Home ANTIHERO5) யட்சன்

5) யட்சன்

by sreejanovels
61 views

அத்தியாயம் 5    

அந்தத் தீவின் கடற்கரை கிராமம் வண்ண விளக்குகளாலும், காகிதத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த நாட்டின் பாரம்பரியத்திற்கு உரிய அந்தத் துடிப்பான இசை காற்றில் மிதந்து வந்தது. உள்ளூர் மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன் திரண்டு வந்திருந்தனர்

. காயத்ரி அன்று ஒரு உள்ளூர் மெக்சிகன் பெண்ணைப் போல ‘புயேப்லா’ பாணி எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற உடையணிந்து வந்திருந்தாள். அவளது நீண்ட கூந்தலில் ஒரு சிவப்பு நிற ரோஜா சூடப்பட்டிருந்தது.டேவிட் அவளைப் பார்த்தபோது ஒரு கணம் மூச்சடைத்துப் போனான். இதுவரை எத்தனையோ அழகிகளைப் பார்த்த அவனது கண்களுக்கு, காயத்ரியின் அந்த எளிமையான அழகு ஏதோ ஒரு மந்திரத்தைச் செய்வது போலிருந்தது. அவனும் ஒரு சாதாரண உள்ளூர் வாசி போல காட்டன் சட்டையும், ஜீன்ஸும் அணிந்து ஒரு சுற்றுலாப் பயணியைப் போலவே காட்சியளித்தான்.”இப்போ சொல்லுங்க ராபர்ட்… நாம ரெண்டு பேரும் இந்த கூட்டத்துல யாராவது கண்டுபிடிச்சிட மாட்டாங்கல்ல?” என்று காயத்ரி மெல்லிய குரலில் கேட்டாள்.

காயத்ரி இப்படி கேட்டவுடன் டேவிட் தன் சொன்னதற்காக தனக்கு மிகவும் பிடித்த பெயரை சொல்லி தன்னை அழைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.”கவலைப்படாதே காயத்ரி… இங்க இருக்கிற மக்களுக்கு என்னைத் தெரியும், ஆனா ராபர்ட்டா மட்டும் தான் தெரியும். அவங்களுக்கு நான் ஒரு உதவி செய்ற தொழிலதிபர் அவ்வளவுதான். இன்னைக்கு நாம ரெண்டு பேரும் வெறும் அந்நியர்கள்,” என்றான் டேவிட்.

திருவிழாவில் ‘மரியாச்சி’ இசைக்குழுவினர் தங்கள் பெரிய தொப்பிகளுடன் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு முதியவர் அவர்கள் இருவரையும் பார்த்து, “இளம் ஜோடிகளே! இந்த நடனப் போட்டியில் கலந்துக்கலாமே?” என்று ஸ்பானிஷ் மொழியில் கேட்டார்.காயத்ரிக்கு ஸ்பானிஷ் புரியவில்லை என்றாலும், அவரது சைகை புரிந்தது. அவள் டேவிட்டைப் பார்த்து, “என்ன சொல்றாரு?” என்று கேட்டாள்.”நாம ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடணும்னு சொல்றாரு. முடியாதுன்னு சொல்லிடுவோமா?” என்றான் டேவிட் ஒருவித குறும்பான பார்வையுடன்.

“ஏன்? உங்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியாதா?” என்று சவால் விட்டாள் காயத்ரி.டேவிட் அவளது கையைப் பற்றி நடன மேடையை நோக்கி இழுத்துச் சென்றான். இசை வேகமெடுத்தது. மெக்சிகோவின் பாரம்பரிய நடனமான ‘ஜாராப் தபாடியோ’ போன்ற ஒரு துடிப்பான இசைக்கு இருவரும் ஆடத் தொடங்கினர். காயத்ரி ஆரம்பத்தில் தயங்கினாலும், டேவிட்டின் லாவகமான அசைவுகள் அவளை உற்சாகப்படுத்தின. இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டபோது, அந்த இடமே மறைந்து போனது போலிருந்தது. அவள் ஒரு டிடெக்டிவ் என்பதையும், அவன் ஒரு மாஃபியா என்பதையும் அந்தத் தருணத்தில் இருவரும் மறந்து போனார்கள்.நடனம் முடிந்து மூச்சிரைக்க இருவரும் கடற்கரை ஓரம் ஒதுங்கி நின்றனர்.

“ராபர்ட்… உங்களை இப்படிப் பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க நிஜமாவே ஒரு நல்ல மனுஷனா இருக்க முடியும்னு இப்பதான் நம்புறேன்,” என்றாள் காயத்ரி உணர்ச்சிவசப்பட்டு.டேவிட் அவளை ஏதோ சொல்ல முற்படும்போது, அவனது காதில் இருந்த சிறிய ரகசிய கருவி அதிர்ந்தது. ராபர்ட்டின் குரல் அதில் கேட்டது, “சார்… ஆபத்து! ஆண்டனியின் படகுகள் தீவை நெருங்கிடுச்சு. அவங்க ஆயுதங்களோட வர்றாங்க. மக்கள் கூட்டத்துல அவங்க கலந்துட வாய்ப்பிருக்கு!”டேவிட்டின் முகம் நொடியில் மாறியது.

அந்த மென்மையான ராபர்ட் மறைந்து, ஆக்ரோஷமான டேவிட் மில்லர் வெளிப்பட்டான். அவனது கண்கள் சுற்றும் முற்றும் ஸ்கேன் செய்வது போலப் பார்த்தன.”காயத்ரி, இப்போ நான் சொல்றத மட்டும் செய். எந்தக் கேள்வியும் கேட்காதே. நேரா அந்தப் பின்னாடி இருக்கிற தேவாலயத்துக்குப் போயிடு. அங்க என் ஆளுங்க இருப்பாங்க,” என்று அவளைத் தள்ளாத குறையாக அனுப்பினான்.”என்ன ஆச்சு? ஏன் இப்போ பதற்றப்படுறீங்க?”

“ஆண்டனி வந்துட்டான் காயத்ரி! அவனோட வேட்டை ஆரம்பிச்சிடுச்சு. போ!” என்று கத்தினான்.காயத்ரி ஓடத் தொடங்கிய அதே சமயம், கூட்டத்திற்குள் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. திருவிழாவின் மகிழ்ச்சி ஒரே நொடியில் மரண ஓலமாக மாறியது. டேவிட் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மின்னல் வேகத்தில் மறைவிடங்களுக்குத் தாவினான்.ஆண்டனியின் ஆட்கள் சரமாரியாகச் சுட்டுக் கொண்டே முன்னேறினர்.

அதே சமயம் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகளை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்பி கொண்டிருந்தனர். டேவிட் அவர்களைத் தனி ஆளாக எதிர்கொண்டான். அவனது குறி தப்பவில்லை. ஆனால், எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காயத்ரி ஓடும் வழியில், ஒரு குண்டடிப்பட்டு விழுந்த குழந்தையைப் பார்த்ததும் அவளால் அப்படியே கடந்து செல்ல முடியவில்லை.அவள் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தற்காப்புக்காக ஒரு மணல் மூட்டையின் பின்னால் அமர்ந்தாள்.

அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு நிழல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால், ஆண்டனியின் முக்கிய அடியாட்கள் இருவர் அவளை நோக்கித் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தனர்.”காயத்ரி மல்ஹோத்ரா… உன்னால தான் எங்க முதலாளிக்கு இவ்வளவு நஷ்டம். உன்னை இன்னைக்கு உயிரோட விடமாட்டோம்,” என்றான் ஒருவன் வஞ்சத்துடன்.காயத்ரி கண்களை மூடிக்கொண்டாள். ஒரு மரண அமைதி நிலவியது. அடுத்த நொடி, ஒரு புல்லட் பாயும் சத்தம்…ஆனால் அது காயத்ரியைத் தாக்கவில்லை.

துப்பாக்கி ரவை காயத்ரியைக் கடந்து சென்று எதிரியின் மார்பைத் துளைத்தது. காயத்ரி அதிர்ச்சியில் கண்களைத் திறந்தபோது, அங்கே டேவிட் நின்றிருந்தான். அவன் கைகளில் இருந்த துப்பாக்கி இன்னும் புகைந்து கொண்டிருந்தது. அவனது கண்கள் சிவந்து, முகம் முழுவதும் ஆக்ரோஷமான வேர்வையில் நனைந்திருந்தது.”காயத்ரி!” என்று கத்திக்கொண்டே அவளருகே பாய்ந்தான்.

அதே சமயம் டேவிட் ஆட்களில் ஒருவன் அடிபட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.இங்கே டேவிட் காயத்ரியை அப்படியே தரையோடு சேர்த்து அணைத்து உருண்டு, அருகில் இருந்த மரப் பெட்டிகளின் பின்னால் மறைந்தான்.குண்டுகள் அவர்கள் தலைக்கு மேலே சீறிச் சென்றன. அந்த மரண பயத்திற்கு நடுவே, காயத்ரி டேவிட்டின் மார்போடு ஒட்டியிருந்தாள்.

அவனது இதயத்துடிப்பு ஒரு போர்முரசின் வேகத்தில் அவளது காதுகளில் ஒலித்தது.”பயப்படாதே… நான் இருக்கேன்,” என்று அவன் முணுமுணுத்தபோது, அவனது இதழ்கள் அவளது காதோரம் உரசிச் சென்றன. அந்த இக்கட்டான சூழலிலும், அந்தத் தழுவல் காயத்ரியின் அடிவயிற்றில் ஒரு மின்சாரத்தை ஏற்றியது. அவனது உடலின் வலுவும், அந்தப் பாதுகாப்பான அணைப்பும் அவளைச் சிலிர்க்க வைத்தன.டேவிட் தனது துப்பாக்கியை ரீலோட் செய்தபடி, காயத்ரியின் முகத்தைத் தனது கைகளால் ஏந்தினான்.

“காயு… என் கண்ணைப் பாரு. இப்போ நான் சொல்றது உனக்கு விசித்திரமா இருக்கலாம். ஆனா, ஒருவேளை நாம இங்க இருந்து உயிர் பிழைக்கலைன்னா… இந்த ஒரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும். நான் இதுவரைக்கும் எந்த ஒரு பொண்ணுக்காகவும் என் உயிரைப் பணையம் வச்சது இல்லை. ஆனா உனக்காக… இந்த உலகத்தையே நான் எரிப்பேன்,” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவனது கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம், அந்தத் தவிப்பு காயத்ரியின் மனதை மொத்தமாகக் கரைத்தது. ஒரு மாஃபியா தலைவனின் முகமூடி முற்றிலுமாகக் கலைந்து, ஒரு காதலனின் ஏக்கமான முகம் அங்கே தெரிந்தது. மரணத்தின் நிழல் அவர்களைச் சுற்றி ஆடிக்கொண்டிருக்க, காயத்ரிக்கு எதைப் பற்றியும் கவலை வரவில்லை.அவள் மெல்லத் துணிச்சலைத் திரட்டி, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவளது இதழ்கள் அவனது இதழ்களை நோக்கி மெல்ல நகர்ந்தன. டேவிட் ஒரு கணம் திகைத்தான், ஆனால் அடுத்த நொடி அவன் அவளை வெறித்தனமாக முத்தமிட்டான்.அந்த முத்தம்… அது வெறும் முத்தமல்ல.

அதில் பல ஆண்டுகாலத் தனிமை இருந்தது, ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அடங்காத காதல் இருந்தது. குண்டுகள் வெடிக்கும் சத்தமும், மக்களின் அலறலும் அவர்களுக்குப் பின்னால் தேய்ந்து மறைந்தன. காலமும் இடமும் உறைந்து போன அந்த நொடியில், ஒரு மாஃபியா எனப்படும் டேவிட்டும் ஒரு டிடெக்டிவ் எனப்படும் காயத்ரியும் தங்கள் ஆன்மாக்களைப் பரிமாறிக் கொண்டனர். அவனது இதழ்களின் சூடு காயத்ரியின் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது.

