அத்தியாயம் 32
எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகம் வழக்கத்திற்கு மாறான பெரும் பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தி எம்பையர்ஸின் பிரதான சர்வர்களை ஹேக் செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட சஞ்சய்யின் ஜாமீன் மனு மற்றும் அவன் தொடர்ந்த சொத்துரிமை சிவில் வழக்கு ஆகிய இரண்டும் இன்று ஒரே நாளில் விசாரணைக்கு வந்திருந்தன. கைகளில் விலங்குடன் சஞ்சய் போலீஸ் காவலில் கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுக்கு ஆதரவாகச் சினேகாவும் மரகதமும் ஏற்பாடு செய்திருந்த டாப் லாயர்கள் அங்கே தங்களின் வாதங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
நீதிமன்ற அறைக்குள் நீதிபதி அமர்ந்ததும் சஞ்சய்யின் வழக்கறிஞர் தன் வாதத்தைத் தொடங்கினார்.
“யுவர் ஆனர், என் கிளையண்ட் சஞ்சய் சைபர் கிரைம் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தனி. ஆனால், சக்கரவர்த்தி எம்பையர்ஸின் ஆரம்பகால வளர்ச்சியில் இவருடைய தாய் விசாலாட்சியின் உழைப்பும், அவரோட சொந்தப் பண முதலீடுகளும் அத்தோடு விசாலாட்சிக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்துக்களும் அந்த நிறுவனத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. விசாலாட்சி மறைவுக்குப் பிறகு, அந்தத் தாயின் உழைப்பிலும் அவருக்குச் சொந்தமான சொத்துக்களிலும் அவருடைய மற்றொரு வாரிசான என் கிளையண்ட் சஞ்சய்க்குச் சட்டப்படியான பங்கு கிடைக்க வேண்டும். அந்தப் பங்கைத் தராமல் ஏமாற்றவே கந்தர்வன் சக்கரவர்த்தி என் கிளையண்ட் மீது இந்த நெட்வொர்க் ஹேக்கிங் வழக்கைப் போட்டுப் பழிவாங்குகிறார். எனவே சஞ்சய்க்கு ஜாமீன் வழங்குவதோடு, அவரது தாயின் சொத்துரிமைப் பங்கையும் மீட்டுத்தர வேண்டும்!” என்று அதிரடியாக வாதாடினார்.
நீதிமன்றத்தில் இருந்த மீடியாக்காரர்கள் இந்தத் திடுக்கிடும் கார்ப்பரேட் சொத்து விவகாரத்தைக் கேட்டுத் தங்களின் கேமராக்களைத் தயார் செய்ய, ஒட்டுமொத்த அரங்கமும் கந்தர்வனின் பக்கமே திரும்பியது.
கந்தர்வன் தன் நாற்காலியிலிருந்து மிக நிதானமாக, அதே சமயம் அசுர கம்பீரத்துடன் எழுந்து கூண்டிற்கு முன்னால் வந்து நின்றான். அவனது கறாரான பார்வை சஞ்சய்யையும், அவனுக்குப் பின்னால் நின்ற சினேகாவும் மரகதத்தையும் ஒரு நொடி நடுங்க வைத்தது.
கந்தர்வன் தன் கையில் இருந்த ஒரு சீல் வைக்கப்பட்ட அதிகாரப்பூர்வக் கார்ப்பரேட் கணக்கு விபரங்கள் அடங்கிய கோப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தான்.
“யுவர் ஆனர், சஞ்சய் தரப்பு வாதாடுவது போல் விசாலாட்சி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது உண்மைதான். ஆனால், அவர் ரகுநாத் என்பவருடன் செல்வதற்கு முன்பே, இந்த நிறுவனத்தில் தனக்கு இருந்த அத்தனை பங்குகளையும், முதலீடுகளையும் சட்டப்பூர்வமாகப் பணமாகப் பெற்றுக் கொண்டு, நிறுவனத்தின் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகிவிட்டார் என்பதற்கான கார்ப்பரேட் செட்டில்மென்ட் பத்திரங்கள் இதோ,” என்று அடுக்கினார்.
