இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பின்புறமாக நின்ற ஷர்வாணி நன்றாகவே கேட்டுவிட்டாள் .அவள் இருக்கிறாள் என்பதை பார்த்து மகேஷிற்கு தான் என்ன கூறுவது என்றே தெரியவில்லை .
நிச்சயமாக இருவரும் பேசியது ஒட்டுமொத்தமாக கேட்டப்படியே அவள் முறைத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவன் சிவாவை ஓரமாக தள்ளிவிட்டு அவளிடம் சென்று பேசலானான் .
சிவாவோஅவள் கேட்டால் எனக்கு என்ன கேட்கா விட்டால் எனக்கு என்ன என்று ரீதியில் பேண்ட் பாக்கெட் கையை விட்டவாறு ஸ்டைல் ஆகவே முறைத்து கொண்டு இருந்தான் .
” சிஸ்டர் நீங்க எப்ப வந்தீங்க இன்னைக்கு சைட்ல வேலை எல்லாம் கிடையாது . சும்மா நாங்க ரெண்டு பேரும் ப்ராஜெக்ட் விஷயமா பேசறதுக்காக தான் வந்தோம் .
நீங்க மதியானம் சாப்பாடு வேற எடுத்துட்டு வந்துட்டீங்களா சரி வாங்க சாப்பிடலாம் …..
என்ன அண்ணா நீங்க மட்டுமே பேசிகிட்டு இருக்கீங்க .
உங்களோட நண்பன் ஓரமா போய் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நின்னுட்டு இருக்காரு…
நீங்க பேசினா எல்லாத்தையும் தான் நான் கேட்டேன் . உங்களுக்கு ஏதோ ஆதாரம் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்களே அது என்னன்னு என்கிட்ட குடுங்க….
உன் கிட்ட எல்லாம் கொடுக்கணும் னு அவசியம் எனக்கு இல்ல நீ என்னத்துக்காக வந்த எங்களுக்கு சாப்பாடு கொண்டு தான் வந்த …
சாப்பாடு கொடுத்தாச்சுல்ல . கிளம்பு….” என்று கூறியவன் வேக வேகமாக அவள் கையில் வைத்திருந்த காரியரையும் வாங்கிவிட்டு அவளை அங்கிருந்து துரத்தினால் ஆனால் அவளும் அதற்கெல்லாம் அசறுவனா என்ற ரீதியிலேயே இருவரையும் கைகட்டி முறைத்துக் கொண்டிருந்தாள் .
மகேஷ் “டேய் அவங்களே நம்ம பிரச்சனையை தீர்க்கதற்காக தானே கேக்குறாங்க ஏன் டா நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க… அவங்க கிட்ட அந்த காப்பை எடுத்துக் கொடு…..முடியாது டா என்னால இவகிட்ட கொடுக்க முடியாது .
இவ என்ன அவ்வளவு பெரிய ஆளா …? நம்ம வேற யார் கிட்டயாச்சும் கொடுத்துக்கலாம் .மிஞ்சி மிஞ்சி போனா இத வச்சு என்ன பண்ண முடியும் அவளால …..சீக்கிரமா இந்த பில்டிங் வேலைய முடிச்சு நம்ம எம்எல்ஏ கிட்ட ஒப்படைச்சிடலாம் .
அதுக்கப்புறம் எது வந்தாலும் அவரு பார்த்துப்பாரு….” என்று கூறியவன் அவளையும் அங்கிருந்து துரத்தி விட்டான் அவளோ அவர்களுக்கே இவ்வளவு துணிவு இருக்க நாம் வேறு ஏதாவது வழியில் சென்று இதை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .
” இப்படி நீ பண்றது எல்லாம் உனக்கே நல்லா இருக்குதா…? எதுக்காக தான் இந்த மாதிரி கூத்தடிக்கிறேன்னு எனக்கு புரியல , உனக்கு ஏன் ஷர்வாணி ய கண்டாலே பிடிக்க மாட்டேங்குது .அவ எவ்வளவு பெரிய டிடெக்டிவ் அவ கிட்ட கொடுத்தா நிச்சயமா ஹெல்ப் ஃபுல்லா நமக்கு ஏதாச்சும் ஃபேவரா பண்ணுவா …
நாளைக்கு இந்த பில்டிங் வேலையை முடிச்சு எம்எல்ஏ கிட்ட ஒப்படைச்சாலும் ஏதாச்சும் பிரச்சனை னு வந்தா அது ல இருந்து நம்மளை காப்பாத்தறதுக்கான சான்சஸ் இருக்குது .ஆனா நீ எதையுமே புரிஞ்சுக்காம அவளாம் ஒரு ஆளான்ற மாதிரி பேசிக்கிட்டு இருக்க…..நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது தான் ,
அதே நேரத்துல அவளை இதுக்குள்ள கொண்டு வர வேண்டாம் னு எனக்கு தோணுது. நம்ம ஏதாச்சும் பிரச்சனை எல்லாம் நமக்குள்ளேயே முடிச்சுக்கலாம் . ஆனா அவ இது ல இன்வால்வ் ஆகினா கண்டிப்பா அது பெரிய பிரச்சனையாகும் தோணுது .
