
சடங்கு சம்பிரதாயம் என்று ஒரு வழியாக்கி விட்டனர் காலையிலிருந்து மதியம் ஒரு மணி ஆகியும் யாராவது சாப்பாடு பற்றி பேசுவார்களா என்ற படியே எண்ணிக்கொண்டிருந்தான் சிவா .
போதா குறைக்க அந்த போட்டோகிராபர் திருமணத்திற்கு முன்பு பல புகைப்படங்களை எடுத்தாலும் பிறகும் அவ்வளவு புகைப்படங்களை எடுத்து குவித்து கொண்டிருந்தார் .
ஃபர்ஸ்ட் இவனை கொல்லனும் போட்டோகிராபர் என்ற பெயரில் நம்ம உயிரை வாங்குறானுங்கப்பா…
நேத்து நைட்ல இருந்து போட்டோ எடுத்து எடுத்து எடுத்து சிரிச்சு சிரிச்சு எனக்கு வாய் வலிக்கிறது……என்று போட்டோகிராபர் ஐ தன் மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தான் .
ஒருவழியாக போட்டோ எடுத்த பிறகு நீங்கள் செல்லலாம் என்று கூறவும் மணமக்கள் இருவரும் சென்றனர் .
சிவா ஆசையாக தனக்கு பிடித்த மைசூர்பாவை எடுத்து சாப்பிட வாய்க்கு அருகில் கொண்டு சென்றான் .
அவன் சாப்பிடுவதற்கு சரியாக கையில் ஸ்வீட் இருக்கும் போது ஒரு வலிய கரம் வந்து அவனது கரத்தை பற்றிக் கொண்டது .
என்னடா இது வாயில தானே வைக்க போன அதுக்குள்ள ஸ்வீட்டை காணோம் என்று எண்ணியபடி நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் தனது கையில் ஸ்வீட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது .
அந்தக் கைக்கு சொந்தக்காரனோ அந்த ஸ்வீட்டை அவனது வாய்க்குள் திணித்து கொண்டான் .
“வாவ் எவ்வளவு அருமையா இருக்கு இந்த மைசூர் பாகு . சூப்பர் சூப்பர் யாரு இந்த கல்யாணத்தோட சமையல் வேலையெல்லாம் பார்த்துக்கிட்டாங்க …..” என்று கத்தினான் அவன் . சமையலுக்கு சொந்தக்காரரும் துண்டை தனது தோளிலிருந்து இடுப்பில் கட்டியவாறு கைகளை கட்டிக்கொண்டு
“நான் தாங்க சமைச்சேன்…..
ஏங்க நல்லா இல்லையா பார்த்து பார்த்து சமைச்சேன்….
இந்த தடவையும் சொதப்பிரிச்சு போல….
எப்படி ஆச்சு….
இன்னும் ஒரு அரை மணி நேரத்துல நான் இன்னொரு மைசூர் பாகு செஞ்சு கொடுத்துடுறேன். அதுக்காக சம்பளத்தில எல்லாம் கை வச்சிராதீங்க….” என்று பணிவோடு கூறினார் அவன் முன்பு நின்று.
“ஐயோ அண்ணன் கொஞ்சமாச்சும் மூச்சு விட்டு பேசுங்க…..
ஃபர்ஸ்ட் கைய எடுத்து விட்டுட்டு இடுப்புல கட்டி இருக்க துண்டை எடுங்க….
இங்கே யாரும் யாருக்கும் அடிமை மாதிரி இருக்கணும் னு அவசியம் இல்ல .
அன்ட் நீங்களும் சம்பளத்துக்காக தான் வேலை செய்கிறீர்கள்….
வேலை செய்றவங்க வேலை வாங்குறவங்க கிட்ட இது மாதிரியெல்லாம் பண்ணனும் னு எந்த சட்டமும் சொல்லல . சொல்லப்போனால் நீங்க தான் இருக்கிறது ல பெஸ்ட் .
சாப்பாடு யாரு வேணா சமைக்கலாம் ஆனா அதுல உள்ள ஒரு ருசி அன்பு அதோட சேர்ந்தால் மட்டும் தான் கிடைக்கும் .
