அத்தியாயம் 6
அந்தத் தீவின் கடற்கரை, ரத்த வாடையுடனும், உடைந்த நம்பிக்கைகளுடனும் விடியத் தொடங்கியது. ஆண்டனியின் ஆட்கள் சிதறி ஓடியிருந்தனர். டேவிட்டின் ஆட்கள் அவர்களை விரட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். டேவிட் களைப்புடன் காயத்ரி இருந்த இடத்தை நோக்கி வந்தான்.
அவனது கைகளில் ரத்தம் உறைந்திருந்தது, முகத்தில் கோபத்தின் சுவடுகள் இன்னும் நீங்காமல் இருந்தன.காயத்ரி அவனைக் கண்டதும் சட்டென்று எழுந்தாள். அவனது நிலையை பார்த்ததும் அவள் மனதில் ஒரு வலி தோன்றியது.அவனைப் பார்த்து மிகவும் பதட்டமாக
“டேவிட்… உங்களுக்கு எதுவும் ஆகலையே?” என்று கேட்டாள்.டேவிட் அவளை நோக்கி ஒரு படி நெருங்கி வந்தான். அவனது கண்கள் அவளை ஆழமாக ஊடுருவின. “இல்ல காயத்ரி… நான் நல்லா இருக்கேன். ஆனா நீ…” என்று சொல்லி முடிப்பதற்குள், காயத்ரி தன்னை அறியாமலேயே அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அவனது மார்போடு அவள் ஒட்டியபோது, அவளது கண்ணீர் அவனது சட்டையில் விழுந்து ஒரு வட்டத்தைப் பதித்தது.அவனது உடலெங்கும் இருந்த வலி, அவளது அணைப்பில் மறையத் தொடங்கியது. டேவிட் மெல்ல அவளைத் தனது கைகளுக்குள் அணைத்துக் கொண்டான். அவனது கன்னம் அவளது உச்சந்தலையில் பதிந்தது.
அவளது கூந்தலின் வாசனை அவனது நுரையீரல் முழுவதையும் நிரப்பியது. “இன்னும் பயமா இருக்கா காயு?” என்று அவன் மென்மையாகக் கேட்டான்.”உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா… நான் என்ன பண்ணிருப்பேன்னு தெரியல,” என்று அவள் அழுதபடி சொன்னாள். அந்தத் தீவில், மரணத்தின் வாயிலில் கண்ட அந்த முத்தம், அவளது மனதை முழுமையாக மாற்றிவிட்டிருந்தது.
அவனது ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு பார்வையிலும் தெரிந்த அன்பின் ஆழத்தை அவள் இப்போது முழுமையாக உணர்ந்தாள்.டேவிட் மெல்ல அவளைப் பிரித்து, அவளது முகத்தை தனது கைகளுக்குள் ஏந்தினான். அவளது கண்ணீரைத் தனது கட்டைவிரலால் மெதுவாகத் துடைத்தான்.
“இந்த உலகத்துல உனக்கு ஏதாவது ஒன்னு ஆக நான் விட மாட்டேன் காயத்ரி. நீதான் என் உயிர். என் வாழ்க்கையோட அர்த்தமே நீதான்,” என்று அவன் சொன்னபோது, அவனது குரல் தேன் போல இனித்தது.காயத்ரிக்கு அவன் ஒரு யட்சனாக இருக்கவில்லை. அவன் அவளது காதலன், அவளது பாதுகாப்பு. அவள் மீண்டும் ஒருமுறை அவனது இதழ்களைத் தேடினாள். அவனுக்கோ அவளாகவே தன் நிறைந்த தேடி வந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் இன்னும் மூர்க்கமாக கொடுத்துக் கொண்டிருந்தான். இந்த முறை அந்த முத்தத்தில் பயம் இல்லை, காதல் மட்டுமே இருந்தது. அவர்கள் இதழ்கள் இணைந்தபோது, சூரியன் மெதுவாகக் கடலுக்கு மேலே எழும்பத் தொடங்கியது.
அந்த ஆரஞ்சு நிற ஒளி அவர்கள் இருவரையும் ஒரு மாய வளையத்திற்குள் அடைத்தது போலிருந்தது.சூரியனின் இளங்கதிர்கள் அவர்கள் இதழ்களின் மீது படர, ஒரு புதிய ஆரம்பம் அங்கே அரும்பியது.அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து மெல்ல நடந்தனர். டேவிட்டின் கைகள் அவளது கையைப் பற்றி இறுகப் பிடித்துக் கொண்டன. அவனது விரல்களின் அசைவில் அவளது இதயத்துடிப்பு அடங்கியது.”நான் உங்களை ராபர்ட்னு கூப்பிட மாட்டேன் டேவிட். உங்க உண்மையான பேர் என்னவோ, அதையே கூப்பிடுறேன்,” என்றாள் காயத்ரி.
