இரண்டு மாதங்கள் கடந்து சென்ற பிறகு, இனியன் மற்றும் இசை இருவருக்குமான நட்பு காதலாக உதிக்க ஆரம்பித்தது. முதலில் காதலைச் சொன்னது இசைதான்.
எப்படியோ அவள் வாய்வழியாகக் காதலைச் சொல்ல வைத்து விட்டான் அந்தக் கள்வன்.ஒரு மாதத்திற்கு முன்பு, ஒரு வார காலம் பள்ளிக்கு அவன் வரவில்லை. ‘ஏன் வரவில்லை, எதற்கு வரவில்லை?’ என்று அவனைப் பற்றிச் சிந்தனை செய்தவளுக்கு, அடி மனதில் இருந்து அவன் மீது தான் வைத்திருக்கும் காதலைப் புரிந்து கொண்டாள்.
ஆனால் காதலால் பாதிக்கப்பட்டவர் தன் வீட்டில் கண்முன் இருக்கும் பொழுது, தான் எப்படி காதல் உலகில் சஞ்சரிக்க முடியும் என்று யோசிக்கும்போது, ‘அனைவரும் தவறானவர்கள் அல்ல’ என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லி இருக்கும்பொழுது, நாம் சரியான நபரைத்தானே தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில், அவன் பள்ளிக்கு வந்த அன்று தனிமையில் சந்தித்து தன் காதலை வெளிப்படுத்த, ‘எப்படி இவளிடம் தன் காதலைச் சொல்வது?’ என்று காத்துக் கொண்டிருந்த இனியன், இதோ தன் தேவதை அவள் திருவாய் திறந்து காதல் மொழியைச் சொன்ன பிறகு சும்மா விடுவானா? இதோ ஒரு மாத காலமாக காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர், ஒரு வரையறுக்கப்பட்ட அளவில்.
மறுபக்கம், செழியன் தலைமை அலுவலகத்தில் வேலை கழுத்தை நெரிப்பதால், அவளை இரண்டு மூன்று மாதமாகவே சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அந்தக் காதல்க் கள்வன். மேலும், மனதில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்னும் இரண்டு நாட்கள் வேலையை முடித்துக் கொண்டு அவளைச் சந்திக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்தான்.
‘வயித்துல பாப்பா எவ்வளவு நாள் இருக்கும்? இப்போ பாப்பாவோட ஹார்ட் பீட் கூட வந்து இருக்கும். பாப்பா என்ன மாதிரி இருக்குமா? இல்லை அவளை மாதிரி இருக்குமா? என்னோட குழந்தையை இப்பவே பார்க்கணும் போல இருக்கு. ஆனா இன்னும் ஆறு மாசம் வெயிட் பண்ணனும்.
வயித்துல குழந்தை இருக்கிறது இவளுக்குத் தெரியுமா, தெரியாதா? அன்னைக்கு நடந்த பிறகு இவளுக்கு நாள் தள்ளிப் போச்சா, இல்லையா? நான் ஓவர் எதிர்பார்ப்போட இருக்கேன். அங்க என் குழந்தையைச் சுமந்துக்கிட்டு இருக்காளா? என்ன பண்றா?’ என்று உருவாகாத தன் குழந்தையை நினைத்துக் கற்பனைக் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருந்தான்.
இயல்பாகவே ‘எனக்கு நாள் தள்ளிப் போகவில்லை’ என்று சொன்னால் பரவாயில்லை, வேண்டுமென்றே கரு உருவாகாமலே அவள் அழித்தது தெரிந்து போனால் அவன் மனம் தாங்குமா..?எப்படியும் முட்டி மோதி இரண்டு நாட்களில் வேலை அனைத்தும் முடித்துவிட்டு, மீட்டிங் வெற்றிகரமாகச் செயல்பட்டுவிடவே, இதோ கிளை அலுவலகத்திற்கு தன் காதல் கிளியைத் தேடி வந்தான்.
