Home ANTIHEROராட்சசியின் ரட்சகன் -13

ராட்சசியின் ரட்சகன் -13

by romaakeerthi
14 views


சிவாவை பொறுத்தவரையும் யாராவது அங்கிருந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும் அவர்களது உடமையாக தான் அந்த காப்பு இருக்க வேண்டும் என்ற யோசனையிலேயே அவனுக்கும் ,

    ஷர்வாணிக்கோ இந்த கேஸை எப்படி ஹேண்டில் செய்யப் போகிறோம் என்று அவளிடம் வந்து புது கேள்வி பற்றிய சிந்தனைகளும் கழிந்திருந்தது .

       அவளிடம் தற்பொழுது கை வசம் வந்திருக்கும் கேசானது 18 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர் அதுவும் ஒரே நாளில் ஒரே இடத்தில் …..

     ஆனால் அவர்களை கடத்தியவர்கள் எந்த விதமான நகையோ பொருளோ பணமோ கடத்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் கேட்டு மிரட்டவில்லை  .

       ஏன் கடத்தப்பட்டார்கள் என்று கூட அவர்களது போன் சிக்னல் கட்டான இடத்திலிருந்து தான் உறுதி செய்யப்பட்டது .

         அப்படி இருக்கையில் யார் அவர்களை கடத்தி இருக்கக்கூடும் அவர்களது நோக்கம் என்னவாக இருக்கும் என்று பலவாறு அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது .

         இரு நாட்களாக கடத்தப்பட்ட இருவரின் போன் சிக்னலை ட்ரேஸ் செய்ததில் அவர்கள் இருவரின் கைபேசியின் சிக்னலும் சிவா தற்பொழுது கட்டிக் கொண்டிருக்கும் பில்டிங்கில்  சரியாக கட் ஆகி இருக்கிறது என்பதும் தெரிய வந்திருந்தது .

       அதுபோக இன்று மகேஷ் சிவா இருவரும் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் கேட்டாள் .    

     ஏதோ கடத்தப்பட்டவர்களின் ஒரு உடைமை அவனிடம் இருக்கிறது .

      ஆனால் அவன் தான் அதை தர மறுக்கிறான் இந்த விடயம் பற்றி என்னிடம் அவனுக்கு தெரிந்த விடயங்களையும் கூற மறுக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு தெரிந்த தெளிவாக புரிந்தது  .

      இதனால் தான் நேற்று முழுக்க அவன் யோசனையிலேயே இருந்திருக்கிறான் என்பதும் அவளுக்கு இப்பொழுது புரிந்தது .

இத்தனைக்கும் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும் அவ்வளவு வசதியும் கிடையாது அனைவருமே மிடில் கிளாஸ் தான் .

      போலீஸ் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க அவர்களது பெற்றோர் இவளிடமும் தங்களது பிள்ளைகளை கண்டுபிடித்து  தருமாறு கூறியிருந்தனர் .

     ஏதாவது பெரிய தொழில் அதிபர்களாக இருந்தால் தொழில் போட்டியில் பிள்ளைகளை கடத்தி விட்டு எதிரிகள் விளையாடுவதும் உண்டு என்ற கோணத்தில் அவள் விசாரித்து பார்த்ததில் அவளுக்கு கிடைத்த தகவலும் இதுவே !

      ஆனால் ஒன்று இதில் நிச்சயமாக மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது  .

      ஆனால் அவர்களது நோக்கம் தான் என்ன என்பதை அவளால் யோசிக்க முடியவில்லை .

        அவன் இடத்தில் இருக்கும் அந்த உடைமையை பார்த்தால் மட்டுமே இந்த கேசில் அடுத்த கட்ட நடவடிக்கை வைக்க முடியும் என்ற முடிவோடு அன்று காலை அவன் சைட் க்கு கிளம்பி கொண்டிருக்க காலை உணவையும் செய்து வைத்துவிட்டு மாடிக்கு சென்று அவனிடம் பேசினாள் .

     கண்ணாடி முன்பு நின்று தனது கேசத்தை வாரிக்கொண்டிருந்தவனுக்கு பின்புறமாக ஷர்வாணி நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்தவன் கண்டு கொள்ளாதவாறு தனது வேலையிலேயே குறியாக இருந்தான் உள்ளே வந்தவள் கதவை சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் .

” ஏய் இப்ப எதுக்காக கதவை சாத்துற…?