அவளது கை விரல்கள் அவனது கலைந்த கூந்தலுக்குள் புதைந்தன.சரியாக அந்தத் தருணத்தில், “சார்! ஆண்டனி ஆளுங்க பின்னாடி வராங்க!” என்று ஆல்பர்ட் குரல் கேட்டது.டேவிட் மெல்லப் பிரிந்தான். அவனது கண்கள் இப்போது இன்னும் பிரகாசமாகத் தெரிந்தன. “உனக்காக நான் வாழ்வேன் காயத்ரி. இப்போ இங்கேயே இரு,” என்று சொல்லிவிட்டு, ஒரு சிறுத்தையைப் போலத் துள்ளிக் குதித்து எதிரிகளை நோக்கிப் பாய்ந்தான்.அவன் காட்டிய அந்த ஆக்ரோஷம் வேறொரு ரகம். முன்னால் வந்த இரண்டு ரவுடிகளின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி எறிந்தான். அவனது கைகள் வெறும் கைகளாக இல்லை, அவை ஆயுதங்களாக மாறின. ரத்தம் தெறிக்க அவன் சண்டையிட்ட விதம், காயத்ரிக்கு ஒரு பயத்தைக் கொடுத்தாலும், அவனது வீரம் அவளை இன்னும் அதிகமாக்க காதலிக்க வைத்தது.டேவிட் செய்த அந்த அதிரடித் தாக்குதலில் ஆண்டனியின் ஆட்கள் நிலைதடுமாறினர்.

ஆல்பர்ட் மற்ற ஆட்களும் வந்து சேர, அந்தத் தீவு மெல்ல மெல்ல டேவிட்டின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காயத்ரி ஒரு தூணின் மறைவில் அமர்ந்து, தன் இதழ்களில் இன்னும் ஒட்டியிருந்த அந்த முத்தத்தின் ஈரத்தையும், டேவிட்டின் வாசனையையும் உணர்ந்து கொண்டிருந்தாள்.யார் இந்த மனிதன்? ஒரு நிமிடம் கொடூரமான கொலைகாரனாக மாறுகிறான், அடுத்த நிமிடம் ஒரு காதலனாக உருகுகிறான்.

“யட்சன் போலே நீயும் வந்தாய்… என் மனசை அப்படியே திருடிட்டுப் போயிட்டயே,” என்று தனக்குள் முணுமுணுத்தாள்.

இதயத்தின் ரகசிய முத்திரைகடல் அலைகள் கரையைத் தீண்டும் ஓசை – அந்தத்தனிமைத் தீவின் மௌனத்தில் ஒரு கவிதை!ஆயுதம் ஏந்திய கைகள் தளர்ந்து போக,அவன் இதழ்களின் வெப்பம் என் நெற்றியில் படர…

காலம் அங்கே உறைந்து நின்றது,காதல் மட்டும் காற்றோடு கலந்தது!மரணத்தின் நிழலில் வாழ்ந்த எனக்கு,மறுபிறப்பு தந்தது உன் சுவாசத்தின் தீண்டல்!கண்கள் மூடிய அந்த நொடியில் – நான்கண்டு கொண்டேன் என் உலகத்தின் எல்லையை!

அதிரடி வேட்டைகள் ஓய்ந்து போனது,உன் அணைப்பின் கதகதப்பில் என் உயிர் கசிந்தது!மறக்க நினைக்கிறேன்… ஆனால்,ஒவ்வொரு துடிப்பும் உன் பெயரையே சொல்லுது!அந்த ஒற்றை முத்தம் – என்இதயத்தில் நீ இட்ட அழியாத ரகசிய முத்திரை!

———

You may also like

Leave a Comment

About Me

Featured