அத்தியாயம் 13
பார்ட்டி ஹாலில் இசை முழங்கிக்கொண்டிருக்க, லாவண்யா அனுப்பிய அந்த வெயிட்டர் அதிரூபனை நோக்கிச் சென்றான். அவன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸில் அந்த நச்சு மாத்திரை கலக்கப்பட்டிருந்தது. அதிரூபன் அமிர்தாவிடம் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, சரியாக அந்த நேரம் பார்த்து மேடைக்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்டமான ஸ்பீக்கரில் ‘டமார்’ என்ற சத்தத்துடன் ஒரு சிறு வெடிப்பு ஏற்பட்டது.
அனைவரும் திடுக்கிட்டு அந்தப் பக்கம் திரும்ப, கூட்ட நெரிசலில் அந்த வெயிட்டர் நிலைதடுமாறிச் சறுக்கினான். அவன் கையிலிருந்த ஜூஸ் கிளாஸ் அதிரூபனின் கைக்குச் செல்வதற்குப் பதில், தாகத்தில் இருந்த அமிர்தாவின் கைக்குத் தற்செயலாக மாறியது. வெயிட்டர் சுதாரிப்பதற்குள், “தேங்க்ஸ்!” என்று சொல்லிவிட்டு அமிர்தா அந்த ஜூஸை அப்படியே குடித்து முடித்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், அமிர்தாவின் கண்களில் ஒரு மாய மயக்கம் சூழத் தொடங்கியது. “சார்… ஒரு மாதிரி தலை சுத்துது… எனக்கு… எனக்குப் பேசுறதே புரியல…” என்று தள்ளாடியவளை அதிரூபன் பதற்றத்துடன் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவளது உடல் லேசாக நடுங்குவதை அவனது கரங்கள் உணர்ந்தன.
“அமிர்தா! என்னாச்சு?” என்று அதிரூபன் அவளைச் சோபாவில் அமர வைத்தான். தூரத்திலிருந்து இதைப் பார்த்த லாவண்யாவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. ‘அதிரூபனுக்குப் போட்ட பிளான் இவளுக்கா?’ என்று கைகளைப் பிசைந்துகொண்டாள்.
அமிர்தா மெல்ல மயக்க நிலைக்குச் செல்ல, அதிரூபன் கௌதமை அழைத்து, “அமிர்தாவை மேல இருக்கிற என் பிரைவேட் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் லாரா சித்தி கிட்ட ஒப்படை. அவளைப் பத்திரமா பாத்துக்கச் சொல்லு. நான் யாருன்னு பார்த்துட்டு வர்றேன்,” என்று கட்டளையிட்டான்.
அன்றிரவு முழுக்க லாரா சித்திதான் அமிர்தாவிற்குத் துணையாக இருந்தாள். மறுநாள் காலை, அந்தச் சொகுசு அறையில் அமிர்தா மெல்லக் கண் விழித்தாள். அவளுக்குத் தலை இன்னும் கனமாக இருந்தது.
“கண் விழிச்சுட்டியா செல்லம்? நீ தெரியாம ஏதோ ஸ்ட்ராங்கான ஜூஸ் குடிச்சிட்ட போல,” என்று லாரா இத்தாலியத் தமிழில் அழகாகப் பேசி, அவளுக்குக் காபி கொடுத்துத் தேற்றினாள். “எங்க பையன் அதிரூபன் ரொம்ப நல்லவன் பார்த்தியா? நைட் முழுக்க உன் பக்கத்துலயே உட்கார்ந்து இருந்தான்,” என்று அவனது புகழைப் பாட, அமிர்தாவுக்குத் தன் மேல் அதிரூபன் வைத்திருக்கும் அக்கறை நெகிழ்ச்சியைத் தந்தது.
அதே சமயம் நீங்க அதிரூபன் சிசிடி கேமரா செக் செய்து பார்த்தான்.
லாவண்யா அந்த வெயிட்டரிடம் ஏதோ பேசி அந்த ஸ்பெஷலான ஜூஸை கொடுக்க அதே சமயம் ஸ்பீக்கர் வெடிப்பு சலசலப்பில் தடுமாறி நின்று கொண்டிருந்தவன் திடீரென்று அமிதா ஜூஸ் எடுத்து குடிக்க வந்ததால், அவன் அப்படியே நழுவி சென்று விட்டான்.
ஆக மொத்தம் லாவண்யா ஏதோ ஒரு சரி செய்து இருக்கிறாள் மட்டும் புரிந்து கொண்டான்.