பல நாட்கள் கழித்து அவனைச் சந்தித்ததால் அனைவரும் அவனிடம் நலம் விசாரிக்க, அம்பை எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘சரி’ என்று அவளைக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் அழைக்க, எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக அனுமதி கேட்டு உள்ளே நுழைய,உடனடியாக கதவை லாக் செய்து, அவளைத் துண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்று மெத்தையில் படுக்க வைத்து, அவள் சுடிதார் டாப்பைத் தூக்க,பதறிப்போன அம்பை அவன் கையைப் பிடித்து,”என்ன செய்யப் போறீங்க?”
என்று பார்வையால் அவனைப் பார்த்துக் கேட்க,”நீ சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரியாமல் போகுமா? வயிற்றில் இந்நேரம் என் பிள்ளை மூன்று மாதக் கருவாக இருந்திருக்கணும். ஸ்கேன் கூட எடுத்து இதயத்துடிப்பு, குழந்தையின் பொசிஷன் அனைத்தும் மருத்துவர் சொல்லி இருப்பாரே. உண்மைய சொல்.
என் குழந்தை நல்லாத்தானே இருக்கு?”.என்று கண்களில் காதல், ஆர்வம், ஆசை அனைத்தும் தேக்கி வைத்துக் கேட்க, அம்பை மனது துடித்துப் போய்விட்டது. இவன் மனதில் இவ்வளவு பெரிய கற்பனைக் கோட்டை கட்டி இருப்பான் என்று அவள் எதிர்பார்த்தது இல்லை. அன்று தேவை முடிந்த பிறகு தன்னை விளக்கி விடுவான் என்று நினைக்க, அவன் இழுத்துப் பிடித்து இதோ குழந்தையே வளர்ந்து இருக்கும் அளவிற்குப் பேசிக் கொண்டிருக்கிறான். இவனிடம் எப்படிச் சொல்வாள்?
அந்த நிமிடம் குற்ற உணர்வு தாங்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வர, அதிலேயே தெரிந்து போனது. சிறிய ஏமாற்றத்தோடு அவள் வயிற்றைத் தடவி,”சரி, சரி. ஃபீல் பண்ணாத. ஒரு முறை பண்ணா அவ்வளவு சீக்கிரம் குழந்தை நிக்காது.
அதுக்கெல்லாம் பல முயற்சி தேவை. நான் எதிர்பார்த்தேன் அவ்வளவுதான். சரி விடு. கல்யாணத்துக்குப் பிறகு நம்ம முழுமூச்சாக இந்த வேலையில் இறங்கி நிறைய பிள்ளை பெத்துக்கலாம்,” என்று ஆசையாகச் சொல்ல, அவன் கன்னத்தைப் பிடித்து நெற்றியோடு நெட்டி முட்டி, கதறித் துடித்து அழுதாள்.அவனுக்கே பாவமாக இருந்தது. ஒருவேளை அவளும் குழந்தையை எதிர்பார்த்து, அது இல்லாமல் போனதால் வருத்தத்தில் இருந்திருக்கலாம்.
அதை புரிந்து கொள்ளாமல் தானும் குழந்தை பற்றிப் பேசி அவள் மனதைப் புண்படுத்தி விட்டோமோ என்று அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் அழுத காரணம் என்னவென்று தெரிந்த பிறகு அவன் நிலை…?”சரிடா அம்மு. எதுக்கு இப்படி அழுது எனர்ஜி வேஸ்ட் பண்ற? எனக்கான வேலைகள் எல்லாம் முடிஞ்சு போச்சு.
உனக்கான கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு. கூடிய சீக்கிரம் நான் உன்னைக் கேட்டு வீட்டுக்கு வரப் போறேன். கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். எனக்கும் ஆசையா இருக்கு,” என்று அவன் ஆசைகள் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, அம்பை நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தது போல் இருந்தது. அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதாள்.
அவள் ஏன் அழுகிறாள் என்று புரியாமல், அவளைத் தன்னைப் பார்க்கச் செய்து,”ஏய், எதுக்கு இப்போ ஒப்பாரி வச்சுக்கிட்டே இருக்க? எனக்கு என்னமோ வேற மாதிரி தோணுது அம்பை. எனக்குப் பயமா இருக்கு. சொல்லு. எனக்கு ஹெட் ஆஃபீஸ் வேலைகள் ரொம்ப அதிகமா இருந்தது. அதனாலதான் உன்னைக் காண்டாக்ட் பண்ண முடியல.
