Home FAMILY NOVEL10) வலி 💔

10) வலி 💔

by sreejanovels
6 views

அத்தியாயம் 10

மணி இரண்டு என உணர்த்த அலாரம் அடித்தவுடன் தூக்கத்திலிருந்து இருவரும் கண் விழித்தனர். நல்ல தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாமல் அவளை இன்னும் நன்றாக கட்டி அணைக்க, அவனிடம் இருந்து முட்டி மோதி வெளி வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது…

“ம்ம்.. நல்ல தூக்கம் டா ரொம்ப நாள் கழிச்சு நல்ல தூக்கம் அகல் விளக்கு நீ வந்த பிறகு தான் இந்த மாதிரி எல்லாம் நடக்குது. இனி டெய்லி நீ லஞ்ச் எடுத்துட்டு வா. ஆனா நான் வெஜ் அடிக்கடி வேண்டாம் இல்லனா உன்ன விட நான் பெருத்துப் போய் விடுவேன்” என்று அவள் இடையை கிள்ளிவிட, துள்ளி எழுந்தவள், “போதும் போதும் நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் எனக்காக எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்க” என்று அப்படியே கிளம்பியவளை துண்டு கட்டாக தூக்கி அங்கிருக்கும் குளியல் அறைக்குள் விட, அங்கு இருக்கும் கண்ணாடியில் தன்னை பார்த்தாள். கலைந்த கேசம், கசங்கிய புடவை என்று வேறு விதமாக அவளை சித்தரிக்க, தன்னை சரி படுத்திக் கொண்டு அவனிடம் விடைபெற்று கணேஷிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து சேர…

“வாங்க அண்ணி பசங்க உங்களை தான் கேட்டுக்கிட்டு இருந்தாங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு நீங்க தான் சாப்பிடணும். அனன்யா தான் உங்கள ரொம்பவே தேடினாள். இந்தாங்க உங்க பொண்ணு” என்று அஸ்வினி அவள் கையில் குழந்தையை கொடுத்து அங்கிருந்து நகர, அவள் கரங்களை பிடித்த அகல்யா, “என்னோட அச்சு இப்படியெல்லாம் என்கிட்ட பேச மாட்டாளே அவளோட பேச்சு எல்லாம் வேற மாதிரி இருக்குமே ஆளே மாறிட்ட” என்று கேட்க, ஒரு விரக்தி புன்னகையில்…

“நான் நானா இருந்தா நிறைய பேருக்கு பிடிக்கல. சில பேரு வாழ்க்கை நல்லா இல்லாம போயிடுச்சு. அதான் மொத்தமா மாறிட்டேன். எனக்கு ஒரு குழந்தை இருக்கு வாழனும் இல்ல” என்று சொல்லிவிட்டு செல்ல அகல்யாவுக்கு பாவமாக இருந்தது. தான் அவசரப்பட்டு இவளைப் பற்றி பேசாமல் இருந்திருக்க வேண்டும். அனாவசியமாக தன்னுடைய இழப்பீடு சரிசெய்ய அனைவரையும் பற்றி பேசி சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியானதை கண் முன்னால் பார்ப்பதற்கு கவலையாக இருந்தது. அந்த பாவம் தான் என்னவோ தன்னையும் தன் கணவனோடு நீண்ட நாட்கள் வாழ விடவில்லை போல இந்த விதி..

“அவளுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்லவிதமான பேச்சுவார்த்தை இல்லை. ஏதோ கடமைக்காக வாழ்கிறார்கள். இப்ப மறுபடி மாசமா இருக்கா அதிலிருந்து ஒரு மாதிரியா தான் இருக்கா. நாங்க உனக்கு பண்ணது தான் விதி கர்மா” என்று அன்னலட்சுமி கவலையாக சொல்ல…

“யார் வாழ்க்கைல என்ன நடக்கணும்னு நம்ம முடிவு பண்ண முடியாது இல்லையா? சரி விடுங்கம்மா எனக்கு பசிக்குது. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க பசங்கள பாத்துக்கோங்க நான் சாப்பிட்டு வரேன்” என்று மாமியாரை அனுப்பி விட்டு அவள் கரங்களால் செய்த உணவை தனக்கு தானே பரிமாற, தான் வருகை உணர்ந்து கொண்ட மாமியார் அனைத்தையும் சூடு படுத்தி வைத்திருப்பதை பார்த்து…