அது மட்டும் இல்லாம எதுக்கு நம்ம பிரச்சனை எல்லாம் இன்னொருத்தி கிட்ட கொண்டுட்டு போகணும் .அவ நான் தாலி கட்டுன வைஃப் ..இருந்தாலும் அது மூணு மாசமோ ஆறு மாசமோ மட்டும் தான் . அப்படி இருக்கிறப்போ அவ கிட்ட போயி நம்ம உதவி கேட்கிறது எல்லாம் நல்லா இருக்காது….
என்னன்னமோ சொல்றடா .எனக்கு தான் ஒன்னும் புரியல நான் சாப்பிடுறேன் . நீ ஏதோ பேசிகிட்டு திரி …. ” என்று கூறியவன் அவள் எடுத்து வந்திருந்த அனைத்து அசைவ உணவுகளையும் ஒரு கட்டு கட்டினால் அதை பார்த்துக் கொண்டிருந்த சிவாவுக்கும் பசிக்கும் அவனும் அவன் இடத்தில் இருந்து அடித்து போயிட்டு அவனும் சாப்பிட்டுக் கொண்டான் .
இருவரும் இரு நாட்களில் சென்னை செல்ல போகும் ஒரு ப்ராஜெக்ட் டிசைன் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் .
” சரி நாலு மணி ஆயிடுச்சு இப்பயாச்சும் சீக்கிரமா வீட்டுக்கு போடா அம்மாவும் உனக்காக காத்துகிட்டு இருப்பாங்க….
என்னடா புதுசா என்ன வீட்டுக்கு எல்லாம் போக சொல்ற .என்ன கழட்டி விட்டுட்டு நீ எங்கேயோ போக போறேன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது . எங்க போற எந்த பொண்ண பார்க்க போற…?
மச்சான் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல .முன்னாடி தான் நீ சிங்கிளா இருந்த நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சுத்திட்டு இருந்தோம் . இப்ப உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு . என்னதான் மூணு மாசமோ ஆறு மாசமோ நீ உன் பொண்டாட்டி கூட இருந்தாலும் அந்த மூனு மாசமோ ஆறு மாசமோ கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் அம்மாக்கு நேரா நடிச்சது தான் ஆகணும் . அதனால லேட் ஆகாம வீட்டுக்கு சீக்கிரமா போய் சேரு….”என்று கூறுபவனை நம்ப மாட்டாமல் ஏதோ பண்ணட்டும் என்ற ரீதியில் அவனும் வீட்டை நோக்கி பயணித்தான் .சைட்டை தாண்டி உள்ள ஒரு காபி ஷாப்பில் மகேஷ் அமர்ந்திருந்தான் யாரையோ எதிர்பார்த்தபடி ……
அவனது காத்திருப்பிற்கு சொந்தகாரியானவளோ வெகு நேரம் காக்க வைக்காமல் அங்கு வந்து சேர்ந்தாள் .நீல நிற பாவாடை தாவணியில் அளவான ஒப்பனைகளுடன் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் . கண்களில் லேசான மை நெற்றியில் சந்தனம் அதற்கு நடுவில் சின்ன குங்கும பொட்டு அவளை இன்னும் அழகாக காட்டியது .அவளது பால் நிற மேனிக்கு நீல நிற தாவணி அவ்வளவு எடுப்பாக இருந்தது .
அவளை பார்த்த உடனேயே புன்னகை பூத்தவன் “என்ன தான் சிட்டியிலேயே பிறந்து வளர்ந்தாலும் கிராமத்து பொண்ணு மாதிரி எப்பயும் நீ போட்டு இருக்க இந்த பாவாட தாவணி தான் உன்னை இன்னுமும் அழகா காட்டுது…..
ஹலோ ஹலோ உங்களோட காம்ப்லீமென்ட் எல்லாம் இங்க யாருக்கும் தேவை கிடையாது . இப்ப எதுக்காக என்னை வர சொன்னிங்கன்ற விஷயத்தை சீக்கிரம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் .
வந்தவுடனே எல்லாத்தையும் சொல்லிட்டா . நான் அப்புறம் எப்படி தான் பேசி கண்டெண்ட டெவலப் பண்றது…” என்று கூறுபவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள் அவள் .
” மிஸ்டர் மகேஷ் நீங்க என்ன தான் கன்டென்ட் டெவலப் பண்ணி பேசினாலும் ஒன்னும் பண்ண முடியாது அதனால என்ன விஷயமோ அதை சீக்கிரமா சொல்லுங்க எனக்கு நிறைய வேலை இருக்குது….”என்று அவள் கயல் கண்கள் இரண்டும் உள்ள அங்குமிங்கும் உருள பேசுபவளை ரசித்துக்கொண்டிருந்தவனை சொடக்கிட்டு நிகழ்வுலகத்திற்கு அழைத்து வந்தாள் .
“நான் என்ன புதுசா சொல்ல போறேன் சொன்னதையே தான் திரும்ப திரும்ப சொல்ல போறேன் நானும் காலேஜ் முடிச்சதுல இருந்து உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன் .
