Home FAMILY NOVEL17) வலி 💔

17) வலி 💔

by sreejanovels
5 views

அத்தியாயம் 17

இங்கே ஆதித்யாவின் கெஸ்ட் ஹவுஸில் பார்ட்டி ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. இரு பெண்களும் அழகாகப் பட்டியல் போட்டு அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துச் செய்தனர். தொழில்துறை நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். அங்கே லண்டனிலும் ஒரு சிம்பிள் டின்னர் மீட்டிங் மற்றும் பார்ட்டி ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை முதலில் வீடியோ காலில் பார்த்து முடித்த ஆதித்யா, இங்கே மாலை 6 மணி அளவில் தன் வீட்டில் விழாவைத் தொடங்கினான்.

தொழில்துறை நண்பர்கள் அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் ஆதித்யா யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் கண்கள் நிலை குத்திய பார்வையோடு, தன் எதிரில் வருபவரைப் பார்த்தன. அவன் எடுத்துக் கொடுத்த தன் உடைக்கு ஏற்ற நிறத்தில், வெள்ளை நிற டிசைனர் புடவையில் (Designer Saree) தேவதை போல் வந்து நின்ற அகல்யாவைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் திகட்டவில்லை.

ஒய்யாரமாக நடந்து தன் அருகில் வந்து நின்ற மனைவியை இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன், அவள் காதருகே, “என்னை மயக்குறதுக்காகவே இப்படி எல்லாம் வந்து நிக்கிறியா? ஆனா எல்லையை மட்டும் தாண்ட விடமாட்டேங்கிற… கல்நெஞ்சக்காரி!” என்று சொல்லி அவள் கன்னத்தில் இதழ் பதித்து முத்தமிட்டான்.

“ம்ம்… அமைதியா இருங்க, எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க. நீங்களும் அழகா தான் இருக்கீங்க, ஆனா என் பசங்க அளவுக்கு இல்லை” என்று சொல்லிவிட்டு, தன் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனன்யா இருவரை நோக்கிச் சென்றாள் அகல்யா. குழந்தைகள் இருவரும் அம்மாவிற்காக அங்கே காத்து நின்றனர்.

“எவ்வளவு சுத்தி வளைச்சு கொக்கி போட்டாலும் சிக்காத பறவை நீ! ஒரு நாள் ‘ஆதி மாமா ஐ லவ் யூ’ன்னு பழைய மாதிரி உன்னை என் பின்னாடி சுத்த வைக்கிறேன் பாரு” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, அவளைப் பின்தொடர்ந்து குழந்தைகளுடன் ஐக்கியமாகிவிட்டான் ஆதித்யா.

“எப்பவும் உங்க அண்ணன் அண்ணி மட்டும் தான் சூப்பர் கப்புள் (Super Couple) மாதிரி பேசுறாங்க. அப்ப நம்ம மட்டும் என்னவாம்?” என்று கணேஷ், தன் மனைவி அஸ்வினி மற்றும் மகனுடன் ஒரு பக்கம் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டே மனைவியின் காதைக் கடித்தான்.

“எதுக்குங்க இவ்வளவு பொறாமை? எல்லாரும் நம்மள கூட சூப்பர்னு சொல்லிட்டு தான் இருக்காங்க. அவங்க புதுமணத் தம்பதிகள், அப்படித்தான் இருப்பாங்க. சரி, இன்னும் யாருக்காக வெளியே நின்னுகிட்டு இருக்கோம்? எல்லாரும் வந்தாச்சு, ஆபீஸ் ஸ்டாப் வந்துட்டு இருக்காங்க. நாம ஆரம்பிக்கலாமே?” என்று அஸ்வினி சொல்ல, அதை அகல்யாவும் ஆமோதித்தாள்.

கணேஷும் ஆதித்யாவும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொண்டு, “ரொம்ப முக்கியமான ஒரு கப்புள் வரணும். எங்களுடைய ‘ஒன் ஆஃப் தி பார்ட்னர்’ (One of the partner) என்றும் சொல்லலாம். அவரும் அவருடைய லவ்லி வைஃபும் வரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். ஹைதராபாத்ல இருந்து வரணும் இல்லையா?” என்று கணேஷ் சொன்னான்.

“என்ன சொல்றீங்க? ஹைதராபாத்ல யாரு? ஓ மை காட்! நம்ம கம்பெனியோட அனதர் பார்ட்னர் விகாஸா??” என்று அகல்யா ஆச்சரியத்துடன் கேட்க, ஆதித்யா ஆமாம் என்று தலையசைத்தான். “சூப்பர்! ரொம்ப நல்ல மனுஷன். அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? யார்கிட்டயும் சொல்லவே இல்ல பாருங்களேன்” என்று அகல்யா பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு மிகப்பெரிய பிஎம்டபிள்யூ (BMW) கார் பார்க்கிங்கில் வந்து நின்றது.

