Home FAMILY NOVEL3) வலி 💔

3) வலி 💔

by sreejanovels
18 views

அத்தியாயம் 3

    ஆதித்யா தன் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்க, அங்கே ஸ்டாஃபாக வேலை பார்க்கும் ரோகித்தை அழைத்தனர்...

ரோகித்தான் தற்போது லாவண்யாவுடன் இருப்பவன் என்று தெரியும் இவர்களுக்கு. இங்கே அவன் வேலைக்கு வந்த பிறகுதானே இங்கே இருக்கும் லாவண்யாவைத் தன் வசம் இழுத்துக்கொண்டான். ஆனால் ஏற்கனவே கம்பெனி இவனிடம் பத்தாண்டுகள் பாண்டிங் போட்டதால் இவனை வேலையை விட்டு நீக்க முடியாது. அதனால் இவனும் சரியாக வேலை செய்யாததைச் சுட்டிக்காட்டி அவனை அடிநிலை பணியாளராக வைத்திருக்கின்றனர். ஆதித்யா இவனைப் பார்த்தால் ரத்தம் கொதித்துப் போய்விடுவான். ஆனால் இன்றோ ஆதித்யா அழைப்பதாகச் செய்தி வந்தவுடன் இவனுக்கே ஆச்சரியம் ‘என்ன இது?’ என்று…

ஆதி இருக்கும் அறைக்கு வெளியே நின்று அனுமதி கேட்டு உள்ளே வந்த ரோகித் வர, அங்கே கணேஷ், ஆதித்யா இருவரும் அவனையே நக்கலாகப் பார்ப்பதைக் கவனித்தவன்,

“சொல்லுங்க சார், எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க? என்ன விஷயம்?”

“மிஸ்டர் ரோகித், நீங்கதான் நம்ம கம்பெனில ரொம்ப கம்மியா வேலை பார்க்குறீங்க. அதனால உங்களுக்கு மிகப்பெரிய வேலை பார்க்கக் கொடுக்கிறோம்.

நம்ம சாருக்கு இன்னும் எட்டு நாள்ல கல்யாணம் நடக்க இருக்கு. அதுக்கான ஏற்பாடு எல்லாம் நீங்க பார்த்தா நல்லா இருக்கும். நாங்க மொபைல் நம்பர் எல்லாமே தந்துவிடுறோம். பந்தல்காரன், மேளம், ஐயர், நகைக்கடைக்காரன், டெக்கரேஷன் எக்செட்ரா… இதைப் பார்த்தாவது கல்யாணம்னா சாதாரண விஷயம் இல்லைன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்”

என்று முகத்தில் அடித்தது போல் சொன்னவுடன் ரோகித் முகம் மாறுவதைப் பார்த்து, கணேஷ் மனதில் ‘என் நண்பன் கடைசி வரைக்கும் தனியாக வாழ்ந்து விடுவான் என்று நினைத்தீர்களா? இதோ அவனுக்கு இது ஒரு வாழ்க்கை வருகிறது’ என்று நக்கலாக ரோகித்தைப் பார்த்துச் சொல்வது போல் தன் முக ஜாடையில் சொல்ல,

ரோகித் மிகவும் பணிவாக,

“ஓகே சார், கண்டிப்பா எல்லா வேலையும் நானே பார்க்கிறேன்”

என்று சொல்லி விடைபெற்று விட, இந்த விஷயத்தைச் சுடச் சுட ஒரு பணக்கார விருந்துக்குச் சென்றிருந்த லாவண்யாவுக்குத் தகவல் தெரிவிக்க, அவளுக்கு மிகவும் கோபம் வந்தது.

அவர்கள் வந்த சக தோழி ‘என்ன?’ என்று கேட்க, தன் முன்னாள் கணவனுக்குத் திருமணம் என்ற செய்தி சொன்னவுடன் அந்தப் பெண்,

‘முதல் கணவரிடம் சுகம் இல்லைன்னு இன்னொருத்தன்கிட்ட வந்து கஷ்டப்பட்டு வாழ்ந்துகிட்டு இருக்கா. இப்ப புருஷன் சந்தோஷமா கல்யாணம் பண்றது இவளுக்குப் பொறுக்கல போல’ என்று அங்கிருக்கும் மற்றொருவரிடம் சொல்லிச் சிரிக்க, லாவண்யா எரிச்சலாகக் கேட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் கோபமாக வெளியே வந்து கொண்டிருக்கும் பொழுது அந்த பார்ட்டியை ஆர்கனைஸ் செய்த நபர்,

“என்னம்மா, உன்னோட உழைப்புக்குக் கேட்ட பணம்”

என்று அவள் கைகளைத் தடவிப் பணத்தைக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு வெளியே வரும் பொழுது அஸ்வினி, அவளது குழந்தை அனிருத் இருவரும் தென்பட்டனர்.

