துக்கு ரெண்டு நாள் ஆகும் னு சொல்றாங்க .
ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போய் இருக்கானாம்
அவன் தான் பெஸ்ட் லாயர் கூட ….
அவன் வந்தா நிச்சயமா நம்ம அவர வெளியில எடுத்து விடலாம் .
ஆனா அவன் வரதுக்கு ரெண்டு நாள் ஆகும் ,
ரெண்டு நாள் வரைக்கும் அம்மா கிட்ட என்ன பதில் சொல்றது னு எனக்கு தெரியல !
இப்பயே அவசர அவசரமா கிளம்பி வரத பாத்துட்டு எங்க போற னு கேட்டாங்க .
நான் தான் பிரண்ட பாக்க போறேன் னு சொல்லிட்டு வந்துட்டேன் .
அவங்களுக்கு அதிலேயே சந்தேகம் வந்தாலும் வந்து இருக்கும் ,
அவங்க கிட்ட இப்போ இவரு உள்ளே இருக்காரு னு சொன்னா நிச்சயமா ரொம்ப வருத்தப்படுவாங்க .
அவங்களுக்கு ஹெல்த் இஷூ இருக்குது வேற …
நீங்க உங்க சைடுல யாராவது லாயர் இருந்தா பேசி பாருங்க…
சரி இரு மா என்னோட ஸ்கூல் படிச்ச ஒருத்தன் லா காலேஜ் ல தான் படிச்சான் ,
அதுக்கப்புறம் அவனோட பேசுறது இல்ல .
நான் வேணா என் பிரண்டு மூலமா அவன் இப்போ எங்கள் லாயரா இருக்கான் னு கேட்டு பாக்குறேன்…..” என்று கூறியவன் உடனடியாக தனது நண்பனை அழைத்து அவனைப் பற்றி விசாரித்தான் .
அவனது பதிலும் என்னவோ பூஜ்ஜியமாக இருக்க நிச்சயமாக இரு நாட்கள் அவனுக்காக காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா…?
இல்லை இந்த ஊரில் வேறு ஏதாவது பெஸ்ட் லாயரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அவனை வெளியே கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
திருமணத்தன்று வந்திருந்த அவளின் நெருங்கிய தோழனுக்கு அழைத்து பேச அவனும் சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு ஒரு லாயரை வரவழைத்து இருந்தான் .
அடுத்த பத்தாவது நிமிடத்தில் சரியாக அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட , அவனும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர காவல்துறையினர் இன்னும் அவன் மீது சந்தேகத்தில் இருப்பதால் ஊரை விட்டு எங்கே வெளியேவும் செல்லக்கூடாது .
அதுபோக ஆவணி கண்காணிப்பதற்கு இன்று மட்டி போலீசையும் வைத்திருந்தனர் . இந்த விடயம் ஷர்வானி சிவா மகேஷ் என மூவருக்குமே நன்றாக தெரிந்தும் இருந்தது . ஷர்வானி அதன் பிறகு எதுவும் பேசாமல் அவள் வந்திருந்து ஸ்கூட்டிலேயே சிவாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள் .
மகேஷ் அவனது வேலையையும் ஓரம் தள்ளி விட்டு சிவா உடன் இணைந்து அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .
இந்த கேஸ் விஷயமாக நிச்சயமாக சிவா எதுவும் அவளிடம் கூறப்போவதில்லை .
ஏனெனில்அவனுக்கு அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருப்பவனை நம்புவதில் இனி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அவளிடம் இன்று பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டிற்கு சென்றான் .
வீட்டிற்குள் மூவரும் நுழைய ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை சற்று நேரத்திற்கு முன்பு அரக்க பறக்க வுர்வானி கிளம்பி போனதையும் தற்பொழுது மூவரும் வந்திருப்பதையும் பார்த்து என்னவென்று கேட்பதற்காக அவர்கள் அருகில் சென்றார் .
“என்ன டா நீ போன வேகத்திலேயே வந்துட்ட !
அது மட்டும் இல்லாம உன் கூட இவனுங்க ரெண்டு பேரும் வந்துருக்காங்க .
இந்நேரத்துக்கு அவங்க சைட்ல தானே வேலையில் இருப்பாங்க .
அது மட்டும் இல்லாம இப்போ வேலைய வேற சீக்கிரம் முடிக்கணும் னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க . அது எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்திருக்காங்க…” என்று ஜெயா பேசிக் கொண்டிருக்க அவளுக்கு தான் என்ன கூறுவது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க மகேஷ் பேசினான் .
“அது ஒன்னும் இல்லமா முக்கியமான பைல் வீட்ல வச்சுட்டு போய்ட்டானாம் .
அதனால தான் எனக்கு கால் பண்ணி எடுத்துட்டு வர சொன்னான் . நான் கொஞ்சம் வெளியில இருந்ததினால நான் வர லேட் ஆகும் .
நீயே போய் எடுத்துக்கோ அப்படி னு நான் தான் சொன்னேன் . அதுக்குள்ள என் வேலையும் முடிஞ்சு சரியா நானே போய் எடுத்துட்டு வரலாம் னு வந்தா கரெக்ட்டா இவனும் இங்க வந்துட்டான் அதாம்மா …. “
என்று கூறியவன் சிவாவையும் தள்ளி கொண்டு அவனது அறைக்குள் சென்று விட்டான் .
இதற்கு மேல் நின்னால் ஏதாவது கேள்வி கேட்பார்கள் என்று ரீதியில் ……
சரி மா ஜூஸ் போட்டு கொண்டு வரேன் என்று சமையலறைக்குள் நுழைந்த ஜெயா அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஜூஸ் உடன் வர அதை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள சிவாவின் அறைக்கு சென்றாள் .
அறை வாசலிலேயே மகேஷ் கத்திக் கொண்டிருக்கும் சத்தம் அவளுக்கு நன்றாகவே கேட்க அறைக்குள் வந்தவள் கதவையும் சாத்திவிட்டு இருவரிடம் பேசினாள் . சுற்றிலும் வயல் இருக்க தாண்டி ஒரு தென்னந்தோப்பு காணப்பட்டது தென்னந்தோப்பில் வெளிச்சத்திற்காக ஒரே ஒரு பேட்டரி லைட் மட்டும் வைக்கப்பட்டு இருக்க அங்குள்ள மரங்களில் உள்ள தென்னங் கொலையை பாதுகாப்பதற்காகவே காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .
தோப்பிற்கு உள்ளே செல்ல செல்ல வெளிச்சம் என்பதே கிடையாது . கிட்டத்தட்ட தோப்பு ஆரம்பித்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து சென்ற பிறகு ஒரு இடத்தில் அந்த உருவம் நின்றது .
அந்த உருவத்திற்கு நேர் எதிராக இருந்த இரண்டு மரங்களில் 18 பிராயம் மிக்க இரு ஆண்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர் .
தனது கையில் வைத்திருந்து பேட்டரி லைட்டை அங்கு ஓரமாக வைத்துவிட்டு அருகில் கிடந்த சாறு எடுத்து அவர்கள் இருவரின் முன்பு போட்டு அமர்ந்தது அந்த உருவம் . அந்த இருவரும் மயக்கத்தில் இருக்க அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை .
அவர்களது முகத்தில் தண்ணீரை ஊற்றி மயக்கத்தை கலைத்த அந்த உருவம் இருவரையும் நோக்கியது .
மயக்கம் தெளிந்த இருவரும் தாங்கள் எங்கிருக்கிறோம் என சுற்றி முற்றி பார்க்க அவர்களுக்கு தெரிந்தது என்னவோ அந்த கருப்பு உருவம் மட்டுமே .
அதைத் தாண்டி தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பது அவர்களால் உணரப்பட்டது .
கட்டப்பட்ட இரு ஆண்களில் ஒருவன் சீற்றம் கொண்டு அந்த உருவத்திடம் கத்த தொடங்கி விட்டான்.
“ஏய் யாருடா நீங்க எல்லாம் எதுக்காக எங்க ரெண்டு பேரையும் கடத்தி வச்சிருக்கீங்க…
நாங்க ரெண்டு பேரும் டியூஷன் போயிட்டு எப்பயும் விளையாடுற கிரிக்கெட் கிரவுண்ட்ல இருக்கும் போது எதுக்காக இப்படி எங்கள கடத்திட்டு வந்து இருக்கீங்க…?
எங்க கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க . நீங்க நினைக்கிற மாதிரி எங்க அப்பா அம்மா ஒன்னும் அவ்வளவு வசதி கிடையாது .
நீங்க கேட்கிற காசை கொடுக்குறதுக்கு …
அது மட்டும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே மிடில் கிளாஸ் தான் எங்க கிட்ட இருந்து என்னதான் எதிர்பார்க்கிறிங்க…?”அவன் பேச பேச சிரித்த அந்த உருவம் ” உங்க ரெண்டு பேரு கிட்டயும் நாங்க எதிர்பார்க்கிறது உங்கள தான்!
உங்க அப்பா அம்மா கிட்ட இருந்து எங்களுக்கு னு எதுவும் தேவை கிடையாது .
அட் தி சேம் டைம் உங்க அப்பா அம்மா எங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா அப்புறம் இங்கிலீஷ்ல அவங்களையும் சேர்க்க வேண்டியதா இருக்கும் ……!
நீ சொல்றது எனக்கு புரியல . எங்க ரெண்டு பேரு வச்சு நீங்க என்ன பண்ண போறீங்க….
அது போக போக உங்களுக்கே புரியும் …. “என்று அந்த தென்னந்தோப்பு அதிர சிரித்த அந்த உருவம் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஊசியை எடுத்து இருவருக்கும் குத்தியது திரும்பவும் இருவரும் மயக்க நிலைக்கு சென்றனர் .
அவர்கள் இருவரும் மயங்கி விட்டனர் என உறுதி செய்த அந்த உருவம் தனது கைபேசியில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தது .
“ஹலோ நீ சொன்ன மாதிரி நான் தோப்புக்கு வந்து பசங்கள பாத்துட்டேன் .
அவங்க ரெண்டு பேருமே நல்லா தான் இருக்காங்க .
என்ன ரெண்டு பேர் ல ஒருத்தன் தான் சும்மா நொய் நொய் னு பேசிக்கிட்டே இருக்கான் .
இன்னொருத்தன் சரியான பயம் தான் கொள்யா இருப்பான் போல…
அவன் பேசுவதை பார்த்து கூட பயப்படுறான் .
ஆனா இன்னொரு தடவை நிச்சயமா அவங்க கண் முழிச்சிட்டா நம்மளால சமாளிக்க முடியாது னு எனக்கு தோணுது .
இந்த தோப்புல உள்ள ஆட்களுக்கு தெரியாம தான் நம்ம இவங்கள கடத்தி வச்சிருக்கோம்.
யாருக்காவது தெரிஞ்சிருச்சுன்னா இந்த கிராமத்துல உள்ள மக்கள் நிச்சயமா நம்மள சும்மா விட மாட்டாங்க …..
ரொம்ப நாளைக்கு யாருக்கும் தெரியாம இவனுங்கள இங்க வச்சுக்கிறது இம்பாசிபிள் .
கூடிய சீக்கிரம் ஒரு பாதுகாப்பான இடத்தை பாரு நம்மை இவங்கள மாத்திடலாம் ……
இடியட் நான் சொல்றத நீ செய்யணும் .
நீ சொல்றத என்னால தான் செய்ய முடியாது .அங்க உள்ள மக்கள் யாரும் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்காம நீ தான் பாத்துக்கணும் ,
அதுக்காக தான் உனக்கு மாசத்துக்கு லட்சக்கணக்குல சேலரி கொடுத்துக்கிட்டு இருக்கேன் அந்த ரெண்டு பசங்க நமக்கு முக்கியம் தான் ஆனா அவங்கள மிஸ் பண்ணிட கூடாது . அதே நேரத்துல அவங்க நமக்கு இப்ப முக்கியம் இல்ல அப்பதான் பார்ட்டி கிட்ட கொடுக்க முடியும் .
ஓகே பாஸ் நான் இந்த கிராமத்திலேயே வேலை செய்றவன் மாதிரி இருந்து தோப்புக்குள்ள இந்த இடத்துல மட்டும் யாரும் வராத மாதிரி நான் பாத்துக்குறேன்……” என்று கூறியவன் அழைப்பையும் துண்டித்து விட்டான் .
எனினும் அவனுக்கு நிச்சயமாக இந்த தோப்பில் யாராவது பார்த்து விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தினால் , உடனடியாக அவனது ஆட்களுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் இருவரையும் அங்கிருந்த பூட்டி கிடந்த ஒரு பண்ணை வீட்டில் சென்று அடைத்தான் .
கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தவள் இருவரிடமும் பொறுமையாக பேச ஆரம்பித்தாள் .
“நீங்க ரெண்டு பேரும் கத்துக்கிட்டு இருக்கிறது கீழ வரைக்கும் கேக்குது.அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயமா டென்ஷன் ஆகுவாங்க . ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க எதா இருந்தாலும் பொறுமையா பேச தெரியாதா…?
சாரி மா எதோ ஒரு வேகத்துல நான் தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டன் ……”என்று மகேஷ் கூற சிவாவும் அவர்கள் என்ன பேசினால் எனக்கு என்ன என்று ரீதியில் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டான் . எனக்கும் இங்கு நடப்பவைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் …….
“மச்சான் இப்ப கூட அந்த பொண்ணு உன் அம்மாவுக்காக தான் பேசிகிட்டு இருக்கு ,
ஆனா நீ இங்க எதுவுமே நடக்காத மாதிரி இப்படி ஓரமாக போய் உட்கார்ந்து இருக்க…
உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க….?
இப்ப உன் கைக்கு கிடைச்ச காப்ப அவகிட்ட குடுடா .
என்ன நடந்துச்சுன்றதை தெளிவா சொல்லு அப்ப தான் இந்த பிரச்சனை ல இருந்து நம்ம முழுசா வெளியில் வர முடியும் .
ரொம்ப நாளைக்கு இந்த விஷயத்தை நம்ம அம்மா கிட்ட இருந்து மறைக்க முடியாது.
என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு தெரிய வரப்ப நிச்சயமா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க……
டேய் நான் முன்னாடி சொன்னது தான் இப்பயும் சொல்ற!
என்கிட்ட கிடைச்சது வெறும் காப்பு மட்டும் தான் அந்த காப்பு லயும் ஏதோ ஒரு ரத்தக்கரை இருந்துச்சு .
இந்த காப்ப வச்சு அவ என்ன பண்ண முடியும் . எதுவும் பண்ண முடியாது….” என்று கூறியவன் அங்குள்ள மேசையின் டிராயரில் வைத்திருந்த காப்பையும் எடுத்து அவளிடம் நீட்டினான் .
அவன் தன்னிடம் இந்த விடயத்தை பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது .
ஏனோ அவன் ஏன் இவ்வாறு யோசிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவளது சிந்தையில் ஓடிக்கொண்டே இருந்தது .
எப்பொழுதும் எவ்வளவு பெரிய சிக்கலான கேசாக இருந்தாலும் தெளிவாக யோசித்து முடிவு எடுப்பவளுக்கு இன்று அவனது ஒத்துழையாமை சற்று கோபமாக இருந்தாலும் சரி இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் இல்லை என்ற ரீதியில் மகேஷிடம் பேச ஆரம்பித்தாள் .
” அண்ணா இப்ப அவருக்கு கிடைச்சிருக்கிறது ஜாமீன் மட்டும் தான் .
இன்னும் இந்த கேஸ் ல இருந்து அவர் முழுசா வெளியில் வரல .