    அன்னைக்கு நான் உன்னை மரியாதை இல்லாம பேசினத மனசுல வச்சுக்கிட்டு இன்னிக்கு ஏதாச்சும் அடிக்கலாம் னு பாக்குறியா…..

    அன்னைக்கு எதோ கோவத்துல எதுவும் புரியாமல் பேசிட்டேன் .

     ரியலி சாரி ஷர்வாணி இதுக்கப்புறம் உன்கிட்ட நான் அந்த மாதிரி பேச மாட்டேன் .

இப்ப கூட தான் மரியாதை இல்லாம ஏதோ மாடு ஓட்ற மாதிரி ஏய் னு பேசுறீங்க .

    நான் அதை ஏதாச்சும் சொன்னா இல்ல தானே !

     நான் இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்  .

    அத கதவை திறந்து வச்சு கிட்ட பேசினா நல்லா இருக்காது .

     யாருக்காவது தெரிந்தால் நமக்கு தான் பிரச்சனை அதனால தான் கதவை சாத்தினேன் ……”

தலையை வாரி முடித்தவன் அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டு இப்பொழுது கூட அவளிடம் ஏன் இவ்வாறு பேசினோம் யாரிடமும் இவ்வாறெல்லாம் பேசியது கிடையாது என்று நினைத்துக் கொண்டவன் மெத்தையில் அமர்ந்து கொண்டு அவள் பேசுவதையே கேட்க ஆயத்தமானான் .

     அவனை பொருத்தவரை கோபம் என்று வந்து விட்டால் அதை அவ்வப்போது காட்டி விடுவான் .

      ஆனால் பெண்களிடத்தில் என்றால் கூட பொறுமையாக கூறியதை புரிய வைத்துவிடான் .   

     ஆனால் இவள் இடத்தில் ஏனோ அதிக உரிமை உள்ளது போல் அவன் பேசுவது அவனுக்கே சற்று புதிதான விடயமாக இருந்தது .

     படிக்கும் காலத்திலும் சரி தற்போது வேலை செய்து வரும் காலத்திலும் சரி அவனோடு வேலை பார்க்கும் சக  பெண் ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவன்,

      இவளிடம்  அதிக உரிமை எடுத்து பேசுவது அவனுக்கே புதிராக இருந்தாலும் அந்த எண்ணத்தை மேலும் வளர விடாமல் அவள் பேசுவது என்ன என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் .

“இப்போ என்கிட்ட ஒரு கேஸ் வந்து இருக்கு.

      அதுல ரெண்டு பசங்க கடத்தப்பட்டு இருக்காங்க .

      அவங்க ஏன் கடத்தப்பட்டாங்க யாரால கடத்தப்பட்டாங்கன்றது தெரியல!

      அது மட்டும் இல்லாம கரெக்டா அவங்க போன் சிக்னல் உங்க பில்டிங் ல தான் கட் ஆகி இருக்கு  .

      அது மட்டும் இல்லாம நீங்க இன்னைக்கு மகேஷ் அண்ணா கிட்ட பேசிகிட்டு இருக்குறதையும் நான் காதில வாங்கினேன் .

      அவங்க சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் உங்களுக்கு கிடைச்சிருந்தா என் கிட்ட குடுங்க .

      அத வச்சு தான் அடுத்த மூங்  இந்த கேஸ் ல என்ன என்றதே தெரியும்  .

     தயவு செஞ்சு என்கிட்ட கொடுங்க .

   அந்த ரெண்டு பசங்களோட உயிரை காப்பாத்தணும்  .

    அதுக்காக நீங்க இந்த கேஸ் ல பியூச்சர் ல மாட்டிக்காம இருக்கணும்ன்றதுக்காகவும் சொல்றேன்  . உங்க கிட்ட இருக்கிற பொருளை என்கிட்ட கொடுத்துடுங்க…..

அப்போ என்ன நீ வார்ன் பண்ற பியூச்சர்ல இந்த கேஸ் ல நான் மாட்டிப்பண்றதும் உனக்கு உறுதியா தெரிஞ்சு இருக்கு .

     அப்படியே மாட்டினாலும் இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் னு எனக்கு தெரியும்.

       என்கிட்ட எதுவும் இல்ல .

     அப்படியே இருந்தாலும் உன்கிட்ட கொடுக்கணும் னு அவசியம் எனக்கு இல்லை .

     நான் மாட்டிக்கிட்டா உனக்கு என்ன எப்படி பார்த்தாலும் நம்ம ரெண்டு பேரும் பிரிய தான் போறோம்  .

