Home ANTIHERO34) பார்வை 😍

34) பார்வை 😍

by sreejanovels
5 views

அத்தியாயம் 34

விழா முடிந்த பிறகு அனைவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காயத்ரிக்கு மனமெங்கும் குற்ற உணர்வு நிறைந்திருந்தது. தன் கணவனிடம் அவள் மன்னிப்பு கேட்டும், அவர் முகத்தைத் திருப்பிப் பார்க்கக் கூட இல்லை.

“உனக்குள்ள இவ்வளவு பெரிய ராட்சசி இருப்பான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. நீ குழந்தைகள் கிட்ட, என்கிட்ட, நம்ம வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் எவ்வளவு பாசமா இருக்க? நீயே சொல்லி இருக்க, உன் பிரண்ட்டை அவர் மறக்கவும் இல்லை, அதே சமயம் இப்போ இருக்குற மனைவி மேல அவருக்குப் பாசம் இல்லாமலும் இல்லை. இதான் நிதர்சனம். ஆனா அதைப் புரிஞ்சுக்காம, நல்லா வாழ்ந்துட்டு இருக்குறவங்களுக்குள்ள பிரச்சனை உண்டு பண்ணப் பார்த்திருக்க. அப்புறம் உன்னோட தம்பி இன்னொரு விஷயம் சொன்னான், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இவங்க பிரிஞ்ச காரணமும் நீதான்னு. உன்னோட சின்ன முட்டாள்தனத்தால இவங்க ரெண்டு பேரும் தங்களோட வாழ்க்கையைத் தொலைக்கப் பார்த்தாங்க. மறுபடியும் அவங்க குழந்தையை வச்சு எமோஷனல் டிராமா (Emotional drama) பிளே பண்ணப் பார்த்த. நல்லவேளை உன்னோட தம்பி புத்திசாலித்தனமா எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டான், இல்லன்னா ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்ப? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அவளது கணவன் மனவருத்தப்பட்டார். காயத்ரியும் அழுது போராடி கணவனைச் சமாதானப்படுத்தி, “இங்கிருந்து கிளம்பினால் போதும்” என்று விஜய்க்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அனைவரும் தங்கள் வீட்டிற்குச் சென்று அவரவர் அறைக்குள் அடங்கிவிட்டனர். குழந்தையை உறங்க வைத்துவிட்டு, அஞ்சலி உடை மாற்றிக்கொண்டு பால்கனியில் சற்று நேரம் காற்று வாங்கலாம் என்று தண்ணீர் பருகிக் கொண்டே நின்றிருந்தாள். விஜய் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“நான் அப்படிப் பண்ணிருக்கக் கூடாது. ஆக்சுவலி, நம்ம ரெண்டு பேருக்கும் அன்னைக்குச் சண்டை வரும்போது நான் உன்னைப் புரிஞ்சுக்காம அப்படிப் பேசினதுக்கு ரொம்ப சாரி” என்று அவன் கேட்டவுடன், அஞ்சலி குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இவன் மன்னிப்பு கேட்கிறானா? இவன் அப்படிப்பட்ட ரகம் கிடையாது. அதுவும் ‘அம்பி’ போல வந்து பேசும்போது அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்ச நாட்களாகவே கணவன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து, ‘இது நிஜமாகவே விஜயா அல்லது வேறு யாராவது ஆவி புகுந்துவிட்டதா’ என்று அஞ்சலிக்குச் சிறிய பயமே வந்துவிட்டது.

அவளது விசித்திரமான பார்வையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே விஜய் அவள் கையை மெதுவாக வருடினான்.

“எப்பவுமே நாய் மாதிரி குறைச்சுக்கிட்டே இருக்குறவன் இப்போ கொஞ்ச நாளாவே நல்லா பேசுறானேன்னு உனக்குச் சந்தேகமா இருக்கா? நானும் பொண்டாட்டி பிள்ளையோட வாழ ஆசைப்பட்ட பிறகு எல்லாத்தையும் மாத்திக்கணும்னு நினைக்கிறேன். அது என்ன எப்பவுமே பொண்ணுங்க மட்டும் அடங்கிப் போ, அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றது? உனக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்க ஆசைப்படுறேன். நான் என்ன மாத்திக்கணும்னு நினைச்சேன்னா, எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, என்னோட மனைவி அஞ்சலி என்கிற மனநிலைக்கு என்னைக் கொண்டு வரணும்னு நினைச்சேன். இப்போ என் மனைவி, என் மகன், அப்புறம் உன்னோட வயித்துல இருக்குற என் குட்டிப் பொண்ணு…” என்று சொல்லி அஞ்சலியின் வயிற்றை மெதுவாகத் தடவினான்.

அஞ்சலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. எப்படி இவனுக்குத் தெரிந்தது? இதைச் சர்ப்ரைஸாக (Surprise) சொல்லலாம் என்று அவள் நினைத்தாளே!

“என்ன, நீ சர்ப்ரைஸ் பண்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்னு நினைச்சியா? உனக்கு ரெண்டு மாசம் பீரியட்ஸ் வரல. அது வராம போனதுக்கு நான் தானே காரணம்? நிச்சயம் இந்த வாட்டி பொண்ணாத்தான் இருக்கணும்” என்று அவளைப் பார்த்துச் சிரிக்க, அஞ்சலி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“ஒரு வாட்டி கூட உங்களைச் சர்ப்ரைஸ் பண்ணவே முடியல. எல்லாமே நீங்களே கண்டுபிடிச்சுடுறீங்க. ஒரு தடவை பெரிய பிரச்சனையாச்சு, ரெண்டாவது தடவை உங்க கூடவே நான் இல்லை, இப்போ நீங்களே கண்டுபிடிச்சுட்டீங்க. போங்கப்பா!” என்று செல்லமாகச் சிலிர்த்துக்கொள்ள, அவளை அப்படியே தன் மீது திருப்பித் தன்னைப் பார்த்தவாறு அமர வைத்து, கண்களால் ஏதோ கேட்டான் விஜய். அவளும் வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். அப்படியே அமர்ந்தவாறு இருவரும் காதல் உலகில் சஞ்சரித்தனர். ஒரு வழியாக இருவருமே களைப்பாகி, போர்வையின் கீழ் ஒருவருக்குள் ஒருவர் தஞ்சம் புகுந்தனர்.

,,,,,

சில நாட்கள் கழித்து, மிக எளிமையாகப் பதிவு அலுவலக (Register Office) முகூர்த்த நேரத்தில் ரித்விக் – சுவாதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு கோவிலில் அர்ச்சனை செய்து முடித்து, அருகில் இருக்கும் ஆசிரமத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கித் திருமணம் இனிதே முடிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்ய இருவருக்கும் விருப்பமில்லை. எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அம்மா, அப்பா என்ற உறவு அவர்களுக்குக் கிடையாது. அந்த அருமையை இழந்த தனி மரமாக நிற்கும் இவர்களுக்குத்தான் அது தெரியும். அதனால்தான், தங்களைப் போலவே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், பிள்ளைகளை இழந்த பெரியோர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகள் பலவற்றைச் செய்தனர். தங்கள் சொத்தில் கால்வாசிப் பங்கை எழுதி வைத்து, சென்னையில் நல்ல முறையில் நடத்தப்படும் ஆசிரமங்களுக்குப் பகிர்ந்து அளித்தனர். மேலும் தவறான நபர்களின் கையில் இருந்த ஓர் ஆசிரமத்தை வழக்குத் தொடர்ந்து மீட்டு, தாங்களே ஒரு புதிய அனாதை ஆசிரமத்தைத் தொடங்கினர். எத்தனையோ பிள்ளைகள், பெண்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் அங்கே தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்குத் தகுந்த கல்வி, வேலை அனைத்தையும் இவர்களே ஏற்பாடு செய்தனர்.

“எங்களோடு எங்கள் வீட்டிலேயே இருக்கலாம்” என்று விஜய் – அஞ்சலி குடும்பத்தினர் கேட்டாலும், ரித்விக் – சுவாதி இருவரும் தங்கள் ஆசிரம வளாகத்திலேயே தங்களுக்குள் ஓர் அழகான வசந்த மாளிகையைக் கட்டிக் கொண்டனர். ஆசிரமம் ஒரு பக்கம், கோவில் ஒரு பக்கம், விளையாட்டுப் பூங்கா மற்றும் பல வண்ண மலர்கள் சூழ்ந்த இடத்தின் நடுவில் ஓர் அழகான நடுத்தர வீடு.

கீழே பெரிய ஹால், வசதியான கிச்சன், இரண்டு பெட்ரூம்கள், மேலே ஓர் ஓய்வறை என நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய அந்த வீட்டில் இருவரும் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர். இவர்கள் திருமணத்தைத் தள்ளி வைத்ததற்குக் காரணமே அஞ்சலி – விஜய் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான். ஆசிரமத்தை மீட்டெடுத்துப் புதுப்பித்து அதற்கு “சுவாதி பவனம்” என்று பெயரிட்டனர். அங்கே யாரும் அனாதை கிடையாது, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர்.

அனைத்து வேலைகளும் முடிந்து, தங்கள் வசந்த மாளிகையில் பால் காய்ச்சி இல்லறத்தைத் தொடங்க சுவாதி – ரித்விக் இருவரும் ஆவலாகக் காத்திருந்தனர். அன்று முழுவதும் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களோடு நேரத்தைச் செலவிட்டனர். பொழுது சாய்ந்த பிறகு, ஒரு மூத்த பெண்மணி சுவாதிக்குத் தலைவாரிப் பூ வைத்து அலங்காரம் செய்து வைத்தார். மறுபக்கம் ஒரு பெரியவர் ரித்திக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“தம்பி, பெரியவன் நான் சொல்றேன்னு பூமர்னு நினைச்சுக்காதப்பா. என்னதான் சொன்னாலும் நம்ம வாழ்க்கையில பொண்டாட்டி ரொம்ப முக்கியம் தம்பி. நான் பண்ண தப்பை யாரும் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன். நானும் ‘நான் ஆம்பளை, நான் சம்பாதிக்கிறேன், பொம்பளை அடங்கித்தான் போகணும்’ அப்படின்னு கர்வத்தோடு இருந்தேன். எங்க அப்பா கிட்ட இருந்த அந்த ஆம்பளை கர்வம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. எங்க அம்மாவும் சொல்லிப் பார்த்தாங்க, ஆனா எதுக்கெடுத்தாலும் என் மனைவியைக் குறை சொல்லிக்கிட்டே இருப்பேன். எல்லார் வீட்லயும் மாமியார் கொடுமை இருக்கும், ஆனா எங்க வீட்ல எல்லாருமே அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணாங்க. நான் தான் சரியில்லை. அவளை ஒரு சந்தோஷம் இல்லாத வாழ்க்கையிலேயே வச்சிருந்தேன். அவளே என்னை விட்டு விலகிப் போகாம, எப்பவுமே என் பின்னாடியே சுத்திட்டு வருவா. ‘அத்தான்… அத்தான்’னு வருவா, ஆனா நான் எதுக்கெடுத்தாலும் அவகிட்ட எரிஞ்சு விழுவேன். இப்படித்தான் எங்க வாழ்க்கை போச்சு. ஆனா அவளோட அமைதியால வாழ்க்கை முழுக்கக் குழந்தைகள்கிட்டே போச்சு. மூணு பிள்ளைங்களும் அவளை மாதிரியே வளர்ந்தாங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாச்சு. பிள்ளைங்க வெளிநாட்டுல இருக்காங்க. என் பொண்ணு, என் மனைவியையும் அழைச்சுட்டுப் போயிட்டா. ‘உங்க கூட இருந்து எந்த நிம்மதியும் இல்லாம இருந்த எங்க அம்மாவுக்கு இனிமே நிம்மதி கிடைக்கட்டும்’னு என் பொண்ணு சொல்லிட்டுப் போயிட்டா. கொஞ்சம் வருஷம் கழித்து நானும் வெளிநாட்டுக்கு வந்துட்டேன். ஆனா அவ இல்லாம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியல. அதன் பிறகு உடம்பு சரியில்லாம அவள் இறந்து போயிட்டா. என்னால் அங்க இருக்க முடியல. இங்க இருக்குற வீட்ல நான் மட்டும் தனியா இருந்து என்ன பிரயோஜனம்? அதான் மொத்தமா எல்லாத்தையும் இந்த ஆசிரமத்துக்கு எழுதி வச்சுட்டு நானும் இங்கேயே வந்துட்டேன். பொண்டாட்டி நம்மள நம்பி வர்ற ஜீவன், அவளை விட்டுக் கொடுக்காம நல்லா வாழப் பாரு தம்பி” என்று சொல்லி அவரை வழி அனுப்பினார்.

