அத்தியாயம் 21
கடற்கரையின் ஈரமான மணலில் டேவிட் மூச்சிரைக்க நின்றிருந்தான். அவனது ஒரு கை காயத்ரியை அரணாகப் பிடித்திருந்தது. மழையின் வேகத்தில் ரிகார்டோவின் உருவம் ஒரு பிசாசைப் போலத் தெரிந்தது. சுற்றிலும் சூழ்ந்திருந்த துப்பாக்கிகளின் சிவப்பு லேசர் புள்ளிகள் டேவிட்டின் நெஞ்சில் ஊசலாடின.
“இன்னும் உனக்கு என்னதான் வேணும் என் கையால சாவறதுக்கு தான் நீ காத்துகிட்டு இருக்க போல??.
எங்க அப்பாவை அநியாயமா கொன்னுட்டல.”.
என்று டேவிட் மிகவும் வெறிகொண்டு அவனை பார்க்க.
ரிகார்டோ மெல்லச் சிரித்துக்கொண்டே புகையை ஊதினான். “உன் அப்பாவை நான் கொன்னது பிசினஸ். ஆனா இப்போ நான் கேட்கிறது என் கௌரவம். அந்த லாக்கெட்ல இருந்த டேட்டாவை காயத்ரி காப்பி பண்ணிட்டான்னு எனக்குத் தெரியும். அதுல மெக்சிகோவோட தற்போதைய பிரசிடென்ட் என்னைப் பத்தி எழுதின ஒரு ரகசியக் கடிதம் இருக்கு. அது மட்டும் வெளிய போச்சுன்னா, என் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அதை அழிச்சிடு… பதிலுக்கு நீயும் காயத்ரியும் உயிரோட இந்தியா போகலாம்.”
காயத்ரி டேவிட்டின் காதோரம் முணுமுணுத்தாள், “டேவிட், இவனை நம்பாதீங்க. நாம அந்த ஆதாரத்தை அழிச்சா இவன் நம்மளை அங்கேயே சுட்டுக் கொன்னுடுவான்.”
டேவிட் ரிகார்டோவை நேராகப் பார்த்தான். “சரி… ஆனா முதல்ல என் அம்மாவும் சாருவும் பாதுகாப்பா எல்லை தாண்டிட்டாங்கன்னு எனக்கு உறுதி வேணும்.”
ரிகார்டோ தனது போனை உயர்த்தி ஒரு வீடியோவைக் காட்டினான். அதில் சாருவும் சீதாவும் ஒரு சிறிய படகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தனர். “அவங்க பத்திரமா இருக்காங்க டேவிட். ஆனா அவங்க பின்னாடியே என் ஷார்க் படகுகள் போய்க்கிட்டு இருக்கு. நான் ஒரு சிக்னல் கொடுத்தா போதும்… அந்தப் படகு இருந்த இடமே தெரியாமப் போயிடும்.”
டேவிட்டின் உடல் ஆத்திரத்தில் நடுங்கியது. அவனது வலது கை மெல்ல இடுப்பில் இருந்த கத்தியைத் தடவியது. “காயு… அந்தப் ஃபைலை அவன்கிட்ட கொடுத்துடு.”
காயத்ரி திகைத்தாள். “டேவிட்! இது நம்மகிட்ட இருக்கிற ஒரே ஆயுதம்!”
“பரவாயில்லை… கொடு,” டேவிட்டின் குரலில் ஒரு ரகசிய உறுதி இருந்தது.
காயத்ரி தனது லேப்டாப்பைத் திறந்து, அந்த குறிப்பிட்ட கோப்பை ஒரு சிறிய பென் டிரைவில் (Pen Drive) ஏற்றி ரிகார்டோவிடம் வீசினாள். ரிகார்டோ அதை ஒரு ஆவலோடு பிடித்துக்கொண்டான்.
“வெரி குட் டேவிட்! இப்போ நீங்க சாகலாம்!” ரிகார்டோ வஞ்சகமாகச் சிரித்துவிட்டுத் தனது ஆட்களைப் பார்த்துச் சுடச் சொல்லி சைகை காட்டினான்.
ஆனால், ரிகார்டோ அந்த பென் டிரைவை தனது டேப்லெட்டில் செருகிய அடுத்த நொடி, ஒரு பயங்கரமான மின்சார அதிர்வு (Electric Pulse) அவன் உடலெங்கும் பாய்ந்தது. அது சாதாரண பென் டிரைவ் அல்ல… காயத்ரி எதிரிகளை ஒரு கை பார்ப்பதற்காகவே உருவாக்கிய ஒரு வைரஸ் கருவி.
“இப்போ!” என்று கத்தினான் டேவிட்.
டேவிட் மின்னல் வேகத்தில் ரிகார்டோவின் கழுத்தைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து துப்பாக்கியை அவனது தலையில் வைத்தான். “யாராவது சுட்டா உங்க பாஸ் மண்டை சிதறிடும்!”
சுற்றிலும் இருந்த ஆட்கள் திகைத்து நின்றனர். ரிகார்டோ வலியால் துடித்தான். “டேவிட்… விடு என்னை!”
“விடுறதுக்கா இவ்வளவு தூரம் வந்தேன்? காயு, வண்டி எடு!”
அங்கே நின்றிருந்த ரிகார்டோவின் சொகுசு காரிலேயே காயத்ரி ஏறினாள். டேவிட் ரிகார்டோவை இழுத்துக்கொண்டு காரில் பாய்ந்தான். கார் கடற்கரைச் சாலையில் பறந்தது. பின்னால் வந்த ஆட்கள் சுட பயந்தனர், ஏனெனில் அவர்களின் தலைவன் டேவிட்டின் பிடியில் இருந்தான்.
“டேவிட், நம்மகிட்ட பெட்ரோல் கம்மியா இருக்கு. நாம துறைமுகத்துக்குப் போக முடியாது!” காயத்ரி காரின் மீட்டர் பலகையைப் பார்த்துச் சொன்னாள்.
“நாம துறைமுகத்துக்குப் போகப் போறது இல்ல காயு… ரிகார்டோவோட சொந்த ஏர்போர்ட்டுக்குப் போகப்போறோம். இவனையே பாஸ்போர்ட்டா வச்சு நாம இந்தியா பறக்கப்போறோம்!”
ரிகார்டோவின் சொகுசு கார் மெக்சிகோவின் மலைப்பாதைகளில் சீறிப்பாய்ந்தது. பின்னால் நூற்றுக்கணக்கான விளக்குகள் தெரிந்தன. ரிகார்டோவின் தனிப்பட்ட பாதுகாப்புப் படை அவர்களை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.
காரின் உட்புறத்தில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. டேவிட் தனது துப்பாக்கி முனையை ரிகார்டோவின் காதோடு அழுத்திப் பிடித்திருந்தான். ரிகார்டோவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது, ஆனால் அவன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.
“டேவிட்… நீ பண்றது தப்பு. என் ஏர்போர்ட்டுக்குள்ள நுழைஞ்சா நீ உயிரோட வெளிய வர முடியாது. அங்க இருக்குறது வெறும் ஆட்கள் இல்ல, நவீன போர் கருவிகள்!” என்று ரிகார்டோ எச்சரித்தான்.
“அதை நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க இப்போ எனக்கு ஒரு விசா மட்டும்தான்,” என்று டேவிட் கூலாகப் பதில் சொன்னான்.
காயத்ரி காரின் ஸ்டீயரிங்கை ஆக்ரோஷமாகத் திருப்பி, ஒரு குறுக்கு வழியில் புகுந்தாள். தூரத்தில் ரிகார்டோவின் ரகசிய விமான தளம் மின்னொளியில் ஜொலித்தது. அங்கிருந்த பாதுகாவலர்கள் காரை அடையாளம் கண்டு கதவுகளைத் திறந்தனர். ஆனால் கார் நிற்காமல் நேராக ஓடுதளத்தில் தயாராக நின்றிருந்த ஒரு சிறிய பிரைவேட் ஜெட் விமானத்தை நோக்கிச் சென்றது.
“காயு, சாருவும் அம்மாவும் படகுல தப்பிச்சிட்டாங்கன்னு சிக்னல் வந்துடுச்சு. இப்போ நாம மட்டும் தான்!” டேவிட் தனது போனைப் பார்த்துச் சொன்னான்.
விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. இன்ஜின் இரைச்சல் அந்தப் பகுதியையே அதிர வைத்தது. காயத்ரி காரை விமானத்தின் படிக்கட்டுக்கு அருகிலேயே நிறுத்தினாள்.
டேவிட் ரிகார்டோவை இழுத்துக்கொண்டு விமானத்திற்குள் பாய்ந்தான். காயத்ரி பின்னாடியே ஏறி கதவை மூடினாள். விமானத்தின் பைலட் அதிர்ச்சியில் கைகளை உயர்த்தினான்.
“விமானத்தைக் கிளப்பு! இல்லைன்னா இதுதான் உனக்குக் கடைசி நிமிடம்!” டேவிட் பைலட்டை மிரட்டினான்.
விமானம் மெல்ல நகரத் தொடங்கியது. அப்போது ரிகார்டோவின் ஆட்கள் விமானத்தை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். தோட்டாக்களின் சத்தம் விமானத்தின் இறக்கைகளில் ‘டக் டக்’ என்று கேட்டது.
“டேவிட்! ஒரு டயர் பஞ்சர் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். பேலன்ஸ் கிடைக்கல!” என்று கத்தினான் பைலட்.
விமானம் ஓடுதளத்தில் தள்ளாடியது. காயத்ரி டேவிட்டின் கையைப் பலமாகப் பற்றிக்கொண்டாள். “டேவிட், நாம சாகப்போறோமா?”
“சாகமாட்டோம் காயு… பறக்கப்போறோம்!” என்று சொன்ன டேவிட், தானே பைலட் இருக்கைக்கு அருகில் சென்று ஒரு சில சுவிட்சுகளைத் தட்டி விமானத்தை வானத்தை நோக்கி உயர்த்தினான்.
விமானம் ஒரு வழியாகத் தரைக்கும் வானுக்கும் இடையில் போராடி மேலெழுந்தது. மெக்சிகோ நகரம் மெல்லச் சிறுத்துக்கொண்டே சென்றது.
காயத்ரி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால், ரிகார்டோ ஒரு விசித்திரமான சிரிப்பைச் சிரித்தான். “டேவிட்… நீ பறந்துட்ட. ஆனா என் ராடார்ல இருந்து நீ தப்பிக்க முடியாது. இப்போவே மெக்சிகன் ஏர்ஃபோர்ஸ் உன்னைச் சுட உத்தரவு வரும். திருட்டு விமானத்துல போற உன்னை அவங்க தீவிரவாதின்னு நினைப்பாங்க.”
அடுத்த நொடி, விமானத்தின் ரேடியோவில் ஒரு அதிகாரமான குரல் கேட்டது: “அடையாளம் தெரியாத விமானமே, உடனே தரையிறங்கு. இல்லையென்றால் சுடப்படுவாய்!”
விமானத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இரண்டு அதிநவீன போர் விமானங்கள் இவர்களின் விமானத்தைச் சூழ்ந்து கொள்வது தெரிந்தது.
பல்வேறு சோதனை கட்டங்களை தாண்டி டேவிட் காயத்ரி இருவருக்கும் விடுதலை கிடைக்குமா??.
…