Home FAMILY NOVEL9) வலி 💔

9) வலி 💔

by sreejanovels
7 views

அத்தியாயம் 9

அனைவரும் காலை உணவு உண்ண டைனிங் டேபிள் வந்து ஆஜராக, அன்னலட்சுமி வீட்டு பணிப்பெண் இருவரும் சேர்ந்து காலை உணவை டேபிளில் வைத்துக் கொண்டிருந்தனர்…

“ப்பா… நேத்து மாதிரி எனக்கு ஊட்டி விடு” என்று பிஞ்சு மொழியில் ஆத்விக் ஆதித்யாவை பார்த்து கேட்க, மகிழ்ச்சியோடு அவனுக்கு இட்லியை ஊட்ட ஆரம்பித்தான். அதே சமயம் கிண்ணத்தில் ஒரு இட்லியைப் போட்டு, சாம்பார் மேலோட்டமாக எடுத்து கிண்ணத்தில் ஊற்றி நன்றாகப் பிசைந்து, அகல்யா அனன்யாவுக்கு ஊட்டி விட, அவளும் சேட்டை செய்யாமல் அமைதியாக உண்டு முடிக்க…

“ப்பா.. அம்மாவ பார்க்காத எனக்கு ஊட்டி விடு” என்று சத்தமாகச் சபையில் சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நீண்ட நேரமாக மகளுக்கு ஊட்டி விடும் அழகு மனைவியைத் தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்…

“கண்ணா தேங்காய் சட்னி” என்ற அன்னலட்சுமி தன் மகனுக்கு தேங்காய் சட்னி வைப்பது போல் பாவனை செய்ய, சட்டென்று திரும்பி அவரைத் தடுத்து நிறுத்தி, “தேங்காய் சட்னி தாளிக்காம இருக்கு அப்படின்னா இவர் கண்டிப்பாகச் சாப்பிட மாட்டார். தாளிச்சி வச்சா தானே அவருக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டு வைத்தவளை அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்க்க, அப்போதுதான் பழைய ஞாபகத்தில் பேசி விட்டோம் என்று நாக்கைக் கடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட…

“அண்ணி பாப்பா தான் சாப்பிட்டாளே நீங்க போய் சாப்பிடுங்க அண்ணாவை பார்த்துக்கோங்க. நான் பசங்கள கூட்டிட்டு கார்டன்ல வாக்கிங் போறேன்” என்று மூன்று குழந்தைகளையும் தோட்டத்திற்கு அஸ்வினி அழைத்துச் சென்று விட, கணேஷ் தன் அறைக்குள் சென்று அலுவலகத்திற்குத் தேவையான பிரிப்பரேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அன்னலட்சுமி அமைதியாகத் தன் அறைக்குள் சென்று விட்டார். கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தனர்…

“இட்லி வேணும், பூரி எடுத்து கிழங்கு அங்க இருக்கு பாரு, கார சட்னி வேணும், சாம்பார் யாரு ஊத்துவா” என்று உரிமை பெற்ற கணவன் போல் அவளை வேலையாக வாங்கிக் கொண்டிருக்க, கடுப்பில் மொத்தப் பாத்திரத்தையும் அவன் பக்கம் தள்ளிவிட்டு ஓரமாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஹலோ இந்த மாதிரி புருஷன் உரிமையா கேக்க மாட்டானு ஏங்கி எத்தனை பொண்ணுங்க இருக்காங்க தெரியுமா? ஆனால் நான் உன்கிட்ட உரிமையா கேட்டு வேலை செய்யச் சொல்றேன், நீ அலுத்துக்கிற. நீ சந்தோஷமா எனக்குப் பரிமாறி வழி அனுப்பினால் தானே என்னால வேலைக்குச் சம்பாதிக்க முடியும்? நம்ம பசங்களுக்கு நல்லா சம்பாதிச்சுப் போட முடியும், அப்பதானே உங்களால் குடும்பம் நடத்த முடியும். என்ன குடும்பப் பொண்ணு நீ” என்று கேட்டவுடன், இட்லி எடுத்து அவன் வாயில் மொத்தமாகப் போட்டு அடக்கி விட, ஆதித்யாவுக்குத் தொண்டை குழி அடைப்பது போல் ஆக, வேறு வழி இல்லாமல் அவளை இழுத்து அணைத்துத் தன் வாயில் இருப்பதை அவள் வாய்க்குப் பரிமாறினான்..