அவர்களைக் கண்டும் காணாதது போல் லாவண்யா சென்றுவிட,

‘கடவுளே! பகலில் கூட இதுபோன்ற தொழில்கள் கொடிகட்டிப் பறக்குது போல. பட்டப்பகலில் காசு வாங்கிட்டுப் போயிட்டு இருக்கா. இவளைப் போய் நம்பி எங்க அண்ணன் வாழ்க்கைதான் பாழாப் போச்சு’ என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றாள்.


எல்லாம் முடிந்த பிறகு, லாவண்யா அலுவலகத்தில் தன் வேலையை முடித்துவிட்டு மதிய உணவு உண்டு கொண்டிருக்கும்போது அவளுடன் வேலை செய்யும் இன்னொரு பெண்,

“ஏய், உன்னோட எக்ஸ் கம்பெனில தான் எங்க அக்கா வேலை பார்க்கிறாள். அவருக்குக் கல்யாணம் நடக்கப் போகுதாம். உன்னோட முதல் கணவனுக்கு இரண்டாவது கல்யாணம். கேட்கவே நல்லா இருக்குல்ல?”

என்று சொல்லி கவிதா என்ற பெண் கிண்டல் அடிக்க, லாவண்யாவின் முகம் மிகவும் கடுமையாக மாறியது.

“அவன் எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டான். அவனைப் பத்தி என்கிட்ட என்ன பேச்சு? அவளைத்தான் உதறித் தள்ளிட்டு வந்துட்டேன் இல்ல? அப்புறம் என்ன?” என்று கவிதாவின் முகத்தில் அடித்தது போல் பேச,

“ஆமாம் ஆமாம்! பணக்கார புருஷன், அழகான குழந்தையை விட்டுட்டு இப்படி கஷ்டப்பட்டு வேற ஒருத்தன் கூட வாழ்ந்துகிட்டு இருக்க. ஊரே உன்னைப் பத்தித் தெரிஞ்சவங்க எல்லாம் கேவலமா பேசிகிட்டு இருக்காங்க. ஆனா அப்ப கூட உன்னோட புருஷனைப் பத்தித் கேவலமா பேசுற” என்று சொன்னவுடன் லாவண்யா ஒரு பார்வை பார்க்க,

“ஓகே ஓகே! எதுக்குடி வயிறு எரிஞ்சு சாகுற? இப்ப மட்டும் என்ன குறை? நீ அப்போ கட்டுப்பாட்டுக்குள் இருந்த பணக்காரப் பறவை. ஆனா இப்போ சுதந்திரப் பறவை. உன்கிட்ட காசுக்குப் பஞ்சம் வராத மாதிரி ஆபீஸ்ல வேலையும் பார்க்குற. பெரிய பெரிய பணக்கார பார்ட்டிக்கு போயிட்டு ராத்திரி லேட்டா பணத்தை வாங்கிட்டு வர்ற. எல்லாம் எங்களுக்குத் தெரியும். பேசாம இன்னும் நீ நல்லா சம்பாதிக்க நினைச்சா உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கான் பாத்தியா ரோகித், அவனை விட்டுத் தள்ளிடு. இப்போதைக்கு நீ மறைச்சு வச்சிருக்க சேவிங்ஸ் வச்சு வேற ஊர்ல செட்டில் ஆகப் பாரு. உனக்குத் தெரிந்த பாய் ஃபிரண்ட்ஸ் ஏதாவது ஒரு லிங்க் கிடைச்சா எங்கேயாவது செட்டில் ஆக வழியைப் பாருடி. ஆனா ஒன்னு, ரொம்ப இந்த ஆம்பளைங்களுக்குச் சலுகை பார்க்கக் கூடாது. நம்ம கெத்தா இருக்கணும், உஷாரா இருக்கணும். இல்ல நம்மளையே ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருப்பானுங்க”

என்று சில பல அறிவுரைகளைச் சொல்லி அவளின் முகத்தைப் பார்க்க, அவள் முகமும் இதைப்பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தது போல இருந்தது.

“நான் என்னோட முதல் கணவனோட இரண்டாவது கல்யாணத்துக்கு அட்டென்ட் பண்ணப் போறேன். அதுவும் கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே”

என்று லாவண்யா சொன்னவுடன் கவிதா என்ற பெண்,

“அப்படின்னா எந்தத் தொல்லையும் இல்லாம மறுபடியும் பணக்கார உன்னோட குடும்பத்தோட சேர்ந்து இன்னும் என்ஜாய் பண்ணப் போற, அப்படித்தானே?” என்று சொல்லிச் சிரிக்க, லாவண்யா அங்கிருந்து சென்றுவிட்டாள்.

