அத்தியாயம் 8
ஆண்டனியின் கிடங்கு ஒரு இடுகாட்டைப் போல நிசப்தமானது.டேவிட் ஆண்டனி காயத்ரி அம்மா சீதா இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ரத்த வாடைக்கும், வெடிமருந்து புகைகளுக்கும் நடுவே காயத்ரியின் அம்மா சீதா, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.
ஒரு கிரிமினல் டிடெக்டிவாக காயத்ரியை அவருக்குத் தெரியுமே தவிர, இப்படித் துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே ஒரு மாஃபியா தலைவனின் மார்பில் சாய்ந்து நிற்கும் மகளை அவர் பார்த்ததில்லை.காயத்ரி தன் அம்மாவை மெல்ல விடுவித்து, அவர் முகத்தை வருடினாள். “அம்மா… பயப்படாதீங்க. நாங்க வந்துட்டோம். நீங்க இப்போ பாதுகாப்பா இருக்கீங்க,” என்றாள் தழுதழுத்த குரலில்.சீதாவின் கண்கள் மெல்ல விலகி, காயத்ரியின் பின்னால் ஒரு மலை போல நின்றிருந்த டேவிட்டைப் பார்த்தது.
டேவிட் தனது கையில் இருந்த ரத்தக் கறையை ஒரு கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, காயத்ரியின் அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். அந்த ரத்தம் தோய்ந்த சூழலிலும் அவனது பார்வையில் ஒரு கனிவு இருந்தது. அவன் குனிந்து, இந்திய முறைப்படி சீதாவின் கால்களைத் தொட்டு வணங்கினான்.”வணக்கம்மா… நான் டேவிட். காயத்ரியோட… நண்பன்,” என்று அவன் சொன்னபோது, அவனது குரலில் இருந்த மரியாதையைப் பார்த்து சீதா திகைத்துப் போனார்.”காயு… யாரும்மா இவரு? இங்க என்ன நடக்குது? எதுக்கு என்னைக் கடத்துனாங்க?.
ஏற்கனவே டெல்லியில் இருக்கும் போது யாரும் சில பேர் எங்கள ஃபாலோ பண்ண மாதிரி இருந்துச்சு, அப்புறம் பார்த்தா திடீர்னு நம்ம சொந்தக்காரங்கள்ள ஒருத்தர் இறந்து போய்டு தானே நானும் சாருவும் ஆக்ராவுக்கு போக வேண்டி தான் ஆயிடுச்சு ஆனா எங்களை சுத்தி யாரும் நடவடிக்கை கொண்டே இருந்த மாதிரி இருந்தது. இப்ப கூட கோவிலுக்கு போகலாம்னு வரும்போது தான் இவங்க என்ன கடத்திட்டு வந்துருக்காங்க நீங்க என்னமா நடக்குது?” என்று சீதா பயத்துடன் கேட்டார்.
காயத்ரி டேவிட்டைப் பார்த்துவிட்டு, “அம்மா… இவர்தான் என்னைக் காப்பாத்தினவர். இவரைப் பத்தி நான் அப்புறம் தெளிவா சொல்றேன். முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்,” என்று கூறி அவரை அழைத்துக்கொண்டு காருக்குச் சென்றாள்.டேவிட்டின் மாளிகைக்குத் திரும்பிய பிறகு, அந்த இடம் ஒரு அமைதிப் பூங்காவாக மாறியிருந்தது. சீதாவுக்குத் தனி அறை கொடுக்கப்பட்டு, மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. காயத்ரி தன் அம்மாவைத் தூங்க வைத்த பிறகு வெளியே வந்தாள்.
ஹாலில் டேவிட் ஒரு கிளாஸில் மதுவை ஊற்றிக் கொண்டு, ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அவனது சட்டைப் பொத்தான்கள் சில திறந்திருக்க, மார்பில் இருந்த தழும்புகள் நிலவொளியில் மின்னின.காயத்ரி மெல்ல அவனது பின்னால் சென்று, அவனது முதுகில் முகம் புதைத்து அவனது இடுப்பைச் சுற்றித் தன் கரங்களை வளைத்துக் கொண்டாள். டேவிட் ஒரு பெருமூச்சு விட்டு, அவளது கைகளின் மேல் தன் கைகளை வைத்தான்.”உங்க அம்மாவுக்கு என் மேல சந்தேகம் வந்திருக்கும்ல காயு?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான்.
“இருக்கும் டேவிட்… ஆனா அவங்க உங்களைப் பார்த்த விதம் எனக்குப் பிடிச்சிருந்தது. ஒரு கொலையாளியைப் பார்க்காம, ஒரு பாதுகாவலனைப் பார்க்கிற மாதிரி அவங்க கண்கள்ல ஒரு பார்வை இருந்தது,” என்றாள் காயத்ரி.டேவிட் அவளைத் தன் பக்கம் திருப்பி இழுத்தான். அவளது கண்கள் சிவந்து களைப்பாக இருந்தன. அவன் அவளது முகத்தை வருடி, மெல்ல அவளது உதடுகளில் தனது இதழ்களைப் பதித்தான். அந்த முத்தத்தில் இப்போது வேகம் இல்லை, மாறாக ஒரு ஆறுதல் இருந்தது. “இன்னைக்கு நடந்ததெல்லாம் நினைச்சா எனக்கு இன்னும் பயமா இருக்கு காயு.
உன்னை இழந்திருப்பேனோன்னு ஒரு நிமிஷம் என் இதயம் துடிக்கிறதையே நிறுத்திடுச்சு,” என்று அவளது காதோரம் முணுமுணுத்தான்.அவனது சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்தில் பட்டபோது, காயத்ரிக்கு உடல் சிலிர்த்தது. அவள் அவனது சட்டையைப் பற்றி இழுத்து, அவனை இன்னும் நெருக்கமாகக் கட்டிக் கொண்டாள். அவனது இதயத்துடிப்பின் வேகம் அவளது மார்பில் மோதியது.”என்னை விட்டு நீங்க எங்கேயும் போகக்கூடாது டேவிட்… இந்த உலகத்துல எனக்கு நீங்க மட்டும்தான் பாதுகாப்பு,” என்று சொல்லிவிட்டு, அவனது மார்பில் லேசாகக் கடித்தாள்.
டேவிட் ஒரு சிறு முனகலுடன் அவளை அப்படியே அள்ளிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவளது கால்கள் அவனது இடுப்பைச் சுற்றிக் கொள்ள, அவன் அவளை விடாமல் முத்தமிட்டான். அவனது கைகள் அவளது முதுகை வருடி, அவளது உடையின் மென்மையை ரசித்தன. அந்த இரவின் நிசப்தத்தில், அவர்களின் மூச்சுக்காற்று மட்டுமே சங்கீதமாக ஒலித்தது. அடிவயிற்றில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு ஏற்பட, காயத்ரி அவனது அணைப்பில் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, டேவிட் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “இப்போப் போய் தூங்கு காயு… நாளைக்கு நாம நிறையப் பேசணும். ஆண்டனி பிடிபட்டாலும், அவனுக்குப் பின்னாடி இருக்கிற ‘தி கோஸ்ட்’ (The Ghost) பத்தி நான் விசாரிக்கணும்,” என்றான்.காயத்ரி திடுக்கிட்டாள். “கோஸ்ட்டா? அது யாரு?””மெக்சிகோவோட நிழல் உலகத்துக்கே பெரிய தலைவன். ஆண்டனி அவனோட ஒரு கருவிதான். இப்போ ஆண்டனியை நான் சிதைச்சது அவனுக்குப் பிடிச்சிருக்காது. போர் இன்னும் முடியல காயு,” என்று டேவிட் சொன்னபோது, அவனது கண்கள் மீண்டும் ஒரு வேட்டைக்காரனின் பார்வையாக மாறியது.காயத்ரிக்கு மீண்டும் ஒரு பயம் தொற்றிக் கொண்டது. ஆனால் டேவிட்டின் கரங்கள் அவளை அணைத்திருக்கும் வரை, அவளுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.
____
இரவு மெல்ல விடைபெற்று அதிகாலைப் பொழுது புலர்ந்திருந்தாலும், டேவிட்டின் மாளிகையில் அந்த இதமான சூடு இன்னும் குறையவில்லை. காயத்ரி டேவிட்டின் மார்பில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவனது வலுவான கரங்கள் அவளை ஒரு பொக்கிஷத்தைப் போலத் எங்கு தொலைத்து விடுமோ என்று அவளை இருக்க கட்டிக் கொண்டிருந்தான்.
டேவிட் உறங்கவில்லை; அவளது தலைமுடியைக் கோதிவிட்டபடி, இனி வரப்போகும் புயலைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது போன் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்கியது. ராபர்ட் தான் அழைத்திருந்தான்.”சார்… ஆண்டனி வாயைத் திறந்துட்டான். ஆனா அவன் சொன்ன ஒரு விஷயம் தான் அதிர்ச்சியா இருக்கு. ‘தி கோஸ்ட்’ (The Ghost) வேற யாரும் இல்ல… நம்ம கூடவே இருக்கிற ஒருத்தர் தான்னு சொல்றான்,” என்றான் ராபர்ட். அவனது குரலில் நடுக்கம் இருந்தது.டேவிட்டின் கண்கள் சட்டென்று சுருங்கின. “யார் அது? பேரைச் சொல்லலையா?”
“இல்லை சார்… அதுக்குள்ள அவனோட சாப்பாட்டுல விஷம் கலந்து அவனை யாரோ முடிச்சிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்லயே இந்த கொலை நடந்திருக்குன்னா, அந்த கோஸ்ட் எவ்வளவு பெரிய ஆளா இருப்பான்?”டேவிட் போனைத் துண்டித்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.
அவன் காயத்ரியை மெல்ல அணைப்பில் இருந்து விடுவிக்க முயன்றபோது, அவள் முனகிக் கொண்டே அவனை இன்னும் இறுகக் கட்டிக் கொண்டாள். அவளது கால்கள் அவனது கால்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. அந்த அதிகாலைக் குளிரில் அவளது உடலின் கதகதப்பு டேவிட்டின் உணர்ச்சிகளைத் தூண்டியது.டேவிட் மெதுவாக அவளது கழுத்தின் மென்மையான பகுதியில் தனது இதழ்களை அழுத்தினான். காயத்ரி மெல்லக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அவளது தூக்கக் கலக்கமான கண்களில் தெரிந்த காதலைப் பார்த்ததும், டேவிட்டுக்கு எல்லாவற்றையும் மறந்து அவளோடு அந்தச் சொர்க்கத்திலேயே தங்கிவிட வேண்டும் என்று தோன்றியது.
“டேவிட்… இன்னும் கொஞ்ச நேரம்…” என்று அவள் சிணுங்கிக் கொண்டே அவனைத் தன் பக்கம் இழுத்தாள். அவளது கரங்கள் அவனது பிடரியைச் சுற்றி வளைத்தன.டேவிட் அவளது காதோரம் குனிந்து, “காயு… வெளிய ஒரு பெரிய யுத்தமே நடக்கப் போகுது. ஆனா இங்க உன்கூட இருக்கும்போது மட்டும் தான் நான் நிம்மதியா இருக்கேன்,” என்று சொல்லிவிட்டு அவளது இதழ்களை ஆழமாகச் சுவைத்தான்.
இந்த முத்தத்தில் ஒரு வேகம் இருந்தது; ஒரு தாகம் இருந்தது. காயத்ரி அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து, அவனைத் தன்னுள் இழுத்துக் கொண்டாள். அவளது கை விரல்கள் அவனது முதுகில் நகக்கீறல்களைப் பதித்தன. அடிவயிற்றில் ஒரு சிலிர்ப்பு மின்சாரத்தைப் போலப் பாய, இருவரும் உலகத்தையே மறந்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு, காயத்ரி மூச்சிரைக்க அவனிடமிருந்து பிரிந்தாள்.பிறகு இருவரும் குளித்து முடித்து உடைகளை மாட்டை தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது காயத்ரி அவனை பார்த்து.
“ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப்போகுதுன்னு என் மனசு சொல்லுது டேவிட். அந்த ‘கோஸ்ட்’ யாருன்னு தெரிஞ்சிருச்சா?”டேவிட் தனது சட்டையை அணிந்து கொண்டே, “இன்னும் தெரியல காயு. ஆனா அவன் நமக்குள்ளேயே இருக்கான்னு ஆண்டனி சொல்லியிருக்கான். அது யாரா வேணா இருக்கலாம்… என் ஆளுங்களா இருக்கலாம், இல்ல நீ வேலை பார்க்கிற ஏஜென்சியில இருக்கிறவங்களா கூட இருக்கலாம்.”காயத்ரி திடுக்கிட்டாள்.
“ரிகார்டோவா? இருக்காது டேவிட்… அவர் ரொம்ப நல்லவர்.””இந்த உலகத்துல யாரையும் நம்ப முடியாது காயு. இப்போதைக்கு நீ உன் அம்மாவைக் கூட்டிட்டு டெல்லிக்குக் கிளம்புறது தான் நல்லது. இங்க இருந்தா உங்களுக்கு ஆபத்து,” என்றான் டேவிட் கவலையுடன்.காயத்ரியின் முகம் வாடியது. அவள் ஓடிப் போய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “இல்ல டேவிட்! நான் உங்களை விட்டுட்டுப் போகமாட்டேன். உங்க ஆபத்துல நான் கூட இருக்கணும். அந்த கோஸ்ட் யாருன்னு கண்டுபிடிக்க நானும் உதவி பண்றேன்.
நான் ஒரு டிடெக்டிவ்… மறந்துட்டீங்களா?”டேவிட் அவளைத் தனது மார்போடு அணைத்துக் கொண்டான். “உன் பிடிவாதம் தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா இது விளையாட்டு இல்லை. அவன் யாரா இருந்தாலும் அவனை நான் சும்மா விடமாட்டேன்.”அன்றைய மதிய உணவு நேரத்தில், சீதா மேஜையில் வந்து அமர்ந்தார். காயத்ரியும் டேவிட்டும் பேசிக் கொண்டிருப்பதை அவர் உற்றுப் பார்த்தார்.
டேவிட் காயத்ரிக்குத் தண்ணீரை ஊற்றிக் கொடுப்பதும், அவள் அவனுக்கு பரிமாறுவது என்று ஒரு காதலர்களின் பிணைப்பை அவருக்கு உணர்த்தியது.”டேவிட்… தப்பா நினைக்காதப்பா. நீங்க ஒரு பெரிய ஆளுன்னு எனக்குத் தெரியும். ஆனா என் பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று சீதா நேரடியாகக் கேட்டார்.அறையில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. டேவிட் காயத்ரியின் கையைப் பற்றிக் கொண்டு சீதாவைப் பார்த்தான்.
“அம்மா… நான் ஒரு மாஃபியான்னு உங்களுக்குத் தெரியும். ஆனா காயத்ரி என் வாழ்க்கைக்குள்ள வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு இதயமே இருக்குன்னு புரிஞ்சது. நான் அவளை உயிருக்குயிரா நேசிக்கிறேன். அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்,” என்று ஒரு வீரனைப் போலப் பிரகடனம் செய்தான்.சீதா அதிர்ச்சியில் உறைந்து போனார்.
காயத்ரி தன் அம்மாவின் பதிலை எதிர்பார்த்து நின்றாள். அதே சமயம், மாளிகைக்கு வெளியே ஒரு கறுப்பு நிறக் கார் நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த மர்ம மனிதன், டேவிட்டின் மாளிகையைப் பார்த்து ஒரு வஞ்சகமான புன்னகையை உதிர்த்தான்.அவன் கையில் இருந்த ரிமோட்டில் ஒரு சிவப்பு விளக்கு மின்னியது.