கணேஷின் திட்டப்படி கேமராக்கள் அனைத்தும் அந்த காரை நோக்கித் திரும்பின. அதிலிருந்து பிரபல தொழிலதிபரும், ‘ஆதித்யா கன்ஸ்ட்ரக்ஷன்’-ன் பார்ட்னருமான ‘விகாஸ் கன்ஸ்ட்ரக்ஷன்’ எம்டி திரு. விகாஸ் கண்ணன் தன் புது மனைவியோடு வருகிறார் என்ற தகவலால் அனைவரும் அங்கே திரண்டனர்.

மிகவும் ஸ்டைலாக நீல நிற கோட் சூட் அணிந்து விகாஸ் வெளியே வந்து நிற்க, காரின் மறுபக்கம் கை நீட்டினான். மருதாணி அணிந்த மென்பஞ்சு போன்ற விரல்கள் அவன் கைகளைப் பிடித்தன. விகாஸ் கண்ணனின் மனைவி யார் என்று அனைவரும் ஆவலுடன் பார்க்க, காரிலிருந்து நீல நிறப் பட்டுப் புடவை அணிந்து, புதுப் பெண்ணிற்குரிய அலங்காரத்தோடு லாவண்யா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த நெருங்கிய உறவினர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! மீடியா நபர்களுக்கோ நல்ல செய்தி கிடைத்துவிட்டது என்று போட்டி போட்டுப் புகைப்படம் எடுத்தனர். இருவரின் ஜோடிப் பொருத்தமும் அட்டகாசமாக இருந்தது.

“வாவ் சூப்பர் விகாஸ் கண்ணன் சார்! உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க. உங்க வைஃபைப் பத்திச் சொல்ல மாட்டீங்களா??” என்று மீடியாக்கள் கேட்க…

“இவங்க என்னோட லவ்லி வைஃப் லாவண்யா. நாங்க ஸ்கூல், காலேஜ்ல ஒன்னா படிச்சோம். சின்ன பிரேக் அப்புறம் மீண்டும் மீட் பண்ணி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இன்னைக்கு இது பிசினஸ் பார்ட்டி மட்டும் இல்ல, எங்களுக்கு இது ஒரு சின்ன ரிசப்ஷன் கூட. என் நண்பர்கள் இதை ரெடி பண்ணி இருக்காங்க. ஹைதராபாத்ல இருந்து இதோ என் அம்மா மீனாட்சி சவுத்ரியும் வந்திருக்காங்க. இப்போ எங்களைப் பார்ட்டியில் பங்கேற்க விடுவீர்களா??” என்று கிண்டலாகக் கேட்டான் விகாஸ்.

அனைவரும் விலகியதும் கணேஷும் ஆதித்யாவும் அவர்களை வரவேற்றனர். லாவண்யா அங்கே பிடித்து வைத்த பிள்ளையார் போல் அதிர்ச்சியில் நின்றிருக்க, விகாஸ் அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான். “இதோ, உங்க வீட்டுப் பொண்ணை எப்படியாவது கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவேன்னு சபதம் போட்டேன். சொன்ன மாதிரி செஞ்சு காட்டிட்டேன் பார்த்தீங்களா? இதுதான் என் சாமர்த்தியம்!” என்று பெருமையாகப் பேசினான் விகாஸ்.

லாவண்யா அதிர்ச்சியுடன் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் அவளை ஒற்றைக் கண்ணடித்து ஜாடை காட்டி அழைத்துச் சென்றான். பிறகு கணேஷ், ஆதித்யா, விகாஸ் மூவரும் மேடையில் நின்று ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பார்ட்டி களைகட்டத் தொடங்கியது. ஒரு மிகப்பெரிய வெடிங் கேக் (Wedding Cake) வரவழைக்கப்பட்டு, லாவண்யா மற்றும் விகாஸை வெட்ட வைத்தனர். லாவண்யா ஒரு இயந்திரம் போலச் செயல்பட, விகாஸ் அவளை வழிநடத்தினான்.

அன்னலட்சுமி தன் மருமகள் லாவண்யாவின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கச் செய்தார். “உனக்கு நல்ல பையன் வாழ்க்கைத் துணையா கிடைச்சிருக்கான். அவன் கூடச் சந்தோஷமா வாழப் பாரு. உன் மேல நான் தப்பு இருக்குன்னு சொல்லவே மாட்டேன். இப்ப இருக்குற பொண்ணுங்களுக்குச் சில பேருக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியல, மெச்சூரிட்டி இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நீ ஆதித்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சியே தவிர, அவனை விரும்பி வாழணும்னு நினைக்கல. அந்தத் தப்பான எண்ணத்தால தான் அந்தப் பந்தம் முடிஞ்சுது. ஆனா இது அப்படி இருக்காது. அந்தத் தம்பிகிட்ட மனசு விட்டுப் பேசு, அவன் காதலைப் புரிஞ்சுக்க. உன் கடந்த காலத்தை மறந்து விடு. அந்தத் தம்பி எல்லாமே சொல்லிட்டான். ஏதோ கேன்சர் அப்படின்னு பொய் சொல்லி மறுபடியும் ஆதித்யா வாழ்க்கையில வரப் பார்த்தன்னு தெரிஞ்சுது. தயவு செஞ்சு அவன் வாழ்க்கையில இனி எந்தப் பிரச்சினையும் பண்ணிடாதே. அவன் இப்பதான் சந்தோஷமா இருக்கான்” என்று தாயுள்ளத்தோடு வேண்டினார்.

“தயவு செஞ்சு இப்படிப் பேசி என்னை மட்டும் கெட்டவள் ஆக்காதீங்க. நான் இப்போ என்ன நிலைமையில இருக்கேன்னு எனக்கே புரியல. எல்லாம் மாயாஜாலம் மாதிரி இருக்கு. இப்போ நானே தப்பிக்க நினைச்சாலும் இந்த விகாஸ் விடமாட்டார். எனக்கு என் பொண்ணு அனன்யா நல்லபடியா வாழணும். இப்பதான் புரியுது எல்லாருமே கூட்டுக்களவாணிகள்னு! இவ்வளவு செஞ்ச ஆதித்யா இதை அன்னைக்கே செஞ்சிருக்கலாம். நான் காதல் இருக்குன்னு சொன்னதை நம்பித் தானே என்னைக் கல்யாணம் பண்ணார்? அப்போ அவர் தானே குற்றவாளி? ஆனா அவரை யாரும் சொல்ல மாட்டீங்க. சரி, நான் பழசெல்லாம் பேச விரும்பல. உங்க பையன் வாழ்க்கையில தலையிடுற அளவுக்கு எனக்கு இனி உரிமை இல்லை, நீங்க பயப்பட வேண்டாம்” என்று லாவண்யா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அங்கே அனன்யா அகல்யாவுடன் மிக நெருக்கமாக இருப்பதைக் கண்ட லாவண்யாவுக்குத் தன் மகளைப் பிரிந்து வந்ததை நினைத்து அழுகையே வந்துவிட்டது. ‘என் பொண்ணு எவ்வளவு அழகா வளர்ந்திருக்கா’ என்று பார்க்கும்போது, தன் மகள் அப்படியே ஆதித்யா, அஸ்வினி மற்றும் தன் அப்பாவின் சாயலில் இருப்பதை உணர்ந்தாள்.

“லாவண்யா மம்மி/அத்தை! நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க இனிமே எங்க கூட இருப்பீங்களா??” என்று அனிருத்தும் ஆத்விக்கும் கேட்க, லாவண்யா அவர்கள் கன்னத்தில் முத்தமிட்டாள். “இல்லடா குட்டீஸ், நான் உங்களை விட்டு விலகி இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது. என்ன போல ஒருத்தி உங்க கூட இருக்க வேண்டாம். உங்க சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பல” என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு விகாஸ் அருகில் வந்து நின்றாள்.

“என்ன பொண்டாட்டி, நல்லவ வேஷம் போடுறியா? இதெல்லாம் உனக்கு செட்டே ஆகல, செம கடுப்பாகுது” என்று விகாஸ் கிண்டல் செய்தான்.

“நான் எப்பவுமே நல்லவளா வாழ விரும்பல, ஆனா கெட்டவளாவவும் மாறல. எனக்குத் தோணுறதைச் செஞ்சு காட்டுறேன். அதனால நான் கெட்டவளா தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றாள் லாவண்யா.

அவளை மேலும் கீழுமாகப் பார்த்த விகாஸ், “வாரேவா! எனக்குப் பொண்டாட்டியான சில மணி நேரத்திலேயே நல்ல உபதேசம் செய்ற… குட் ஜாப்!” என்று சொல்லி அவளை முறைத்தான்.

இந்தச் சம்பாஷணைகளைக் கண்ட மீடியாக்கள், “எவ்வளவு லவ்லி கியூட் கப்புள்ஸ்!” என்று புகழ்ந்து தள்ளினர். இதைக் கேட்ட ஆதித்யாவிற்கும் கணேஷிற்கும் காதில் புகை வராத குறைதான். “சைடு ஹீரோவா வந்து மெயின் ஹீரோ உன்னையே பீட் (Beat) பண்ணிடுவான் போல இருக்கே மச்சான்!” என்று ஆதித்யாவை வாரிவிட்டான் கணேஷ்.

ஆனால் விதியின் சதியோ, அன்று இரவே லாவண்யாவிற்கு ஒரு மிகப்பெரிய துயரம் நடக்க இருப்பதை யாரும் அறியவில்லை.

You may also like

Leave a Comment

About Me

Featured