அத நம்ம அம்மா கைல சாப்பிடும் போது மட்டும் தான் உணர முடியும் . நீங்க செஞ்ச இந்த மைசூர்பாக்குல இருந்து என் அம்மாவோட கைப்பக்குவத்த நான் தெரிஞ்சுகிட்டேன் . எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல . அன்பா சமைச்சு பரிமாறதுக்கு யாரும் இல்ல .
ஒருவேளை அவங்க இருந்திருந்தால் எனக்கு சமைச்சு கொடுத்திருந்தாலும் இப்படித்தான் இருக்குமோ என்னமோ…..
உண்மையிலேயே நல்லா சமைச்சு இருக்கீங்க அண்ணா .
மைசூர் பாக்கு எவ்ளோ டேஸ்டா இருக்குன்னா கண்டிப்பா சாப்பாடு நல்லா இருக்கும் தான் .
எனக்கு ஃபர்ஸ்ட் ஒரு இலையை போட்டு அதுல நீங்க செஞ்ச எல்லா டிஷ் – அ யும் வைங்க .
சரிங்க தம்பி உக்காருங்க . இந்த அஞ்சு நிமிஷத்துல நான் இலைய போட்டு விடுறேன் .
ஏய் யாருடா அங்க எல்லாத்தையும் எடுத்து வைங்க….” கத்திக் கொண்டிருந்தார் அந்த பாசக்கார சமையல்காரர் .
இலையில் வைத்து அத்தனை உணவுகளையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் வன்சி . வன்சி என்று அழைக்கப்படும் ரிஷவன்சி .
ரிஷவன்சி சிறுவயதிலிருந்து தாய் தந்தை என்று ஆசிரமத்தில் வளர்ந்து அதில் கிடைத்த உதவி தொகை மூலம் தனது படிப்பையும் வாழ்க்கையையும் நடத்திக் கொண்டிருந்தான் . அதன் பிறகு நல்ல வேலைக்கு சென்று தற்பொழுது ஒரு சொந்த வீடு கார் என்று ஆடம்பரமான வாழ்க்கையில் இருந்தாலும் தனது பழைய வாழ்க்கை எண்ணி அடக்கம் ஆகவே வாழ்ந்து கொண்டிருந்தான் .
“என்னா டேஸ்ட்டு என்னா டேஸ்ட்….
எப்படி இவ்ளோ ருசியா சமச்சி இருக்கீங்க தெரியுமா ……..?” என்று பாராட்டி தள்ளி கொண்டு இருந்தான் வன்சி .
சிவாவோ தனது ஸ்வீட்டை அவன் புடுங்கி தின்ற கோபத்தில் தனது நண்பனின் காதை கடித்திக் கொண்டிருந்தான் .
“மச்சான் யாருடா இவன்…..
வந்தான் என் கையில இருந்த ஸ்வீட்டை எடுத்து அவன் தின்னான்…..
சமையல்காரனை பாராட்டினான் . இப்ப என்னன்னா இலையை போட்டு சமையல்காரர பாராட்டிட்டு அவன் பாட்டுக்கு சாப்பிட்டுகிட்டே இருக்கான்…..
மாப்ள நானே இன்னும் சாப்பிடாம உக்காந்து இருக்கேன் . இவன் என்னனா இப்படி கொட்டிக்கிட்டு இருக்கான் .
யாரு மச்சான் இவன் உன் பிரண்டா….
இல்லையே….
உனக்கு பிரண்டுனா அது நான் மட்டும் தான் . எனக்கு பிரண்டுனா அது நீ மட்டும் தான் . அப்படி இருக்கேல இவன் யாரோட ஃப்ரெண்டா இருக்க முடியும் .
ரொம்ப என் அண்ணனை போட்டு கேள்வி மேல கேள்வி கேட்காதீர்கள் மிஸ்டர் சிவா .
ஹீஸ் மை ஃபிரண்ட் . சின்ன வயசுல இருந்து நானும் அவனும் ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ் இப்போ ஒன்னை வேலை பாக்குறோம் கூட……”.
என்று கூறினாள் ஷர்வாணி .
“உங்க பிரண்டா சிஸ்டர் சொல்லவே இல்ல நானே போய் அவங்க கிட்ட போய் அறிமுகமாகி இருப்பேன் . நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க . மச்சான் பக்கத்துல பிரியாணிய வெச்சுகிட்டு சாப்பிட வேணாம் னு சொன்னா நீ என்ன பண்ணுவ பாவம் . நீ சாப்பிடு தங்கம் …. ” என்று இரு அர்த்தத்தில் கூறினான் மகேஷ் .
