வீட்டிற்கு வந்த ஷர்வாணியோ இன்று நடந்த விடயங்களைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தாள் .
அப்படி என்ன இருக்கும் அவன் கிட்ட…
எவிடென்ஸ்னு ஏதாச்சும் நம்ம தேடுறது சம்பந்தப்பட்ட பைல்ஸ் கிடைச்சிருக்குமா இல்ல மிஸ் ஆன பையனோட காஸ்டியூம் காஸ்மெட்டிக்ஸ் ஏதாச்சும் கிடைச்சிருக்குமா என்று பலவாறு அவள் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது எனினும் விடை தான் தெரியவில்லை .
அதிலும் சிவா கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சத்திற்குள் ஊடுருவி கொண்டிருந்தன .
எப்படியோ அவனது உதவி இல்லாமலும் இந்த கேசை பற்றிய விடயங்களை கண்டறியலாம் என்பது அவளது முடிவாகி போனது .
மாலை 4 மணி போல வீட்டிற்கு வந்தவன் அறைக்குள் அவனது புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் ஷர்வாணியை கண்டவாறு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலிற்கு வந்து டிவியை ஆன் செய்தவர் அமர்ந்துவிட்டான் .
அவனது அறையில் வைக்கப்பட்டிருந்த கவிதை புத்தகங்கள் வரலாற்று நாவல்கள் எடுத்து பொழுதுபோக்கிற்காக படித்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை .
ஆறு மணிக்கு மேல் ஹாலுக்கு வந்தவள் சமையலறையில் நுழைந்து கொண்டு ஜெயாவிற்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள் .
அவள் சமையலறைக்குள் நுழைந்ததை கண்டும் காணாதவாறு அமர்ந்து கொண்டிருந்தான் சிவா .
அவனது எண்ணம் முழுக்க இன்று ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கும் என்று சைட் க்கு சென்றதிலேயே இருந்தது .
ஆனால் அதற்கு மாறாக எதுவுமே கிடைக்காமல் போக அவனுக்கு இன்னும் மூன்று மாதத்தில் நிச்சயமாக இந்த வீட்டை முடிக்க முடியுமா என்ற எண்ணம் வேறு வந்து விட்டது .
இத்தனை நாட்கள் முடியும் என்ற எண்ணம் இருந்தது .
ஆனால் இப்பொழுது இன்டீரியர் ஒர்க் எல்லாம் முடிப்பதற்கு தேவையான பொருட்கள் ஆர்டர் கொடுத்த இடத்திலிருந்து வருவதற்கு தாமதமாகும் என்ற பட்சத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் . மகேசன் நடவடிக்கைகளில் கூட அவனுக்கு என்று ஏதோ மாற்றம் இருப்பது போல் தோன்றியது .
இன்று அவனை அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு அனுப்பிய விதம் ஏதோ ஒன்றாக ஒளிந்து இருக்கிறது என்பதை மட்டும் அவனுக்கு அறிவுறுத்தியது .
காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் .
அவனுக்கும் சேர்த்து காபி கலக்கி கொண்டு வந்தவள் அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் .
அதை வாங்கிக் கொண்டவன் பருகி விட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருந்தவன் பிறகு அலுவலக வேலைகளை பார்ப்பதற்காக அறைக்குள் சென்று விட்டான் .
“மகேஷ் எத்தனை தடவை உனக்கு சொல்றது உன்னோட பிரண்டு சிவாக்கு ஒரு வழியா அவங்க அம்மா எப்படியோ ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க .
அது மாதிரி உனக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா அடுத்து எங்க வேலைய பார்ப்போம் இல்ல…. “என்றும் மகேஷின் அம்மா சரஸ்வதி பேசிக்கொண்டிருக்க அவனுக்கு தான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான் .
மகேஷின் அப்பா பிரம்மா வெளிநாட்டில் இருப்பதால் அவ்வப்போது அவனையும் தாயையும் பார்ப்பதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ தான் வந்து வந்து செல்வார் .
வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தனர் .
அவன் ஆசைப்பட்ட படியே இன்ஜினியரிங் படிக்க வைத்தாகி விட்டது .
தற்பொழுது தொழிலிலும் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டால் அடுத்த திருமணம் என்ற பேச்சை எடுத்தால் என்னவோ ஓடி விடுகிறான் என்பதுதான் பெற்றோருக்கு கவலையாகி போனது .
காதலுக்கு எதிரி என்றெல்லாம் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை தான் .
. எனினும் சாராவின் பதில் தானே அவனது காதலை முடிவு செய்யும் என்ற நோக்கத்திலேயே இத்தனை வருடங்கள் அவனும் காத்திருக்கிறான் .
