Home ANTIHERO8) அதிரூபன் 🔥

8) அதிரூபன் 🔥

by sreejanovels
8 views

அத்தியாயம் 8

லாவண்யா மிகவும் கடுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். தன் வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தும் அதிரூபனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தன் அப்பா வேறு இப்போழுதுதான் டெல்லியில் இருந்து மீட்டிங் முடித்து வந்திருக்கிறார். இப்போழுது சரியாகச் செயல்பட வேண்டும் என்பதுபோல் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் எல்லாம் கீழே உடைந்து நாசமாயின. இதையெல்லாம் கண்டும் காணாதது போல லாவண்யாவின் தாய் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். “அப்பனுக்கும் மகளுக்கும் இதே வேலை. நமக்கு வேறு வேலையில்லை” என்பதுபோல் மகளின் நிலையைப் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த எம்.பி. “ஐயோ! என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஏண்டி, பெத்த பொண்ணு இப்படி இருக்கா? என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று அவரிடம் சட்டம் போட, எதையும் கண்டுகொள்ளாத அவர் தன் அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

“அவங்க கிட்ட என்ன பேச்சு? நான் அதிரூபனை தொடர்புகொள்ள எவ்வளவு முயற்சி பண்ணேன், ஆனால் முடியல. அதுவும் அந்தப் போட்டியில், அந்த ஆறுதல் பரிசு வாங்கியதை விலைக்கி வைத்திருக்கிறார். எனக்கு வெறும் முதல் பரிசு கொடுத்துவிட்டு, ‘வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்று சொல்லிட்டுப் போயிட்டாரு. இதுக்கு என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்? நீ வடிகட்டின முட்டாள் என்று அர்த்தம். எனக்குப் பொண்ணா பிறந்தா இப்படித்தான் இருப்பாள்” என்று எம்.பி. மனதிற்குள் சொல்லிக்கொண்டார். வெளியே சொன்னால் மகள் அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுவாளே.

“ஐயோ பாப்பா, அவர் ஒன்றும் வெட்டிப் பயல் கிடையாது. சரி சரி, முறைக்காதே. நீ என்னமா பண்ண? படிப்பு முடிச்சிட்டு லைஃப் என்ஜாய் பண்ணிட்டு இருக்க. அவர் வாழ்க்கைக்குச் சொத்துகள் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்று உனக்கே தெரியும். பெரிய அட்வர்டைஸ்மென்ட் நிறுவனம், ஒரு ஃபேக்டரி – எல்லாத்தையும் ஒரே நேரத்தில் ரன் பண்றது சும்மா கிடையாது. அதனால ஒரு நாள் அவர் நம்ம வீட்டு டின்னருக்குக் கூப்பிடலாம். அப்படியே அவர் கூடப் பழகு. எப்படியாவது அவர் ஆபீஸில் உனக்கு ஒரு போஸ்டிங் வாங்கித் தருகிறேன். கூட இருந்து அப்படியே அவரைக் கைக்குள் போட்டுக்க பார்” என்று பெற்ற மகளுக்குத் தான் என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் எம்.பி. ஐடியா கொடுக்க, “இதுவும் சரிதான்” என்று அந்த நாளுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவளால் பொறுக்க முடியாத ஒன்று – அந்த ‘சீப் லோ கிளாஸ்’ பெண் ஒரு நல்ல பதவியில் இருக்கிறாள். தான் அதிரூபன் கம்பெனிக்குள் நுழைந்தால் முதல் வேலை அமிர்தாவை விரட்டி அடிப்பதுதான் தன் வேலை என்று நினைத்துக்கொண்டாள் லாவண்யா.


அலுவலக வேலை முடித்து வீட்டிற்கு வந்த அமிர்தாவுக்கு ஏனோ உடலில் ஒரு சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி, உற்சாகமெல்லாம் கூடிக்கொண்டே போனதுபோல் இருந்தது. அந்தச் சமயம் அவளது தோழி போன் செய்ய, “ஹாய், உன்னைத் தொடர்புகொள்ள நினைத்தேன், ஆனால் மறந்துவிட்டேன்”.