தொடர்ந்து தன் கறாரான குரலில் லாஜிக் தவறாமல் பேசத் தொடங்கினான். “அவர் தன் பங்குகளுக்கான செட்டில்மென்ட்டை வாங்கிச் சென்ற பிறகு, இந்தச் சக்கரவர்த்தி எம்பையர்ஸ் நிறுவனத்தில் விசாலாட்சிக்கு எந்தவொரு தனிப்பட்ட சொத்தோ, முதலீடோ கிடையாது. அதைவிட முக்கியமாக, சஞ்சய்யின் தந்தை ரகுநாத் ஊட்டிய பழிவெறியால், சஞ்சய் இந்த நிறுவனத்தின் லண்டன் ப்ராஜெக்ட் மெயின் டேட்டாவை ஹேக் செய்து நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்த முயன்றதற்கான சைபர் கிரைம் லேப் ரிப்போர்ட் இதோ. தன் மாபெரும் கிரிமினல் குற்றத்தை மறைக்கவே, தன் தாயின் உழைப்பை ஒரு கேடயமாகப் பயன்படுத்திச் சொத்துரிமை நாடகம் ஆடுகிறான்!” என்று ஆதாரங்களை உடைத்தார்.
கார்ப்பரேட் செட்டில்மென்ட் ஆவணங்களையும், சைபர் கிரைம் லேப் ரிப்போர்ட்டையும் ஆராய்ந்த நீதிபதியின் முகம் கடுமையானது. சஞ்சய்யின் லாயர்கள் மேற்கொண்டு பேச வார்த்தையின்றித் தலைகுனிந்தனர்.
“சஞ்சய் தரப்பு கொண்டு வந்த சொத்துரிமை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சக்கரவர்த்தி கம்பெனியின் பங்குகளை முடக்க நினைத்த சைபர் குற்றங்களுக்காகவும், கார்ப்பரேட் துரோகத்திற்காகவும் சஞ்சய்க்குப் பிணையில்லா முழுக் காவல் தண்டனை நீட்டிக்கப்படுகிறது. மேலும், சஞ்சய்யின் இந்தச் சதித் திட்டங்களுக்குத் தூண்டுதலாகவும், லீகல் சப்போர்ட்டாகவும் இருந்த சினேகா மற்றும் மரகதம் ஆகியோரிடமும் போலீஸ் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது!” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
சஞ்சய்யின் முகம் ஒட்டுமொத்தமாக இருண்டு போக, அவனுக்குத் துணையாக நின்ற சினேகாவும் மரகதமும் போலீஸ் வளையத்திற்குள் சிக்கப் போவதை உணர்ந்து பயத்தில் அங்கேயே நடுங்கத் தொடங்கினர். கந்தர்வன் சினேகாவைப் பார்த்து ஒரு தீர்க்கமான ஏளனச்னப் புன்னகையை வீசிவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினான். சாம்ராஜ்யத்தை அழிக்க வந்த சதி வலைகள் அத்தனையும் சட்டத்தின் முன்னால் சுக்குநூறாக உடைந்து சிதறின.
மறுநாள் காலை, சக்கரவர்த்தி மாளிகை ஒரு மாபெரும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அத்தனை பழிவாங்கல்களும், துரோகங்களும் ஒழிந்துபோன சந்தோஷத்தில் ஒட்டுமொத்தக் குடும்பமும், உறவினர்களும் அங்கே கூடியிருந்தனர். அன்றுதான் குழந்தை பூவஞ்சியின் தொட்டில் மற்றும் பெயர் சூட்டு விழா!
வரவேற்பறையின் நடுவே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தொட்டிலில் தேவதையாய் அமர்ந்திருந்தாள் பூவஞ்சி. அவளது பிஞ்சு விரல்கள் காற்றில் அசைந்து விளையாடிக் கொண்டிருக்க, இளவஞ்சி பட்டுப் புடவையில் தேவதையாய் அவளருகே அமர்ந்திருந்தாள். அவளது முகம் அத்தனை நாட்களுக்குப் பிறகு எந்தவொரு கவலையும் இல்லாமல், ஒரு முழுமையான மகிழ்ச்சியோடு ஒளிர்கிறது.
அப்போது தனஞ்செயன் ஐயாவும் புவனேசுவரி அம்மாவும் மேடைக்கு வந்தனர். “கந்தர்வா, கௌதம்… எல்லாரும் முன்னாடி வாங்கப்பா. ஜோசியர் நல்ல நேரம் சொல்லிட்டார். குழந்தைக்கு முறைப்படி எல்லாரும் காதுல பேரைச் சொல்லித் தொட்டில போடுங்க,” என்றார் தனஞ்செயன் ஐயா நெகிழ்ச்சியோடு.