ஆனால் அவளோ எதற்கும் புடி கொடுக்காமல் அவனைப் பார்த்துவிட்டு செல்வதே போதும் என்ற ரீதியில் உலவி கொண்டிருக்கிறாள் .
சரி இன்றாவது தனது தாயிடம் கூறி அவளது வீட்டில் சென்ற பெண் கேட்கலாம் என்ற ரீதியில் இருந்தான் .
அதற்கு முன்பு அவளிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்ற ரீதியிலேயே காபி ஷாப் க்கு அவளையும் வர சொல்லி இருந்தான் .
ஆனால் அவ்வளவு எப்பொழுதும் போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சற்று வருத்தமாகி போனது .
” அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அம்மா .
அந்த பொண்ணு கிட்ட என்னோட லவ்வ டைரக்டாகவும் இன்டைரக்ட் ஆவும் சொல்லிட்டேன் .
ஆனா அந்த பொண்ணு தான் எதுக்குமே சரிப்பட்டு வராமல் உங்க கூட லைஃப் லாங் பிரண்டா மட்டும் இருந்தா போதும்.னு சொல்லிக்கிட்டு இருக்கா….
அவளுக்கும் என்ன புடிக்கும் தான் .
ஆனா அவ அத ஒத்துக்க மாட்டேங்குற அதுக்கு மெயின் ரீசன் அவங்க அப்பா சித்தி தான் . சரி அவளை ஒரு வழியா கன்வின்ஸ் பண்ணிட்டு அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கலாம்னு பார்த்தா அவ என் மேல லவ்வே இல்லன்ற மாதிரி பேசுற அதனாலதான் இது சரிப்பட்டு வராது .
ஒரு நல்ல நாளா பாருங்க அவங்க வீட்டுக்கு போய் நம்ம பொண்ணு கேட்டுறலாம் …. ” என்று கூறியவன் சாராவின் புகைப்படத்தையும் கைபேசியில் இருந்து தனது தாயிடம் காட்டினான் .
சாராவை பார்த்தவுடனேயே சரஸ்வதிக்கு அவ்வளவு பிடித்து விட்டது .
தனது மகனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் நிச்சயமாக அவள் குணத்திலும் சிறந்தவளாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு அவளது புகைப்படத்தை பார்த்த உடனேயே அழகிலும் அழகிலும் சிறந்தவளாக தான் இருக்கின்றாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
பிரம்மாவும் வந்தவுடன் ஒரு நாள் நிச்சயமாக அவர்களது வீட்டிற்கு சென்ற பின் கேட்கலாம் என்று சரஸ்வதி மகேஷிற்கு வாக்கும் அளித்தார் .
“நமக்கு தேவையானது மொத்தம் மூணு பசங்க .
நீங்க ஒரு பையன மட்டும் கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவன வச்சு என்ன பண்றது இவன விட A நெகட்டிவ் உள்ள ஒரு பையனை தானே நான் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன் .
அந்த பையனை கடத்திட்டு வராம இவனை கடத்திட்டு வந்து இருக்கீங்க .
இவனும் வேணும் தான் நான் இல்லை னு சொல்லல !
ஆனா அவன் தான் மெயின் .
அவன நம்ம கடத்தி இருந்தா தான் நமக்கு உடனே காசு கிடைச்சிருக்கும் .
இவனை ஒரு மாசம் நம்ம காவல் காக்கணும் பாருங்க…
பார்ட்டிகிட்ட ஒரு மாசம் கழிச்சு தான் இவன ஒப்படைக்க முடியும் .
இப்போதைக்கு அனுப்ப வேண்டாம்னு அவங்க சொல்றாங்க .
போலீஸ்க்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சு சொன்னா நிச்சயமா நம்ம யாரும் நம்ம நெட்வொர்க் என்னன்றத கண்டுபிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க…..
நிச்சயம் போலீஸாலலாம் நம்ம நெட்வொர்க்க அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது ……
நிச்சயம் இப்ப மிஸ் ஆன பையனோட பேரண்ட்ஸ் ஏதாச்சும் ஒரு சீக்ரட்டான டிடெக்டிவ் வச்சு நம்மள கண்காணிக்கிறதுக்கு வேணா சன்சஸ் இருக்குது .
அப்பயும் கூட நம்ம ஏன் எதுக்காக கடத்தறோம் நம்ம தான் கடத்திருக்கோம் என்ற விஷயத்தை கண்டுபிடிக்க முடியாது …..
என்னமோ சொல்றீங்க .
நான் இப்ப இந்த பையன ஒரு குடோன் ல தான் கடத்தி வச்சிருக்கேன் சீக்கிரமா அந்த ஏ நெகட்டிவ் உள்ள பையன தூக்கிருங்க……”