Home SRIJA NOVELS12) தீராதவள் 🥰

12) தீராதவள் 🥰

by sreejanovels
135 views

நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும் இளவஞ்சி எப்படிப்பட்ட பிறப்பு அவள் ஆணா பெண்ணா என்று தெளிவாக விளக்க உரையுடன் இதோ..

இளவஞ்சி பிறப்பிலேயே ‘ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம்’ (Androgen Insensitivity Syndrome – AIS) என்ற விசித்திரமான மரபணுக் குறைபாட்டுடன் பிறந்தவள். வெளிப்புறத் தோற்றத்தில், குரலில், மென்மையில் அவள் 100% அசல் பெண்ணாகவே வளர்ந்தாள். அவளுக்குள் ஒரு பெண்ணுக்கான அத்தனை உணர்வுகளும், ஆசைகளும் கச்சிதமாக இருக்கின்றன. ஆனால், அவளது உடலின் உட்புறத்தில் கருப்பையும், கருமுட்டைப் பைகளும் இல்லை. இந்தச் சமூகம் எதிர்பார்க்கும் வாரிசைப் பெற்றெடுக்கும் உயிரியல் தகுதி அவளுக்கு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவளுக்குள் ஒரு பெண்ணாக வாழவே தகுதியில்லை என்ற பயங்கரமான தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்டுவிட்டது.


சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்..

அத்தியாயம் 12

பத்தாம் ஆண்டு விழா பூகம்பம் நடந்து முடிந்த பிறகு, சக்கரவர்த்தி எம்பையர்ஸ் கம்பெனிக்குள் ஒரு சுடுகாட்டு அமைதி நிலவியது. இளவஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தன் வளர்ப்புத் தாயாலும் தந்தையாலும் கைவிடப்பட்டு, அனாதையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவளது தங்கை சினேகா வீட்டில் தன் திருமணக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தாள். தனஞ்செயன் ஐயா தனக்குக் கொடுத்த அந்தப் பெரிய வாக்குறுதி அவளது கர்வத்தை இன்னும் சில மடங்கு அதிகமாக்கியிருந்தது.

அன்று காலை, தனஞ்செயன் ஐயாவின் பிரம்மாண்டமான பங்களா.

வரவேற்பறையில் தனஞ்செயன் மிகவும் சோகமாக, கவலையோடு அமர்ந்திருந்தார். அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. இளவஞ்சியின் மீது அவருக்கு இருந்த அந்த உன்னதமான நல்ல அபிப்பிராயம், அவளது பிறப்புப் பின்னணியைக் கேட்டதும் அடியோடு உடைந்திருந்தது. “என் வம்சத்தோட அடுத்த வாரிசைப் பெற்றுக் கொடுக்க அவளால் முடியாது… பாவம் அந்தப் பெண், ஆனால் ஒரு தந்தையாக என் குடும்பத்தின் எதிர்காலத்தை நான் யோசிக்க வேண்டுமே,” என்று அவரது பாரம்பரிய சிந்தனை அவரைத் தடுத்திருந்தது. அதே சமயம், சினேகா வந்து அழுது சொன்ன அந்தப் பொய்கள் அவரது மூளையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. “என் மகன் கந்தர்வன் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறான் என்றால், அதற்குத் தகப்பனாக நான் தான் பரிகாரம் செய்ய வேண்டும்,” என்ற முடிவில் அவர் தீர்க்கமாக இருந்தார்.

அப்போது, வீட்டின் வாசலில் கந்தர்வனின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

சில நொடிகளில், கம்பீரமான அசுர நடையோடு உள்ளே நுழைந்தான் கந்தர்வன் சக்கரவர்த்தி. அவனது கறுப்பு சூட் உடையும், முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த மிரட்டலான அலட்சியமும் அப்படியே இருந்தன. நேற்றைய விழாவில் இளவஞ்சி அப்படிப் பைத்தியம் போலக் கத்திவிட்டு மயங்கி விழுந்ததைப் பார்த்த பிறகும், அவனது முகத்தில் எந்தவொரு குற்ற உணர்ச்சியோ, பதற்றமோ தெரியவில்லை. அவனது அசுரக் கண்கள் இரும்புப் பாறையைப் போலக் குளிர்ந்து கிடந்தன.

அவன் நேராகத் தன் தந்தையின் முன்னால் வந்து நின்று, தன் கோட்டின் பொத்தான்களைக் கழற்றினான். “என்னப்பா… இந்த நேரத்துல அர்ஜென்ட்டா வீட்டுக்கு வரச் சொன்னீங்க? ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலைகள் இருக்கு,” என்று தன் முரட்டுத்தனமான குரலில் கேட்டான்.

