Home ANTIHEROஅத்தியாயம் 24

அத்தியாயம் 24

by sreejanovels
203 views

இரண்டு மாதங்கள் உருண்டோடின. யோகிதா – ராம் மற்றும் ராதா – அருண்குமாரின் வாழ்க்கையைத் தவிர, மற்றவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.அன்று அந்த வீடு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. காரணம், யோகிதாவின் ஏழாம் மாதச் சீமந்த விழா.

அறையில் அவளை அலங்காரம் செய்து கொண்டிருக்க, இங்கே அம்பை தன் அறையில் குழந்தைக்கு உடை மாற்றிவிட்டு, தானும் ஒரு பட்டுப்புடவையில் தயாராகிக் கொண்டிருந்தாள். செழியன் இப்போது அம்பையின் முன்னே வருவதில்லை. அவள் உறங்கிய பின்னரே அறைக்கு வருவான்; அவள் எழுவதற்கு முன்பே அலுவலகம் சென்றுவிடுவான்.

குழந்தைக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மட்டுமே இரவில் அந்த அறைக்கு வருகிறான். குழந்தை இப்போது இருவரிடமும் மிகவும் ஒட்டிக்கொண்டது.அம்பை திருமணத்திற்குப் பிறகு அலுவலகம் செல்வதை நிறுத்திவிட்டாள்.

“குட்டி இளவரசி” பின்னாடியே செல்வதற்கு அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.”மா… டிரஸ் சூப்பர்!” என்று அம்மாவின் அலங்காரத்தைப் பார்த்துக் குழந்தை குதூகலிக்க, அவளை வாரி அணைத்துக்கொண்டாள் அம்பை. “நீயும் உன்னோட அம்மா காயத்ரி மாதிரிதான்… கள்ளம் கபடம் இல்லாத மனசு, கலப்படம் இல்லாத அன்பு” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

கசப்பான பழைய நினைவுகளை மறந்து விழாவிற்கான வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.—மறுபுறம், இசைக்கும் இனியனுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.”பழையது எல்லாம் ஞாபகம் வராமல் இருந்திருந்தால், இந்நேரத்திற்கு என்னையும் கர்ப்பமாக்கி உன் இச்சைக்குத் தீர்த்திருப்பாய் இல்லையா? எப்படியோ கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார்.

ஆனால் உன்னைப் போன்ற ஒருவனை எனக்குக் கணவனாகக் கொடுத்துவிட்டார், அதுதான் கவலை. நீ ரொம்ப எல்லை மீறிப் போகிறாய் இனியன். அன்று எனக்குப் போதை ஊசி போட்டு உனக்கு எதுவுமே தெரியாதது போல் நடித்தாயே, அதற்குத் துணையாக இருந்த உன் நண்பர்கள் இப்போது எங்கே?” என்று இசை குடைந்து எடுத்தாள்.பொறுமை இழந்த இனியன்,

“வாயை மூடு இசை! அன்று நடந்தது எனக்கே தெரியாமல் நடந்த தவறு. நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும், அன்று எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகுதான் என் உடலில் அதிக அளவு போதை மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரிந்தது. என் நண்பர்கள் என் மேல் பழியைப் போட்டுத் தப்பித்துவிட்டார்கள்.

நானே உன்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகும், ஏன் மீண்டும் மீண்டும் பழசைப் பேசி வருத்தப்படுகிறாய்?” என்றான்.தொடர்ந்து, “இன்று ஒரு முடிவு எடுத்துக்கொள். என் மேல் நம்பிக்கை இருந்தால் என்னோடு வாழ், இல்லை நான் உன்னைச் சாகடிக்கிறேன் என்று நினைத்தால், நீ தாராளமாக உன் வீட்டிற்குப் போகலாம். விவாகரத்து நோட்டீஸ் உன்னைத் தேடி வரும். சுதந்திரமாக வாழ்” என்று சொல்லிவிட்டுத் தார்ச்சியாகக் கீழே இறங்கிச் சென்றான்.இசை தன் வாயில் அடித்துக்கொண்டாள்.

“ஏண்டி, அவன் மேல் தப்பில்லை என்று தெரிந்த பிறகும் இரண்டு மாதமாக அவனை வைத்துச் செய்தாயே! இன்று பொங்கிவிட்டானே! வீட்டை விட்டுப் போகச் சொல்கிறான், நான் எப்படிப் போவேன்? கஷ்டப்பட்டு எனக்காகக் காத்திருந்தவனைக் கல்யாணம் பண்ணியிருக்கிறேன். இன்று இரவு உன்னைப் பிடிக்கிற பிடியில், அடுத்த ஐந்தாவது மாதம் எனக்குச் சீமந்தம் நடக்கும். இது என் சபதம்!” என்று கண்ணாடியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். இதை மறைந்து நின்று கேட்ட இனியன்,

“மக்கு பொண்டாட்டி! இவள் விளையாடுவது எனக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாளா? இன்று இரவு உனக்கு இருக்கிறதுடி” என்று முணுமுணுத்துச் சென்றான்.—சீமந்த விழா சிறப்பாகத் தொடங்கியது. ஊதா நிறப் பட்டுப்புடவையில் அன்னநடையோடு வரும் யோகிதாவைப் பார்த்து ராம் மெய்மறந்து நின்றான். மனைவிக்கு ஆசையாகக் கண்ணாடி வளையல்களை அணிவித்தான். உறவினர்கள் வாழ்த்திவிட்டுச் சென்றனர்.விழா முடிந்து வரிசைத் தட்டுகளைச் சரிசெய்துவிட்டு மாடிப்படி ஏறிய அம்பை, திடீரென்று மயங்கிச் சரிந்தாள்.

அனைவரும் பதறிப்போய் அவளைச் சோபாவில் அமர வைத்தனர். சோதித்துப் பார்த்த சிவகாமி பாட்டி மகிழ்ச்சியில் செழியனின் காத்தைப் பிடித்தார்.”படவா! பார்க்கத்தான் அப்பாவிப் பிள்ளை மாதிரி இருப்பாய், இப்போது நீயே ஒரு பிள்ளைக்குத் தகப்பனாகிவிட்டாய். நான் கொள்ளுப்பாட்டி ஆகிவிட்டேன்! நம்ம அம்பை மாசமா இருக்கா. பாப்பா, உனக்கு நாள் தள்ளிப் போய் எத்தனை நாள் ஆகுது?” என்று கேட்டார்.

அம்பை கணக்கிட்டுப் பார்த்து, சரியாக இரண்டு மாதம் என்று சொல்ல, பாட்டி திருஷ்டி கழித்தார்.”கல்யாணம் ஆன உடனே குழந்தை நிற்பதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயம். ஜடை தைக்கும் விழா நடக்கும் வரை யாருக்கும் சொல்ல வேண்டாம். ஜமுனா, உன் மகளுக்குத் திருஷ்டி கழி” என்றார் பாட்டி. இசை இதைப் பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நாள் பாருங்க, எனக்கும் இதே குட் நியூஸ் வரும்” என்று வெட்கப்பட்டுச் சிரிக்க, அனைவரும் அவளை வியப்பாகப் பார்த்தனர்.—ஒருபுறம் அருண்குமார் ராதாவின் காதருகே சென்று, “ராதாவே, நாமும் இரண்டு மாதமாக முயற்சி செய்கிறோம்.

நீ இன்னும் மயக்கம் போடாமல் இருக்கிறாயே! விமல் கூட விளையாட ஒரு குட்டிப் பாப்பா வேண்டாமா?” என்று கிண்டல் செய்தார்.”ஏழு கழுதை வயதாகிறது, உங்கள் மகளுக்கே சீமந்தம் நடக்கும் வயதில் உங்களுக்கு இன்னொரு குழந்தை கேட்கிறதா? என்னால் முடியாதுப்பா” என்று ராதா முறைக்க, அருண்குமாரோ, “உன் முகத்தில் அந்தப் பிரகாசம் தெரிகிறது ராதா, ஏதாவது விசேஷமா?” என்று ஆவலாகக் கேட்டார். அதற்குள் விமல் வந்து, “அம்மா! இவன் கூடத் தனியாக இருக்காதீங்க, இவன் ரொம்ப டேஞ்சரஸ் ஃபெல்லோ” என்று ராதாவை அழைத்துச் சென்றான்.”இவன்தான் எனக்கு மெயின் வில்லன், இவனுக்கு முதலில் ஒரு கல்யாணத்தைப் பண்ணனும்” என்று அருண்குமார் பெருமூச்சு விட்டார்.—காலம் வேகமாக நகர்ந்தது.

ராதாவும் அருண்குமாரும் டெல்லி சென்றிருக்க, ஹோட்டலைப் பராமரிக்கும் பொறுப்பு விமலிடம் வந்தது. வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த விமலின் பின்னால் ஒரு குரல் கேட்டது.”சார், உங்க ஹோட்டல்ல சாம்பார், சட்னி எதுவுமே நல்லா இல்லை. உங்க மூஞ்சி மாதிரி கேவலமா இருக்கு!”அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்த விமலின் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன…

**”வினு!”**

You may also like

Leave a Comment

About Me

Featured