இங்கே செழியன், அம்பை இருவரும் அறைக்குள் வந்தனர். குழந்தை எங்களுடன் இருக்கும் என்று பெரியவர்கள் வாங்கிக்கொள்ள, இருவருக்கும் தனிமை கொடுக்கப்பட்டது.அம்பை அவனது அறையைச் சுற்றிப் பார்க்க, அவள் பின்னால் இருந்து கட்டிக்கொண்டான் செழியன்.
“நம்ம ரூம் அம்பை! எவ்வளவு நாள் ஆசைப்பட்டேன் தெரியுமா நீ எனக்கு மனைவியா வரணும்னு? அது நிறைவேறியாச்சு. உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா? இப்போ நீ என்கூட இருக்க… ஐ அம் டோட்டலி கம்ப்ளீட்!”
என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தவன், அப்படியே நகர்ந்து அவள் தோள்பட்டையில் மெல்லமாகக் கடித்தான்.”ஸ்ஸ்… ம்ம்.. சிவா!” என்று வலியில் மெல்ல முனகினாள் அம்பை.”இதைவிடப் பெரிய பெரிய வலி எல்லாம் பார்த்தாச்சு, இது ஒரு வலியா?” என்று மீண்டும் கடித்தான்.”அதான் எல்லாம் எடுத்தாச்சு (அனுபவிச்சாச்சு), அப்புறம் எதுக்கு மறுபடியும் என்கிட்ட வரணும்? எல்லா நேரமும் இதே எண்ணத்தோடு இருப்பதால்தான் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை போயிடுச்சு.
இந்த இச்சைக்கு எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டாங்களோ?” என்று சொல்லி முடித்தவுடன், அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் செழியன்.”நாயே! யாரைப் பார்த்து என்னடி சொல்ற? என்னால பாதிக்கப்பட்டவ எவளும் கிடையாது. உன்னால… உன்னால மட்டும்தான் நாங்க எல்லாரும் பாதிக்கப்பட்டு இருக்கோம். உன் சிறு அலட்சியத்தால் ஒரு பெண் தன்னை இழந்தாள்.
நீ என்னைக் கல்யாணம் செய்யணும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் பொய் சொன்னேன். அந்தக் குழந்தை எந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கும் பிறக்கலை. நீ காலேஜ் படிக்கிறதுல இருந்து நம்ம ஆபீஸ் வந்த வரைக்கும் கிண்டல், கேலி, கலாட்டா… கடைசியில் உச்சகட்டமா ஜூஸிற்கும் சரக்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவளுக்குக் கொடுக்க வைத்தது நீ… ஞாபகம் இருக்கா காயத்ரி?”
என்று சொன்னவுடன் அவள் தலையில் இடியே விழுந்துவிட்டது.ஐயோ! அவளா? கல்லூரி காலத்திலிருந்தே அப்பாவியாக இருப்பவள். இவள் தன் கூட்டத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு கிண்டலும் கேலியுமாக அவளை வாட்டி வைப்பாள். இருந்தாலும் காயத்ரி தோழிகளிடம் அன்பாகவே இருப்பாள். வாய்ப் பேச்சு இருக்காது; காரணம் அவளுக்குப் பிறவியிலேயே வாய் பேச முடியாது (ஊமை).
இறுதியில் அம்பையும் காயத்ரியும் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அம்பை கணக்காளர் (Accountant) பணியிலும், காயத்ரி தரவு (Data) பணியிலும் சேர்ந்தாள்.இருவருக்கும் நட்பு நன்றாகவே இருந்தது. நாட்கள் சென்றுகொண்டிருந்தன. மறுபக்கம் செழியன், அம்பை மீது உயிரையே வைத்திருந்தான். அவள் வேலைக்கு வந்த நாளிலிருந்தே அவளை நேசிக்க ஆரம்பித்தான். தக்க சமயத்தில் காதலைக் கூற வேண்டும் என்று காத்திருந்தான்.
அந்தச் சமயத்தில் அலுவலகத்தில் ஒரு வெற்றி விழா (Office Success Party) நடைபெற்றது. அப்பொழுது அம்பை, மீண்டும் காயத்ரியை வம்பிற்கு இழுக்கும் பொருட்டு, சாதாரண ஒயினை (Wine) எடுத்து அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் என்று ஏமாற்றிக் கொடுக்க நினைத்தாள். அதை அங்கே வேலை செய்யும் நபரிடம் கூறிவிட்டு, அதற்காகக் காத்திருக்கும் சமயம் அவளுக்கு அவசரமாக ஒரு போன் வந்தது.தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் அது.
அதனால் அங்கே வேலை செய்யும் மற்றொரு நபரிடம், “அந்தப் பெண்ணிற்கு எந்த ஜூஸும் கொடுக்க வேண்டாம் என்று அந்தப் பரிமாறுகிறவரிடம் (Bearer) சொல்லிவிடு” என்று கூறிவிட்டு, எதையும் கவனிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகுதான் அம்பை மீண்டும் அலுவலகத்திற்கு வந்தாள். வந்தவுடன் அவள் கேள்விப்பட்ட விஷயம், காயத்ரியின் தந்தை இறந்துவிட்டார் எனவும், அதனால் அவள் தன் சொந்த ஊருக்கு அம்மாவுடன் சென்றுவிட்டாள் என்பதும்தான்.
அம்பை இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை; “அதான் பிரச்சினை நடக்கவில்லை” என்று நிம்மதியாக இரண்டு மூன்று வருடங்களைக் கழித்துவிட்டாள். ஆனால், அன்று என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதைப்பற்றிய கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.”நீ அவங்ககிட்ட அந்தப் பொண்ணுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்ட.
ஆனா அவங்க இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்குப் போதை மருந்து கொடுத்துத் தப்பாப் பயன்படுத்திட்டாங்க…”தொடர்ந்தான் செழியன், “நீ என்கிட்ட அனுமதி கேட்டுட்டுப் போன பிறகு, உன் கூட ஒரு பொண்ணு (காயத்ரி) இருக்குமே, அது தனியா எப்படி இருக்கும்னு அவளைத் தேடிப் போனேன். ரொம்ப நேரம் ஆளைக் காணோம். அப்புறம் கார்டன் ஏரியால ஒரு புதர் பக்கம் டிரஸ் கிழிஞ்சு பரிதாபமான நிலையில காயத்ரி இருந்தா.
என்னால தாங்கிக்க முடியல. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கும்னு சிசிடிவி (CCTV) கேமராவைச் செக் பண்ணினேன். காயத்ரி தனியா இருக்கும்போது நீ அந்தப் பரிமாறுகிறவரிடம் ஏதோ சொல்லியிருக்க. மறுபடியும் இன்னொருவரிடம் விஷயம் சொல்லியிருக்க. அந்த இருவரையும் விசாரிக்கும் போது அவங்க உண்மையைச் சொல்லிட்டாங்க.”
“அப்பதான் விஷயங்கள் புரிந்தது. அவளைக் கூட்டிட்டுப் போய் ஹாஸ்பிட்டல்ல காட்டினப்ப தெரிஞ்சது, அவளுக்குப் பாலியல் பலாத்காரமும் துன்புறுத்தலும் நடந்திருக்குன்னு. மயக்கம் தெளிந்த பிறகு அந்தப் பொண்ணு ரொம்ப அழுது துடிச்சுப் போயிட்டா. அவங்க வீட்டு ஆளுங்க வந்தாங்க, அவங்க அம்மா தலையில் அடித்துக் கதறினாங்க. மகளைப் பார்த்த அதிர்ச்சியில் அவங்க அப்பா அப்பவே மாரடைப்பு வந்து இறந்து போயிட்டாரு.”
“எனக்கு என்ன பண்றதுன்னு புரியல. நான் தான் அவங்களுக்கு மகனா எல்லாச் சடங்கும் செஞ்சு முடிச்சேன். அவங்க ரெண்டு பேரையும் ஊட்டியில் இருக்கிற என்னுடைய எஸ்டேட் பங்களாவில் வேலைக்கு அனுப்பி வைச்சேன். ஆனா இங்க இருக்கிற எல்லார்கிட்டயும், அப்பா இறந்து போனதால ஒரு மாற்றம் தேவைப்பட்டு அவங்க வெளியூருக்குப் போயிட்டாங்கன்னு சொல்ல வெச்சேன். ஆனா அங்க போனதுக்கு அப்புறம்தான் அவளுக்குத் தெரிந்தது தான் கர்ப்பமாக இருப்பது. எனக்குத் தகவல் சொன்னாங்க.”
“ஒரு உயிரை அழிப்பது பாவம் அப்படின்னு அவளைப் பார்த்துக்க ஒரு டாக்டர், நர்ஸ் ரெண்டு பேரையும் ஏற்பாடு பண்ணினேன். எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்போது, பிரசவ வலியின் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அவள் இறந்து போனாள். குழந்தை நல்லபடியா பிறந்தது. குழந்தையை அந்தப் பொண்ணோட அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அவங்களும் இறந்து போனாங்க.
அதனால்தான் சீக்கிரமா நான் உன்னைக் கல்யாணம் பண்ணி, சட்டப்படி அந்தப் குழந்தையை நான் எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதன்படி நீ கான்ட்ராக்ட்டில் கையெழுத்து போடும்போது, அடாப்ஷன் சர்டிபிகேட்டிலும் உன் கையெழுத்தை வாங்க வெச்சுட்டேன். சட்டப்படி அந்தக் குழந்தைக்கு நாம ரெண்டு பேரும் தான் தாய், தந்தை. போதுமா?””நீ மட்டும் அமைதியாக இருந்திருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.
ஒரு தப்பு தூண்டிவிட நீ காரணமாக இருந்திருக்க. கொஞ்ச நேரமாவது நீ கஷ்டப்படணும், அதுக்காகத்தான் உன்னை இப்படிச் செஞ்சேன். உனக்குச் சொந்தமானவன் வேற ஒருத்திக்கு ஏற்கனவே சொந்தமாகி ஒரு பிள்ளைக்குத் தகப்பன் என்று சொன்னவுடன் உனக்கு எவ்வளவு வலி இருந்தது? ஆனா அந்தப் பொண்ணு தன்னை இரண்டு பேர் துடிக்கத் துடிக்கக் கற்பழிக்கும் போது சுயநினைவே இல்லாம இருந்திருக்கா. அவ அப்பாவை இழந்திருக்கா. அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா?”
“அதனால்தான் உன்னை நேசித்த அதே இதயம் உன்னை வெறுக்கத் தொடங்கியது. உன்னை எப்படியாவது பழிவாங்கணும்னு ஆசைப்பட்டேன். அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடந்த விஷயத்துக்கு நீ கர்ப்பமாகி உன்னைக் கைவிடலாம்னு பிளான் பண்ணேன். ஆனா நீ உஷாராதான் முன்கூட்டியே மாத்திரையைச் சாப்பிட்டுச் சமாளிச்சுட்ட. அப்பதான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. எதுக்கு உன்னைத் தவிர்க்க வேண்டும்? உன்னை என் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தணும்னு முடிவு பண்ணேன். இனி நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது அம்பை!”
என்று சொல்லிவிட்டுச் செழியன் நகர, அம்பை சிலையாகிப் போனாள்.”ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்ச விஷயம் இவ்வளவு பெரிய வினையாகும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. அதுக்காக இப்படி ஒரு தண்டனை எனக்கு வேண்டாம்…”
என்று தன் கணவன் காலில் விழுந்து கெஞ்சினாள். அவனோ நக்கலாக அவள் முடியைக் கொத்தாகப் பிடித்துக் கட்டில் மீது தள்ளிவிட்டான். அதிர்ச்சியில் தன்னைச் சுதாரிக்கும் முன்பே அவள் மீது பாய்ந்தான். அவள் விருப்பமின்றி, தன் பற்களாலும் நகங்களாலும் கிட்டத்தட்ட ஒரு வன்கொடுமைக்குச் சமமான ஒரு காயத்தைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
“சிவா… என்னைத் விட்டுடுங்க… எனக்கு வலிக்குது ப்ளீஸ்… என்னைத் விட்டுடுங்க!” என்று அவள் அலறித் துடித்துக் கதறினாலும், விடாமல் அவளை வக்கிரமாகத் தீண்டினான்.”இப்படித்தான் அந்தப் பொண்ணுக்கும் வலிச்சிருக்கும். நீயாவது தொண்டை கிழியக் கத்துற, பேசுற. ஆனா அவ வாயில்லா ஊமைப் பொண்ணு. அவ வாழ்க்கையே போச்சு.
இப்போ அவ உயிரோடவே இல்லை. அவளுக்கு வந்த வலியில் கொஞ்சமாவது நீ அனுபவிக்க வேணாமா? இதைவிட உனக்குக் கொடுமையாகத்தான் கிடைக்கும்” என்று மேலும் அவளைத் துன்புறுத்தித் தன் வசப்படுத்திக் கொண்டான். மனதில் அவளைப் பற்றி மாபெரும் மாளிகை கட்டியிருந்தவன், அவள் செய்த ஒரு தவறால் அதைச் சுக்குநூறாகத் தகர்த்து, இதயத்தைச் சுடுகாடாக மாற்றியிருந்தான்.
முழுதாகத் தன் ஆண்மையை அவளுக்குள் நிரப்பிவிட்டு விலகிப் படுத்தவன், திரும்பிப் பார்த்தான். அவனோ கொடுத்த களைப்பில் அவள் கண்மூடி உறங்கியே போயிருந்தாள். மெதுவாக அவள் அருகில் வந்தவன், உடலில் தான் ஏற்படுத்திய காயங்களைப் பார்த்து மனம் நொந்து போனான். இதயத்தை முள்ளால் குத்தியது போல் இருந்தது அவனுக்கு.”ஒரு நாள் வருத்தமே உன்னை இப்படி வதைக்கிறது. அந்தப் பொண்ணு யாருன்னே தெரியாத ரெண்டு பேர் கற்பழித்துச் சீரழிஞ்சு போனா. அவ வலி உனக்கு புரியணும்னுதான் நான் இப்படிப் பண்ணேன்.
ஆனா என்னால முழுசா எதையும் செய்ய முடியல. நீ தான் என் மனசுக்குள்ள இருக்கியே… இப்ப கூட உன்னை விட்டு விலகாம இருக்க முடியல. அதனால்தான்…”
என்று அவள் காலைத் தொடப்போகும் நேரம், அவள் உடல் வெட்டி இழுத்தது. என்னவென்று நிமிர்ந்து பார்க்க, வலிப்பு வந்து புரண்டு கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள் அம்பை.
“அக்னி!!!” என்று துடித்துப்போன செழியன், அவளுக்கு ஒரு நைட்டியை மாட்டி, தானும் ஓர் உடை அணிந்து கொண்டான். வலிப்பை அடக்க அங்கே இருந்த ஓர் இரும்புப் பொருளை அவள் கையில் கொடுத்தான். அதற்குள் மருத்துவருக்குப் போன் செய்து வரவழைத்துவிட்டான். நள்ளிரவில் திடீரென்று மருத்துவர் வருவதைப் பார்த்த குடும்பத்தினர், என்னவென்று கேட்பதற்குள் மருத்துவரைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றான் செழியன்.—