அவளுக்கு நூதன முறையில் ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவும் எடுத்துக் கொண்டான்..
,,,,
ஹாலில் லாராவுடன் பேசிக் கொண்டிருந்த அமிர்தாவை பார்த்தான்.
அவளுக்காக ஒரு நாள் எடுத்து வைத்த சுடிதார் இப்போது லாரா சரியாக அவளிடம் கொடுத்து விடுவேன் அந்த மெருன் கலர் சுடிதார் அவளுக்கு அழகாக பொருந்தி இருந்தது.
“பிரேக்பாஸ்ட் முடிச்சாச்சா ஆபீஸ் கிளம்பலாமா??”.
என்று அதிரூபன் கேட்க அமிர்தவம் சரி என்று சொல்ல,
சிறிது நேரத்தில் தயாராகி, இருவரும் ஒன்றாக அலுவலகம் வந்தனர். காரிலிருந்து அதிரூபனும் அமிர்தாவும் ஜோடியாக இறங்குவதைக் கண்ட லாவண்யாவுக்கு வயிறு எரிந்தது.
அதிரூபன் வேணுமென்றே அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “அமிர்தா, எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. மத்தியானம் வரைக்கும் உன்னை மிஸ் பண்ணுவேன்,” என்று லாவண்யா காதில் விழும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.
அதிரூபன் சென்றதும், லாவண்யா ஆத்திரத்துடன் அமிர்தாவின் அறைக்குள் நுழைந்தாள். “ஏய்! என்ன ஓவரா சீன் போட்டுட்டு இருக்கியா? நேத்து நைட்டு போதை மாத்திரை சாப்பிட்டுத் தானே அவர் கூடப் படுத்துக் கிடந்த? உன்ன மாதிரி அனாதைப் பொண்ணுங்களுக்கு இதுதானே வேலை!” என்று கேவலமாகப் பேசினாள்.
லாவண்யா கையை ஓங்கிய அந்த நொடி, சடாரென்று அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அடித்தது லாரா சித்தி! தன் கணவன் தேவராஜுடன் அங்கே வந்திருந்த லாரா, “ஏய்! யார் நீ? என் பையனோட கம்பெனில வேலை பாக்குற ஒரு ஸ்டாப் தானே நீ? நேத்து அந்த ஜூஸ்ல மாத்திரை கலந்தது நீதான்னு சிசிடிவி கேமராவுல நாங்க நேத்தே பார்த்துட்டோம். ஒழுங்கா இங்கிருந்து போ!” என்று மிரட்டினாள்.
லாவண்யா பயந்து ஓடினாள். லாரா அமிர்தாவைச் சமாதானப்படுத்தி, “அதிரூபனுக்கு உன் மேல ஒரு பெரிய அக்கறை இருக்குமா,” என்று சொல்ல, அமிர்தாவுக்குள் அதிரூபன் மீது ஒரு காதல் மலரத் தொடங்கியது.
மதியம் மீட்டிங் முடிந்து வந்த அதிரூபன், அமிர்தாவைத் தனது தனி அறைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டனர்.
“நீ இப்போ ஓகே தானே??”.
“சார் நான் என்ன பேசண்டா நேத்து ஏதோ வேற மாதிரி ஜூஸ் குடிச்சு நினைக்கிறேன் அதனால தான் எனக்கு அப்படி இருக்கு மத்தபடி எனக்கு ஓகே தான்”.
என்று சொல்லி அமிர்தா சாப்பிட்டு முடித்தவள்
கை கழுவிவிட்டுத் திரும்பும்போது, அதிரூபன் அவளை வழிமறித்து அவள் இடுப்பைப் பிடித்துத் தன்பக்கம் இழுக்க,
“சார் என்ன பண்றீங்க??”.
என்று அவள் தயக்கமாக கேட்க.
அதிரூபன் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றி ஆவேசமாக,
முதன்முறையாக அவளது இதழ்களில் முத்தமிட்டான்.
“எனக்கு உன்னைப் பார்த்ததுல இருந்தே இப்படித்தான் தோணுது அமிர்தா. இந்த ரிலேஷன்ஷிப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகணும்,” என்று அவன் உரிமையோடு சொன்னான். அமிர்தா திகைத்துப்போய், “எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் சார்,” என்றாள்.
“எடுத்துக்கோ ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான்”.
என்று ஏதோ பல நாட்கள் அவளுக்கு அவகாசம் கொடுப்பது போல் சொல்ல அமிர்தா சரி என்று சொல்லி, தனது வேலையை கவனிக்க தொடங்கினாள்
…..