அதே நேரத்துல இந்த கேஸ் ல இருந்து முழுசா வெளில வரணும் அப்படின்னா நான் சைட்டு பூரா சுத்தி பார்க்கணும் .
அவரு என் கிட்ட எதையும் சொல்ற மாதிரியே எனக்கு தெரியல !அவன் சொல்லலனா என்னம்மா எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் .
நீ இன்னைக்கு சைட்டுக்கு வந்து உனக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியுதா னு பாரு! அதே நேரத்துல அவனோட மொபைல் சிக்னல் எல்லாத்தையும் நீயே டிரேஸ் பண்ணி பாரு…அந்த போலீஸ் ஆபீசர் சொன்ன மாதிரி உனக்கு ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பாரு …நிச்சயமா அவன் இது ல சம்மதப்படல அந்த காப்பை எடுத்த உடனே என் கிட்ட சொல்லிட்டான் .
அதுக்கப்புறம் அவனுக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது .
ஆனால் அன்னைக்கு நாங்க எல்லாருமே சைட்டு ல இருந்தும் நாங்க எல்லாரும் இருக்கிறப்ப எப்படி அது மாதிரி ஒரு கடத்தல் நடந்திருக்கும்…?
தெரியல அண்ணா சைட்ட சுத்தி பார்த்ததுக்கு அப்புறமா நமக்கு ஏதாச்சும் எவிடன்ஸ் கிடைச்சா மட்டும் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் …. ” என்று கூறியவள் உடனடியாக மகேஷுடன் அந்த சைட் க்கு சென்றுவிட்டாள் .
சிவாவிற்கு தான் அவள் இந்த விடயத்தை பற்றி பேசுவதும் இதில் சம்பந்தப்படுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை .
அவள் எதற்காக தன்னை பற்றி சிந்திக்க வேண்டும் தனது தாயை பற்றி சிந்திக்க வேண்டும் …?
அதுபோக தான் இதில் மாட்டிக் கொண்டால் அவளுக்கு என்ன என்ற ரீதியில் அவனது யோசனை முழுக்க இருந்தது .
எதிர்வரும் காலங்களில் அவள் தனக்காக யோசித்து சிந்தனை எல்லாம் அவன் யோசிப்பதற்கு வாய்ப்புண்டோ அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் !
அவனும் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து படி சென்றான் ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை . முதலில் அவள் வேகவேகமாக எங்கோ சென்றாள் . பிறகு மூவரும் ஒன்றாக வந்தனர் .இப்பொழுது மூவரும் கிளம்பி அவசர அவசரமாக செல்கின்றனர் என்ற ரீதியில் யோசித்தவாறு சமையல் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் .அங்கு சென்றவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிந்தது . தான் சந்தேகித்த ஆள் நிச்சயமாக சிவா கிடையாது என்று ……
சிவாவை பொறுத்தவரையும் யாராவது அங்கிருந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும் அவர்களது உடமையாக தான் அந்த காப்பு இருக்க வேண்டும் என்ற யோசனையிலேயே அவனுக்கும் ,
ஷர்வாணிக்கோ இந்த கேஸை எப்படி ஹேண்டில் செய்யப் போகிறோம் என்று அவளிடம் வந்து புது கேள்வி பற்றிய சிந்தனைகளும் கழிந்திருந்தது .
அவளிடம் தற்பொழுது கை வசம் வந்திருக்கும் கேசானது 18 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர் அதுவும் ஒரே நாளில் ஒரே இடத்தில் …..
ஆனால் அவர்களை கடத்தியவர்கள் எந்த விதமான நகையோ பொருளோ பணமோ கடத்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் கேட்டு மிரட்டவில்லை .
ஏன் கடத்தப்பட்டார்கள் என்று கூட அவர்களது போன் சிக்னல் கட்டான இடத்திலிருந்து தான் உறுதி செய்யப்பட்டது .
அப்படி இருக்கையில் யார் அவர்களை கடத்தி இருக்கக்கூடும் அவர்களது நோக்கம் என்னவாக இருக்கும் என்று பலவாறு அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது .
இரு நாட்களாக கடத்தப்பட்ட இருவரின் போன் சிக்னலை ட்ரேஸ் செய்ததில் அவர்கள் இருவரின் கைபேசியின் சிக்னலும் சிவா தற்பொழுது கட்டிக் கொண்டிருக்கும் பில்டிங்கில் சரியாக கட் ஆகி இருக்கிறது என்பதும் தெரிய வந்திருந்தது .
அதுபோக இன்று மகேஷ் சிவா இருவரும் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் கேட்டாள் .
ஏதோ கடத்தப்பட்டவர்களின் ஒரு உடைமை அவனிடம் இருக்கிறது .
ஆனால் அவன் தான் அதை தர மறுக்கிறான் இந்த விடயம் பற்றி என்னிடம் அவனுக்கு தெரிந்த விடயங்களையும் கூற மறுக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு தெரிந்த தெளிவாக புரிந்தது .
இதனால் தான் நேற்று முழுக்க அவன் யோசனையிலேயே இருந்திருக்கிறான் என்பதும் அவளுக்கு இப்பொழுது புரிந்தது .
இத்தனைக்கும் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும் அவ்வளவு வசதியும் கிடையாது அனைவருமே மிடில் கிளாஸ் தான் .
போலீஸ் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க அவர்களது பெற்றோர் இவளிடமும் தங்களது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தனர் .
ஏதாவது பெரிய தொழில் அதிபர்களாக இருந்தால் தொழில் போட்டியில் பிள்ளைகளை கடத்தி விட்டு எதிரிகள் விளையாடுவதும் உண்டு என்ற கோணத்தில் அவள் விசாரித்து பார்த்ததில் அவளுக்கு கிடைத்த தகவலும் இதுவே !
ஆனால் ஒன்று இதில் நிச்சயமாக மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது .
ஆனால் அவர்களது நோக்கம் தான் என்ன என்பதை அவளால் யோசிக்க முடியவில்லை .
அவன் இடத்தில் இருக்கும் அந்த உடைமையை பார்த்தால் மட்டுமே இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கை வைக்க முடியும் என்ற முடிவோடு அன்று காலை அவன் சைட் க்கு கிளம்பி கொண்டிருக்க காலை உணவையும் செய்து வைத்துவிட்டு மாடிக்கு சென்று அவனிடம் பேசினாள் .
கண்ணாடி முன்பு நின்று தனது கேசத்தை வாரிக்கொண்டிருந்தவனுக்கு பின்புறமாக ஷர்வாணி நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்தவன் கண்டு கொள்ளாதவாறு தனது வேலையிலேயே குறியாக இருந்தான் உள்ளே வந்தவள் கதவை சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் .
” ஏய் இப்ப எதுக்காக கதவை சாத்துற…?
அன்னைக்கு நான் உன்னை மரியாதை இல்லாம பேசினத மனசுல வச்சுக்கிட்டு இன்னிக்கு ஏதாச்சும் அடிக்கலாம் னு பாக்குறியா…..
அன்னைக்கு எதோ கோவத்துல எதுவும் புரியாமல் பேசிட்டேன் .
ரியலி சாரி ஷர்வாணி இதுக்கப்புறம் உன்கிட்ட நான் அந்த மாதிரி பேச மாட்டேன் .
இப்ப கூட தான் மரியாதை இல்லாம ஏதோ மாடு ஓட்ற மாதிரி ஏய் னு பேசுறீங்க .
நான் அதை ஏதாச்சும் சொன்னா இல்ல தானே !
நான் இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் .
அத கதவை திறந்து வச்சு கிட்ட பேசினா நல்லா இருக்காது .
யாருக்காவது தெரிந்தால் நமக்கு தான் பிரச்சனை அதனால தான் கதவை சாத்தினேன் ……”
தலையை வாரி முடித்தவன் அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டு இப்பொழுது கூட அவளிடம் ஏன் இவ்வாறு பேசினோம் யாரிடமும் இவ்வாறெல்லாம் பேசியது கிடையாது என்று நினைத்துக் கொண்டவன் மெத்தையில் அமர்ந்து கொண்டு அவள் பேசுவதையே கேட்க ஆயத்தமானான் .
அவனை பொருத்தவரை கோபம் என்று வந்து விட்டால் அதை அவ்வப்போது காட்டி விடுவான் .
ஆனால் பெண்களிடத்தில் என்றால் கூட பொறுமையாக கூறியதை புரிய வைத்துவிடான் .
ஆனால் இவள் இடத்தில் ஏனோ அதிக உரிமை உள்ளது போல் அவன் பேசுவது அவனுக்கே சற்று புதிதான விடயமாக இருந்தது .
படிக்கும் காலத்திலும் சரி தற்போது வேலை செய்து வரும் காலத்திலும் சரி அவனோடு வேலை பார்க்கும் சக பெண் ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவன்,
இவளிடம் அதிக உரிமை எடுத்து பேசுவது அவனுக்கே புதிராக இருந்தாலும் அந்த எண்ணத்தை மேலும் வளர விடாமல் அவள் பேசுவது என்ன என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் .
“இப்போ என்கிட்ட ஒரு கேஸ் வந்து இருக்கு.
அதுல ரெண்டு பசங்க கடத்தப்பட்டு இருக்காங்க .
அவங்க ஏன் கடத்தப்பட்டாங்க யாரால கடத்தப்பட்டாங்கன்றது தெரியல!
அது மட்டும் இல்லாம கரெக்டா அவங்க போன் சிக்னல் உங்க பில்டிங் ல தான் கட் ஆகி இருக்கு .
அது மட்டும் இல்லாம நீங்க இன்னைக்கு மகேஷ் அண்ணா கிட்ட பேசிகிட்டு இருக்குறதையும் நான் காதில வாங்கினேன் .
அவங்க சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் உங்களுக்கு கிடைச்சிருந்தா என் கிட்ட குடுங்க .
அத வச்சு தான் அடுத்த மூங் இந்த கேஸ் ல என்ன என்றதே தெரியும் .
தயவு செஞ்சு என்கிட்ட கொடுங்க .
அந்த ரெண்டு பசங்களோட உயிரை காப்பாத்தணும் .
அதுக்காக நீங்க இந்த கேஸ் ல பியூச்சர் ல மாட்டிக்காம இருக்கணும்ன்றதுக்காகவும் சொல்றேன் . உங்க கிட்ட இருக்கிற பொருளை என்கிட்ட கொடுத்துடுங்க…..
அப்போ என்ன நீ வார்ன் பண்ற பியூச்சர்ல இந்த கேஸ் ல நான் மாட்டிப்பண்றதும் உனக்கு உறுதியா தெரிஞ்சு இருக்கு .
அப்படியே மாட்டினாலும் இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் னு எனக்கு தெரியும்.
என்கிட்ட எதுவும் இல்ல .
அப்படியே இருந்தாலும் உன்கிட்ட கொடுக்கணும் னு அவசியம் எனக்கு இல்லை .
நான் மாட்டிக்கிட்டா உனக்கு என்ன எப்படி பார்த்தாலும் நம்ம ரெண்டு பேரும் பிரிய தான் போறோம் .
ஏதோ உண்மையான ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நீ என் மேல கேரிங்கா பேச வேண்டாம் .
இது உன்னோட ப்ரொபஷனல் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தாலும் என் பில்டிங் ல எந்தவிதமான கடத்தலும் நடக்கல னு எனக்கு நல்லாவே தெரியும் .
சோ உன் வேலையை நீ பாரு .
இந்த கேஸ் ல வேற ஏதாவது க்ளூ கிடைக்குதா னு தேடிப் பாரு . அதவிட்டுட்டு தேவை இல்லாம என்ன இதுக்குள்ள கொண்டுட்டு வரணும் னு நினைக்காத …. ” என்று கூறியவன் அவளிடம் மேற்கொண்டு பேசி விரும்பாமல் அறை கதவை திறந்து சென்று விட்டான் .
இவன் என்ன லூசா….?
நான் எப்ப இவன இந்த கேஸ் குள்ள கொண்டுட்டு வந்தேன்.. இவன் வரக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு நாழி பேசிகிட்டு இருக்கேன்….
என் வேலையை தானே பாத்துட்டு இருக்கேன் .
இவன் கிட்ட இருக்கிற எவிடன்ஸ் என்ன னு தெரிஞ்சா தானே இந்த கேஸ்ல அடுத்து எப்படி மூவாகுன்றதும் தெரியும் .
இவனுக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது என்று நினைத்ததை இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை வேறு வழியில் தான் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
காலை உணவை முடித்து விட்டு வேக வேகமாக சைட்டுக்கு வந்தவன் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்தவாறு மகேஷிற்காக காத்துக் கொண்டிருந்தான் .
அவன் காத்திருப்பிற்கு சொந்தமானவனோ காபி ஷாப்பில் அவனது காதல் தேவதைக்காக காத்துக் கொண்டிருந்தான் .
அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்த சாரா என்றும் இல்லாமல் இன்று சுடிதாரில் வந்திருந்தாள் .
அதை பார்த்தவனின் முகம் சுருங்கி விட்டது.
எப்பொழுதும் அவளை பாவடை தாவணியில் பார்த்து ரசித்தவனுக்கு இன்று இந்த சுடிதார் பிடிக்கவில்லை போலும் .
“ஏன் சாரா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சுடிதார் ல என்னை பார்க்க வந்திருக்க ..?
எப்பயும் பாவாடை தாவணியில தானே வருவ…..
அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு டைம் என்கிட்ட இல்ல .
இன்னைக்கு எங்க அப்பா ஊர் ல இருந்து வராங்க .
நீங்க அவசர அவசரமா கால் பண்ணவும் அதனால தான் உங்கள பாக்குறதுக்காக வேக வேகமா ஓடி வந்து இருக்கேன் .
சீக்கிரம் என்ன விஷயம் என்று சொல்லுங்க .
எங்க அப்பா வீட்டுக்கு வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போகணும் ….
ஓ அவர் இன்னைக்கு வீட்டுக்கு வர்றாரா சரி அப்ப அவர் கிட்டயே நான் என்ன விஷயம் என்பதை சொல்லிக்கிறேன் .
நீ காபி குடிச்சிட்டு கிளம்பு….”என்று கூறியவன் அவளுக்காக ஆர்டர் செய்து வைத்திருந்த காபியையும் அவள் புறம் திருப்பி விட்டு அவனது கோப்பை எடுத்து அருந்தி கொண்டிருந்தான் .
பைத்தியமா இவன் என்ற ரேஞ்சில் அவனைப் பார்த்தவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது .
நிச்சயம் அவனது காதல் விடயத்தை பற்றி தனது தந்தையிடம் கூற போகிறான் என்று …..
“நீங்க என்ன விஷயமா அப்பா கிட்ட பேச போறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும் .
என் அப்பா ஊருக்கு வரதே என்னோட நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு பண்றதுக்காக தான் …. ” என்று போற போக்கில் ஒரு இடியை அவன் தலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் சாரா .
அவன் அதிர்ச்சியானாலும் தன்னை சமன்படுத்திக்கொண்டு நிச்சயம் தான கல்யாணம் இல்லையே! என்று போகும் அவளையே பார்த்து சிரித்தவன் சைட்டுக்கு கிளம்பினான் .
அங்கு சிவாவை காவல்துறையினர் வந்து கைது செய்து போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்றனர் .
வீட்டிற்கு வந்த ஷர்வாணியோ இன்று நடந்த விடயங்களைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தாள் .
அப்படி என்ன இருக்கும் அவன் கிட்ட…
எவிடென்ஸ்னு ஏதாச்சும் நம்ம தேடுறது சம்பந்தப்பட்ட பைல்ஸ் கிடைச்சிருக்குமா இல்ல மிஸ் ஆன பையனோட காஸ்டியூம் காஸ்மெட்டிக்ஸ் ஏதாச்சும் கிடைச்சிருக்குமா என்று பலவாறு அவள் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது எனினும் விடை தான் தெரியவில்லை .