ரித்விக் அவரைப் பார்த்து, “பெரியவங்க நீங்க சொல்றதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்” என்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.

,,,,,,,,,,,,,,,,

சுவாதி பனியில் நனைந்த ரோஜாவைப் போலப் பளிச்சென்று இருக்க, ரித்விக் மெதுவாக வந்து கதவை அடைத்தான். அவளைப் பின்னால் இருந்து கட்டி அணைத்து கழுத்தில் முத்தம் கொடுத்தான்.

“இன்னைக்கு எல்லாமே வேணுமா?” என்று சுவாதி சற்று நடுக்கத்தோடு கேட்டாள்.

“ஏன் அப்படிப் கேக்குற? ஏதாவது என்கிட்ட பேசணுமா??”

“இல்ல… எடுத்தவுடனேயே இது முடிஞ்சு போச்சுன்னா, இது மேல இருக்குற ஆசை போயிடும்னு சொல்லுவாங்க. அதான் கொஞ்சம் பயமா இருக்கு.”

“அடியே! ஏற்கனவே 32 வயசாகிப் போச்சுடி. நீ வேற இப்போ வைக்கலாமா, நாளைக்கு வைக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்காத.”

என்று சொல்லி, இதற்கு மேல் அவளைப் பேச விடாமல் விளக்கையும் அணைத்து அவளை அணைக்க ஆரம்பித்தான். அறை முழுவதும் அவள் கொலுசொலி சினுங்க, அவனது வேக மூச்சுக் காற்றால் அந்த அறை நிறைந்திருந்தது. முத்தத்தால் அவளை அரவணைத்தான். அவனது செயலில் முரட்டு சுபாவம் இருந்தாலும், அவளுக்கு வலி வராமல், அவளை இன்னும் இன்பத்தில் ஆழ்த்தி, “இன்னும் வேண்டும்” என்று அவளே கேட்கும் அளவிற்குச் செய்துவிட்டான். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தஞ்சம் புகுந்து ஆசுவாசமடைந்தனர்.

“இப்போ எப்படி என் பெர்பார்மன்ஸ் (Performance)? சூப்பரா இருக்கா?” என்று அவளைப் பார்த்து ரித்விக் கேட்டான்.

“செயல் மட்டும்தான் ஸ்பீடு, மத்ததெல்லாம் ஓகே லெவல் தான். நான் வேற எதிர்பார்த்தேன்…” என்று அவனது நெஞ்சு முடியைப் பிடித்துச் சுருட்டி இழுத்தாள். அதில் ஒரு வலியோடு கலந்த சுகத்தை அனுபவித்தவன் மீண்டும் அவளைத் தழுவ, இருவருக்கும் அது விடியல் வரை நீடித்த தூங்கா இரவாக அமைந்தது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,…….

You may also like

Leave a Comment

About Me

Featured