அதிர்ச்சியில் அவள் கண்களை விரிக்க, அவனும் அவளைப் பார்த்து கண்ணடித்து மெதுவாகத் தன் இதழைத் நுழைத்துக் கொண்டு இருந்தான்.

“நான் சொல்றத செய்யலைன்னா இப்படித்தான் இருக்கும் தண்டனை. இன்னிக்கு இது போதும். மத்தியானம் லஞ்ச் எடுத்துக்கிட்டு, அதுவும் உன் கையால சமைச்சுச் சாப்பாடு எடுத்துக்கிட்டு ஆபிஸ்க்கு வர. ஆபீஸ் அட்ரஸ் நம்ம சீக்ரெட் ரூம் எல்லாம் உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். எதுவும் மாறல அப்படியே இருக்கு… அப்புறம் நம்ம சீக்ரெட் ரூம்” என்று சொல்லிச் சிரிக்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள…

“அது சரி சாப்பிட்டு வா, என்னை வழி அனுப்ப வேண்டாம்??” என்று குறும்பாகச் சொல்லித் தன் அறைக்குச் செல்ல, சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்தவள் அங்கு இருக்கும் டேபிளைச் சுத்தம் செய்து, கிச்சனுக்குள் பாத்திரங்களை வைத்து ஹாலிற்கு வரும்போது சரியாகக் கோட் சூட் சகிதமாக வந்து கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்தவளுக்குப் பழைய ஞாபகங்கள் வந்தது.

“அடேய் மாமு எதுக்கு வெறப்பா இந்த கோட் சூட் போட்டு வேகாத வெயிலில் சுற்ற வேண்டும்? நார்மல் ஃபார்மல் போட்டுட்டு போலாம் இல்லையா? நீ எம் டி அப்படின்னு இப்படி எல்லாம் போகணும்னு அவசியம் இல்ல” என்று சொல்லி கோட்டை புடுங்கிக் கொண்டு ஓடும் தருணங்கள் ஞாபகம் வந்தது..

“அப்பா மாமா” என்று மூன்று குழந்தைகளும் அவனைச் சுற்றிவர, அதே சமயம் கணேஷ் கீழே வர, இரண்டு ஆண்களும் அலுவலகத்திற்கு கிளம்பத் தயாராக இருந்தனர்…

“கணேஷ் நீ ஹாஸ்பிடலுக்குச் செக்கப் போறதா சொல்லிட்டு இருந்த, எப்ப போகப் போறீங்க??” என்று ஆதித்யா கேட்க, “ஈவினிங் டாக்டர் வருவாங்களாம், ஈவினிங் செக்கப் பார்த்துக்கொள்ளலாம், வீட்டுக்குச் சீக்கிரமாக வந்துவிடலாம். ஓகே குட்டி பாய்” என்று மகனுக்கும் மருமகன் மருமகளுக்கும் முத்தம் கொடுத்து கணேஷ் மனைவியிடம் கண் அசைத்து விடை பெற…

இங்கே ஆதித்யா விடைபெறும் பொழுது அவன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவன் பின்னாலே அவன் மனைவி வர, வெளியே வந்த பிறகு சுவர் ஓரமாக அவளைச் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டு, “மத்தியானம் லஞ்ச் எடுத்துட்டு வா, உனக்காக வெயிட் பண்ணுவேன்” என்று சொல்லி அவளிடம் இருந்து விடைபெற, அவன் விடைபெற்றுச் சென்றவுடன் அவளுக்கு ஏதோ ஞாபகம் வந்தது. ஆம், அவள் கணவன் டேவிட்.

“நீ அவனை மறக்காம ஏன் என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்க? கல்யாணம் பண்ணிக்கத் தெரிஞ்ச உனக்கு புருஷனுக்கு இதெல்லாம் செய்யணும்னு தோணாதா? நானும் மனுஷன் தானே, எனக்கு இதெல்லாம் ஆசை இருக்குடா. உனக்குக் கஷ்டமா தான் இருக்கும் ஆனா நான் தான் உன் கணவன் அப்படின்னு முடிவு பண்ணி பாரு எல்லாம் சூப்பரா அமையும். உனக்காக நான் வெயிட் பண்றேன், ஆனா கொஞ்சமாவது என்னை நம்பி பேசு பழகு, இப்படி இருக்காத” என்று திருமணமான புதிதில் மூன்று மாதம் இவ்வாறு அவளுக்குப் பாடம் நடத்தப்பட்டது. மீண்டும் அதே பாடம் நடைபெறுகிறது. தன் வாழ்க்கை நினைத்து அவளுக்கே சிரிப்புதான் வந்தது, யாரிடமிருந்து விடைபெற்று வந்தோமோ மீண்டும் அவனுடனே சரணடைய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று…

‘ஆரம்பத்துல உன்கிட்ட விலகி இருந்தேன், கொஞ்சம் கொஞ்சமா என் மனச மாத்தி உன் கூட சந்தோஷமா வாழ்ந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த கடவுள் என்கிட்ட இருந்து உன்ன பறிச்ச மாதிரி, மறுபடியும் என்னால் ஒரு உறவை இழக்க முடியாது. இந்த குடும்பம் மொத்தமும் எனக்காக இருக்கு, இனி அவங்களுக்காக மாறி அவங்க மேல அன்பு செலுத்த ஆரம்பிச்சா ஏதாவது கண்டிப்பா பிரச்சனை வரும். இந்த ஜென்மத்துல நான் ஆதித்யாவுக்கு மனைவியாக முடியாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று சமையல்கார பெண்மணியிடம் லிஸ்ட் போட்டுக் கொடுக்க, அவரும் மார்க்கெட் சென்று ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் வாங்கி வந்து குவித்தார் அவனுக்குப் பிடிக்கும் என்று…

சிக்கன் ப்ரை, மீன் குழம்பு, மட்டன் சூப், முட்டை பொரியல் போன்றவற்றைச் செய்து முடித்துச் சற்று நேரம் குழந்தைகளுடன் விளையாட, சரியாக மணி 12 என்று காட்டியது.

“மணி 12 ஆயிடுச்சு, அரை மணி நேரத்துல கம்பெனி போய் சாப்பாட்ட நான் கொடுத்துட்டு வந்துடுறேன். நீங்க எல்லாரும் குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க” என்று சொல்லி அன்னலட்சுமி கிளம்ப எத்தனிக்க இருக்கும் போது, “வேண்டாமா, காலைலதான உங்களுக்கு பீபி அதிகமாகி தலை சுற்றுச்சு. அதும் இல்லாம அஸ்வினி பிரெக்னன்ட்டா இருக்காங்க, நீங்க அவங்க கூட இருந்து அவங்கள பாத்துக்கோங்க. குழந்தைங்க சமத்தா விளையாடி தூங்கிடுவாங்க. நான் லஞ்ச் எடுத்துக் கொண்டு போறேன். அவர் என்னதான் வரச் சொன்னாரு, அண்ணாவுக்கும் சேர்த்துதான் நான் போயிட்டு சீக்கிரமாகவே வந்து விடுவேன்” என்று சொல்லி ஆதித்யா மற்றும் கணேஷ் இருவருக்கும் தனித்தனியாக உணவை எடுத்துக் கொண்டு வீட்டின் காரை உபயோகப்படுத்தி அலுவலகத்திற்குச் சென்றாள்…


