Home ANTIHEROராட்சசியின் ரட்சகன் -14

ராட்சசியின் ரட்சகன் -14

by romaakeerthi
12 views

மகேஷ் பில்டிங்  வந்து பார்க்க அங்குள்ள கொத்தனார் மற்றும் சித்தாள் மூலமாக அவனை போலீஸ்  கைது செய்து விட்டு சென்ற விடயம் அவனுக்கு தெரிந்தது.

       உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றவன் அங்கு உள்ள காவல் அதிகாரியிடம் விசாரிக்க , ஏற்கனவே இந்த பில்டிங்கில் இரண்டு பேர் காணாமல் சென்றதும் அதற்கு காரணம் சிவா தான் என்று அவர்கள் சந்தேகப்படுவதால் காவலில் எடுத்து விசாரிக்க வைத்திருக்கிறோம் என்று தெரிவித்து வைத்தனர் .
     தற்பொழுது மகேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .

        உடனடியாக ஜெயாவிடம் இந்த விடயத்தை தெரிவித்தால் அவர் பதட்ட படுவார் என்று நினைத்த அவன் சர்வாணிக்கு மட்டும் அழைத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தான் .

     அடுத்த பத்தாவது நிமிடத்தில் காவல் நிலையம் வந்தவள் நேராக அங்குள்ள காவல் அதிகாரியிடம் சென்று பேசினாள் .

“சார் அந்த பில்டிங் ல தான் ரெண்டு பசங்க காணாமல் போயிருக்காங்க என்ற விஷயம் எனக்கும் தெரியும்  .
    நானும் ஒரு டிடெக்டிவ் தான் .
     ஆனா அதுக்கு காரணம் இவரு கிடையாது .
      எந்த அடிப்படையில் இவர் தான் அவங்க காணாம போனதுக்கு காரணம் னு நீங்க கைது செஞ்சுட்டு வந்து இருக்கீங்க .
       ஒருவேளை உங்க போலீஸ் ஆட்கள் யாராச்சும் அவரு அந்த பசங்கள கடத்துனது பார்த்தார்களா…?
      இல்ல அந்த பசங்க கடத்துறப்ப அவரு கூட இருக்கிறத தான் பார்த்தார்களா…? இல்ல தானே!
      அப்படி இருக்கிறப்போ எப்படி இவங்க தான் அதுக்கு காரணம்னு நீங்க சொல்லலாம்…?

ஹலோ மேடம் கரெக்டா அந்த பசங்க ரெண்டு பேரும் கடத்தப்பட்ட இடம் இவரோட பில்டிங் தான் .
      அது மட்டும் இல்லாம அவங்க ரெண்டு பேரும் கடத்திருக்கிறப்போ இவரும் சைட் ல தான் இருந்திருக்காங்க . 
     சைட்டு ல இருந்தவங்களுக்கு எப்படி அவங்க இடத்துல ஒரு கடத்தல் நடக்கிறது தெரியாம இருக்கும் ஒன்னு இவரு தான் ஆளு வச்சு அந்த பசங்கள கடத்தி இருக்கணும்  .
      அப்படியும் இல்லையா கடத்தல் காரங்களுக்கு உதவி பண்ணி இருக்கணும் .
      இவர ரொம்ப நாளா நாங்க கண்காணிச்சு  தான் இருந்தோம்  .
     கரெக்டா அந்த பசங்களோட மொபைல் சிக்னல் கட்டாகறப்போ அங்க காமிச்சா இன்னொரு நம்பர் இவரோட மொபைல் சிக்னல்…!
நீங்க எங்க வேணா போய் பேசிக்கோங்க விசாரணை முடியுற வரைக்கும் இவரை எங்களால் வெளியில் விட முடியாது …..” என்று லாப கப்புக்குள் சிவாவை தள்ளி பூட்டினார் அந்த போலீஸ் அதிகாரி .

அவள் அவள் கண்காணித்தவரை கடைசியாக கடத்தப்பட்டவர்களின் மொபைல் சிக்னல் கட்டான இடம் தான் சிவாவின் பில்டிங் என்பது வரை மட்டும் தான் ….

   அதை தாண்டி அவளுக்கு சிவாவின் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை  .

      அவள் அவனிடம் இருக்கும் தடயத்தை  என்னவென்று கேட்டது கூட இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன எடுக்கலாம் என்பதற்காகவே கேட்டாள் .

       மத்தபடி அவன் மீது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது .
     ஆனால் தற்பொழுது அந்த காவல் அதிகாரி கூறும் விடயம் அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது  .

       நிச்சயம் இவன் இருக்கையில் இவ்வாறு ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றால் ஒருவேளை அந்த கடத்தல் கும்பல் இவனுக்கு தெரியாமல் தான் இவனது பில்டிங் லேயே அவர்களை கடத்தி இருக்க இயலும் என்பது அவளது வாதமாக இருந்தாலும் ,அதை கேட்பதற்கு காவல்துறையினர் தயாராக இல்லை .

        அடுத்த கட்ட நடவடிக்கையாக அவனை ஜாமினில் வெளியே எடுத்தால் மட்டுமே அவனிடம் என்னவென்று பேசலாம் என்று முடிவெடுத்தல் உடனடியாக தனக்கு தெரிந்த லாயரையும் தொடர்பு கொண்டாள் . மகேஷ் லாகபின் நின்று கொண்டிருந்தது தனது நண்பனிடம் சென்று கத்திக் கொண்டிருந்தான் .
     “அப்பவே உன்கிட்ட சொன்னேனே கேட்டியா இந்த விஷயத்தை அவ கிட்ட கொண்டுட்டு போகலாம் அப்படி னு…
     நீ தான் கேட்கவே இல்லை  .
    இப்ப பாரு எங்க வந்து நிக்குது !
     இப்ப வேற அவங்க என்னென்னமோ சொல்றாங்க  . ஏதோ நம்ம இருக்கிறப்பயே கடத்தல் நடந்திருக்கிற மாதிரி சொல்றாங்க…! 
    
     ஏன் டா எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்குற நீ ஷர்வானிய பார்த்த ஒரு நாளிலேயே இப்படி அவ மேல வெறுப்ப அள்ளி வீசுற ….

     இப்ப கூட உனக்காக அந்த போலீஸ் ஆபீஸர் கிட்ட பேசுறது அவ தான்  .
      உனக்கு ஏன் அது புரியவே மாட்டேங்குது எனக்கு தெரியல…. ” என்று பேசுபவனிடம் எந்த பதிலும் கூறாமல் சிறிது நேரம் அவளையே பார்த்தவன் லாக்கப்பில் ஒரு மூலையில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான் .
      இதற்கு பின்பும் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் என்று நினைத்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த விர்வானியிடம் வந்தான் .

  “என்னம்மா உன் சைடு ல இருந்து யாராவது நாயே வராங்களா இல்ல என் ஃபிரண்ட்ஸ் மூலமா ஏதாச்சும் ட்ரை பண்ணவா …..?

என்னோட பிரண்டு ஒருத்தன் லாயர் தான் .
    நான் அவனுக்கு கால் பண்ண  . அவன் இப்ப பெங்களூர்ல இருக்கானா ம வரத்துக்கு ரெண்டு நாள் ஆகும் னு சொல்றாங்க  .
      ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போய் இருக்கானாம்
     அவன் தான் பெஸ்ட் லாயர் கூட ….
அவன் வந்தா நிச்சயமா நம்ம அவர வெளியில எடுத்து விடலாம்  .
   ஆனா அவன் வரதுக்கு ரெண்டு நாள் ஆகும் ,
     ரெண்டு நாள் வரைக்கும் அம்மா கிட்ட என்ன பதில் சொல்றது னு எனக்கு தெரியல !

     இப்பயே அவசர அவசரமா கிளம்பி வரத பாத்துட்டு எங்க போற னு கேட்டாங்க .
     நான் தான் பிரண்ட பாக்க போறேன் னு சொல்லிட்டு வந்துட்டேன் .

     அவங்களுக்கு அதிலேயே சந்தேகம் வந்தாலும் வந்து இருக்கும் ,
      அவங்க கிட்ட இப்போ இவரு உள்ளே இருக்காரு னு சொன்னா நிச்சயமா ரொம்ப வருத்தப்படுவாங்க .

     அவங்களுக்கு ஹெல்த் இஷூ இருக்குது வேற …
    நீங்க உங்க சைடுல யாராவது லாயர் இருந்தா பேசி பாருங்க…

     சரி இரு மா என்னோட ஸ்கூல் படிச்ச ஒருத்தன் லா காலேஜ் ல தான் படிச்சான் ,

      அதுக்கப்புறம் அவனோட பேசுறது இல்ல .
    நான் வேணா என் பிரண்டு மூலமா அவன் இப்போ எங்கள் லாயரா இருக்கான் னு கேட்டு பாக்குறேன்…..” என்று கூறியவன் உடனடியாக தனது நண்பனை அழைத்து அவனைப் பற்றி விசாரித்தான் .

     அவனது பதிலும் என்னவோ பூஜ்ஜியமாக இருக்க நிச்சயமாக இரு நாட்கள் அவனுக்காக காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா…?

       இல்லை இந்த ஊரில் வேறு ஏதாவது பெஸ்ட் லாயரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக அவனை வெளியே கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
       திருமணத்தன்று வந்திருந்த அவளின் நெருங்கிய தோழனுக்கு அழைத்து பேச அவனும் சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு ஒரு லாயரை வரவழைத்து இருந்தான் .

      அடுத்த பத்தாவது நிமிடத்தில் சரியாக அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட ,  அவனும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர காவல்துறையினர் இன்னும் அவன் மீது சந்தேகத்தில் இருப்பதால் ஊரை விட்டு எங்கே வெளியேவும் செல்லக்கூடாது  .

    அதுபோக ஆவணி கண்காணிப்பதற்கு இன்று மட்டி போலீசையும் வைத்திருந்தனர் . இந்த விடயம் ஷர்வானி சிவா மகேஷ் என மூவருக்குமே நன்றாக தெரிந்தும் இருந்தது . ஷர்வானி அதன் பிறகு எதுவும் பேசாமல் அவள் வந்திருந்து ஸ்கூட்டிலேயே சிவாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள் .

       மகேஷ் அவனது வேலையையும் ஓரம் தள்ளி விட்டு சிவா உடன் இணைந்து அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்  .   
      இந்த கேஸ் விஷயமாக நிச்சயமாக சிவா எதுவும் அவளிடம் கூறப்போவதில்லை .

ஏனெனில்அவனுக்கு அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருப்பவனை நம்புவதில் இனி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அவளிடம் இன்று பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டிற்கு சென்றான் .

    வீட்டிற்குள் மூவரும் நுழைய ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை சற்று நேரத்திற்கு முன்பு அரக்க பறக்க வுர்வானி கிளம்பி போனதையும் தற்பொழுது மூவரும் வந்திருப்பதையும் பார்த்து என்னவென்று கேட்பதற்காக அவர்கள் அருகில் சென்றார் .

“என்ன டா நீ போன வேகத்திலேயே வந்துட்ட !
   அது மட்டும் இல்லாம உன் கூட இவனுங்க ரெண்டு பேரும் வந்துருக்காங்க .
     இந்நேரத்துக்கு அவங்க சைட்ல தானே வேலையில் இருப்பாங்க .
     அது மட்டும் இல்லாம இப்போ வேலைய வேற சீக்கிரம் முடிக்கணும் னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க  . அது எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்திருக்காங்க…” என்று ஜெயா பேசிக் கொண்டிருக்க அவளுக்கு தான் என்ன கூறுவது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க மகேஷ் பேசினான் .

“அது ஒன்னும் இல்லமா முக்கியமான பைல்  வீட்ல வச்சுட்டு போய்ட்டானாம் .

      அதனால தான் எனக்கு கால் பண்ணி எடுத்துட்டு வர சொன்னான் .  நான் கொஞ்சம் வெளியில இருந்ததினால  நான் வர லேட் ஆகும்  .

    நீயே போய் எடுத்துக்கோ அப்படி னு நான் தான் சொன்னேன் . அதுக்குள்ள என் வேலையும் முடிஞ்சு சரியா நானே போய் எடுத்துட்டு வரலாம் னு வந்தா  கரெக்ட்டா இவனும் இங்க வந்துட்டான் அதாம்மா …. “
என்று கூறியவன் சிவாவையும் தள்ளி கொண்டு அவனது அறைக்குள் சென்று விட்டான் .
    இதற்கு மேல் நின்னால் ஏதாவது கேள்வி கேட்பார்கள் என்று ரீதியில் ……

     சரி மா  ஜூஸ் போட்டு கொண்டு வரேன்  என்று சமையலறைக்குள் நுழைந்த ஜெயா  அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  ஜூஸ் உடன் வர அதை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள சிவாவின் அறைக்கு சென்றாள் .

அறை வாசலிலேயே மகேஷ் கத்திக் கொண்டிருக்கும் சத்தம் அவளுக்கு நன்றாகவே கேட்க அறைக்குள் வந்தவள் கதவையும் சாத்திவிட்டு இருவரிடம் பேசினாள் . சுற்றிலும் வயல் இருக்க தாண்டி ஒரு தென்னந்தோப்பு காணப்பட்டது தென்னந்தோப்பில் வெளிச்சத்திற்காக ஒரே ஒரு பேட்டரி லைட் மட்டும் வைக்கப்பட்டு இருக்க அங்குள்ள மரங்களில் உள்ள தென்னங் கொலையை பாதுகாப்பதற்காகவே காவல்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் .

        தோப்பிற்கு உள்ளே செல்ல செல்ல வெளிச்சம் என்பதே கிடையாது . கிட்டத்தட்ட தோப்பு ஆரம்பித்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து சென்ற பிறகு ஒரு இடத்தில் அந்த உருவம் நின்றது .

    அந்த உருவத்திற்கு நேர் எதிராக இருந்த இரண்டு மரங்களில் 18 பிராயம் மிக்க இரு ஆண்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர் .

      தனது கையில் வைத்திருந்து பேட்டரி லைட்டை அங்கு ஓரமாக வைத்துவிட்டு அருகில் கிடந்த சாறு எடுத்து அவர்கள் இருவரின் முன்பு போட்டு அமர்ந்தது அந்த உருவம் . அந்த இருவரும் மயக்கத்தில் இருக்க அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை .

       அவர்களது முகத்தில் தண்ணீரை ஊற்றி மயக்கத்தை கலைத்த அந்த உருவம் இருவரையும் நோக்கியது .

மயக்கம் தெளிந்த இருவரும் தாங்கள் எங்கிருக்கிறோம் என சுற்றி முற்றி பார்க்க அவர்களுக்கு தெரிந்தது என்னவோ அந்த கருப்பு உருவம் மட்டுமே .   

     அதைத் தாண்டி தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பது அவர்களால் உணரப்பட்டது .

     கட்டப்பட்ட இரு ஆண்களில்  ஒருவன் சீற்றம் கொண்டு அந்த உருவத்திடம் கத்த தொடங்கி விட்டான்.

“ஏய் யாருடா நீங்க எல்லாம் எதுக்காக எங்க ரெண்டு பேரையும் கடத்தி வச்சிருக்கீங்க…

      நாங்க ரெண்டு பேரும் டியூஷன் போயிட்டு எப்பயும் விளையாடுற கிரிக்கெட் கிரவுண்ட்ல  இருக்கும் போது எதுக்காக இப்படி எங்கள கடத்திட்டு வந்து இருக்கீங்க…?

       எங்க கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க  . நீங்க நினைக்கிற மாதிரி எங்க அப்பா அம்மா ஒன்னும் அவ்வளவு வசதி கிடையாது  .

     நீங்க கேட்கிற காசை கொடுக்குறதுக்கு …

     அது மட்டும் இல்லாம நாங்க ரெண்டு பேருமே மிடில் கிளாஸ் தான் எங்க கிட்ட இருந்து என்னதான் எதிர்பார்க்கிறிங்க…?”அவன் பேச பேச சிரித்த அந்த உருவம் ” உங்க ரெண்டு பேரு கிட்டயும் நாங்க எதிர்பார்க்கிறது உங்கள தான்!

     உங்க அப்பா அம்மா கிட்ட இருந்து எங்களுக்கு னு எதுவும் தேவை கிடையாது .

    அட் தி சேம் டைம் உங்க அப்பா அம்மா எங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா அப்புறம் இங்கிலீஷ்ல அவங்களையும் சேர்க்க வேண்டியதா இருக்கும் ……!

    நீ சொல்றது எனக்கு புரியல . எங்க ரெண்டு பேரு வச்சு நீங்க என்ன பண்ண போறீங்க….

    அது போக போக உங்களுக்கே புரியும் …. “என்று அந்த தென்னந்தோப்பு அதிர சிரித்த அந்த உருவம் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ஊசியை எடுத்து இருவருக்கும் குத்தியது திரும்பவும் இருவரும் மயக்க நிலைக்கு சென்றனர் .

      அவர்கள் இருவரும் மயங்கி விட்டனர் என உறுதி செய்த அந்த உருவம் தனது கைபேசியில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தது .

“ஹலோ நீ சொன்ன மாதிரி நான் தோப்புக்கு வந்து பசங்கள பாத்துட்டேன்  .

     அவங்க ரெண்டு பேருமே நல்லா தான் இருக்காங்க .

     என்ன ரெண்டு பேர் ல ஒருத்தன் தான் சும்மா நொய் நொய் னு பேசிக்கிட்டே இருக்கான் .

      இன்னொருத்தன் சரியான பயம் தான் கொள்யா இருப்பான் போல…

      அவன் பேசுவதை பார்த்து கூட பயப்படுறான் .

      ஆனா இன்னொரு தடவை நிச்சயமா அவங்க கண் முழிச்சிட்டா நம்மளால சமாளிக்க முடியாது னு எனக்கு தோணுது  .

     இந்த தோப்புல உள்ள ஆட்களுக்கு தெரியாம தான் நம்ம இவங்கள கடத்தி வச்சிருக்கோம்.

     யாருக்காவது தெரிஞ்சிருச்சுன்னா இந்த கிராமத்துல உள்ள மக்கள் நிச்சயமா நம்மள சும்மா விட மாட்டாங்க …..

      ரொம்ப நாளைக்கு யாருக்கும் தெரியாம இவனுங்கள இங்க வச்சுக்கிறது இம்பாசிபிள் .

      கூடிய சீக்கிரம் ஒரு பாதுகாப்பான இடத்தை பாரு நம்மை இவங்கள மாத்திடலாம் ……

  இடியட் நான் சொல்றத நீ செய்யணும் .

     நீ சொல்றத என்னால தான் செய்ய முடியாது  .அங்க உள்ள மக்கள் யாரும் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்காம நீ தான் பாத்துக்கணும்  ,

     அதுக்காக தான் உனக்கு மாசத்துக்கு லட்சக்கணக்குல சேலரி கொடுத்துக்கிட்டு இருக்கேன்  அந்த ரெண்டு பசங்க நமக்கு முக்கியம் தான் ஆனா அவங்கள மிஸ் பண்ணிட கூடாது . அதே நேரத்துல அவங்க நமக்கு இப்ப முக்கியம் இல்ல  அப்பதான் பார்ட்டி கிட்ட கொடுக்க முடியும் .

    ஓகே பாஸ் நான் இந்த கிராமத்திலேயே வேலை செய்றவன் மாதிரி இருந்து தோப்புக்குள்ள இந்த இடத்துல மட்டும் யாரும் வராத மாதிரி நான் பாத்துக்குறேன்……” என்று கூறியவன் அழைப்பையும் துண்டித்து விட்டான் .

     எனினும் அவனுக்கு நிச்சயமாக இந்த தோப்பில் யாராவது பார்த்து விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தினால் ,  உடனடியாக அவனது ஆட்களுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் இருவரையும் அங்கிருந்த பூட்டி கிடந்த ஒரு பண்ணை வீட்டில் சென்று அடைத்தான் .

கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தவள் இருவரிடமும் பொறுமையாக பேச ஆரம்பித்தாள் .

     “நீங்க ரெண்டு பேரும் கத்துக்கிட்டு இருக்கிறது கீழ வரைக்கும் கேக்குது.அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயமா டென்ஷன் ஆகுவாங்க . ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க எதா இருந்தாலும் பொறுமையா பேச தெரியாதா…?

சாரி மா எதோ ஒரு வேகத்துல நான் தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டன் ……”என்று மகேஷ் கூற சிவாவும் அவர்கள் என்ன பேசினால் எனக்கு என்ன என்று ரீதியில் மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டான் .  எனக்கும் இங்கு நடப்பவைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் …….

      “மச்சான் இப்ப கூட அந்த பொண்ணு உன் அம்மாவுக்காக தான் பேசிகிட்டு இருக்கு  ,

     ஆனா நீ இங்க எதுவுமே நடக்காத மாதிரி இப்படி ஓரமாக போய் உட்கார்ந்து இருக்க…

     உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க….?

     இப்ப உன் கைக்கு கிடைச்ச காப்ப அவகிட்ட குடுடா  .

     என்ன நடந்துச்சுன்றதை தெளிவா சொல்லு அப்ப தான் இந்த பிரச்சனை ல இருந்து நம்ம முழுசா வெளியில் வர முடியும்  .

      ரொம்ப நாளைக்கு இந்த விஷயத்தை நம்ம அம்மா கிட்ட இருந்து மறைக்க முடியாது.

      என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு தெரிய வரப்ப நிச்சயமா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க……

டேய் நான் முன்னாடி சொன்னது தான் இப்பயும் சொல்ற!

     என்கிட்ட கிடைச்சது வெறும் காப்பு மட்டும் தான் அந்த காப்பு லயும் ஏதோ ஒரு ரத்தக்கரை இருந்துச்சு .

     இந்த காப்ப வச்சு அவ என்ன பண்ண முடியும்  . எதுவும் பண்ண முடியாது….” என்று கூறியவன் அங்குள்ள மேசையின் டிராயரில் வைத்திருந்த காப்பையும் எடுத்து அவளிடம் நீட்டினான் .

அவன் தன்னிடம் இந்த விடயத்தை பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது .

       ஏனோ அவன் ஏன் இவ்வாறு யோசிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவளது சிந்தையில் ஓடிக்கொண்டே இருந்தது .

      எப்பொழுதும் எவ்வளவு பெரிய சிக்கலான கேசாக இருந்தாலும் தெளிவாக யோசித்து முடிவு எடுப்பவளுக்கு இன்று அவனது ஒத்துழையாமை சற்று கோபமாக இருந்தாலும் சரி இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த ஒரு பயனும் இல்லை என்ற ரீதியில் மகேஷிடம் பேச ஆரம்பித்தாள் .

” அண்ணா இப்ப அவருக்கு கிடைச்சிருக்கிறது ஜாமீன் மட்டும் தான் .       

    இன்னும் இந்த கேஸ் ல இருந்து  அவர் முழுசா வெளியில் வரல .

     அதே நேரத்துல இந்த கேஸ் ல இருந்து முழுசா வெளில வரணும் அப்படின்னா நான் சைட்டு பூரா சுத்தி பார்க்கணும் .

    அவரு என் கிட்ட எதையும் சொல்ற மாதிரியே எனக்கு தெரியல !அவன் சொல்லலனா என்னம்மா எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன்  .   

    நீ இன்னைக்கு சைட்டுக்கு வந்து உனக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியுதா னு பாரு!  அதே நேரத்துல அவனோட மொபைல் சிக்னல் எல்லாத்தையும் நீயே டிரேஸ் பண்ணி பாரு…அந்த போலீஸ் ஆபீசர் சொன்ன மாதிரி உனக்கு ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு  பாரு …நிச்சயமா அவன் இது ல சம்மதப்படல    அந்த காப்பை எடுத்த உடனே என் கிட்ட சொல்லிட்டான் .

       அதுக்கப்புறம் அவனுக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது .

     ஆனால் அன்னைக்கு நாங்க எல்லாருமே சைட்டு ல இருந்தும் நாங்க எல்லாரும் இருக்கிறப்ப எப்படி அது மாதிரி ஒரு கடத்தல் நடந்திருக்கும்…?

      தெரியல அண்ணா சைட்ட சுத்தி பார்த்ததுக்கு அப்புறமா நமக்கு ஏதாச்சும் எவிடன்ஸ் கிடைச்சா மட்டும் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் …. ” என்று கூறியவள் உடனடியாக மகேஷுடன் அந்த சைட் க்கு  சென்றுவிட்டாள் .

சிவாவிற்கு தான் அவள் இந்த விடயத்தை பற்றி பேசுவதும் இதில் சம்பந்தப்படுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை  .

      அவள் எதற்காக தன்னை பற்றி சிந்திக்க வேண்டும் தனது தாயை பற்றி சிந்திக்க வேண்டும் …?

    அதுபோக தான் இதில் மாட்டிக் கொண்டால் அவளுக்கு என்ன என்ற ரீதியில் அவனது யோசனை முழுக்க இருந்தது .

       எதிர்வரும் காலங்களில் அவள் தனக்காக யோசித்து  சிந்தனை எல்லாம் அவன் யோசிப்பதற்கு வாய்ப்புண்டோ அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் !

அவனும் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து படி சென்றான் ஜெயாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை .  முதலில் அவள் வேகவேகமாக எங்கோ சென்றாள் . பிறகு மூவரும் ஒன்றாக வந்தனர் .இப்பொழுது மூவரும் கிளம்பி அவசர அவசரமாக செல்கின்றனர் என்ற ரீதியில் யோசித்தவாறு சமையல் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார் .அங்கு சென்றவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிந்தது .   தான் சந்தேகித்த ஆள் நிச்சயமாக சிவா கிடையாது என்று ……

You may also like

Leave a Comment

About Me

Featured