Home ANTIHEROஅத்தியாயம் 6

அத்தியாயம் 6

by sreejanovels
316 views

அத்தியாயம் 6

இங்கே மதன் குமாரின் தொழில் எதிரி சீனிவாசன் சென்னை தாண்டி உள்ள மிகப் பெரிய சொகுசு பங்களாவில் யாருக்காகவோ காத்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து நிற்க, காவலாளி அது யார் என்று தெரிந்து உள்ளே அனுமதி தந்தார். காரில் இருந்து அட்டகாசமான ஒப்பனையுடன், பட்டுப் புடவை சரசரக்க, அன்னநடை போட்டு வீட்டிற்குள் நுழைந்து சீனிவாசனைத் தேட, அவரோ அந்தப் பெண்ணைப் பின்னாடி இருந்து கட்டி அணைத்து, கழுத்தோரம் இதழ் முத்தம் கொடுக்க,

“உன்ன ரொம்ப மிஸ் பண்ண பேபி. கிட்டதட்ட மூன்று மாதம் ஆச்சு நான் உன்னைத் தொட்டு. அப்பப்ப என்னைக் கவனிக்கணும்னு உனக்குத் தோணவே இல்ல பாத்தியா?”

என்று அவரிடம் செல்லமாகக் கோபிக்க, அந்தப் பெண்மணி அவர் கன்னம் பற்றி,

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? யாரும் என்னைக் கண்டுக்காத மாதிரி தான் இருப்பாங்க. ஆனா என்னையே சுத்தி நோட்டம் விட எங்க அண்ணனும் சரி, என்னோட புருஷனும் சரி, உளவு பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் சமாளிச்சு தானே நான் வரணும்? சரி, அவங்களை அழிக்க ஏதோ புதுத் திட்டம் வச்சிருக்கேன் சொன்னியே, என்ன ஆச்சு?”

என்று தன் குடும்பத்தாரை அழிப்பதற்காகக் குடும்ப எதிரியிடம் வந்து சரணடைந்தார் மதனின் செல்லத் தங்கையும், அருண்குமாரின் மனைவியும் ஆன கௌதமி.

“புதுத் திட்டம் போட்டு இருக்கேன். தொழில் மூலமா போராடுவதை விட, பொம்பளை மூலமா அவமானப்பட்டு தோல்வி அடையறது ரொம்பப் பெரிய அவமானம். அதில் இருந்து மீண்டு வருவது ரொம்பக் கஷ்டம். அதான் உன்னோட அண்ணன் பிள்ளைகள் மெயின்டெய்ன் பண்ற இடத்துக்கு என்னோட ஆட்களை அனுப்பி வச்சிருக்கேன். ஆபீஸ்ல ஒரு புதுப் பொண்ணு திங்கட்கிழமை இருந்து சேரப் போறா. அப்புறம் நேத்துதான் இளையவனோட ஸ்கூல்ல ஒரு பொண்ணைத் டீச்சரா அப்பாயிண்ட் பண்ணி அனுப்பி இருக்கேன். சந்தேகம் வராதபடி, நீ கவலையே படாதே. இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பயலுகளும் அவமானப்பட்டு வரப்போறாங்க.”

என்று சொல்லிச் சிரிக்க, அவரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்ட கௌதமி,

“இதனாலதான் எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க மட்டும் கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தால், நீங்களும் நானும் கணவன் மனைவியா சந்தோஷமா ஊருக்கு முன்னாடி கௌரவமா வாழ்ந்து இருக்கலாம்.

எல்லாம் பறிபோன பிறகு நீங்க என்னோட வாழ்க்கையில வந்து இருக்கீங்க. இருந்தாலும் எனக்குன்னு ஒரு உணர்ச்சி, ஆசைகள் இருக்கு. அந்த அருண்குமார் என் பக்கம் கூட வரமாட்டான். ஏதோ ரெண்டு மூணு தடவை வந்தான், அது பலனா என்னோட மகள்.

அதுக்கப்புறம் சுத்தம்! என்னடா கல்யாணம் பண்ணி இருக்கோம்? அந்தப் பொண்ணுக்கு உணர்ச்சிகள் இருக்குமேன்னு கவலை கூட இல்ல. கேட்டா, ‘தாம்பத்தியம், மனைவி வாழ்க்கை, இல்லறம்’ அப்படின்னு பூமர் பேச்சு பேசுறான். எப்படியோ, அந்தப் பார்ட்டில உன்னை மீட் பண்ண பிறகுதான் என்னுடைய வாழ்க்கை கொஞ்சம் சலிப்பு இல்லாமல் இருக்கு. இது நிரந்தரமா இருக்கணும்னா, அந்தக் குடும்பம் அழியணும். என்னை ஒதுக்கி வச்ச குடும்பம் மொத்தமா ஒதுங்கிப் போகணும்!”

என்று வன்மம் கலந்து பெருமூச்சு வாங்கி கௌதமி சொல்ல, அவரைச் சமாதானம் செய்த சீனிவாசன் அவரை அள்ளிக் கொண்டு தன் அறைக்குள் சென்று தன் வேட்டையை ஆரம்பித்தார். இருவரும் வயதானவர்கள் தான். ஆனால் மோகம் கொண்ட உடல் பசி அவர்களை வெறி கொண்டு செயலாற்ற வைத்தது. சீனிவாசனின் வேகத்தைக் கண்டுதான் மேலும் மேலும் அவருக்கு அடிமையாகிப் போனாள் கௌதமி.

“ஐயோ மெதுவா… மெதுவா… முடியல!”

என்று அவரின் மோக முனகல் சீனிவாசனை மேலும் வெறி கொண்டு செய்ய, வன்மையாய் அவரை நாட வைத்தது.

“இந்த வயசுலயும் உங்க வேகம் குறையவே இல்ல!”

என்று உச்சத்தில் கௌதமி சொல்ல, அவரை வாரி அணைத்துக் கொண்டார் சீனிவாசன்.

ஆடைகளற்ற இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.


இங்கே செழியன் வெறி கொண்ட வேங்கையாய், வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்தான். வார இறுதி வேறு. மொபைல் மூலம் அம்பையைத் தொடர்பு கொண்டு பேசலாம் என்று பார்த்தால், இரண்டு நாட்கள் விடுமுறையை என்ஜாய் செய்வதற்காக அங்கே வீட்டில் அனைவரும் மொபைல் ஃபோனை ஏரோப்ளேன் மோடில் வைத்திருந்தனர். புகைப்படம் எடுப்பதற்காக. ‘யார் போன் செய்தாலும் வராது, இவர்களும் யாருக்கும் போன் செய்ய வேண்டாம்’ என்று முடிவு செய்திருந்தனர்.

அம்பை செய்த தவறு, இதைப் பற்றி முன்கூட்டியே செழியனிடம் சொல்ல வேண்டியதை மறந்து போய்விட்டாள். அதனால் அவளுக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கிறது என்று அவள் மறந்து போனாள்.

வாட்ஸ்அப் மெசேஜ் ஒரு பக்கம்… எத்தனை முறை அழைத்தாலும் அழைப்பு போகவில்லை. வெறுப்பை அடைந்து போனவன்,

“ச்ச! அப்படி என்ன புடுங்குற வேலை? என்னை விட இவளுக்கு என்கிட்ட பேசுறதை விட அவளுக்கு என்ன பெருசா வந்துடப் போகுது? வரட்டுமா! அவளுக்கு இருக்கு! இப்படியே விட்டால் தானே அவள் என்னை விட்டு தூரம் தூரம் போறா. இதுக்கு ஒரு வழி பண்றேன்.”

என்று தனது பர்சனல் செகரட்டரியிடம் சில கட்டளை போட, அவரும் அதற்கு வேண்டியதைச் செய்து முடித்து அனுப்பி வைத்தார். அவன் உதட்டில் ஒரு மர்மப் புன்னகை.

“இது மூலம் நீ என்னை விட்டுப் பிரியவே முடியாது அம்பை. எப்பவுமே நீ என் கூட, என்னைச் சார்ந்துதான் இருப்ப. என்னைத் தவிர இந்த உலகத்தில் நீ எதையும் யோசிக்கக்கூட முடியாது.”

என்றவன் முகத்தில் அவ்வளவு வெறி.


இவன் ஒரு பக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் தோட்டத்தில் இனியன் தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“யாரு இந்த வீக்கெண்ட் கண்டுபிடிச்சது? வெறுப்பா இருக்கு! ரெண்டு நாள் அவளைப் பார்க்க முடியாமல் தவிக்கப் போறேன். நேத்துதான் தேவதை தரிசனம் கிடைத்தது. அதுக்குள்ள கடவுள் ரெண்டு நாள் இடைவெளி கொடுத்துட்டாரு. கடவுளே! இனிமே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கூட எல்லாருக்கும் வேலை வைப்பா!”

என்று கடவுளிடம் அவசரக் கட்டளை போட்டான்.

அதே சமயம், அங்கு இருக்கும் ஒரு நாற்காலியில் சோகமாக யோகிதா அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகே சென்று இனியன்,

“ஓய்! என்ன? காலேஜ் முடிஞ்ச பிறகு ரொம்ப போரடிக்குதா? உன் ஃப்ரெண்ட்ஸ் கூட அவுட்டிங் அந்த மாதிரி போகலாம் இல்ல?”

என்று சகஜமாகக் கேட்க, அவள் ஒரு விரக்திப் புன்னகையுடன்,

“எனக்கு அந்த அளவுக்கு நண்பர்கள் பட்டாளம் இல்ல மாமா. உனக்கே தெரியும், நம்ம கூட பழகுறவங்க யாரும் உண்மையா இருக்க மாட்டாங்க. ஏதாவது ஒரு காரணம் இருக்கும். எனக்கு என்னமோ பிரண்ட்ஸ் கூட்டம் அலர்ஜியா இருக்கு. வெளிய போவும் பிடிக்கல. தனியா இருந்தாலும் வெறுப்பா இருக்கு. ஏதோ மாதிரி இருக்கு. எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே புரியல.”

என்று சலிப்படைந்து கூற,

“அப்படியா? சரி, இதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு. நீ இதுக்கு ஒத்துக்குவியா?”

என்று அவளிடம் சந்தேகமாகக் கேட்க,

“சொல்லுங்க மாமா. அது எப்படி இருக்குன்னு நீங்க சொல்றது பொறுத்துதான் இருக்கு.”

என்று சொன்னவுடன், பெருமூச்சு விட்டு,

“நம்ம ஸ்கூல்ல ப்ளே ஸ்கூல் டீச்சர்ஸ் அவைலபிள் இருக்கு. நீ ஏன் ஜாயின் பண்ண கூடாது? குட்டி குட்டி பசங்க ஜாலியா இருக்கும். அவங்களோட சேர்ந்து புதுவிதமான ஆக்டிவிட்டி எல்லாம் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும். உன்னோட மைண்ட் செட்டுக்கு இப்போ அந்த மாதிரி பிளேஸ்தான் கரெக்ட்டா இருக்கும். டெய்லி நானே உன்னை கூட்டிட்டுப் போய், நானே உன்னை டிராப் பண்றேன். என்ன, ஓகேவா?”

என்று கேட்க,

அவளுக்கும் இது தேவைப்பட்டது என்பதால் மகிழ்ச்சியாக அவனைப் பார்த்து,

“எனக்கும் ஓகே தான். ஆனா ஒன்னு, நான் உங்க கூட வரமாட்டேன். நான் அங்கே சாதாரண டீச்சர் தான். உங்க ரிலேட்டிவ் அப்படின்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. மோஸ்ட்லி என்னை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. அதனால நான் யாருன்னு தெரியாது. நான் எப்பவும் போல இயல்பா தான் இருப்பேன். எனக்குத் தனிப்பட்ட சலுகை எதுவும் கிடைக்கக் கூடாது.”

என்று பல கட்டளைகளைப் போட, “உத்தரவு மகாராணி” என்பது போல் அவள் தலை வருடி விட்டு அங்கிருந்து சென்றான் இனியன்.

“ம்ம்… மாமா சொல்றது நல்லா தான் இருக்கு. அங்கே போனாவது ஒரு சேஞ்ச் கிடைக்குதான்னு பார்க்கலாம்.”

என்று அப்படியே இருக்கை மீது சாய்ந்து கண்கள் மூடி சற்று நேரம் இளைப்பாறினாள்.

எல்லாம் கதைகளில் வரும் மாமன் மகள் போல இல்லை யோகிதா. சற்று மாறுபட்டவள். அவள் உண்டு, அவள் வேலை உண்டு இருக்கிறாள். இதுவரை தன் ஆடம்பரத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தாய்க்காக மட்டுமே அமைதியாக இருந்து அவள் சொல்வதற்குக் கோவில்  மாடு போல் தலையாட்டுபவள். சிறிது நாட்களாகத் தாயின் நடத்தை சரியில்லாததால் ஒதுங்கி இருக்கிறாள். இப்பொழுது உலகம் என்றால் என்னவென்று பார்க்கிறாள். இப்படிப்பட்ட உலகத்தில் தனக்கென்று ஏதாவது உறவு கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கும் பிஞ்சு மனம்.

அதே சமயம் அவள் மனதை மொத்தமாகத் தன் வசப்படுத்தி, அன்பில் திளைத்து, அவளைத் திக்குமுக்காட வைக்க ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்.


பிரான்ஸ் நாட்டில்…

அந்தச் சொகுசு பங்களாவில் ஒருவன் ஆடைகள் அற்ற நிலையில், தன்னுடன் இருக்கும் பெண்ணைத் தன் ஆண்மையின் வேகத்தை அவளுக்குள் செலுத்தி உல்லாசம் அடைந்து கொண்டிருந்தான். அவன் வேகம் தாங்க முடியாமல் அவன் பெயரை உச்சரித்து இன்பலோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

“ஓ… பேபி! கம்ஆன்!”

என்ற வார்த்தை மேலும் மேலும் அவனை வெறியேற்ற, அந்தப் பெண்ணைச் சக்கையாகப் பிழிந்து எடுத்த பிறகுதான் அவளை விடுவித்து, அவளுக்கானப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான்.

ராம்குமார் என்கிற ஆர்.கே.

பெயரில் மட்டும்தான் இவன் ராமன். செய்யும் வேலைகள் அனைத்தும்  சரச லீலைகள் தான். படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தவன், அந்த நாட்டுக் கலாச்சாரம் பிடித்துப் போகவே அவர்களோடு ஒன்றி வாழ முடிவெடுத்து விட்டான். அதில் ஒன்றுதான் இதுவும். அவனுக்குத் தேவைப்படும்போது செல்லும் பார்ட்டிகளில், எந்தப் பெண் அவனிடம் வழிந்து வருகிறாளோ, அவளை அன்று இரவு பயன்படுத்தி அப்படியே அனுப்பி வைப்பதுதான் அவனது முக்கியமான வேலை.

அனைத்தும் முடிந்த பிறகு, பணியாள் அந்த அறையைச் சுத்தம் செய்து வைக்க, அவன் குளித்து முடித்து பால்கனி வழியாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்குன்னு கேட்க யாரு இருக்கா? சின்ன வயசுல அம்மா இறந்து போன பிறகு, அப்பா மொத்தமா தொழில் மேல கண்ணாகிட்டாரு. கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க பிள்ளைக்குப் பிரச்சனை வந்துடும் அப்படின்னு கல்யாணம் பண்ணாம, அவருக்குத் தேவையானபோது பொம்பளைங்க கூடச் சந்தோஷமா இருந்தாரு. சின்ன வயதிலிருந்து அம்மா, அப்பா பாசம் எனக்குக் கிடைத்ததில்லை.

ஸ்கூல் முடிச்ச பிறகு அப்பா மொத்தமா இங்க அனுப்பிட்டாரு. இங்க வந்த பிறகு மொத்தமா நான் மாறிப் போயிட்டேன். இதுதான் வாழ்க்கையா? ஆனா என்னோட ஃப்ரெண்ட்ஸ் இனியன், செழியன் வீட்ல அப்படி இல்லையே. அம்மா, அப்பா, மாமா, பாட்டி, அத்தை, அவங்களுக்கு ஒரு மகள் அப்படின்னு எவ்வளவு சந்தோஷமா அவங்க வாழறாங்க?

அந்த மாதிரி எதுக்கு எனக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு? இதுக்கு அப்புறம் நானா எனக்குன்னு ஒரு பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி அவ கூட வாழ்ந்தா, இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறவனை எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? அப்படியே வர்றவ நல்ல மனசோட வருவான்னு சுத்தமா எனக்கு நம்பிக்கையே இல்லை. வெறும் என்கிட்ட இருக்கிற பணம் மட்டும் தான் அவளுக்குக் குறிக்கோளா இருக்கும். ஆனா என்னால இந்தப் பழக்கத்தையும் விட முடியல. இந்த மொத்தப் பழக்கத்தையும் அடியோடு வெறுத்து ஒருத்திகிட்ட சரணடைய என் மனசு தவிக்குது. ஆனா, அந்த ஒருத்தி எங்க இருக்காளோ?”

என்று தன் மனக் கவலையை வானத்தைப் பார்த்துப் புலம்பி விட்டு, தன் அலுவலக வேலை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, இனியன் மொபைலில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“என்னடா மச்சான்! இப்பதான் எனக்குப் போன் பண்ணத் தோணிச்சா?”

என்று ராம் கோபித்துக் கொள்ள,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இது நம்ம அடிக்கடி பேசிகிட்டு தான் இருக்கோம். அது சரி, நீ நார்மலா இருக்கியா? டோலி கூட இருக்கியா?”

என்று முக்கியமான சந்தேகத்தைக் கேட்க, சிரித்துக் கொண்ட ராம் தன் இருப்பைச் சொல்ல,

“ஓகே குட். நீ இந்தியாவுக்கு வர! உன்னோட ஆட்டத்தை எல்லாம் அங்கே மூட்டைகட்டி வச்சிட்டு, ஒரு டீச்சரா எப்படி இருக்கணும் அப்படித்தான் நீ மண்டே அன்னைக்கு வரணும். பசங்களுக்கு பிரெஞ்சு மொழி கற்றுக் கொடுக்கிற டீச்சர் எப்படி இருக்கணுமோ, அந்த மாதிரி இருக்கணும். இங்க இருக்குற டீச்சர் கிட்ட எல்லாம் உன்னோட லீலையைக் காட்டக்கூடாது.”

என்று முக்கியமாகச் சொல்லி கண்டிக்க,

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் இன்னிக்கு நைட் ப்ளைட்  ஏறி இந்தியாவுக்கு வந்துடுவேன். மண்டே மீட் பண்ணலாம்.”

என்று நண்பர்கள் இருவரும் பொதுப்படையான விஷயங்களைப் பேசி முடித்து அழைப்பை வைத்தனர்.

நண்பனிடம் பேசி முடித்த இனியன்,

“ஆண்டவனே! ரோபோ மாதிரி இருக்கிற இவனுக்குச் சில முக்கிய உணர்ச்சிகளைக் கொடுத்து, ஒரு மனித வாழ்க்கைக்கு என்ன தேவையோ, அதை அவனுக்கு உணர்த்துங்கள். எதுவும் தெரியாம அவுத்து விட்ட மாடு மாதிரி தெரிஞ்சுகிட்டு இருக்கான். இவன் வாழ்க்கையில் ஒரு நல்ல பொண்ணு வரணும்.”

என்று வேண்டிக் கொண்டான். தன் வீட்டுப் பெண்ணே அவன் வாழ்க்கையை மாற்றும் பெண்ணாக வருவாள் என்று நினைக்காமல்.

You may also like

Leave a Comment

About Me

Featured