Home FAMILY NOVEL6) வலி 💔

6) வலி 💔

by sreejanovels
12 views

அத்தியாயம் 6

அதிகாலை வேளை, முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம். மணி ஐந்தாகிவிட்டது. முகூர்த்த உடை அங்கு வந்து சேர, அதை அணியாமல் அமைதியாக இருக்கும் தன் மகனைப் பார்த்து அன்னலட்சுமி பதறினார்.

“டேய் என்னடா, ஆறு – ஏழரை முகூர்த்தம். நீ இன்னும் ரெடியாகாம இருக்க? சீக்கிரம் டிரஸ் போட்டு ரெடி ஆகு.”

அன்னலட்சுமி மகனை அவசரப்படுத்த, அவனோ கல்போல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு தன் அன்னை மற்றும் தங்கையை முறைத்துப் பார்த்தான்.

“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. இந்தக் கல்யாணத்தை சீக்கிரம் நிறுத்துங்க. ஒரு தடவை நான் பட்டது போதும்னு நினைக்கிறேன். தயவுசெய்து கல்யாணத்தை நிறுத்துங்க.”

அவன் சொன்னதைக் கேட்டு இருவரும் குழம்பிப் போக, அவர்களைப் பார்த்து மீண்டும் ஆதித்யா பேசினான்.

“இதுக்குத்தான் நீங்க கல்யாணப் பொண்ணு யாருன்னு தெரியாம மறைச்சீங்க போல இருக்கு. நான் அவளைப் பார்த்துட்டேன். ஒரு தடவை அவள் என்னால் பட்டது போதும்னு நினைக்கிறேன். ஏன் நான் மறுபடியும் அவள் வாழ்க்கையில் வந்து கஷ்டத்தைக் கொடுக்கணும்? நான் அவளை மறந்துட்டேன். கிட்டத்தட்ட அவளை என்கிட்ட இருந்து நீக்கிட்டு இப்பதான் அவ சந்தோஷமா இருக்கணும். நான் இனி எனக்கு வரப்போற பொண்ணுக்குப் புருஷனாகவும், அவள் குழந்தைக்குத் தகப்பனாகவும் இருக்க ஆசைப்பட்டேன். ஆனா பாவம், இவளையே நான் கல்யாணம் பண்ணிக்கலாமா? அது சரி, இவளுக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுல?”

அவள் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளை அஸ்வினி சொல்லி முடிக்க, அவனுக்கே கஷ்டமாக இருந்தது. கடவுள் நல்லவர்களைத்தான் அதிகமாகச் சோதிப்பார் போலும். இருந்தாலும் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தான்.

“அண்ணா ப்ளீஸ், முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு. அவங்க உங்களுக்காகக் காத்திருப்பாங்க. நீ வாழப் போறது அந்த ரெண்டு சின்ன உயிர்களுக்காகத்தான். தயவுசெஞ்சு ரெடி ஆகிட்டு வா அண்ணா. ‘அப்பா அப்பா’ன்னு உன் கால் சுத்திட்டு இருந்த அந்த ஆத்விக்கைப் பாரு. அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு.”

அஸ்வினி சொன்னவுடன் கண்களை மூடி யோசித்தான். ‘அப்பா’ என்று தன்னைச் சுற்றி வரும் ஆத்விக்தான் ஞாபகம் வந்தான். வேறு வழியில்லாமல் அவனுக்காக என்று போலிச் சாக்கு சொன்னாலும், மனதிற்குள் மீண்டும் அவளின் வாழ்வில் தான்தான் என்பதை நினைக்க அவனுக்குள் ஒரு மெல்லிய மகிழ்ச்சி இருந்தது.

மணமேடையில் உணர்வற்ற சிலையாக ஆதித்யா அமர்ந்திருக்க, “பெண்ணை அழைத்து வாருங்கள்” என்று குரல் கேட்டது. ஐந்து நாட்கள் பெயரோ முகமோ அறியாமல் பேசியவன் தன் வருங்காலக் கணவன், அவன் எப்படி இருப்பானோ, தன் குழந்தைக்கு எப்படிப்பட்ட தகப்பனாக இருப்பானோ என்று ஆவலோடு மணமேடைக்கு வந்த அகல்யாவுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

யாரால் தன் வாழ்க்கை சுக்குநூறாக்கப்பட்டதோ, யாரால் பலபேர் முன்னால் ‘வேசி’ என்று அழைக்கப்படக் காரணமானானோ, அவனே தனக்குக் கணவனாக வருவதா என்று நிலைகுலைந்து போனாள்.

அதே சமயம் அங்கே ஆதித்யாவைப் பார்த்துக் கொண்டே இருக்கும் தன் மகனைப் பார்த்தாள். மறுபக்கம் தன்னை அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சு உயிரைப் பார்த்தாள். கண்களை இறுக்க மூடித் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு மணமேடையில் அமர்ந்தாள். மணப்பெண்ணைப் பார்த்து மற்றவர்களுக்கு அதிர்ச்சி இல்லை என்றாலும், அங்கே ஒருத்திக்கு மட்டும் தலையில் பாராங்கல் விழுந்தது போல் இருந்தது.

“ஆத்தாடி! என் முன்னாள் புருஷனோட இரண்டாவது பொண்டாட்டி அவரோட முன்னாள் காதலியா? இவள் எங்கேயோ பணக்காரனைக் கட்டிக்கிட்டு நல்லா இருக்கிறதா கேள்விப்பட்டேன். ஆனா இது என்ன மறுபடியும் இங்க வந்து நிக்கிறா? ஒண்ணும் புரியலையே!” என்று லாவண்யா குழம்பி நின்றாள்.

“மை டியர் உடன்பிறப்பே, மண்டையைப் போட்டு குழப்பிக்க வேண்டாம். அவளுக்குக் கல்யாணம் ஆனது உண்மை, ஒரு குழந்தை பிறந்ததும் உண்மை. ஆனா காலத்தின் சோகம், அவ புருஷன் ராணுவப் போரில் இறந்து போயிட்டாரு. அதே சமயம் நீயும் ஓடுகாலியா ஓடிப் போயிட்ட. அதான் என் மச்சானுக்கும் என்னோட அன்பான தங்கச்சிக்கும் மறுபடியும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தர ஏற்பாடுதான் இந்த மறுமணம். நீயே நினைச்சாலும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது. அப்போ பிரிஞ்சு போய் மறுபடியும் சேர்ந்து இருக்காங்க. நீயே நினைச்சுப் பாரு என்ன ஆகும்னு. இனி உனக்கு இங்க வேலை இல்லை, கிளம்பு கிளம்பு!” என்று கணேஷ் அவளை வெறுப்பேற்றினான்.

திருமணச் சடங்குகள் இனிதே நடைபெற்றன. மாங்கல்ய தாரணம் ஆரம்பமானது. அன்னலட்சுமி, அஸ்வினி, கணேஷ் மூவரும் மணமக்களை ஆசீர்வதிக்க, உற்றார் உறவினர்கள் சூழ மங்கள ஓசை ஒலிக்க, லாவண்யாவின் வயிறு அக்னி குண்டம்போல எரிய, ரோகித்தின் பொறாமைச் சொற்கள் பன்னீர் புஷ்பங்களாகப் பொழிய, ஆதித்யா அகல்யாவைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டார்.

தாலி கட்டி முடித்தவுடன் ஆத்விக் ஓடி வந்து இருவரையும் ஒருசேரக் கட்டிக்கொண்டான். அன்னலட்சுமி கையில் இருந்த குழந்தை கைதட்டிச் சிரித்தது. பிறகு அக்னி வலம் வந்து புகைப்படங்கள் எடுக்கும்போது, குழந்தைகளோடு நால்வரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டனர். இவர்களைப் பார்த்தால் இரண்டாம் திருமணம் செய்து கொள்பவர்கள் போலத் தெரியவில்லை, பல நாள் காதலித்துத் திருமணம் செய்வது போல் இருப்பதாக மக்கள் சலசலத்தனர்.

மணமக்களுக்குத் தனிமை தர அனைவரும் சென்றுவிட்டனர். எமகண்டம் முடிய நேரமிருந்ததால் அவர்கள் இருவரும் மட்டும் அறையில் விடப்பட்டனர். குழந்தைகள் இருவரும் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆதித்யா தன் சந்தேகத்தை முதலில் அவளிடம் கேட்டான்.

“எந்த தைரியத்துல நீ மறுபடியும் என்னை நம்பி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தாய் என்று எனக்குத் தெரியலை. ஐ அம் சாரி. நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் எதுவுமே தெரியாதபடி கணேஷ் பக்கா பிளான் பண்ணி ஏற்பாடு பண்ணிருக்கான். ஆனா மணமேடை வரை வந்த நீ, என்னைப் பார்த்தவுடன் கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனா ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

அகல்யா சிரித்துக்கொண்டே குழந்தைகளைக் காட்டினாள்.

“அவங்களுக்காக மட்டும்தான் இந்தக் கல்யாணம். நீ என்னை மணந்துக்கிட்டாலும் சரி, கொஞ்ச நாள் கழிச்சு என் மேல ஈர்ப்பு வந்து என்னை நீ ஏத்துக்கிட்டாலும் சரி, மனைவியாக என் கடமையைச் செய்வேன். ஆனா என்னோட மனசுல டேவிட் மட்டும்தான் இருக்காரு. நீ என்னைத் தொட்டாலும் அவர் தொட்ட மாதிரிதான் இருக்கும். உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் வேசி கிடையாது பத்தினி. டேவிட்க்கு மட்டும் சொந்தமான பத்தினி.”

அழுத்தமாகச் சொன்ன அவளைப் பார்த்து ஆதித்யா வலிக்கப் பார்த்தான். அவள் அதைக் கண்டுகொள்ளாமல் குழந்தைகளுக்கு அருகில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள்.

‘உன்னால் என்னை மன்னிக்க முடியாது. ஆனால் என்றைக்கும் உன்னைத் தவறான நோக்கத்தில் அணுக மாட்டேன். என் பக்கம் இருக்கும் நியாயத்தை உனக்குச் சொன்னாலும் புரியாது. என்னை மன்னித்துவிடு அகல்’ என்று அவள் பாதங்களை அழுத்தப் பிடித்துக்கொண்டு கண்களை மூடினான் ஆதித்யா.


“ரொம்ப நாள் கழிச்சு உங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கிறேன் கணேஷ். எங்க அண்ணன் வாழ்க்கை இனி நல்லா இருக்கணும். அந்த லாவண்யாவுக்கு நல்ல தண்டனையைக் கடவுள் கொடுத்திருக்காரு. கண்ணு முன்னாடி நல்ல வாழ்க்கை போச்சுன்னு அவ ஃபீல் பண்ற நாள் நெருங்கிட்டு. அன்னைக்கு எங்க அண்ணன் அனன்யாவைத் தூக்கிட்டு அழுததைச் சொல்லவே மனசு வலிக்குது. என் தப்பு இருக்குது, இல்லைன்னு சொல்லலை. ஆனா அவளோட காதல் உண்மைன்னு நம்பினேன். உண்மை தெரிஞ்ச பிறகு என்னால் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியலை. கடவுள் எனக்குத் தக்க தண்டனை கொடுத்துட்டாரு. அப்புறம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு இன்னைக்கு ராத்திரி” என்று அஸ்வினி சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் பேசிய விதம் கணேஷுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எப்போதுமே நெருக்கமாகப் பேசும் மனைவி, இன்று ஏதோ மூன்றாம் நபரிடம் பேசுவது போல் பேசுகிறாளே என யோசித்தான்.


“என்ன மை டியர், உன்னோட முன்னாள் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதுவும் அவனோட முன்னாள் காதலியோட! கேட்கவே இனிக்குது. நீதான் இப்படி என்றால் உன் குடும்பமே கோளாறுதான் போல” என்று ரோகித் நக்கல் அடித்தான்.

தன் குடும்பத்தை லாவண்யாவால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. “ஏய், என்ன ஓவரா பேசிட்டு இருக்க? நானே கடுப்புல இருக்கேன். என்னை வெறுப்பேத்தாத ரோகித். கொஞ்ச நாள் நான் ஹாஸ்பிடல் போகப்போறேன். அது ஏன் எதுக்குன்னு தெரியுமா?”

“ஏன், ஏதாவது புதுசா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி உன்னை இளமையா காட்டிக்கப் போறியா?” என்று அவன் கிண்டலாகக் கேட்டான்.

லாவண்யா கண்ணீரோடு ஒரு கோப்பை அவனிடம் கொடுத்தாள். அதைப் பிரித்துப் பார்த்த ரோகித் அதிர்ந்து போனான். “ஓ மை காட்! வாட் இஸ் திஸ்?”

லாவண்யா அவனை ஓடிச் சென்று கட்டிக்கொண்டு அழுதாள். “ஆமாம், நீ படிச்சது உண்மை. எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் (Uterus Cancer) வந்துடுச்சு. கடைசி நிலை (Last stage).”

ரோகித் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

இங்கு முதலிரவு அறையில் ஆதித்யாவும் அகல்யாவும் கட்டிலில் ஒருவரையொருவர் அணைத்தபடி கிடக்க (கட்டிப்புரண்டு கொண்டிருக்க), மற்றொரு அறையில் அஸ்வினியின் காலைப் பிடித்துக் கணேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured