Home ANTIHEROராட்சசியின்  ரட்சகன் -9

ராட்சசியின்  ரட்சகன் -9

by romaakeerthi
5 views

   “இப்போ உன்ன நான் சாப்பாடு கொண்டுட்டு வர சொன்னனா ….

      எதுக்காக எனக்கு சாப்பாடு கொண்டுட்டு வந்த  .

     நானே இன்னும் அரை மணி நேரத்துலயோ  ஒரு மணி நேரத்திலேயே சாப்பிட வரமாட்டானா…?

எனக்கும் வீட்டுக்குள்ள இருக்க போர் அடிக்குது.

      அதனால தான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போலாம் னு  தான் வந்தேன்  .

       என் வேலையிலயும் கொஞ்ச நாள் லீவ் போட்டு இருக்கேன்  .

      உடனடியா வேலைலயும் ஈடுபட முடியாது .

       அதனால வீட்டுக்குள்ள என்னால இருக்கவும் முடியல .

       அதனால தான் அம்மா சமைக்கிறேன் என்று சொன்னாங்க நான் சமைக்கிறேன் நானே சாப்பாடு கொண்டுட்டு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் …..

    சரி அம்மா சாப்டாங்களா அவங்க டேப்லட் எல்லாம் போடணும் கரெக்டான டைமுக்கு சாப்பிட்டா தான் ஹெல்த் ஆரோக்கியமா இருக்கும் னு  டாக்டர் சொல்லி இருக்காங்க….

      அம்மாவை சாப்பிட வச்சுட்டு அவங்களுக்கு டேப்லட் எல்லாம் கொடுத்துவிட்டு தான் நான் இங்கே வந்தேன்  .

     சரி எனக்கு சாப்பாடு எடுத்து வை நான் போய் மகேஷையும் கூட்டிட்டு வரேன் அவனோட சேர்ந்து சாப்பிடலாம் ……” என்று கூறியவன் சைட்டில் மூன்றாவது மாடியில் நின்று வேலைகளை சரி பார்த்துக் கொண்டிருக்கும் அதிசயம் சாப்பிடுவதற்காக கீழே அழைத்தான்.

     அவளோ இருவருக்கும் இலையை போட்டு பரிமாறி வைத்திருந்தாள் .

    மகேஷ் “ஏன் சிஸ்டர் உங்களுக்கு சிரமம் நீங்க ஒரு இடம் சொல்லி இருந்தால் நாங்க ரெண்டு பேரும் வந்து வீட்லையே சாப்பிட்டு இருப்போமே அதை விட்டுட்டு நீ ஏன் இந்த வெயில்ல சாப்பாடு எடுத்துட்டு அலைஞ்சிட்டு இருக்கீங்க……

இல்லை இல்லை இதுல என்னன்னா எனக்கு சிரமம் இருக்குது  .

     சாப்பாடு கொண்டுட்டு வரதில்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .

       சொல்ல போனா அப்படியே வெளியில வந்த மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டாவும் இருக்கும்  .

       எவ்வளவு நேரம் தான் நானும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது .

     ஒரு நாள் தான் இருந்தேன் .அதுவே என்னால இருக்க முடியல !     

      எப்பயுமே வேலை னு  வெளியிலேயே சுத்திட்டேன்  .

      இப்ப திடீர் னு வீட்டுக்குள்ள இருக்கணும் னு நினைச்சாலே அது முடியாத காரியமா இருக்குது …..” என்று இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு தான் மனம் ஒரு நிலையில் இல்லை ஏதோ ஒரு விடயத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தது என்பதை ஷர்வாணியும் கண்டுகொண்டாள் . 

ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .

    இருவருக்குமே வெஜ் தான் செய்து எடுத்து வைத்திருந்தாள் .  சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என அனைத்துமே மணத்தை வைத்து சொல்லிவிடலாம் ருசியாக இருக்கும் என்பதை ….

      சாப்பிட்டபடியே மகேஷ் அப்போது அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் .

“சிஸ்டர் உங்களுக்கு நான்வெஜ் சமைக்க தெரியுமா…?

    ஹான்  தெரியும் பிரதர்  .  ஆனா இன்னைக்கு சனிக்கிழமை னு  தான் வெஜிடேரியனை சமைச்சு எடுத்துட்டு வந்தேன் .

     நாளைக்கு வீட்டுக்கு வாங்க நான்வெஜ் வெச்சிடறேன்….

    என்ன மச்சான் எப்பயும் சாப்பிடறப்போ லொட லொட னு பேசிகிட்டு சாப்பிடுவ  .

     இன்னைக்கு என்னன்னா அமைதியா இருக்க . உன் பொண்டாட்டி சமைச்ச சாப்பாடு ரசிச்சு ருசிச்சு அமைதியா சாப்பிடுறியோ…….”என்று கேட்ட மகேஷுக்கு பதிலாக  என்னமோ அவனிடமிருந்து முறைப்பு மட்டும் தான் மிஞ்சியது .  எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட ஆரம்பித்து விட்டான் .

“நல்லா இருக்கு சாப்பாடு ரொம்ப சூப்பரா சமைச்சு வச்சிருக்கே , இப்படியே தினமும் நீ சமைச்சு போட்டா நல்லா இருக்கும் ….

     அதுக்கு என்ன  தினமும் சமைச்சு கொடுத்தா போகுது….

உங்களுக்கு இல்லாததா ……” என்று கூறியவள் அதன் பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் மகேஷிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .

“ஏன்டா இன்னைக்கு எதோ நீ யோசனைல சாப்பிட்டுகிட்டு இருந்த மாதிரி எனக்கு தோணுது  . எப்பயும் சாப்பிடறப்ப தான் நிறைய விஷயத்தை நம்ம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம் இன்னைக்கு நீ ஏதோ ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சா மாதிரியே எனக்கு தோணுச்சு .  என்ன ஏதாச்சும் ப்ராப்ளமா….?

    திரும்ப  அவன் ஏதாச்சும் கால் பண்ணி மிரட்டுனானா இல்ல வேற ஏதாச்சும் ஒரு விஷயத்துல நம்ம விஷயத்துல அவன் இன்வால்வ்  ஆகிறானா …..

இல்லடா அதெல்லாம் எதுவும் கால் பண்ணல .

      அவன் இப்போ நம்ம கிட்ட எந்த பிரச்சனையும் பண்றது இல்ல .

       சொல்ல போனா இன்னும் ரெண்டு நாள் ல நம்ம புது ப்ராஜெக்ட் பத்தி பேச போறோம் இல்ல அத பத்தி கூட அவன் இப்ப என் கிட்ட எதுவும் கால் பண்ணி பேச கூட இல்ல  .

       எனக்கு அதை பத்தி எல்லாம் எந்த யோசனையும் இல்ல .  எனக்கு இப்ப இருக்க யோசனை எல்லாம் இது தான் …..”என்று கூறியவன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு வெள்ளி காப்பு எடுத்து மகேஷிடம் காட்டினான்.

“ஐ வெள்ளி காப்பு ஏது இது யாருக்கு வாங்குன எனக்காக வாங்கினியா…?

     என் மேல அவ்ளோ பாசமா டா உனக்கு !

     சரி வாங்கினது தான் வாங்கிட்டேன் என்கிட்ட எப்படி கொடுக்கறது னு யோசிச்சுக்கிட்டு இருக்கியா…?    

     உன் கல்யாணத்துக்கு எனக்கு எதுவுமே வாங்கி கொடுக்கலையே எப்படி இத அவன் கிட்ட கொடுக்கிறது னு நெனச்சியா….

     டேய் ஒரு நிமிஷம் நிப்பாட்டு  .

     நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகாத ….   

ஆமா என் கல்யாணத்துக்கு எதுக்காக நான் உனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .

       நீ தான் எனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும் .

     ஆமா நீ பண்ணது பெரிய கல்யாணம் அதுக்கு கிப்ட் ஒன்னு தான் குறைச்சல் பாரு! சரி இது எத்தனை கிராம் சொல்லுடா,

     நீயே  என் கையில போட்டு விடுறியா இல்ல நான் போட்டுக்கவா….” என்றவனின் கைகளில் இருந்த காப்பை பிடுங்கி தனக்குள்ளேயே வைத்துக் கொண்டான் .

” இது ஒன்னும் நான் வாங்குனது கிடையாது . இது மூன்றாவது மாடியில் கீழே கிடந்தது . ஒருவேளை வேலை பாக்குறவங்க யாராச்சும் போட்டு இருப்பாங்களா னு நான் எல்லார் கிட்டயும் கேட்டேன் .

      ஆனா அவங்க யாருமே அவங்களோடது இல்லை னு சொல்லிட்டு போயிட்டாங்க . இங்கே நம்ம வேலை பாக்குறவங்கள தவிர வேற யாரும் வராது வேலை கிடையாது அப்படி இருக்கிறப்போ இந்த காப்பு மட்டும் எப்படி வந்திருக்கும்  .

     அது மட்டும் இல்லாம இது ல லேசா ஏதோ ரத்த கறை மாதிரி வேற இருக்குது  .

     அதான் எனக்கு அதப்பத்தின யோசனையாவே இருக்குது .

      ஒருவேளை பின்னாடி இதனால ஏதாச்சும் பிரச்சனை வந்துருமோ அப்படி என்று …….