சிவா சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற சொற்களுக்கு ஏற்றபடி தனது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான் .
ஷர்வானி அவனது பக்கத்தில் அமர்ந்திருந்த வன்சியிடம் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .
“ஹே வன்சி நீ இப்ப கல்யாணத்துக்கு வருவேன் நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல . பிஸி ல சுத்திக்கிட்டு இருக்க…..
எப்படிடா வந்த . நீ சீக்கிரம் வருவேன் னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணன் .
பட் நேத்து தான் ஒரு புது கேஸ் உன் கைக்கு வந்து இருக்குன்ற இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைச்சுச்சு . நீ கண்டிப்பா வரமாட்டேன்னு தான் எக்ஸ்பெக்ட் பண்ணினேன் . ஆனா கரெக்டா வந்துட்ட . என்ன கல்யாணம் முடிஞ்சு வந்திருக்க அவ்வளவு தான் . வந்தது வராதுமா என்ன பாக்காம நீ பாட்டுக்கு சுவீட்டு திங்கப் போயிட்ட பாத்தியா…..
அங்க நிக்கிற மச்சான் .
ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்ப வரைக்கும் நீ மாறவே இல்லை …….” .
சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவாவின் ஷர்வானியின் மச்சான் என்ற வார்த்தையில் புரையேறியது .
“மச்சானு கூப்பிடற அளவுக்கு அப்படி என்ன பிரண்ட்ஷிப் எனக்கு தெரியல!” என்று தனக்குள்ளயே கருவிக் கொண்டான் .
“அவ அவ பிரண்ட கூப்பிடாம உன்னைய வா மச்சான் னு கூப்டுவா . வாய்ப்பில்ல ராஜா அதுக்கு வாய்ப்பே இல்லை … ” என்று அவனது மனசாட்சி அவனிடம் காரித் துப்பியது .
திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை என்று அவனது நண்பனிடம் அவள் பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு சிறிது கோபத்தை உண்டாக்கியது .
பாவம் அவனுக்குப் புரியவில்லை போலும் . திருமணம் நிச்சயக்கப்பட்ட அன்றிலிருந்து அவன் அவளிடம் பேசாதது தனது தவறும் கூட என்று .
ஒருவழியாக இருவரும் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர் . உண்மையிலேயே வன்சி திருமணத்திற்கு வரமாட்டான் என்று மிகுந்த வருத்தத்தோடு இருந்தாள் ஷர்வாணி .
சிறு வயதிலிருந்து தனக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்வதற்கு அவன் மட்டுமே அவளை பொருத்தவரை .
ஷர்வானி யாரிடத்திலும் அவ்வளவு எளிதில் பழகி விட மாட்டாள் .
அவ்வாறு பழகினாலும் தனக்கென்று ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு அதன் எல்லையிலேயே நின்று கொள்பவள் என்று தான் கூற வேண்டும் .
அப்படிப்பட்ட எந்த வரைமுறையும் இன்றி பழகிய ஒரே நண்பன் தான் வன்சி . வன்சிக்கும் சிறுவயதில் இருந்து பெரிதாக நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இல்லை என்பதால் இருவரின் மனப்போக்கு ஒருவராக இருந்து தான் இருவரும் நண்பராகி கொண்டார்கள் .
நிறைய விடயங்களில் இருவருக்குமே ஒத்து போகும் . வன்சியும் சிறுவயதில் இருந்து தனிமையில் இருந்தவன் . ஆதலால் தன்னை போலவே தனிமை சூழ்ந்து இல்லை இல்லை தனிமையை தன்னை சுற்றி சூழ வைத்துக் கொண்ட ஷர்வாணியை தனது தோழியாக்கி கொண்டான் .
வன்சியும் ஒரு டிடெக்டிவ் .
சிறந்த கெட்டிக்காரன் . 27 பிராயத்திற்குள் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் சமூகத்தில் உருவாக்கிக் கொண்டவன் .
மகேஷும் இவர்களோடு சேர்ந்த அமர்ந்து உணவருந்தினான் .
