Home SRIJA NOVELSராட்சசியின் ரட்சகன் -15

ராட்சசியின் ரட்சகன் -15

by romaakeerthi
11 views

” நீ இப்ப என்னதான் சொல்ல வர….நீ சந்தேகப்பட்ட ஆள் சிவா கிடையாது அதே நேரத்துல நம்ம தேடுற ஆள் யாருன்னு தெரியாதுன்னு சொல்ற  .

     ஆனா அந்த ரெண்டு பசங்க கடத்தப்பட்டது சிவா கட்டுர பில்டிங் தான் அப்படி னு சொல்ற ….

      கரெக்டா அந்த பசங்களோட மொபைல் நம்பர் கட்டாகற நேரத்துல சிவாவோட மொபைல் சிக்னாலும் அங்க தான் காட்டுது…

ஒரு வேளை அவங்க இடத்தில இருக்கலாம் இல்லையா …?   எப்படி அவன் இல்லவே இல்லை னு நீ சொல்ற ….

நிச்சயமா அவன் இல்ல நானும் அவனோட எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் இந்த கேஸ்ல  இன்வால்வாகாமல் தான் இருந்தேன் .  கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன பத்தின ஃபுல் டீடைல்ஸ் நான் கலெக்ட் பண்ணிட்டேன் .

     அப்ப தான் எனக்கு இந்த பில்டிங் ல ரெண்டு பசங்க மிஸ் ஆன கேசும் எனக்கு தெரிஞ்சுச்சு  .

     அந்த கேசும் கரெக்டா என் கைக்கு வந்துச்சு .

     ஆனா அப்ப கூட இவனோட கால் ஹிஸ்டரியை நான் செக் பண்ணாம விட்டுட்டேன் .

      ஆனா அந்த பசங்க கடத்தப்பட்ட நேரத்துல தான் இவனோட மொபைல் சிக்னல்  இங்க காட்டுது  .

    வெறும் மொபைல் சிக்னல வச்சு மட்டும் அவன்தான் கடத்திருப்பாங்கன்னு சொல்ல  முடியாது …

      அதே நேரத்துல கடத்தலுக்கு துணை போயிருப்பா னு சொல்ல முடியாது  .

      ஃபர்ஸ்ட் அவன் ஏன் அந்த ரெண்டு பசங்கள கடத்தனும் …?

     அவனுக்கு கடத்தி எதுவும் ஆகப்போறது கிடையாது  .

    நானும் அப்படித்தான் நினைச்சேன் ஒருவேளை அந்த கடத்தல் கும்பலோட தலைவன் இவனாக இருக்குமோ அப்படின்னு ….

      ஆனா அவனோட வேலை பில்டிங் கட்றது மட்டும் தான்  .

    அது மட்டும் இல்லாம அது எம்எல்ஏ ஓட வீடு .

      இப்போ அந்த கடத்தல் நடந்ததுக்கப்புறமா அந்த காப்பு மட்டும் தான் அவன் கைக்கு கிடைச்சிருக்கு  .

     அத வச்சு தான் அவன் இந்த வீட்டையும் சீக்கிரமா முடிக்கணும் அப்படி னு சொல்லிட்டு வேக வேகமா வேலையை செஞ்சுக்கிட்டு இருந்தான் .

     ஆனா அந்த நேரத்துல போலீஸ் வந்து  அரெஸ்ட் பண்ணிடுச்சு  .

     எப்படியும் லாயர் வைத்து அவனை வெளியே எடுத்துட்டாலும் அன்னைக்கு அவனோட சேர்ந்து நான் அந்த இடத்துல போய் பார்த்தேன்  .

    அப்ப தான் எனக்கு தெரிஞ்சுச்சு .

       அங்க இருந்த ஒரு சித்தாள் சொன்னாங்க .

      கரெக்டா அந்த ரெண்டு பசங்களும் கடத்தப்பட்டு ஒரு வாரம் இருக்கும்  .

     ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஞாயிற்றுக்கிழமை ல அங்க வேலை நடந்துச்சு  னு  ….

   அந்த வேலைக்கு சிவா வந்து இருந்தான் .

      அவன் வந்துட்டு திரும்ப ஏதோ ஒரு மீட்டிங் அப்படி னு சொல்லிட்டு போற அவசரத்துல ஃபோன இங்கேயே வச்சுட்டு போனதாகவும் மறுநாள் தான் அந்த கொத்தனார் அவன் கிட்ட ஃபோன கொடுத்ததாகவும் என்கிட்ட சொன்னாரு  . அப்ப தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .

     நிச்சயமா நம்ம தேடுற ஆளா அவன் கிடையாது னு …

     அது மட்டும் இல்லாம நம்ம நினைக்கிற அளவுக்கு அவ்வளவு ஒர்த்தான கேங்ஸ்டர் எல்லாம் அவன் கிடையாது  . அவனே ஒரு முட்டா பீசு …. ” என்று அவள் பேசி முடிக்கவும் சரியாக அவளது வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்தது .

யார இவன் முட்டா  பீசு னு சொல்றா….

     ஒருவேளை நம்மள தான் சொல்லியிருப்பாளோ…? என்ற ரீதியில் பாதியை மட்டும் காதில் வாங்கி விட்டு வந்தவனால் ஒரு முடிவுக்கு வரவில்லை .

      அவளை ஒரு முறை பார்த்தவாறு காலை உணவு சாப்பிட்டு கை கழுவு வந்தவனுக்கு அப்படியே சிங்கிள் கையையும் கழுவி விட்டு அங்கிருந்த சென்று விட்டான் .

அன்று போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு சைட்டுக்கு  அவளை அழைத்து சென்றவுடன் அங்குள்ள சித்தாள் மற்றும் கொத்தனாரியிடம் பேசி அவனது மொபைல் சிக்னல் எவ்வாறு அங்கு இருந்தது என்பதை பற்றியும் தெரிந்து கொண்டவளுக்கு ஒரு முடிவும் கிடைத்துவிட்டது .

       அதே நேரத்தில் முழுதாக இந்த கேஸிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் அந்த கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் .

      அவர்களது நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அவளது யோசனை முழுக்க இருந்தது .

      அதன் பிறகு இரண்டு நாட்கள் அவன் வேலைக்கு செல்ல மதியம் அவள் தானே உணவை எடுத்து சென்றவாறு இருந்தாள் .

       அப்படியே அந்த இரு நாட்களும் கழிய அவன் சென்னை புறப்பட வேண்டிய நாளும் வந்தது  .

     இன்று தான் கிளம்ப வேண்டும் அதே நேரத்தில் போலீஸ் வேறு ஒரு பக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம் ஊரை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரித்ததும் அவனது நினைவிற்கு வந்தது  .

     அதையும் அவன் பொறுப்பெடுத்தாமல் தவறு என் மீது இல்லை என்ற ரீதியில் நான் ஏன் அவர்களுக்கு பயந்து எனது தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களில்  ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றவாறு சென்னைக்கு இன்று ஏற்கனவே மகேஷிடம் பேசிய விடயமாக கிளம்பி கொண்டிருந்தான் . 

      மகேஷ் இன்று தான் சாராவின் தந்தை இடம் தனது திருமண விடயத்தை பற்றி பேசுவதாக இருப்பதால் தனது நண்பனிடம்  ஏதேதோ பொய் கூறி நீ முன்னே செல் நான் எனது வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்ற ரீதியில் கூறி இருந்தான். தனக்கு தெரியாமலா போகப் போகிறது என்ற ரீதியில் அவனும் விட்டுவிட்டான்.

      ஏற்கனவே ஜெயாவிடம் இந்த விடயத்தை பற்றி கூற அவர் தான் தற்பொழுது செல்ல வேண்டாம் என்று கூறியும் ,  அவன் கேட்காமல் நிச்சயம் அங்கு தான் கட்டப் போகும் பில்டிங் விடயத்தை பற்றி பேசுவதற்காகவே செல்வதாக கூறியிருந்தான் .

     இப்பொழுது மகேஷ் வேறு  வராததன் காரணமாக ஜெயா ஷர்வானியை அழைத்து செல்லுமாறு கூறியிருந்தார் . அவனுக்கு அவனை அழைத்து செல்வது துளி கூட விருப்பமில்லை அதையும் தாண்டி தனது தாய் கூறுகிறாரே என்ற ரீதியில் அறைக்குள் சென்று தனது உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான் .

    அங்கு வந்த ஷர்வானி அவனிடம் பேசினாள் .

” நீங்க இந்த கேஸ்ல சம்மந்தப்படலன்றது எனக்கு நல்லாவே தெரியும்  .

      அதே நேரத்துல உங்க மேல போலீசுக்கு சந்தேகம் இருக்கு தான் . 

   வெறும் மொபைல் சிக்னல் வச்சுக்கிட்டு அவங்க பேசுறது எனக்கே முட்டாள் தனமா தோனலாம் .

     இருந்தாலும் அவங்க  டுயூட்டியை அவங்க பாக்குறாங்க .

     இந்த நேரத்துல நீங்க வெளியூர் போறது எனக்கு சரி னு தோனல  .

    அங்க வந்து ஏதாவது பிரச்சனை அப்படின்னா அது உங்க கெரியாருக்கே ஆபத்து……!

என்ன பெரிய ஆபத்தாக போகுது…?

     எந்த ஆபத்தாக இருந்தாலும் நான் தனியாவே சமாளிச்சுக்குவேன் .

     நீ என்கூட வரதா இருந்தா வா …

    அப்படி இல்லன்னா பேசாம இங்கேயே இரு ,

     அங்கேயும்  வந்து எனக்கு இதே மாதிரி அட்வைஸ் பண்ணாத !

       நீ வந்து என்  கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல .  ஏதோ அம்மா சொன்னாங்க என்ற காரணத்துக்காக தான் உன்னையும் கூட்டிட்டு போறேன்…

     உன்னை கூட்டிட்டு போகலைன்னா நமக்குள்ள என்ன டீலிங் போகுது அப்படின்னு அம்மாக்கு தெரிஞ்சா அம்மா தான் வருத்தப்படுவாங்க  .

     கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே நமக்குள்ள இருக்கிறது அவர்களுக்கு காட்டிக்க வேண்டாம்  என்று நான் நினைக்கிறேன் …. ” என்று கூறியவன் தனது உடைகளையும் தனக்கு தேவையான உடைமைகளையும் தனது பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு அவளும் அவனோடு கிளம்பி போவது தான் சரி என்று அழைக்கப்பட்டது இனிமேல் அங்கு ஏதாவது பிரச்சனை என்றால் நிச்சயமாக அதை தீர்க்க வேண்டும் என்று ரீதியில் அவளும் அவனோடு தனது உடைகளை எடுத்து வைத்தவாறு மாடியில் இருந்து கீழே இறங்கினர் இருவரும் …..

ஜெயாவிற்கும் தனது மகனைப் பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் . 

      அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தனியாக போவது சரி இருக்காது என்ற காரணத்தினாலே இந்த பயணமாவது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கட்டும் என்ற ரீதியிலேயே அவளையும் அழைத்துச் செல்லுமாறு கூறி வைத்திருந்தார் .

       அதற்கும் அவன் முடியாது என்று மறுக்க மாட்டான் என்பது அவருக்கும் தெரிந்தது.

       தனது பேச்சிருக்கு இவ்வளவு மரியாதை தருபவன் தனது எண்ணத்திற்கு ஈடு கொடுக்காமல் இவ்வாறு செய்து கொண்டிருப்பது தான் அவருக்கு வருத்தத்தை கொடுத்தது  .

     எனினும் அவர்கள் நிச்சயமாக ஒன்றாக சேர்ந்து வாழும் காலமும் கூடிய சீக்கிரம் வரும் .

       அதற்கு அடிப்படையாகவே இந்த தனிமையான பயணம் அமையப் போகிறது என்றவாறு மாடியில் இருந்து இறங்கி வரும் தனது மகனையும் மருமகளையும் நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் .

     இருவரும் கீழே வந்த உடன் சிவா தனது தாயிடம் பத்திரமாக இருக்குமாறும் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுமாறும் கூறினான் .

” அம்மா நாங்க அங்க வேலை முடிஞ்ச உடனே சீக்கிரமா வந்திருவோம் .

     நீங்க ஒழுங்கா டேப்லெட் போட்டுக்கோங்க .

     உங்களுக்கு தனியா இருக்க ஓகே இல்லைன்னா மகேஷ் அம்மாவ வேணா கூட துணைக்கு கூப்பிட்டுக்கோங்க சரியா …. “என்று கூறியவாறு வர்வாணி அவரை கட்டியணைத்து விடை பெற்றாள் . தனது அம்மாவிடம் இவள் இவ்வாறு உரிமையாக பேசுவதும் கட்டியணைப்பதும்  சிவாவிற்கு தான் கடுப்பாகி போனது  .

     அவரிடம் பேசி விட்டு காரில் சென்று தனது பேக்கை வைக்க சென்றவன் மறுபடி வீட்டிற்குள் வரும் போது அவர்கள் இருவரும் அணைத்து பிரிந்ததை பார்த்தபோது அவனுக்கு தான் நீ மட்டுமா தனது தாயை  கட்டியணைப்பாய் …!

      நானும் தான் அணைத்து விடுவேன் என்ற ரீதியில் அவள் விலகிய அடுத்த நிமிடமே அவனும் தனது தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவாறு விடை பெற்றான் .

       இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷர்வானி தான் கடைக்கண் பார்வையில் அவனை பார்த்தவாறு சிரித்துக்கொண்டாள் .

       அவர்களது கார் வீட்டை விட்டு தாண்டும் போதுதான் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு அவர் தன்னை பார்த்து சிரிக்கிறாள் என்பது அவனால் உணர முடிந்தது .

       ஜெயாவும் அவர்கள் சென்றவுடன் கேட்டையும் சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று கதவையும் அடைத்துக் கொண்டார் .     

     இவளுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா என்று ரீதியில் அவளை கண்டும் காணாதவாறு ரோட்டில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான் .

      அவன் சொந்தமாக கார் வைத்திருப்பதால் காரிலேயே சென்றுவிடலாம் என்பது அவனது முடிவாக இருந்தது .

      அதுபோக மகேஷும் அவனும் சென்றிருந்தாலும் கூட அவர்கள் இவ்வாறு காரில் செல்வது தான் வழக்கம் ,

     பஸ்  ட்ரெயின் என்றால் நிச்சயமாக அலைச்சல் ,  அது போக அசதி வேறு வந்துவிடும்  .

      அதன் காரணமாக அங்கு நடக்கப் போகும் மீட்டிங்கில் ஏதாவது பிரச்சினை வந்து விடக்கூடாது என்பது அவனது எண்ணமாக இருந்ததால் அவனது காரிலேயே கிளம்பி விட்டார்கள் .

     பஸ் ஸ்டாண்ட் தாண்டி கார் சென்று கொண்டிருக்க அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது அழைத்தது என்னவோ மகேஷ் தான்.

     ஆனால் ஏன் இவ்வளவு சீக்கிரமாக அழைக்கனும்…?

      ஒருவேளை அவனது வேலை முடிந்து விட்டதா என்று நினைத்தவாறு பேசிய அவன் மறுமுனையில் கேட்ட தகவலில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருந்தான் .

       காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவன் பேசி முடித்தவுடன் ஏதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்த அவள் என்ன என்று விசாரித்தாள் .

“என்னாச்சு சிவா எதுக்காக யோசிச்சிட்டு இருக்கீங்க …?

    ஏதாச்சும் பிரச்சனையா….” என்று சாதாரணமாக அவன் தோள் தொட்டு  பேசியது தான் அவனை நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது .

“ஹான்  பிரச்சனை தான்!

     மகேஷுக்கு இப்ப அவசரமா கார் தேவைப்படுதாம் .

    அவனோட கார் திடீர் னு ஏதோ பிராப்ளம் ஆகிட்டு போல ….

    இன்னைக்கு அவன் எதுவும் முக்கியமான வேலை பார்க்க போறேன் அப்படி னு சொன்னாம் .

    என்ன வேலை அப்படி னு என் கிட்ட சொல்லல .

    ஆனா பர்ஸ்னலா ஏதோ பண்றான் னு மட்டும் எனக்கு தெரியுது….

நானும் என் கிட்ட விஷயம் வரப்ப தெரிஞ்சுக்கலாம் னு விட்டுட்டேன்….

சரி அண்ணா கிட்ட கார் வேணும்னா நீங்க கொடுத்து விட்டுருங்க . நம்ம பஸ்ல போய்க்கலாம் … ” என்று அவள் பேசி முடிக்க அவன் தான் ஆச்சரியமாக பார்த்தான் .

       மகேஷுக்கும் இவர்கள் இருவரை பற்றிய அனைத்து விடயங்களும் தெரியும்  ,

      இன்னும் தெளிவாக கூற போனால் அவளை திருமணம் செய்வதற்கு முன்பாக இருந்து அவனது எண்ணங்கள் என்பது என்ன என்பது அவனுக்கு தெரிந்தும் ஆனால் ஷர்வானியிடம் அவன் நினைத்திருந்தால் பேசி இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் .

       ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை .

      ஏன் திருமணம் முடிந்து கூட அவனை பற்றி கூறவில்லை .

     இப்பொழுது இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் விவாகரத்து ஆகப் போகிறது என்று தெரிந்தும் அதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை .

      ஏன் அவனோடு சேர்ந்து வாழ் என்று கூட கூறவில்லை  .

     அப்படி இருக்கும் பட்சத்தில் இவள் அவனை அண்ணா என்று அழைப்பதும் அவனுக்காகவே உணவெல்லாம் சமைத்து வந்து கொடுப்பதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .

      இவளிடத்தில் நிச்சயமாக வேறு ஒரு பெண் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனது நண்பனை உண்டு இல்லை என்ற செய்திருப்பாள் .

    ஆனால் அவளும் அதற்கு மாறாக அவனிடம் அண்ணன் என்று பாச முதலிய அல்லவா பொழிந்து கொண்டிருக்கிறாள்….!

      ஏதேதோ சிந்தனைகளில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை மீண்டும் நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது அவளது குரல் தான் ……!ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த சிவா தான் சாலையிலேயே கவனத்தைப் பதித்து வரும் அவளை பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் .  

     நிச்சயமாக இவள் கத்துவாள் கோபப்படுவாள் கொடுக்க முடியாது  கூறுவாள் என்று பார்த்தால் இவளோ அதற்கு மாறாக சரியாக அவன் சிவாவை அழைத்த அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் இருவரின் கண் முன் வந்த நிற்க ,

   உடனடியாக சிவாவின் கையில் வைத்திருந்த கார் கீயை எடுத்து தங்களது லக்கேஜ் உம் எடுத்துக்கொண்டு மகேஷின் கைகளில் ஒப்படைத்தவாறு இருவரும் பஸ் ஏறிவிட்டார்கள்  .

     காதில் இயர் பர்ட்ஸ் வேறு அவள் மாட்டி இருப்பதால் பாடலை ரசித்தவாறு அந்த வெயிலிலும் ஏதோ ஒரு விடயத்தை ரசித்து கொண்டு வருகிறாளே  என்ற ரீதியில் அவனது பார்வை அவள் மீது படிந்தது .     

       திடீரென்று யாரோ தன்னை குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு மேலோங்க சடார் என்று அவள் பக்கம் திரும்ப இருவருமே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்ததன் காரணமாக      அவனது மூக்கிலேயே முட்டிக்கொண்டாள் .   

      இருவருமே ஒருவரின் ஒருவர் மூக்கை தடவிக் கொண்டு இருவரின் பார்வையையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க செய்தனர் .சட்டென்று அவலம் ஜன்னல் புறம் மீண்டும் திரும்பிக்கொண்டாள் ,

     என்னடா இது நம்ம அவள பாத்துக்கிட்டே இருந்தோம்!

      அவளுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்  .

     ஏன் இவன் நம்மளை பார்க்கிறான் என்று….

     என் மூக்குல இடிச்சு கூட என்ன திட்டாம அவ  திரும்ப வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டா ….

      இந்த வெயில்ல அப்படி என்ன தான் ரசிகரத்துக்கு இருக்கு னு எனக்கு தெரியலையே!

      மழையா இருந்தா கூட ஏதோ கொஞ்சம் பார்க்கலாம்  .

    வெயில இப்படி பார்த்துக்கிட்டு வராளே என்ற ரீதியில் மேலும் அவனது பார்வை அவளை சுற்றியே கிடந்தது .

“ரசிக்கிறதுக்கு மழையா தான் இருக்கணும் னு அவசியம் இல்ல,

    நம்மள சுத்தி வெயில் இருந்தாலும் அந்த வெப்பத்தையும் ரசிகரத்துக்கு தேவையான ரசனை நம்ம கிட்ட இருந்தா போதும்…

       எப்பேர்பட்ட சூழ்நிலையையும் அழகா ரசிகரக்குக்கு நமக்குள்ள ஒரு கற்பனை பார்வை தேவை .

      உங்களுக்கு வேணாம் நான் இங்கே பார்த்துக்கிட்டு வருது லூசுத்தனமா தெரியலாம்  .

    வெயில் ல பார்க்க என்ன இருக்கு னு …  

     ஆனா எத்தனை தடவை இது மாதிரி ஜன்னல் சீட்ல பஸ் ல உட்கார்ந்து போனாலும் பார்த்த இடத்தை பார்த்தாலும் கூட சலிக்காமல் இது மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டு வர்றதுல தான் சந்தோசம் இருக்கே….!”என்று அவளை அவன் புறம் திரும்பி பேச அவனுக்கு தான் ஜெர்க் ஆகிவிட்டது அவன் மனதிற்குள் நினைத்ததை அல்லவா இவள் தற்பொழுது தனது வார்த்தைகளாக தன்னிடமே பேசுகிறாள் இந்த ரீதியில் அதிர்ச்சியாகி அவளை பார்க்க அதற்கும் புன்னகைத்தவள்  .   