‘இவங்களுக்கு மட்டும் எல்லாம் ஞாபகம் இருக்கும். நான் ஆறிப்போனத சாப்பிட மாட்டேன். நான் லேட்டா வந்தா சூடு படுத்தி கொடுப்பாங்க அதே மாதிரி தான் பண்றாங்க. ஆனா பழைய மாதிரி உரிமையா பழக பயமா இருக்கு. அதே சமயம் அஸ்வினியை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு. மாசமா இருக்கு இந்த டைம்ல கஷ்டப்படக்கூடாது. முதல்ல அண்ணா கிட்ட இத பத்தி பேசணும். ஆதித்யா தான் வித்தியாசமா தெரியுறாரு. அவர் லாவண்யாவ ரொம்ப விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாரே, இரண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்நேரம் நாலஞ்சு குழந்தைகள் இருக்கும் என்று நினைத்தேன். அவர் பேசுவதும் சரி என்கிட்ட நெருக்கம் காட்டறதும் சரி முதல் முறை ஒரு ஆண் மனைவி கிட்ட காட்டும் தயக்கத்தை காட்டுகிறார். ஒரே சந்தேகமா இருக்கே. இதுல அவ ஓடிப்போன தான் சொல்றாங்க முழு விவரம் தெரியல. இந்த லட்சணத்தில் ஒரு குழந்தை வேற பெத்து இருக்காங்க ஒரு குழப்பமா இருக்கு’ என்று நினைத்துக் கொண்டு தனக்கான உணவை சாப்பிட்டு முடித்து தன் தட்டை கழுவி விட்டு அறைக்குள் வர…

உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அருகே உள்ள நாற்காலியில் கதை புத்தகத்தை படித்தவாறு இருந்தார் அன்னலட்சுமி. மருமகள் வந்தவுடன் சிரித்துக்கொண்டே, “மூணு பசங்களும் உன்ன தான் தேடிக்கிட்டு இருந்தாங்க. அனிருத் குட்டிய நீ தான் கொஞ்சம் பாத்துக்கணும் தப்பா எடுத்துக்காதம்மா. ஆக்சுவலி மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா தான் இருக்காங்க. ஆதித்யா கல்யாணம் பண்ணி குடும்ப குட்டியா இருந்தா தான் நான் இந்த வீட்டுக்கு வருவேன் அப்ப சொன்னாரு. அதான் உங்க கல்யாணம் முடிஞ்ச உடனே இங்கேயே இருக்கிற மாதிரி ஆயிடுச்சு. இருந்தாலும் வீட்டு மருமக உன்னோடு சௌகரியம் தெரியனும் இல்லையா” என்று அன்னலட்சுமி தன் வயதில் கேட்டு முதிர்ச்சியோடு சரியாக கேட்க, எத்தனை மாமியாருக்கு இது போல் மனம் வரும்?

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இதுல என்ன இருக்கு என்னோட அண்ணாவும் அண்ணியும் நம்ம வீட்டுல சேர்ந்து இருக்க போறாங்க. இதுல என்ன இருக்கு? இந்த கூட்டுக்குடும்பம் முறை குறைஞ்சுகிட்டே இருக்கு. நல்ல குடும்பங்கள் கூட பிரிஞ்சு போகுது. வருங்காலத்த பிரச்சினை வரக்கூடாது என்கிற ஒரு காரணத்துக்காக நம்ம வீட்ல என்ன வரப்போகுது. எல்லாரும் நல்ல வேலைல இருக்காங்க. நீங்க உங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க பசங்கள பார்த்துகிறேன்” என்று பெரியவரை வழி அனுப்பி குழந்தைகளுக்கு நடுவில் வந்து படுத்துக்கொள்ள…

அவள் குரல் கேட்டு முதலில் முழித்த அனன்யா அவளை பார்த்தவுடன் அவள் சேலை முந்தானை பற்றி, “மா..மம்மூ..” என்று வாயை பிதுக்கி காட்டும் போது, நான் அவளுக்கு தாய்ப்பால் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்து கொண்டவள், குழந்தைக்கு அமுதத்தை ஊட்டி முடித்து சிறிது நேரம் குழந்தையோடு விளையாடி, அவள் உறங்க தொட்டியில் படுக்க வைத்து திரும்பியவுடன் அனிருத் ஆத்விக் இருவரும் எழுந்து கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்…

உறங்கும் அனன்யாவை அன்னலட்சுமி அறையில் படுக்க வைத்துவிட்டு இரண்டு பிள்ளைகளையும் ஹாலிற்கு அழைத்துச் சென்றாள். சில பல விளையாட்டு சாமான்கள், அறிவுபூர்வமாக குழந்தைகள் உதவக்கூடியது, அவை அனைத்தையும் கொடுத்து விட இரண்டும் சமமாக அமைதியாகி பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தனர்…

“பாப்பா எப்படி இருக்க? என்ன மறந்துட்டியா??” என்று அந்த வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மா பாட்டி கேட்க, அவரைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து ஓடி சென்று அவரை கட்டி அணைத்துக் கொண்டவள், “உங்களை மறக்க முடியுமா பாட்டி? நான் வாழ்க்கையில துவண்டு போகும் சமயம் எனக்கு தைரியத்தை கொடுத்து எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது நீங்கதான். உங்கள எப்படி மறக்க முடியாமல் இருக்கும்? எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?” என்று அவரிடம் மகிழ்ச்சியாக கேட்க, இருவரும் பொதுப்படையாக குடும்ப விஷயங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டனர்.

“ஏன் பாட்டி உங்க பேத்தி அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டா, உங்க பேரன் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங், இன்னும் அவனுக்கு கல்யாணம் ஆகப்போகுது. இப்போ சொந்த வீடும் உங்க மகனுக்கு வந்தாச்சு. ஆனா நீங்க ஏன் இன்னும் இந்த வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க? ஒரு செட்டில் தானே வாழ்க்கை வந்த பிறகு என்ஜாய் பண்ண வேண்டாமா??” என்று கேட்டவளை பார்த்து சிரித்தவர்…

“என் புள்ள நிரந்தரமா வேலை செய்ய ஒரு பேக்டரி கிடைச்சிருக்கு நல்ல சம்பளம். என்னுடைய பேரன் இன்ஜினியரிங் கல்யாணம் ஆகப்போகுது, பேத்தி அமெரிக்காவுக்கு கட்டிக் கொடுத்து வைத்திருக்கோம். இதெல்லாம் எப்படி வந்தது? நானும் என்னோட வீட்டுக்காரரும் பிழைப்பு தேடி இங்க வந்த போ இந்த வீட்டு பெரிய மனுஷன் தான் வேலை போட்டு கொடுத்தது. அவர் கம்பெனில என் வீட்டுக்காரருக்கு வேலையும் இந்த வீட்டை பார்த்துக்க வேலை குடுத்தாரு. நல்ல சம்பளம் என் புள்ளையை படிக்க வெச்ச அவன் பிள்ளைகளும் நல்லா படிக்க வச்சான். என் குடும்பம் நல்லா இருந்தாலும் நன்றி கடன் ஒன்னு இருக்கு இல்லையா அது தீர்க்க தான். அப்படி என்ன வயசு ஆகிப்போச்சு? 14 வயசுல ஒரு குழந்தைக்கு அம்மா, 40 வயசுல ஒரு பையனுக்கு பாட்டி. 25 வருஷம் ஓடி இப்பதான் எனக்கு 65 முடிஞ்சு 66 நடக்குது. இந்த வீட்டுக்கு வந்து கொஞ்சம் வருஷம் கழிச்சு என் புருஷன் வணங்க முடியாம இறந்து போகும்போது எனக்கு சொன்னது இதுதான், இந்த வீட்டோட நன்றி நீங்க எப்பவும் மறக்க கூடாது அப்படின்னு அதனால எனக்கு போக மனசு இல்லம்மா. அது மட்டும் இல்லாம மூணு வருஷத்துல இந்த வீட்டோட நிலைமை தலைகீழாச்சு சொன்னா புரியாது கண்ணு போக போக நீயே புரிந்துகொள். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் ஆதித்யா தம்பி கல்யாணம் ஆகி சந்தோஷமா இருக்கிறது நீ அவர் வாழ்க்கையில் வந்த பிறகுதான். அப்போ அவர் வாழ்ந்த வாழ்க்கை அது வாழ்க்கையே இல்லம்மா. தம்பி ரொம்பவே ஏமாந்து போச்சு தகரத்த தங்கம்னு நினைச்சு தலையில தூக்கி வச்ச பாவத்துக்கு ரொம்பவே அனுபவிச்சுட்டாரு. இனி நீ தான் அவன பாத்துக்கணும். பாவம் அவன் மனசுல இருக்குறத வெளிய சொல்ல முடியாம ஆம்பளை என்கிற ஒரே காரணத்துக்காக அழக்கூடாதுன்னு எழுதப்படாத சட்டத்தில் மூழ்கி இருக்கான். நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். சரிமா மத்த வேலைக்காரங்களுக்கு எல்லாருக்கும் கணக்கு எழுத வேண்டிய நேரம் வந்துச்சு நான் கிளம்புறேன்” என்று அவர் அவுட் ஹவுஸிற்கு சென்று விட அகல்யாவுக்கு ஒரே குழப்பம்.

‘அது எப்படி லாவண்யாவை கல்யாணம் பண்ணிக்க ரெண்டு வருஷம் காதலிச்ச என்ன உதாசீனம் பண்ணாரு? அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். லாவண்யா அவர் கூட வாழ தானே என் மேல பழிய போட்டு அவரை தன் வசப்படுத்திக்கிட்டா. அவ பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒருவேளை குற்ற உணர்ச்சிலே அவளை விலக்கி வச்சுட்டாரா? அப்படி என்ன செஞ்சிருப்பா?? இன்னும் சொல்லப்போனா நான் கணேஷ் அண்ணா கிட்ட மட்டும் தானே லாவண்யாவும் அஸ்வினியும் பண்ண தப்ப சொன்னேன் ஒருவேளை இவங்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா? அட கடவுளே இத பத்தி யோசிச்சா என்னோட மெண்டல் ஹெல்த் தான் பாதிக்கும் பாத்துக்கலாம்’ என்று குழந்தைகளோடு விளையாடுவதில் கவனத்தை செலுத்தினாள்.

You may also like

Leave a Comment

About Me

Featured