அத்தியாயம் 24
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பார்ட்டி மிகவும் களைகட்டியது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆடித் தீர்த்தனர். சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதே சமயம், அந்த ‘கறுப்பாடு’ விஜய்யை எப்படித் தாக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தான். அவனது முதலாளி (Boss) விஜய்யின் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், எதிரியைச் சொத்து விஷயத்தில் தோற்பதை விட, சொந்த விஷயத்தில் தோற்கவிட்டால் அவன் தானாகவே வீழ்ந்து விடுவான் என்று கணக்கு போட்டான். அதற்காகத் தன் மனைவியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினான். அவன் சொல்லிக் கொடுத்தபடியே அந்தப் பெண்ணும் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, அஞ்சலியிடம் நெருங்கினாள். அனைவரும் ஜூஸ் குடித்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருக்க, விஜய் சில நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, பெண்கள் கூட்டணியில் அந்தப் பெண்ணும் கலந்து கொண்டாள்.
எல்லாரும் புடவை, அரசியல், சினிமா, ஷாப்பிங் என்று பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் உணவின் மீது கவனம் செலுத்த, அஞ்சலி பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் அவளருகே அமர்ந்தாள்.
“நாங்க விஜய்யை இப்படிப் பார்க்க மாட்டோமான்னு ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனா நீ வந்த பிறகு எல்லாம் நல்லபடியா மாறிப்போச்சு. அப்புறம், அவன் வினுஷாவைப் பற்றி எல்லாம் மறந்துட்டான் தானே? இப்போ எல்லாம் ஓகே தானே?” என்று ஏற்கனவே விஜய்யோடு நன்றாகப் பழகிய தோழி போலவே பேசினாள். ‘அவரைப் பற்றி இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது, அதுவும் பேசும் விதம் விஜய்யோடு நெருங்கிய சொந்தம் போல் இருக்கிறது’ என்று அஞ்சலி நினைத்தாள்.
“அது எப்படிப்பா முதல் காதலை மறக்க முடியும்? வினு அக்காவை இன்னும் அவர் மறக்கல, ஆனா அவருக்கு என்னையும் பிடிக்கும். பார்க்கலாம்,” என்று அஞ்சலி சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.
ஆனால் அந்தப் பெண் விடாமல், “என்ன நீங்க இப்படிச் சொல்றீங்க? ஆம்பளைங்க எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க. நம்ம கையில்தான் புருஷன் அடங்கி இருக்கணும். நான் சொல்றேன் தப்பா நினைச்சுக்காதீங்க, நம்ம கணவனோடு தனிமையில் இருக்கும்போது அவர் கண்கள் சொருகிப் போதையில் நம்ம பெயர் வரணுமே தவிர, இன்னொருத்தவங்க பெயர் வரவே கூடாது. அப்படி வந்தா அதுக்கு வேற அர்த்தம். முதல் காதல் மறக்கிறது ரொம்பக் கஷ்டம்தான். பொம்பளைங்க நாம கட்டுப்படுத்திக்கலாம், ஆனா ஆம்பளைங்க நினைச்சாலும் அது முடியாது. அதனால நீங்கதான் உங்க கணவனை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும், உரிமைக்காகச் சண்டை போடணும். இப்போ அவருக்கு நீங்க இன்னொரு முறை வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பு, நிச்சயம் அவர் உங்களைத் தவறவிட மாட்டார். ஆனா நீங்க கொஞ்சம் எதிர்த்து நின்னாத்தான், ‘நமக்காக ஒரு மனைவி இருக்கா, நம்மளை மாத்திக்கிட்டுத்தான் ஆகணும்’னு அவர் ஒரு முடிவு பண்ணுவாரு,” என்று வஞ்சகத்தோடு அந்தப் பெண் போதித்தாள்.
ரிசார்ட்டில் அத்தையின் தோழி சொன்ன அதே அறிவுரையை, இந்தப் பெண்ணும் சொல்லவே அஞ்சலியின் மனதில் அது ஆழமாகப் பதிந்தது. ‘நிச்சயம் இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்ற முடிவோடு அஞ்சலி இருக்க, மீண்டும் ஆட்டம், பாட்டம், பரிசு வழங்குதல் என நேரம் சென்றது. அனைவரும் குரூப் போட்டோ (Group Photo) எடுத்துக் கொண்டு விடைபெற்றனர்.
புதுமணத் தம்பதிகளுக்காக அறையை மிகவும் அழகாக அலங்கரித்து வைத்திருந்தனர். இருவரும் மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தனர். விஜய் குதூகலமாகத் தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு கட்டிலில் அமர வைத்தான். மெல்ல அவளது ஆடைகளுக்கு விடுமுறை கொடுக்க, அவளும் ஆவலோடு பார்த்தாள். தேன் கொண்டு அவள் உடலை நனைத்து, ஒரு சொட்டுத் தேன் விடாமல் அவள் உடல் முழுதும் தன் இதழ்களால் மொய்த்தான் விஜய்.
“ம்ம்.. ஹாஹாஹா.. ஆஆஆஆ” என்று அவன் கொடுக்கும் ஒவ்வொரு செல்லக் கடிகளுக்கும் அவள் உடல் சிலிர்த்தது. மெய்மறந்து இருவரும் அங்கம் தழுவிச் சொர்க்கலோகக் கூடல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, வழக்கம்போல் உச்சம் பெற்ற தருணத்தில் விஜய் “வினு…” என்று கத்தினான்.
அவ்வளவுதான்! உறுதி கொண்ட அஞ்சலியின் மனதிற்கு அந்தப் பெண்கள் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வர, தன் கணவனைத் தள்ளிவிட்டுப் பார்த்தாள். மோகத்தின் உச்சத்தில் இருந்தவனுக்கு அது தடைபடவே, அவளைக் கோபமாகப் பார்த்தான்.
“இன்னொருத்தி பெயரைச் சொல்லி என் கூடப் படுக்கணும்னு நினைச்சா, இனிமே அந்த நினைப்பை விட்டுடுங்க! நான் உங்களுக்கு விபச்சாரி கிடையாது. எவளை நினைச்சுகிட்டு என் மேல மேஞ்சிக்கிட்டு இருக்கீங்க? நான் உங்களோட பொண்டாட்டி! என் பெயரைச் சொல்லுங்க, இல்லனா வாயை மூடிக்கொள்ளுங்கள். அசிங்கமா இன்னொருத்தி பெயரைச் சொல்லி என் மேல வந்து விழறீங்க!” என்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினாள். விஜய் அதிர்ச்சியடைந்தான்.
“ஏய் என்னடி கொழுப்பு? எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வார்த்தை பேசுவ? நான் வினுஷாவோட பேரைச் சொல்லி எவ கூடயாவது போகணும்னு நினைச்சா, உன்னை ஏண்டி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? உன்னைப் பிடிச்சுத் தொலைச்சது என் நேரம்! வினுவோட இதயம் உனக்குள்ள இருக்கு, நான் அவளை உன்கிட்ட உணர்கிறேன். ஆனா உன் மேல காதல் இல்லாம இல்லைடி… கொஞ்சம் டைம் (Time) கொடு, அதுக்கு இப்படியா பேசுவ?” என்று சற்று கலக்கத்தோடு கேட்டான்.
“இன்னொரு முறை உங்ககிட்ட ஏமாற நான் தயாரா இல்ல. கல்யாணமாகி ரெண்டு நாள் கூட முடியல, அதுக்குள் எனக்கு நரகத்தைக் காட்டிட்டீங்க. திடீர்னு எங்க அப்பா ஞாபகம் வந்து என்னைக் கொடுமைப்படுத்துறீங்க, அத்தனை பேர் முன்னாடி அடிக்கிறீங்க. இதெல்லாம் எனக்குப் பிடிக்கல! எனக்குப் பயமா இருக்குடா!” என்று குழந்தை போல் அழ ஆரம்பித்தாள்.
விஜய்க்கு வெறுப்பாகிப் போய்விட்டது. தான் செய்தது தவறு என்று அவன் நினைக்கவில்லை. கூடல் தடைபட்டதே அவனது கவலையாக இருந்தது. இவள் அழுகையை நிறுத்தினால் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, “அழுது முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அவள் தாடையைப் பிடித்துத் தூக்கினான். அஞ்சலி அதிர்ச்சியாகப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘இதுக்கு மட்டும்தான் இந்த உறவா?’ என்று கேட்பது போல் இருந்தது. ஆனால் அவன் கண்டு கொள்ளவில்லை. அவனது காம இச்சை அவளை மீண்டும் ஆக்கிரமித்தது. அவளைத் தன் விருப்பப்படி அசைக்க, அவளும் மெல்ல அவனோடு கரைந்தாள்.
“ஹஹஹாஆஆ ம்ம்…” என்று அவன் முனக, ஒரு வழியாக அவன் வேகம் தணிந்து அவள் மீது சாய்ந்து உறங்கினான். அவன் தலைமுடியைக் கோதிக் கொண்டே அஞ்சலி யோசித்தாள்.
‘இப்படித்தான் என் லைஃப் (Life) இருக்கும் போல. ஆசைப்பட்டவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருக்க முடியுமா? கடவுள் எவ்வளவு சோதனை கொடுக்கப் போறாருன்னு தெரியல. ஆனா விஜய் எனக்கு மட்டுமே விஜய்யா மாறணும். நான் அவரோட முன்னாள் மனைவியை மறக்கச் சொல்லல, இப்போ மனைவியா இருக்குற என்னை நேசிக்கச் சொல்றேன். மனம் ரீதியாக எங்களுக்குள்ள எதுவுமே இல்லையே… இப்படியே என் வாழ்க்கை போகுமா?’ என்று வருந்தினாள்.
தேனிலவு முடிந்து வீட்டிற்கு வந்தனர். வழக்கம்போல் அஞ்சலியை மட்டம் தட்டுவது, அவமானப்படுத்துவது என விஜய்யின் குணம் மாறவில்லை. அனைவரும் அவன் செய்கையைக் கண்டு வருந்தினர். இப்படியே இரண்டு மாதம் கழிந்தது.
இரண்டு நாட்களாக அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை. அலுவலகத்திற்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் ஓய்வெடுத்தாள். சாப்பிட்டால் குமட்டல், அடிக்கடி தலைச்சுற்றல் இருந்தது. மாதம் தள்ளிப் போயிருந்ததால், ஒருவேளை அதுவாக இருக்குமோ என்று தனியாக வாங்கி வைத்திருந்த சோதனைக் கருவி (Pregnancy kit) மூலம் செக் செய்து பார்த்தாள். அவளை ஏமாற்றாமல் அதில் ‘இரட்டைக் கோடு’ வந்தது.
‘குட்டிப் பாப்பா என்னோட வயித்துல இருக்கு! விஜய் மாதிரி இருக்குமா இல்ல என்ன மாதிரி இருக்குமா? இதை அவர்கிட்ட சொன்னா எப்படி ரியாக்ட் (React) பண்ணுவாரு? நெத்தியில முத்தம் கொடுத்து, வயித்துல முத்தம் கொடுத்து ஹக் (Hug) பண்ணுவார். அவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை, நம்மதான் சொல்லணும். இப்ப சொல்லக்கூடாது, ஒரு டின்னருக்கு (Dinner) பிளான் பண்ணி அப்போ சொல்லணும்.’
அதை ஒரு பரிசு போல் தயாரித்து, நாளை கணவனுக்குச் சொல்லலாம் என்று முடிவு செய்தாள். தன் நண்பன் மூலம் ஒரு ரெஸ்டாரண்டில் ‘கேண்டில் லைட் டின்னர்’ (Candle light dinner) ஏற்பாடு செய்தாள். நாளை மதியம் வந்து அந்த ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி நண்பன் சொல்லவே, அஞ்சலி புறப்பட்டாள்.
ஆனால், தன் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பேரதிர்ச்சி நடக்கப் போகிறது என்பதை அவளோ, அவள் வயிற்றில் வளரும் உயிரோ அறியவில்லை. கணவனிடம் சொல்வதற்கு முன்பாகவே, அவள் வயிற்றில் இருக்கும் கரு இந்த உலகத்தை விட்டுச் செல்லப் போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.