“மச்சான் அந்த வன்சி ரொம்ப அழகா இருக்கான் இல்ல . ஏன் டா அவன் பேசுறப்போ தெரிஞ்சுச்சுடா . அவனுக்கு அப்பா அம்மா யாரும் இல்ல போல….
பாவம் நம்மளையும் அவனோட கேங்குல சேர்த்துக்கலாமா….
இல்லை இல்லை தப்பா சொல்றன் நம்ம கேங்குல அவன சேத்துக்கலாமா என்ன மச்சி சொல்ற…..”
மகேஷ் ஐ கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் சிவா .
“ஆமா பெரிய கேங்கு போ நம்மளே ரெண்டு பேரு தான் இருக்கோம் ,
இது பேரு கேங்காம் கேங்கு பேசாம இருடா கொஞ்ச நேரம் . எப்ப பார்த்தாலும் ஏதாவது பேசிகிட்டு . ஃபர்ஸ்ட் இங்கே இருந்து நான் வீட்டுக்கு போகணும் இந்த அட்மாஸ்பியரே எனக்கு புடிக்கல…. ” என்று கை கழுவியவாறு கூறிக் கொண்டிருந்தான் .
அதற்குள் வன்சியும் ஷர்வாணியும் கை கழுவிவிட்டு இவர்கள் இருக்கும் இடத்திற்கு சற்று தள்ளி நின்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர் .
கடைசியாக சிவாவின் காதில் விழுந்தது .
“நம்ம ரெண்டு பேரோட வேலை முடியுற வரைக்கும் இங்க என்ன நடந்தாலும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு தான் ஆகணும் .
ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் இதுல இருந்து வெளிய வந்துடனும் .
இங்கே இருக்கிறவங்கள பொருத்தவரைக்கும் நீயும் நானும் பிரெண்ட்ஸ் மட்டும் தான் . அதுக்கப்புறம் நம்ம லைஃப் ஐ நமக்கு புடிச்ச மாதிரி அமைச்சுக்கலாம் …..” என்று கூறினான் வன்சி .
“ஆமா நீ சொல்றதும் கரெக்ட் தான் நம்ம வேலை முடியுற வரைக்கும் நமக்கு இங்க நடக்குறதுக்கெல்லாம் சம்மதம் அப்படின்ற மாதிரி நடிச்சு தான் ஆகணும் . கூடிய சீக்கிரம் வேலையை முடிச்சிட்றன் . நீயும் லேட் பண்ணாம எல்லா வேலையும் சீக்கிரம் முடித்துவிடு .
அப்புறம் எனக்கு நீ எப்பயும் கால் பண்ண வேணாம் . நானே உனக்கு தேவைப்படும்போது மெசேஜ் பண்றேன் அநாவசியமா போனும் மெசேஜ் யும் பண்ணிராதா .
அது நமக்கு தான் ஆபத்தா முடியும் . நம்மள சுத்தி உள்ளவங்களுக்கு நம்ம வேலை சந்தேகத்தை ஏற்படுத்தும் . அப்புறம் நம்ம நெனச்சது நம்மள சாதிக்க முடியாது … “என்று கூறினாள் ஷர்வாணி . அவள் கூறியதை வன்சியும் ஆமோதித்தான் .
“சரி சரி நம்ம பேசிக்கிட்டது யாருக்கும் தெரிய வேணாம் . சீக்கிரம் வா போகலாம் …. ” என்று இருவரும் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் .
இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சிவாவுக்கு ஏதோ தவறாக பட்டது .
பிரெண்ட் னு தான நம்மிடம் சொன்னா இப்போ என்னான்னா ப்ரண்டு இல்ல என்ற மாதிரி பேசறா…..
நிச்சயமா இவளுக்குள்ள பெரிய ரகசியம் இருக்கு .
அது என்ன னு கண்டுபிடிக்கிறேன்…..
ஒருவாறாக இருவரும் பேசி முடித்தனர் .
மணமக்கள் மண்டபத்திலிருந்து கிளம்பினர் . வன்சி தான் கொண்டு வந்த பரிசை கொடுத்துவிட்டு ஷர்வாணியிடம் ஒரு அர்த்தப் புன்னகையோடு விடைபெற்றான் .