Home ANTIHERO ராட்சசியின் ரட்சகன் -7

 ராட்சசியின் ரட்சகன் -7

by romaakeerthi
4 views

“இப்பதான் நம்ம எல்லாம் நினைச்சா மாதிரி போய்கிட்டு இருக்குது இன்னும் கொஞ்ச நாள் ல எனக்கு தேவையானதை இங்கே இருந்து என்னால சாதிக்க முடியும் .

      அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மூணு மாசத்துலயோ ஆறு மாசத்துலையோ நான் வந்த வேலையை முடிச்சிடுறேன்.ஆமா இங்க எல்லாரும் என்ன நம்ப ஆரம்பிச்சிட்டாங்க முக்கியமா சிவாவோட அம்மா . அவங்க எனக்கு ரொம்ப ஃபேவரா நடந்து இருப்பாங்க னு நினைக்கிறேன் .நான் கொஞ்சமா பேசினாலே அவங்க உருகிடறாங்க….

இது நம்ம வேலைய பண்றதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்னு நினைக்கிறேன் …. ” ஏதேதோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவள் அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்படவும் இவளும் அந்த அழைப்பை துண்டித்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் இவை அனைத்தையும் காதில் வாங்கியது என்னவோ சிவா தான்  . எனினும் அதை கண்டு கொள்ளவில்லை யாரிடம் பேசுகிறாள் என்பது தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வேலையின் விடயமாக அவள் இங்கு வந்திருக்கிறாளா இல்லை அவள் வேலையின் விடயமாக பேசுகிறாளா என்பது தெரியவில்லை  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவளது வேலை விடயத்தில் தனது தாயை பற்றி பேச வேண்டும் என்ற தேவை இல்லையே என்றது தான் அவனது எண்ணம் ஆகிப்போனது .அவனுக்கு கோவமாக இருந்தது . அப்படி என்ன செய்யப் போகிறாள் பொறுத்திருந்து தான் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் கையில் கொண்டு வந்த நகைகளும் புடவைகளையும் பார்த்த உடனையே யார் அவளிடத்தில் அனைத்தையும் கொடுத்திருக்க இயலும் என்று எண்ணம் அவனுக்கு வந்தது .     அதனை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது நிச்சயம் தனது தாயிடத்தில் இவை அனைத்தையும் நீங்கள் கேட்டு தான் வாங்கி இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு ……

      அவள் அறைக்குள் நுழைந்து சிவாவின் துணிமணிகள் இருக்கும் பீரோலையே அந்த புடவையையும் நகையையும் வைக்கவும் சரியாக அவனது கைதட்டும் ஓசை அவளது காதுகளை எட்டியது .

“நெனச்சேன் டி வந்த அன்னைக்கே எங்க அம்மா கிட்ட பாசமா பேசி அவங்க வச்சிருந்த புடவை நகை எல்லாத்தையும் வாங்கிட்டியா .  ஏதோ எனக்கு நேரா ரொம்ப பாசமா அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிற நானே சமைக்கிறேன் அப்படின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு திரிகிற இது மாதிரி எல்லாம் சொல்லி ஈஸியா எங்க அம்மாவ ஏமாத்தலாம்.னு நினைக்கிறியா…அவங்களும் என்ன கண்டாங்க பாவம் .  எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் கல்யாணம் பண்ணி வைக்கணும் ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தாங்க  .   ஆனா உன்ன மாதிரி ஒரு ராட்சசிய ஏதோ ஒரு ரட்சகி மாதிரி அவங்க நினைச்சுகிட்டு பேசிட்டு இருக்காங்க .

உனக்குன்னு தான் உங்க வீட்ல போடவே நாங்க எல்லாமே கொடுத்து இருக்காங்க இல்ல அப்படி இருக்கிறப்போ எதுக்காக எங்க அம்மா கிட்ட இருந்து இதெல்லாம் வாங்கினேன்  .

     சரி அவங்களே கொடுத்ததாகவே இருக்கட்டும் நீயே இதெல்லாம் வாங்கிட்டு வந்த எப்படி பார்த்தாலும் மூணு மாசத்துலை யோ ஆறு மாசத்துலையோ இந்த வீட்டை விட்டு போக போற தானா …உனக்கு இதெல்லாம் தேவையா நீ போறப்போ நீ கொண்டுட்டு வந்த நகை எல்லாத்தையும் நீ தாராளமா எடுத்துட்டு போகலாம்  .ஆனா எங்க அம்மாவோட நகையெல்லாம் நீ எடுத்துட்டு போறதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்….!இந்த உலகத்துல யாரும் யாரு மேலையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் வைக்கிறது கிடையாது  .அதே மாதிரி தான் நீயும் எங்க அம்மா கிட்ட பாசமா பேசி அவங்க வச்சிருக்க புடவை நகை எல்லாத்தையும் வாங்குறதுக்காக தான் ரொம்ப பொறுப்புள்ள மருமக மாதிரி நடிக்கிறேன் என்று எனக்கு தெரிஞ்சிருச்சு  .

     ஒழுங்கா நீ போறப்போ இது எல்லாத்தையும் எங்க அம்மா கிட்ட கொடுத்துட்டு போயிடு இதெல்லாம் எடுத்துட்டு போகலாம்னு நெனச்சேன்னா ரொம்ப கஷ்டப்படுவ…..” என்று அவன் பேச அவை அனைத்தையும் மார்புக்கு குறுக்கே கைகட்டியவாறு அவனை அழுத்தமாக பார்த்தவாறு நின்று இருந்தாள் ஷர்வாணி அவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை  . அதற்கு மாறாக அவளது கண்கள் அவனிடம் பேசுவது போன்று தெரிந்தது .

“என்ன டி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு திமிரா இல்ல பார்த்துகிட்டே இருக்க…அவ்வளவு ஆட்டிடியூடா உனக்கு…?”என்று அவன் கேட்டு முடிப்பதற்கும் சரியாக அந்த அறைக்குள் ஜெயா நுழைந்தார் .

“ஷர்வாணி நான் கொடுத்த நகை புடவை எல்லாத்தையும் பீரோல்ல அப்படியே வச்சுக்காதம்மா,நீ என்ன பண்ற டெய்லி யூஸ் காக  அந்த புடவையையும் நகையையும் வச்சுக்கோ .. அது மட்டும் இல்லாம எப்படியும் ஒரு மாசம்  கோயில் அப்புறம் வெளியில் எங்கயாச்சும் நீங்க ரெண்டு பேரும் போறப்ப எல்லாம் நீ அந்த ஜுவல்ஸ் யும் புடவையையும் யூஸ் பண்ணிக்கோ ..ஏன்னா உனக்காக தான் நான் பார்த்து பார்த்து வாங்கி வச்சது .. நான் கொடுக்கிறப்ப கூட நீ வேணாம் னு தான் சொன்னே .ஆனா அதுக்காக நான் கொடுக்காமல் இருக்க முடியாது இல்லையா…  ஏன்னா எல்லாமே உனக்காக நான் பார்த்து பார்த்து என்னோட சம்பாத்தியத்தில வாங்கி வச்சது …. சொல்ல போனா என் பையனுக்கே இந்த விஷயம் தெரியாது . உன் அப்பாவும் என்கிட்ட எவ்வளவோ சொன்னாரு  ..இருந்தாலும் உனக்காக வாங்கி வச்சது உன் கிட்டயே சேர்த்துட்டேன் . அதான் நீ எல்லாத்தையும் பீரோல மட்டுமே பூட்டி வச்சுர போறியோனு தான்  சொல்றதுக்கு வந்தேன்  . நீங்க ரெண்டு பேரும் பேசிக் கோங்கம்மா நான் கிளம்புறேன்…..” என்று கூறியவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார் .அவர் அங்கிருந்து சென்றவுடன் எதுவும் பேசாமல் அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு அங்குள்ள ஒரு செல்பிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து சோபாவில் அமர்ந்தபடி படிக்க ஆரம்பித்துவிட்டாள் .நம்ம தான் தேவை இல்லாம இவ  கிட்ட சண்டை போட்டுட்டோமா..இவளை பார்த்தா நகை பணத்துக்கும் புடவைக்கும் ஆசைப்படுற மாதிரியா உனக்கு தெரியுது ஏன் டா உன்னோட அவசர புத்தியால தான் இப்ப அவகிட்ட  உன்ன தப்பா புரொஜெக்ட் பண்ணி வச்சுக்கிட்ட .  இனிமே அவகிட்ட எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு போய் பேசுவ….? என்று அவன் மனசாட்சி அவனிடம் வினவ நான் ஏன் அவளிடம் பேச வேண்டும் என்ற ரீதியில் அவனும் ஒரு ஓரமாக மெத்தையில் அமர்ந்து கொண்டான்  .அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் வரவில்லை. ஆனால் அவனது தவறை உணர்ந்து இருந்தான் தான்  .ஏனோ இவ்வளவு நேரம் அவளிடம் தைரியமாக ஏதேதோ பேசி விட்டு இப்பொழுது அவனது தவறை உணர்ந்தாலும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை .ஒருவேளை என்னை பற்றி தவறாக எதுவும் நினைத்திருப்பாளா …?வார்த்தைக்கு வார்த்தை டி டி னு வேற பேசிட்டேன் …..

    நிச்சயமா என்னை பத்தி ரொம்ப கேவலமா நினைச்சிருப்பா …..அதான் ஒரு மாதிரி பாத்துட்டு போனாளே நிச்சயமா அப்படித்தான் நினைச்சிருப்பா ….அவ எப்படி நினைச்சா உனக்கு என்ன நீ தான் அவளை மூணு (அ) ஆறு மாசத்துலயோ டிவோஸ் பண்ண போற இல்ல….அப்புறம் என்ன அவ எப்படி நினைச்சு இருப்பா னு  எல்லாம் நீ நினைச்சுகிட்டு இருக்க .ஒழுங்கா உன்னோட வேலைய பாரு என்று அவனது மனசாட்சி பேச அவனும் அதற்கு மேல் அவள் தன்னை பற்றி என்ன நினைத்தால் தமக்கு என்ன என்று ரீதியில் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான் .சிறிது நேரம் கழித்து இருவரையும் ஜெயா சாப்பிட அழைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட இல்லாமல் சாப்பிடுவது ஜெயாவிற்கு ஏதோ சரியாக படவில்லை  .காலையில் எல்லாம் நன்றாக தானே இருந்தார்கள் என்ற ரீதியில் மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தனியாக சிவாவை அழைத்து பேசினார் .

“டேய் அந்த பொண்ணு ஏதாச்சும் நீ சொன்னியா காலையில் எல்லாம் நல்லா தானே இருந்தா இப்ப ஏன் அவ உன்ன பார்த்து கூட சாப்பிடாம அவ பாட்டுக்கு அவ வேலையை பார்த்துக்கிட்டு இருக்கா எனக்கு எதுவும் சரியா படல….அம்மா சாப்பிடறப்ப எதுக்காக அம்மா என்ன பாக்கணும்  .என் மூஞ்சிலேயே சாப்பாடு இருக்கு அவ தட்டு ல தான் சாப்பாடு இருக்கு .அப்ப அவ தட்ட பாத்து தான் சாப்பிடுவா என்ன பாத்தா சாப்பிடுவா….இந்த மாதிரி வாய் பேசுறதுக்கு ஒன்னும் குறைச்ச இல்ல அந்த பொண்ணு மனச நோகடிக்காமல் பார்த்து நடந்துக்கோ …. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அவங்க அப்பா அவளை கைக்குள்ள வளர்த்துட்டாங்க . அது மட்டும் இல்லாம லைஃப்ல அவளோட ஜாப் மட்டும் தான் அவ பெருசா நினைச்சு இப்ப வரைக்கும் வாழ்ந்துகிட்டு இருக்கா… மத்த பொண்ணுங்க மாதிரி அவ்வளவாளாம் வாழ்க்கையை அனுபவிச்சது இல்ல னு அவங்க அப்பா என்கிட்ட சொல்லி இருக்காரு .

     வேலை வேலைன்னு ஓடின  பொண்ணு இப்போ என் வார்த்தைக்கு கட்டப்பட்ட கல்யாணத்தை பண்ணி இருக்கா  .நீங்க பத்திரமா பாத்துக்கோங்க சம்மந்தி னு சொல்லி தான் என்னை அனுப்பி இருக்காங்க .நீ தான் அவளை கண்கலங்காம வச்சுக்கணும் …..” என்று ஜெயா பேசிக் கொண்டிருக்க அவனுக்கு தான் இதையெல்லாம் காதில் வாங்க வேண்டுமா என்ற நிலை இருந்தது .அவர் கூறும் அனைத்திற்கும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டான் .இதற்கு மேல் இங்கு நின்றால் நிச்சயமாக தலைவலியே வந்து விடும் என்ற ரீதியில் இருந்தது அவனது மனநிலை .அறைக்கு சென்றவுடன் அங்கு ஏற்கனவே திறந்தவளை கண்டும் காணாதவாறு இருந்தான் . திடீரென்று அவளது கைபேசி ஒலிக்க அதை எடுத்து பேசியவளின் முக மாற்றத்தையும் கவனித்து தான் வைத்திருந்தான் .  அழைப்பு துண்டித்தவுடன் வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் .

  • தொடரும்🖤🖤🖤🖤🖤

You may also like

Leave a Comment

About Me

Featured