ப்ளீஸ், எதுவும் இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லு. எனக்குத் தலை வலிக்குது. முடியலமா,” என்று அவன் கேட்ட பிறகு, இதற்கு மேல் முடியாது என்பதால், அவனைக் கை எடுத்து கும்பிட்டு,”என்னை மன்னிச்சிடுங்க. உங்களை நான் மத்த ஆண்களைப் போல நினைத்து விட்டேன்.
நம்ம ரெண்டு பேரும் இணைந்த பிறகு நீங்க வேலை விஷயமா போயிட்டீங்க. ஆனா எனக்கு உங்க மேல சந்தேகம் வந்துடுச்சு. மத்த ஆண்களைப் போல தேவை தீர்ந்த பிறகு விலகிப் போயிட்டீங்க அப்படின்னு உங்க மேல கோவம் வந்தது. ஆரம்பத்தில் நான் நிறைய கால் பண்ண, மெசேஜ் பண்ண நீங்க ரிப்ளை கொஞ்சம் கூடப் பண்ணல.
அதனால நாளை பின்ன வயித்துல குழந்தை வந்த பிறகு இந்தச் சமூகம் என்னைத் தப்பா பேசும். என்னைத் தப்பா பேசினால் கூட பரவாயில்லை, அப்பா பெயர் தெரியாமல் என்னோட குழந்தை வளர நான் விரும்பல. அதனால எனக்கு மாதவிடாய் வருவதற்கு முன்னாடியே மாத்திரை போட்டு நானே பீரியட்ஸ் வர வைத்துவிட்டேன்.
அதன் பிறகு தான் தெரியுது நீங்க இவ்வளவு ஆர்வமா குழந்தை பற்றி கேட்பீர்கள் அப்படி என்று. இந்த நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் கொடுத்திருந்தால், நம்ம வயித்துல குழந்தை வளர்ந்து இருக்கும், மூன்று மாதம் கருவாக. ஆனால் அது உருவாகாமலேயே சிதைந்து போச்சு. என்னை மன்னிச்சிடுங்க,”
என்று அவள் கையெடுத்துக் கும்பிட்டு அவன் காலடியில் விழுந்து அலறித் துடிக்க,குழந்தை உருவாகுவதற்கு முன்பாக ‘உன் மீது நம்பிக்கை இல்லாமல் நான் அதை ஆரம்பத்தில் தடுத்து விட்டேன்’ என்று சொன்ன அடுத்த நிமிடமே, அவன் இதயம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது.
‘என்னுடைய அம்மு என்னை நம்பவில்லையா? அன்று இருவரும் ஈருடல் ஓருயிராகக் கலந்து, ஒருவரை ஒருவர் வெட்கம் இன்றி கலந்த நிமிடத்தில் தன்னை அவள் நம்பவில்லையா? அவள் கருவில் தன் உயிர் நீர் வலியோடு சென்ற பொழுது அவளுக்கு அந்த உணர்வு தோணவில்லையா? அப்படி என்ன நம்பிக்கை இன்மை தன் மீது?’ என்று அவனுக்குள் அவனே கேள்வி கேட்க, ஆனால் எதிரில் இருப்பவள் மனம் உடைந்து அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை.
அவன் எதுவும் பேசவில்லை.தன்னைச் சமாதானம் செய்து கொண்டு, பெருமூச்சு இழுத்து விட்டு,”அம்பை, அழுது எதுவும் ஆகப் போறதில்லை. நாளைக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. அதுக்கு அரேஞ்ச் பண்ண வேலையைப் பாருங்க. அப்புறம் இன்னைக்கு உள்ள பேலன்ஸ் அக்கவுண்ட்ஸ் எல்லாத்தையும் முடிக்கப் பாருங்க.
ஆஃபீஸ்ல ஆஃபீஸ் வேலை மட்டும் பார்த்தா நல்லது,” என்று மூன்றாம் நபரிடம் பேசுவது போல் பேச,அம்பை அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, அவன் கண்களில் அன்னியத்தன்மை.”செழியன், அது நான் அவசரப்பட்டு விட்டேன். என்னை…”தீ சுட்டது போல் அவளை விட்டு விலகி நிற்க, அம்பைக்கு மனம் வலித்துப் போய்விட்டது.