கந்தர்வனும் இளவஞ்சியும் முதன்முதலாகத் தங்கள் மகளைத் தூக்கித் தங்கத் தொட்டிலில் இட்டனர். கந்தர்வன் தன் கம்பீரமான குரலைக் காதலில் குழைத்து, குழந்தையின் காதில் மூன்று முறை “பூவஞ்சி… பூவஞ்சி… பூவஞ்சி…” என்று பெயர் சூட்டினான். மங்கள வாத்தியங்கள் முழங்க, ஒட்டுமொத்த மாளிகையும் கைதட்டலால் அதிர்ந்தது.
அடுத்ததாக, புவனேசுவரி அம்மா கௌதமையும் மதுமிதாவையும் முன்னால் அழைத்தார். “இந்தக் குடும்பத்துக்கு வந்த பெரிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தினது நம்ம மதுமிதாதான். இப்போ எல்லாரும் இருக்கிற இந்த விசேஷமான நேரத்துல, கௌதமுக்கும் மதுமிதாவுக்கும் சீக்கிரமே திருமணம் நடத்தலாம்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்,” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மதுமிதாவின் முகம் வெட்கத்தால் சிவக்க, கௌதம் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து, தன் காதலின் முழுமையான நிம்மதியை அடைந்தான். அகிலா ஓடிவந்து இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி அணைத்துக் கொண்டாள்.
சுற்றிலும் உறவினர்களின் வாழ்த்துகளும், மழலைச் சிரிப்பும் ஒலிக்க, அரியணை ஏறிய பூவஞ்சியோடு சக்கரவர்த்தி சாம்ராஜ்யத்தின் அடுத்த விடியல் பேரெழுச்சியோடு தொடங்கியது!
……..
மாளிகையின் பிரம்மாண்டமான விழா முடிந்து, உறவினர்கள் அனைவரும் விடைபெற்றுக் கிளம்பியிருக்க, சக்கரவர்த்தி மாளிகை ஒரு மென்மையான அமைதிக்குள் நனைந்திருந்தது. நிலவொளி மாளிகையின் உப்பரிகையிலும், தோட்டத்திலும் பால் போலப் பரவியிருக்க, அங்கே காதலின் வாசம் தழைத்தோங்கியது.
மாளிகையின் பின்புறத் தோட்டத்தில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்க, அங்கே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானத்து நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள் மதுமிதா. விழாவிற்காகக் கட்டியிருந்த மென்பட்டுப் புடவை அவளது அழகை இன்னும் அள்ளிக் கொடுத்தது.
அப்போது அங்கே சத்தம் தராமல் வந்த கௌதம், அவளருகே அமர்ந்து அவளது தோளோடு தன் தோளை இணைத்துக் கொண்டான். அவனது திடீர் நெருக்கத்தில் மதுமிதா லேசாகச் சிலிர்த்து அவனது முகம் பார்த்தாள்.
“என்ன மது… எல்லாரும் தூங்கிட்டாங்க, நீ இன்னும் தூங்காம நிலவோடு பேசிட்டு இருக்கே?” என்று கௌதம் தன் குரலில் காதலைக் குழைத்துக் கேட்டான்.
“இல்லை கௌதம்… இன்னைக்கு நடந்த அத்தனை விசேஷங்களும், அத்தை நமக்காக எடுத்த அந்த முடிவும் இன்னும் எனக்கு ஒரு கனவு மாதிரியே இருக்கு. உங்களை ஆரம்பத்துல முரடன்னு நினைச்ச நான், இப்போ உங்க காதலுக்குள்ள மொத்தமா தொலைஞ்சு நிப்பேன்டான்னு கொஞ்சம் கூட யோசிக்கல,” என்றாள் மதுமிதா அவனது கண்களை ஆழமாகப் பார்த்து.
கௌதம் அவளது மென்மையான முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி, அவளது நெற்றியில் தன் இதழ்களை மெதுவாகப் பதித்தான். “இது கனவு இல்லை மது, நிஜம். இனி என் அத்தனை நொடிகளும் உன்னோட இந்த அன்பால மட்டும்தான் நிறையப் போகுது,” என்று கூறி அவளது கைகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான். அவளது வெட்கப் புன்னகை அந்த நிலவொளியில் இன்னும் அழகாகப் பிரகாசித்தது.
