அத்தியாயம் 8
தேவதை சிலை எனப் பெண்ணவள் எதிரே நிற்க,அவன் இதழ்களோ அவளை வர்ணித்துப் பாட,”நான் பேசிக்கிட்டு இருக்கேன். ஏதோ பாட்டுப் பாடிட்டு இருக்கியா நீ?”
என்று அவன் வாயில் ஒரு அடி போட, அப்பொழுது இயல்பு நிலைக்கு வந்தான். அவள் பஞ்சு போன்ற விரல்கள் அவன் இதழைப் பட, ஒரு சிறு அதிர்வுதான் அவனுக்கு.
மின்சாரம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கினான்.கடுப்பான யோகிதா,”ஹலோ, யார் நீங்க? டீச்சர்ஸ் பிளேஸ்ல வந்து இப்படி இன்டிசென்ட்டா உட்கார்ந்துகிட்டு, கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லாம ஒரு மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க?”
என்று அடுத்தடுத்து கேள்வி கேட்க, தன்னைச் சமன் செய்து கொண்டவன்,”நானும் புதுசா வந்த டீச்சர்தான். பிரெஞ்சு வாத்தியார். இன்னைக்குத்தான் முதல் நாள். ரெண்டு பீரியட் ஃப்ரீ. அதான் காத்து வாங்கலாம்னு ஷர்ட் பட்டனை கழட்டி ஃபேன் காத்துல படுத்துட்டேன். யாருமே இல்லைன்னு நினைச்சுதான் அப்படி இருந்தேன்.
ஆனா நீங்க இருந்திருக்கீங்க. ஆனா கண்ணுக்குத் தெரியாத உருவமா இருந்ததால நான் கவனிக்கல. ஸாரி,” என்று அவன் சொல்ல, இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவாறு,”ஹலோ மிஸ்டர்! என்ன கிண்டலா? நான் கண்ணுக்குத் தெரியாத உருவமா? இப்படி உருவக் கேலி பண்ணினா, நாட்டில மழை தண்ணி இல்லாம பண்ணிடுவீங்க.
டீச்சர் மாதிரி கொஞ்சம் நடந்துக்கோங்க. இந்தப் பக்கம் பசங்க வருவாங்க, போவாங்க. ஏற்கனவே ஆம்பள வாத்தியாருக்கு நல்ல மரியாதை இல்லை. நீங்க வேற இப்படி இருந்தீங்கன்னா சுத்தம்! ஒழுங்கா நடந்துக்கப் பாருங்க. எனிவே, ஐ ஆம் யோகிதா. கிட்ஸீ டீச்சர்,”
என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவள் கை தொடுவதற்காகவே வேகமாக அவள் கைகளை இறுக்கிப் பிடித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ராம்.”பசங்களுக்கு பிரெஞ்சு கிளாஸ் எடுக்குறதுக்கு வெளிநாட்டில் இருந்து வந்திருக்கீங்க. அவ்வளவு பாப்புலர் போல ஸ்கூல்.
ஓகே ராம், நான் வரேன்,” என்று தன் இருப்பிடத்தில் அமர்ந்து தன் வேலைகளை கவனிக்க, அவள் எதிர் திசையில் அமர்ந்து கொண்டிருந்த ராம், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.கற்பனைக் குதிரை கண்டபடி சென்றது.
‘மஞ்சள் கலர் புடவை, அதுக்கு பச்சை பார்டர், கழுத்தில் நகைகள், தலை நிறைய மல்லிப் பூ, கை நிறைய கண்ணாடி வளையல், வானவில் இடுப்ப வளைந்து வளைந்து நடந்து வந்து என் முன்னாடி நின்னா, அப்படியே இடுப்பைத் தூக்கி என்னோடு சேர்த்து இழுத்து வச்சு…’ என்று 18+ காட்சிகள் அவனுக்குள் இக்குத் தப்பாகத் தோன்ற,’ச்ச… ச்ச… என்ன இது? பார்த்த உடனே காம பிசாசு மாதிரி நினைக்கிறேன்.