டேவிட் அவளைத் திரும்பிப் பார்த்தான். “டேவிட்… என் உண்மையான பேர் அதுதான். ஆனா அந்தப் பேர்ல நிறைய ரத்தம் இருக்கு காயத்ரி. நீ அதை சுமக்க வேண்டியதில்லை.”
“நான் எதையும் சுமக்கத் தயார். உங்களையும் சேர்த்து, ஆனா உங்களை மட்டும் நான் ஒரு போதும் விடமாட்டேன்,” என்றாள் காயத்ரி ஒரு புதிய உறுதிமொழியைப் போல.அவர்கள் இருவரும் மாளிகையை நோக்கி நடந்தனர். தீவின் அமைதி மீண்டும் திரும்பியிருந்தது. ஆனால் அவர்களின் மனதுக்குள் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருந்தது.
டேவிட் தனது பாதுகாவலர்களிடம், “ஆண்டனியோட ஆளுங்க யாருமே இனிமேல் இங்க வரக்கூடாது. இந்தத் தீவை ஒரு நிமிஷம் கூட கண்ணுல இருந்து விடாதீங்க,” என்று உறுதியாக உத்தரவிட்டான்.மாளிகைக்குள் சென்றதும், காயத்ரிக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. டேவிட் அவளை அங்கே அழைத்துச் சென்றான்.
“இங்க பத்திரமா இரு. நான் ஆண்டனியைப் பத்தின எல்லா தகவல்களையும் இங்க இருந்தே கண்டுபிடிச்சு, அவனை நிரந்தரமா அழிக்கப் போறேன். அதுவரைக்கும் நீ என்கூட இங்க தான் இருக்கணும்,” என்றான்.”நான் உங்ககிட்ட இருந்து விலகவே மாட்டேன் டேவிட்,” என்று காயத்ரி சொன்னபோது, அவளது கண்களில் இருந்த காதல் டேவிட்டின் மனதை முழுமையாக நிரப்பியது.அவன் அவளது நெற்றியில் ஒரு மெல்லிய முத்தத்தைப் பதித்தான். “நான் சீக்கிரம் வருவேன் காயு,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.அவன் சென்ற பிறகும், காயத்ரி அவன் முத்தமிட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்தாள்.
அவனது ஸ்பரிசம் இன்னும் அவளது நெற்றியில் ஒட்டிக்கொண்டிருந்தது போலிருந்தது. ஒரு மாஃபியாவின் கோட்டையில், அவள் தன் காதலைக் கண்டறிந்தாள். ஆனால் இந்தக் காதலின் பின்னால் எவ்வளவு ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
_____
தீவின் மாளிகையில் அமைதி நிலவினாலும், டேவிட்டின் மனதுக்குள் ஒரு போர்க்களமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆண்டனி தன் எல்லைகளை மீறிவிட்டான். காயத்ரியைத் தொட நினைத்த அவனது கரங்களை வேரோடு அறுக்காமல் டேவிட் விடப்போவதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு முன்னால் இருந்த கடமை, தன் அருகில் ஒரு பூவைப்போலப் பயந்து நடுங்கி நிற்கும் காயத்ரியின் மனதை ஆற்றுப்படுத்துவதுதான்.மாலை நேரம்… வானம் ஒரு மென்மையான ஊதா நிறத்தில் குளித்திருக்க, கடல் அலைகள் கரையை முத்தமிட்டு மீண்டன.
காயத்ரி மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் கடலின் எல்லையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், எண்ணங்கள் அனைத்தும் அந்த முரட்டுத்தனமான காதலனைச் சுற்றியே இருந்தன.’டெல்லியில இருந்து நான் இங்க வந்த காரணம் பெரிய மாபியா கும்பலை கண்டுபிடிக்க . ஆனா, இப்போ ஒரு மாஃபியா தான் என் காதலன், என் உயிர். இப்போ என் எதிர்காலமே அவர்தான். அதுமட்டுமில்லாம, அவர் என்னை விட்டுப் போகமாட்டேன்னு சொல்றார். அவருக்கு இப்போ எல்லாமே நானா தான் இருக்கேன். இத நினைச்சு நான் சந்தோஷப்படுறதா இல்ல கஷ்டப்படுறதான்னு தெரியல.எல்லாரும் சந்தோஷமா பண்டிகை கொண்டாடுற நேரத்துல, அபசகுணம் மாதிரி ஒரு மோசமான அட்டாக் நடந்துடுச்சு. இப்போ டேவிட் எதிரிகளை எதிர்க்கப் போறேன்னு சொல்லும்போது எனக்கு பயமா இருக்கு. என் டேவிட்டுக்கு எதுவும் ஆகக்கூடாது. அம்மா, சாரு ரெண்டு பேரையும் காண்டாக்ட் பண்ண முடியல. டேவிட் எதிரிகளை எதிர்க்கப் போகும்போது அவருக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு. இப்போ இந்த மூணு பேரைத் தவிர என் மனசுல வேற எதையுமே யோசிக்க முடியல.’என்று அவள் மனம் மிகப் பெரிய போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்க.
“இன்னும் அதே யோசனை தானா?”பின்னாலிருந்து வந்த அந்தக் கனத்தக் குரலில் ஒரு மென்மை குழைந்திருந்தது. டேவிட் கையில் ஒரு மெல்லிய போர்வையோடு வந்தான். கடற்கரைக் காற்று ஜில்லிட்டிருந்ததால், அதை காயத்ரியின் தோள்களில் போர்த்தி, அவளருகே அமர்ந்தான்.
அவளது தோளோடு அவனது தோள் உரசும் போது, காயத்ரியின் உடலில் ஒரு மெல்லிய அதிர்வு பரவியது. டேவிட் தனது கரங்களை மெதுவாக காயத்ரியின் இடுப்பைச் சுற்றி வளைத்து, அவளைத் தன்னோடு சேர்த்துக் அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பு ஒரு இரும்பு வளையம் போல இருந்தாலும், அதில் பஞ்சு போன்ற மென்மை இருந்தது.காயத்ரி அவனது தோளில் தலை சாய்த்தாள்.
“டேவிட்… நாம ரெண்டு பேரும் வேற வேற துறையை சேர்ந்தவங்க. அதான் நமக்குள்ள இந்த நெருக்கம் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தை தருது. ஆனால், இந்த நிமிஷம் ரொம்ப அழகா இருக்கு, ஆனா நாளைக்கு…?”டேவிட் அவளது கையை எடுத்துத் தனது இதழ்களோடு அழுத்திக் கொண்டான்.
“நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது காயு. ஆனா இந்த நிமிஷம், என் கைக்குள்ள நீ இருக்க. உன்னோட இந்த வாசனையும், உன்னோட இதயத்துடிப்பும் தான் என்னோட உலகம். இதைத் தாண்டி எனக்கு வேற எதுவும் வேண்டாம்.”அவன் அவளது முகத்தைத் திருப்பி, தனது ஆழமான விழிகளால் அவளைப் பார்த்தான். நிலவொளி அவனது முகத்தில் பட்டுத் தெறிக்க, அவன் ஒரு தேவ ரட்சகனை போலத் தெரிந்தான்.
அவனது விரல்கள் அவளது கன்னத்தைச் செதுக்குவது போலத் தடவி, மெல்ல அவளது இதழ்களின் மீது நிலைகொண்டன.காயத்ரியின் மூச்சுக்காற்று சூடானது. அவனது நெருக்கம் அவளது அடிவயிற்றில் ஒரு இனம்புரியாத தாகத்தை உண்டாக்கியது. டேவிட் மெல்லத் தலை குனிந்து, அவளது இதழ்களைத் தனது இதழ்களால் சிறைபிடித்தான்.
இந்த முறை அந்த முத்தத்தில் வேகம் இல்லை; ஒரு நீண்ட கவிதை போல மெதுவாக, ஆழமாக, ஒவ்வொரு நொடியையும் ரசித்து அவன் அவளைப் பருகினான். காயத்ரி அவனது சட்டையைப் பலமாகப் பற்றிக் கொண்டாள். அவனது ஸ்பரிசம் அவளை உருக்கியது.முத்தத்தின் ஈரம் காயும் முன்பே, அவன் அவளது கழுத்தில் முகம் புதைத்தான். அவனது சூடான மூச்சு அவளது நரம்புகளைத் தட்டியெழுப்பியது.
“நீ இல்லாம இனி ஒரு நொடி கூட என்னால இருக்க முடியாது காயு… நீ தான் இந்த டேவிட் பலமும், பலவீனமும்,” என்று அவன் முணு முணுத்தபோது, காயத்ரிக்கு உடல் சிலிர்த்தது.அவள் அவனை இன்னும் இறுக கட்டிக் கொண்டாள். “என்னை விட்டுட்டுப் போயிட மாட்டீங்க தானே?””உன் நிழல் கூட உன்னை விட்டுப் போகலாம், ஆனா இந்த டேவிட் மில்லர் போக மாட்டான்,” என்று அவன் சொல்லியபடியே அவளை அப்படியே அள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றான்.
அறைக்குள் மெல்லிய விளக்கு வெளிச்சம். அவன் அவளைப் படுக்கையில் கிடத்தி, அவளருகே அமர்ந்தான். அவளது கூந்தலைக் கோதிவிட்டபடியே,
“இன்னைக்கு நடந்த சூழ்நிலையால் நம்முடைய விடுமுறை முடியுது. நாளைக்கு நாம மெக்சிகோ சிட்டி திரும்பணும். ஆனா அங்க ஆண்டனி உனக்காக வலை விரிச்சு காத்துட்டு இருப்பான். நீ என்கூடவே, என் கோட்டையிலேயே இருக்கணும். சரியா?”காயத்ரி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“உங்க கூட நான் இருந்தா எனக்கு நரகமும் சொர்க்கம் தான் டேவிட். ஆனா என் வேலை… என் அடையாளம்?”