தனஞ்செயன் மெதுவாக நிமிர்ந்து தன் மகனைப் பார்த்தார். அவரது கண்களில் ஒரு தந்தையின் கோபமும் கண்டிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன. “உனக்கு ஆபீஸ் வேலையை விட வேற எந்தப் பொறுப்பும் இல்லையா கந்தர்வா? நீ பண்ற சேட்டைகளுக்கெல்லாம் ஒரு எல்லையே இல்லையா?” என்று கறாரான குரலில் கேட்டார்.

கந்தர்வன் லேசாகப் புன்னகைத்தான். அவனது அந்த வம்படியான புன்னகை தனஞ்செயனின் கோபத்தை இன்னும் தூண்டியது. “நான் என்னப்பா பண்ணினேன்? இப்போ எதுக்கு என் மேல இவ்வளவு கோபப்படுறீங்க?”

“சினேகா…” என்று தனஞ்செயன் அந்தப் பெயரைக் குறிப்பிட்டதும் கந்தர்வனின் புபுருவங்கள் லேசாக உயர்ந்தன.

“அந்தப் பொண்ணோட வாழ்க்கையில நீ விளையாடிட்டு, இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி என்கிட்டயே கேக்குறியா? அவ ஒரு ஏழைப் பொண்ணு… அவளை நீ காதலிப்பதாகச் சொல்லி, ஒரு நாள் ராத்திரி உன்னோட சந்தோஷத்துக்காகத் தப்பான முறையில பயன்படுத்திக்கப் பார்த்திருக்கே! அவ அழுதுகொண்டே என் காலில் விழுந்து நியாயம் கேட்டப்போ ஒரு தகப்பனா நான் அசிங்கப்பட்டுப் போயிட்டேன் கந்தர்வா. பெண்களை இப்படிப் போகப்பொொருளா நினைச்சு வாழுற உன்னோட இந்தத் தறிகெட்ட குணம் எனக்குப் பிடிக்கல,” என்று தனஞ்செயன் ஆத்திரத்தோடு கத்தினார்.

கந்தர்வன் ஒரு நிமிடம் மௌனமாகத் தன் தந்தையையே உற்றுப் பார்த்தான். சினேகா தனஞ்செயனிடம் வந்து இப்படி ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லி, தன்னை ஒரு ஏமாற்றுக்காரனாகச் சித்தரித்திருக்கிறாள் என்பதை அவனது அசுர மூளை சட்டென்று கணித்துக்கொண்டது. ஆனால், அவன் அந்தப் பொய்க்கு மறுப்போ, விளக்கமோ சொல்ல முற்படவில்லை. அவனது உதடுகளில் ஒரு விசித்திரமான, வஞ்சகப் புன்னகை மட்டுமே விரிந்தது.

“ஓ… அப்படியா சங்கதி? அந்தப் பொண்ணு உங்ககிட்ட வந்து இவ்வளவு எமோஷனலா கதை சொல்லியிருக்காளாப்பா?” என்று லேசான கேலியோடு கேட்டான் கந்தர்வன்.

“விளையாடாதே கந்தர்வா! நான் அவளுக்கு வார்த்தை கொடுத்துட்டேன். நீ பண்ண தப்புக்கு என் குடும்பம் தான் பொறுப்பேற்கணும். இந்த சக்கரவர்த்தி குடும்பத்தோட கௌரவம் காப்பாற்றப்படணும்னா… நீ சினேகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். வர்ற வாரம் சினேகாவுக்கும் உனக்குமான திருமண ஏற்பாடுகளை நான் செய்யப் போறேன். இது என் உத்தரவு!” என்று தனஞ்செயன் ஐயா அதிரடியாகத் தன் முடிவை அறிவித்தார்.

கந்தர்வன் தன் தந்தையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அவனது அசுர விழிகளுக்குள் என்ன திட்டம் ஓடுகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவன் தன் கைகளைத் தன் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு, “சரிப்பா… நீங்க ஆசைப்பட்டபடியே இந்தச் சினேகாவோட கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன். நீங்க தாராளமா கல்யாண ஏற்பாடுகளைக் கவனிங்க,” என்று மிகவும் சாதாரணமாக, அலட்சியமாகச் சம்மதம் தெரிவித்தான்.

தனஞ்செயன் அவனது இந்தத் திடீர்ச் சம்மதத்தைக் கேட்டுச் சற்றே நிம்மதியடைந்தார். “நல்லது கந்தர்வா. இப்போதாவது என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தியே,” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குள் சென்றார்.

