Home ANTIHEROஅத்தியாயம் 15

அத்தியாயம் 15

by sreejanovels
370 views

மதன் குமார் வீட்டில்

சோபாவில் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கன்னத்தில் வாங்கிய அடியின் வீக்கத்தில் மிரண்டு கிடந்த யோகிதாவை அருகில் இருக்கும் தென்றல் அழுது கொண்டு சமாதானம் செய்ய,பாட்டி ஓரமாக நின்று கொண்டு தன் பேத்திக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டுமா என்று கதிகலங்கி போய் நிற்க,மறுப்பக்கம் மதன்குமார் கைகளை கட்டிக்கொண்டு அங்கே நடப்பதைப் பார்க்கத் தொடங்கினார்.

‘பெண்ணைப் பெற்றவரான அருண்குமார் செய்த தவறுக்கான பலன் இப்போது கிடைக்கிறது. நான் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்தேன். இப்பொழுது என் பெண்ணும் இதே நிலையில் வந்து நிற்கிறாள். இதுதான் விதியின் விளையாட்டு. செய்த பாவத்திற்கு என் மகள் எதற்கு தண்டனை பெற வேண்டும்?’ என்று மனதோடு போராடிக் கொண்டிருந்தார்.

இனியன், செழியன் யோகிதாவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு யார் காரணம் என்று இதுவரை அவள் வாய் திறந்து சொல்லவில்லை.”இவ்வளவு நேரம் மாறி மாறி கேக்குறீங்க. பதில் சொல்றத பாத்தீங்களா? அதான் என்னோட பொண்ணு என்றால் இளக்காரமா? தாய்வீட்டில் கணவனோடு இருப்பதால் எனக்கு மரியாதை இல்லை போல. என்னுடைய மகளை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டீங்களே? நீங்க எல்லாம் என்ன மனுஷங்களோ?”

யஎன்று கௌதமி கத்தியவுடன்,ஆத்திரமடைந்த அருண்குமார், அவரை ஓங்கி ஒரு அறை விட்டு,”என் குடும்பத்தைப் பற்றி பேசறது உனக்கு அருகதை இல்லை. பெத்த மக என்ன பண்றா, ஏது பண்றான்னு உனக்கு புரியல. நீ நெனச்சிட்டு இருக்க, உன்னோட பொண்ணு உன் சொல்பேச்சுக்கு, நீ பண்ற அசிங்கத்துக்கு துணை போவா அப்படின்னு.என் பொண்ணு கிட்ட நான் தான் சொல்லி வச்சேன்,

‘உங்க அம்மா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டு. அவளைப் பொறுத்த வரைக்கும் அவ வளர்ப்புல தீய குணத்தோடவே நீ இருப்பதாகவே காட்டிக் கொள்’ அப்படின்னு. எல்லாரும் நம்பினாங்க.என் பொண்ணு சொக்கத் தங்கம். இங்க பாரு, இவ்வளவு கேட்டும் ஒரு பதில் சொல்லாமல் இருக்கிறாள் என்றால், அவள் ஏமாறவில்லை, அவளுக்கு விருப்பப்பட்டு தான் இந்த விஷயம் அவளுக்கு நடந்திருக்கு. குழந்தையை அவ ஏத்துக்கிட்டா.

இதுல யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். அது என் மகளோட குழந்தை, என்னோட பேரப்பிள்ளை. அதை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கு. எப்பவும் போல நீ ஃபிரெண்ட்ஸ் கிளப், கிட்டி பார்ட்டி, பிசினஸ் அப்படின்னு சுத்திக்கிட்டே இரு. இன்க்ளூடிங் உன்னோட நியூ அஃபையர் சீனிவாசன்,” என்று சொல்லி முடிக்க, அனைவரும் அதிர்ச்சியாக கௌதமியைப் பார்க்க, அவரும் பேய் அறைந்தது போல் நின்றார்.