அதிலும் சிவா கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சத்திற்குள் ஊடுருவி கொண்டிருந்தன .
எப்படியோ அவனது உதவி இல்லாமலும் இந்த கேசை பற்றிய விடயங்களை கண்டறியலாம் என்பது அவளது முடிவாகி போனது .
மாலை 4 மணி போல வீட்டிற்கு வந்தவன் அறைக்குள் அவனது புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் ஷர்வாணியை கண்டவாறு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலிற்கு வந்து டிவியை ஆன் செய்தவர் அமர்ந்துவிட்டான் .
அவனது அறையில் வைக்கப்பட்டிருந்த கவிதை புத்தகங்கள் வரலாற்று நாவல்கள் எடுத்து பொழுதுபோக்கிற்காக படித்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை .
ஆறு மணிக்கு மேல் ஹாலுக்கு வந்தவள் சமையலறையில் நுழைந்து கொண்டு ஜெயாவிற்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள் .
அவள் சமையலறைக்குள் நுழைந்ததை கண்டும் காணாதவாறு அமர்ந்து கொண்டிருந்தான் சிவா .
அவனது எண்ணம் முழுக்க இன்று ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கும் என்று சைட் க்கு சென்றதிலேயே இருந்தது .
ஆனால் அதற்கு மாறாக எதுவுமே கிடைக்காமல் போக அவனுக்கு இன்னும் மூன்று மாதத்தில் நிச்சயமாக இந்த வீட்டை முடிக்க முடியுமா என்ற எண்ணம் வேறு வந்து விட்டது .
இத்தனை நாட்கள் முடியும் என்ற எண்ணம் இருந்தது .
ஆனால் இப்பொழுது இன்டீரியர் ஒர்க் எல்லாம் முடிப்பதற்கு தேவையான பொருட்கள் ஆர்டர் கொடுத்த இடத்திலிருந்து வருவதற்கு தாமதமாகும் என்ற பட்சத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் . மகேசன் நடவடிக்கைகளில் கூட அவனுக்கு என்று ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்றியது .
இன்று அவனை அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு அனுப்பிய விதம் ஏதோ ஒன்றாக ஒளிந்து இருக்கிறது என்பதை மட்டும் அவனுக்கு அறிவுறுத்தியது .
காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் .
அவனுக்கும் சேர்த்து காபி கலக்கி கொண்டு வந்தவள் அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் .
அதை வாங்கிக் கொண்டவன் பருகி விட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருந்தவன் பிறகு அலுவலக வேலைகளை பார்ப்பதற்காக அறைக்குள் சென்று விட்டான் .
“மகேஷ் எத்தனை தடவை உனக்கு சொல்றது உன்னோட பிரண்டு சிவாக்கு ஒரு வழியா அவங்க அம்மா எப்படியோ ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க .
அது மாதிரி உனக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா அடுத்து எங்க வேலைய பார்ப்போம் இல்ல…. “என்றும் மகேஷின் அம்மா சரஸ்வதி பேசிக்கொண்டிருக்க அவனுக்கு தான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் .
மகேஷின் அப்பா பிரம்மா வெளிநாட்டில் இருப்பதால் அவ்வப்போது அவனையும் தாயையும் பார்ப்பதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ தான் வந்து வந்து செல்வார் .
வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தனர் .
அவன் ஆசைப்பட்ட படியே இன்ஜினியரிங் படிக்க வைத்தாகி விட்டது .
தற்பொழுது தொழிலிலும் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டால் அடுத்த திருமணம் என்ற பேச்சை எடுத்தால் என்னவோ ஓடி விடுகிறான் என்பதுதான் பெற்றோருக்கு கவலையாகி போனது .
காதலுக்கு எதிரி என்றெல்லாம் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை தான் .
. எனினும் சாராவின் பதில் தானே அவனது காதலை முடிவு செய்யும் என்ற நோக்கத்திலேயே இத்தனை வருடங்கள் அவனும் காத்திருக்கிறான் .
ஆனால் அவளோ எதற்கும் புடி கொடுக்காமல் அவனைப் பார்த்துவிட்டு செல்வதே போதும் என்ற ரீதியில் உலவி கொண்டிருக்கிறாள் .
சரி இன்றாவது தனது தாயிடம் கூறி அவளது வீட்டில் சென்ற பெண் கேட்கலாம் என்ற ரீதியில் இருந்தான் .
அதற்கு முன்பு அவளிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்ற ரீதியிலேயே காபி ஷாப் க்கு அவளையும் வர சொல்லி இருந்தான் .
ஆனால் அவ்வளவு எப்பொழுதும் போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சற்று வருத்தமாகி போனது .
” அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அம்மா .
அந்த பொண்ணு கிட்ட என்னோட லவ்வ டைரக்டாகவும் இன்டைரக்ட் ஆவும் சொல்லிட்டேன் .
ஆனா அந்த பொண்ணு தான் எதுக்குமே சரிப்பட்டு வராமல் உங்க கூட லைஃப் லாங் பிரண்டா மட்டும் இருந்தா போதும்.னு சொல்லிக்கிட்டு இருக்கா….
அவளுக்கும் என்ன புடிக்கும் தான் .
ஆனா அவ அத ஒத்துக்க மாட்டேங்குற அதுக்கு மெயின் ரீசன் அவங்க அப்பா சித்தி தான் . சரி அவளை ஒரு வழியா கன்வின்ஸ் பண்ணிட்டு அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கலாம்னு பார்த்தா அவ என் மேல லவ்வே இல்லன்ற மாதிரி பேசுற அதனாலதான் இது சரிப்பட்டு வராது .
ஒரு நல்ல நாளா பாருங்க அவங்க வீட்டுக்கு போய் நம்ம பொண்ணு கேட்டுறலாம் …. ” என்று கூறியவன் சாராவின் புகைப்படத்தையும் கைபேசியில் இருந்து தனது தாயிடம் காட்டினான் .
சாராவை பார்த்தவுடனேயே சரஸ்வதிக்கு அவ்வளவு பிடித்து விட்டது .
தனது மகனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் நிச்சயமாக அவள் குணத்திலும் சிறந்தவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு அவளது புகைப்படத்தை பார்த்த உடனேயே அழகிலும் அழகிலும் சிறந்தவளாக தான் இருக்கின்றாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
பிரம்மாவும் வந்தவுடன் ஒரு நாள் நிச்சயமாக அவர்களது வீட்டிற்கு சென்ற பின் கேட்கலாம் என்று சரஸ்வதி மகேஷிற்கு வாக்கும் அளித்தார் .
“நமக்கு தேவையானது மொத்தம் மூணு பசங்க .
நீங்க ஒரு பையன மட்டும் கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவன வச்சு என்ன பண்றது இவன விட A நெகட்டிவ் உள்ள ஒரு பையனை தானே நான் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன் .
அந்த பையனை கடத்திட்டு வராம இவனை கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவனும் வேணும் தான் நான் இல்லை னு சொல்லல !
ஆனா அவன் தான் மெயின் .
அவன நம்ம கடத்தி இருந்தா தான் நமக்கு உடனே காசு கிடைச்சிருக்கும் .
இவனை ஒரு மாசம் நம்ம காவல் காக்கணும் பாருங்க…
பார்ட்டிகிட்ட ஒரு மாசம் கழிச்சு தான் இவன ஒப்படைக்க முடியும் .
இப்போதைக்கு அனுப்ப வேண்டாம்னு அவங்க சொல்றாங்க .
போலீஸ்க்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சு சொன்னா நிச்சயமா நம்ம யாரும் நம்ம நெட்வொர்க் என்னன்றத கண்டுபிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க…..
நிச்சயம் போலீஸாலலாம் நம்ம நெட்வொர்க்க அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது ……
நிச்சயம் இப்ப மிஸ் ஆன பையனோட பேரண்ட்ஸ் ஏதாச்சும் ஒரு சீக்ரட்டான டிடெக்டிவ் வச்சு நம்மள கண்காணிக்கிறதுக்கு வேணா சன்சஸ் இருக்குது .
அப்பயும் கூட நம்ம ஏன் எதுக்காக கடத்தறோம் நம்ம தான் கடத்திருக்கோம் என்ற விஷயத்தை கண்டுபிடிக்க முடியாது …..
என்னமோ சொல்றீங்க .
நான் இப்ப இந்த பையன ஒரு குடோன் ல தான் கடத்தி வச்சிருக்கேன் சீக்கிரமா அந்த ஏ நெகட்டிவ் உள்ள பையன தூக்கிருங்க……”
“இன்னைக்கு சண்டே வேற எப்படியும் சைட்டுக்கும் போக மாட்டான் .
அப்புறம் எப்படி நம்ம பில்டிங் போயிட்டு தரவா செக் பண்றது .
நேத்து போனப்பயாச்சும் ஏதாச்சும் சொல்லி இருந்தா நிச்சயமா அந்த பில்டிங் ஓரளவுக்கு பார்த்துட்டு வந்து இருக்கலாம் .
ஆனா இப்போ போகவும் முடியாது .
நாளைக்கு போய் பாக்கலாம் னு பாத்தா கேஸ் மேல இடத்துல இருந்து ரொம்ப டார்ச்சர் பண்றாங்க .
கண்டுபிடிங்க கண்டுபிடிங்க னு மிஸ் ஆன பையனோட அப்பா அம்மா எங்க போயிருக்கான் எங்க போயிருக்கா னு ரொம்ப வேதனை படுறாங்க…..
இதுக்கு ஒரே வழி ஏதாவது சொல்லி சிவாவை இன்னைக்கு அந்த சைட்டுக்கு கூட்டிட்டு போறது மட்டும் தான் . அங்க போனா தான் நமக்கு தேவையான ஏதாச்சும் ஆதாரங்கள் கிடைக்கும் . அப்ப தான் இந்த கேஸ் ல அடுத்த மூவ் என்ன அப்படி னு நமக்கே தெரியும் …..” என்று தனக்குள்ளே நினைத்தவள் கிட்சன் சென்று காலை டிபனையும் அவளே ஜெயாவுடன் இணைந்து தயார் செய்தாள் .
அவன் லேட்டாக எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வரவும் அவர்கள் டிபன் செய்து டைனிங் டேபிளில் அடக்கவும் சரியாக இருந்தது .
மூவரும் அமர்ந்து சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தனர் .
ஜெயா “கண்ணா மறு விருந்து னு நீங்க எங்கேயும் போகல அதுக்கு பதிலா இன்னைக்கு சண்டே தானே அவளை எங்கயாச்சும் வெளியில கூட்டிட்டு போயிட்டு வா…..
அம்மா எனக்கு இன்னைக்கு ஹெவி ஒர்க் இருக்கு ஆனா இன்னைக்கு சைட்டுக்கு போறேன் இன்னைக்கு போய் கொஞ்சம் வேலை இருக்காத முடிச்சிட்டு வந்துட்டேன்னா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம் நான் வர ஈவினிங் ஆகும் என ஈவினிங் அவளை கெளம்பி இருக்க சொல்லுங்க கூட்டிட்டு போறேன்.
என்னப்பா எவ்ளோ பெரிய ப்ராஜெக்ட்டா இருந்தாலும் சண்டே எல்லாம் எப்பவுமே லீவ் விட்ருவே . ஏதோ நேற்று சைட்டுக்கு நீ போன நான் விட்டுட்டேன் .
இன்னைக்கும் போறேன் னு சொல்ற அதுவும் மேரேஜ் ஆகி ஒரு வாரம் கூட எங்கேயும் வெளியில அனுப்பவும் இல்ல .
அதுக்குள்ள நீ பாட்டுக்கு வேலை வேலைன்னு ஓடிடுற.
அம்மா உங்களுக்கே தெரியும் நான் இப்ப கட்டிட்டு இருக்க வீடு எம்எல்ஏ ஓட வீடு .
இன்னும் மூணு மாசத்துல ஃபுல்லா வேலையை முடிச்சு அவர் கிட்ட கொடுக்கிறேன் என்று நேற்று கால் பண்ணி சொல்லிட்டேன் .
என்னடா சொல்ற மூணு மாசத்துல எப்படி வேலை முடிக்க முடியும் .
இன்டீரியர் டிசைன் எல்லாம் நிறைய இருக்கு அது மட்டும் இல்லாம கதவு செய்யறதுக்கெல்லாம் மரம் வெளியில ஆர்டர் கொடுத்து இருக்கேன் .
வரத்துக்கு எப்படியும் மாதக்கணக்கில் ஆகும் அதுக்குள்ள டிசைன் எல்லாம் ரெடி பண்ணனும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்த ….
இப்ப மூணு மாசத்துக்குள்ள எப்படி வேலையை முடிப்ப ஏன் இவ்வளவு அவசர அவசரம் வேலைய முடிக்கிற அவர் ஏதாச்சும் சீக்கிரமா பண்ணி குடுங்க டார்ச்சர் பண்றாரா…?
இல்லம்மா அவர் எதுவும் சொல்லல .
நானும் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒன் இயர் ஆகப்போகுது ,
இது பெரிய வீடு என்றதுனால தான் இவ்வளவு நாள் எடுத்துக்கிட்டன் .
அதான் இப்ப மூணு மாசத்துக்குள்ள வேலையை முடிச்சு கொடுத்திடலாம் னு பார்க்கிறேன் .
அல்மோஸ்ட் வேலை முடிஞ்சுருச்சு இன்டீரியர் டிசைன் அந்த மாதிரி தானே . ஒர்க் பண்ணா முடிச்சிடலாம் …..
என்னமோ சொல்ற சரி மதியம் சாப்பாடு ஷர்வானி கிட்ட கொடுத்து விடுகிறேன் …. ” என்று கூறியவரின் பேச்சையும் அவனால் மறுக்க முடியவில்லை அவனும் ஒப்புக்கொண்டு கிளம்பி சென்று விட்டான் .
ஏற்கனவே எவ்வாறு அவனை சைட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது பதில் சாதகமாகி போனது .
அதே நேரத்தில் ஜெயா கூறியதையும் கவனித்து தான் இருந்தாள் .
ஏன் இவன் இவ்வளவு சீக்கிரமாக வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்து விட்டது .
அது மட்டும் இன்றி நேற்று சைட்டில் இருந்து சாப்பிட வரும்போது இருந்து அவன் முகம் சரியில்லை என்பதையும் அவள் கவனித்து வைத்திருந்தாள் .
ஏதோ ஒரு தீவிரமான சிந்தனை அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவளால் யூகிக்க முடிந்தது .
அதற்கு தகுந்தவாறு சைட்டில் ஏதோ ஒரு விடயம் நடந்திருக்கிறது .
அதை மறைப்பதற்காகவே தனது சிந்தனை குதிரையை பலவாறு ஓடவிட்டு தற்பொழுது இந்த ப்ராஜெக்ட்டை அவசர அவசரமாக முடித்து கொடுக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு ஒரு வாறும் புரிந்து இருந்தது .
ஜெயாவிடம் ஏதாவது அவனை பற்றி பேசினால் தகவல் கிடைக்கும் என்று நினைத்தவள் நைசாக அவரிடம் பேசிக் கொடுக்க ஆரம்பித்தாள் .
” ஏன் மா அவர எப்பயும் ப்ராஜெக்ட் ஆரம்பிச்சா இது மாதிரி தான் வேக வேகமா பண்ணி கொடுப்பாரா…?
இல்லம்மா எப்பவுமே அவன் நல்லா டைம் எடுத்து பெஸ்ட் ஆ பண்ணி கொடுப்பான் .
