அத்தியாயம் 18
சில்வா சொன்ன வார்த்தைகள் அந்த நிசப்தமான காட்டில் இடி போல விழுந்தன. ரிகார்டோவுக்கு ஒரு மகளா? இத்தனை ஆண்டுகள்
அவரின் அரவணைப்பில் தொலைதூரத்தில் இருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கூட டேவிட் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சற்று அதிர்ச்சி தான் அடைந்தான்.
“சில்வா, பொய் சொல்லாதே. ரிகார்டோ ஒரு தனிமரம்னு தான் எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க. அவருக்கு மகளா?”
என்று கோபமாக டேவிட் அவனது சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
“உண்மைதான் டேவிட். அவ பேரு மரியா. அவளைப் பத்தின விவரம் ரிகார்டோவோட அந்தரங்க ஃபைல்ல கூட இருக்காது. அவளை ஒரு ரகசியக் கோட்டையில வச்சு வளர்த்திருக்காரு. அந்த சுவிஸ் பேங்க் பாஸ்வேர்ட் அவளோட கழுத்துல இருக்கிற லாக்கெட்ல தான் இருக்கு. ஆனா அவளைத் தொடுறது சாமானிய விஷயம் இல்லை. அவளைப் சுத்தி எப்போதும் ஒரு பெண் மெய்க்காப்பாளர் படை இருக்கும்,” என்று சில்வா நடுங்கியபடி சொன்னான்.
காயத்ரி யோசனையில் ஆழ்ந்தாள். “டேவிட், இதான் நம்ம சான்ஸ். ரிகார்டோவோட பலவீனம் அவரோட மகளா இருந்தா, அவளை நாம கைபத்தினா ஆண்டனியை மிரட்டி பணத்தையும் அதிகாரத்தையும் திரும்ப வாங்க முடியும்.”
சாரு குறுக்கிட்டான். “ஆனா ஒரு பொண்ணைக் கடத்துறது போலீஸ் முறைப்படி தப்பு அக்கா.”
“சாரு, இது கடத்தல் இல்லை… ஒரு கிரிமினலோட சொத்தை மீட்கப்போறோம். வேற வழி இல்லை, ஒரு பொண்ண கடத்தறது எவ்ளோ பெரிய தப்புன்னு நீ சொல்றனா அதுக்கு காரணம் நம்ம அம்மா அப்பாவோட வளர்ப்பு நீ ஒரு, கண்ணியமான ஆண் என்று அர்த்தம். ஆனா அந்த ரிக்கார்டோ மனசாட்சி இல்லாத மிருகம் அவன மாதிரி ஆட்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவைதான்”
என்றாள் காயத்ரி உறுதியாக.
மறுநாள் அவர்கள் மரியா இருக்கும் அந்த ரகசியக் கோட்டை போன்ற மாளிகையைத் தேடிப் புறப்பட்டனர். அது மெக்சிகோவின் ஒரு கடற்கரை ஓரம் இருந்த தனிமையான பகுதி. காயத்ரி ஒரு சுற்றுலாப் பயணி போலவும், டேவிட் அவளது கைடு போலவும் வேடமிட்டனர்.
தூரத்திலிருந்து பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது, மாளிகையின் பால்கனியில் ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தனர். அவளது முகம் அப்படியே ரிகார்டோவின் சாயலில் இருந்தது, ஆனால் கண்களில் ஒருவிதமான சோகம் தெரிந்தது.
“அவதான் மரியா,” என்றான் டேவிட்.
திடீரென்று அந்த மாளிகையை நோக்கிச் சில கருப்பு நிற ஜீப்புகள் வருவதைக் கண்டனர். அதிலிருந்து இறங்கிய ஆட்களின் கைகளில் ‘ஆண்டனி’யின் ஓநாய் முத்திரை இருந்தது.
“டேவிட்! ஆண்டனிக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருச்சு போல. அவன் மரியாளைக் கொன்னுட்டு அந்தப் பாஸ்வேர்ட்டை எடுக்கப் போறான்!” என்று காயத்ரி பதறினாள்.
“நம்ம பிளான் மாறிடுச்சு காயு. இப்போ நாம அவளைக் கடத்தப் போறது இல்ல… அவளைக் காப்பாத்தப் போறோம்,” என்று சொன்ன டேவிட், தனது துப்பாக்கியைச் சுழற்றிக்கொண்டு மாளிகையின் பின்சுவர் வழியாக ஏறினான்.
ஆண்டனியின் ஆட்கள் மாளிகைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். மரியாவின் மெய்க்காப்பாளர்கள் பதிலுக்குச் சுட்டாலும், ஆண்டனியின் படை பலம் அதிகமாக இருந்தது. மரியா அலறிக்கொண்டு ஒரு அறைக்குள் ஒளிந்தாள்.
ஆண்டனியின் ஆள் ஒருவன் மரியாவைக் கண்டுபிடித்து, அவளது கழுத்தில் இருந்த லாக்கெட்டைப் பறிக்க முயன்றபோது, ஒரு குண்டு அவனது கையைத் துளைத்தது.
டேவிட் ஜன்னல் வழியாகப் பாய்ந்து உள்ளே வந்தான். “மரியா, பயப்படாதே! என் கூட வா!”
மரியா பயத்தில் பின்வாங்கினாள். “நீ யாரு? என்னைக் கொல்ல வந்தவனா?”
“உன் அப்பாவால வளர்க்கப்பட்டவன் நான். ஆனா இப்போ உன்னைக் காப்பாத்த வந்திருக்கேன்,” என்று டேவிட் அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.
காயத்ரியும் சாருவும் வெளியே இருந்து ஆண்டனியின் ஆட்களைத் தடுத்துக்கொண்டிருந்தனர். டேவிட் மரியாவுடன் வெளியே வந்து காரில் ஏறினான். ஆண்டனியின் ஆட்கள் அவர்களைத் துரத்தத் தொடங்கினர்.
“டேவிட், அந்த லாக்கெட் குள்ள பாஸ்வேர்ட் மட்டும் இல்ல… ரிகார்டோவோட எல்லா ரகசிய டீலிங்ஸும் இருக்கு!” என்று மரியா அழுதபடி சொன்னாள்.
காரின் வேகமும், துப்பாக்கிச் சத்தமும் அந்த கடற்கரைச் சாலையை ரணகளமாக்கியது. ஒரு திருப்பத்தில் கார் திரும்பும்போது, காயத்ரி டேவிட்டைப் பார்த்து, “டேவிட், மரியாவை பத்திரமா பாத்துக்கணும். ஆண்டனி இப்போ வெறிபிடிச்சு அலைவான்!” என்றாள். அவனுக்கு யார் மேலயும் பரிதாபம் அன்பு எல்லாம் கிடையாது. அவன் ஒரு மிருகம் தனக்கு தேவை என்றால் யாரை வேணாலும் கொன்று விடுவான் அந்த ஆண்டனி கிட்ட இருந்து இவளை பத்திரமா மீட்டு எடுத்தா போதும்.
என்று காயத்ரி பயிர் சொல்லிக் கொண்டே இருக்க டேவிட் அவள் கைகளை பிடித்து சமாதானம் செய்தான்.
,,,
கார் ஒரு பாழடைந்த கலங்கரை விளக்கத்தின் அருகே வந்து நின்றது. அலைகளின் சத்தம் அந்த இடத்தின் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. மரியா இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள். காயத்ரி அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினாள்.
“மரியா, பயப்படாதே. நாங்க உன்னை எதுவும் செய்ய மாட்டோம். ஆனா உன் கழுத்துல இருக்கிற அந்த லாக்கெட் எங்களுக்கு வேணும்,” என்றாள் காயத்ரி மென்மையாக.
மரியா அந்த லாக்கெட்டைத் தன் கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். “இது என் அப்பாவோட கடைசி அடையாளம். நீங்க எல்லாம் யாருன்னு கூட எனக்குத் தெரியாது. அவர் இதை ஒருபோதும் கழற்றக்கூடாதுன்னு சொல்லியிருக்கார். அப்படி இருக்கும் போது எப்படி நான் உங்க கைல இத குடுக்க முடியும்??”.
டேவிட் வெளியே நின்றபடி கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது போன் ஒலித்தது. அது ஆண்டனி தான்.
“டேவிட்! நீ ரொம்ப சாமர்த்தியசாலி தான். மரியாவைத் தூக்கிட்டுப் போயிட்ட. ஆனா அந்த லாக்கெட் இல்லாம உன்னால ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாது. அந்த பாஸ்வேர்ட் என் கைக்கு வரணும். இல்லன்னா, இப்போ என் கஸ்டடில இருக்கிற காயத்ரியோட அம்மாவை நீ உயிரோட பார்க்க மாட்ட!”
டேவிட் அதிர்ச்சியில் உறைந்தான். “ஆண்டனி! அம்மா இந்தியாவுல சாருவோட போலீஸ் நண்பர்களின் பாதுகாப்புல இருக்காங்க. நீ பொய் சொல்ற!”
“அப்படியா? இதைக் கேளு,” என்றான் ஆண்டனி.
மறுமுனையில் சீதாவின் குரல் கேட்டது. “டேவிட்… காயு… என்னைக் காப்பாத்துங்கப்பா!”
சாரு அருகில் வந்து போனைப் பிடுங்கினான். “ஆண்டனி! என் அம்மாவைத் தொட்ட… உன்னைத் துண்டு துண்டா வெட்டுவேன்!”
“ஹாஹா… சாரு, நீ ஒரு போலீஸ்காரன். உன் கடமை இப்போ அந்த மரியாவை என்கிட்ட ஒப்படைக்கிறது தான். நாளைக்குக் காலைல மெக்சிகோ துறைமுகத்துக்கு மரியாவையும் லாக்கெட்டையும் கொண்டு வா. உன் அம்மாவைத் திருப்பித் தர்றேன். ஒரு ஆள் அதிகமா வந்தாலும் உன் அம்மா தலை உருளும்,” என்று சொல்லி போனைத் துண்டித்தான் ஆண்டனி.
அங்கே ஒரு பெரிய அமைதி நிலவியது. சாரு தன் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தான். “காயத்ரி, அம்மா எப்படி அங்கே மாட்டிக்கிட்டாங்க? நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணியிருந்தேன்.”
“ஆண்டனிக்கு இந்தியாவுல இருக்குற லோக்கல் கேங் கூடத் தொடர்பு இருந்திருக்கு சாரு. நாம அவனைச் சாதாரணமா நினைச்சுட்டோம்,” என்றாள் காயத்ரி கவலையுடன்.
டேவிட் மரியாவைப் பார்த்தான். ஒரு பக்கம் சீதாவின் உயிர், மறுபக்கம் ரிகார்டோவின் ரகசியங்கள்.
“டேவிட், நாம மரியாவை விட்டுக்கொடுக்கப் போறோமா?” என்று கேட்டாள் காயத்ரி.
“இல்லை காயு. ஆண்டனிக்கு வேண்டியது அந்த லாக்கெட் தான். மரியாவை அவன் சும்மா விடமாட்டான். அவளைக் கொண்டு போறது நமக்கும் ஆபத்து. ஆனா வேற வழி இல்லை,” டேவிட்டின் கண்கள் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டின.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மரியா நிச்சயம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
“எங்க அப்பாவுக்கு நான் பணிக்கொடுத்த ஒரே சத்தியம் இந்த லாக்கேஜ் கழட்டக்கூடாது அப்படின்னு. ஆனா அவரால உங்க எல்லாருக்கும் நிறைய பிரச்சனை அப்படி இருக்கும்போது, நிச்சயம் நான் இதை செஞ்சுதான் ஆகணும்”.
என்று சொல்லி முடித்தவள் தன் கழுத்தில் இருக்கும் லாக்கெட் செயினை கழட்டி டேவிட் கையில் கொடுத்து விட.
டேவிட் மரியாவின் லாக்கெட்டை வாங்கிப் பார்த்தான். அது ஒரு ரகசிய சிப் (Chip) போல இருந்தது. அதைத் தனது லேப்டாப்பில் இணைத்தான். ரிகார்டோவின் பல கோடி சொத்துக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடனான ரகசியத் தொடர்புகள் அதில் விரிந்தன.
“காயு, ஒரு நகலை (Copy) எடுத்துக்கோ. ஒரிஜினல் லாக்கெட்டை ஆண்டனி கிட்ட கொடுப்போம். ஆனா மரியாவுக்குப் பதிலா நீ போற!”
“டேவிட்! அது ஆபத்து,” என்றான் சாரு.
“வேற வழி இல்லை சாரு. காயத்ரி ஒரு டிடெக்டிவ். அவளால ஆண்டனியோட கோட்டைக்குள்ள நுழைஞ்சு அம்மாவைக் கண்டுபிடிக்க முடியும். நான் வெளியே இருந்து தாக்குவேன். மரியா இங்க சில்வா கூடப் பாதுகாப்பா இருப்பா,” என்றான் டேவிட்.
காயத்ரி டேவிட்டின் கையைப் பிடித்துக்கொண்டாள். “நான் தயார் டேவிட். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.”
அந்த இரவு அவர்களுக்கு மிக நீண்டதாக இருந்தது. காயத்ரி மரியாவைப் போல வேடமிட்டாள். முகம் தெரியாதபடி மேக்-அப் செய்து, ஒரு நீண்ட அங்கி அணிந்தாள்.
துறைமுகத்தில் நடக்கப்போகும் அந்தப் பயங்கரமான பேரம் என்ன? காயத்ரி அம்மாவைக் கண்டுபிடிப்பாளா?