வேலை நேரம் முடிந்தவுடன்,
அன்று மாலை அமிர்தா தன் வீட்டுக்குச் சென்றபோது, அவளுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் வாசலில் ஒரு லெட்டர் இருந்தது. “இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. உடனடியாக வீட்டைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்படுகிறது.”
தன்னுடைய ஒரே பிடிமானமான வீடு பறிபோவதைக் கண்டு அமிர்தா கதறி அழுதாள். இது எம்பியின் சதி என்று புரியாமல் அவள் துடித்தபோது, அதிரூபனின் போன் ஒலித்தது.
,,,,,
அமிர்தா போன் செய்வதை பார்த்த அதிரூபன்,
“என்ன அமிர்தா கால் பண்ணி இருக்க??”.
“நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?”.
“ஏய் என்னடி ஆச்சு எதுக்கு இந்த மாதிரி பேசுற உன் குரல் அழுதா மாதிரி இருக்கு என்ன ஆச்சு??”.
“எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வாங்க பேசலாம்”.
என்று சொன்னவுடன் அதிரூபன் பதறி அடித்து அமிர்தா வீட்டிற்கு வர கீழ் வீட்டார்கள் இருப்பதை பார்த்து ஏதோ அவனுக்கு தோன்றியது,
“ஹே குட்டி என்ன ஆச்சு?? “.
என்று அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது,
அவனது குரலைக் கேட்டு அமிர்தாவும் கீழே இறங்கி வர,
அதிரூபன் அவளது நிலையைப் பார்த்ததும் பதறிப்போய் அவளைத் தாங்கிக்கொண்டான். “அமிர்தா, என்னாச்சு? எதுக்கு இவ்வளவு பதற்றம்?” என்று அவன் கேட்க, விக்கித்து அழுதபடி அந்த நோட்டீஸை அவனிடம் நீட்டினாள்.
அதைப் படித்து முடித்த அதிரூபனின் முகத்தில் ஒரு கணம் கோபம் மின்னியது, பின் அது ஒரு மர்மமான அமைதியாக மாறியது. “அமிர்தா, இதோ பார்… என்னை நம்பு. அந்த வீடு உனக்குச் சொந்தமானது, அது உனக்கே திரும்பக் கிடைக்கும்.
எதற்கும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன். எனக்கு நீதான் ரொம்ப முக்கியம்,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு, அவளைத் தேற்றினான்.
அவனது வார்த்தைகள் அவளுக்கு ஒரு பெரிய பிடிமானத்தைத் தந்தன.
மறுநாள் காலை.
எம்பியின் அலுவலகத்தில் ஒரு ரகசிய மீட்டிங் நடந்தது. அதிரூபன் ஆக்ரோஷமாக எம்பியின் மேஜையைத் தட்டினான். “எதுக்காக அமிர்தாவோட இடத்தை இப்படி வஞ்சகமாப் பறிக்கப் பார்க்கிறீங்க? அந்த இடம் அவளுக்கு உயிர்… அதை அவளுக்கே திருப்பித் தந்துடுங்க,” என்று கர்ஜித்தான்.
எம்பி ஒரு குரூரமான புன்னகையுடன் சாய்ந்து அமர்ந்தார். “அதிரூபா… அந்த இடம் அவளுக்கே போகட்டும், நான் தடுத்த நிறுத்தறேன். ஆனா அதுக்கு நீ ஒரு கைமாறு செய்யணும். என் பொண்ணு லாவண்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கணும். அப்போதான் உன்னோட மாஃபியா உண்மைகளும் வெளியே போகாது, அந்தப் பொண்ணுக்கும் அவ வீடு கிடைக்கும். யோசிச்சுப் பாரு,” என்றார்.
அமிர்தாவின் வீட்டை மீட்க வேறு வழியில்லாமல், அதிரூபன் அந்தப் பலிபீடத்திற்குச் சம்மதித்தான்.
அவன் ஒரு நொடியில் இவர்களை வீழ்த்தி விடலாம். ஆனால், தன்னுடைய விஷயம் ஒன்று மாட்டிக் கொண்டிருக்கிறது அமிர்தாவுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது .
மேலும், அந்த கிராம மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரு எண்ணத்திற்காக, தனது கோபத்தை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் எந்த ராவணன்.