கௌதமியை நக்கலாகப் பார்த்து, “சீனிவாசன் நம்ம குடும்பத் தொழிலுக்கு எதிரின்னு உனக்கு தெரியும். அத்தான் பிசினஸ்க்கும் சரி, என்னோட பிசினஸுக்கும் சரி, அடிக்கடி பல பிரச்சனையை கொண்டு வருவான். அதைப் பற்றி தெரிஞ்சும் இத்தனை வருஷமா நீ தான் நாங்க வீட்டில் பிசினஸ் பத்தி பேசுற எல்லா விஷயத்தையும் அவகிட்ட போய் சொல்லி இருக்க. ஆரம்பத்துல எனக்கு டவுட் இருந்துச்சு. எப்படி அவன் கரெக்டா எங்களோட அசைவுகளைத் தெரிஞ்சிக்கிறான் அப்படின்னு. அப்புறம் தான் புரியுது, வீட்டுக்குள்ள ஒரு கருப்பு ஆடு அப்படின்னு. அதனால்தான் உடனடியா நான் உன்கிட்ட இருந்து விவாகரத்தை வாங்கிட்டேன்.

நீயும் சீனிவாசன் கூட இருந்த ரிலேஷன்ஷிப்புக்காக என்ன வேண்டாம்னு டிவோர்ஸ் வாங்கி, வீட்டுக்குள்ள கணவன் மனைவி போல நடிச்சுக்கிட்டு இருக்க.நான் எல்லாத்தையும் ஒரு சந்தேகத்தின் பேரில்தான் செய்தேன். என்னதான் எனக்கு ஒரு முன்னாள் காதலி இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு உன் கூட கொஞ்சம் கொஞ்சமா என் மனசு உன் பக்கம் தான் வந்தது.

நமக்கு பொண்ணு பிறந்த பிறகு மொத்தமா நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்.நல்லா தான் இருந்த. ஆனா, அந்த சீனிவாசன் உன் மூலியமா நம்ம குடும்பத்தை பழிவாங்க நெனச்சி இருக்கான். நீயும் ஈஸியா அவன் பக்கம் போயிட்ட.

நான் சும்மாதான் விவாகரத்துக் கேட்டேன். ஆனா நீ உண்மையாவே கொடுத்துட்ட. உடைஞ்சு போயிட்டேன். ‘நீ தான் நான் வேண்டும்’ அப்படின்னு தற்கொலை எல்லாம் பண்ணிக்கப் போன அப்படின்னு.நிஜமா நீ என்னைக் காதலிக்கல போல. அப்ப புரிஞ்சுகிட்டேன்.

அதிலிருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே எல்லாத்தையும் பாத்துகிட்டேன். பிசினஸை செழியன் கிட்ட வந்தவுடன் அவனிடம் எல்லாம் உண்மையை சொல்லிட்டேன். இப்போ நம்ம இனியனை அசிங்கப்படுத்த, ஸ்கூல்ல ஒரு பொண்ணு டீச்சர் வேலைக்கு அனுப்பி இருக்க. கொஞ்ச நாள் அந்தப் பொண்ணு கிட்ட இருந்து உனக்கு தகவல் வந்து இருக்காது.

காரணம் அப்பவே அந்தப் பொண்ணை பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பியாச்சு.அதேபோல், செழியனைக் கொல்வதற்கு இரண்டு முறை முயற்சி பண்ணி இருக்க. அதையும் எப்படியோ காப்பாற்றி ஆச்சு. முடியல. நம்ம குடும்பத்தார்களுக்கு நீயே துரோகம் பண்ற. இதுக்கு மேல அமைதியா இருந்தா நான் மனுஷனா இருக்கிறதுக்கு தகுதியே இல்லை.