“நீங்க அப்பையிலிருந்து என்ன பாத்துகிட்டு வரிங்க னு எனக்கும் தெரியும்  .

      அது மட்டும் இல்லாம நான் வெளியில என்ன பாத்துட்டு வரன்றதையும் நீங்க பார்த்தீங்கன்றத நான் பார்த்தேன்  .

     எனக்கு இது மாதிரி ஜன்னல் சீட் ல உட்கார்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கிட்டே வரது ரொம்ப ரொம்ப பிடிக்கும் .

      அதுக்கு மழையா தான் இருக்கணும் னு அவசியம் கிடையாது  .

     வெயில் ல கூட இதோ இந்த வேகமா போற பஸ் சிலுசிலு னு அடிக்கிற இந்த காற்று…

     எதோ  படத்துல பாக்குற சீன் மாதிரி ஒவ்வொரு ஸ்டாப்லையும் நம்ம பாக்குற ஒவ்வொரு நிகழ்ச்சி இது எல்லாமே புது புது அனுபவம் தான்…! ” என்று அவள் பேசி முடிக்க அவனுக்கு தான் ஆச்சரியமாகி போனது இவள் தான் தன்னிடத்தில் இவ்வளவு பேசுவாளா என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் .

    “என்ன ஒரே ஆச்சரியமா இருக்கா …?

    வந்த நாளிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாம கெத்தா சுத்திட்டு இருந்தவ  இப்ப நம்ம கிட்ட இவ்ளோ பேசுறாளே  னு ……

    நான் நினைக்கிறது எல்லாத்தையும் எப்படி நீ பேசுற னு எனக்கு புரியல !

     உனக்கு மைண்ட் ரீடிங் தெரியுமா…

     இல்லை ஏதாவது சைக்காலஜி படிச்சு இருக்கியா…?

எனக்கு அது மாதிரி எதுவும் தெரியாது .

    அப்பையில இருந்து நீங்க என்ன பார்த்த பார்வையை நீங்க என்கிட்ட என்ன பேச நினைக்கிறீங்க என்பதை எனக்கு உணர்த்தின மாதிரி இருந்துச்சு .

     அதான் அப்படியே உங்க கிட்ட கேட்டுட்டேன் …… “என்று கூறியவள் அதன் பிறகு அவனிடம் எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே தனது கவனத்தை செலுத்தி விட்டாள் .

     இவ பெரிய புத்திசாலி தான்  .

    பார்வையை வச்சு இவகிட்ட நான் என்ன பேசுறேன் என்பதை புரிஞ்சுகிட்டாளாமே!  என்று தனக்குள்ளேயே அவளை பெருமையாக நினைத்தவாறு அவனும் எதுவும் பேசாமல் தனது கைபேசியை எடுத்து அதில் ரீலீஸ் பார்க்க தொடங்கிவிட்டான் .

      சாராவின் வீட்டில் அவளது தந்தை செல்வம் அருகிலேயே அவரது இரண்டாவது மனைவியும்  சாராவின் சித்தி என்ற உறவையும் நிரப்புவதற்காகவே அங்கு நாகலட்சுமி நின்று கொண்டிருந்தார் .      

     சரஸ்வதியும் மகேஷும் தட்டு நிறைய பூ பழங்களோடு அங்குள்ள டேபிளில் வைத்தவாறு சோபாவில் அமர்ந்து கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாகலட்சுமி தான் இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் .

       நிச்சயமாக இவர்கள் இருவருமே பணக்காரர்களாக தான் இருக்க வேண்டும் அப்படி இருக்க தனது வீட்டில் உள்ள சாராவை தான் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் சாராவிற்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவே கூடாது என்று மனதிற்கு உள்  கருவிக்கொண்டவர் எதுவும் பேச முடியாமல் செல்வத்திற்கு முன்னால் தன்னை நல்லவள் போல் காட்டிக்கொண்டார் .

    இது போக வந்ததிலிருந்து மகேஷின் கண்கள் சாராவை தான் அந்த வீட்டிற்குள் தேடிக் கொண்டிருந்தன என்பதையும் பார்த்த நாகலட்சுமி சாராவை வெளியே வரக்கூடாது என்ற வாறும் கட்டளையிட்ட அல்லவா ஹாலுக்கு நின்று கொண்டிருந்தார்  .

“இங்க பாருங்க தம்பி நீங்க வந்ததை வச்சு நான் புரிஞ்சுகிட்டேன்.

        நீங்க எங்க வீட்டு பொண்ணு தான் உங்களுக்கு கேட்டு வந்து இருக்கீங்க அப்படின்னு ….

      என்னோட மனைவி முத்தாரம் சாகுறப்போ கரெக்டா என்னோட பொண்ணுக்கு மூணு வயசு  .

      அவள வச்சுக்கிட்டு நான் எப்படி வளர்க்கறதுன்னு தெரியாம இருந்த போது இங்க நின்கிறாளே என்னோட நாகலட்சுமி இவன் எனக்கு கிடைச்சா…!

        இவளோட அன்பும் பாசமும் என்ன சாராவுக்காக இவள கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன னு யோசிக்க வச்சிச்சு .

        அப்போல இருந்து இப்போ வர என்னோட பொண்ண கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்டு இருக்கா   .

     நீங்க யாரு என்ன னு எனக்கு தெரியாது .

      வசதியானவங்கள அப்படி எல்லாம் கூட நான் பாக்கல   .

      நாளைக்கு உங்களுக்கு என் பொண்ண கட்டி கொடுத்துட்டு அவ சந்தோசமா இல்லன்னா நான் வருத்தப்பட்டுட்டு இருக்க முடியாது .

       அது மட்டும் இல்லாம அவளுக்கு ஏற்கனவே நான் ஒரு பையன பார்த்துட்டேன் .

      அவனோட தான் அவளுக்கு நிச்சயம் ஆகப்போகுது .  என் பொண்ணும் என் பேச்சை மீற மாட்டா….

அதனால நீங்க உங்க வேற நேரத்த  வீணாக்காம நீங்க இருக்குற அழகுக்கும் உங்க படிப்புக்கும் நிறைய பொண்ணுங்க உங்களை கட்டிக்கறதுக்காக வரிசை ல  கூட நிப்பாங்க .

       சோ அது ல ஒரு பொண்ண நீங்க கட்டிக்கோங்க….. ”  என்று செல்வம் ஒரே மூச்சாக பேசி முடிக்க அவனுக்கு தான் நாகலட்சுமி இவ்வாறெல்லாம் இவரிடத்தில் நடித்து வைத்திருக்கிறாரா என்ற ரீதியில் இருந்தது .

சாராவை நாகலட்சுமி எவ்வாறெல்லாம் பார்த்து கொள்கிறார் என்றெல்லாம் அவனுக்கு நன்றாக தெரிந்தது.

           ஆனால் சாரா ஒரு நாள் கூட தனது சித்தியை பற்றியும் அவர்  அவளுக்கு செய்யும் கொடுமைகளை பற்றியும் வெளியில் வாய் திறந்து கூறியது கிடையாது  .

     கல்லூரி காலகட்டத்தில் அவளது முதல் நாள் கல்லூரி வருகையின் போது அவனுடனான நட்பு அவளுக்கு ஏற்பட்டது .

       அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி இருந்தனர்  .

     காலப்போக்கில் இருவருக்கும் உள்ள நட்பு ஆழமாகி  ஒருவர்  மீது ஒருவர் காதல் இருக்கிறது என்பதை உணர்ந்தும் கூட கூறாமல் இருந்தனர் .

       அதன் பிறகு தான் சாராவை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் நன்றாகவே தெரிந்து கொண்டான் மகேஷ் .

      அவளது நிலைமையை நினைத்து எல்லாம் அவன் அவள் மீது இரக்கம் கொள்ளவில்லை  .

        அதற்கு மாறாக இழந்த அத்தனை மகிழ்ச்சியையும் அவனது காதலால் அவளுக்கு திகட்ட திகட்ட அளிக்க   வேண்டும் என்பதே அவனது எண்ணமாகி போனது .  

    ஆனால் இத்தனை வருடமும் இது எவையும் அறியாமல் உளறிக் கொண்டிருக்கும் செல்வத்தை பார்க்க தான் ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் ,

     இன்னொரு புறம் தனது மகளை  தனது இரண்டாவது மனைவி எவ்வாறு பார்த்துக் கொள்கிறார் என்பது கூட தெரியாமல்  என்ன நிலையில் இவரும் இந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார் …? என்பது தான் அவனுக்கு கோபமாக இருந்தது .

       எப்படியோ அவளுக்கும் தன் மீது காதல் இருக்கிறது  .

      ஆனால் அதை வெளிப்படுத்த அவள் தயாராகவில்லை என்ற ரீதியிலேயே அவளிடம் நேற்று கூட பேசி விட்டு தான் இந்த முடிவுக்கு வந்து விட்டான்  .

       தனது தாயிடம் ஏற்கனவே கூறியிருந்தால் அவளது சம்மதத்தையும் பெற்று விட்டு அவளது வீட்டில் பேசலாம் என்று….

       ஆனால் அவளிடம் சம்மதம் பெறுவது என்பது இயலாத காரியம் என்பது அவனுக்கு தெரிந்து விட்டது.

         ஆக அவளது பெற்றோரை சரி செய்து விட்டால் இவள் வழிக்கு வந்து தானே ஆகவேண்டும்!  என்ற ரீதியில் பூ பழத்தோடு இங்கு வந்து விட்டான்  .

      ஆனால் அன்று காபி ஷாப்பில் சாரா கூறியது போல் நிச்சயம் அல்லவா அவளது தந்தை பார்த்த மாப்பிள்ளையோடு அவளுக்கு நடக்கப்போகிறது என்ற செய்தி அவனுக்கு கிடைத்திருக்கிறது  .    

    எனினும் அதற்கும் அவன் அசரவில்லை  .

“இங்க பாருங்க காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து உங்க பொண்ண நான் காதலிச்சுக்கிட்டு இருக்கேன் ……!   

      அப்போல இருந்து அவளுக்காகவே நல்ல வேலைக்கு போகணும் .

     அப்ப தான் அவகிட்டயும்  அவ வீட்டிலயும் பேசலாம் என்ற ஒரே காரணத்துக்காக இப்போ நல்லா படிச்சு ஒரு வேலையிலயும் இருக்கேன் .

     அது மட்டும் இல்லாம என் அப்பா அம்மாவும் என்ன மாதிரியே அவளை நல்லா பார்த்துப்பாங்க னு எனக்கு நல்லாவே தெரியும் .

         ஃபஸ்ட் என்னோட காதலை சொன்னது என் அம்மா கிட்ட தான் . அவங்க எனக்கு ஃபுல் சப்போர்ட் ஆ தான் இருக்காங்க  .

     நிச்சயமா நானும் என்னோட குடும்பமும் நீங்க பாத்துக்கிட்டதை விட உங்க மனைவி அவள பாத்துக்கிட்டதை விட ரொம்ப சந்தோஷமா பார்த்து போன்றதுல எந்த சந்தேகமும் இல்லை …..”என்று அவன் நாகலட்சுமி ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச அவருக்கு தான் அதன் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது .

ஓ காலேஜ் படிக்கிறப்ப இருந்து காதலா ….

    அப்ப அந்த சிறுக்கி தான் என்ன பத்தி எல்லா விஷயத்தையும் அவன் கிட்ட சொல்லி இருக்கா போல ….

    கலர் கலரா  டிரஸ் பண்ணிட்டு  காலேஜ் போறப்பவே எனக்கும் தெரியும்  .

      இது மாதிரி நாளைக்கு எவனையாச்சும் கூட்டிட்டு வந்து நிப்பா னு …..

     ஆனா என்ன இந்த தாட்டி இவளை கேட்டு இவன் வந்து நிக்கிறான்.

      ஆனா புடிச்சாலும் பெரிய குடும்பமா தான் புடிச்சிருக்கா….

     நிச்சயமா இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ நல்லா வாழ்ந்துடுவாளே!

      எனக்கு தான் பிள்ளைகள் என்று யாரும் இல்லை .  இவளாச்சும் சந்தோஷமா இருக்கட்டும் னு லாம் என்னால விட முடியாது .

       நான் எப்படி வாழ்றனோ அதே மாதிரி தான் இவளும் வாழனும்…. என்று தனது மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டவர் செல்வத்தின் முடிவு நிச்சயமாக மாறாது என்ற ரீதியிலேயே உறுதியாக இருந்தார் .

அதன் பிறகு செல்வம் கூறிய பதில் மகேஷ் மற்றும் சரஸ்வதி இருவருக்குமே மனம் சங்கடமாகிவிட அங்கிருந்து வெளியேறினர் எதுவும் பேசாமல் …….

இவை அனைத்தையும் அந்த  மாடியில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த சாரா கண்கலங்கியபடி தனது அறைக்குள்   ஓடினாள் .

You may also like

Leave a Comment

About Me

Featured