Home FAMILY NOVEL11) வலி 💔

11) வலி 💔

by sreejanovels
47 views

அத்தியாயம் 11

“தேங்க்யூ தேங்க்யூ சோ மச் ஷிவானி. என்னோட பிரண்டு உன்னை சஜஸ்ட் பண்ணதால எனக்கு எவ்வளவு யூஸ்ஃபுல். சீக்கிரமாக வேலை கிடைச்சது எப்படி??”

என்று லாவண்யா தனது தோழியின் உந்துதலின்படி, யாராவது கேட்டால் அவள் மும்பை ட்ரெயின் ஏறினாள் என்று அனைவர் கண்காணிப்புக்காக மும்பை ட்ரெயின் ஏறி, யாருக்கும் தெரியாமல் மறு ஸ்டேஷனில் ஐதராபாத் வந்து சேர, அங்கே அவளின் தோழி சிவானி என்பவரோடு அவள் வேலை செய்யும் கம்பெனிக்கு இன்டர்வியூ சென்று அதுவும் வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியில் சிவானியிடம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது,

“சரி சரி அதெல்லாம் அப்படித்தான். எம்டி கொஞ்சம் கிளுகிளுப்பான ஆளு, பொண்ணுங்க சிரிச்சு பேசினாலே சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரி ஆனா கொஞ்சம் கரார் பார்ட்டி வேலை விஷயத்துல. பார்த்து இருந்துக்கோ. நீங்க ஆறு மாசத்துக்கு அக்ரிமெண்ட் போட்டு இருக்கீங்க, ஆறு மாசம் தாராளமா வேலை பார்க்கலாம். அதன் பிறகு கம்பெனி விட்டு போகிறதும் தொடர்ந்து கண்டின்யூ பண்றதும் உங்களோட விருப்பம். சரி எனக்கு ப்ராஜெக்ட் மீட்டிங்கு வேலை வந்துடுச்சு நான் போறேன். உங்களுக்கு என் பிரண்டு கிட்ட சொல்லி வச்சிருக்கேன் அவன் தான் டீம் லீடர் உங்கள பாத்துகுவான் நான் கிளம்புறேன்”

என சிவானி சென்று விட, லாவண்யா மகிழ்ச்சியாக அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டு ஷிவானி குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு சென்றாள். சிவானி உடன் இருப்பதாக சொன்னதால் லாவண்யா அமைதியாக சம்மதம் சொல்லிவிட, தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நிம்மதியாக குப்புற படுத்து தன் மொபைலில் இருக்கும் தன் திருமண புகைப்படத்தை பார்த்தாள். அதில் மகிழ்ச்சியாக ஆதித்யா அவளை வளைத்து பிடித்து கண்ணோடு கண் பார்க்கும் புகைப்படம்.

“எல்லாமே சரியா போய்க்கொண்டிருக்கும் போது மறுபடியும் எல்லாம் முதலிருந்து ஆரம்பம் ஆகிற மாதிரி இருக்கு. சைலன்ட்டா வேலையை முடிப்பதற்கு பதிலா ரொம்பவே பண்ணிட்டேன். போதாக்குறைக்கு என் பொண்ணு அங்க இருக்கா. அகல் தான் சித்தி என்ன பண்றான்னு தெரியல. என் குழந்தைக்கு சித்தி கொடுமை நடக்குதா இல்ல சித்தி படத்துல வர பத்மினி மாதிரி பாசம் கிடைக்குதான்னு யாரு கண்டா? நான் போன பிறகு எல்லாம் தலைகீழா மாறிடுச்சு”

என்று சொல்லி டிவியில் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.


“அத்தை எப்ப பாத்தாலும் ராஜா ராணி கதையே வேண்டாம் வேற கதை சொல்லு” என்று அனிருத் வற்புறுத்தி கேட்டதால், கூகுளில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் கதை தெரிகிறதா என்று பார்த்து ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அகல்யா குழந்தைகளுக்கு சொல்ல ஆரம்பிக்க, இரண்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் அனன்யா தட்டி தட்டி தவழ்ந்து அன்னை மடி தேடி வர,

“அனன்யா செல்லம் அம்மாவை தேடி வந்துட்டீங்களா? பாட்டி கூட இருக்க முடியல போல, அம்மாவை விட்டு என் புஜ்ஜி” என்று மகளை செல்லம் கொஞ்சி அவளை மடியில் வைத்துக் கொண்டு இரு பக்கமும் குழந்தைகளை வைத்து கதை பேசிக் கொண்டிருக்கும் அழகை, ஆபீஸ் முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்த ஆதி வாசலில் அந்த காட்சியை பார்த்து ஆபீஸ் டென்ஷன் அனைத்தும் பறந்து விட, சிரித்த முகமாக வீட்டிற்குள் வந்து,

“செல்ல குட்டிஸ்” என்று சொன்னவுடன் இரண்டு வாணாடுகளும் ஓடி சென்று அவன் காலை பிடித்துக் கொள்ள, பின்னாடி வந்த கணேஷ், “அவரை மட்டும் தான் கொஞ்சுவீங்களா என்ன இல்லையா?” என்று கோபித்தவுடன் அவனோடும் ஒன்றிக்கொள்ள குழந்தைகளின் சிரிப்பில் வீடு கலகலவென்று ஆகியது. அன்னலட்சுமிக்கு மனமுழுவதும் நிம்மதி. இது போன்ற வீடு தானே அனைவரும் எதிர்பார்க்கிறது. மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கள்ளம் கபடம் இல்லாத அன்போடு வாழும் வாழ்க்கை சொர்க்கத்திற்கு சமமானது.

“சரி சரி ஆபீஸ்ல இருந்து வந்த உடனே ஃப்ரெஷ் ஆகிட்டு தான் பசங்களை தொடணும். அதுதான் ஹைஜீனிக். போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க” என்று கண்டிப்பான குரலில் அகல்யா சொன்னவுடன் இருவரும் அவரவர் அறைகளை நோக்கி சென்றனர்.

“என்ன அண்ணி ஹாஸ்டல் வார்டன் மாதிரி பேசுறீங்க? இந்த மாதிரி மிலிட்டரி சட்டங்கள் இருந்தால் தான் எல்லாரும் கரெக்ட்டா இருப்பாங்க” என்று அஸ்வினி சொல்லி சிரிக்க அகல்யாவும் அதை ஆமோதித்தாள். பிறகு மாலை நேர சிற்றுண்டியாக அனைவருக்கும் மைசூர் போண்டாவை செய்து வேலைக்கார பெண்மணி அங்கு வைத்துவிட, அதே சமயம் வேறு உடை மாற்றிக் கொண்டு புத்துணர்ச்சியாக மொத்த குடும்பமாக அமர்ந்து சிற்றுண்டி சுவைத்துக் கொண்டிருந்தனர். அனன்யா சிறு குழந்தை என்பதால் அவளுக்கு மட்டும் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி ஆத்விக் குட்டிக்கு ஒரு வயசு மேல் ஆயிடுச்சு ஆனா ஏன் இன்னும் நீங்க பிரஸ்ட் பீடிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்க??” என்று கேட்ட அஸ்வினியிடம்,

“இப்ப இருக்கிற சாப்பாடு பழக்கம் சூழ்நிலை காரணம் அனைத்தும் எல்லாமே கலப்படமா இருக்குது. தாய்ப்பால் மட்டும் தான் நல்லது. அதுவும் நல்லது சாப்பிட்டால் மட்டும்தான். அதனால் தான் இப்ப வர கொஞ்சம் கொஞ்சம் பத்தியத்தை எடுத்துக்கிட்டு இருக்கேன். குழந்தைகளுக்கு ரெண்டு மூணு வயசு வரைக்கும் பால் கொடுத்தா அவங்க ஆரோக்கியமா இருப்பாங்க. அதனால தான் நீ இந்த பாப்பா பிறந்த பிறகு சீக்கிரமா பால் கொடுக்கிறது நிறுத்த வேண்டாம். நல்லா ரெண்டு மூணு வயசு வரைக்கும் குடு”

கர்ப்ப காலங்கள் பற்றிய மகப்பேறு பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, “அச்சச்சோ சி செக்சன் ரொம்ப கஷ்டமாச்சே எப்படி நீங்க தங்கிட்டிங்களோ? என்னால சுத்தமா முடியல. ஒரு மாசம் ரொம்பவே கஷ்டப்பட்டு அதுக்கு அப்புறம் அதுவா பழகி போச்சு” என்று அவள் பேறுகாலத்தில் பட்ட கஷ்டங்களை சொல்ல,

“அதை ஏன் கேக்குற? அது ரொம்ப மோசமானது. நல்ல வலி வந்தது, கடைசில வாட்டர் லெவல் குறைவா இருக்குன்னு சிசேரியனுக்கு முடிவு பண்ணிட்டாங்க. டேவிட் ரொம்பவே பயந்து போயிட்டாரு. ஒரு மணி நேரத்தில் நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சு குழந்தையை வாங்கின பிறகு தான் டேவிட்க்கு நிம்மதியாக இருந்தது. என்னை ஒரு வேலை செய்யவிடவில்லை. நல்லா ரெஸ்ட் எடுத்தேன். எனக்காக ரெண்டு மாசம் மெடிக்கல் லீவ் கூட எடுத்தாரு. அதுக்கப்புறம் சுப்பு அம்மா என்னை பாத்துக்கிட்டாங்க” என்று சொல்லும் போது ஆதித்யாவுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் எப்படி மனவேதனைப்பட்டு சொல்கிறாள் என்று. ஆனால் அவளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்திருக்கிறான், கடவுள் அவள் வாழ்க்கையில் தான் விளையாடிவிட்டார் என்று கவலை கொண்டான். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பாக தன்னிடம் தன்னுடைய தொலைந்த பொக்கிஷம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளை கண் இமைப்போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

“நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க அண்ணி. கர்ப்ப காலத்துல பொண்ணுங்க அதிகமா தேடுறது அவங்க ஹஸ்பேண்ட் தான். அவர் மட்டும் நல்லபடியா துணையா அமைஞ்சிட்டார் அப்படின்னா எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். எனக்கு தான் அதை கொடுத்து வைக்க முடியல” என்று கவலையாக சொல்லி உணவை உண்டு கொண்டிருந்த அஸ்வினியை சட்டு என்று பார்த்த கணேஷ்,

“அச்சு தப்பு என் மேல இருக்கு புரிஞ்சுக்கிறேன். ஆனா உனக்கு யாரும் இல்லாத மாதிரியே பேசாத. தயவு செஞ்சு நீ இப்ப பிரக்னண்டா இருக்க கஷ்டப்படக்கூடாது” என்று அவன் மெதுவாக எடுத்து சொல்ல,

“இப்பதான் தெரியுதா நான் பிரக்னண்டா இருக்கிறது? அஞ்சு மாசம் கர்ப்பிணின்னு தெரிஞ்சும் வீட்டை விட்டு அடிச்சு விரட்டி விட்டவர் தானே நீங்க? தப்பு என்மேல் இருக்கலாம் ஆனா உங்க குழந்தையை சுமக்கிற ஒரு காரணத்துக்காவது என்னை திட்டி வீட்டை விட்டு அனுப்பி இருக்கலாம். எல்லாரும் பாக்குற மாதிரி நடு ரோட்ல அந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது. அது மட்டும் இல்லாம நாலு மாசம் நீங்க என்னை பாக்க கூட வரல. நான் என்ன பண்றேன், என்ன சாப்பிட்டேன், செக்கப் போனேனா இல்லையா அப்படின்னு எவ்வளவோ இருந்தது, ஆனா நீங்க இத பத்தி எதுவுமே விசாரிக்கல. டைரக்ட்டா சீமந்தத்துக்கு வந்தீங்க. அப்புறம் குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் வந்ததோடு சரி. அஞ்சு மாசம் கழிச்சு நானே அங்க வர வேண்டியது ஆயிடுச்சு. இதெல்லாம் இன்னும் என் மனசுக்குள்ள இருக்கு. குத்தி காட்டணும்னு சொல்லல, கஷ்டங்கள் உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்றது? சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க நம்ம இன்னைக்கு செக்கப் போக வேண்டாமா??”

என சொல்லும்போது தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று யோசனையே அவனுக்கு வந்தது. உடனடியாக தயாராகி இருவரும் மருத்துவமனை நோக்கி வந்தனர்.


விகாஸ் மருத்துவமனை…

இருவரும் மருத்துவமனை வந்தடைய, அவர்களின் நம்பர் வந்தவுடன் மருத்துவரிடம் தன் உடல் உபாதைகள் அனைத்தையும் சொல்லி முடித்த அஸ்வினி, “டாக்டர் பிரக்னன்சி கன்பார்ம் பண்ணனும். நான் எதையும் கண்டுக்கல ஹோம் டெஸ்ட்ல பாசிட்டிவ் வந்து இருக்கு. ஆனா ஸ்கேனிங் எதுவும் பாக்கல இதோட 55 டேஸ் ஆகுது” என்று சொன்னவுடன் மருத்துவர் அவளுடைய எடை, ரத்த அழுத்தம் அனைத்தையும் பார்த்து முடித்தவர்,

“அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூம்ல டாக்டர் இருக்காங்களான்னு தெரியல. ஒன்னு பண்ணுங்க நீங்க நாளைக்கு காலைல வந்துடுங்க. ஸ்கேன் பண்ணி பாப்பா ஹார்ட் பீட் எப்படி இருக்குன்னு பார்த்துவிடலாம். அதுக்கப்புறம் நான் அதுக்கு ஏத்த மாதிரி மருந்து எல்லாம் எழுதி தரேன். ஆனா பாசிட்டிவ் ஹோம் டெஸ்ட்ல வந்தாலே அது பிரக்னன்ஸிக்கு கன்ஃபார்ம் தான். ஆனா இப்ப குழந்தையோட ஹெல்த் எப்படி இருக்குன்னு பாக்குறது தான் நமக்கு முக்கியம். அதனால பயப்படாம போயிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி வைக்க,

அப்போது ஒரு செவிலியர், “மேடம் ஸ்கேன் ரூம் ப்ரீயா தான் இருக்கு. ஏன் நம்ம இப்பவே எடுக்கக்கூடாது? இன்னிக்கு டெலிவரி கேஸ் யாரும் வரல, ஆல்ரெடி மெட்டாரிட்டி வார்டில் தான் இருக்காங்க. இவங்களுக்கு இப்பவே ஸ்கேன் எடுத்துடலாமே” என்று சொன்னவுடன் மருத்துவர் அதை ஆமோதித்து அல்ட்ரா சவுண்ட் அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்து, “கங்கிராஜுலேஷன் பாசிட்டிவ். பேபி நல்லா இருக்கு, ஹார்ட் பீட் கூட நல்லா இருக்கு” என்று சொல்லி மருந்துகளை எழுதிக் கொடுக்க இருவரும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, வரும் வழியில் குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் ஸ்வீட்டும் வாங்கி வர அனைவரும் அவர்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தனர்.

கண்ணம்மா பாட்டியிடம் மட்டும் விஷயத்தை சொல்லி சமையல் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட அவரும் அமைதியாகவே இருந்து விட்டார். அனைவரும் என்ன ரிசல்ட் வருமோ என்று பதற்றத்தில் இருந்ததால் அமைதியாகவே இருந்தனர்.

வீட்டிற்குள் மகிழ்ச்சியாக வந்த கணேஷ், “ஹலோ காய்ஸ் உங்க எல்லாருக்கும் அரை மணி நேரம் டைம். சீக்கிரம் எல்லாரும் ரெடி ஆயிட்டு வாங்க. இன்னைக்கு நம்ம டின்னர் வெளியே போய் சாப்பிட போறோம். ரொம்ப ரொம்ப சந்தோஷமான செய்தி நான் மறுபடியும் அப்பா ஆகிட்டேன். குழந்தையும் நல்லா இருக்கு, அஸ்வினியும் நல்லா இருக்கா. மருந்தெல்லாம் எழுதி கொடுத்துட்டாங்க. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க, நான் வானத்தில் பறக்காத குறை. சீக்கிரம் போயிட்டு வாங்க எல்லாரும்” என்று சொன்னவுடன் அனைவரும் அஸ்வினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அறைக்கு சென்று வேறு உடை மாற்றி வந்தனர்.

அகல்யா முதலில் குழந்தைகளுக்கு உடையை மாற்றி வைத்து அன்னலட்சுமி இடம் கொடுத்துவிட்டு அறைக்குள் வர, சட்டை கூட அணியாமல் வெறும் பாக்ஸர் மட்டும் அணிந்து கொண்டு அவள் முன்னாள் நடந்து கொண்டிருந்தான் ஆதித்யா.

“என்ன இது ரெடியாகாமல் அப்படியே நின்னுகிட்டு இருக்கீங்க? டைம் ஆகுது சீக்கிரம் நானும் ரெடி ஆகணும்” என்று செல்லப் போனவளை கைபிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவன் நெஞ்சில் முகம் முட்டியதால் மூக்கை தேய்த்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க,

“எனக்கும் இதே மாதிரி சந்தோஷமா எல்லார்கிட்டயும் அனௌன்ஸ்மென்ட் பண்ணி சொல்லணும்னு ஆசையா இருக்கு. அது மட்டும் இல்லாம என்னோட லக்கி நம்பர் மூணு, அதான் நம்மளும் கடின உழைப்பு போட்டு ஒரு மெம்பரை சேர்க்கலாம் இல்ல” என்று அவள் இதழ் நோக்கி வருபவனை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

Featured