இத்தனை நாட்கள் அவனைப் புறக்கணித்தவளுக்கு, இப்பொழுது அவனின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. இதுதான் பெண் மனம்.இதற்கு மேல் அவரிடம் கெஞ்சுவதற்கு அவள் சாதாரணப் பெண் இல்லையே. கண்களை அழுத்த துடைத்துக்கொண்டு, கோப்பைகளை எடுத்துக்கொண்டு தன் இருக்கைக்குள் சென்று வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
சாளரத்தின் வழியாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.’என் மேல எப்படி அம்மு உனக்கு நம்பிக்கை இல்லாம போகும்? நம்ம பாப்பாவை உருவாக்குவதற்கு முன்னாடி இப்படி கொன்னுட்டியே! இது மூணு மாசம் நம்ம பாப்பாவைப் பற்றி நினைச்சு நினைச்சு எவ்வளவு கற்பனை பண்ணி இருந்தேன் தெரியுமா? அது உன்னை மாதிரி இருக்கும், என்ன மாதிரியும் இருக்கும்.
நம்ம ரெண்டு பேரையும் உறிச்சு வச்ச மாதிரி பிறந்து, நம்ம வீட்டையே சுத்தி சுத்தி இளவரசி மாதிரி வருவதை நினைக்கும் பொழுது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. எதுக்குடி என்னோட குழந்தையைக் கொன்ன? இது உனக்குத் தண்டனை இருக்கு. காதல் கொண்டு உன்னைப் பைத்தியக்காரத்தனமாகச் சுத்தி வந்த செழியன் போய், இனி அதே காதல் கொண்டு உன்னை வதைக்கிற செழியன் வரப்போறான்,’ என்று மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அடுத்த கட்ட வேலையைத் தீர்மானிக்க முடிவு செய்தான்.
இங்கே யோகிதா பதட்டமாக இருந்தாள். கரு பரிசோதனைக் கருவியில் தன் பார்வையைச் செலுத்தி, இரண்டு மாதமாக அவளுக்கு மாதவிடாய் வரவில்லை. சோதனையின் இறுதி முடிவாக, சிகப்பு நிறத்தில் இரு கோடுகள் அவளை வரவேற்றது. மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு பக்கம் கண்ணீர். இதற்கு காரணமானவன் இனி ‘தன்னை மறந்து விடு’ என்று சொல்லிவிட, இவளால் எப்படி அழிக்க முடியும்? தன் வயிற்றை வருடி,”குட்டி, நமக்கு யாரும் வேண்டாம்.
எனக்கு நீ, உனக்கு நான். மத்த பொண்ணுங்க மாதிரி தப்பு பண்ணிட்டு, கருவை அழிக்கிற ராட்சசி இல்லை நான். என்னோட விருப்பப்பட்டு உன்னோட அப்பா கூட என்னை இழந்துவிட்டேன். நாங்க ரெண்டு பேரும் உன்னை வரவேற்க ஆசைப்பட்டோம்.ஆனால் அவருக்கு இதுல விருப்பமில்லை.
என் வாழ்க்கையில மின்னல் வேகத்தில் வந்தார். உன்னைக் கொடுத்துட்டு, அவர் கடமை முடிந்து போனது போல என்ன விட்டு போயிட்டாரு. அதுக்காக நான் கடமை தவறாமல் இருக்க மாட்டேன். அம்மா உனக்காக வெயிட் பண்றேன் குட்டி,”
என்று இரண்டு மாதக் கருவிடம் பேசிக்கொண்டே அன்று நடந்த விஷயத்தை நினைத்துப் பார்க்க ஆரம்பிக்க,அதே சமயம், இரண்டு மாதங்களுக்கு முன்பு யோகிதாவை டேட்டிங் அழைத்துச் சென்ற நாளை நினைத்து நினைத்துப் பல மது பாட்டிலை குடித்து உடைத்து வைத்திருந்தான், அவள் குழந்தையின் தகப்பனான ராம்.
