Home ANTIHERO6) பார்வை 😍

6) பார்வை 😍

by sreejanovels
9 views

அத்தியாயம் 6

புதிய வீட்டிற்குச் சென்ற பிறகு அனைத்து வேலைகளும் முடிய, பெண்கள் இருவரும் ஆசிரமத்திற்கு (Home) சென்றனர். அவர்களுக்காகவே காத்திருந்தான் இனியன்.

சகோதரனைப் போன்ற அவனைப் பார்த்தவுடன், ஆனந்தக் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்து, “எப்படி அண்ணா இருக்கீங்க? அண்ணி எப்படி இருக்காங்க? எல்லாரும் எப்படி இருக்காங்க? பசங்க, அத்தை, மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க? அப்புறம்… விஜய்?” என்று தன் குடும்பத்தினர் அனைவரைப் பற்றியும் விசாரித்து, இறுதியாகத் தன் கணவன் பெயரை மெதுவாகச் சொன்னாள்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க, அதுல ஒருத்தனைத் தவிர. நீதான் அவனைப் பாதியிலேயே விட்டுப் போயிட்டியே, முழுசா மிருகம் ஆகிட்டான். அவனைப் பத்திப் பேச விரும்பல. இதோ உங்க அண்ணி, பசங்களுக்காக வீட்ல பண்ணி வச்சது. எனக்கு உன்னுடைய ஞாபகம் வந்தது. உனக்குத்தான் சிக்கன் சாண்ட்விச் என்றால் உயிர் ஆச்சே, அதான் கொண்டு வந்தேன். இவங்கதான் உனக்கு உதவியாக (Helpful) இருக்கிறவங்களா?” என்று இனியன் சுவாதியைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.

“ஆமாம் புரோ, இவ என்கிட்ட சரியான விஷயத்தைச் சொல்லவே இல்லை. நீங்க சொல்லுங்க, விஷயத்தைப் பார்த்தா பெரிய குடும்பம் மாதிரி இருக்கு, ஆனா ஏதோ ஒரு காரணமாகத் தனியாக வந்திருக்கா. நான் கேட்டதுக்கு என்னால முடியலன்னு சொல்றா. இதுவரைக்கும் உங்களைப் பத்தித் தப்பா அவ பேசுனதே கிடையாது, குறிப்பா அவ கணவனைப் பத்தி. ஆனா ‘என்னால் அவர் கூட இருக்க முடியாது’ன்னு சொல்றா. அப்ப கூட தினமும் அவ ஹஸ்பண்டை பத்தி ஏதாவது ஒரு விஷயத்தைப் பார்த்துக்கிட்டே இருப்பா. நானே வியந்து போயிட்டேன், அவர் இவ்ளோ பெரிய பிசினஸ்மேன் அப்படின்னு. அப்படிப்பட்ட ஒரு பொண்டாட்டி மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு இருக்கான்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு. அதுவும் அப்போ டெலிவரி டைம்ல இவ பட்ட அவஸ்தை இருக்கே, நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். குழந்தைக்குக் கழுத்துல குடல் சுத்திப் போச்சு. ஆபரேஷன் பண்ண இவளுக்கு அந்த அளவுக்கு இரத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நார்மல் டெலிவரி ட்ரை பண்ணாங்க. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதான் டெலிவரி ஆச்சு, இல்லைன்னா இவளையும் குழந்தையையும் காப்பாத்தி இருக்க முடியாது. எப்படியோ எல்லாம் முடிஞ்சுது. அப்போ கூடச் சொன்னேன், இந்த விஷயத்தையாவது உங்க வீட்ல சொல்லு அப்படின்னு, ஆனா வேண்டாம்னு ரோஷமா இருந்துட்டா,” என்று சுவாதி அவளைப் போட்டுக் கொடுத்துவிட…

“அவ எடுத்த முடிவுல விடாப்படியா இருப்பாமா. சரி, இது நீங்க இருக்கிற ஆசிரமமா? எப்பயாவது ஒரு தடவை நாங்க எங்க பசங்களுக்கு உணவு, டிரஸ் எல்லாம் வழங்குவோம் (Provide),” என்று இனியன் ஆசிரமத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க…

“வெளியே இருக்கீங்களே, உள்ள வாங்க. எங்க மதருக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். கஸ்தூரி அம்மா ரொம்ப நல்லவங்க,” என்று சுவாதி, இனியனை ஆசிரமத் தலைவரிடம் அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றாள். இங்கே வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைத் தன் மகனோடு இணைய வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

‘விஜய் டிவில பார்க்கும்போது நல்லாதானே இருந்தாரு, ஆனா அண்ணன் சொல்றதைப் பார்த்தா அவர் நிலைமை மோசமா இருக்குன்னு சொல்றாங்களே. அவரைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு, ஆனா அவரைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாதே? அவர் இப்ப எங்க பிசினஸ் பண்றாரு? என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு ஒண்ணுமே புரியல. ஆனா அவர்கிட்ட சொல்லாம வந்துட்டேன், அட்லீஸ்ட் சொல்லிட்டுப் போயிருக்கணும். அதனால என்னை மொத்தமா வெறுத்திருப்பார். அட்லீஸ்ட் வேறொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம் இல்லையா? வினோ அக்காவோட இடத்தை என்னால நிரப்ப முடியவில்லை. அது எப்படி என்னால முடியும்? நான் கீதாஞ்சலி, என்னோட குணத்தோடுதான் நான் இருக்க முடியும். வினோ அக்கா அவங்க குணத்தோடு இருக்க முடியும். இவர் எப்படி அவங்க இடத்துல என்னை நிரப்பலாம், அதுவும் அவங்க பேர் சொல்லி என்கிட்ட?’ என்று நினைக்கும்போது அவள் நெஞ்சைப் பிழிவது போல் இருந்தது.

‘இதைப் பற்றி நினைக்கக் கூடாது, மொத்தமாக மறந்துவிடு’ என்று தன் மனதைத் தானே சமாதானம் செய்து கொண்டவள், குழந்தையின் மீது தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.

,,,,,,,,,,

விஜய், இரண்டு வருடத்தில் கீதாஞ்சலி சென்னையிலிருந்து சென்றதிலிருந்து மீண்டும் சென்னைக்கு வந்தது வரை இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது, அவளுக்குப் பிரவம் என அனைத்துத் தகவல்களும் அடங்கிய ஒரு கோப்பைத் (File) தான் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சென்னையிலிருந்து கிளம்பும்போது அவள் மூன்று மாதக் கர்ப்பம். அதைச் சொல்லாமல் இருந்தது பெரிய தவறு. போன ஆறு மாதத்தில் அவளுக்கு ஒரு அரசு மருத்துவமனையில் மிகவும் சிக்கலான டெலிவரி நடந்திருக்கிறது. அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி புரிந்தது சுவாதி என்ற பெண். அவளுக்கும் யாரும் இல்லை. ஊட்டியில் அவளுக்குச் சொந்த இடம் இருக்கிறது, அங்கேதான் இருவரும் இருந்திருக்கிறார்கள். ஒரு வேலைக்காரப் பாட்டி உதவி புரிந்திருக்கிறார். தங்களுடைய ஹோட்டலின் மற்ற நிறுவனம் ஊட்டியில் இருப்பதால், அங்கே அக்கவுண்டன்ட் வேலைக்கு இரு பெண்களும் சென்றுள்ளனர். குழந்தைக்காக அஞ்சலி அரை நாள் மட்டுமே சென்று வருவாள். இப்படி இருக்கும் சமயத்தில் நல்ல சம்பளத்திற்குச் சென்னைக்கு மாற்றம் பெற்று இரு பெண்களும் வந்திருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் துணையாக நின்றது அவனது ஆருயிர் மச்சான், தங்கையின் கணவன் இனியன் என்று மொத்த தகவல் அடங்கிய கோப்பைப் படித்து முடித்தவன்…

“துரோகி! என் குழந்தையைச் சாதாரண கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல பெத்திருக்கா. சம்பளத்திற்குச் சிரமப்பட்டு குழந்தையை வளர்த்திருக்கா. அவளைத் தாங்குவதற்கு இத்தனை பேர் இருந்தும் அனாதை மாதிரி அங்க இருந்திருக்கா. அவளுக்கு என்ன குறை வச்சேன்? விதவிதமா டிரஸ் வாங்கிக் கொடுத்து, அவளுக்கு என்னென்ன பிடிக்கும்னு தேடித்தேடி ஆர்டர் பண்ணிக் கொடுத்து, என்னோட மனைவி என்கிற கௌரவமான பதவி அவளுக்கு இருந்தது. அதை அனுபவிச்சு என்ஜாய் பண்ணாம, காதல் வேணும், அன்பு வேணும், தூய்மையான மனதோடு என்கிட்ட வாங்கன்னு லூசு மாதிரி பேசிட்டு இருப்பா பைத்தியக்காரி. இருந்த கடுப்புல அவ அப்பா மேல இருக்கிற கோபத்தை எல்லாம் இவ மேல காட்ட வேண்டியதா போச்சு. சரி, போனது போகட்டும்னு முதல் வருஷ கல்யாண நாள் அப்போ அவளுக்குப் ப்ரொபோஸ் பண்ணி, மொத்தமா என் குணத்தை மாத்தி அவளுக்குப் புருஷனா மனசோட மனசு இறங்கி வாழ்க்கை கொடுக்கலாம்னு பார்த்தா, திமிர் பிடிச்சவ சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுப் போயிருக்கா. எதுக்கு? அவளுக்குத் தண்டனை கிடைத்தே ஆகணும். கொஞ்ச நாள் போகட்டும், அதன் பிறகு இந்த கீதாஞ்சலி கதறப்போறா,” என்று சொல்லி முடித்துத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

,,,,,,,,,,,,,,,,

வெளியில் சென்று வந்த பிறகு ஒரு ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்த பெண்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். துணிகள் மட்டுமே அடுக்கும் வேலை என்பதால் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, அந்த வேலையை முடித்து இரு பெண்களும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சுதானே ஆபீஸ் போகணும்? நான் சோட்டுவைக் கூட்டிக்கிட்டு ஹோம்க்கு போகலாம்னு இருக்கேன். எப்படியோ நீ ஒரு தனிமை விரும்பி, கதை எழுதுவ, இல்லைன்னா பக்கத்திலேயே சூப்பரான ஒரு பார்க் இருக்கு, அங்க போய் இயற்கையை ரசிக்கப் போற. உன்னோட பூமர் ஆக்டிவிட்டீஸ்க்கு நான் ஒத்து வரமாட்டேன். அதனால நான் குழந்தையை கூட்டிக்கிட்டுப் போறேன், நீ வீட்டிலேயே இரு. வெளியே போக வேண்டுமென்றால் ஷாப்பிங் முடி. எப்படி ஐடியா?” என்று கேட்டதற்கு அஞ்சலியும் சரி என்று ஒப்புக்கொள்ள, குழந்தையைத் தூக்கிக்கொண்டு சுவாதி உறங்க ஆரம்பித்தாள். அஞ்சலி இனியன் எண்ணிற்கு அழைத்து…

“அண்ணா நான் அஞ்சலி பேசுறேன், உங்ககிட்ட ஒரு பர்மிஷன் கேட்கணும்.”

“சொல்லுடா, என்கிட்ட என்ன கேட்கணும்?”

“அண்ணா, நான் மட்டும் நம்ம வீட்ல இருக்குற எல்லாரையும் பார்க்க வரலாம்னு இருக்கேன். யார்கிட்டயும் சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸ் விசிட்டிங்.”

“ஓ மை காட் அஞ்சலி! நீ இதைச் சொன்னதே பெரிய விஷயம். இப்போதைக்குக் குழந்தை இருக்கிற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்லல. தெரிஞ்சா என்னைப் பெண்டு நிமித்திடுவாங்க. நீ மட்டும் வந்து எல்லாரையும் பார்த்து ஆறுதலா பேசிட்டுப் போ. தாத்தா சாவுக்குக் கூட நீ வரல, அதைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம். நீ நாளைக்குக் கிளம்பும்போது போன் பண்ணு, நான் எல்லாம் அரேஞ்ச் பண்றேன்,” என்று சொல்லி முடித்து மொபைலைத் துண்டித்தான்.

அங்கே பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாளைச் (Question Paper) சரிபார்த்துக் கொண்டிருந்த இசை அருகில் வந்து அமர்ந்தவன், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்,” என்றான்.

“என்ன சர்ப்ரைஸ்?” என்று தீவிரமாக வினாத்தாளைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“உங்க அண்ணனின் சரிபாதி நாளைக்கு வரப்போறாங்க.”

காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் சுருங்கித் தன் கணவனைப் பார்த்தாள்.

“அதான் உங்க அண்ணன் விஜய்யோட பொண்டாட்டி கீதாஞ்சலி நாளைக்கு நம்மளைப் பார்க்க வரப்போறாளாம். உங்க அண்ணன்தான் இந்தப்பக்கம் வந்து பல வருஷம் ஆகுது, அதான் அந்தப் பொண்ணு தைரியமா நம்ம எல்லாரையும் ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம்னு வருது. ஆனா தப்பித் தவறி குழந்தையைப் பத்தி நீ கேட்காத. இதுவரைக்கும் குழந்தையைப் பத்தி நான் யார்கிட்டயும் சொல்லல அப்படின்னு சொல்லி இருக்கேன்,” என்று மனைவியிடம் அறிவுரை சொன்னான்.

“அவங்க வருவது பெரிய விஷயம், வரட்டும் வரட்டும். நான் அவளுக்குப் பிடிச்சதைச் செஞ்சு தரப்போறேன். எப்படியும் நாளைக்கு லீவுதானே, எல்லாரும் வீட்லதான் இருப்பாங்க. யாரையும் வெளியே போகாம தடுத்து விடுகிறேன், முக்கியமா பசங்களை,” என்று குதூகலமாகச் சொல்ல, அப்படியே தன் மனைவியை மடியில் அமர வைத்துக் கொண்டவன், “அப்போ இன்னைக்கு?” என்று அவள் கழுத்தோரம் முத்தங்கள் கொடுத்துக் கொண்டே சென்றான்.

“மாசத்துல அஞ்சு நாள் தவிர மத்த எல்லா நாளும் உங்களுக்கு விருந்துதானே? ஏதோ புதுசா கேட்கிற மாதிரி கேட்கிறீங்க?” என்று சலிப்பாகச் சொல்ல…

“அப்படி இருக்கிறதாலதான் நம்ம ரெண்டு பேரும் புத்துணர்ச்சியாகவும் நம்ம இருவருக்கும் இருக்கும் தாம்பத்தியம் நிலைத்திருக்குது. இதெல்லாம் ஒரு மனுஷனோட அன்றாடத் தேவைமா. விருப்பம் இல்லாமப் போனாத்தான் தப்பு, நம்ம ரெண்டு பேரும் விருப்பத்தோடு பண்ணுவோம். ஆரம்பத்துல நீ மிரண்டு பிடிச்சாலும் கடைசியில் நீதான் வேணும்னு சொல்லுவ, அது எப்படி தெரியுமா?” என்று அவளைப் போல் சொல்லி காண்பிக்க…

“அச்சோ அச்சோ போதும் போதும், அசிங்கப்படுத்த வேண்டாம். எனக்கும் பிடிச்சுத்தான் பண்றோம், அதனால்தான் மூணு பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கோம். சரிங்க நீங்க தூங்குங்க, கொஞ்சம் வேலை இருக்கு,” என்று அவள் வேலையைக் கவனிக்கச் செல்ல, அவள் வேலை முடியும் வரை விழித்துக் கொண்டிருந்தவன், அவள் வேலை முடிந்த பிறகு தன்னுடைய வேலையைத் தொடங்கினான்.

You may also like

Leave a Comment

About Me

Featured