இத்தனை நாள் நான் அமைதியா இருக்கக் காரணம் என்னோட ராதாவை தொலைச்சு தேடிக்கிட்டு இருந்தேன். இப்ப அவளும் எனக்கு கிடைச்சுட்டா. இனி சுதந்திரமா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கலாம். அவள் இன்னும் என்னைத் தான் மனசுல நினைச்சுகிட்டு இருக்கா. அதனாலதான் என்னோட மகனை நல்ல மனுஷனா வளர்த்து என் முன்னாடி பெரிய மனுஷனா நிக்க வெச்சி இருக்கா,” என்று அவர் சொன்னவுடன், அனைவரும் இப்போது அதிர்ச்சியாகப் பார்த்தது அருண் பக்கம்.’என்ன இது?’ என்று அனைவரும் அவரையே பார்க்க, அவரும் மெதுவாக,”ஆமாம்.

எனக்கும் கௌதமிக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி சொன்னா எல்லாருக்கும் கஷ்டம். அதனால எதுவும் சொல்லாம அமைதியா இருந்துட்டோம். ரொம்ப வருஷம் கழிச்சு நான் என்னோட ராதாவை மறுபடியும் சந்திச்சேன். அவ பழைய மாதிரி இல்லை. ரொம்ப மாறிட்டா. அதுக்குக் காரணம் நான் தான். ஆனால் என் மேல இருக்க கோபத்தை என் பிள்ளை மேல காட்டல. சந்தோஷமா என் மகனை வளர்த்து பெரிய நிலைமைக்குக் கொண்டு வந்து இருக்கா,” என்று சொன்னவுடன், அனைவருக்கும் ‘அய்யோ’ என்று ஆனது.

இவர் மீதும் தவறு இல்லை. கௌதமியின் தற்கொலை நாடகத்திற்கு அனைவரும் பயந்து தானே அன்று திருமணத்திற்கு சம்மதம் செய்ய வைத்து, திருமணமும் செய்து வைத்தோம். இவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்து. ஆனால் அனைத்தும் பாழாய் போனது.யோகிதா ஓடிச் சென்று தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.

இதுவரை அடக்கி கொண்டிருந்த மொத்த அழுகையும் தந்தையின் மார்பு மீது சாய்ந்து மொத்த அழுகையையும் கொட்டித் தீர்த்து,”பெத்த அம்மா இருந்தும் இல்லாத அனாதை மாதிரி தான் நான். சொந்தக்காரங்க இருந்தும் ‘என்ன? ஏது?’ அவ்வளவுதான் விசாரிப்பு.ஆனால் சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கான எல்லாத்தையும் செஞ்சது நீங்கதான்ப்பா.

ஆனா உங்க கிட்ட சொல்லிட்டு தான் ஹாஸ்பிடலுக்கு போனேன். யாரு இவங்களுக்கு சொன்னாங்கன்னு தெரியல. நீங்க சொல்லுங்கப்பா, நான் பண்ணது தப்பா?ரொம்ப விரும்பிட்டேன். பாவம், அவரையும் குற்றம் சொல்ல முடியாது. குழந்தை வரவுக்காக அவரும் சந்தோஷமா தான் காத்துகிட்டு இருக்காரு. ஆனா எங்களுக்குள்ள சின்ன மனஸ்தாபம்.

அது சரியான பிறகு நானே அவரைப் பற்றி உங்க எல்லாருக்கும் சொல்றேன்.அதுவரைக்கும் இத பத்தி எதுவும் கேட்க வேண்டாம். இது என்னோட குழந்தை. பொறுப்பான அம்மா இருக்கேன். பாசமான அப்பா காத்துகிட்டு இருக்காரு. எங்களுக்குன்னு ஒரு குடும்பம் சீக்கிரம் அமையும். ஆனா அதற்கான நேரம் அமையல அவ்வளவுதான். இத பத்தி யாரும் என்கிட்ட கேட்க தேவையில்லை,” என்று சொல்லி முடித்து தன் அறைக்குள் சென்று முடங்கிவிட, அனைவரும் அவள் எடுத்த முடிவே சரி என்று நினைத்தனர்.