ஆனா இந்த டைம் என்ன னு தெரியல எம்எல்ஏ கூட எதுவும் டார்ச்சர் எல்லாம் பண்றது இல்ல .
டைம் எடுத்துக்கிட்டாச்சும் நல்லா பண்ணி கொடுங்கன்னு சொன்னதுனால தான் ஒரு வருஷமா இந்த ப்ராஜெக்ட்டையும் பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்கான் .
ஆனா இப்ப மூணு மாசத்துல வேலையை முடிக்கணும்னு சொல்றது தான் அக்செப்ட் பண்ணிக்க முடியாத ஒரு விஷயமா இருக்குது …..
இது ல அச்சர்ப் பண்றதுக்கு என்னமா இருக்கு அதான் அவரு சொல்றாருல அல்மோஸ்ட் வேலை முடிஞ்சுருச்சு. இன்னும் மூணு மாசத்துல கொடுத்துடுவேன் அப்படின்னு …..
இல்லமா நானே அந்த சைட்டுக்கு பல தடவை போய் இருக்கேன் இப்பதான் கட்டடம் எழும்பி இருக்குது இன்னும் ரூம்லாம் எதுவும் கட்டவில்லை இங்கே இத்தனை ரூம் வரும்னு பிக்ஸ் பண்ணி மட்டும் தான் வச்சிருக்காங்க இப்ப திடீர்னு வந்து மூணு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னா எப்படி முடிக்க முடியும்…?
என்னம்மா சொல்றீங்க ஒன் இயர் ஆ இந்த ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க னு சொல்றீங்க . இப்ப தான் ஏதோ கட்டிடம் எழும்பி இருக்குற மாதிரி சொல்றீங்க . அப்ப ஒரு வருஷமா என்னதான் பண்ணாங்க…..
அதான் சொல்றேன் .
எம்எல்ஏ இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறப்ப பொறுமையா எவ்ளோ நாள் ஆனாலும் பரவால்ல நல்லா பண்ணி குடுங்க அப்படி னு சொல்லிட்டாரு .
அதனால தான் அவன் ஒரு ஆறு மாசமா இந்த வேலையை ஸ்டார்ட் பண்ணி வச்சிருக்கான் .
அதுக்கு முன்னாடி வேற வேற ப்ராஜெக்ட் வேலை தான் பார்த்துக்கிட்டு இருந்தான்…..
அப்படின்னா இன்னும் மூணு மாசத்துல வேலை முடிக்க முடியாது தானே?
எப்படி முடியும் கண்டிப்பா முடிக்க முடியாது .
எப்படி பார்த்தாலும் இன்னும் ஆறு மாசத்துக்கு மேல டைம் கிடைச்சா மட்டும் தான் அந்த வீட்டை ஃபுல்லா நம்மளால கட்டி கொடுக்க முடியும் .
என்னமோ அவசர அவசரமா எல்லாத்தையும் பண்றான் . எனக்கு ஒன்னும் புரியல நான் போய் மதியான சாப்பாடு ரெடி பண்றேன் …..”என்று கூறியவர் காளை மாத்திரையையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் .
ஆக இதிலிருந்து அவளுக்கு உருவிடையும் மட்டும் தெளிவாக புரிந்தது .
அவனுக்கு, தான் தேடிக் கொண்டிருக்கும் கேஸ் விடயமாக ஏதோ ஒரு விடயம் கிடைத்திருக்கிறது .
அதன் மூலமாகவே பின்னாளில் எதுவும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அவசரமாக இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்ற முடிவுக்கு வந்தாள் .
மதிய உணவு தயார் செய்யவும் அவர்கள் இருவரும் சாப்பிட்டவுடன் ஷர்வாணியே எடுத்து செல்வதாக கூறி சைடிற்கு சென்றாள் .
மகேஷ் “என்னடா லூசு மாதிரி இன்னைக்கும் வேலை அப்படி னு சொல்லிட்டு இங்க வந்திருக்க…. எப்படி நம்ம மட்டும் தான் இங்கே வர முடியும் . கொத்தனார் சித்தாள் எல்லாம் வரமாட்டானுங்க எக்ஸ்ட்ராவா சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னா கூட வாரத்துல ஒரு நாள் தான் லீவு கிடைக்குதுன்னு இப்ப எல்லாம் அவனுங்க கூட வர மாட்டாங்க….
நான் இங்க வேலை பார்க்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு வந்தாலும் இன்னைக்கு நமக்கு நேத்து கிடைத்த காப்பு மாதிரி வேற ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்க்கிறதுக்காக தான் வந்தேன் ….
என்னடா சொல்லிட்டு இருக்க .
நமக்கு ஆதாரம் கிடைச்சு நம்ம என்ன பண்ண போறோம் னு சொல்லு ,
இந்த விஷயத்தை ஷர்வாணி கிட்ட சொல்லுனாலும் கேட்க மாட்டேங்கிற .
நம்மளே இத தலையில தூக்கி வெச்சிட்டு பெரிய பிரச்சனை ஆக்கப்போறோமோ னு எனக்கு பயமா இருக்குது .
அது மட்டும் இல்லாம இந்த ப்ராஜெக்ட் அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியாது .
இந்த விஷயத்தை போலீஸ் கிட்டயும் கொண்டுட்டு போக முடியாது .
அப்படி கொண்டுட்டு போயிட்டோம் னா கண்டிப்பா இந்த இடத்தை அவங்க லாக் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்குது .
இந்த விஷயத்தை அவ கிட்ட எடுத்துட்டு போறது லாம் எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல …..
முடிஞ்ச வரைக்கும் இந்த கேஸ் நம்மளே ஹேண்டில் பண்ணிப்போம் .
அவளாம் ஒரு ஆளு னு அவ கிட்ட இத பத்தி எல்லாம் என்னால கேட்டுகிட்டு இருக்க முடியாது .
அப்புறம் எதுக்கெடுத்தாலும் முறைச்சிக்கிட்டே இருப்பா …..
நீ என்ன லூசா .
நம்மளே இந்த விஷயத்த எப்படி ஹேண்டில் பண்ண முடியும் …?
இது என்ன கட்டிடம் கட்றதா நம்மளே ஹேண்டில் பண்ணிக்கிறதுக்கு ….
இங்கு ஏதோ பெரிய கிரைம் நடந்திருக்குது .
அத ஒரு டிடெக்டிவோ இல்ல போலீசாலையோ தான் கண்டுபிடிக்க முடியும் .
அதை விட்டுட்டு நம்மளால எப்படி கண்டுபிடிக்க முடியும்…..
நீ என்ன வேணா சொல்லு அவ கிட்ட எல்லாம் என்னால இதை பத்தி பேச முடியாது . அவள பாத்தாலே எனக்கு கடுப்பாகுது …….”
இருவரின் பேச்சையும் கேட்டவாறு மார்புக்கு குறுக்கே கைகட்டி அவர்களுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தாள் ஷர்வாணி .
“இப்போ உன்ன நான் சாப்பாடு கொண்டுட்டு வர சொன்னனா ….
எதுக்காக எனக்கு சாப்பாடு கொண்டுட்டு வந்த .
நானே இன்னும் அரை மணி நேரத்துலயோ ஒரு மணி நேரத்திலேயே சாப்பிட வரமாட்டானா…?
எனக்கும் வீட்டுக்குள்ள இருக்க போர் அடிக்குது.
அதனால தான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போலாம் னு தான் வந்தேன் .
என் வேலையிலயும் கொஞ்ச நாள் லீவ் போட்டு இருக்கேன் .
உடனடியா வேலைலயும் ஈடுபட முடியாது .
அதனால வீட்டுக்குள்ள என்னால இருக்கவும் முடியல .
அதனால தான் அம்மா சமைக்கிறேன் என்று சொன்னாங்க நான் சமைக்கிறேன் நானே சாப்பாடு கொண்டுட்டு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் …..
சரி அம்மா சாப்டாங்களா அவங்க டேப்லட் எல்லாம் போடணும் கரெக்டான டைமுக்கு சாப்பிட்டா தான் ஹெல்த் ஆரோக்கியமா இருக்கும் னு டாக்டர் சொல்லி இருக்காங்க….
அம்மாவை சாப்பிட வச்சுட்டு அவங்களுக்கு டேப்லட் எல்லாம் கொடுத்துவிட்டு தான் நான் இங்கே வந்தேன் .
சரி எனக்கு சாப்பாடு எடுத்து வை நான் போய் மகேஷையும் கூட்டிட்டு வரேன் அவனோட சேர்ந்து சாப்பிடலாம் ……” என்று கூறியவன் சைட்டில் மூன்றாவது மாடியில் நின்று வேலைகளை சரி பார்த்துக் கொண்டிருக்கும் அதிசயம் சாப்பிடுவதற்காக கீழே அழைத்தான்.
அவளோ இருவருக்கும் இலையை போட்டு பரிமாறி வைத்திருந்தாள் .
மகேஷ் “ஏன் சிஸ்டர் உங்களுக்கு சிரமம் நீங்க ஒரு இடம் சொல்லி இருந்தால் நாங்க ரெண்டு பேரும் வந்து வீட்லையே சாப்பிட்டு இருப்போமே அதை விட்டுட்டு நீ ஏன் இந்த வெயில்ல சாப்பாடு எடுத்துட்டு அலைஞ்சிட்டு இருக்கீங்க……
இல்லை இல்லை இதுல என்னன்னா எனக்கு சிரமம் இருக்குது .
சாப்பாடு கொண்டுட்டு வரதில்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .
சொல்ல போனா அப்படியே வெளியில வந்த மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டாவும் இருக்கும் .
எவ்வளவு நேரம் தான் நானும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது .
ஒரு நாள் தான் இருந்தேன் .அதுவே என்னால இருக்க முடியல !
எப்பயுமே வேலை னு வெளியிலேயே சுத்திட்டேன் .
இப்ப திடீர் னு வீட்டுக்குள்ள இருக்கணும் னு நினைச்சாலே அது முடியாத காரியமா இருக்குது …..” என்று இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை ஏதோ ஒரு விடயத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தது என்பதை ஷர்வாணியும் கண்டுகொண்டாள் .
ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .
இருவருக்குமே வெஜ் தான் செய்து எடுத்து வைத்திருந்தாள் . சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என அனைத்துமே மணத்தை வைத்து சொல்லிவிடலாம் ருசியாக இருக்கும் என்பதை ….
சாப்பிட்டபடியே மகேஷ் அப்போது அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் .
“சிஸ்டர் உங்களுக்கு நான்வெஜ் சமைக்க தெரியுமா…?
ஹான் தெரியும் பிரதர் . ஆனா இன்னைக்கு சனிக்கிழமை னு தான் வெஜிடேரியனை சமைச்சு எடுத்துட்டு வந்தேன் .
நாளைக்கு வீட்டுக்கு வாங்க நான்வெஜ் வெச்சிடறேன்….
என்ன மச்சான் எப்பயும் சாப்பிடறப்போ லொட லொட னு பேசிகிட்டு சாப்பிடுவ .
இன்னைக்கு என்னன்னா அமைதியா இருக்க . உன் பொண்டாட்டி சமைச்ச சாப்பாடு ரசிச்சு ருசிச்சு அமைதியா சாப்பிடுறியோ…….”என்று கேட்ட மகேஷுக்கு பதிலாக என்னமோ அவனிடமிருந்து முறைப்பு மட்டும் தான் மிஞ்சியது . எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட ஆரம்பித்து விட்டான் .
“நல்லா இருக்கு சாப்பாடு ரொம்ப சூப்பரா சமைச்சு வச்சிருக்கே , இப்படியே தினமும் நீ சமைச்சு போட்டா நல்லா இருக்கும் ….
அதுக்கு என்ன தினமும் சமைச்சு கொடுத்தா போகுது….
உங்களுக்கு இல்லாததா ……” என்று கூறியவள் அதன் பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் மகேஷிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .
“ஏன்டா இன்னைக்கு எதோ நீ யோசனைல சாப்பிட்டுகிட்டு இருந்த மாதிரி எனக்கு தோணுது . எப்பயும் சாப்பிடறப்ப தான் நிறைய விஷயத்தை நம்ம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம் இன்னைக்கு நீ ஏதோ ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சா மாதிரியே எனக்கு தோணுச்சு . என்ன ஏதாச்சும் ப்ராப்ளமா….?
திரும்ப அவன் ஏதாச்சும் கால் பண்ணி மிரட்டுனானா இல்ல வேற ஏதாச்சும் ஒரு விஷயத்துல நம்ம விஷயத்துல அவன் இன்வால்வ் ஆகிறானா …..
இல்லடா அதெல்லாம் எதுவும் கால் பண்ணல .
அவன் இப்போ நம்ம கிட்ட எந்த பிரச்சனையும் பண்றது இல்ல .
சொல்ல போனா இன்னும் ரெண்டு நாள் ல நம்ம புது ப்ராஜெக்ட் பத்தி பேச போறோம் இல்ல அத பத்தி கூட அவன் இப்ப என் கிட்ட எதுவும் கால் பண்ணி பேச கூட இல்ல .
எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த யோசனையும் இல்ல . எனக்கு இப்ப இருக்க யோசனை எல்லாம் இது தான் …..”என்று கூறியவன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு வெள்ளி காப்பு எடுத்து மகேஷிடம் காட்டினான்.
“ஐ வெள்ளி காப்பு ஏது இது யாருக்கு வாங்குன எனக்காக வாங்கினியா…?
என் மேல அவ்ளோ பாசமா டா உனக்கு !
சரி வாங்கினது தான் வாங்கிட்டேன் என்கிட்ட எப்படி கொடுக்கறது னு யோசிச்சுக்கிட்டு இருக்கியா…?
உன் கல்யாணத்துக்கு எனக்கு எதுவுமே வாங்கி கொடுக்கலையே எப்படி இத அவன் கிட்ட கொடுக்கிறது னு நெனச்சியா….
டேய் ஒரு நிமிஷம் நிப்பாட்டு .
நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகாத ….
ஆமா என் கல்யாணத்துக்கு எதுக்காக நான் உனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .
நீ தான் எனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .
ஆமா நீ பண்ணது பெரிய கல்யாணம் அதுக்கு கிப்ட் ஒன்னு தான் குறைச்சல் பாரு! சரி இது எத்தனை கிராம் சொல்லுடா,
நீயே என் கையில போட்டு விடுறியா இல்ல நான் போட்டுக்கவா….” என்றவனின் கைகளில் இருந்த காப்பை பிடுங்கி தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான் .
” இது ஒன்னும் நான் வாங்குனது கிடையாது . இது மூன்றாவது மாடியில் கீழே கிடந்தது . ஒருவேளை வேலை பாக்குறவங்க யாராச்சும் போட்டு இருப்பாங்களா னு நான் எல்லார் கிட்டயும் கேட்டேன் .
ஆனா அவங்க யாருமே அவங்களோடது இல்லை னு சொல்லிட்டு போயிட்டாங்க . இங்கே நம்ம வேலை பாக்குறவங்கள தவிர வேற யாரும் வராது வேலை கிடையாது அப்படி இருக்கிறப்போ இந்த காப்பு மட்டும் எப்படி வந்திருக்கும் .
அது மட்டும் இல்லாம இது ல லேசா ஏதோ ரத்த கறை மாதிரி வேற இருக்குது .
அதான் எனக்கு அதப்பத்தின யோசனையாவே இருக்குது .
ஒருவேளை பின்னாடி இதனால ஏதாச்சும் பிரச்சனை வந்துருமோ அப்படி என்று …….
ஏய் என்னடா என்னன்னமோ சொல்ற!
