மருத்துவமனையில் அம்பைக்குத் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்த மருத்துவர், முதலுதவி செய்த பிறகு கட்டாயம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறிவிட, அவசர அவசரமாக அம்பை அங்கு அழைத்து வரப்பட்டாள்.
“அவளுக்கு இந்த மாதிரி வலிப்பு எல்லாம் வந்ததே கிடையாது. ரொம்பத் தைரியமான பொண்ணு. எதுக்கு இந்த மாதிரி ஆச்சு? நேத்து உங்களுக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சனையா மாப்பிள்ளை?”
என்று ஜமுனா பதட்டமாகக் கேட்க, செழியன் பதில் சொல்லாமல் அமைதியாகத் தலைகுனிந்து நின்றான். அவனது மௌனம் ஜமுனாவின் பயத்தை அதிகரித்தது.
சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், “இவங்க கணவர் யாரு?” என்று கோபமாகக் கேட்டார். செழியன் முன்னால் வந்து நிற்க, அவனைப் பார்த்து மருத்துவர் வசைபாடினார்.”காட்டில் இருக்கிற மிருகங்கள் கூட இவனை விடப் பரவாயில்லை போல! கல்யாணம் பண்ண அன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு அவசியம் இல்லை. அவ உடலில் இருக்கிற காயங்கள் கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இருந்ததற்கான அடையாளம் இல்லை; இது வன்கொடுமைக்கு (Rape) நிகரான விஷயம்.
அவ கண் விழித்த பிறகு உன் மேல் புகார் கொடுத்தால், கேஸ் ஃபைல் பண்ண வேண்டி இருக்கும். முன்கூட்டியே வக்கீலை ஏற்பாடு பண்ணிக்கோ!” என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்.அனைவரும் செழியனைக் கேள்வியாகப் பார்த்தனர். தென்றல் கோபத்தோடு மகனின் கன்னத்தில் அறைந்தார்.
“நீ என் மகன் என்று சொல்வதற்கே எனக்குத் தலைகுனிவாக இருக்கிறது. உன் அப்பா எவ்வளவு கண்ணியமானவர்! இப்போது அம்பையின் பெற்றோர் அவளை எப்படி நம் வீட்டிற்கு நம்பி அனுப்புவார்கள்? கல்யாணம் பண்ண அன்னைக்கே இப்படிச் செய்திருக்கிறாய் என்றால், இனி மகளின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று அவர்கள் பயப்பட மாட்டார்களா? நான் ஏன், எதுக்கு என்று காரணம் கேட்கப் போவதில்லை. அம்பை கண் விழித்த பிறகு அவளிடமே விசாரித்துக் கொள்கிறேன்”
என்று தென்றல் கூறிவிட்டு நகர, அம்பையின் வீட்டார்கள் எதுவும் பேச முடியாமல் மௌனமாக நின்றனர்.மறுபக்கம், இனியனை ஓரமாகப் பார்த்த இசை அவன் காதருகே மெதுவாகச் சென்று,
“நீதான் வெறிபிடித்த மிருகம்னு பார்த்தால், உன் அண்ணன் ஒரு காமப் பிசாசாக இருப்பார் போல! ஆக மொத்தம் அண்ணன் தம்பி இரண்டு பேரும் சேர்ந்து எங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க. வயிறு எரிந்து சொல்கிறேன், இதுக்கெல்லாம் தக்க தண்டனை உங்களுக்குக் கிடைக்கும்” என்று சாபமிட்டாள்.
பெரியவர்களின் பேச்சுகள் புரியாத குழந்தையோ, தனக்கு ‘அம்மா’ என்று அறிமுகம் செய்யப்பட்டவள் இப்போது பாதிப்படைந்து கிடப்பதைப் பார்த்து “அம்மா… அம்மா…” என்று அழுது ஓய்ந்து போனது.—
மூன்று மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்தாள் அம்பை. மருத்துவர் அவளிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, இறுதியாக,
“நேற்று உன் கணவன் உன்னைக் கட்டாயப்படுத்தினாரா? இத்தகைய கட்டாய உறவுகள் மிகவும் மோசமானவை. உனக்குத் திருமணப் பந்தத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?” என்று விசாரித்தார்.”அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர். நாங்கள் இரண்டு பேரும் நேற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.
நான்தான் என் கணவரை வற்புறுத்தி ஒரு மாத்திரையைச் சாப்பிடச் சொன்னேன். அதுதான் என்னை இந்த நிலைமைக்கு ஆக்கியது. முதல் முறை உறவு கொண்டதால் ஏற்பட்ட பயமும் ஒரு காரணம். மற்றபடி எதுவும் இல்லை, என் கணவர் மீது எந்தக் குற்றமும் இல்லை” என்று அம்பை பொய் சொல்லிச் செழியனைக் காப்பாற்றினாள்.