“டேய் எப்பவுமே லஞ்ச் பீரியட்க்கு நான்தான் உன்னை வா வா அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கணும், இன்னைக்கு என்ன எனக்கு முன்னாடி இங்க வந்து உக்காந்துக்கிட்டு இருக்க? என்ன ஸ்பெஷல்?” என்று கணேஷ் ஆதித்யாவிடம் கேட்டுக் கொண்டே இருக்கும் போது, அறைக்குள் புன்னகை முகமாக உணவு கேரியரை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள் அகல்யா. இளம் ரோஜா வண்ணத்தில் தங்க பார்டர் கொண்ட மைசூர் சில்க் அட்டகாசமாக அவளுக்குப் பொருந்த, நேற்று அவன் கட்டிய புது மஞ்சள் தாலி என அழகு பதுமையாய் வருகை தந்த தன் தேவதையைப் பார்க்கப் பார்க்கத் திகட்டியது அவனுக்கு..

“அட தங்கச்சி என்னமா நீ வந்து இருக்க? எப்பவுமே அத்தை தான் வருவாங்க. சரி சரி என்னைக்கும் இல்லாமல் இவன் லஞ்ச் பீரியட் சீக்கிரம் வந்து இருக்கான்னு பார்த்தேன், உன்னோட மாயாஜாலம் தானா? கொடுத்துடுங்க, நான் என்னோட கேபின்ல போய் சாப்பிடுகிறேன்” என்று அவனுக்கான உணவை வாங்கிக் கொண்டு சென்று விட, எங்கே கணவன் மனைவியும் தனித்துவிடப்பட்டனர். பிறகு தட்டில் அவனுக்கான உணவைப் பரிமாற, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒவ்வொன்றாகப் பரிமாறும் அழகைப் பார்க்க ஆசை அலை மோதியது.

அனைத்தையும் பரிமாறி முடித்து அருகில் இருக்கும் நாற்காலியில் அமரப் போனவளைத் தன் மடியில் அமர வைத்து முதலில் அவளுக்கு உணவை ஊட்ட… “நான் வீட்டுக்குப் போய் சாப்பிடுறேன் நீங்க முதல்ல சாப்பிடுங்க, பசியோட இருப்பீங்க” என்று அவன் கையைப் பிடித்து அவனுக்கு உணவை ஊட்டி விட, நிம்மதியாக மொத்த உணவையும் மனைவியே ஊட்டி விடத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவன், அனைத்துப் பாத்திரத்தையும் சுத்தப்படுத்தி வந்தவளை அழகாகத் தூக்கிக்கொண்டு தன் சீக்ரெட் ரூமுக்கு அழைத்துச் செல்ல, அந்த அறையைப் பார்த்தவளுக்குப் பயம் வந்துவிட்டது. இங்கே வந்தால் இவன் என்ன செய்வான் என்று இவளுக்குத் தெரியுமே.

“என்ன பண்ணப் போறீங்க??” என்று கேட்ட அவளைக் கட்டிலில் அமர வைத்து, “பொறுமை பொறுமை, அந்த எண்ணத்துல இல்ல. ரொம்ப டயர்டா இருக்கு, ஒரு மணி நேரம் பிரேக். அதான் இந்த மாதிரி மத்தியான டைம்ல தூங்கிட்டு ரொம்ப நாள் ஆகுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று கொஞ்சும் மொழி கூறிக்கொண்டு அப்படியே அவளைக் கட்டிலோடு சாய்த்து, அவள் நெஞ்சில் மீது தலை வைத்து உறங்க ஆரம்பிக்க, அவள் அமைதியாகத் தலை வருடி கொடுத்தாள்.

எதிர்பார்த்த நாட்களில் கிடைக்காத அன்புக்காக ஏங்கும் அவன்; முதல் ஒருவனுக்கு மொத்த மனதில் கொட்டி தீர்த்து ஏமாற்றத்தை அடைந்து, இன்னொருத்தனிடம் அன்பை வாங்குவதற்கு முன்பாக வாழ்வை இழந்து, மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறது அவள் வாழ்க்கை…

You may also like

Leave a Comment

About Me

Featured