நீ எனக்கு ஓகே சொல்ற மாதிரி தெரியல கேட்டா எங்க அப்பா அம்மா பார்க்கிற பையன தான் கல்யாணம் பண்ணிப்பன் னு சொல்ற சரி உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்குறேன்னு சொன்னாலும் எங்க அப்பா ஒத்துக்க மாட்டாங்க அப்படின்னு சொல்ற .ஆனா நான் கூப்பிடுறப்ப எல்லாம் கரெக்டா இந்த காபி ஷாப்க்கு வர . எனக்கு ஒன்னும் புரியலையே ! உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியல நீயே சொல்லுறேன் கொஞ்சம் …..”அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் பெருமூச்சு விட்டவாறு பேச தொடங்கினாள் .
“இங்க பாருங்க நீங்க நான் படிச்ச காலேஜ் ல எனக்கு சீனியரா இருந்தீங்க படிக்கிற காலத்துலயும் சரி படிச்சு முடிச்சப்பையும் சரி என்கிட்ட ஒரு நல்ல பிரண்டா இருக்கீங்க இருப்பீங்கன்னு எனக்கு தோணுச்சு . அதனால தான் இப்ப வரைக்கும் உங்க கிட்ட நான் பேசிகிட்டு இருக்கேன் . இன்னும் சொல்லப்போனால் என்னோட காலேஜ் லைஃப் முடிஞ்சதுக்கு அப்புறமும் வேற யார்கிட்டயும் நான் லிங்க் வச்சுக்காம உங்க கிட்ட மட்டும் தான் பேசிகிட்டு இருக்கேன் ,அதுக்கு காரணம் உங்க மேல நான் வச்சிருக்க ஒரு மரியாதை கூட ….என் அப்பா அம்மாவை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் . எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில நான் காலேஜ் வந்து படிச்சது உங்களுக்கு நல்லாவே தெரியும் . இது எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட நீங்க இப்படி பேசிகிட்டு இருக்கிறது கேட்கிறதுகே சிரிப்பா இருக்குது …..அப்புறம் சொன்னீங்க இல்ல நான் கூப்பிடுறப்ப எல்லாம் இங்க வர அப்படின்னு…வீட்ல இருக்க பிடிக்காம தான் ஏதேதோ பொய் சொல்லிட்டு நான் இங்க வந்துடறேன் .வீட்ல இருக்குறப்பையும் எனக்கு எப்படிப்பட்ட டார்ச்சர் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் .
அம்மா இல்லாம சித்தி ஏதோ என்ன நல்லா பாத்துக்கிறதா அப்பா கிட்ட காட்டிகிட்டாலும் எனக்கு மட்டும் தான் தெரியும் .அதை யார் கிட்டயும் சொல்லி நான் எந்த சிம்பதியும் கிரியேட் பண்ணிக்க விரும்பல .இன்பாக்ட் உங்க கிட்ட பேசினா கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும் என்று தான் வீட்டில எல்லா வேலையும் முடிச்சதுக்கு அப்புறமும் கூட கோயிலுக்கு போறேன் அப்படின்னு சொல்லிட்டு வீக்லி ஒன்ஸ் உங்கள பாக்க வந்துடுறேன் .
அதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் என்ன பண்றது…?எனக்கு எல்லாமே நல்லாவே தெரியும்உன்னோட சிச்சுவேஷன் நீ எப்படிப்பட்ட சுச்சுவேஷன்ல இருந்து படிச்சு முடிச்ச …
இப்ப ஏன் இப்படி அந்த வீட்ல இருக்கன்றது எல்லாமே தெரியும் . அப்பா வெளியூர்ல இருந்தாலும் உன் சித்தி தான் உன்னை பார்த்துக்கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் .
அது போக உன் தம்பி தங்கச்சி எல்லாம் உன்னை நல்லா பாத்துக்கிட்டாலும் உன் சித்தி எப்படி பேசுவாங்கன்றது எனக்கு தெரியும். அது ல இருந்து எல்லாம் உன்னை விடுவிக்கிறதுக்காக தானே நான் இப்படி உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் .என்கிட்ட பேசினா மனசு லேசா இருக்குன்ற மாதிரி ஃபீல் பண்றல்ல… அப்ப வாழ்க்கை முழுக்க என் கூடவே இருந்தா உன்னோட லைஃபும் மனசும் எப்பயுமே மகிழ்ச்சியா இருக்கும் தானே ….?
ரொம்ப நல்லா பேசுறீங்க . இருந்தாலும் இதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது .லைப் லாங் நம்ப பிரண்ட்ஸா மட்டும் இருந்துக்கலாம் …. ” என்று கூறியவள் அவள் குடித்த காபிக்காண பணத்தையும் வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் .
” நீ என்ன வேணா சொல்லு சாரா உன் மனசுல நான் தான் இருக்கேன் னு எனக்கு நல்லாவே தெரியும் . கூடிய சீக்கிரம் அதை உன் வாயாலே சொல்ல வைக்கிறேன் …. “என்று கூறிய மகேஷ் போகும் அவளையே பார்த்து சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினான் .