நீ சொல்றதெல்லாம் பாக்குறப்ப எனக்கு பயமா இருக்குது .
நம்ம கட்டிக்கிட்டு இருக்க வீடு வேற எம்எல்ஏ ஓட வீடு . இது ல ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்துருச்சுன்னா அந்த மனுஷன் அவங்க ஆளுங்கள வச்சு நம்மள உயிரோட புதைச்சிருவான் .
வாட்ச்மேன் நைட்டு பூரா இருக்காங்க தானா அவங்க கிட்ட விசாரிச்சியா இத பத்தி ……
கேட்டேன் டா அவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இங்க யாரும் வரல தம்பி . இந்த காப்பு யாரோடதுன்னு தெரியாது , நீங்களும் உங்க ஆட்களும் தான் வந்து வேலை பார்த்துட்டு போறீங்கன்ற மாதிரி தான் பேசுறாரு ….
டேய் பேசாம நம்ம இந்த காப்பை ஷர்வாணி கிட்ட கொடுத்து அதை பத்தி விசாரிக்க சொல்லுவோமா….
இல்லடா தேவை இல்லாம அவ கிட்ட எல்லாம் கொடுத்து இதை பெருசாக வேணாம் னு எனக்கு தோணுது .
அது மட்டும் இல்லாம அல்மோஸ்ட் இந்த வீட இப்ப நம்ம கட்டி முடிக்க போறோம் .
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் வேலைய சீக்கிரமா முடிச்சு குடுத்துருவோம் .
அதுக்கப்புறம் எந்த பிரச்சனை வந்தாலும் அவரே சமாளிச்சுப்பாரு …..
நீ என்னடா பேசுற . இப்போ இந்த இடம் பூரா நம்ம கண்ட்ரோல்ல இருக்குது .
நாளைக்கு வேலைய முடிச்சு அவரு கிட்ட வீட்ட கொடுத்தா கூட ஏதாச்சும் பிரச்சனை வந்தா கண்டிப்பா நம்ம கிட்ட தான் கேட்பாங்க.
இந்த விஷயத்தை பத்தி நம்ம நமக்குள்ளேயே டிஸ்கஸ் பண்றத விட்டுட்டு ஷர்வானி கிட்ட இதை எடுத்துட்டு போறது நல்லது னு எனக்கு தோணுது….
நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் . இந்த விஷயத்தை இதோட மறந்துரு…..” என்று கூறியவன் அந்த காப்பையும் வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டான் .
ஆனால் மகேஷ் க்கு தான் அவன் செய்வது அனைத்தும் சரியான படவில்லை .
நிச்சயமாக இந்த பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது .
“மேடம் கடைசியா அந்தப் பையன் மிஸ் ஆன லொகேஷன் நீங்க இப்ப போயிட்டு வந்த பில்டிங்கில் தான் காட்டுது…..
அங்க தான் அவனோட போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு….
நீங்க அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணுங்க . நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும் .
நான் இப்பதான் அந்த பில்டிங்ல இருந்து வெளியில வந்தேன் . நாளைக்கு போய் திரும்ப செக் பண்ணிக்கிறேன் .
இப்போ நீங்க எனக்கு இன்பர்மேஷன் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!
இதுக்கு மேல நானே இந்த கேஸ் அ ஹேண்டில் பண்ணிக்கிறேன் .
அடிக்கடி எனக்கு போன் பண்ண வேணாம் நம்மள அந்த கேங் டிரேஸ் பண்றதுக்கான வாய்ப்பு இருக்குது .
சோ உடனடியாக இந்த சிம் கார்டு தூக்கி போட்டுடுங்க ……
ஓகே மேம் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்றதுக்காக தான் நான் கால் பண்ணன் .
உடனடியா இந்த நம்பர் அ அழிச்சுடறேன்….”என்ற அந்த பக்கத்தில் இருந்து கூறியவன் உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு அந்த எண்ணையும் அழித்துவிட்டான் .
அப்ப நிச்சயமா நம்ம அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணா நமக்கு தேவையான ஒரு விஷயம் கண்டிப்பா கிடைக்கும் .
செக் பண்றேன் கூடிய சீக்கிரத்துல அவனை யாரு கடத்தினா அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கிறேன் …..என்று நினைத்த ஷர்வாணி வீட்டை நோக்கி புறப்பட்டாள் .
– தொடரும்🖤🖤🖤🖤
“என்ன மச்சான் கல்யாணம் ஆயி ஒரு நாள் கூட லீவ் போடாம மறுநாளே சைட் பக்கம் வந்துட்டே .
புது மாப்பிள்ளை மறு விருந்து அது இது னு ஜாலியா இருக்க வேணாமா இப்படி அதுக்குள்ளேயே புது பொண்ண விட்டுட்டு வந்துடலாமா….?
எனக்கு கல்யாணம் நடந்தது ஒரு ஆக்சிடென்ட்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் .
அதுக்குள்ள இருந்து என்ன சீக்கிரமா விடுதலை பண்ணிக்கணும் னு தான் அவகிட்ட அக்ரீமெண்ட் போட்டுட்டு வந்து இருக்கேன் . இது எல்லா விஷயமும் தெரிஞ்சு நீயே இப்படி பேசுறது உனக்கே நல்லா இருக்கா மகேஷ் .
அவளோட நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லடா…..
டேய் என்னவோ அந்த புள்ள கூட பல வருஷம் ஒன்னா வாழ்ந்த மாதிரி பேசாத …
கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆயிருக்கு .
அதுக்குள்ள அவளோட நடவடிக்கை எல்லாம் என்ன சரியில்லை என்று நீ கண்டுபிடிச்ச ….?
அவ அடிக்கடி போன்ல யார்கிட்டயோ போய் தனியா பேசுறா .
அது மட்டும் இல்லாம நேத்து ஒரு கால் வந்துச்சு உடனடியா அம்மா கிட்ட சொல்லிட்டு அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டு நைட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தா …..
ஓ ஃபர்ஸ்ட் நைட் எதுவும் நடக்கலையேன்னு வருத்தமா இருக்கா…..
டேய் செருப்பு பிஞ்சிடும் .
உனக்கு திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கேன் .
எங்க அம்மாவும் அத பத்தி எதுவுமே அவ கிட்ட கேட்கல!
அவ வேல விஷயமா போயிருப்பா…
அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க .
நான் போய் ரூம் ல படுத்துட்டேன் . அவ எப்ப வந்து படுத்தா என்றதே தெரியல காலை ல எந்திரிச்சு பார்க்கிறேன் அவ சோபால படுத்து கிடக்கிறா ……
சரிடா அவ வேலை விஷயமா அவங்க பேசி இருந்திருக்கலாம் இல்லையா…
அவங்கள பத்தி நீ ஏன் கவலைப்படுற எப்படி பார்த்தாலும் இரண்டு பேருமே மியூச்சுவலா பிரிய போறீங்க .
அப்படி இருக்கிறப்போ நீ அவங்கள பத்தி யோசிக்கவே கூடாது .
உன் வேலையை மட்டும் பாரு .
இதுக்கு மேல நான் எதையும் பேசினா என்ன தான் நீ திட்டுவ நான் போய் என்னோட வேலையெல்லாம் கவனிக்கிறேன் …..”என்று கூறிய மகேஷ் அதன் பிறகு அவன் இடத்தில் நின்று பேசாமல் சைட்டில் வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதை பற்றி விசாரிக்க சென்று விட்டான் .
ஆனால் அவனுக்கு தான் பித்து பிடித்தது போல் இருந்தது .
ஏன் அவளைப் பற்றிய சிந்தனையே தன்னை ஆட்கொள்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டது .
அவளிடம் சரியாக கூட பேசியது கிடையாது அவளோடு வாழ வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது .
ஆனால் அவள் என்ன செய்கிறாள் எதற்காக அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது .
அதுபோக நேற்று இரவு அவள் தாமதமாக வீடு வந்து சேர்ந்ததும் அவனது மனதை உறுத்தி கொண்டே இருந்தது .
அவள் பார்க்கும் வேலை ஆபத்தானது தான் அதனால் தனக்கு ஏதும் ஆபத்து வந்தால் கூட நிச்சயமாக அதை சரி செய்து கொள்ளலாம் .
ஆனால் தனது தாய்க்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்ன என்பது அவனது ஒரு பக்க சிந்தனையாக இருந்தாலும் மறுபக்கம் இவள் அப்படி என்னதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறாள் என்றும் யோசித்தது அவன் மனம் ……
ஒரு நாளில் தனது வாழ்க்கைக்குள் வந்தவளால் ஏன் தனது சிந்தனை இவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பது தான் அவனது தற்போதைய எண்ணமாகி போனது.
உடனடியாக அவளது எண்ணங்களில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவன் இன்றைய நாளுக்கான வேலைகளை மகேஷோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டான் .
ஷர்வாணியின் பெற்றோர் கோபாலன் மற்றும் விசாகம் இருவருக்குமே நன்றாக தெரியும் .
அவளுக்கு நடைபெற்ற இந்த திருமணம் கூட தங்கள் இருவரின் கட்டாயத்தின் பேரில் தான் நடைபெற்றது .
அவள் முழுமனதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை இதற்கு பிறகு அவளை எந்த ஒரு தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்க கூடாது என்று காரணத்தினால் மறு விருந்து அது போன்ற சடங்குகள் எதுவும் செய்வதற்கு அவர்கள் இருவருக்கும் மனம் வரவில்லை .
அதுபோக இந்த விடயத்தை பற்றி ஜெயாவிடமும் கூறி இருந்தால் ஜெயா தனது மகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது பற்றி எல்லாம் கூறவில்லை .
ஆனால் அவளது மனநிலையை புரிந்து கொண்டு சிறிது நாள் கழித்து இந்த சடங்குகளை வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் இருவரையும் தற்பொழுது தொல்லை செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டார் .
அதன் காரணமாகவே இரவு சடங்கிற்கு கூட அவளை கட்டாயப்படுத்தவில்லை .
அவள் எங்கோ வெளியில் சென்று இருக்கிறார் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் . இருவரின் எண்ணமும் ஒன்றே ஒன்றுதான் இந்த திருமணத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லை .
அப்படி இருக்கும் பட்சத்தில் இருவரையும் மேலும் மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது என்ற காரணத்தினால் அவர் காலப்போக்கில் இருவரும் பேசி புரிந்து கொண்டு நன்றாக வாழ ஆரம்பித்து விடுவர்.
அவர்களது வாழ்க்கையை அவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற ரீதியில் அவரும் ஒதுங்கி விட்டார் .
இன்று காலையில் சிவா வேலைக்கு செல்லும்போது கூட அவர் தடுக்கவில்லை .
அதற்கு மாறாக ஷர்வாணி ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது .
ஏனெனில் சமையலறைக்குள் நுழைந்து அவருக்கு உதவியாக காலை டிஃபனையும் அவளே செய்தாள் .
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை .
போகும்போது கூட சிவா தனது தாயிடம் மட்டுமே கூறிவிட்டு சென்றதையும் கவனித்துக் கொண்டிருந்தாளே தவிர மறு வார்த்தை எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
ஜெயாவும் மேற்கொண்டு எதுவும் இருவரிடமும் பேசவில்லை . அவரும் விட்டுவிட்டார் .
” ஷர்வாணி உள்ள வரலாமா….?
ஐயோ ஏன் மா என்கிட்ட போய் பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க…?
உள்ள வாங்க கதவு திறந்து தானே இருக்குது .
வெளி ஆள் கிட்ட பர்மிஷன் கேட்கிற மாதிரி என்கிட்ட எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ்லாம் ……
இருக்கட்டும்மா இருந்தாலும் கேட்டுக்கணும் தானே ! ” என்று கூறியவர் மெத்தையில் அவளுக்கு அருகிலேயே வந்து அமர்ந்தவாறு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவள் தலையையும் வருடிவிட்டார் .
“உனக்கு இந்த கல்யாணத்துல பெருசா விருப்பம் இல்ல உங்க அப்பா அம்மா சொன்னாங்கன்றதுக்காக தான் நீ இதை பண்ணிக்கிட்டு எனக்கு நல்லாவே தெரியும் .
அதே மாதிரி தான் என் பையனுக்கும் சுத்தமா விருப்பம் கிடையாது,
சொல்லப்போனால் அவனுக்கு உலகமே நான் தான் . நாளைக்கு கல்யாணம் பொண்டாட்டி னு ஆனதுக்கு அப்புறமா அவனையும் என்னையும் யாராச்சும் பிரிச்சிடுவார்களோ அப்படிங்கிற காரணத்துக்காகவே ரொம்ப நாளா கல்யாணம் வேணாம் னு சொல்லிட்டான் .
அதுக்கப்புறம் அவனோட அப்பாவால நடந்த பிரச்சனை அவனோட மனசுக்குள்ள சின்ன வயசுல இருந்து யாரும் யாரு மேலயும் காரணம் இல்லாம பாசம் வைக்க மாட்டாங்க அப்படி என்று ஒரு எண்ணத்தை விதைச்சுருச்சு …..
அவனுக்கு நீ தான் எல்லாத்தையும் புரிய வைக்கணும் னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன் .
நீ அவனோட சேர்ந்து வாழணும் னு நான் போர்ஸ் பண்ணவும் மாட்டேன்….
முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட பேசுற மாதிரி அவன் கிட்ட பேசி பிரண்டாக பாரு .
ஒரு கட்டத்துல கண்டிப்பா அவன ஒரு செகண்ட் ஆச்சும் உனக்கு பிடிக்கும் .
அப்படி புடிக்கிறப்போ அதை அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போகலாம் னு தோணுச்சுன்னா அடுத்து அத பத்தி யோசி!
அப்படி இல்லன்னா கண்டிப்பா நீயே டிவோஸ் வாங்கிக்கலாம் . அதுக்கு நான் முழு சம்மதம் கொடுப்பேன் .
டிவோர்ஸ் ஆனதுக்கு அப்புறமும் கூட இப்போ என்கிட்ட நீ பேசுற மாதிரி இதே பாசத்தோட எப்பயும் பேசுவியா மா ……”என்று கேட்டவரின் கண்களில் இருந்த கண்ணீர் சரியாக அவளது கையையும் நனைத்தது .
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
நிச்சயமாக அவரிடம் இருந்து அவள் அதை எதிர்பார்க்கவே இல்லை .
திருமணம் என்று பேசியவுடன் அதில் பெரிதாக எந்த நாட்டமும் இல்லாமல் இருந்தவள் .
நிச்சயமாக அவருக்கும் தனது நடவடிக்கைகளில் இருந்து இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று நினைத்துக் கொண்டு தன்னிடம் அவரது மகனுக்காக வந்து பேசுவார் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார் என்று நினைத்திருந்த அவளது எண்ணங்களுக்கு எதிர்மாறாக இருந்தது ஜெயாவின் வார்த்தைகள் .
” நீங்க சொல்றதெல்லாம் எனக்கே அதிர்ச்சியா இருக்கு மா .
எனக்கு கொஞ்சம் கூட இந்த திருமணத்தில விருப்பம் இல்ல தான் .
இருந்தாலும் நீங்க இப்படி உடனடியா என்னோட மனச புரிஞ்சிப்பீங்க னு நான் எதிர்பார்க்கல .
கண்டிப்பா உங்க கிட்ட பேசுற மாதிரி அவர்கிட்டயும் நான் பேசி பார்க்கிறேன் …..
எனக்கு நீங்க சொல்ற மாதிரி ஏதாவது தோணுச்சுன்னா கண்டிப்பா உங்க கிட்ட தான் முதல்ல அத சொல்லுவன் .
