Home ANTIHEROராட்சசியின் ரட்சகன்-6

ராட்சசியின் ரட்சகன்-6

by romaakeerthi
11 views

காபி குடித்த உடன் அவள் கீழே இறங்கி வர சமையல் அறைக்குள் நுழைந்து ஜெயாவுடன் சேர்ந்து சின்ன சின்ன உதவிகளை செய்தாள் சமையலுக்கு……

     “நீ உங்க வீட்ல எப்படி இருந்தியோ அந்த மாதிரியே இருந்துக்கலாம் மா .

       நீ சீக்கிரமா எந்திரிக்கணும் நீ தான் அவனுக்கு காபி கொண்டுட்டு வரணும்,  என்னையும் நீ தான் பார்த்துக்கணும் நீ தான் சமைக்கணும் னு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல …..

      உங்க வீட்ல நீ எப்படி இருந்தியோ அந்த மாதிரி இருந்துக்கலாம் .
      நம்ம இன்னொரு வீட்ல இருக்குன்ற மாதிரி நீ ஃபீல் பண்ண வேணாம்  .

       உனக்கு உங்க அப்பா அம்மாவை பாக்கணும் னு தோணுச்சுன்னா  எப்ப வேணாலும் போய் பாத்துக்கடா….!

        சரி மா உங்களுக்கு வயசு ஆயிடுச்சு இல்ல  .
       நீங்க அதிகமா வேலை எல்லாம் பார்க்க வேண்டாம் . எனக்கு கொஞ்சம் கொஞ்சம் சமைக்க தெரியும் எனக்கு தெரிஞ்சதை வைத்து நானே சமைச்சு விடுறேன்….

     இல்லம்மா கொஞ்ச நாளைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இரு .  அதுக்கு அப்புறமா சமையல் கட்டுகளாக வரலாம் இப்போ எனக்கு தேவையான சின்ன சின்ன உதவி மட்டும் பண்ணா போதும்  . இப்ப உங்க ரெண்டு பேருக்கும் டிபன் நான் பண்ணிட்டேன் சாப்பிட்டு கோயிலுக்கு போயிட்டு அப்படியே எங்கயாச்சும் வெளியிலயும் வாங்க ….!”

        அவனும் கீழே இறங்கி வர இருவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஜெயாவையும் அமர வைத்து பரிமாறினாள் ஷர்வாணி .

பரவால்ல நம்ம சொன்னதை விட பயங்கரமா நடிக்கிறாளே பெரிய நடிகையா இருப்பா போலையே என்ற தனது மனதுக்குள்ளயே அவளைப் பற்றி வேறுவிதமாக யோசித்துக் கொண்டான் சிவா .

         அவனை பொருத்தவரையில் ஒருவர் காரணம் இல்லாமல் இன்னொருவரின் மீது அன்போ பாசமோ வைக்க மாட்டார்கள் என்பது அவனுக்குள் எழுதப்படாத ஒரு நியதி .
        அதே போல் தான் இவளும் தனக்கு விவாகரத்து கிடைக்க வேண்டும் .

           அந்த காலகட்டத்தில் தனது மாமியார் எதுவும் கூறக்கூடாது அல்லவா அதன் காரணமாகவே அவரையும் அவள் வலையில் விழ வைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் .

      சோபாவில் அமர்ந்த படி டிவியை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ஜெயா அவளை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியில் சென்று படி கோயிலுக்கும் சென்று விட்டு வாருங்கள் என்றும் கூறினார் .
       அவனும் இதுவும் கூறாமல் அவளை பார்க்க அவளும் சரி என்று கண்களால் தனது முடிவை கூறினாள் .

      அவன் கார் வைத்திருந்தாலும் வெளியில எங்காவது செல்ல வேண்டுமென்றால் அதிகம் உபயோகிப்பது அவனது ராயல் என்ஃபீல்டு தான்  . 
        இப்பொழுதும் அதையே இயக்கியபடி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனை வெகு நேரம் காக்க வைக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள்  ஷர்வாணி .

       முதலில் இருவரும் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு அம்மன் கோவிலிற்கு சென்ற படி அங்கு அம்மனையும் வணங்கி விட்டு சென்னையிலேயே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கடற்கரைக்கு அழைத்து சென்றான் இருவரும் வந்து மணலில் அமர்ந்தபடி எங்கோ விரித்துக்கொண்டிருந்தனர் இருவரும் எண்ணங்களும் வேறு வேறாக இருந்தது ,

         சிவாவை பொறுத்தவரை மகேஷ் நேற்று இரவு தனது மொபைலை வாங்கி சென்று விட்டானே!

      அதில் வேலை விடயமாக ஏதாவது அழைப்பு வந்திருக்கும் அல்லவா அனைத்தையும் படுபாவி துண்டித்து வைத்து விடுவானே என்று நினைத்துக் கொண்டிருந்தது அவன் மனம் .

   அவளோ கடலையே வெறுத்து பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குள் என்ன விதமான சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவனால் யோகிக்க முடியவில்லை  .

        சிறிது நேரம் தனது சிந்தனையில் இருந்தவன் மீண்டும் அவளை பார்க்க ஆரம்பித்தான் .
      அவளது புருவ முடிச்சுகளே அவள் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்த இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்தியது .

அவளிடம் பேசலாமா இவன் ஏன் எதிலுமே லயிக்காமல் எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்கிறாள் என்பது தான் அவனுக்கு புரியவில்லை  . அவனுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை தான்  .

    ஆனால் அவளிடம் பேசுவதற்கு கூட அவன் தயக்கப்படவில்லை  .
      ஆனால் அவளோ அவனிடம் பேசுவதற்கு தயங்கவில்லை என்றாலும் அவனிடம் பேச வேண்டும் என்று கூட நினைக்கவில்லை .
     அது தான் அவனுக்கு புரியவில்லை என்ன பெண் இவள்  .
       அவளது குண நலன்கள் எவ்வாறு இருக்கும் என்பது தான் அவனுக்கு புரியாத புதிர் ஆகிப்போனது .

     சிரித்து கூட பேசுவது கிடையாது .
        எப்பொழுதுமே ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கிறாள்  . தனது தாயிடம் எப்பொழுதாவது சிரிப்பு பேசுவது என்பது அவளது வழக்கமாகி இருக்கிறது .

     அப்பொழுது தான் அவனுக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது .
       இன்று காலையில் அவளிடம் காபி கோப்பையை நீட்டும் போது அம்மா தான் அளித்து இருப்பார் என்பது எனக்கு தெரியும் என்று அவள் கூறியது .

     பாக்க நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கா….
      நம்ம அம்மாவை கூட அம்மா னு தான் சொல்றா …
   அழகாவும் இருக்கா .
     ஆனா ஏன் இவ கூட வாழனும் னு எனக்கு தோணல  .

    ஒரு வேலை ஸ்டார்டிங் ல இருந்து நம்ம காதல் கல்யாணம் இதெல்லாம் வேணாம் யோசித்ததனால இப்ப திடீர் னு இவள நம்மளால அக்சப்ட் பண்ணிக்க முடியலையோ…? என்று அவன் மூளை யோசித்து கொண்டு இருக்க , அவனது மனமோ சரி நீ அவளோடு சேர்ந்து வாழ தயாராக இருந்தாலும் அவள் ஒப்புக்கொள்ள மாட்டாளே அதற்கு என்ன கூறுவாய் என்று அவனை கேலி செய்தது .

       ஒருவேளை லவ் ஃபெயிலியர் ஏதாச்சும் இருக்குமோ அதனால தான் எப்ப பாத்தாலும் இப்படி அமைதியா ஏதோ பித்து பிடிச்சா  மாதிரி இருக்காளோ….. என்று ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளிடம் எப்படி பேசுவது என்பது மட்டும் தெரியவில்லை ஆனால் பேச வேண்டும் என்று தோன்றியது .

அவளுக்கும் உனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று பேசி ஆகிவிட்டது .

      இன்னும் மூன்று மாதத்திலோ ஆறு மாதத்திலோ  பிரிந்து செல்ல போகிறவளுக்காக எதற்கு அவரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறாய் என்ற எண்ணம் வேறு அவனுக்கு வந்த தொலைத்து விட்டது  .

      அதன் காரணமாக அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் தனக்குள்ளையே போட்டு புதைத்துக் கொண்டான்  .
    ஆனால் இவளுக்குள் மிகப்பெரிய மர்மம் மறைந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது . 

       சிறிது நேரம் கடலையே  வெறித்து கொண்டிருந்தவர்களுக்கு உச்சி வெயில் மண்டையை பிளக்க  வீட்டிற்கு செல்லலாம் என்ற எண்ணம் வந்து விட்டதால் அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான் வரும் வழியிலும் சரி போகும் வழியிலும் சரி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை   .

    இது போக கடலில் கூட ஏதேதோ சிந்தனைகளிலேயே இருவரும் இருந்தனர்  .

வீட்டிற்கு வந்தவுடன் மதிய உணவும் தயாராக இருக்க அவர்களோடு மகேஷம் இணைந்து கொண்டான்  .

      இரவில் இருந்து அவனது கைபேசி அவனிடம் இருந்ததன் காரணமாக அவனிடம் கொடுப்பதற்காக வந்திருந்தான்  .
       அப்படியே ஜெயாவிடம் பேசிய படி சமையல் வேலைகளிலும் ஈடுபட்டான் .

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா தனது அறைக்கு ஷர்வானியை அழைத்து சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் .

  “மச்சான் என்ன அவுட்டிங்ளாம் ரெண்டு பேரும் போய்ட்டு வந்துட்டீங்க போல ஒரே ஜாலி தான் ….

உனக்கு அவ்வளவு தான் மரியாதை  .
        நைட்டு தூங்காம இருப்பதற்காக தான் பகல்ல தூங்குறியானு கேட்கிறேன் .
         நைட் என் போன் வேற புடுங்கிட்டு போயிட்டே .
        எனக்கு எவ்வளவு கால் வந்துச்சுன்னு தெரியல  .
       இப்போ ஏதோ அம்மா சொன்னாங்களேன்னு கோவிலுக்கு போயிட்டு அப்படியே பீச்சு போயிட்டு வந்தோம் . அங்க போனதுல இருந்து அவளும் ஒன்றுமே பேசல நானும் ஒண்ணுமே பேசல…..

    என்னடா சொல்ற இந்நேரத்துக்கு அவ  உன்கிட்ட பிரண்டா வாச்சும் இருக்கலாமா னு பேசி இருக்கணுமே எதுவுமே பேசலையா…..?

இல்ல அவ எதுவுமே பேசல !

      எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சிந்தனை ல இருக்கா மாதிரி இருக்குது  . அம்மா கிட்ட மட்டும் தான் நல்லா பேசுறா …..

சரி வெளில கூட்டிட்டு போனப்போ கூட எதுவுமே பேசலையா…

      நீ எங்க படிச்சிருக்க என்ன வேலை பாக்குறேன்னு எல்லாமே அவங்க அப்பா சொல்லியிருப்பாங்க தான் .

      இருந்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட எதுவுமே பேசவில்லையா….?

    இல்லடா அவகிட்ட எனக்கு பேசணும்.னு தோணுது தான்  .
      ஏன் எப்ப பாத்தாலும் ஒரே சிந்தனைல இருக்கான்னு யோசிச்சேன்  .
       இப்ப  நான் போய் அவ கிட்ட பேசணும் னு நினைச்சா கூட அவ என்ன நினைப்பா ..?
     மூணு மாசமோ  ஆறு மாசமோ பிரிஞ்சு போக போறோம்  .
     நடுவில் ஏன் பேசணும் னு தான் நினைப்பா…

       யாருகிட்டயும் எனக்கு குறிப்பா பொண்ணுங்க கிட்ட இப்படி போய் பேசணும் னு தோணுது கிடையாது  .

       ஸ்கூல் டேஸ்லயும் காலேஜ் டேஸ்லயும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கே நல்லா தெரியும்  .
      ஆனா இவ கிட்ட மட்டும் எப்ப பாத்தாலும் ஏதோ ஒரு சிந்தனையே இவள ஆட்சி செய்கிற மாதிரி எனக்கு தோணுது……..!

என்ன மச்சான் சொல்ற அப்ப நீ அந்த பொண்ண லவ் பண்றியா…?

டேய் நீ என்ன லூசா அவ கிட்ட பேசணும் அதுவும் சாதாரணமா பேசணும் னு தான் சொன்னேன் .  அதுக்குள்ள லவ்வா னு கேட்கிறே …..

இல்ல மச்சான் நீ நல்லா யோசிச்சு பாரு .
     கல்யாணம் நடக்குறப்போ  ஒரு அஞ்சு நிமிஷம் ஏதோ கல்யாணம் பண்ண போற பொண்ணு ஆல்ரெடி பல வருஷமா லவ் பண்ணி மேரேஜ் பண்றப்போ அந்த பையன் எப்படி அந்த பொண்ணு மணக்கோலத்தில அவ்வளவு எக்சைட்மென்ட் பாப்பானோ அதே மாதிரி உன் கண்ணுல ஒரு ஃபீல் இருந்துச்சு . அப்போ அந்த ஐயர் கூட உன்னை கமெண்ட் அடிச்சாரு பாத்தியா அந்த அளவுக்கு நீ அந்த பிள்ளையை பார்த்த ….!

பார்த்தேன் நான் இல்லைன்னு சொல்லல .
       பொண்ணு பாக்க வரப்ப கூட அவ இவ்ளோ அழகா தெரியல .

      இப்ப அவளோட காஸ்மெட்டிக் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் நல்லா இருக்கே னு பாத்தேன்  அவ்வளவு தான் .
      நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.
      உன் கிட்ட பேசினா எனக்கு தான் பைத்தியம் பிடிக்கும்  .

      நான் போய் தூங்குறேன் எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள் ல வேலைக்கு வந்துடுவேன் ,  அதுவரை என்னோட வேலையையும்  சேர்த்து நீயே பார்த்திரு…”  என்று கூறியவன் தனது அறைக்கு சென்று விட்டான் .

    ஜெயா தனது வருங்கால மருமகளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவைகள் நகைகள் என அனைத்தையும் எடுத்து ஷர்வாணியிடம் கொடுத்தார் .

        அவள் மறுக்க மறுக்க அவர்தான் வலுக்கட்டாயமாக அவை அனைத்தையும் அவள் வாங்க வேண்டும் என்ற ரீதியில் அவளிடமே கொடுத்து அனுப்பினார் .

   “இங்க பாரு மா இங்க இருக்கிற பட்டு புடவை நகை எல்லாமே நான் வேலைக்கு போன காலத்துல நமக்கு மருமகள் வந்தா அவ கிட்ட கொடுக்கணும் அப்படின்றதுக்காக வாங்கி வச்சிருக்கேன்  . இந்த விஷயம் எல்லாம் சிவாக்கு கூட தெரியாது …..”

       அவளுக்கும் வாங்குவதற்கு சங்கடமாக தான் இருந்தது .
        எனினும் இந்த வீட்டில் இருந்து திரும்ப செல்லும்போது இவை அனைத்தையும் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை அனைத்தையும் வாங்கிக் கொண்ட தனது அறைக்குள் சென்றாள் .
     அங்கு சிவா வார்த்தையால் அவளை குத்தி கிழித்திருந்தான் .

– தொடரும்🖤

You may also like

Leave a Comment

About Me

Featured