மதியம் அலுவலகம் வந்தவன் அமிர்தாவின் வீட்டு பத்திரத்தின் உண்மையான தாய் பத்திரத்தை எடுத்துக் கொடுத்து விட்டு,
“இது உங்க அப்பா உனக்காக சேர்த்து வெச்ச சொத்து இது உனக்கு தான் சொந்தம் எப்படி மீட்டெடுத்தாச்சு.”
என்று சொன்னவுடன் அமிர்தா அவனை கட்டி அணைக்க வர,
“ஒரு நிமிஷம் அமிர்தா . இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டி இருக்கு . நீ கண்டிப்பா வரணும் ஒரு முக்கியமான அறிவிப்பு செய்ய போறேன்”.
என்று சொல்ல அவளும் சரி என்று ஒப்புக் கொண்டாள்.
அன்று மாலை ஒரு பிரம்மாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் சென்றிருந்தது. அமிர்தா மிகுந்த ஆசையோடும், எதிர்பார்ப்போடும் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
‘நேற்றுதானே நம் உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்… இன்று இந்த பார்ட்டியில் எனக்குப் பிரப்போஸ் செய்யப்போகிறார் போலும்!’ என்ற கனவில், ஒரு அழகான புடவையில் தேவதை போல அந்த இடத்திற்கு வந்தாள்.
ஆனால் அங்கே காட்சி வேறாக இருந்தது. மேடையின் அருகே அதிரூபனும் லாவண்யாவும் ஜோடியாக நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அமிர்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கௌதமும் மற்ற ஊழியர்களும் ஒரு ஓரமாக நின்று ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
“நம்ம சாருக்கு என்ன ஆச்சுன்னே தெரியல… திடீர்னு அந்த எம்பி மகள் லாவண்யாவை கல்யாணம் பண்ணிக்கப் போறாராம். அதான் இப்போ அறிமுகம் பண்றாரு,” என்று அவர்கள் சொல்ல, அமிர்தாவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. நேற்றைய முத்தமும், நேற்றைய வாக்குறுதிகளும் வெறும் பொய்யா? அவள் கண்கள் குளமாயின.
அதிரூபன் அமிர்தாவைப் பார்த்தவுடன் ஒரு கணம் நிலைதடுமாறினான். அவனது கண்கள் கலங்கின, ஆனால் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ஒரு கல்லாக மேடையில் நின்றான். லாராவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள். தேவராஜ் வேண்டா வெறுப்பாக விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.
அனைவரும் பார்ட்டியை ரசித்துக் கொண்டிருக்க, லாவண்யா மெல்ல அமிர்தாவின் அருகே வந்தாள். ஒரு வெற்றிக் களிப்போடு அவளை ஏறெடுத்துப் பார்த்தாள். “என்ன அமிர்தா? என் அதிரூபனை மயக்கி உன் கையில போட்டுக்கப் பார்த்த… கடைசில அவர் என்கிட்ட சரண்டர் ஆகிட்டாரு பார்த்தியா? அவர் உன்ன மாதிரி ஒரு சாதாரண ஆள் இல்லை… அவர் ஒரு ‘மாஃபியா கிங்’!” என்று எகத்தாளமாகச் சிரித்தாள்.
அமிர்தாவுக்கு முதலில் புரியவில்லை. “மாஃபியாவா? என்ன பேசுறீங்க?” என்று கேட்டாள்.
லாவண்யா தன் செல்போனை எடுத்து ஒரு வீடியோவைக் காட்டினாள். அதில் திருச்சியில் அந்த நள்ளிரவு நேரத்தில், அதிரூபன் எம்பியின் ஆட்களிடம் அந்த மர்மமான பெட்டியைக் கைமாற்றும் காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது. எம்பியோடு அவன் ரகசியமாகப் பேசுவதும் அதில் கேட்டது.
“பார்த்தியா? சிலை கடத்துறதுதான் உன் காதலனோட நிஜமான தொழில். இப்போ சொல்லு… உனக்கு இப்போ வீடு முக்கியமா, இல்ல இந்தத் திருடன் முக்கியமா?” என்று லாவண்யா விஷத்தைக் கக்கினாள்.
தன்னைக் காதலித்தவன் ஒரு பெரும் குற்றவாளி என்பதும், தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியை மணக்கிறான் என்பதும் அமிர்தாவை நிலைகுலையச் செய்தன. அந்தப் பார்ட்டி ஹாலின் வெளிச்சத்தில் அவள் அனாதையாக நின்றிருக்க, அதிரூபன் அவளைக் கடந்து லாவண்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையேறினான்.
…..