அப்படியும் செட் ஆகல அப்படின்னா கண்டிப்பா நான் அவர் கிட்ட இருந்து பிரிஞ்சதுக்கு அப்புறம் உங்க மேல இதே பாசத்தோட நான் இருப்பேன் இது சத்தியம் …..” என்று கூறியவள் அவரது கையை பிடித்து வாக்கு கொடுத்தாள் .
சிறிது நேரம் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர் .
ஷர்வாணியை பொறுத்தவரை ஜெயாவை அவ்வளவு பிடித்து விட்டது அவளுக்கு ….
தற்போதைய சூழ்நிலையில் அவளது தாய் தந்தையை தவிர்த்து வேறு யாரேனும் பிடிக்கும் என்றால் அது ஜெயா தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் என்ற ரீதியில் அவளது மானம் அவருடன் அந்த அளவிற்கு ஒன்றை போய்விட்டது .
“சரி மா நான் போய் மத்தியானம் சாப்பாடு ரெடி பண்றேன் அவன் சாப்பிட வந்துருவான் வேற…..
நீங்க இருங்க மா .
நானே சமைத்துக் கொண்டு போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன் . இங்க தான் சைட் பக்கத்துல தான இருக்கு …. “அவர்கள் தற்பொழுது வசிப்பதும் தஞ்சாவூர் தான் அவனது வேலை பார்க்கும் இடமும் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் கிட்ட இருப்பதால் அவனும் மதிய உணவிற்கு எப்பொழுதும் வீட்டிற்கு வந்து விடுவான் .
ஷர்வாணியின் தாய் தந்தை பட்டுக்கோட்டை அவர்கள் திருமணம் முடிந்த கையோடு அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர் .
எப்பொழுது தனது மகளை பார்க்க வேண்டும் என்றால் ஒரு மணி நேர பயணத்திலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே அவர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் பட்டுக்கோட்டையை சுற்றிய ஊர்களில் தான் .
அதில் சரியாக சிக்கியது சிவாவின் ஜாதகம் .
ஆகையால் அவர்களும் சிவாவையே ஷர்வாணிக்கு மாப்பிள்ளையாக பார்த்துவிட்டனர் .
அவளும் அதற்கு எந்தவிதமான தெரிவிக்கவில்லை அதற்கு மாறாக தனது வேலையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் .
அவனுக்காகவே அவள் சமைத்து உணவையும் எடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள் ,
” நிச்சயமா அவன் இன்னும் ரெண்டு நாள் ல நம்ம கிட்ட பேசுறதுக்காக வருவான் ல அப்போ அவனை நம்ம இந்த பிரச்சனைக்குள்ள மாட்டி விடலாம் .
தொழில் மூலமா அவன சாய்க்கணும்ன்றது முடியாத காரியமா இருக்கு .
அப்ப இந்த மாதிரி பண்ணிட்டா அவனும் ஜெயிலுக்கு போயிடுவான் . நம்மளும் பிசினஸ் அ பண்ணிடலாம் …..
நீ சொல்றதும் சரிதான் .
எவ்வளவோ காரியம் பண்ணியாச்சு அவன் கன்ஸ்ட்ரக்ஷன் கட்டாமல் இருப்பதற்காக ….
ஆனால் அது எல்லாத்தையும் மீறி அவன் ஒரு ஒரு ப்ராஜெக்ட் ம் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டு நல்ல இன்ஜினியர் அப்படி என்ற பெயரையும் வாங்கிகிட்டு இருக்கான் .
இப்படியே போனால் நம்ம கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான் .
அவன் வரட்டும் அப்புறமா என்ன செய்யனுமோ அதை சிறப்பா செஞ்சிடலாம் ……”
” மச்சான் நம்ம இன்னும் ரெண்டு நாள் ல சென்னைக்கு போய் அங்க நம்ம புதுசா கட்ட போற கன்ஸ்டிரக்சனோட அவுட் ஃபிட் அப்புறம் இன்னர் டிசைன் எல்லாம் நம்ம டிசைன் பண்ணி வச்சது அவங்க கிட்ட காட்டி அவங்க ஒப்பினியன் என்ன என்பதை கேட்கணும் …..
ஆமா அந்த மீட்டிங் வேற இருக்கு இல்ல .
ஆனா அதுக்காக இன்னும் கொஞ்சம் டிசைன்ஸ் நான் பண்ணலாம் னு இருக்கேன் .
நீ அவுட் ஃபிட் ஓரளவுக்கு முடிச்சிட்ட….
நான் இன்னர் டிசைன்ஸ் மட்டும் பண்ணிடுறேன் . அதுக்கப்புறம் நம்ம போகலாம். .
சரிடா எல்லாத்தையும் முடிச்சுட்டு சொல்லு அவங்க கிட்ட எப்ப மீட்டிங் வெச்சுக்கலாம் னு நான் போன்லயே பேசி விடுறேன்……” என்று மகேஷ் மற்றும் சிவா இருவரும் வேலை விடயமாக பேசிக்கொண்டனர் .
சிவாவிற்கு எப்பொழுதுமே ஒரு வீட்டிற்கு உள்ளே உள்ள வால் பெயிண்டிங் மற்றும் கதவு டிசைன்கள் போன்றவற்றை அவனே வரைந்து கொடுத்து செய்ய சொல்லுவது மிகவும் பிடித்தமான விடயம் .
மகேஷிற்கு ஒரு வீட்டின் வெளிப்புறத் தோற்றம் எவ்வாறெல்லாம் அழகாக நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதை வரைந்து காட்டுவதிலும் அவ்வளவு ஈடுபாடு இருப்பதால் அவனே வெளி டிசைனை பார்த்துக் கொள்வான் .
இருவருமே தற்போது வரை ஒன்றாக ஒரே துறையில் பணிபுரிகின்றனர் என்ற பட்சத்தில் இருவருக்குள்ளும் வெவ்வேறு திறமைகள் இருக்கையில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கட்டிடம் கட்டுவதால் இருவரின் திறமைக்கேற்பவே பல டெண்டர்கள் தேடி வந்தன .
– தொடரும்🖤🖤🖤🖤🖤
“இப்பதான் நம்ம எல்லாம் நினைச்சா மாதிரி போய்கிட்டு இருக்குது இன்னும் கொஞ்ச நாள் ல எனக்கு தேவையானதை இங்கே இருந்து என்னால சாதிக்க முடியும் .
அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மூணு மாசத்துலயோ ஆறு மாசத்துலையோ நான் வந்த வேலையை முடிச்சிடுறேன்.ஆமா இங்க எல்லாரும் என்ன நம்ப ஆரம்பிச்சிட்டாங்க முக்கியமா சிவாவோட அம்மா . அவங்க எனக்கு ரொம்ப ஃபேவரா நடந்து இருப்பாங்க னு நினைக்கிறேன் .நான் கொஞ்சமா பேசினாலே அவங்க உருகிடறாங்க….
இது நம்ம வேலைய பண்றதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்னு நினைக்கிறேன் …. ” ஏதேதோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவள் அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்படவும் இவளும் அந்த அழைப்பை துண்டித்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் இவை அனைத்தையும் காதில் வாங்கியது என்னவோ சிவா தான் . எனினும் அதை கண்டு கொள்ளவில்லை யாரிடம் பேசுகிறாள் என்பது தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வேலையின் விடயமாக அவள் இங்கு வந்திருக்கிறாளா இல்லை அவள் வேலையின் விடயமாக பேசுகிறாளா என்பது தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவளது வேலை விடயத்தில் தனது தாயை பற்றி பேச வேண்டும் என்ற தேவை இல்லையே என்றது தான் அவனது எண்ணம் ஆகிப்போனது .அவனுக்கு கோவமாக இருந்தது . அப்படி என்ன செய்யப் போகிறாள் பொறுத்திருந்து தான் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் கையில் கொண்டு வந்த நகைகளும் புடவைகளையும் பார்த்த உடனையே யார் அவளிடத்தில் அனைத்தையும் கொடுத்திருக்க இயலும் என்று எண்ணம் அவனுக்கு வந்தது . அதனை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது நிச்சயம் தனது தாயிடத்தில் இவை அனைத்தையும் நீங்கள் கேட்டு தான் வாங்கி இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு ……
அவள் அறைக்குள் நுழைந்து சிவாவின் துணிமணிகள் இருக்கும் பீரோலையே அந்த புடவையையும் நகையையும் வைக்கவும் சரியாக அவனது கைதட்டும் ஓசை அவளது காதுகளை எட்டியது .
“நெனச்சேன் டி வந்த அன்னைக்கே எங்க அம்மா கிட்ட பாசமா பேசி அவங்க வச்சிருந்த புடவை நகை எல்லாத்தையும் வாங்கிட்டியா . ஏதோ எனக்கு நேரா ரொம்ப பாசமா அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிற நானே சமைக்கிறேன் அப்படின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு திரிகிற இது மாதிரி எல்லாம் சொல்லி ஈஸியா எங்க அம்மாவ ஏமாத்தலாம்.னு நினைக்கிறியா…அவங்களும் என்ன கண்டாங்க பாவம் . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் கல்யாணம் பண்ணி வைக்கணும் ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தாங்க . ஆனா உன்ன மாதிரி ஒரு ராட்சசிய ஏதோ ஒரு ரட்சகி மாதிரி அவங்க நினைச்சுகிட்டு பேசிட்டு இருக்காங்க .
உனக்குன்னு தான் உங்க வீட்ல போடவே நாங்க எல்லாமே கொடுத்து இருக்காங்க இல்ல அப்படி இருக்கிறப்போ எதுக்காக எங்க அம்மா கிட்ட இருந்து இதெல்லாம் வாங்கினேன் .
சரி அவங்களே கொடுத்ததாகவே இருக்கட்டும் நீயே இதெல்லாம் வாங்கிட்டு வந்த எப்படி பார்த்தாலும் மூணு மாசத்துலை யோ ஆறு மாசத்துலையோ இந்த வீட்டை விட்டு போக போற தானா …உனக்கு இதெல்லாம் தேவையா நீ போறப்போ நீ கொண்டுட்டு வந்த நகை எல்லாத்தையும் நீ தாராளமா எடுத்துட்டு போகலாம் .ஆனா எங்க அம்மாவோட நகையெல்லாம் நீ எடுத்துட்டு போறதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்….!இந்த உலகத்துல யாரும் யாரு மேலையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் வைக்கிறது கிடையாது .அதே மாதிரி தான் நீயும் எங்க அம்மா கிட்ட பாசமா பேசி அவங்க வச்சிருக்க புடவை நகை எல்லாத்தையும் வாங்குறதுக்காக தான் ரொம்ப பொறுப்புள்ள மருமக மாதிரி நடிக்கிறேன் என்று எனக்கு தெரிஞ்சிருச்சு .
ஒழுங்கா நீ போறப்போ இது எல்லாத்தையும் எங்க அம்மா கிட்ட கொடுத்துட்டு போயிடு இதெல்லாம் எடுத்துட்டு போகலாம்னு நெனச்சேன்னா ரொம்ப கஷ்டப்படுவ…..” என்று அவன் பேச அவை அனைத்தையும் மார்புக்கு குறுக்கே கைகட்டியவாறு அவனை அழுத்தமாக பார்த்தவாறு நின்று இருந்தாள் ஷர்வாணி அவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை . அதற்கு மாறாக அவளது கண்கள் அவனிடம் பேசுவது போன்று தெரிந்தது .
“என்ன டி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு திமிரா இல்ல பார்த்துகிட்டே இருக்க…அவ்வளவு ஆட்டிடியூடா உனக்கு…?”என்று அவன் கேட்டு முடிப்பதற்கும் சரியாக அந்த அறைக்குள் ஜெயா நுழைந்தார் .
“ஷர்வாணி நான் கொடுத்த நகை புடவை எல்லாத்தையும் பீரோல்ல அப்படியே வச்சுக்காதம்மா,நீ என்ன பண்ற டெய்லி யூஸ் காக அந்த புடவையையும் நகையையும் வச்சுக்கோ .. அது மட்டும் இல்லாம எப்படியும் ஒரு மாசம் கோயில் அப்புறம் வெளியில் எங்கயாச்சும் நீங்க ரெண்டு பேரும் போறப்ப எல்லாம் நீ அந்த ஜுவல்ஸ் யும் புடவையையும் யூஸ் பண்ணிக்கோ ..ஏன்னா உனக்காக தான் நான் பார்த்து பார்த்து வாங்கி வச்சது .. நான் கொடுக்கிறப்ப கூட நீ வேணாம் னு தான் சொன்னே .ஆனா அதுக்காக நான் கொடுக்காமல் இருக்க முடியாது இல்லையா… ஏன்னா எல்லாமே உனக்காக நான் பார்த்து பார்த்து என்னோட சம்பாத்தியத்தில வாங்கி வச்சது …. சொல்ல போனா என் பையனுக்கே இந்த விஷயம் தெரியாது . உன் அப்பாவும் என்கிட்ட எவ்வளவோ சொன்னாரு ..இருந்தாலும் உனக்காக வாங்கி வச்சது உன் கிட்டயே சேர்த்துட்டேன் . அதான் நீ எல்லாத்தையும் பீரோல மட்டுமே பூட்டி வச்சுர போறியோனு தான் சொல்றதுக்கு வந்தேன் . நீங்க ரெண்டு பேரும் பேசிக் கோங்கம்மா நான் கிளம்புறேன்…..” என்று கூறியவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார் .அவர் அங்கிருந்து சென்றவுடன் எதுவும் பேசாமல் அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு அங்குள்ள ஒரு செல்பிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து சோபாவில் அமர்ந்தபடி படிக்க ஆரம்பித்துவிட்டாள் .நம்ம தான் தேவை இல்லாம இவ கிட்ட சண்டை போட்டுட்டோமா..இவளை பார்த்தா நகை பணத்துக்கும் புடவைக்கும் ஆசைப்படுற மாதிரியா உனக்கு தெரியுது ஏன் டா உன்னோட அவசர புத்தியால தான் இப்ப அவகிட்ட உன்ன தப்பா புரொஜெக்ட் பண்ணி வச்சுக்கிட்ட . இனிமே அவகிட்ட எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு போய் பேசுவ….? என்று அவன் மனசாட்சி அவனிடம் வினவ நான் ஏன் அவளிடம் பேச வேண்டும் என்ற ரீதியில் அவனும் ஒரு ஓரமாக மெத்தையில் அமர்ந்து கொண்டான் .அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் வரவில்லை. ஆனால் அவனது தவறை உணர்ந்து இருந்தான் தான் .ஏனோ இவ்வளவு நேரம் அவளிடம் தைரியமாக ஏதேதோ பேசி விட்டு இப்பொழுது அவனது தவறை உணர்ந்தாலும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை .ஒருவேளை என்னை பற்றி தவறாக எதுவும் நினைத்திருப்பாளா …?வார்த்தைக்கு வார்த்தை டி டி னு வேற பேசிட்டேன் …..
நிச்சயமா என்னை பத்தி ரொம்ப கேவலமா நினைச்சிருப்பா …..அதான் ஒரு மாதிரி பாத்துட்டு போனாளே நிச்சயமா அப்படித்தான் நினைச்சிருப்பா ….அவ எப்படி நினைச்சா உனக்கு என்ன நீ தான் அவளை மூணு (அ) ஆறு மாசத்துலயோ டிவோஸ் பண்ண போற இல்ல….அப்புறம் என்ன அவ எப்படி நினைச்சு இருப்பா னு எல்லாம் நீ நினைச்சுகிட்டு இருக்க .ஒழுங்கா உன்னோட வேலைய பாரு என்று அவனது மனசாட்சி பேச அவனும் அதற்கு மேல் அவள் தன்னை பற்றி என்ன நினைத்தால் தமக்கு என்ன என்று ரீதியில் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான் .சிறிது நேரம் கழித்து இருவரையும் ஜெயா சாப்பிட அழைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட இல்லாமல் சாப்பிடுவது ஜெயாவிற்கு ஏதோ சரியாக படவில்லை .காலையில் எல்லாம் நன்றாக தானே இருந்தார்கள் என்ற ரீதியில் மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தனியாக சிவாவை அழைத்து பேசினார் .