மறுபுறம், அகிலாவும் கௌதமின் திருமணப் பேச்சுகள் முடிந்த சந்தோஷத்தில் தன் அறையில் அண்ணன்-அண்ணியின் மகிழ்ச்சியான வாழ்க்கையை எண்ணி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
…
மாளிகையின் அந்தப் பிரம்மாண்டமான பிரதான படுக்கையறைக்குள், நிலவின் ஒளி ஜன்னல் திரைகளை ஊடுருவி மென்மையாகப் படர்ந்திருந்தது. படுக்கையின் அருகே இருந்த தங்கத் தொட்டிலில் பூவஞ்சி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அறைக்குள் தம்பதிகளின் மூச்சுக்காற்று மட்டுமே கேட்கும் அளவிற்கான ஒரு ஆழமான அமைதி குடியேறியிருந்தது.
இளவஞ்சி ஜன்னலோரம் நின்று அந்த இரவு நேரத்துக் குளிர் காற்றை சுவாசித்தபடி, தன் அத்தனை வருடத் தவிப்புகளும் ஏகங்களும் தீர்ந்த அந்தப் பேரானந்தத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
அப்போது அவளுக்குப் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்றான் கந்தர்வன். அவனது கறாரான கம்பீரம் இப்போது காதலின் தாகமாக மாறியிருந்தது. இளவஞ்சியின் பட்டுப் புடவையின் தளர்ந்த முந்தானையைத் தன் முரட்டு விரல்களால் மெதுவாகப்பற்றித் தள்ளி, அவளது வெற்று முதுகில் தன் விரல்களால் கோலமிட்டான். அவனது அசுரத் தீண்டலில் இளவஞ்சி உடல் சிலிர்த்து, தன் கண்களை மூடிக்கொண்டாள்.
கந்தர்வன் அவளது இடுப்போடு சேர்த்து வளைத்து, தன் பலத்த நெஞ்சோடு அவளது உடலை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனது உதடுகள் அவளது பின்னங்கழுத்திலும், தோள்களிலும் தன் ஆழமான முத்தங்களைப் பதிக்கத் தொடங்கின. அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் அவளது உடலை இன்னும் சூடாக்கியது.
“ஏங்க…” என்று இளவஞ்சி தழுதழுத்த குரலில் முணுமுணுத்து, அவனது கைகளுக்குள் அப்படியே உருகித் திரும்பினாள்.
அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான் கந்தர்வன். அவனது கண்கள் காதலின் அனலைக் கொட்டிக் கொண்டிருந்தன. “இத்தனை வருஷமா உனக்குள்ள இருந்த அத்தனை ஏகத்தையும், வலியையும் இந்த அசுரன் இன்னைக்கு மொத்தமா துடைக்கப் போறேன் இளவஞ்சி. இந்த அசுரனுக்கு நீ மட்டும்தான் மொத்த உலகமும்…” என்று தன் காந்தக் குரலில் உறுமினான்.
“உங்க கைகளுக்குள்ள அடிமையா கிடக்குற இந்த நொடிதான் எனக்கு ஆகப்பெரிய சாம்ராஜ்யம்ங்க…” என்று இளவஞ்சி அவனது நெஞ்சில் தன் நகங்களைப் பதித்து, அவனது நேர்கொண்ட பார்வையில் தன் மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்தாள்.
கந்தர்வன் அவளது தவிப்பான, சிவந்த இதழ்களோடு தன் இதழ்களை ஆழமாக இணைத்துக் கொண்டான். அது வெறும் முத்தமல்ல; அவளது அத்தனை ஏக்கங்களையும், சஞ்சய் கொடுத்த அத்தனை வலிகளையும் தங்களின் இந்த மாறாத, ஆழமான காதலின் பிடியில் இரு உடல்களும் ஒரு ஜீவனாக உறைந்து கரைக்கும் ஒரு தீரா தாகத்தின் வெளிப்பாடு!
அவளது உடலைத் தன் கைகளில் ஏந்தி, மெதுவாக அந்தப் பிரம்மாண்டமான படுக்கையில் கிடத்தினான். நிலவொளியின் சாட்சியாக, அசுரனின் முரட்டுத்தனமான காதலும், அவளது மாறாத பேரன்பும் ஒன்றுக்கொன்று இணையாக மோதிக்கொண்டன. ஆடைகளின் எல்லைகள் மறைந்து, இரு உடல்களும் ஒரு ஜீவனாக இணைந்து தங்களின் காதலின் உச்சத்தைத் தொட்டன. அந்த அறைக்குள் அவர்களின் காதல் புயல் அசுர வேகத்தில் பரவி, ஒரு பேரன்பின் சாம்ராஜ்யமாக உறைந்து நின்றது
……..