“உன் அடையாளம் இனி டேவிட் மில்லரோட காதலி. அதை விடப் பெரிய அடையாளம் உனக்கு தேவையில்லை,” என்றான் அதிகாரமாகவும் ஆசையாகவும்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அந்த இரவு அவர்களின் காதலுக்குச் சாட்சியாக நீண்டு கொண்டிருந்தது.
வெளியே மெக்சிகோவின் இருண்ட இரவு மௌனமாகத் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த அறைக்குள், விளக்குகளின் மங்கலான ஒளியில் காலமே உறைந்து நின்றது. அதுவரை துப்பாக்கிகளின் சத்தத்தையும், அதிகாரத்தின் ஆக்ரோஷத்தையும் மட்டுமே பார்த்துப் பழகிய டேவிட், இன்று காயத்ரியின் முன்னால் ஒரு குழந்தையைப் போலச் சரணடைந்திருந்தான்.
காயத்ரியின் கண்கள் ஈரமாக இருந்தன. ஆனால் அந்த கண்ணீரில் சோகம் இல்லை, டேவிட் மீதான தீராத காதல் மட்டுமே இருந்தது. டேவிட் அவளது முகம் வருடினான். அவனது கரங்களின் கடினத்தன்மை காயத்ரியின் மென்மையான மேனியில் பட்டபோது, அவளுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது.
“காயு… இந்த உலகம் நம்மளைப் பிரிக்கப் பார்க்குது. ஆனா இந்த நிமிஷம், நீயும் நானும் மட்டும் தான்,” என்று அவன் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.அவன் அவளை மெல்லத் தழுவி, கட்டிலில் சரித்த போது, காயத்ரியின் இதயம் ஒரு இசைக்கருவியைப் போலத் துடித்தது. அவனது மூச்சுக்காற்று அவளது கழுத்துப்பகுதியில் பட்டபோது, அவள் தன்னுணர்வை இழக்கத் தொடங்கினாள்.
டேவிட் அவளது நெற்றியில் இட்ட அந்த ஒற்றை முத்தம், அவளது அத்தனை பயங்களையும் போக்கியது.அவர்களின் கூடல் என்பது வெறும் உடல்களின் சந்திப்பு அல்ல; அது துரோகமும் வன்முறையும் நிறைந்த ஒரு உலகில், தங்களை ஒருவருக்கொருவர் புகலிடமாக மாற்றிக் கொண்ட தருணம். காயத்ரி அவனது வலிமையான தோள்களில் புதைந்து கொண்டாள். டேவிட்டின் இதழ்கள் அவளது இதழ்களோடு சங்கமித்த போது, அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லாமல் போனது.
அறைக்குள் இருந்த மௌனத்தை அவர்களின் மூச்சுக் காற்றும், இதயத்துடிப்பும் மட்டுமே கலைத்தன. காயத்ரியின் மென்மை டேவிட்டின் முரட்டுத்தனத்தை முழுமையாகக் கரைத்திருந்தது. அந்த இரவில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டனர்.
ஒவ்வொரு தீண்டலும், “நான் உன்னோடு இருப்பேன்” என்ற வாக்குறுதியைச் சொல்லாமல் சொல்லியது. அந்த நீண்ட நேரக் கூடலின் முடிவில், காயத்ரி டேவிட்டின் மார்பில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினாள்.அதுவரை வேட்டைக்காரனாக இருந்த டேவிட், இன்று ஒரு காதலனாக அவளைத் தன் கைகளுக்குள் பொத்திப் பாதுகாத்தான். அந்த இரவு அவர்களுக்கு ஒரு புதிய விடியலை நோக்கிய நம்பிக்கையைத் தந்தது.
மெக்சிகோ நகரம் மிகவும் அமைதியாக இருந்தது.ஆனால், அந்த அமைதிக்கு மறுபுறம், மெக்சிகோ சிட்டியில் ஆண்டனி ஒரு மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான்.
டேவிட்டின் கோட்டையைத் தகர்க்க அவன் எடுத்த அந்த முடிவு, பல உயிர்களைப் பலி வாங்கக் காத்திருந்தது.மரணமும் காதலும் ஒன்றாகப் பயணிக்கும் அந்தச் சாலையில், டேவிட் மற்றும் காயத்ரியின் அடுத்த கட்டப் பயணம் மெக்சிகோ சிட்டியை நோக்கித் தொடங்கியது.—