அத்தியாயம் 3
லாவண்யாவின் கண்கள் காமத்தால் நிறைந்திருந்தன.
அதிரூபனை கண்டதும் அவன் வசப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டிருந்தது.
இன்று அவன் கையால் முதல் பரிசு பெற்றதும், அவளுக்கு மேலும் கர்வத்தை உருவாக்கியது. தனக்கு சக போட்டியாளரான அமிர்தாவின் ஓவியம் கிட்டத்தட்ட வெற்றி பெறும் என்று அவள் நினைத்திருக்க, முதல் பரிசு தனக்குக் கிடைத்தது அவளால் நம்ப முடியவில்லை. தன் அழகில் மயங்கி அதிரூபன் தனக்கான அங்கீகாரத்தை முதல் பரிசாகக் கொடுத்திருக்கிறான் என்று அவள் மனம் தவறாகக் கணக்குப் போட்டது.
முதல் பரிசுப் தான் அவன் இவளுக்கு கொடுத்தான். ஆனால் தன்னையே அமிர்தா விடம் ஒப்படைப்பதற்காகஅதிரூபன் இந்தத் திட்டத்தைப் போடுகிறான் என்று அவள் அறியவில்லை.
பாவம்! பற்கள் இளித்து கொண்டு அவன் அருகில் வந்த லாவண்யா, “நான் நினைச்சு கூடப் பார்க்கலை சார், எனக்கு இதை பரிசா கொடுப்பீங்க அப்படின்னு. எல்லாரும் மினிஸ்டரோட பொண்ணு ஈஸியா வின் பண்ணிடலாம் அப்படின்னு என்னை ரொம்பவே மட்டப்படுத்தினாங்க.
ஆனா, முதல் முதலாக என்னோட தகுதிக்கு, என்னோட திறமைக்கு பரிசு கொடுத்த இடம் இதுதான் சொல்வேன். அது உங்களை மாதிரி ஒரு பிசினஸ் மேன்கிட்ட என்னோட பரிசை வாங்குறது ரொம்ப பெருமையா இருக்கு,” என்று முடிந்தவரை தன்னை வளைந்து நெளிந்து காண்பித்து அவனைத் தன் பக்கம் இழுக்க பார்த்தாள்.
ஆனால், அவள் மீது ஒரு துளிகூடப் பார்வை படாமல், பரிசு ஏதோ பிச்சை போடுவது போல் அவள் கையில் கொடுத்தவன், “புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை அப்படின்னு ஒரு பாட்டு இருக்கே. அதைக் கொஞ்சம் யோசிங்க,” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு அதிரூபன் அங்கிருந்து சென்றுவிட்டான். லாவண்யாவுக்கு செருப்பால் அடித்தது போல் உணர்வு ஏற்பட்டது.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்ன இப்படிப் பேசிட்டுப் போவ அதிரூபன்? என்னதான் என்கிட்ட இந்த விலைக்குப் போக நினைச்சாலும் அது முடியாது. இந்த லாவண்யாவைச் சீண்டிப் பார்த்துட்டீங்க. நிச்சயம் உங்களை அடையாமல் விடமாட்டேன்!” என்று மனதுக்குள் சபதம் செய்தாள்.
இனியா தன் தந்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா நீங்க! லாவண்யா வரைஞ்ச ஓவியம் எங்கேயாவது ஓவியம் மாதிரியா இருக்கு? ஏதோ பழைய ஓவியத்திலிருந்து காப்பி அடிச்சு வரைஞ்சா மாதிரி இருக்கு. அமிர்தாவைப் பத்தி தெரிஞ்சும் அவளுக்குக் கன்சிடர் பண்ணாம நீங்க இவளுக்குப் போய் பிரைஸ் கொடுத்திருக்கீங்க. என்ன, மினிஸ்டர் மிரட்டிவிட்டாரா, அவர் பொண்ணுதான் ஜெயிக்கணும் அப்படின்னு? ஆனா, அதிரூபன் கூட இப்படிப் பண்ணுவார் அப்படின்னு நினைச்சுக்கூட பார்க்கல. ஏன்னா, அவர் யார் பேச்சும் கேட்காம தன்னைத் தனியான சிந்தனையில் இருப்பவர். அவர் கூட அமிர்தாவோட ஓவியத்துக்கு மதிப்பீடு பண்ணல,” என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க, இனியாவின் தந்தை சிரித்துக்கொண்டு சில விஷயங்களைச் சொன்ன பிறகு, அவள் வாயடைத்துப் போனாள்.
“நிஜமாவா சொல்றீங்க? அப்போ இது உண்மையா? அமிர்தாவுக்கு லைஃப் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்னு நினைச்சேன். ஆனா இது நல்லா இருக்கே! அப்ப நீங்க சொல்றது உண்மைதானே? இந்நேரம் அந்த நியூஸ் அமிர்தாவுக்குக் கிடைத்திருக்குமா?”
“கண்டிப்பா கிடைச்சிருக்கும், இனியா. நான் அவளைப் பத்தி எல்லாமே அதிரூபன் சார்கிட்ட சொல்லிட்டுதான் போட்டிக்கு அவங்க ஓவியங்களைக் காண்பிக்க ஆரம்பிச்சேன். அவர் சொன்னாரு, ‘வெற்றி யார் வேணாலும் பெறலாம், ஆனால் கடைசியில் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் மக்கள் மனசில நிலைச்சிருக்கிறது யாருன்னு நீங்களே கொஞ்ச நேரத்துல பார்ப்பீங்க’ன்னு சொன்னாரு. சொன்ன மாதிரி அவர் முதல் பரிசு லாவண்யா பேரைச் சொன்னவுடனே யாரும் எதிர்பார்க்கல. எல்லார் வாயிலிருந்தும் வந்த பெயர் அமிர்தா. அப்படின்னா என்ன அர்த்தம்? அமிர்தாவோட ஓவியம் நல்ல ஓவியம்னு அர்த்தம். அதனால்தான் அதிரூபன் சார் அவளுக்கு வேற ஒரு ஆப்பர்ச்சூனிட்டி வச்சிருக்காரு. நீ அதை பத்தி எதுவும் பேசிக்க வேணாம். அவளுக்கு ஆட்டோமேட்டிக்கா அந்த நியூஸ் வந்தா, அவ அடுத்த கட்ட விஷயத்தைப் பார்த்துக்குவாள். நீ ஒழுங்கா கிளம்பி வீட்டுக்குப் போ. இன்னைக்கு ஈவினிங் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க இல்ல?”
என்று சொல்ல, இனியாவும் வெட்கப்பட்டுக்கொண்டு, “சரி,” என்று சொல்லித் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள். இதோ, திருமணம் நிச்சயமாகிவிட்டது. இன்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் விருந்துக்கு வருகிறார்கள், அதற்காகத்தான் அவள் செல்லப் போகிறாள். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். அதற்குள் தன் தோழி அமிர்தாவுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.
நல்லவேளை, இந்த ஓவியக் கண்காட்சி அவளுக்கு உறுதுணையாக இருந்தது. அதை நினைத்தே தன் வாழ்க்கை அடுத்த கட்ட விஷயத்திற்காக இனியா சென்றுவிட, இங்கே தனித்துவிடப்பட்ட அமிர்தா தனது வீட்டில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்து அழுதுகொண்டிருந்தாள்.
ஐந்து வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறாள் தன் ஓவியத்துக்கான சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று. ஆனால், பணம் சூழ்ந்த இந்த வஞ்சக உலகில் தனித்துவிடப்பட்ட ஏழைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? அதுவும், ஒரு நடுத்தரப் பெண்ணால் சுத்தமாக எதுவும் செய்ய முடியாது. அவளது நிலைமையும், கீழ்வீட்டு வாடகையும், தனது யூடியூபில் வரும் பணமும், இந்த இரண்டும் அவளுக்கு இப்போதைய வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருக்கின்றன.
ஆனால் அதன் பிறகு நல்ல வேலை வேண்டுமே? அந்த வேலைக்கு எங்கு செல்வது? எங்கே சென்றாலும் நயவஞ்சகர்களின் பார்வை மெழுகு சிலை போல் இருக்கும் அவளது உடல் மீதுதான் இருக்கிறது. சரி, உயர் அதிகாரிகள் நன்றாக இருந்தாலும், வேலை செய்யும் ஆண்கள் நன்றாக இல்லையே? இப்படி மூன்று கம்பெனிகளில் ஒரு வாரம் வேலை செய்துவிட்டு, ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ பிடிக்காமல் வந்தது அமிர்தாவின் சாதனைதான். இப்படி இருக்கும் பொழுது, தன் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் செல்ல வேண்டுமா என்று ஏங்கிக்கொண்டிருக்கும்போது, அவள் மொபைலில் ஒரு நோட்டிஃபிகேஷன். என்னவென்று பார்க்க,
‘We are offering you an amazing opportunity from AR Company. You need natural-looking paintings for your company advertisement. Our company will hire you for this job after seeing your drawings on the website. If you are interested, we request you to come directly to AR Industrial Company tomorrow morning at 10 am and meet our CEO Mr. Athirupan.’
என்று எழுதி இருக்க, அவளால் நம்ப முடியவில்லை. என்ன, நமக்கு ஏ.ஆர். இண்டஸ்ட்ரியல் கம்பெனியிலிருந்து வேலை கிடைத்திருக்கிறதா? அதுவும் டெக்னாலஜி வளர்ந்த பிறகும் ஓவியம் வரைவதற்கான வேலை, அதுவும் விளம்பரத்திற்காக? இது 90-ஸ் காலகட்டத்தில் செல்லுபடியாகும். இந்த காலகட்டத்தில் டெக்னாலஜி இருக்கும்போது எதற்காகத் தன்னை அழைத்திருக்கிறார்கள்? அப்பொழுதுதான் அவள் மூளை ஒன்று யோசித்தது. “அதிரூபனை சந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று போட்டிருக்கிறார்கள். இன்று வந்த நடுவர் அவர் தானே? அப்படி என்றால் அவர்தான் இந்த வாய்ப்பைத் தனக்குக் கொடுத்திருக்கிறாரோ? தனது ஓவியம் பிடித்து, தனது கம்பெனிக்கு அவளை அழைத்து இருப்பாரோ? சரி, நமக்கென்று ஒரு வேலை வருகிறது, இந்தக் கம்பெனியை முயற்சி செய்து பார்ப்போம் என்று சந்தோஷமாக அந்த மின்னஞ்சலுக்கு ரிப்ளை கொடுத்துவிட்டு, ஃப்ரிட்ஜில் இருக்கும் லெமன் ஜூஸைக் குடித்துவிட்டு டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, அதில் அதிரூபனின் இன்டர்வியூதான்.
இவ்வளவு குறுகிய காலகட்டத்தில், அதாவது, பத்தாண்டுகால உழைப்பில் ஒருவர் 30 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். அதைப்பற்றி அவன் விளக்கமாகப் பேசுவதும், இக்கால இளைஞர்களுக்குப் பிடித்தவாறு அவன் நடந்துகொள்ளும் முறைகளும் அனைத்தையும் பார்த்து அமிர்தாவுக்கு ஒரு முறை அவன் மீது மரியாதை வந்தது.

“நான் கூட இவர் தப்பானவர்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எனக்குன்னு அங்கீகாரம் இவர் கம்பெனியில நமக்குக் கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை இருக்கு. உண்மைதான், அவருடைய பார்வை கலை நயத்தோடுதான் இருக்கு,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனால், அவன் பார்வை அவள்மீது உள்ளதை எப்படி அவள் அறிவாளோ?
அன்றைய நாள் முழுக்க மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றது அமிர்தாவுக்கு. கீழ்வீட்டில் இருக்கும் குட்டிஸ் இருவரும் சரியாக மாலை ஆறு மணி அளவில் டியூஷன் வந்துவிட, பக்கத்தில் இருக்கும் நான்கு சிறுவர்கள் அனைவரும் ஆஜராகிவிட, அவரவருக்கு இன்றைய கொடுக்கப்பட்ட ஹோம்வொர்க்கை அனைத்தையும் சரிபார்த்து, கணக்கில் ஏதாவது சந்தேகம் இருப்பின், புதிய பாடத்தில் ஏதாவது குழப்பம் இருப்பின், அதையெல்லாம் தீர்த்து வைத்து, அமிர்தா எட்டரை மணிக்குள் அனைத்துக் குழந்தைகளையும் அனுப்பிவிட்டு, தன் தாய் தந்தையின் புகைப்படத்தைப் பார்க்க வந்தாள். அவளது தந்தை சேஷாத்திரி குஜராத்திலிருந்து தன் தந்தையோடு இங்கே நகை வியாபாரம் செய்ய வந்தவர். மிகவும் பணக்காரர்கள் இல்லை என்றாலும் போதுமான வருமானம் அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் வாங்கிய இந்த வீடுதான் அவர்களுக்குக் காலத்துக்கும் உதவியது. அவள் வளர்ந்துவரும் சமயம் யார் கண் பட்டதோ, கணவன் மனைவி இருவரும் மகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு தங்கள் நகைக்கடைக்குச் செல்லும் பொழுது, ஆக்ஸிடெண்ட் ஆகி இறந்துவிட, பிணம் தின்னிக் கழுகு போல் இருக்கும் சிலர், “உன் தந்தை என்னிடம் இவ்வளவு கடன் வாங்கினார், அவ்வளவு கடன் வாங்கினார்,” என்று சொல்லி மொத்த நகைக்கடையும் பங்கிட்டு எடுத்துக்கொண்டனர்.
நல்லவேளை, வீடு அமிர்தாவின் பெயரில் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யப்பட்டதால், வக்கீல் மூலம் அதைத்தான் காப்பாற்ற முடிந்தது. அதைத் தக்க வைத்துக்கொண்டு, கீழ்வீட்டில் இருப்பவர்கள் உறவினர் போல் துரோகம் செய்யாமல் துணைக்குத் துணையாக இருக்க, அவளால் இந்த உலகில் பிழைக்க முடிந்தது. தன் படிப்பை முடித்துவிட்டு சரியான வேலைக்காகத் தேடிக்கொண்டிருந்தாள். இதோ அந்த வேலையும் கிடைத்துவிட்டது. அதையெல்லாம் தன் பெற்றோர் முன்பாக நின்று நினைத்துப் பார்த்தவள்,
“நீங்க ஏதாவது ரூபத்துல எனக்கு உதவி செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்ப்பா, அம்மா. உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்றேன். எது எனக்கு உதவச்சோ இல்லையோ, சின்ன வயசுல இருந்து நான் ஏதாவது ஒண்ணு கிறுக்கிக்கிட்டே இருப்பேன். அம்மா, நீங்க என்னை திட்டிக்கிட்டே இருப்பீங்க. ஆனா அப்பா சொல்லுவாரு, ‘என் பொண்ணு வருங்காலத்துல பெரிய ஆர்டிஸ்ட் ஆகப் போறா’ அப்படின்னு. சொன்ன மாதிரி, அப்பா, என்னோட பெயிண்டிங்க்குப் பணம், பரிசுதான் கிடைக்கல. ஆனா வாழ்நாள் முழுக்க நான் கௌரவமாக இருக்கிறதுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கப் போகுது. அது எனக்குப் போதும். நாளைக்கு சீக்கிரம் கம்பெனிக்குப் போகணும்.”
என்று, இருக்கு மாவில் தோசை சுட்டு, மிளகாய்ப் பொடி தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, தன் படுக்கையறைக்குச் சென்று மீண்டும் ஒருமுறை தன் பெற்றோர்களை நினைத்துக்கொண்டு உறக்கத்தைத் தழுவினாள். ஏதோ ஒளிமயமான எதிர்காலம் தனக்குக் காத்திருப்பது போல அவள் இங்கே இருக்க,
இங்கே தனது பிரைவேட் ஓவிய அறையில், அமிர்தாவையும் தன்னையும் வேறு விதமான கோணத்தில், வித்தியாசமான அமைப்பில் பெயிண்டிங் வரைந்து முடித்து, அதையே தனது குறுகிய பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தான் அதிரூபன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,