     ஏதோ உண்மையான ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நீ என் மேல கேரிங்கா பேச வேண்டாம்  .

    இது உன்னோட ப்ரொபஷனல் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தாலும் என் பில்டிங் ல எந்தவிதமான கடத்தலும் நடக்கல னு எனக்கு நல்லாவே தெரியும் .

     சோ உன் வேலையை நீ பாரு .

     இந்த கேஸ் ல வேற ஏதாவது க்ளூ கிடைக்குதா னு தேடிப் பாரு .  அதவிட்டுட்டு தேவை இல்லாம என்ன இதுக்குள்ள கொண்டுட்டு வரணும் னு நினைக்காத …. ” என்று கூறியவன் அவளிடம் மேற்கொண்டு பேசி விரும்பாமல் அறை கதவை திறந்து  சென்று விட்டான் .

இவன் என்ன லூசா….?

     நான் எப்ப இவன இந்த கேஸ் குள்ள கொண்டுட்டு வந்தேன்.. இவன் வரக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு நாழி பேசிகிட்டு இருக்கேன்….

    என் வேலையை தானே பாத்துட்டு இருக்கேன்  .

    இவன் கிட்ட இருக்கிற எவிடன்ஸ் என்ன னு தெரிஞ்சா தானே இந்த கேஸ்ல அடுத்து எப்படி மூவாகுன்றதும் தெரியும்  .

    இவனுக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது என்று நினைத்ததை இதற்கு மேல் இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை வேறு வழியில் தான் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .

     காலை உணவை முடித்து விட்டு வேக வேகமாக சைட்டுக்கு வந்தவன் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்தவாறு மகேஷிற்காக காத்துக் கொண்டிருந்தான் .

     அவன் காத்திருப்பிற்கு சொந்தமானவனோ காபி ஷாப்பில் அவனது காதல் தேவதைக்காக காத்துக் கொண்டிருந்தான் .

    அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்த சாரா என்றும் இல்லாமல் இன்று சுடிதாரில் வந்திருந்தாள் .

      அதை பார்த்தவனின் முகம் சுருங்கி விட்டது.

       எப்பொழுதும் அவளை பாவடை தாவணியில் பார்த்து ரசித்தவனுக்கு இன்று இந்த சுடிதார் பிடிக்கவில்லை போலும் .

“ஏன் சாரா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சுடிதார் ல என்னை பார்க்க வந்திருக்க ..?

    எப்பயும் பாவாடை தாவணியில தானே வருவ…..

அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு  டைம் என்கிட்ட இல்ல .

      இன்னைக்கு எங்க அப்பா ஊர் ல இருந்து வராங்க  .

     நீங்க அவசர அவசரமா கால் பண்ணவும் அதனால தான் உங்கள பாக்குறதுக்காக வேக வேகமா ஓடி வந்து இருக்கேன் .

      சீக்கிரம் என்ன விஷயம் என்று சொல்லுங்க  .

   எங்க அப்பா வீட்டுக்கு வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போகணும் ….

ஓ அவர் இன்னைக்கு வீட்டுக்கு வர்றாரா சரி அப்ப அவர் கிட்டயே நான் என்ன விஷயம் என்பதை சொல்லிக்கிறேன் .

     நீ காபி குடிச்சிட்டு கிளம்பு….”என்று கூறியவன் அவளுக்காக ஆர்டர் செய்து வைத்திருந்த காபியையும் அவள் புறம் திருப்பி விட்டு அவனது கோப்பை எடுத்து அருந்தி கொண்டிருந்தான் .

     பைத்தியமா இவன் என்ற ரேஞ்சில் அவனைப் பார்த்தவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது .

      நிச்சயம்  அவனது காதல் விடயத்தை பற்றி தனது தந்தையிடம் கூற போகிறான் என்று …..

“நீங்க என்ன விஷயமா  அப்பா கிட்ட பேச போறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும் .

     என் அப்பா ஊருக்கு வரதே என்னோட நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு பண்றதுக்காக தான் …. ” என்று போற போக்கில் ஒரு இடியை அவன் தலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் சாரா .

     அவன் அதிர்ச்சியானாலும் தன்னை சமன்படுத்திக்கொண்டு நிச்சயம் தான கல்யாணம் இல்லையே!  என்று போகும் அவளையே பார்த்து சிரித்தவன் சைட்டுக்கு கிளம்பினான் .

    அங்கு சிவாவை  காவல்துறையினர் வந்து கைது செய்து போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்றனர் .

You may also like

Leave a Comment

About Me

Featured