‘நான் மறுபடியும் அங்கே போய் ஆகணும்’

என்று இப்பொழுது ஆதித்யாவின் வாழ்க்கையைச் சீர்குலைக்க மீண்டும் அவன் மீது படையெடுக்க வருகிறாள் லாவண்யா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“அகல்யா மா, நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியல. உனக்கு அடுத்த வாழ்க்கை வந்து இருக்கு. இனியாவது சந்தோஷமா இருக்கணும். அந்த நல்ல பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹேப்பியா இரு”

என்று சுப்புமா தனது கடைசி நாள் வேலையை முடித்துவிட்டு அகல்யாவிடமிருந்து விடைபெற்றுத் தன் சொந்த ஊரான குண்டூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவர் அங்கே பிழைப்பு நடத்துவதற்காக ஒரு பத்து லட்ச ரூபாய் பணத்தை அவர் அக்கவுண்டிற்குப் போட்டு, மேலும் அங்குத் தன் அலுவலக நண்பரிடம் பேசி ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி அவருக்குச் சிறிய டிபன் கடை வைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்ய வைத்துத்தான் அவரை மன திருப்தியாக அனுப்பி வைத்தாள்…

“மம்மு மம்மு! நான் எப்போ அப்பா கிட்ட போவேன்? நீ சொன்ன இல்ல, அப்பா கிட்ட போகப் போறேன்னு… எப்போ??”

என்று கேள்விகளாகக் குடைந்து எடுத்த மகனை மடியில் அமர வைத்து,

“நம்ம நாளைக்கு ஊருக்குக் கிளம்புறோம் ஏரோபிளேன்ல. அப்புறம் நீ அப்பா கூட கொஞ்ச நாள் இருக்கணும். அப்பா கிட்ட இருக்கிற குட்டி பாப்பா என்னுடன் இருப்பா. நீ அப்பாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் அப்பா கூட நம்ம இருப்போம். உனக்குப் பிடிக்கலைன்னா அந்த அப்பா வேண்டாம், சரியா??”

என்று தன் மகனுக்கு எடுத்துரைக்க, அவனும் இதுவரை தந்தையின் பாசத்துக்காக ஏங்கி வந்தவன் இவள் சொல்வதைக் கேட்டுத் தலையை ஆட்ட, அகல்யாவுக்கும் சற்று நிம்மதி.

,,,,,,,,,,,,,,,,

“கணேஷ், நீ சொன்ன மாதிரி இப்போதைக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் ரெடியா இருக்கு. நாளைக்கு அவங்க வந்தா அங்க தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் முடிஞ்சிடுச்சு. சமையல்காரம்மா இன்னைக்கு நைட்டு வந்துருவாங்க”

என்று அவன் போட்ட கட்டளைக்கு அடிபணிந்து அனைத்து வேலைகளையும் முடித்து வந்த அஸ்வினி கணவனிடம் சொல்ல,

“பரவாயில்லையே! மரியாதை எல்லாம் பொங்குது. அனாதை கழுதை, அனாதை நாய், கேட்பார் இல்லாத கழுதை அப்படின்னு சொன்ன வாய் இப்போ அவங்க இவங்க சேவை எல்லாம் செய்யுது. உன்ன மாதிரி ஒரு பச்சோந்தியை நான் பார்த்ததே இல்லை. நான் தினமும் பண்றதைச் சிரிச்சுக்கிட்டே நைட்டு உன் கூட பண்ணனும், அதுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுற? புரியுது புரியுது, தினமும் உன் கூட பண்ணலாம். ஆனால் நான் சிரிக்க மாட்டேன், உன் கூட சந்தோஷமா உறவு வச்சுக்க மாட்டேன். இதுதான் உனக்கான தண்டனை”

என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிட்டுப் போகப் பார்த்தவனின் கரங்களைப் பற்றி இழுத்து,

“எப்ப கணேஷ் புரிஞ்சிக்குவீங்க? இன்னும் நான் என்ன பண்ணணும் சொல்லுங்க கணேஷ். மூணு வருஷமா உங்க காதலுக்காகக் காத்துகிட்டு இருக்கேன்”

என்று அவன் கரங்களைப் பிடிக்க வர, அவளைத் தட்டிவிட்டுச் சென்றுவிட்டான். வலி நிறைந்த பார்வையோடு தன் கணவனை அவளால் பார்க்கத்தான் முடிந்தது.

”💔 வலி தொடரும் 💔”

You may also like

Leave a Comment

About Me

Featured