Home ANTIHERO25) யட்சன் 😈 (Final)

25) யட்சன் 😈 (Final)

by sreejanovels
7 views

அத்தியாயம் 25

மறுநாள் காலை டேவிட் விமான நிலையம் வந்து சேர்ந்தான்.

ஆனால் அவனால் முடியவில்லை காயத்ரி இல்லாமல் அவனால் இனி எப்படி வாழ முடியும் பழகிய சில வாரங்களில் அவளோடு உயிரோடு ஒன்றாகிய நாட்களை எப்படி அவனால் மறக்க முடியும்??.

இதோ சிறிது நேரத்தில் மெக்சிகோ செல்லும் விமான பயணிகள் செல்லும் இடத்திற்கு செல்ல போகிறார் அதுவும் அந்த அறையை கடந்த உடன் இதோடு இந்திய நாட்டிற்கும் தனக்கும் நுணுக்கமான பந்தத்தை டேவிட் முடித்துக் கொள்ளும் தருணம்..

அப்போது தூரத்தில்..

“டேவிட் என்ன விட்டு போயிடாதே”

என்று குரல் பலமாக ஒலிக்க.

அப்படியே டேவிட் அதிர்ச்சி அடைந்து டேவிட் திகைத்து நின்றான். அங்கே கலைந்த கூந்தலோடு, கண்களில் கண்ணீர் வழிய ஓடி வந்த காயத்ரி, அனைவர் முன்பாகவும் டேவிட்டைப் பின்னால் இருந்து கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதாள். “என்னால நீங்க இல்லாம வாழ முடியாது டேவிட்! உங்களை விட்டுட்டு வர எனக்கு எந்தச் சொர்க்கமும் வேணாம்!”

டேவிட் விமான நிலையம் சென்றவுடன் காயத்ரிக்கு பித்து பிடித்த நிலைதான் நான் விமான நிலையத்துக்கு சென்று ஆகவேண்டும் டேவிட் உடன் சென்றாக வேண்டும் என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்ய..

“காயத்ரி இப்ப நீ ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்க எனக்கு புரியுது. உனக்கு அம்மா உடன்பிறந்த சகோதரன் நாங்க ரெண்டு பேரும் வேணுமா??. இல்ல அந்த மாஃபியா டேவிட் மறுபடியும் அவன் நாட்டிற்கு போகப் போறான் அவன் மக்களுக்காக மறுபடியும் பல சாகசங்களை செய்ய தான் போறான் அதனால நிறைய விஷயங்கள் பிரச்சனைகள் உருவாகும் அதையெல்லாம் உன்னால சமாளிக்க முடியும்னா தாராளமா இங்கிருந்து போகலாம் நம்முடைய பந்தத்தை முறிச்சிக்கிட்டு.”

என்று சீதா விடாப்பியாக சொல்ல சாருகேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.

“அம்மா உங்களுக்கு தம்பி இருக்கான் தம்பிக்கு நீங்க இருக்கீங்க வருங்காலத்தில் அவனுக்கு கல்யாணம் ஆகும் நீங்க குடும்பமா இருப்பீங்க. ஆனா, என் டேவிட் என்ன தவறி யாருமே இல்ல நான் போனா தான் அவனுக்குனு ஒரு வாழ்க்கையை இருக்கும் என்ன மன்னிச்சிடுங்க அம்மா”.

என்று தலை குனிந்து நிற்க சீதாதனரை நோக்கி சென்று விட்டார். சாருகேஷ் பெருமூச்சுவிட்டு காயத்ரி உடைமைகளை மட்டும் முக்கியமான பொருட்களை அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு அவளை அழைத்து விமான நிலையத்திற்கு வந்தான்.

அங்கு எங்கு தேடியும் பேபிக்கு கிடைக்கவில்லை இறுதியாக பாஸ் வாங்கிக்கொண்டு உள்ளே நுழையும் அவனைப் பார்த்து பெரும் கூச்சல் போட்டு இதோ அவன் பின்னாலிருந்து கட்டிப்பிடித்து நின்று கொண்டிருந்தாள்.

“என்னால் உங்களை விட்டு பிரிய முடியாது டேவிட் நாம ரெண்டு பேரும் ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்து இருக்கோம். அதுக்கு சாட்சியா இப்ப என் வயித்துல வளர உயிர் தான்”.

என்று காயத்ரி சொன்னவுடன் டேவிட் அதிர்ச்சி அடைந்து திரும்பி பார்க்க தன் வயிற்றில் கை வைத்துக்கொண்டு காயத்ரி டேவிட் முகத்தை காதலோடு பார்க்க.

“என்னடி சொல்ற காயத்ரி என்ன சொல்ற நீ உண்மையா??”.

“ஆம்.. நான் நேத்து ஹாஸ்பிடல்ல கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு சொல்லாம இருக்கும்போது அம்மாவும் சாருக்கேஷ் ரெண்டு பேரும், ரொம்பவே என்னை குழப்பிட்டாங்க நீங்களும் என்ன விட்டுட்டு போற மாதிரி பேசிட்டு போயிட்டீங்க கோவத்துல அமைதியா இருந்துட்டேன் நானும்.

ஆனா என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது டேவிட் ப்ளீஸ் என்ன விட்டுட்டு போயிடாதீங்க”.

என்று அவன் மீது சாய்ந்து கொள்ள டேவிட் அவளை வாரி அணைத்துக்கொண்டான்…

“சரி நீ மட்டும் தனியாவா வந்த??”

“இல்ல சாருகேஷ் டிரா பண்ணிட்டு என்னோட லக்கேஜ் கொடுத்துட்டு போயிட்டான் இனிமே என் பேமிலி கூட எந்த ஒரு கனெக்ஷன் எனக்கு கிடையாது இனிமே நீங்க நான் நம்ம குழந்தை இல்லை குழந்தைகள்”.

என்று அழுத்தமாக சொன்னவுடன் டேவிட் அதிர்ச்சி மீது அதிர்ச்சி தான்..

மெக்சிகோவில் அவர்கள் இணைந்த தருணங்கள் எல்லாம் முழுமை அடைந்ததை தவிர பிற்காலத்தில் ஒரு உயிர் உருவாகும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை இப்பொழுது என்னவென்றால் ஒரு உயிர் அல்லாமல் இரு உயிர்கள் அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது நினைத்தவனுக்கே புல்லரிக்கின்றது..

“ஓகே காயு டென்ஷன் ஆகாத இப்போ உனக்கு அர்ஜெண்ட் டிக்கெட் போட முடியுமான்னு பார்க்கலாம் அப்படி கிடைச்சா நம்ம ரெண்டு பேரும் மெக்சிகோ போகலாம். இல்லனா இன்னொரு நாள் நம்ம மெக்சிகோ கிளம்பலாம் வெயிட் பண்ணு”.

என்று பொறுமையாக அந்த நேரத்தை கையாண்டு அவள் உடல்நலம் கருதி முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விமானம் பயணம் செய்யலாம் என்று சொன்னவுடன் ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு டிக்கெட் மற்றும் காயத்ரிக்கான விசா கிடைத்துவிட இருவரும் மெக்சிகோ நாட்டுக்கு பறந்து சென்றனர்.

டேவிட் அவனது மெயின் ஏரியாவில் இருக்கும் பங்களாவை வேறு யாருக்காவது விற்று விடுங்கள் என்று தனது செகரட்டரி குழுவிடம் சொல்லிவிட்டு அழகாக கடற்கரையோரம் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் தன் மனைவியோடு செட்டில் ஆகிவிட்டான்.

சாருகேஷ் சீதா முழுமையாக காயத்ரியின் தொடர்பை துண்டித்து விட்டனர்.

மாதங்கள் சென்றது என்று காயத்ரிக்கு ஐந்தாவது மாதம் தன் மேடு போன்ற வயிற்றை வருடிக்கொண்டு கடற்கரை அலையை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தவளே பின்னாலிருந்து அணைத்துக் கொண்ட டேவிட் அவள் வயிற்றில் கை வைத்து

“என்ன சொல்றாங்க நம்ம பசங்க”.

என்று சொல்லிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைக்க.

“என்ன ஸ்கேன் ரிப்போர்ட்ல ரெண்டும் ஆம்பள பசங்க தெரிஞ்சவுடன் உங்களை கையிலே பிடிக்க முடியல போல??”.

என்று காயத்திற்கு கிண்டல் அது கேட்டாள்.
(இந்திய நாட்டை தவிர சில அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் குழந்தையின் பாலினத்தை கர்ப காலத்திலே சொல்லிவிடுவார்கள்)

“ஆமாம் என்னோட சாம்ராஜ்யத்துக்கு அடுத்த இளவரசர்கள் இவங்கதான். எனக்கு பிறகு நிறைய கடமைகளை இவங்க செய்ய வேண்டியிருக்கு இருந்தாலும் ஒரு முழுமையாக ஒரு பெண் குழந்தையாக தான் அடுத்த முறை ட்ரை பண்ணிக்கலாம்”.

என்று சொல்லிக் கொண்ட டேவிட் அவளை இறுக்கமாக கட்டிக் கொள்ள தன் கணவனின் தேவை என்னவென்று அவளுக்கு புரிந்தது. கர்ப்பமுற்ற காலத்தில் இருந்து விலகி நிற்கிறான் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று மருத்துவர் இப்போது எப்பொழுதும் போல் இயல்பாக இருக்கலாம் என்று சொன்னவுடன் டேவிட்ருப்புக் கொள்ள முடியாமல் தன் மனைவியிடம் தன் தேவையை தெரிவிக்க.

“டேவிட் எனக்கும் நீங்க வேணும் டேவிட் இப்பவே”.

என்று சொல்லி அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் இதழ்களுக்கு தன் இதழ்களால் தண்டனை கொடுக்க அவளை தன்னோடு சுருட்டிக் கொண்டவன் கட்டிலில் கிடைத்தி..

அவளை மிகவும் மென்மையாகவும் பூவை போலவும் கையாண்டு கொண்டிருந்தான்..

இரவின் மடியில் நிலவு உறங்க,

உன் மடியில் நான் தஞ்சம் புகுந்தேன்…

ஆயிரம் கைகள் என்னை அணைத்தபோதும் இல்லாத பாதுகாப்பு,

உன் ஒற்றை அணைப்பில் கண்டேன்!

என் இதயத் துடிப்பு உனக்குத் தெரியும்,

உன் இதயத் துடிப்பு எனக்குத் தெரியும்…

இன்று நமக்குள் கேட்கும் அந்த மூன்றாம் துடிப்பு –

நம் காதலின் சாட்சியாய், நம் வாரிசுகளின் சங்கீதமாய்!


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,

மெக்சிகோவின் மலைச்சரிவில் இருந்த அந்தப் பண்ணை வீட்டின் பால்கனியில், அந்தி சாயும் சூரியனின் பொன்னிற வெளிச்சம் பரவியிருந்தது. டேவிட் ஒரு சோபாவில் அமர்ந்து ஒரு கோப்பையில் காபியைப் பருகிக் கொண்டிருந்தான். அவனது மடியில் இரண்டு சிறுவர்கள் – விக்டர் என்கிற விக்னேஸ்வரன் மற்றும் சாமுவேல் என்கிற ஷியாம் – ஒரு பொம்மை காரை வைத்துக்கொண்டு விளையாடித் தீர்த்தனர்.

ஒன்பதாம் மாதம் முடிவுக்கு முன்பாகவே இரு பாலகர்களும் தன் அம்மாவுக்கு பல இன்னல்களை கொடுத்து எப்படியோ ஒரு வழியாக பிறந்து விட்டார்கள்.

காயத்ரி பிரசவ வலியில் துடித்த துடிப்பை பார்த்து தங்களுக்கு இதற்கு மேல் எந்த குழந்தைகளும் வேண்டாம் என்று முடிவே செய்து விட்டான் டேவிட்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டே தன் மகன்களை பார்த்துக் கொண்டிருந்தான்..

காயத்ரி மெல்ல நடந்து வந்து டேவிட்டின் பின்னால் நின்றாள். அவனது தோளில் தன் கைகளை வைத்தாள். டேவிட் அவளது கையைப் பிடித்துத் தன் இதழ்களோடு ஒற்றிக் கொண்டான்.

“என்ன டேவிட்… என்ன யோசனை? பசங்க உங்களை ஒரு நிமிஷம் கூடத் தனியா இருக்க விட மாட்டேங்குறாங்க,” என்றாள் காயத்ரி செல்லமாகக் கோபித்துக் கொண்டு.

டேவிட் அவளைத் தன் பக்கமாக இழுத்து மடியில் அமர வைத்துக் கொண்டான். “இல்லை காயு… இப்போ அந்த ஏர்போர்ட் சீன்தான் ஞாபகம் வந்தது. அன்னைக்கு நீ என் முதுகை அணைச்சு அழுதப்போ, என் மொத்த உலகமும் உன்கிட்ட தான் இருக்குன்னு புரிஞ்சுது. இப்போ இந்த மூணு வருஷத்துல நாம எவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு.”

காயத்ரி அவனது கண்களை ஆழமாகப் பார்த்தாள். “எல்லாமே மாறுச்சு. ஆனா எங்க குடும்பத்தோட பிடிவாதம் மட்டும் எதுவும் மாறல இப்ப எங்க அம்மாவும் சாருவும் எங்க இருக்காங்க?? அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க.”

என்று தன் குடும்பத்தாரின் பிரிவை நினைத்து காயத்ரி மிகவும் கவலை கொள்ள.

“கவலைப்படாதே காயு… நாம இப்போ ஒரு குடும்பம். மெக்சிகோ மக்களும் உன்னை ஒரு தேவதையா தான் பார்க்குறாங்க. என் வாழ்க்கையில துப்பாக்கிச் சத்தம் மட்டும் தான் கேட்டது… ஆனா இப்போ இந்த விக்னேஸ்வரன், ஷியாம் இவங்களோட சிரிப்புச் சத்தம் கேட்குது. இதுக்கு நீ தான் காரணம்,” என்றான் டேவிட் நெகிழ்ச்சியுடன்.

“நீங்க மட்டும் இல்லைன்னா நான் ஒரு சாதாரண டிடெக்டிவா எங்கேயோ கோப்புக்களைப் புரட்டிட்டு இருந்திருப்பேன். ஆனா இப்போ, ஒரு ராஜாவோட ராணியா இருக்கேன்,” என்று சிரித்தாள் காயத்ரி.

“ராணி மட்டும் இல்ல… என் உயிரோட ஒரு பாதி. இன்னைக்கு வரைக்கும் உன் கண்ணுல அந்தத் தைரியம் குறையல காயு. இந்த இரட்டை வால் பசங்களை சமாளிக்கிறதுக்குத் தான் அந்தத் தைரியம் உனக்கு வேணும் போல,” என்று டேவிட் அவளது மூக்கைத் தொட்டு விளையாடினான்.

“ஆமாம்… அப்பா மாதிரியே ரெண்டு பேரும் செம வாலுங்க!” என்று சொல்லி காயத்ரி அவனது நெஞ்சில் தலை சாய்த்தாள்.

அமைதியான அந்தக் காற்றில், குழந்தைகளின் மழலைச் சத்தமும், இரு இதயங்களின் இணைந்த துடிப்பும் ஒரு அழகான கவிதையாக மாறியது. உலகின் பார்வையில் அவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களின் ரகசியத் தீவில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

குழந்தைகள் இருவரும் உறங்கிய பிறகு அவர்களை உறங்க வைத்த பிறகு கணவன் மனைவி பல நாள் கழித்து தங்களுக்கான தனிமை நேரத்தை கழித்தனர்.

துப்பாக்கி முனையில் வாழ்ந்த என் கரங்கள்,

இன்று உன் கூந்தலை கோதத் தயங்குகிறது…

பன்னீர் மலராய் நீ இருக்க,

பாறாங்கல்லாய் நான் இருக்க – நம்மை

இணைப்பது நம் வயிற்றுக்குள் வளரும் அந்தச் சிறு உயிர்கள்!

இந்தக் கூடல் காமத்தினால் அல்ல,

காலம் நமக்குத் தந்த வரத்தினால்…

உன் இதழ் தீண்டும் ஒவ்வொரு நொடியும்,

மரணத்தை மறக்கிறேன்… மனிதனாகப் பிறக்கிறேன்!

வெளியே நிலவு மெல்ல எட்டிப் பார்த்தது. டேவிட் காயத்ரியின் நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். மரணத்தின் நிழலில் தொடங்கிய அந்தப் பயணம், இப்போது மழலையின் மடியில் முடிவற்ற காதலாய் நிலைத்திருந்தது.

..முற்றும் …

You may also like

Leave a Comment

About Me

Featured