“டேய் அந்த பொண்ணு ஏதாச்சும் நீ சொன்னியா காலையில் எல்லாம் நல்லா தானே இருந்தா இப்ப ஏன் அவ உன்ன பார்த்து கூட சாப்பிடாம அவ பாட்டுக்கு அவ வேலையை பார்த்துக்கிட்டு இருக்கா எனக்கு எதுவும் சரியா படல….அம்மா சாப்பிடறப்ப எதுக்காக அம்மா என்ன பாக்கணும் .என் மூஞ்சிலேயே சாப்பாடு இருக்கு அவ தட்டு ல தான் சாப்பாடு இருக்கு .அப்ப அவ தட்ட பாத்து தான் சாப்பிடுவா என்ன பாத்தா சாப்பிடுவா….இந்த மாதிரி வாய் பேசுறதுக்கு ஒன்னும் குறைச்ச இல்ல அந்த பொண்ணு மனச நோகடிக்காமல் பார்த்து நடந்துக்கோ …. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அவங்க அப்பா அவளை கைக்குள்ள வளர்த்துட்டாங்க . அது மட்டும் இல்லாம லைஃப்ல அவளோட ஜாப் மட்டும் தான் அவ பெருசா நினைச்சு இப்ப வரைக்கும் வாழ்ந்துகிட்டு இருக்கா… மத்த பொண்ணுங்க மாதிரி அவ்வளவாளாம் வாழ்க்கையை அனுபவிச்சது இல்ல னு அவங்க அப்பா என்கிட்ட சொல்லி இருக்காரு .
வேலை வேலைன்னு ஓடின பொண்ணு இப்போ என் வார்த்தைக்கு கட்டப்பட்ட கல்யாணத்தை பண்ணி இருக்கா .நீங்க பத்திரமா பாத்துக்கோங்க சம்மந்தி னு சொல்லி தான் என்னை அனுப்பி இருக்காங்க .நீ தான் அவளை கண்கலங்காம வச்சுக்கணும் …..” என்று ஜெயா பேசிக் கொண்டிருக்க அவனுக்கு தான் இதையெல்லாம் காதில் வாங்க வேண்டுமா என்ற நிலை இருந்தது .அவர் கூறும் அனைத்திற்கும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டான் .இதற்கு மேல் இங்கு நின்றால் நிச்சயமாக தலைவலியே வந்து விடும் என்ற ரீதியில் இருந்தது அவனது மனநிலை .அறைக்கு சென்றவுடன் அங்கு ஏற்கனவே திறந்தவளை கண்டும் காணாதவாறு இருந்தான் . திடீரென்று அவளது கைபேசி ஒலிக்க அதை எடுத்து பேசியவளின் முக மாற்றத்தையும் கவனித்து தான் வைத்திருந்தான் . அழைப்பு துண்டித்தவுடன் வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் .
காபி குடித்த உடன் அவள் கீழே இறங்கி வர சமையல் அறைக்குள் நுழைந்து ஜெயாவுடன் சேர்ந்து சின்ன சின்ன உதவிகளை செய்தாள் சமையலுக்கு……
“நீ உங்க வீட்ல எப்படி இருந்தியோ அந்த மாதிரியே இருந்துக்கலாம் மா .
நீ சீக்கிரமா எந்திரிக்கணும் நீ தான் அவனுக்கு காபி கொண்டுட்டு வரணும், என்னையும் நீ தான் பார்த்துக்கணும் நீ தான் சமைக்கணும் னு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல …..
உங்க வீட்ல நீ எப்படி இருந்தியோ அந்த மாதிரி இருந்துக்கலாம் .
நம்ம இன்னொரு வீட்ல இருக்குன்ற மாதிரி நீ ஃபீல் பண்ண வேணாம் .
உனக்கு உங்க அப்பா அம்மாவை பாக்கணும் னு தோணுச்சுன்னா எப்ப வேணாலும் போய் பாத்துக்கடா….!
சரி மா உங்களுக்கு வயசு ஆயிடுச்சு இல்ல .
நீங்க அதிகமா வேலை எல்லாம் பார்க்க வேண்டாம் . எனக்கு கொஞ்சம் கொஞ்சம் சமைக்க தெரியும் எனக்கு தெரிஞ்சதை வைத்து நானே சமைச்சு விடுறேன்….
இல்லம்மா கொஞ்ச நாளைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இரு . அதுக்கு அப்புறமா சமையல் கட்டுகளாக வரலாம் இப்போ எனக்கு தேவையான சின்ன சின்ன உதவி மட்டும் பண்ணா போதும் . இப்ப உங்க ரெண்டு பேருக்கும் டிபன் நான் பண்ணிட்டேன் சாப்பிட்டு கோயிலுக்கு போயிட்டு அப்படியே எங்கயாச்சும் வெளியிலயும் வாங்க ….!”
அவனும் கீழே இறங்கி வர இருவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஜெயாவையும் அமர வைத்து பரிமாறினாள் ஷர்வாணி .
பரவால்ல நம்ம சொன்னதை விட பயங்கரமா நடிக்கிறாளே பெரிய நடிகையா இருப்பா போலையே என்ற தனது மனதுக்குள்ளயே அவளைப் பற்றி வேறுவிதமாக யோசித்துக் கொண்டான் சிவா .
அவனை பொருத்தவரையில் ஒருவர் காரணம் இல்லாமல் இன்னொருவரின் மீது அன்போ பாசமோ வைக்க மாட்டார்கள் என்பது அவனுக்குள் எழுதப்படாத ஒரு நியதி .
அதே போல் தான் இவளும் தனக்கு விவாகரத்து கிடைக்க வேண்டும் .
அந்த காலகட்டத்தில் தனது மாமியார் எதுவும் கூறக்கூடாது அல்லவா அதன் காரணமாகவே அவரையும் அவள் வலையில் விழ வைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் .
சோபாவில் அமர்ந்த படி டிவியை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ஜெயா அவளை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியில் சென்று படி கோயிலுக்கும் சென்று விட்டு வாருங்கள் என்றும் கூறினார் .
அவனும் இதுவும் கூறாமல் அவளை பார்க்க அவளும் சரி என்று கண்களால் தனது முடிவை கூறினாள் .
அவன் கார் வைத்திருந்தாலும் வெளியில எங்காவது செல்ல வேண்டுமென்றால் அதிகம் உபயோகிப்பது அவனது ராயல் என்ஃபீல்டு தான் .
இப்பொழுதும் அதையே இயக்கியபடி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனை வெகு நேரம் காக்க வைக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள் ஷர்வாணி .
முதலில் இருவரும் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு அம்மன் கோவிலிற்கு சென்ற படி அங்கு அம்மனையும் வணங்கி விட்டு சென்னையிலேயே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கடற்கரைக்கு அழைத்து சென்றான் இருவரும் வந்து மணலில் அமர்ந்தபடி எங்கோ விரித்துக்கொண்டிருந்தனர் இருவரும் எண்ணங்களும் வேறு வேறாக இருந்தது ,
சிவாவை பொறுத்தவரை மகேஷ் நேற்று இரவு தனது மொபைலை வாங்கி சென்று விட்டானே!
அதில் வேலை விடயமாக ஏதாவது அழைப்பு வந்திருக்கும் அல்லவா அனைத்தையும் படுபாவி துண்டித்து வைத்து விடுவானே என்று நினைத்துக் கொண்டிருந்தது அவன் மனம் .
அவளோ கடலையே வெறுத்து பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குள் என்ன விதமான சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் யோகிக்க முடியவில்லை .
சிறிது நேரம் தனது சிந்தனையில் இருந்தவன் மீண்டும் அவளை பார்க்க ஆரம்பித்தான் .
அவளது புருவ முடிச்சுகளே அவள் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்த இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்தியது .
அவளிடம் பேசலாமா இவன் ஏன் எதிலுமே லயிக்காமல் எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கிறாள் என்பது தான் அவனுக்கு புரியவில்லை . அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை தான் .
ஆனால் அவளிடம் பேசுவதற்கு கூட அவன் தயக்கப்படவில்லை .
ஆனால் அவளோ அவனிடம் பேசுவதற்கு தயங்கவில்லை என்றாலும் அவனிடம் பேச வேண்டும் என்று கூட நினைக்கவில்லை .
அது தான் அவனுக்கு புரியவில்லை என்ன பெண் இவள் .
அவளது குண நலன்கள் எவ்வாறு இருக்கும் என்பது தான் அவனுக்கு புரியாத புதிர் ஆகிப்போனது .
சிரித்து கூட பேசுவது கிடையாது .
எப்பொழுதுமே ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கிறாள் . தனது தாயிடம் எப்பொழுதாவது சிரிப்பு பேசுவது என்பது அவளது வழக்கமாகி இருக்கிறது .
அப்பொழுது தான் அவனுக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது .
இன்று காலையில் அவளிடம் காபி கோப்பையை நீட்டும் போது அம்மா தான் அளித்து இருப்பார் என்பது எனக்கு தெரியும் என்று அவள் கூறியது .
பாக்க நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கா….
நம்ம அம்மாவை கூட அம்மா னு தான் சொல்றா …
அழகாவும் இருக்கா .
ஆனா ஏன் இவ கூட வாழனும் னு எனக்கு தோணல .
ஒரு வேலை ஸ்டார்டிங் ல இருந்து நம்ம காதல் கல்யாணம் இதெல்லாம் வேணாம் யோசித்ததனால இப்ப திடீர் னு இவள நம்மளால அக்சப்ட் பண்ணிக்க முடியலையோ…? என்று அவன் மூளை யோசித்து கொண்டு இருக்க , அவனது மனமோ சரி நீ அவளோடு சேர்ந்து வாழ தயாராக இருந்தாலும் அவள் ஒப்புக்கொள்ள மாட்டாளே அதற்கு என்ன கூறுவாய் என்று அவனை கேலி செய்தது .
ஒருவேளை லவ் ஃபெயிலியர் ஏதாச்சும் இருக்குமோ அதனால தான் எப்ப பாத்தாலும் இப்படி அமைதியா ஏதோ பித்து பிடிச்சா மாதிரி இருக்காளோ….. என்று ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளிடம் எப்படி பேசுவது என்பது மட்டும் தெரியவில்லை ஆனால் பேச வேண்டும் என்று தோன்றியது .
அவளுக்கும் உனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று பேசி ஆகிவிட்டது .
இன்னும் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ பிரிந்து செல்ல போகிறவளுக்காக எதற்கு அவரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறாய் என்ற எண்ணம் வேறு அவனுக்கு வந்த தொலைத்து விட்டது .
அதன் காரணமாக அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் தனக்குள்ளையே போட்டு புதைத்துக் கொண்டான் .
ஆனால் இவளுக்குள் மிகப்பெரிய மர்மம் மறைந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது .
சிறிது நேரம் கடலையே வெறித்து கொண்டிருந்தவர்களுக்கு உச்சி வெயில் மண்டையை பிளக்க வீட்டிற்கு செல்லலாம் என்ற எண்ணம் வந்து விட்டதால் அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான் வரும் வழியிலும் சரி போகும் வழியிலும் சரி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை .
இது போக கடலில் கூட ஏதேதோ சிந்தனைகளிலேயே இருவரும் இருந்தனர் .
வீட்டிற்கு வந்தவுடன் மதிய உணவும் தயாராக இருக்க அவர்களோடு மகேஷம் இணைந்து கொண்டான் .
இரவில் இருந்து அவனது கைபேசி அவனிடம் இருந்ததன் காரணமாக அவனிடம் கொடுப்பதற்காக வந்திருந்தான் .
அப்படியே ஜெயாவிடம் பேசிய படி சமையல் வேலைகளிலும் ஈடுபட்டான் .
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா தனது அறைக்கு ஷர்வானியை அழைத்து சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் .
“மச்சான் என்ன அவுட்டிங்ளாம் ரெண்டு பேரும் போய்ட்டு வந்துட்டீங்க போல ஒரே ஜாலி தான் ….
உனக்கு அவ்வளவு தான் மரியாதை .
நைட்டு தூங்காம இருப்பதற்காக தான் பகல்ல தூங்குறியானு கேட்கிறேன் .
நைட் என் போன் வேற புடுங்கிட்டு போயிட்டே .
எனக்கு எவ்வளவு கால் வந்துச்சுன்னு தெரியல .
இப்போ ஏதோ அம்மா சொன்னாங்களேன்னு கோவிலுக்கு போயிட்டு அப்படியே பீச்சு போயிட்டு வந்தோம் . அங்க போனதுல இருந்து அவளும் ஒன்றுமே பேசல நானும் ஒண்ணுமே பேசல…..
என்னடா சொல்ற இந்நேரத்துக்கு அவ உன்கிட்ட பிரண்டா வாச்சும் இருக்கலாமா னு பேசி இருக்கணுமே எதுவுமே பேசலையா…..?
இல்ல அவ எதுவுமே பேசல !
எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சிந்தனை ல இருக்கா மாதிரி இருக்குது . அம்மா கிட்ட மட்டும் தான் நல்லா பேசுறா …..
சரி வெளில கூட்டிட்டு போனப்போ கூட எதுவுமே பேசலையா…
நீ எங்க படிச்சிருக்க என்ன வேலை பாக்குறேன்னு எல்லாமே அவங்க அப்பா சொல்லியிருப்பாங்க தான் .
இருந்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட எதுவுமே பேசவில்லையா….?
இல்லடா அவகிட்ட எனக்கு பேசணும்.னு தோணுது தான் .
ஏன் எப்ப பாத்தாலும் ஒரே சிந்தனைல இருக்கான்னு யோசிச்சேன் .
இப்ப நான் போய் அவ கிட்ட பேசணும் னு நினைச்சா கூட அவ என்ன நினைப்பா ..?
மூணு மாசமோ ஆறு மாசமோ பிரிஞ்சு போக போறோம் .
நடுவில் ஏன் பேசணும் னு தான் நினைப்பா…
யாருகிட்டயும் எனக்கு குறிப்பா பொண்ணுங்க கிட்ட இப்படி போய் பேசணும் னு தோணுது கிடையாது .
ஸ்கூல் டேஸ்லயும் காலேஜ் டேஸ்லயும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கே நல்லா தெரியும் .
ஆனா இவ கிட்ட மட்டும் எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சிந்தனையே இவள ஆட்சி செய்கிற மாதிரி எனக்கு தோணுது……..!
என்ன மச்சான் சொல்ற அப்ப நீ அந்த பொண்ண லவ் பண்றியா…?
டேய் நீ என்ன லூசா அவ கிட்ட பேசணும் அதுவும் சாதாரணமா பேசணும் னு தான் சொன்னேன் . அதுக்குள்ள லவ்வா னு கேட்கிறே …..
இல்ல மச்சான் நீ நல்லா யோசிச்சு பாரு .
கல்யாணம் நடக்குறப்போ ஒரு அஞ்சு நிமிஷம் ஏதோ கல்யாணம் பண்ண போற பொண்ணு ஆல்ரெடி பல வருஷமா லவ் பண்ணி மேரேஜ் பண்றப்போ அந்த பையன் எப்படி அந்த பொண்ணு மணக்கோலத்தில அவ்வளவு எக்சைட்மென்ட் பாப்பானோ அதே மாதிரி உன் கண்ணுல ஒரு ஃபீல் இருந்துச்சு . அப்போ அந்த ஐயர் கூட உன்னை கமெண்ட் அடிச்சாரு பாத்தியா அந்த அளவுக்கு நீ அந்த பிள்ளையை பார்த்த ….!