அவள் பொய் சொல்கிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. செழியன் அம்பையின் கால் மாட்டிலேயே அமர்ந்திருந்தான். அனைவரும் நலம் விசாரித்துச் சென்ற பிறகும், அவன் அசையாமல் ஏதோ யோசனையில் அங்கேயே அமர்ந்திருந்தான். குழந்தை அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடியே இருந்தது.
“அம்மு, எதுக்குடா அழுதுகிட்டு இருக்க? அம்மா உன்னை விட்டுப் போகமாட்டேன். எனக்கு ஒன்றுமில்லை, இதோ பார் நான் நல்லா இருக்கேன். சின்ன செக்கப் தான், இன்றைக்குச் சாயங்காலமே வீட்டுக்குப் போயிடலாம்” என்று குழந்தையைச் சமாதானப்படுத்தியபடி தன் காலை அசைத்தாள்.அப்போது எழுந்த செழியன், அம்பையின் முகத்தைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர, எதுவும் பேசவில்லை. திடீரென்று அவள் இடையைக் கட்டிக்கொண்டு அவன் அழத் தொடங்கினான்.
“நீங்க அழுதாலும் மன்னிப்புக் கேட்டாலும் என் வலியை உங்களால் வாங்க முடியாது. நான் அனுபவித்த வலியை என்னால் மட்டும்தான் உணர முடியும். காயப்படுத்திவிட்டு எளிதாக மன்னிப்புக் கேட்டால் எல்லாம் சரியாகாது செழியன். எனக்குத் தனியாக ஓய்வெடுக்க வேண்டும், குழந்தையை அழைச்சிட்டுப் போங்க”
என்று கசப்போடு சொன்னாள்.—
வீட்டில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. யாரும் செழியனிடம் பேசவில்லை. ஜமுனாவுக்கு இசையின் மீதும் சந்தேகம் வந்தது. “என்னடி, மாப்பிள்ளையை நீ மிரட்டிக் கொண்டிருக்கிறாய்? அவர் உன்னைப் பார்த்துப் பயப்படுகிறாரே, என்ன நடக்கிறது உங்களுக்குள்?” என்று கேட்டார்.”நானாவது அவரை மிரட்டுவதாவது? அவர்தான் என்னை மிரட்டுகிறார். நான் அவரைத் திருமணத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கும் முன்பே, அவர் சில சதி வேலைகள் செய்து எனக்குக் கெட்டப் பெயர் வாங்கித் தந்து, இந்தத் திருமணத்தை நடத்தினார். அவர் செய்ததை நான் மறந்துவிடுவேனா? என் மனதிலுள்ள காயங்கள் மாறும் வரை நான் இப்படித்தான் இருப்பேன்”
என்று இசை ஆவேசமாகக் கூறினாள்.அம்பை வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள். செழியன் அவளை அறையில் உறங்க வைத்துவிட்டு, குழந்தையையும் படுக்க வைத்தான். அப்போது தென்றல் அவனிடம் விசாரணை தொடங்கினார்.”இங்கே என்ன நடக்கிறது செழியன்? டாக்டர் உன்னை வன்கொடுமையாளர் என்கிறார், இங்கே இசை இனியனைப் பார்த்து உன் அண்ணன் உன்னை விட மோசம் என்கிறாள். எதைப் பற்றியும் கேட்காமல் நாங்கள் திருமணத்திற்குச் சம்மதித்தோம். இப்போது என்ன நடக்கிறது என்று தெளிவாகச் சொல்லப் போகிறாயா இல்லையா?” என்று கேட்டார்.செழியன் காயத்ரியின் கதையையும், அம்பையின் சிறு அலட்சியத்தால் ஒரு பெண்ணின் வாழ்வு சீரழிந்ததையும், அதற்குப் பழிவாங்கவே தான் இப்படி நடந்துகொண்டதையும் விவரித்தான்.
“அப்படியா சார்? அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதிக்காகக் குரல் கொடுக்க நீ உன் மனைவியைக் கற்பழித்தாயா? இப்போது உனக்கும் அன்னைக்குக் காயத்ரியைச் சீரழித்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் ஒன்றுதான்! நீ செய்ததும் ஒரு பெண்ணின் சிதைப்புதான்” என்று அவனை வசைபாடினார் தென்றல்.அப்போது மதன் குமார் குறுக்கிட்டார்.
“போதும் தென்றல், இது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அவர்களாகவே சரி செய்துகொள்ளட்டும், வா உள்ளே” என்று அவளை அழைத்துச் சென்றார். மற்ற பெரியவர்களும் மனவருத்தத்துடன் கலைந்து சென்றனர்.செழியன் தன் மனைவிக்காகச் சாத்துக்குடி ஜூஸ் தயாரிக்கச் சென்றான். ஹாலில் இனியனும் இசையும் தனித்து விடப்பட்டனர்.”எப்படியோ உங்கள் அப்பா உன்னைக் காப்பாற்றிவிட்டார், தப்பித்தாய்!” என்று எள்ளி நகையாடிவிட்டுச் சென்றாள் இசை.
இனியன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
______________________________________________