தந்தை உள்ளே சென்றதும், கந்தர்வனின் முகம் அப்படியே அசுரத்தனமான விறைப்போடு மாறியது. அவனது கண்கள் வன்மத்தில் சிவந்தன. “சினேகா… என் மேலயே பழி சுமத்தி, என் அப்பாவை வச்சு எனக்குக் கல்யாண ஆப்பு வைக்கப் பார்க்கிறியா? இந்த கந்தர்வன் சக்கரவர்த்தி யாருன்னு உனக்கு இன்னும் தெரியல. நீ ஆசைப்பட்டபடியே இந்தத் திருமண மேடை தயாராகும்… ஆனா அங்கே உனக்காகக் காத்துட்டிருக்கிறது ஒரு பெரிய நரகம்டி!” என்று தன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, தனக்குள்ளே அசுரத்தனமாக முணுமுணுத்துக் கொண்டான்.


மறுபுறம், கம்பெனியின் கீழ் தளத்தில் சினேகா தன் இருக்கையில் அமர்ந்து, தன் நகங்களைக் கடித்தபடி போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது தோழி ரம்யா அவளருகே வந்து, “சினேகா… இளவஞ்சி ஹாஸ்பிட்டல்ல இருக்காளாமேடி. நீ ஏன் இன்னும் அவளைப் பார்க்கப் போகல? உங்க வீட்லயும் யாரும் வந்த மாதிரி தெரியல,” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

சினேகா ரம்யாவைத் தீர்க்கமாகப் பார்த்து, “அவளுக்கு என்ன ஆனா எனக்கு என்னடி? அவளைப் பத்தி என்கிட்ட பேசாதே. இங்க பாரு…” என்று தன் கையில் இருந்த வைர மோதிரத்தைக் காட்டினாள்.

“இது…” என்று ரம்யா திகைத்தாள்.

“தனஞ்செயன் சார் எனக்கு வார்த்தை கொடுத்திட்டாரு. கந்தர்வனுக்கும் எனக்கும் தான் கல்யாணம். கூடிய சீக்கிரம் நான் இந்த வீட்டுக்கு மருமகளா, இந்த கம்பெனியோட மகாராணியா வரப்போறேன். ஹாஸ்பிட்டல்ல கிடக்கிற அந்த இளவஞ்சியைப் பத்திச் சொன்னா எங்க அம்மாவும் அப்பாவும் வர மாட்டாங்க. அவ அங்கேயே கிடந்து சாகட்டும். எனக்கு இப்போ பணம், அந்தப் பணத்தால வர்ற ஆடம்பரம் மட்டும்தான் முக்கியம். இந்த உலகத்துல இருக்குற அத்தனை சொகுசையும் நான் மட்டும் தான் ஆண்டு அனுபவிக்கணும். அந்தப் பெரிய பிசினஸை என் கைக்குள்ள போட்டுக்கிட்டு, அந்த கந்தர்வனையும் என் காலுக்குக் கீழே கொண்டுவந்து என் இஷ்டத்துக்கு ஆட்டப் போறேன் பாரு!” என்று சினேகா தன் மனதிற்குள் இருந்த பேராசையையும் வன்மத்தையும் அப்பட்டமாகக் கக்கினாள். அவளது அசுர மூளை முழுக்கப் பணம், அந்தப் பணத்தால் வரும் அதிகார ஆடம்பரம் மட்டுமே முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவளது ரகசிய மொபைல் போனுக்கு கந்தர்வனின் ஆப்போசிட் கம்பெனி ஓனரான சஞ்சய்யிடமிருந்து (பொம்பளப் பொறுக்கி) குறுஞ்செய்தி வந்தது.

“நாளைக்கு மாலை அதே ஹோட்டல் அறைக்கு வா சினேகா. கம்பெனியோட அடுத்த பெரிய லண்டன் ப்ராஜெக்ட் விபரங்களை நீ எனக்காகக் கொண்டு வரணும்,” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

சினேகா அதைப்பார்த்து வஞ்சகமாகச் சிரித்தாள். “கந்தர்வா… உன்னை ஒட்டுமொத்தமா அழிக்கிறதுக்கு இந்தச் சஞ்சய்யை நான் கச்சிதமா பயன்படுத்திக்கப் போறேன்,” என்று தன் பேராசையின் அடுத்த கட்டத்திற்குத் தயாரானாள்.

ஆனால், சஞ்சய் அவளைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவளது உடலையும் கம்பெனி ரகசியங்களையும் தன் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அச்சுறுத்தும் உண்மை சினேகாவின் பேராசை மூளைக்கு எட்டவே இல்லை. திருமணக் கொண்டாட்டங்களின் பின்னால், சக்கரவர்த்தி குடும்பத்தை வீழ்த்தப்போகும் அந்தப் பெரிய பிசினஸ் சறுக்கலுக்கான சதிவலைகள் மிகத் தீவிரமாகப் பின்னப்படத் தொடங்கின!

..‌..

You may also like

Leave a Comment

About Me

Featured