பார்த்தேன் நான் இல்லைன்னு சொல்லல .
பொண்ணு பாக்க வரப்ப கூட அவ இவ்ளோ அழகா தெரியல .
இப்ப அவளோட காஸ்மெட்டிக் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் நல்லா இருக்கே னு பாத்தேன் அவ்வளவு தான் .
நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.
உன் கிட்ட பேசினா எனக்கு தான் பைத்தியம் பிடிக்கும் .
நான் போய் தூங்குறேன் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள் ல வேலைக்கு வந்துடுவேன் , அதுவரை என்னோட வேலையையும் சேர்த்து நீயே பார்த்திரு…” என்று கூறியவன் தனது அறைக்கு சென்று விட்டான் .
ஜெயா தனது வருங்கால மருமகளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவைகள் நகைகள் என அனைத்தையும் எடுத்து ஷர்வாணியிடம் கொடுத்தார் .
அவள் மறுக்க மறுக்க அவர்தான் வலுக்கட்டாயமாக அவை அனைத்தையும் அவள் வாங்க வேண்டும் என்ற ரீதியில் அவளிடமே கொடுத்து அனுப்பினார் .
“இங்க பாரு மா இங்க இருக்கிற பட்டு புடவை நகை எல்லாமே நான் வேலைக்கு போன காலத்துல நமக்கு மருமகள் வந்தா அவ கிட்ட கொடுக்கணும் அப்படின்றதுக்காக வாங்கி வச்சிருக்கேன் . இந்த விஷயம் எல்லாம் சிவாக்கு கூட தெரியாது …..”
அவளுக்கும் வாங்குவதற்கு சங்கடமாக தான் இருந்தது .
எனினும் இந்த வீட்டில் இருந்து திரும்ப செல்லும்போது இவை அனைத்தையும் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்ட தனது அறைக்குள் சென்றாள் .
அங்கு சிவா வார்த்தையால் அவளை குத்தி கிழித்திருந்தான் .
– தொடரும்🖤
அந்த அறை முழுக்க மல்லிகை வாசமும் இது போக வாசனை திரவியங்களும் அவ்வளவு அலங்காரம் செய்யப்பட்டு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது .
“எதுவுமே நடக்காததுக்கு இப்படி ஒரு செட்டிங்ஸ் எல்லாம் தேவையா கோபி….. “என்ற ரீதியில் இருந்தது மகேஷின் மைண்ட் வாய்ஸ் .
ஏனோ அவனுக்கு ஷர்வாணியை பார்த்த உடனேயே நிச்சயமாக சிவாவிற்கு சரியான ஜோடி இவள் தான் என்று தோன்றியது.
அமைதியாக பேசும் அவளது குணமும் கிட்டத்தட்ட சிவாவை போன்று தான் உள்ளது என்பதையும் அவன் தெரிந்து கொண்டான் .
அனைத்திலும் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது அது போக எவ்வளவு பெரிய விடயமாக இருந்தாலும் சரி அதற்கான தீர்வை எளிதாக எடுத்து விடுவான் சிவா .
அதேபோல் இவளும் இவ்வளவு பெரிய விடயத்தை அதுவும் ஒரே நாளில் கூறியிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க அவனுக்கு நினைவில் நின்றது எல்லாம் நிச்சயமாக இவர்கள் நினைக்க போவது நடக்கப் போவதில்லை என்பது தான் ……!
அவள் மட்டுமே அவனுக்கு சரியான ஜோடியாக இருக்க முடியும் என்பது அவனது எண்ணமாகி போனது .
அவளை பெண் பார்க்கப் போனதிலிருந்து சந்தித்து இருக்கிறான் அன்றும் சரி அமைதியாகவே இருந்து விட்டாள் .
இன்றும் இவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறாள் .
ஆனால் அவனிடத்தில் தனது முடிவு என்ன என்பதையும் தெரிவித்து இருக்கிறாள் .
அதே நேரத்தில் மண்டபத்தில் அவள் வன்சியிடம் பேசியது அவனுக்கு நினைவிற்கு வந்தது வேலை விடயமாக இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம் .
அதை இவன் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டு என்னிடம் உளறி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் .
பால்கனியில் நின்றபடி போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க திருமணம் முடிந்த உடனேயே விவாகரத்து பற்றி அவளிடம் பேசி ஆகிவிட்டது .
அத்தோடு தனது கடமை முடிந்து விட்டது என்ற ரீதியில் இவன் இருக்கிறானா…?
அதற்குள் வேலை விடயமாக பேச ஆரம்பித்து விட்டானா….
என்று அவன் அருகில் சென்று அவனது ஃபோனையும் புடுங்கி தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான் .
“மச்சான் கொஞ்சமாச்சும் பொறுப்புள்ள மாதிரி நடிக்கவாச்சும் செய் டா !
உங்க ரெண்டு பேருக்குள்ள பேசி முடிச்சிட்டீங்க ஓகே !
அம்மாவை பொறுத்த வரைக்கும் எதுவும் தெரியாது .
அம்மாவுக்கு வேற இப்ப எல்லாம் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது .
டாக்டர் ட கூட்டிட்டு போனா வயசாயிருச்சு அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க சந்தோஷமா பாத்துக்கோங்க னு சொல்றாங்க .
இந்த நேரத்துல நீ இப்படி இருக்குறத பாத்தா அவங்க கண்டிப்பா வேதனைப்படுவாங்க….
டேய் டேய் நிறுத்து நான் என்னமோ அவளை இந்த வீட்டை விட்டு அடிச்சு தொறத்துனா மாதிரி பேசிக்கிட்டே போயிட்டு இருக்க .
நாங்க ரெண்டு பேரும் தான் பேசி வெளியில ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா நடிக்கிறே னு சொல்லிட்ட இல்ல .
அப்புறம் என்ன உன் அட்வைஸ் மழையை பொழிய ஆரம்பிச்சுட்ட…..
அது எல்லாமே ஓகே தான் டா . நீ அதுக்குள்ள இப்படி ஓரமா நின்னு போன் பேசிட்டு இருக்குறத பாத்தா நிச்சயமா அம்மா கோபப்படுவாங்க .
அதனால நீ இப்ப என்ன பண்ற மணி வேற எட்டாயிருச்சு . இப்போ போய் உன் ரூம் ல வெயிட் பண்ணு….” என்றவனின் பேச்சும் சரிதானே தனது தாய்க்கு தெரிந்தால் நிச்சயமாக கோபப்படுவார் .
அதையும் தாண்டி வருத்தப்பட்டு தன்னிடம் ஏதேதோ பேச ஆரம்பித்து விடுவார் என்ற ரீதியில் அவனும் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு சென்று விட்டான் .
அறைக்குள் நுழைந்தவனுக்கு நடக்காது ஒரு சடங்கிற்கு இவ்வளவு அலங்காரம் தேவையா என்று இருந்தது .
உடனடியாக அத்தனை அலங்காரங்களையும் கலைத்து விட்டான் .
சர்வ அலங்காரத்தோடு அவள் அறைக்குள் நுழைய , பின்புறமாக திரும்ப நின்று சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு கொலுசு சத்தம் கேட்க திரும்பி பார்த்தான் .
காலையில் பார்த்ததோடு இன்னும் சற்று அழகு மெருகேற்றப்பட்டு அவள் இருப்பது போன்று அவனுக்கு தோன்றியது . ஏற்கனவே சந்தன நிறத்தில் இருப்பவளுக்கு பவுண்டேஷன் கன்சீலர் மை லிப்ஸ்டிக் என அனைத்தையும் போட்டு தேவலோக அப்சரஸ் போல் காட்டியிருந்தனர் .
“ஹலோ பாஸ் என்ன பாத்தது போதும் , உங்களுக்கு பால் வேணும் னா குடிச்சிட்டு படுத்துக்கோங்க….
எனக்கு தூக்கம் வருது .
அந்த சோஃபாலையே படுத்துக்கிறேன் நீங்க பெட்ல படுத்துக்கோங்க…..
இல்ல நீயும் பெட்லயே படுத்துக்கலாம் உடம்பு வலிக்கும் ல…
இல்ல இல்ல எனக்கு அதுவே கம்ஃபர்ட்டபிளா இருக்கு…” என்று கூறியவர் சோபாவில் சென்ற படுத்துக் கொண்டாள் .
என்ன பொண்ணுடா இவளை பத்தி புரிஞ்சுக்கவே முடியலையே என்று யோசித்தவன் பாலையும் குடித்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டபடி மெத்தையில் படுத்து கொண்டான் .
மகேஷும் இரவு ஜெயாவிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டான் .
சூரியன் தனது கதிர்களை கிளம்பி கொண்டு வானம் எங்கும் தனது ஆட்சியை தொடர இங்கே இரு ஜீவன்களோ ஒரே மெத்தையில் அருகே படுத்துக் கொண்டிருந்தன . முதலில் எழுந்தது என்னவோ சிவா தான் .
இவ எப்ப இங்க வந்தா . சோபாலதான படுத்துக்கிறேன் என்று சொன்னாள் .
நான் இங்கே படுத்துக்கோ சொன்னதுக்கு கூட இதுதான் கம்ஃபோட்டபில இருக்கு னு சொல்லிட்டு இங்க அதுவும் இப்படி பக்கத்துல என் மேல கால போட்டுட்டு தூங்கிக்கிட்டு இருக்கா…..
ஏதோ டெடி பியரை கட்டி புடிச்சிட்டு தூங்குற மாதிரி என்ன வேற புடிச்சுகிட்டு தூங்குறா ……
சின்ன வயசுல இருந்து டெடி ஐ கட்டி புடிச்சுட்டு தூங்குவது பழக்கம் போல !
அதான் இப்படி பண்ணிட்டு இருக்கா .
நேற்று பார்த்ததைவிட இன்று அதுவும் அவ்வளவு நெருக்கத்தில் அவளது முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ அவளது அழகை ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது . காரணம் தான் அவனுக்கு தெரியவில்லை …..
ஒப்பனை இல்லாமலும் அழகாக தான் இருக்கிறாள் என்று தனக்குள்ளையே சொல்லிக் கொண்டவன் , அவளிடம் இருந்து மெல்ல அவள் தூக்கம் கலையாத வரை தன்னை விடுவித்துக் கொண்டவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான் .
குளித்து முடித்து கீழே இறங்கி வந்தவன் சமையலறைக்குள் சத்தம் கேட்கவும் தனது தாய் தான் அங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்றான் .
“வா கண்ணா அவ தூங்கி எந்திரிச்சிட்டாளா இந்தா நீ காபி குடிச்சிட்டு அவளுக்கும் போய் காபி கொடு…..
அம்மா இதெல்லாம் அவ தான் பண்ணனும் ஆனா என்ன பண்ண சொல்றீங்க .
என்னடா நீ இப்படி பேசுற .
புருஷன் தூங்கிட்டு இருக்கப்போ அவனை எழுப்பி பொண்டாட்டி தான் காபி கொடுக்கணும் னு இல்ல .
யாரு பர்ஸ்ட் எந்திரிக்கிறாங்களோ அவங்க போட்டு கொடுக்கலாம் .
இது எல்லாமே சின்ன சின்ன வேலை தானே இந்த மாதிரியான வேலை மூலமா தான் நம்மளோட துணை கிட்ட நம்ம அன்பை வெளிப்படுத்த முடியும் .
அக்கறைய காட்ட முடியும். இதுல தான் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பையும் தன்னால புரிஞ்சுக்க முடியும் .
சரி மா காலையிலேயே நீ எனக்கு கிளாஸ் எடுக்க வேணாம் .
இப்ப காபி அவளுக்கு கொண்டு போய் கொடுக்கணும் அப்படித்தானே .
சரி குடுங்க….” என்று தனது காபி கோப்பையையும் வாங்கி குடித்தவன் அவளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு மாடி ஏறினான் .
அந்த வீட்டில் கீழே நான்கு அறையும் மாடியில் மேலே இரண்டறையும் இது போக பால்கனி ஊஞ்சல் கார்டன் எல்லாம் அழகாக அவனால் பராமரிக்கப்பட்ட வந்தது .
தனது அறைக்குள் நுழைந்தவன் கண்டது எல்லாம் கண்ணாடி முன்பு நின்று தலையை வாரிக் கொண்டிருக்கும் தனது மனைவியை தான் .
அதற்குள் எழுந்து குளித்து விட்டாளா…? என்று கூட அவனுக்கு தோன்றியது .
“அம்மா உன்கிட்ட காபி குடுக்க சொன்னாங்க இந்தா ..”என்று காபி கோப்பையை தன்னிடத்தில் நீட்டுபவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது .
“என்ன அப்படி பாக்குற நம்ம தான் இவனுக்கு காபி போட்டு தரணும் .
இவன் நமக்கு காபி போட்டு கொடுக்கிறான் என்று பார்க்கிறியா .
யார் யாருக்கு காபி குடுத்தா என்ன..
ஃபர்ஸ்ட் யார் எழுந்திருக்கிறார்களோ அவங்க இன்னொருத்தவங்களுக்கு போட்டு கொடுக்கிறதுல எந்த தப்பும் இல்லையே…!
அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கல..
எப்படியும் அம்மா சொல்லி தான் நீங்க எடுத்துட்டு வந்து இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் .
இருந்தாலும் அதுலயும் ஈகோ பாக்குற பசங்க எல்லாம் இருக்காங்க .
ஆனா நீங்க அதெல்லாம் பத்தி நினைக்காம கொண்டுட்டு வந்து இருக்கீங்களா என்று தான் யோசனை இருக்கு .
ஓஹோ அப்படியா என்ன எங்க அம்மா அந்த ஈகோ பாக்குற மாதிரி எல்லாம் வளக்கல….. ” என்று கூறியவன் அதோட பேச்சையும் முடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தவாறு ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டான் .
அன்றாட வேலைகளில் இதுவும் ஒன்று..
அந்த நாள் முடிவடைவதற்குள் ஒரு கவிதை புத்தகத்தையாவது வாசித்து விட்டால் தான் அவனுக்கு அந்த நாளே ஓடும் என்றது போல் ஆகிவிடும் அவனுக்கு ……
தனது தாயும் தந்தையும் அவ்வளவு காதலோடு பேசிக்கொள்வதையும் வாழ்வதையும் பார்த்திருப்பவளுக்கு ஒரு விடயம் மட்டும் அவ்வப்போது புரியும் .
இருவருமே அதீத காதலில் தான் இருக்கின்றனர் .
எனினும் தந்தைக்கு தேவையான அனைத்தையும் தாய் தானே பார்த்து பார்த்து செய்கிறார் .
ஒரு நாளாவது மனைவிக்காக கணவன் சின்ன சின்ன வேலைகள் ஆவது செய்யலாமே என்று கூட அவளுக்கு தோன்றும் .
அது போன்று ஒருவன் தனது கணவனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் கூட எண்ணியவள் காலப்போக்கில் அதெல்லாம் கிடைப்பது அரிது என்று காதல் கல்யாணம் என்ற எந்த உறவு முறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் .
ஆனால் இன்று அவன் செய்த செயல் முதல் முறையாக தனது எண்ணத்தை ஈடேற்றுவது போன்று அவளுக்கு தோன்றியது .
இருவரின் எண்ணமும் உடைப்பட்டு ஒரே எண்ணமாகுமா…..?
– தொடரும்🖤