இதுவரை ஒரே வீட்டில் இருக்கிறோமே தவிர, கலகலவென்று இருந்த குடும்பம் இல்லை. மதன், தென்றல், ஏன் இனியன், செழியன் கூட அந்த அளவுக்கு யாரிடம் ஒட்டுதல் இருக்க மாட்டார்கள். இதுதான் ஒரு குடும்பம் செய்யும் தவறு. குடும்பமாக ஒருவர் ஒருவர் இருக்கிறோம் என்ற ஒட்டுதல் இருந்தால் தான் அது குடும்பம்.தென்றலுக்கு மிகவும் கவலையாகிப் போனது.

இதுவரை வெறும் வீட்டு வேலைகள், கணவனைப் பார்த்துக் கொள்வது, பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவரிடம் இருந்து ஒரு விலகல் இப்படித்தான் அவர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வயது வந்த பெண் இருக்கிறாள், அவளுக்கென்று ஒரு அன்னை இருக்கிறாள் என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இல்லையென்றால் இப்படி நடந்து இருக்குமா என்று வருத்தப்பட்டார் தன் கணவன் மீது சாய்ந்து.”யோகிதா, அவங்க அம்மா கூட சேர்ந்து கெட்ட எண்ணத்தோடு தான் இருக்கிறா அப்படின்னு ஓரளவுக்கு டிஸ்டன்ஸ் அவகிட்ட நான் மெயின்டெய்ன் பண்ணது தப்பா போச்சு மதன்.இப்பதான் புரியுது, அவ அன்புக்காக ரொம்ப ஏங்கி இருக்கா. தாய் பாசத்துக்கு ரொம்பவே துடிச்சு போயிருக்கா.

எந்த முகத்தை வைத்து நான் இப்ப போய் சமாதானம் செய்வேன்? இப்ப கூட நான் அவளை ஆறுதலுக்குப் பக்கத்துல உக்காந்தாலும், மூணாவது மனுஷங்க மாதிரி தான் என்கிட்ட நடந்துகிட்டாளே தவிர, மத்தபடி எந்த ஒட்டுதலும் இல்ல. இனிமே போய் அவகிட்ட பேசினா கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தான்.அவ சின்ன பொண்ணு. ஆனா முடிவு எவ்வளவு அழகா எடுத்து இருக்கா பாத்தீங்களா? கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துகிட்டு, வாழ்க்கை சலிச்சு ஓடி போற கேடுகெட்ட ஜென்மம் எத்தனை பேர் இருக்காங்க.

தனக்கு இந்த வயசுல குழந்தை தேவையா? கல்யாணம் தேவையா? அப்படின்னு இப்ப இருக்குற சில பேர் மட்டும் தான் புத்திசாலியா முடிவெடுப்பாங்க. அந்தப் புத்திசாலிகளில நம்ம யோகிதாவும் ஒன்று. நல்ல வேலை, அவ யார்கிட்டயும் ஏமாந்து போகல. கூடிய சீக்கிரம் இவ மனசு மாதிரி அந்தப் பையனை கல்யாணம் பண்ணி குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கினால் போதும்,”

என்று சொல்லி முடிக்க, தன் மனைவியை பார்த்து மதன்,”உலகம் ரொம்ப மாறி போச்சு. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க அவங்க விருப்பம். எல்லாரும் படிப்புங்கிற பெரிய ஆயுதத்தைப் பயன்படுத்துறாங்க. அந்த படிப்பறிவை பயன்படுத்தி தான் அவர்களுக்கான வாழ்க்கையை காண அடுத்த படியே தேர்ந்தெடுக்குறாங்க. இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு,” இன்று இருவரும் தாங்கள் வேலைகளை கவனிக்கச் சென்று விட்டனர்.___

ராதா உணவகத்தில், அருண்குமார் சட்டையைப் பிடித்து விமல் கோபமாக அவரை அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured