Home FAMILY NOVEL13) வலி 💔

13) வலி 💔

by sreejanovels
14 views

அத்தியாயம் 13

லாவண்யாவிற்கு இது முதல் நாள் வேலை தினம் என்பதற்காக நல்ல பெயர் வாங்க மிகவும் கவனத்தோடு வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் எம்டி பார்வை அவள் மீது படவில்லை. ஏனென்று தெரியவில்லை, அனைத்து பெண்களிடமும் பேசுகிறான், சிரித்துப் பேசுகிறான், அவளிடம் மட்டும் பேசவே இல்லை; அமைதியாகவே சென்று விட்டான்.

“சிவானி, எம்டி எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுவார்னு சொன்னீங்க, அதே மாதிரி தான் இருக்காரு. ஆனா என்னைப் பார்த்து மட்டும் வெறும் தலையசைப்போடு நிறுத்திக்கிறார். ஏன் என்கிட்ட பேச மாட்டேங்குறார்?” என்று ஷிவானியிடம் கேட்டதற்கு,

“அவருக்குப் பாவமாக இருக்கும் அப்பாவிப் பெண்களைப் பிடிக்காது. கலகலன்னு அவர்கிட்ட ஓபனா பேசுற பொண்ணுங்க கிட்ட நல்லா பேசுவாரு. அவரா பேசணும்னு ஆசைப்பட்டு அமைதியா இருந்தா அவரு கண்டுக்க கூட மாட்டாரு. இப்ப அவர் பார்வையில் இருந்து நீ அவுட். இனிமே நீங்களா போய் சிரிச்சுப் பேசினா கூட அவர் மடிய மாட்டார். பரவாயில்ல, ஜாலி டைப் தான் போல. நமக்கு வேலைக்கு வேலையும் ஆச்சு, என்டர்டைன்மென்ட்க்கு என்டர்டைன்மென்ட். இன்னொரு வழியா நமக்குக் காசு வருதுல்ல… நான் ஏன் இப்படிப் பேசுறேன் தெரியுமா? நான் இந்த மாதிரி பண்ணக் காரணம் என்ன கல்யாணம் பண்ணி குழந்தையைக் கொடுத்துட்டு ஓடிப் போயிட்டான் ஒரு தெருப்பொறுக்கி. அந்த குழந்தையை வளர்க்க வேண்டாமா? இப்பதான் ஸ்கூல்ல சேர்த்து இருக்கேன். அவளுக்காகத் தான் இவ்வளவு கூத்து. பாப்பா என்னோட அப்பா அம்மா கிட்ட வளர்ந்துக்கிட்டு இருக்கா. நான் இப்படி இருக்கிறது மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சது என்னை கொன்னே போட்டுடுவாங்க. அதான் தனியா அப்பார்ட்மெண்ட் வாடகை எடுத்துத் தங்கிட்டு இருக்கேன். என்கூட நீயும் ஜாயின் பண்ணதால இனி வாடகைச் செலவு கூட பாதிக்கு பாதி குறைஞ்சது. அது எனக்கு ரொம்ப நிம்மதி. ஓகே ஓகே சீக்கிரம் வேலையைப் பாரு. நான் ஆஃப் டே லீவ். மத்தியானத்துக்கு மேல அசிஸ்டன்ட் மேனேஜர் வைபவ் கூட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மீட்டிங் இருக்கு, அப்படியே சின்னதா ஒரு ஃபன் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன்” என்று சொல்லி ஷிவானி சென்று விட, லாவண்யாவுக்கு ஆச்சரியம். எல்லா ஊர்களிலும் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் போல.

‘அது சரி, பணத் தேவைக்கு நான் எதுக்கு இந்த மாதிரி போகணும்? நம்ம வேலையே நம்மளோட அழகைப் பார்த்து மத்தவங்க ரசிக்கணும், நாம அப்படியே கொஞ்சம் சீன் போடணும். என்கிட்ட பேசுறதுக்குத் தவிக்கணும். இதுதான் எனக்குத் தேவை. ஆனா இவங்க மத்தவங்க மாதிரி வேற மாதிரி போறாங்க போல. என் வாழ்க்கையில இருந்தது ஆதித்யா, ரோகித். இதுல ஆதித்யா கிட்ட என்ன சுகம் கண்டேன்? கல்யாணம் பண்ணி ஒன்னும் இல்லை. இதுக்கு நடுவுல அனன்யா பாப்பா எப்படி என் வயித்துல? குழந்தை பெத்துக் கொடுத்தவுடன் இந்த ரோகித் கூட… ஐயோ கடவுளே, அவன்கிட்ட இருந்து நான் தப்பிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனா ஊரைப் பொருத்தவரைக்கும் நான் ஆம்பளைக்கு அலையுறவ. ஆம்பளைங்க உண்மையிலேயே பொண்டாட்டிக்குத் துரோகம் பண்ணா அவனை ஏதும் சொல்ல மாட்டாங்க. ஆனா என்ன மாதிரி பொண்ணை யாரு என்ன சொல்லுவாங்க… பச்சையா பேசுவாங்க தே****யா அப்படின்னு’ என்று தலையில் கை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஹெச்.ஆர். விகாஸ் கண்ணன் அவள் அருகே வந்து நின்றான்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க லாவண்யா ஒர்க் டைம்ல?” என்று கேட்டவுடன் பதறி எழுந்து நிற்க, அவனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

“விக்கி நீ என்ன இங்க?” என்று அவளையும் மீறிக் கேட்டு விட,

“லுக் லாவண்யா, ஐ அம் நாட் விக்கி. ஐ அம் விகாஸ் கண்ணன், ஹெச்.ஆர். ஆஃப் தி மேனேஜ்மென்ட். வொர்க் டைம்ல எதை யோசிச்சுகிட்டு கோடிங் பண்ணாம இருக்கீங்க? கொடுத்த டைம்ல ஒர்க் பண்ணப் போறீங்க. சாட்டர்டே சண்டே லீவ், இதுல ஃப்ரைடே ஃபன் டைம் அப்டின்னு… ஆனா உங்க சோசியல் மீடியால, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வேலை செய்யச் சொல்லி டார்ச்சர் பண்றாங்கன்னு சோக ஸ்டேட்டஸ் போட்டு எங்களை வெறுப்பேத்த வேண்டியது. வந்த வேலையை மட்டும் பாருங்க” என முகத்தில் அடித்தது போல் சொல்லிச் சென்று விட, அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

இது விக்கி தானே? பதினோராம் வகுப்பு முதல் கல்லூரி இறுதி ஆண்டு வரை தன்னுடன் படித்தவன், உற்ற தோழன். கல்லூரி முடிந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றவன், அதன் பிறகு எந்த ஒரு தொடர்பும் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என்னவென்று கேட்டால் இப்படிப் பேசுகிறானே? எல்லாம் பெரிய பதவியில் இருக்கிறோம் என்று திமிர் போல! சரி நமக்கு எதுக்கு வம்பு என்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். லாவண்யாவுக்கு இப்படி ஒரு குணம் இருந்தாலும் வேலை விஷயத்தில் கெட்டிக்காரி. சில மணி நேரத்திலேயே கோடிங் நன்றாகச் செயல்பட்டு முதல் நாளை வெற்றிகரமாக அனைவரும் மெச்சும்படி செய்துவிட, அவளுடைய டீம் லீடர் வாழ்த்து தெரிவித்து விட்டான்.

“முதல் நாள் யாரும் இவ்வளவு சிறப்பா வேலை செஞ்சது கிடையாது. நீங்க நல்லாவே ப்ராஜெக்ட் எடுத்த உடனே ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் பாசிட்டிவ் ரிவ்யூ வந்திருக்கு. இதே மாதிரி நல்லா அப்சர்வ் பண்ணி ஒர்க் பண்ணுங்க ஓகேங்களா? சரி வாங்க நம்ம லஞ்ச் சாப்பிடலாம்” என்று அவன் கேட்டதற்கு ஏனோ அவளுக்கு மனமில்லை. தன்னை உதாசீனம் செய்து சென்ற விக்கி ஞாபகம் வந்தது. தனியாகச் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று உணவகம் சென்று தனக்கான உணவை ஆர்டர் செய்ய, அது வந்தவுடன் அமரப் போக அங்கே தனியாக விகாஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் அருகில் சென்று அமர்ந்தவள்,

“வொர்க் டைம்ல நீங்க எனக்கு ஹெச்.ஆர். ஆனா இப்போ லஞ்ச் பீரியட், சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் இல்ல? ஆளே மாறிப் போயிட்ட விக்கி, எப்படி இருக்க?” என்று கேட்டவளிடம், அவள் முகம் பார்க்காமல் சாப்பிட்டுக்கொண்டே,

“ம்ம்… நல்லா இருக்கேன். நான் விஜயவாடா வந்து எம்பிஏ முடிச்சேன். அப்புறம் இந்த கம்பெனில வேலை வந்தது, அப்படியே ரெண்டு வருஷம் போய் ஹெச்.ஆர். ஆகிட்டேன். ஆமா, நீதான் உன்னோட அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்படியே செட்டில் ஆகிடுவ அப்படின்னு நினைச்சேன். ஆனா இங்க வந்து இருக்க, அதுவும் உன்னோட சர்டிபிகேட்ல ‘மிஸ்’ அப்படின்னு இருக்கு. டிவோர்ஸ் ஆகிடுச்சா?” என்று கேட்டவனிடம் எந்தப் பதில் சொல்வாள்? டிவோர்ஸ் ஆகிவிட்டது என்று…

“அது… அது…” தன் கடந்த காலத்தைக் கூற வருவதற்குள்,

“உனக்கு உன்னோட அத்தை மகன் ஆதி மேல் இன்ட்ரஸ்ட் இருந்தது. அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து எல்லாம் போகாம எல்லாரும் ஒத்துமையா இருக்கலாம் என்று நீ செல்பிஷா முடிவு பண்ண. அதே சமயம் இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா பார்ட்டி, கிளப்னு வசதியா செலவு பண்ணலாம்னு முடிவு பண்ண. அதனால அவனும் உங்க ரிலேட்டிவ் பொண்ணு அகல்யாவும் லவ் பண்றது தெரிஞ்சுக்கிட்டு நீ சில பல கோல்மால் பண்ணி அந்தப் பொண்ணை ஒதுக்கி, உன்னை காதலிக்கிற மாதிரி பண்ண. சரி கல்யாணம் பண்ணிக்கிட்ட… அவனோட வாழ்ந்தியா? நீ பண்ற அட்டகாசத்தைப் புரிந்து அவன் உன்னைக் கண்டித்து இருக்கிறான், ஆனால் நீ கேட்கலை. கடைசில நீயே நீ பண்ண தப்புகளைச் சொல்லி எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நின்ன. அதே சமயம் உங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற ரோகித் கூட தொடர்பு வேற. அதைத் தெரிஞ்சுகிட்டு உங்க வீட்டை விட்டு அனுப்பும் போது உன் வயித்துல இருந்த குழந்தையைச் சாக்கா வச்சு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போகப் பார்த்த. ஆனா முன்கூட்டியே டைவர்ஸ் வாங்கி, குழந்தையைப் பெத்துக்கிற வரைக்கும் உன்னைப் பார்த்துக்கிட்டாங்க. குழந்தை பிறந்த இரண்டாவது மாசம் நீயே அந்த வீட்டை விட்டு வந்துட்ட. பிறகு ரோகித் கூட முழுசா ஆறு மாசம் நல்லா இருந்த. கொஞ்ச நாளா உங்களுக்குள்ள சில பல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், அவனை விட்டு வந்துட்ட. அவன் அங்க இருக்கான், இப்போ நீ இங்க வந்து யாரை மடக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்க… இதானே உன்னோட ஜாதகம்?” என்று சொல்லி முடித்தவுடன் அவளுக்கே அவமானமாகப் போய்விட்டது. என்ன தன்னை பற்றி இப்படிப் பேசுகிறான் என்று.

“சரி இதுல என்ன தப்பு இருக்கு? எனக்குச் சுதந்திரம் ரொம்பவே முக்கியமா பட்டது. பினான்சியல் இன்டிபென்டன்ஸ் ஒரு பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனோட வாழணும்னு அவசியம் இல்லையே? எனக்கு ஆதித்யா கூட லவ் லைஃப் மற்றும் லஸ்ட் ரெண்டுமே சரி படல, அதான் ரோகித் கூட வந்தேன். ஆனா கரெக்டா ஆறு மாசம் முடிஞ்சு போச்சு. சரியா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஓனரோட பொண்ணு மித்ராவை கல்யாணம் செய்ய அவன் முடிவு பண்ணிட்டான், நான் இங்க வந்துட்டேன்… அது எப்படிங்க வெக்கமே இல்லாம ஆம்பளைங்க மட்டும் ரெண்டு மூணு பொண்டாட்டியை ஒரே வீட்ல வச்சுக்கிட்டு குடும்பம் நடத்தி புள்ள கொடுக்குறீங்க? ஆனா நாங்க மட்டும் ஒரு வாழ்க்கை பிடிக்கலைன்னா இன்னொரு வாழ்க்கைக்கு மாறும்பொழுது ஏதோ கொலைக் குற்றம் பண்ண மாதிரி பேசுறீங்க? என் பக்கமும் தப்பு இருக்கு நான் ஒத்துக்குறேன், அதுக்காக என் லைஃப் விட்டுக்கொடுக்க முடியுமா? நான் பண்ண பெரிய தப்பு ஆதித்யாவை விட்டு வந்தது தான். நானும் அந்த கவலையில ரொம்பவே ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட மகளுக்குச் சித்தி கொடுமை நடக்குதோ நடக்கலையோ ஒண்ணுமே புரியல. ரெண்டு மாசம் குழந்தையை விட்டுட்டு வந்தேன், 8 மாத குழந்தையாக என் கண்ணு முன்னாடி நிக்கிறா. நானே ஒரு நல்ல வாழ்க்கையைத் தப்பு பண்ணி இழந்துட்டு வந்து நிக்கிறேன். அதை மறுபடி மீட்டெடுக்க ஒரு சின்ன முயற்சி தான் இந்த தனிமைப்படுத்துதல். தயவு செஞ்சு என்னைக் குத்திக் காட்டிப் பேசுறேன்னு பேச வேணாம்” என்று சொன்னவளைப் பார்த்த விகாசுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.

“லாவண்யா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. இன்னைக்கு ஈவ்னிங் நான் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். எங்க, எப்படின்னு கேட்காத. என் கூட வர்றதா இருந்தா வா. நான் இன்னும் நம்ம நட்பை மறக்கல. அதுவும் என் மனசுல நட்பைத் தாண்டி உன்மேல ஒரு தனி மரியாதை இருந்தது. ஆனா உங்க லைஃப் இப்படிப் பார்க்கும்போது எனக்கே அழுகை வருது. நான் சொல்றதை மட்டும் செய் ப்ளீஸ்” என்று கெஞ்சியவனைப் பார்த்தவளுக்குச் சரி, இங்கே இருக்கப் போகும் சிறிது காலம் நம் பழைய நண்பனின் நட்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் “வருகிறேன்” என்று சொல்லிவிட்டாள்.

சிறு நேரத்தில் உண்டு முடித்துச் சென்ற லாவண்யாவை ஒரு மர்ம புன்னகையோடு பார்த்த விகாஸ், ‘நீ ஒன்னும் கேம் ஸ்டார்ட் பண்ணல பேபி, நான் தான் கேம் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். வெயிட் அண்ட் வாட்ச், என் ஆட்டத்தைப் பாரு’ என்று மனதிற்குள் ஒரு சபதம் எடுத்தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured