Home ANTIHEROராட்சசியின் ரட்சகன் -4

ராட்சசியின் ரட்சகன் -4

by romaakeerthi
21 views

அனைவரும் வீட்டிற்கு சென்றவுடன் மகேஷும் ஜெயா மற்றும் மணமக்களுடன் வீட்டிற்கு சென்றான் .
      பெரிதாக சொந்த பந்தங்கள் என்று யாரும் இல்லாததால் ஜெயாவும் தனது இன்னொரு மகன் போல்  மகேஷையும் அவனது குடும்பத்தை நபர்களையும் இந்த திருமணத்தில் அதிகமான வேலைகளைப் பார்த்துக் கொள்வதற்கு கூறியிருந்தார் .

            கிட்டத்தட்ட மகேஷ் அப்படித்தான் இவர்களது குடும்பத்தில் ஒரு நபர் போலவே எப்பொழுதும் மாதத்தின் பாதி நாட்கள் இங்கேயே கிடப்பான்  .
        அவனது தாய் தந்தையின் எதுவும் கூறுவதற்கு கிடையாது .

        இருவருமே நண்பர்கள் என்ற ரீதியில் அவர்களும் விட்டுவிடுவர் . இப்பொழுது கூட திருமணத்திற்கு ஒரு மாதம் முழுவதும் அனைத்து வேலையும் செய்தது என்னவோ மகேஷம் அவனது குடும்பத்தாரும் தான் …..

       தனது தாய் தந்தையருக்கு பிரியா விடை கொடுத்து வந்த ஷர்வாணி இங்கு நடக்கும் விடயங்கள் தனது மனதை ஒன்றுபடுத்திக் கொள்ளாமல்  அப்படியே பொம்மை போல் அவர்கள் சொல்லும் அனைத்தையும் செய்து கொண்டே இருந்தாள் ,

        வீட்டிற்குள் நுழைந்தவுடன் விளக்கேற்றுவது பாலும் பழம் சாப்பிட்டு அவர்கள் அறைக்கும் அனுப்பப்பட்டனர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக ……

ஜெயாவிற்கு தனது மருமகளை அவ்வளவு பிடித்து விட்டது .
     ஆனால் தனது மகனிற்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவள் அல்லவா இவள் …
       நிச்சயமாக தனக்கும் தனது மகனுக்கும் கடைசி காலம் வரை இவள் வசந்த மயமான வாழ்க்கையை கொடுப்பாள் என்பது அவர்களது எண்ணமாகியும் போனது .

   
சிவா அறைக்குள் சென்றவுடன் மாலையை கழட்டி ஓரமாக வைத்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டான் . ஷர்வாணியை கண்டவுடன் உள்ளே வா என்றும் அழைக்கவில்லை அவளிடம் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை  .

      அவளும் அவனது வரவேற்பு எல்லாம் எதிர்பார்க்காமல்  உள்ளே வந்தவுடன் அறையை சுற்றி முற்றிலும் பார்த்தவாறு அங்கு போடப்பட்டிருந்த ஒரு சேரில் சென்று அமர்ந்து கொண்டாள் .

       அறையின் ஓரத்தில் புக்ஸ் செல்ஃப் சிறுவயதில் எடுக்கப்பட்ட அவனும் அவனது தாயும் உள்ள புகைப்படங்கள் அந்த சுவரில் அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட மாட்டியிருந்தன .

      இது போக அவனது கல்லூரி காலங்களில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களும் மகேஷோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அழகாக பிரேம் செய்யப்பட்டு மாட்டி வைக்கப்பட்டிருந்தன .

இப்பொழுதாவது அவள் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தவனுக்கு  ஏமாற்றம் தான் .
     அவள் என் உன்னிடம் பேச வேண்டும் நீ.தான் அவளிடம் பேச வேண்டும் என்று ஆனது மனசாட்சி வேறு அவனை குத்திக் கொண்டிருந்தது .