“மறப்ப, மறப்ப. பொண்ணு பார்க்கிற அன்னிக்கு வரேன்னு சொன்ன, வரவே இல்லை. எனக்கு எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். ஆடி மாசம் முடிஞ்ச பிறகு கல்யாணத்துக்குப் பத்திரிகை வைக்கப் போறேன். மேடம் பிஸியா இருக்கீங்களா?”

“ஏய் சும்மா கிண்டல் பண்ணாதேடி. ஒர்க் டென்ஷன், வேற ஒன்றும் இல்லை. போன உடனே எடுத்த உடனே புராஜெக்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதான் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்த பிறகும்கூட என்னோட பெயிண்ட் பிரஷ்ஷுடன் சுத்திக்கொண்டு இருக்கிறேன்.”

“அது சரி, நீ உன்னோட ஹாபி புரொஃபெஷனா மாறினா இப்படித்தான். சரி, இன்னும் ஹாஃப் அவர்ல நான் உன்னோட வீட்டுக்கு வருவேன். என்னோட ஃபியூச்சர் ஹப்பியோட எனக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செஞ்சு வை. நீ ஒன்று பண்ணுவாயே, பிரெட் ஆம்லெட் அப்புறம் சிக்கன் டிக்கா?”

“அடிப்பாவி! நான் வீட்டில் நான்வெஜ் செய்ய மாட்டேன். உனக்காக எல்லாம் காம்ப்ரமைஸ் பண்ண முடியாது. வேணா ஹோட்டலில் ஆர்டர் பண்ணுறேன், வந்து சாப்பிடு.”

“ஏண்டி! உங்க அம்மா தான் அப்படிப் பண்ணாங்க. இப்ப நீ இப்படிப் பண்ணுறியா? நீ சாப்பிடுவதுதானே?”

“எங்க அம்மா சுத்த சைவம்டி. வீட்டில் ஒரு அசைவ வாடைகூட வரக் கூடாது என்று சொல்லிட்டாங்க. என்ன பண்றது? சரி, அதை விடு. நான் ஆர்டர் பண்ணி வைக்கிறேன். நீயும் உன்னோட ஹப்பியும் ரெண்டு பேரும் வாங்க.”

என்று தனது தோழி இனியாவிடம் சொல்ல, அவளும் சரி என்று ஒப்புக்கொண்டு அமிர்தா வீட்டுக்குக் கிளம்பி வந்துகொண்டிருந்தாள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டு, அமிர்தா அப்படியே தனக்கான டின்னரையும் ஆர்டர் செய்துவிடலாம் என்று தனக்கான உணவையும், வருபவர்களுக்கான ஸ்நாக்ஸ் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க, சரியாக 30 நிமிடங்கள் கழித்து அனைத்தும் வந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் இனியா தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் தமிழரசனையும் அழைத்து வர, இருவரையும் மரியாதையாக வரவேற்று ஜூஸ், ஸ்நாக்ஸ் கொடுத்து அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.

“இனியா சொன்னாங்க, அந்த பெயிண்டிங் காம்படிஷனில் உங்களுக்குப் பிரைஸ் கிடைக்கலைன்னு ரொம்பக் கோவப்பட்டா. அன்னிக்கு பொண்ணு பார்க்கிறப்போ இந்தக் கதைதான் சொல்லிக்கொண்டிருந்தா. அப்புறம்தான் தெரிந்தது உங்களுக்கு ஜாப் ஆஃபர் வந்திருக்கு அப்படின்னு. கங்கிராஜுலேஷன்ஸ்! அதிரூபன் சார் கம்பெனியில் வேலை செய்றது எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டமான விஷயம். நான் கூட ட்ரை பண்ணேன். ஆனால் என்னோட லக் துபாயில்தான் வேலை கிடைச்சது. மேரேஜ் ஆன பிறகு அடுத்த பத்தாவது நாள் இவளையும் கூட்டிட்டுப் போகணும். நல்லவேளை, முன்னாடியே பாஸ்போர்ட் இவ வச்சிருக்கா. விசா மட்டும் ஏற்பாடு பண்ணி சீக்கிரம் கிளம்புற மாதிரி இருக்கும். அதனால்தான் நாங்க கல்யாணத்தை சீக்கிரமா வச்சுக்கொண்டிருக்கோம். நான் மறுபடியும் துபாய் போயிட்டு கல்யாணத்துக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடிதான் மறுபடியும் வரணும்.”

என்று புதிதாக வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் பெருமை பீற்றிக்கொண்டு பேசுவார்களே, அது மாதிரிதான் பேசிக்கொண்டிருந்தான் தமிழரசன். “அது சரி, இவன் புதுப் பணக்காரனா மாறப் போகிறான் போல இருக்கு. அதான் இந்த மாதிரி ஆளை இனியாவுக்கு பிடிக்காது. எப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாளோ தெரியல.” இதையெல்லாம் மனதில் நினைத்துக்கொண்டு அமிர்தா வெளியே சிறுத்துப் பேசிய நேரம் கடந்ததால், தமிழரசன் கிளம்ப வேண்டும் என்று சொல்ல,

“நீங்க போங்க தமிழ், நான் அப்பாவ வரச் சொல்றேன்.”

என்று இனியா தனது தோழியோடு சிறிது நேரம் இருப்பதற்காக ஆசைப்பட்டுச் சொல்லிவிட, தமிழரசன் சரி என்று கூறி சென்றுவிட்டான். அவன் பைக் எடுத்துக்கொண்டு சற்று தூரம் சென்ற பிறகு இனியா பெருமூச்சு வாங்கி,

“எப்பா! சரியான பிளேடு. அதுவும் இவனுக்கு வெளிநாட்டு வேலை கிடைச்சிருக்கா? தாம் தூம் குதிச்சிட்டு இருக்கான். இவனுக்கு அம்மா இல்லை, அதனாலதான் இவனை ஓகே பண்ணினதே. இல்லைனா மருமகள் எங்கே இருக்கட்டும்? ‘நீ மட்டும் வெளிநாட்டுக்குச் சம்பாதிச்சிட்டு வா’ அப்படின்னு மகனையும் மருமகளையும் பிரிச்சு வைக்கிற மாமியாரா வந்தா நான் என்ன பண்றது? நல்ல ஆப்பர்ச்சூனிட்டி மிஸ் பண்ணக் கூடாதுன்னுதான் நான் தமிழரசனுக்கு ஓகே பண்ணினேன். அவன் ஏதாவது ஓவரா சீன் போட்டா கண்டுக்காதே, சரியா?”

“சரிடி சரிடி, எதுக்கு டென்ஷன் ஆகுற? நாம்ளே குடும்பத்தோட ஒரு பையன் வந்தாகூட, இப்போ வரும் நியூஸில் பார்க்கும்போது அனாதை பையலைக்கூட கல்யாணம் பண்ணிக்கலாம் போல அப்படி இருக்கு நிலைமை.”

என்று அமிர்தா சொல்லிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று அவள் மனதில் அதிரூபனின் உருவம் வந்து போனதை அவளால் தடுக்க முடியவில்லை.

“என்னடி ஆணித்தரமா சொல்ற? ஏற்கனவே யாரையாவது பார்த்து வச்சிருக்கியா என்ன? அவருக்கு அம்மா அப்பா யாரும் கிடையாதா?”

என்று இனியா கேட்டுவிட, “சீச்சீ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. சொல்றேன், இந்தக் காலத்துல இப்படி இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இப்படித்தான் தோணுது அல்லவா? எதுவுமே வேண்டாம், இப்படியே சிங்கிளா ஜாலியா இருக்கலாம்னு தோணும்” என்று என்னவோ சொல்லிச் சமாளிக்க,

“உன்கிட்ட சில சேஞ்சஸ் தெரியுது அமிர்தா.”

“என்னடி புதுசா வேற மாதிரி பேசுற? என்ன தெரியுது? ரெண்டு நாள் உன்கிட்ட போன் பேசல. அதுக்கு இவ்வளவு பேச்சு?”

“அதெல்லாம் இல்லைடி. உன்கிட்ட கொஞ்சம் சேஞ்சஸ் தெரியுது. எப்பவுமே ஏதோ போல காலம் போற போக்கில் வாழுற மாதிரி இருந்த. இப்ப உன்கிட்ட ஒரு கண்டிப்பான உத்வேகம் தெரியுது. இந்த வேலையைச் செஞ்சே ஆகணும்னு ஒரு புத்துணர்ச்சி தெரியுது. நீ இவ்வளவு கலகலப்பா பேசினது கிடையாது. நார்மலா இருப்ப. ஆனால் இப்போ உனக்கு மாற்றம் தெரியுது, அதான் கேட்டேன்.”

“பின்ன, வேலை வெட்டிக்குப் போகாமல் ஏதோ இன்ஸ்டாகிராம், யூடியூப் வச்சுக்கிட்டு பொழப்பு நடத்திக்கொண்டிருந்தேன். வீட்டு வாடகை, போதாக்குறைக்கு இப்படியே வாழ்க்கை போகுமா என்ற ஒரு கேள்விக்குறி இருக்கும்போது, என்னோட திறமைக்கு ஏற்ற மாதிரி ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டு இரண்டு நாள் கடந்து இருக்கு. அதான், வேற ஒன்றும் இல்லை. நீ இஷ்டத்துக்கு வேற என்னவோ கற்பனை பண்ணாதே.”

“நான் எதுவுமே சொல்லல, காரணம் கேட்டேன். நான் என்ன கற்பனை பண்ணப் போறேன்? சரி, நான் என்ன கற்பனை செய்தேன் அப்படின்னு நீ நினைக்கிற?”

என்று இனியா போட்டுக்கொடுக்க,

“அது… அது ஒன்றும் இல்லை. சரி, உங்க அப்பாக்கு போன் பண்ணி உன்ன கூட்டிட்டுப் போகச் சொல்லு.”

“ஆமா, நான் சின்னப் பாப்பா பாரு! நானே போகிறேன். பாய்!”

என்று ஆட்டோவைப் பிடித்து இனியா சென்றுவிட, அமிர்தா தனக்கான உணவைச் சூடு செய்து சாப்பிட அமர்ந்தாள், டிவி பார்த்துக்கொண்டே.

“இன்று நமது எம்.பி. டெல்லியில் நாட்டின் வளர்ச்சிக்காக உரையாடலுக்குச் சென்றிருந்தார். மேலும், நம் மாநிலத்திற்குப் பல்வேறு வகையான நல்விஷயங்களைச் செய்து வருவார் என்று நம்பப்படுகிறது.” என்று அந்த எம்.பி.யின் பினாமி மக்களின் சேனலில் இவ்வளவு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்க, அமிர்தாவுக்குச் சிரிப்புதான் வந்தது.

“அவன் எவ்வளவு மொள்ளமாரித்தனம் பண்ணி இருக்கான். ஆனால் அவன் இப்போ எம்.பி. நாடு விளங்கிடும்.”

இங்கே அதிரூபன் போர்வையைப் போர்த்திக்கொண்டு உறக்கத்திற்குத் தவித்துக் கொண்டிருந்தான். எப்போதும் படுத்தவுடன் உடல் அலுப்பு அப்படியே கண்களை மூடிவிடும். எதைப் பற்றியும் அவனுக்குச் சிந்தனை இருக்காது. ஆனால் இப்போழுது அப்படி இல்லையே? வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தால் புன்னகை முகமாக அமிர்தா தன்னைக் கட்டி அணைத்து வரவேற்றால் எப்படி இருக்கும்? சாப்பிடும்போது என்னோடு சேர்ந்து இருவருக்கும் பிடித்த உணவுகளை ஒருவருக்கொருவர் ஊட்டி உண்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சிறிது நேரம் பிடித்த குளிர்பானத்தை அருந்திக்கொண்டு தோட்டத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு காதல் கவிதை பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? உறங்கும்போது ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு உறங்கினால் எப்படி இருக்கும்? என்று அவன் கற்பனைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

“இதெல்லாம் எப்போ என் வாழ்க்கையில் நடக்கும்? அமிர்தா எனக்குக் கிடைக்கணும். அதுக்கு என்ன வேணாலும் நான் பண்ணுவேன்.” என்று ஈசியாக ஒரு சிலையை அங்கிருந்து இங்கு மாற்றுவதுபோல் அமிர்தாவின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைக்கிறான் அதிரூபன். ஆனால் இவனின் உண்மை சுயரூபம் தெரிந்தால் அமிர்தா என்ன செய்வாள்?


You may also like

Leave a Comment

About Me

Featured