ஏய் என்னடா என்னன்னமோ சொல்ற!

      நீ சொல்றதெல்லாம் பாக்குறப்ப எனக்கு பயமா இருக்குது .

      நம்ம கட்டிக்கிட்டு இருக்க வீடு வேற எம்எல்ஏ ஓட வீடு .  இது ல ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்துருச்சுன்னா அந்த மனுஷன் அவங்க ஆளுங்கள வச்சு நம்மள உயிரோட புதைச்சிருவான் .

    வாட்ச்மேன் நைட்டு பூரா இருக்காங்க தானா அவங்க கிட்ட விசாரிச்சியா இத பத்தி ……

     கேட்டேன் டா அவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இங்க யாரும் வரல தம்பி .  இந்த காப்பு யாரோடதுன்னு தெரியாது ,  நீங்களும் உங்க ஆட்களும் தான் வந்து வேலை பார்த்துட்டு போறீங்கன்ற மாதிரி தான் பேசுறாரு ….

டேய் பேசாம நம்ம இந்த காப்பை ஷர்வாணி கிட்ட கொடுத்து அதை பத்தி விசாரிக்க சொல்லுவோமா….

    இல்லடா தேவை இல்லாம அவ கிட்ட எல்லாம் கொடுத்து இதை  பெருசாக வேணாம் னு  எனக்கு தோணுது .

       அது மட்டும் இல்லாம அல்மோஸ்ட் இந்த வீட இப்ப நம்ம கட்டி முடிக்க போறோம் .

இன்னும் கொஞ்சம் கொஞ்சம் வேலைய சீக்கிரமா முடிச்சு குடுத்துருவோம் .

      அதுக்கப்புறம் எந்த பிரச்சனை வந்தாலும் அவரே சமாளிச்சுப்பாரு …..

    நீ என்னடா பேசுற . இப்போ இந்த இடம் பூரா நம்ம கண்ட்ரோல்ல இருக்குது .

       நாளைக்கு வேலைய முடிச்சு அவரு கிட்ட வீட்ட கொடுத்தா கூட ஏதாச்சும் பிரச்சனை வந்தா கண்டிப்பா நம்ம கிட்ட தான் கேட்பாங்க.

இந்த விஷயத்தை பத்தி நம்ம நமக்குள்ளேயே டிஸ்கஸ் பண்றத விட்டுட்டு ஷர்வானி கிட்ட இதை எடுத்துட்டு போறது  நல்லது னு எனக்கு தோணுது….

     நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் . இந்த விஷயத்தை இதோட மறந்துரு…..” என்று கூறியவன் அந்த காப்பையும் வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டான் .

      ஆனால் மகேஷ் க்கு தான் அவன் செய்வது அனைத்தும் சரியான படவில்லை  .

நிச்சயமாக இந்த பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்குள்  ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது .

   “மேடம்   கடைசியா அந்தப் பையன் மிஸ் ஆன லொகேஷன் நீங்க இப்ப போயிட்டு வந்த பில்டிங்கில் தான் காட்டுது…..

    அங்க தான் அவனோட போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு….

நீங்க அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணுங்க .  நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும்  .

நான் இப்பதான் அந்த பில்டிங்ல இருந்து வெளியில வந்தேன் .  நாளைக்கு போய் திரும்ப செக் பண்ணிக்கிறேன் .

     இப்போ நீங்க எனக்கு இன்பர்மேஷன் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!

      இதுக்கு மேல நானே இந்த கேஸ் அ  ஹேண்டில் பண்ணிக்கிறேன்  .

     அடிக்கடி எனக்கு போன் பண்ண வேணாம் நம்மள அந்த கேங் டிரேஸ் பண்றதுக்கான வாய்ப்பு இருக்குது .

    சோ உடனடியாக இந்த சிம் கார்டு தூக்கி  போட்டுடுங்க ……

    ஓகே  மேம் உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்றதுக்காக தான் நான் கால் பண்ணன் .

     உடனடியா இந்த நம்பர் அ அழிச்சுடறேன்….”என்ற அந்த பக்கத்தில் இருந்து கூறியவன் உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு அந்த எண்ணையும் அழித்துவிட்டான் .

அப்ப நிச்சயமா நம்ம அந்த பில்டிங்கை தரவா செக் பண்ணா நமக்கு தேவையான ஒரு விஷயம் கண்டிப்பா கிடைக்கும் .

     செக் பண்றேன் கூடிய சீக்கிரத்துல அவனை யாரு கடத்தினா  அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கிறேன் …..என்று  நினைத்த ஷர்வாணி  வீட்டை நோக்கி புறப்பட்டாள் .

– தொடரும்🖤🖤🖤🖤

You may also like

Leave a Comment

About Me

Featured