       “இங்க பாரு எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை  .
     எங்க அம்மா ரொம்ப நாளா ஃபோர்ஸ் பண்ணாங்க .
    வேற வழியே இல்லாம அவங்களோட சந்தோசத்துக்காக தான் நான் இந்த திருமணத்துக்கே ஒத்துக்கிட்டேன் .
    எனக்கு லைஃப்ல இந்த காதல் கல்யாணம் கமிட்மெண்ட்ஸ் இது ல எல்லாம்  சுத்தமா விருப்பம் கிடையாது .

      அப்புறம் நீங்களும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட நாள் ல இருந்து என்கிட்ட பேசாததுல இருந்து எனக்கும் ஒரு வாறு உங்களுக்கும் இது ல விருப்பம் இல்லை என்ற மாதிரி தான் தோணுது  .

    மூணு மாசமோ ஆறு மாசமோ நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருக்கிற மாதிரி நம்ம ஃபேமிலிக்கு காட்டிட்டு அதுக்கப்புறம் டிவோர்ஸ் வாங்கிக்கலாம் என்ன சொல்றீங்க…? “

      அவன் மூச்சு விடாமல் பேச அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சி தான் .
      இவனுக்கு இவ்வளவு பேச தெரியுமா என்று….  
     அவளும் இதை எதிர்பார்த்து வைத்திருந்தாள்  தான் போலும்  .
      ஆனால் என்ன இவ்வளவு சீக்கிரத்தில் இந்த விடயத்தை பற்றி பேச மாட்டான் என்பது அவளது கணிப்பாக இருந்தது  .
         அவனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளிலிருந்து தன்னிடம் பேசாத ஒரு விடயம் அது போக திருமண சடங்கின் போது கூட அனைத்தையும் கடமைக்கு என்று அவன் செய்தது என அவன் நடந்து கொண்ட விதத்தை வைத்து அவள் புரிந்து கொண்டாள் .
       
           நிச்சயமாக அவனுக்கும் இதில் விருப்பமில்லை என்று….
         அவளுக்கும் விருப்பம் இல்லை தான் .
       எனினும் அவள் இன்னும் விவாகரத்து என்று ரீதியில் எல்லாம் யோசிக்கவில்லை .
      தனது தந்தை கூறிவிட்டார். நல்ல பையன் நல்ல வேலையில் இருப்பவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று….
      அதன் காரணமாக ஒப்புக்கொண்டாளே தவிர அவன் மீது எந்த ஒரு ஈர்ப்பும் அவளுக்கு கிடையாது  .
        எனினும் தனது தந்தையால் பார்த்து வைக்கப்பட்ட இந்த திருமணம் காலையில் தாலி ஏறி அதில் உள்ள மஞ்சள் ஈரம் கூட காயாத நேரத்திற்குள் அந்த பந்தத்தை முடித்துக் கொள்வதற்கு பேசினால் அவள் எவ்வாறு ஏற்றுக் கொள்வாள்…?
             எனினும் அவனிடம் கோபத்தை காட்டுவதில் எந்த ஒரு பயனும் இல்லையே!

     அவனிடம் முன்னையே பேசி இருந்தால் கூட நிச்சயமாக இருவரும் இந்த திருமண செய்து தடுத்து இருக்கலாம்  .
       ஆனால் தற்பொழுது நிலைமை கைமீறி போய்விட்டது  . அவன் கூறுவது போல் செய்து கொள்ளலாம் என்பதும் அவளது முடிவானது .

     “ஓகே சிவா எனக்கும் இந்த திருமணத்துல அவ்வளவா  விருப்பம் இல்ல தான் .
இருந்தாலும் என் அப்பா சொன்ன எந்த விஷயத்தை நான் இதுநாள் வர தட்டுனது கிடையாது  .

    அவங்களுக்காக மட்டும் தான் நானும் இதுக்கு ஓகே சொன்னேன் .
     நம்ம ஒரு ஆறு மாசம் இங்கே உள்ளவங்களுக்கு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நடிச்சுக்கலாம்  .

       அதுக்கப்புறம் சண்டை வந்து பிரிஞ்சு போற மாதிரி காட்டிறலாம் .
        இப்பயே இத பத்தி பேசினா நிச்சயமா ரெண்டு பேரு வீட்டு சைடுலையும் உள்ள பேரன்ட்ஸ் ரொம்ப பாதிக்கப்படுவாங்க .

       அதுவும் வயசானவங்க வேற திடீர் னு அவங்க கிட்ட இத பத்தி எல்லாம் பேச முடியாது .

       கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கப்புறம் நம்ம எப்படி பிரியலாம் என்பதற்காக பிளான போடலாம் …..

வெளியில உள்ளவங்களுக்கு மட்டும் தான் அம்மா ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இங்க நாலு செவத்துக்குள்ள நீங்க யாரோ நான் யாரோ …..” என்று கூறியவள் அத்தோடு அவனிடம் பேசும் முடித்துக் கொண்டு அங்குள்ள ஒரு சோபாவில் காலையும் நீட்டி படுத்துக்கொண்டாள்  .

       காலையிலிருந்து திருமணம் என்று சீக்கிரமாக எழுந்து அனைத்து சடங்குகளையும் செய்வது இப்பொழுது அவளுக்கு உடல் சோர்வை தந்துவிட்ட காரணத்தினால் அப்படியே உறங்கியும் விட்டாள் .

என்னடா இது காலையில் தான் கல்யாணம் ஆயிருக்கு  .
     அதுக்குள்ள டிவோர்ஸ் பத்தி பேசவும் அழுவா புலம்புவா ஒழுங்கா என்னோட வாழனும் னு சொல்லுவா னு பார்த்தா இவ பாட்டுக்கு ஓகே பிரியத்துக்கான  பிளான் அப்புறமா போட்டுக்கலாம் னு இவ்ளோ ஈசியா சொல்றா…. 

     படிச்ச பொண்ணு தானே அதனால அவ ஈசியா எடுத்து இருக்கலாம் என்று அவன் மனசாட்சி கூற மூளையோ ஒரு பெண்ணிற்கு ஒரு முறை அல்லது கழுத்தில் தாலி என்ற ஒன்று ஏறிவிட்டால் அதுவே பிரதானமாகி போகும் .

        அதை கட்டியவன் நல்லவனா கெட்டவனா என்பதை தாண்டி அவன் மட்டுமே அவளது அகிலம் என்ற ரீதியில் அவளது உள்ளம் யோசிக்க ஆரம்பித்து விடும்  .
     ஆனால் இவளுக்கு அப்படியெல்லாம் ஒரு எண்ணமும் இல்லை போலும் என்றும் நினைத்துக் கொண்டான் . எப்படியோ தனது வேலை சீக்கிரத்தில் முடிந்து விடும் என்ற ரீதியில் அவனும் உடல் சோர்வில் மஞ்சத்திலேயே படுத்து கொண்டான் .

கதவு தட்டப்பட முதலில் எழுந்தது என்னவோ சிவா தான் .  கதவை திறந்து கொண்டு பார்க்க வெளியில் மகேஷ் நின்று கொண்டிருந்தான் .
       “என்ன மச்சான் நைட்டு தூங்காம இருக்கணும்ன்றதுக்காக இப்பையே தூங்கிக்கிறியா…?” என்று நக்கலாக கேட்பவனை கொன்றால் என்ன என்ற அளவிற்கு அவனுக்கு கோவம் வந்தது .

      ஒரு நிமிஷம் இரு என்று அறைக்குள்ளே சென்று பார்த்தவன் அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு கதவை சத்தம் வராமல் சாற்றியவாறு அவனை அழைத்துக்கொண்டு தனியாக ஒரு இடத்தில் நின்று பேச ஆரம்பித்தான் .

“மச்சான் என்னோட முடிவா கிட்ட சொன்னேன்டா அவளும் சரி மூன்று மாதம் இல்லன்னா ஆறு மாசம் நம்ம ஒண்ணா இருந்துட்டு அதுக்கப்புறம் எப்படி பிரியலாம் அப்படிங்கிறதுக்கான பிளான் போடுவோம் ..
     வெளியில நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைட் மாதிரி நடிச்சுக்கலாம் அப்படின்னு ஈசியா சொல்லிட்டாடா…..

    என்னடா சொல்ற அந்த பொண்ணு அப்படியா சொன்னாச்சு என்னால நம்பவே முடியல  .

     காலைல தான் கல்யாணம் இருக்கு ,
     இருந்தாலும் நீ ஏன் அவ கிட்ட உடனடியா இத பத்தி பேசின …

     அவ உன்கிட்ட கோபப்படலையா சண்டை போடலையா எதுக்காக என் வாழ்க்கை ல வந்த னு கேட்கவே இல்லையா….?

     நீ சொல்ற எதுவுமே அவ என்கிட்ட பண்ணல .

       சொல்ல போனா இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போட்டு அதுக்கு பின்னாடி பிரச்சனையாகும் என்று தான் நான் இன்னைக்கே அத பத்தி பேசிட்டேன் .

        அவளுக்கும் இது ல பெருசா விருப்பம் இல்ல போல !
    அவங்க அப்பா சொன்னாங்கன்னு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் ….

அதான் இன்னைக்கே பேசி எல்லா விஷயத்தையும் முடிச்சாச்சு .
       வெளிய பாக்குறப்போ மட்டும் நாங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருந்தா போதும்னு சொல்லிட்டேன்…..

    நீ சொல்றத கேக்குறப்போ எனக்கு ஆச்சரியமா இருக்குது  .
      எந்த ஒரு பொண்ணுமே இவ்வளவு சீக்கிரமா தன்னை கட்டிக்கிட்ட ஒருத்தன்  கிட்ட கல்யாணம் ஆகி  முழுசா மூணு மணி நேரம் கூட ஆகாதப்போ இப்படி பேசுனா நிச்சயமா ஏத்துக்க மாட்டா ….

      ஆனால் அவ ஏத்துக்கிட்டத பார்க்கிறப்போ  எனக்கு தெரிஞ்சி அவ ரொம்ப தைரியசாலியா இருக்கலாம் …..

    நீ சொல்றது உண்மை தான் அவ தைரியசாலியா இருக்கறதுனால தான் அவ வேலையில இவ்ளோ நாளா நிலைச்சு இருக்கா .

       அது மட்டும் இல்லாம அவளுக்கு உள்ள ஒரு பெரிய பிளான் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது டா…

என்ன பிளான் இருக்க போகுது பெருசா….

நம்ம சாப்பிட்டு கைகழுறப்போ அந்த வன்சி னு  அவளோட ஃப்ரெண்டு எவனோ ஒருத்தன் வந்தான் இல்ல அவன் கிட்ட அவ பேசிக்கிட்டு இருந்தது நான் கேட்டேன் டா……”என்ற அங்கு அவன் கேட்டதை மகேஷிடம் கூற  அவனோ “வேலை விடயமாக இருவரும் ஏதாவது பேசி இருப்பார்கள் .
     அதை நீ ஏதாச்சும் தப்பா புரிஞ்சுகிட்டு இருப்பே .

     எப்படியோ உன்  ரூட்டு கிளியர் ஆயிடுச்சு இல்ல அது போதும்.
    என்ன அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியிறப்பதான் அவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க….” என்றவன் மேலும் அவனிடம் பேசாமல் ஜெயா கீழ் இருந்து கூப்பிடுவதால் அங்கு செல்கிறேன் என்று சென்று விட்டான் .

சிவாவுக்கும் அவன் கூறுவதை சரி என்று பட்டது .
     மீண்டும் தனது அறைக்குள் சென்று பார்க்க அங்கு அவள் இல்லை .

– தொடரும்🖤

You may also like

Leave a Comment

About Me

Featured