நம்ம இருக்கிற அழகுக்கு எல்லாம் நம்மளத் தேடித்தான் வரணும். எத்தனை வெள்ளைகாரிகள் என்கிட்ட மண்டி போட்டிருக்காங்க? இவள் எல்லாம் எம்மாத்திரம்? சும்மா நாலு வார்த்தை ஜாலியா பேசினா வந்துடப் போறா. பார்க்கலாம், இந்த மல்கோவா மடியுதா இல்லையா அப்படின்னு!’
என்று நினைத்துக் கொண்டு அவன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான். அதே சமயம் யோகிதாவும் ஓரக்கண்ணால் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். கிரேக்கச் சிலை போல் இருக்கும் இவனை ரசிக்காமல் இருக்க முடியாது.
இவள் அழகாக இருந்தால், ‘அட! எவ்வளவு அழகு’ என்று ரசிக்கும் பேர்வழிதான். ஆனால் இன்றோ அந்த ரசிக்கும் திறன் அதிகமாக இருந்தது. அடிக்கடி அவனையே பார்ப்பது போல் இருந்தது அவளுக்கு.இசையும் யோகிதாவும் இரு ஆண்களின் மீது தங்களை அறியாமல் தங்கள் மனதைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும், யாருக்குத் தோல்வி கிடைக்கும் என்று விதி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆட்டம் ஆரம்பம் என்று… மாலை 5 மணி ஆனவுடன், அம்பை தன் பணி நேரம் முடிந்ததால் புறப்பட எத்தனிக்க, அந்தச் சமயம்,டெலிபோன் ரிங் ஆக,
“ப்ச்… கிளம்புற நேரத்துல கூட ஏதாவது ஒன்னு கேட்டு உயிரை எடுக்க வேண்டியது!” என்று சலிப்புத் தட்டி, போனை எடுத்து காதில் வைத்தவுடன் அவள் பதிலை எதிர்பாராது,
“அம்பை, கிளம்ப வேண்டாம். 10 மினிட்ஸ்ல நம்ம ரெண்டு பேரும் பக்கத்துல இருக்குற சாருகேஷ் ரெஸ்டாரன்ட் போகணும். அங்க சின்ன கிளைன்ட் மீட்டிங் தான். ஜஸ்ட் ஒரு மணி நேரம். முடிஞ்சதுக்கு அப்புறம் நான் உங்களை ஆஃபீஸ்ல விடுறேன். நீங்க உங்க டூவீலர் எடுத்து கிளம்பலாம்,”
என்று சொல்லிவிட, இது எப்பொழுதும் நடக்கும் விஷயம்தான். மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை பணி நேரம் முடிந்த பிறகு, யாராவது ஒரு கிளைன்ட் அருகில் இருக்கும் ரெஸ்டாரண்ட்டில் வந்து பேசி, மீட்டிங் முடித்து, காண்ட்ராக்ட் பேசி வருவது. இவள் இதுவரைக்கும் மூன்று முறை சென்று இருக்கிறாள்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீண்டும் இந்த முறை இவளுக்கு வந்திருக்கிறது. ‘சரி’ என்று,கழிவறை சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு தயாராக இருக்க, பத்து நிமிடம் கழித்து சரியாக வந்தவன், அவளை அழைத்துக் கொண்டு அந்த ரெஸ்டாரண்டிற்குச் சென்றான்.
எப்பொழுதும் வெளியே இருக்கும் டைனிங் டேபிள் அல்லது கார்டன் ஏரியாவில் மீட்டிங் நடக்கும். ஆனால் இந்த முறையோ செழியன் நேராகச் சென்று ஒரு அறை எண் சொல்லி, சாவி பெற்றுக் கொண்டு அவளை அழைத்துச் செல்ல, சற்றுப் பதட்டமாகிவிட்டாள் அம்பை.
“சார், மீட்டிங் ரூம்ல நடக்கப் போகுதா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டுவிட, ஒரு நமட்டுப் புன்னகையோடு அவளைப் பார்த்து,”ஆமாம். இது கொஞ்சம் சென்சிட்டிவ், சீக்ரெட், சஸ்பென்ஸ் காண்ட்ராக்ட். தமிழ்நாட்டுல நம்ம கம்பெனிக்குத்தான் கிடைச்சிருக்கு. இங்க நம்ம தொழில் எதிரி கூட வலம் வர வாய்ப்பு இருக்கு. அதனாலதான் நம்ம கிளைன்ட் ரெண்டு நாளைக்கு முன்னாடியே லண்டனில் இருந்து இங்க வந்து ஸ்டே பண்ணி இருக்காரு.
நம்ம அவரை சீக்ரெட் மீட்டிங்லதான் பார்க்கப் போறோம். ஓகேவா? மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட இதைப் பத்தி நீ யாருகிட்டயும் ஷேர் பண்ணக் கூடாது. ஓகே?” என்று சீரியஸாகப் பேச, அவளும் ‘சரி’ என்று அவனுடன் நடந்து வந்தாள்.ஏற்கனவே அறையில் இருப்பவரைச் சந்திக்க எதற்காக அறை சாவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அந்தப் பதட்டத்தில் அம்பை மறந்துவிட, அதுவே அவனுக்குப் பெருத்த சாதகமாகிப் போய்விட்டது.
அறை முன்னாள் வந்து நின்று, அறை கதவைத் திறக்கும் பொழுதுதான் அம்பைக்குக் குறித்தது, ‘ஏற்கனவே இருக்கும் பொழுது எதற்காக சாவி வாங்கித் திறக்க வேண்டும்?’ என்று.அவள் கேள்வி கேட்பதற்குள் அவள் கைகளைப் பிடித்து உள்ளே தள்ளி, கதவைத் தாழ் போட்டான்.அம்பைக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக அவனைத் திரும்பிப் பார்க்க, கரங்களைக் கட்டிக் கொண்டு அவளைத்தான் அழுத்தமாகப் பார்த்தான் அவன்.
பார்வை அவன் மீது பட்டதும், வழக்கம் போல் சூரியகாந்தியாய் தலை கவிழ்ந்து நின்றாள்.அவள் அருகில் வந்து நின்று, அவள் தாடை பற்றி, தன்னை பார்க்கச் செய்து,”எதுக்குடி எப்பப் பாத்தாலும் நான் பார்க்க ஆரம்பித்தாலே வெட்கப்பட்டு தலை குனியுற? மாமன் பார்வையை உன்னால தாங்கிக்க முடியலையே?” என்று இதழ் வளைத்து அவளிடம் வம்பு இழுக்க,அவன் கரங்களைத் தட்டி விட்டவள்,”சார்! வந்தது மீட்டிங் சொன்னீங்க. ஆனா இங்க மீட்டிங் நடக்கிற மாதிரி இல்லை.
வேற விஷயம் நீங்க எதிர்பார்த்து என்னை அழைச்சிட்டு வந்த மாதிரி இருக்கு. ஸாரி! லவ் ப்ரொபோஸ் பண்ண உடனே உடம்பைத் தாரை வார்த்துக் கொடுக்கணும்னு நீங்க வளர்ந்த சூழ்நிலை உங்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஆனா, காதல் என்பது கூடப் பார்வை கண்ணுக்குக் கீழே போகக்கூடாது என்று வளர்க்கப்பட்டவள் நான்.
இந்த மாதிரி ஒரு காதலால் ஏமாந்து கஷ்டப்படுறவங்களையும் பார்த்தவள் நானு. அதே சமயம், உண்மையான காதலையும் பார்த்திருக்கேன். இப்போ நீங்க எதுக்காக இங்க அழைச்சிட்டு வந்தீங்களோ அதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்,”
என்று அவன் எதிரே முறைத்துக் கொண்டே கரங்களைக் கட்டிக் கொண்டு அவனை அழுத்தமாகப் பார்க்க,பெருமூச்சுவிட்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட செழியன்,
“ஸாரிடி! காலைல இருந்து ஒரே டென்ஷன். அதனால்தான் ஃபைல் கரெக்ஷன்ல தெரியாம இப்படி உன்கிட்ட கத்த வேண்டிய சூழ்நிலை. அதுக்காக நீ ஒரேடியா அனாவசியமா என்னை ஒதுக்கி வைக்கிற மாதிரி பேசாத.
நான் உன்னை அழைச்சிட்டு வந்த காரணம் உன்னைச் சமாதானப்படுத்தத்தான். மத்தபடி உன்னைச் சூறையாட இல்லை. காதலிக்கும் போது கண்ணியமா இருக்கணும்னு வீட்ல சொல்லி வளர்க்கப்பட்டவனும் நான்தான்.
ஆல்ரெடி நம்ம மேட்டர் வீட்ல தெரியும். எங்க அம்மா அப்பா உன்னோட போட்டோவைக்கூடப் பார்த்துட்டாங்க. ‘எப்போ மருமகள் வீட்டுக்கு வரப் போறான்னு’ கேட்குறாங்க. அதை பத்திப் பேசத்தான் உன்னைக் கூப்பிட்டேன். சொல்லு, எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று அவளிடம் நேரடியாக விஷயத்திற்கு வர,அம்பைக்கு உடனடியாக ‘சரி’ என்று சொல்ல முடியவில்லை.
‘வேண்டாம்’ என்று சொல்லக் காரணம் தெரியவில்லை.”இங்க பாருங்க, நான் குழப்பத்தில் இருக்கேன். கொஞ்ச நாள் போகட்டும். இப்பதான் தங்கச்சி இந்த ஊருக்கு வந்திருக்கா. வீட்ல இப்போதைக்குக் கல்யாணப் பேச்சு வேண்டாம் என்று சொல்லித் தள்ளி வச்சிருக்கேன்.
அதனால ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ அப்படின்னு எங்க வீட்ல எதுவும் சொல்ல முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். இப்ப வரைக்கும் மனநிலையில் அவசர அவசரமா கல்யாணம் பண்ண நான் விரும்பல. ப்ளீஸ், எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க,”
என்று அவள் பொறுமையாக எடுத்துச் சொன்னாலும், அரக்கன் மனதிற்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி தன்னை ‘வேண்டாம்’ என்று சொல்லலாம் என்று தவறாக நினைத்துக் கொண்டான். அவகாசம் கேட்பது கூட ஏதோ தன்னை ஒதுக்கி வைப்பது போல் தோன்றியது அவனுக்கு.
இழுத்து வைத்த பொறுமை காற்றோடு போய், அவளை அப்படியே கட்டிலோடு சரித்து, அவள் மீது படர்ந்தவன்,”எதுக்குடி? எதுக்கு அப்பப்போ என்கிட்ட ஒதுங்கி ஒதுங்கிப் போற? அதான் லவ் பண்றேன்னு சொல்ற? இல்ல, கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? எதுக்கு என்னைத் தவிக்க விடுற? அதானே இந்த பொண்ணுங்களுக்கு? ஆம்பளைங்களைக் கஷ்டப்படுத்துவதுதான் வேலை.
பொய்யா லவ் பண்றவன் பின்னாடிதான் நீங்க அலையுங்க. உண்மையா உங்க பின்னாடி வரவனை நாயைவிடக் கேவலமாப் பண்ணுவீங்க. உன்னை இப்படி விட்டதாலதானே ரொம்ப பண்ற? இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்,” என்று சொல்லி அசுரத்தனமாக அவள் இதழை வதைக்க ஆரம்பித்தான். என்ன நடக்கிறது என்று புரியாமல் சித்தப்பிரமை பிடித்த அம்பை, முடிந்த அளவு அவனிடம் எதிர்ப்பு தெரிவிக்க, அவள் எதிர்ப்பைத் துச்சமென விடுத்து, அவன் ராட்சசக் கரங்களுக்குள் அடங்கி, மொத்தமாகத் தன்னை இழந்து போனாள் அம்பை.
