Home SRIJA NOVELS16) இச்சை ❣️

16) இச்சை ❣️

by sreejanovels
14 views

அத்தியாயம் 16

தோட்டத்து வீடு எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுது, அக்னியின் முகத்தில் இருந்த கோபத்தை விடக் குளிர்ச்சியாகவே இருந்தது. ரேகா நிலைகுலைந்து தரையில் கிடந்தாள். அவளது ஆட்கள் அக்னியின் பாதுகாப்புப் படையினரால் கட்டிப் போடப்பட்டிருந்தனர். சுந்தரமூர்த்தி ஐயா தன் காயங்களையும் பொருட்படுத்தாமல் அக்னியின் தோளைத் தொட்டார்.

“அக்னி, சட்டத்தைக் கையில எடுக்காதேப்பா. போலீஸூக்கு போன் பண்ணிட்டேன், அவங்க வந்து இவளைக் கூட்டிட்டுப் போகட்டும்,” என்றார் சுந்தரமூர்த்தி நிதானமாக.

அக்னி தனது தந்தையின் கையை மெல்ல விலக்கினான். அவனது கண்கள் இன்னும் அந்தத் தீயைப் போலவே தகித்துக் கொண்டிருந்தன.

“அப்பா… சட்டம் இவளை ஜெயிலுக்கு அனுப்பும். அங்கேயும் இவ ரகுநாத் கூடச் சேர்ந்து சதி பண்ணுவா. என் பொண்டாட்டியையும், குழந்தைகளையும் கொல்லப் பார்த்த இவளுக்குச் சட்டம் கொடுக்கிற தண்டனை போதாது!”

அவன் மித்ராவைப் பார்த்தான். அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சாவித்திரி அம்மாளின் மார்பில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். ஆரியனும் மித்ரனும் அக்னியின் கால்களைக் கட்டிக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் அந்தப் பயம் அக்னியை இன்னும் மிருகமாக்கியது.

அக்னி ரேகாவின் தலைமுடியைப் பற்றித் தூக்கினான். “உன்னை இப்போதைக்குக் கொல்ல மாட்டேன் ரேகா. ஏன்னா சாவு உனக்கு ஒரு நிமிஷத்துல கிடைச்சுடும். ஆனா நீ செஞ்ச தப்புக்கு ஒவ்வொரு நொடயும் நீ நரகத்தை அனுபவிக்கணும்!”

அவன் தனது ஆட்களுக்குச் சைகை காட்டினான். அவர்கள் ரேகாவைக் காரில் ஏற்றி, அக்னியின் ரகசியப் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே இருந்த ஒரு இருட்டு அறையில் அவளைப் பூட்டி வைத்தனர். “இவளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டும் போடுங்க. வெளிச்சமே இல்லாத இந்த அறையில இவ தன் பாவங்களை எண்ணித் துடிக்கட்டும்!” என்று கட்டளையிட்டான் அக்னி.

மீண்டும் மாளிகைக்குத் திரும்பியபோது, அக்னியின் முதுகில் இருந்த தீக்காயங்கள் அதிகமாக வலிக்கத் தொடங்கின. மித்ரா பதறிப்போய் மருந்து எடுத்து வந்தாள்.

“ஏன் சார் இப்படிப் பண்றீங்க? உங்களுக்கு இவ்வளவு பெரிய காயம்… ஆனா எதைப் பத்தியும் கவலைப்படாம அந்த ரேகா பின்னாடியே போறீங்களே?” என்று அழுதுகொண்டே மருந்து தடவினாள் மித்ரா.

அக்னி அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான். “மித்ரா… நான் காயப்பட்டா அது எனக்கு வலி இல்ல. ஆனா நீயோ, நம்ம பசங்களோ கண்ணீர் வடிச்சா அது என் இதயத்துல இருக்குற ரத்தம். இந்த அக்னிக்குத் தோற்கத் தெரியாது… ஆனா உன் கண்ணீருக்கு முன்னாடி நான் எப்பவுமே தோத்துடுவேன்,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அப்போது சுந்தரமூர்த்தி ஐயா அங்கே வந்தார். “அக்னி, ரேகாவைக் காணோம்னு நடராஜனோட வக்கீல் தேடுறான். போலீஸ் விசாரிச்சா என்ன பண்ணுவே?” என்று கவலையோடு கேட்டார்.

“கவலைப்படாதீங்கப்பா. ரேகா தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடிட்டதா நான் எல்லா ஆதாரங்களையும் ரெடி பண்ணிட்டேன். அவ இனிமே இந்த உலகத்துக்கே கிடையாது. அவ இருக்குற இடம் அக்னிக்கு மட்டும்தான் தெரியும்,” என்று அக்னி கறாராகச் சொன்னான்.

அன்றைய இரவு, அக்னி ஜன்னல் ஓரம் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பிசினஸில் அடுத்த கட்ட அதிரடி என்னவாக இருக்க வேண்டும் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். ரகுநாத்தின் பங்குகள் அனைத்தையும் அக்னி ஏற்கனவே தன் வசமாக்கியிருந்தான். இப்போது ரகுநாத்தின் கம்பெனி அக்னியின் காலடியில் இருந்தது.

மித்ரா மெதுவாகப் பின்னால் வந்து அக்னியை அணைத்துக்கொண்டாள். “அம்மா… அப்பா…” என்று குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது.

“சார்… இனிமேலாவது நமக்கு அமைதி கிடைக்குமா?” என்று மித்ரா கேட்டாள்.

அக்னி அவளது கையைப் பற்றிக்கொண்டான். “அமைதி நமக்குப் பக்கத்துல தான் இருக்கு மித்ரா. ஆனா அதைத் தேடி வர்ற எதிரிகளை நான் விடமாட்டேன். நாளைக்கு விடியும்போது நான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போறேன். மித்ரா இனி அக்னி குரூப்ஸ் ஆஃப் கம்பெனிஸோட 50 சதவீத பார்ட்னர்! இந்த உலகத்துக்கே தெரியட்டும், என் ராணி யாருன்னு!”

மித்ரா திகைத்துப்போய் அக்னியைப் பார்த்தாள். ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்த பெண், இன்று ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் சரிபாதி அதிகாரியாக மாறப்போகிறாள். அக்னியின் காதல் அவளை அந்த உயரத்திற்குக் கொண்டு சென்றது.

ஆனால், ஜெயில் ஆஸ்பத்திரியில் இருந்த ரகுநாத், தனது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தான். “அக்னி… ரேகாவை நீ என்ன பண்ணினேன்னு எனக்குத் தெரியும். ஆனா உனக்கு முதலில் பாதி விஷம் கலந்தது நான் மிரட்டுன ஆளுதான், ஆனால், எனக்கு ஆரம்பத்தில் இருந்து விசுவாசமா இருக்குற ஒரு ஆளு உன் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கான். நாங்க எந்த ஒரு விஷயம் சொல்லாம போனாலும் நிச்சயம் ஒருநாள் அவன் உங்களை கருவறுப்பான்.  அவன் யாருன்னு உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!” என்று வக்கிரமாகச் சிரித்தான் ரகுநாத்.

யார் அந்தப் புதிய எதிரி? அக்னியின் மாளிகையில் ஒளிந்திருக்கும் அந்தப் ‘பாம்பு’ யார்?


அதிகாலை நான்கு மணி. மாளிகையின் தோட்டம் பனிமூட்டத்தில் நனைந்திருக்க, சுப்பிரமணி கையில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலுடன் மித்ராவுக்குப் பிடித்த அந்த மல்லிகைப் பந்தலை நெருங்கினான். ஒவ்வொரு பூவின் மீதும் அந்த நஞ்சைத் தெளித்தவன்,

“என் ஸ்வேதா அம்மா பட்ட கஷ்டத்துக்கு நீ பதில் சொல்லணும்!” என்று வஞ்சமாய் முணுமுணுத்துவிட்டு மறைந்தான்.

ஸ்வேதா பிறந்ததிலிருந்து தன் சொந்த மகளாக தான் தோட்டக்கரை சுப்ரமணி பார்த்துக்கொண்டார். ஸ்வேதாவுக்கு 10 வயது இருக்கும் பொழுது, நாகராஜன் சுப்பிரமணிய என் நண்பன் சுந்தரம் மூர்த்தி வீட்டில் நீ தோட்டக்காரனாக செல்ல வேண்டும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு சொல்ல வேண்டும் அப்போதும் பிசினஸ்க்கு பயன்படுவார்கள் என்று நயவஞ்சகமாக அனுப்பி வைத்தார்.

ஆனால் பல வருடங்கள் கழித்து ஸ்வேதாவே அந்த வீட்டுக்கு மருமகளாகவே வர சுப்பிரமணிக்கு சந்தோசம் ஆனால் ஸ்வேதா கணவனோட சண்டை விடுவது இறுதி இரண்டு போனதெல்லாம் அவருக்கு வருத்தம் அவள் இடத்தை மித்ரா நிரப்பி இருப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதுதான் இந்த காரியம் செய்ய வைத்தது அவரை.

காலை ஆறு மணி. மித்ரா இன்னும் எழுந்திருக்கவில்லை. ஆனால், ஆரியனும் மித்ரனும் துள்ளிக்குதித்துத் தோட்டத்திற்கு ஓடினர். “அம்மாவுக்கு நாமளே பூப் பறிச்சுப் போய் சர்ப்ரைஸ் கொடுப்போம்!” என்று போட்டி போட்டுக்கொண்டு மல்லிகைப் பூக்களைப் பறித்தனர். ஆனால், அந்தப் பூக்களைக் கையில் வைத்த சில நிமிடங்களிலேயே குழந்தைகள் இருவரும் மூச்சுத்திணறித் தரையில் சரிந்தனர்.

“அக்னி! அக்னி! பசங்களுக்கு என்னாச்சுன்னு பாருங்க!” என்று மித்ரா அலறினாள்.

அக்னி ஓடி வந்து குழந்தைகளைத் தூக்கினான். பூக்களில் இருந்த அந்த ரசாயன நெடி அவனுக்கு ஏதோ சதியை உணர்த்தியது. உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, “அதிர்ஷ்டவசமாகப் பூக்கள்ல இருந்த விஷம் அதிகமா பாதிக்கல” என்று டாக்டர் சொன்ன பிறகுதான் அனைவருக்கும் உயிர் வந்தது.

மாளிகைக்குத் திரும்பிய அக்னியின் முகம் ஒரு அசுரனைப் போல மாறியது. அவன் நேராகத் தோட்டத்திற்குச் சென்று, அங்கே வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான். “சொல்லுடா! எதுக்கு இந்தப் பூக்கள்ல விஷம் வச்சே? என் பசங்க சாகணும்னு நினைச்சியா?”

சுப்பிரமணி பயப்படாமல் அக்னியின் கண்களைப் பார்த்துச் சொன்னான், “ஸ்வேதா அம்மா இருந்தப்போ அவங்க மனசுல எவ்வளவு பாரம் இருந்ததுன்னு ஒரு நாளும் நீங்க புரிஞ்சுக்கல தம்பி. அவங்க உயிரா காதலிச்ச உங்களை, வேறொருத்தி கூடப் பார்க்க எனக்குப் பிடிக்கல. அதான் மித்ராவைக் கொல்ல நினைச்சேன். ஆனா ஸ்வேதா அம்மாவோட பிள்ளைங்களுக்கே இது வினையா முடிஞ்சிடுச்சு!”

அக்னி ஆவேசமாகச் சிரித்தான். “சுப்பிரமணி… நீ அவளைத் தேவதைன்னு நினைச்சுட்டு இருக்கே. ஆனா அவ பேராசை பிடிச்சவ! எனக்கு விருப்பம் இல்லாத தெரிஞ்சு, எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தப்போ நடராஜன் கொடுத்த பிளான்ல என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவ அவ! அவளுக்குப் பிடிச்சது கிடைக்கணும்னா எதையும் செய்வா. எங்க அப்பாவும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டாலும் வேற வழி இல்லாம பண்ணிக்கிட்டு. ஸ்வேதாவுக்கு அதெல்லாம் ஒரு கணக்கே இல்ல. அவளோட அந்த வெறிதான் அவளைக் கொன்னுச்சு!”

அக்னி சொல்லச் சொல்ல சுப்பிரமணி திகைத்துப் போனார். அக்னி தொடர்ந்தான், “ஸ்வேதா வெளி உலகத்துக்கு நல்லவளா இருந்திருக்கலாம். ஆனா வீட்டுக்குள்ள என் அப்பா அம்மாவை மதிக்காதவ. என் டைரியைப் படிச்சுட்டு, நான் ஏற்கனவே ஒரு பொண்ணு காதலிச்சு இருக்கிறேன் என்று தெரிந்த பிறகு தான், குற்ற உணர்ச்சியிலயும் ஆத்திரத்துலயும் வண்டி ஓட்டிட்டுப் போய் செத்துப்போனா.

எப்போ ஸ்வேதா கழுத்தில் நான் தாலி கட்டினேனோ அப்பவே அவளுக்கு தான் நான் உண்மையாய் இருந்தேன். கடந்த காலத்துல எல்லாரும் காதலிப்பது சகஜம்தான்.

என்னுடையது ஒருதலை காதல் அதனால் நான் ஸ்வேதாவுக்கு உண்மையா இருக்க ஆசைப்பட்டேன். அப்புறம் நல்லா தான் இருந்தா அதான் அவளுக்குள் இருக்கிற அந்த மிருகம் அவள வாழ விடல.

எல்லாமே தப்பு தப்பா நினைச்சா எல்லாமே தப்பாவே போச்சு மிஸ் அண்ட ஸ்டாண்டர்ட் ஒரு ஆம்பளையா நான் சொல்றது இது எப்படின்னு தெரியல கூட கட்டாயத்தில் தான் எங்களுக்கு நடந்தது எல்லாமே இல்ல.

நான் செத்துப் போயிடுவேன் உங்க அப்பா இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சரி ஆயிட்டு வராரு, அப்படின்னு எனக்கு கொஞ்சம் கூட அவகாசம் தரவில்லை.

எல்லாமே முடிஞ்சு இப்பதான் எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை வாழ்ந்து விட்டு இருக்கேன் எல்லாரும் கேட்கலாம் இந்த பொண்ணு எப்படி ஈஸியா என் வாழ்க்கைல வந்தா அப்படின்னு.

இதோ… இப்போ நீ விஷம் வச்சியே, இந்த மித்ரா யாரு தெரியுமா? பல வருஷமா நான் தேடிக்கிட்டு இருந்த என் உண்மையான காதலி!”

அக்னியின் இந்த வெளிப்பாடு அங்கிருந்த சுந்தரமூர்த்தி ஐயாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அக்னி சுப்பிரமணியை வீட்டை விட்டு வெளியேற்றினான்.

அன்று இரவு… அக்னி தனது அறையில் அந்தப் பழைய டைரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் இருந்த அந்த நாட்டியமாடும் பெண்ணின் புகைப்படம் அவனது கடந்த காலக் காதலைச் சொல்லிக் கொண்டிருந்தது. மித்ரா மெதுவாக உள்ளே வந்தாள்.

அக்னி அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனது கண்களில் ஒரு நீண்ட காலத் தவிப்பு இருந்தது. “மித்ரா… உன்னை முதன்முதலில் காலேஜ்ல பார்த்த அந்த நாள் இன்னும் என் நினைவிலிருக்கு. உன்னைப் பார்த்த நிமிஷமே என் மனசை உன்கிட்ட விட்டுட்டேன். ஆனா விதி என்னை ஸ்வேதா கூடக் கட்டிப் போட்டுடுச்சு. உன்னை இவ்வளவு சீக்கிரம் என் வாழ்க்கையில பார்ப்பேன்னு நான் நினைக்கல,” என்று உருக்கமாகச் சொன்னான்.

மித்ரா திகைத்துப் போய் அக்னியைப் பார்த்தாள். அக்னி தன்னை இவ்வளவு காலமாகத் தன் மனதில் வைத்திருக்கிறான் என்பது அவளுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், அமைதியாக அக்னியின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

ஆனால், அதே நேரம் சிறையில் இருந்த ரகுநாத்தின் ஆட்கள், அக்னியின் இந்த மகிழ்ச்சியைச் சிதைக்க ஒரு புதிய திட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்தனர். அக்னியின் கடந்த காலக் காதலும், தற்போதைய மகிழ்ச்சியும் மீண்டும் ஒரு பெரும் சோதனைக்குள்ளாகப் போகிறது.


You may also like

Leave a Comment

About Me

Featured