Home ANTIHERO5) பார்வை 😍

5) பார்வை 😍

by sreejanovels
8 views

அத்தியாயம் 5

என்றும் இல்லாத திருநாளாக அன்று விஜய் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான். 10 மணி அளவில் மற்ற ஊழியர்கள் வருவார்கள். இவனின் BMW கார் இருப்பதைப் பார்த்தவர்கள்…

“இன்னைக்கு அதிசயமா சார் சீக்கிரமா வந்திருக்காரு, எல்லாரும் கவனமா வேலை பாருங்க” என்று டீம் லீடர் சொன்னதால், அக்கவுண்டிங் செக்ஷன் ஆபீஸ் ஒர்க்கர்ஸ் அனைவரும் தங்களின் தளத்திற்குச் சென்று தங்கள் பணியை மேற்கொள்ள, ஹவுஸ் கீப்பிங் செய்பவர்கள் இரவு ஷிப்ட் முடித்துவிட்டு வெளியே செல்ல, மார்னிங் ஷிப்ட் அவர்கள் உடனடியாகத் தங்கள் யூனிபார்மை மாற்றிக் கொண்டு வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தனர்…

சமையல் கலை வல்லுநர்கள் அனைவரும் விரைவாகத் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட வழியில் வந்து கிச்சன் சென்டருக்குள் நுழைந்து, மார்னிங் பிரேக்ஃபாஸ்ட், மதியம் லஞ்ச் அனைத்தையும் பிரிப்பரேஷன் செய்து கொண்டிருந்தனர்…

எந்த ஒரு குறையும் இருக்கக்கூடாது என்பது விஜயின் கொள்கை. யாரையும் துன்புறுத்தி வேலை வாங்க மாட்டான். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி, நிம்மதியான மனதோடு வேலை செய்யச் செய்ய அவனுக்குத்தான் லாபம் பெருகிக்கொண்டே போகிறது…

புதியதாக அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வாங்கியவர்கள் எப்படியும் எம்.டியைப் பார்க்க வேண்டும். பெயர் வரிசை லிஸ்டில் அவளின் பெயரை கடைசியில் போட்டு வைத்திருந்தான். ஒரு 11 மணி அளவில் மற்ற கிளையிலிருந்து வந்த புதிய நபர்கள் அனைவரும் எம்.டியிடம் தங்களைப் பற்றிப் பேசிவிட்டு, தங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை ரித்திக் மூலம் பெற்றுக்கொண்டு விடைபெற, இறுதியில் இருந்தது சுவாதி மற்றும் கீதாஞ்சலி. முதலில் சுவாதியை அழைக்க உள்ளே அனுமதி கேட்டு வர…

“குட் மார்னிங் சுவாதி, டேக் யுவர் சீட்” என்று ரித்திக் முந்திரிக்கொட்டை போல் முந்தி வர, விஜய் இது அவனின் வேலை என்று அமைதியாக அவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்..

“சுவாதி, டூ யூ ரிமெம்பர் மி (Do you remember me)? நான் அன்னைக்கு கால் பண்ணி இருந்தேனே??”

“ஐ நோ சார், உங்களைப் மாதிரி ஒரு நல்ல ஹையர் அத்தாரிட்டி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். ஒவ்வொரு ஒர்க்கர்கிட்டயும் பொறுமையா எங்க தேவைகளைக் கேட்டு அவங்களுக்கான அசம்ஷனா ஒதுக்குவது எத்தனை கம்பெனியில் நடக்குது? நான் இந்த கம்பெனியில் வேலை செய்ய ரொம்ப ஆர்வமா இருக்கிறேன்” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல, விஜய்க்கு அவள் பேசும் வெளிப்படையான பேச்சைப் பார்த்து…

“ஓகே மிஸ் சுவாதி, நீங்க ஹவுஸ் கீப்பிங் டிபார்ட்மெண்ட் அக்கவுண்டன்ட். எதுவா இருந்தாலும் நீங்க ரித்திக் கிட்ட கேட்டுத்தான் செய்யணும், அவர்தான் உங்களோட லீட்”

இதைக் கேட்டவுடன் தன்னுடைய பாஸ் பர்சனல் செக்யூரிட்டி வேலை என்ன ஆனதோ என்று பீதியுடன் அவனைப் பார்க்க, விஜய் ஒரு நக்கல் புன்னகையோடு நடிக்காதே என்பது போல் சொல்ல, தனக்கு சுவாதியுடன் நேரத்தை ஒதுக்கிய நண்பனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ரித்திக்..

சுவாதி தன்னுடைய அப்பாயின்மென்ட் லெட்டர் வாங்கி அஞ்சலி இடம் செல்ல.. “என்னடி எம்.டி எப்படி? என்ன பேசினாங்க??”

“என்னை ஹவுஸ் கீப்பிங் அக்கவுண்டிங் டிபார்ட்மெண்டுக்கு மாத்தி அமைச்சிட்டாங்க. நீ இவங்ககிட்ட இதே டிபார்ட்மெண்ட் வேணும்னு கேட்டுப் பாரு, இல்லன்னா பார்க்கலாம்” என்று சொல்லி அஞ்சலியை அனுப்பி வைக்க, அஞ்சலியின் பெயர் கூப்பிட்டவுடன் அனுமதி கேட்டு உள்ளே வரும் அந்த சமயம் விஜய் தன்னுடைய சீட்டைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தான். ரித்திக் மட்டும் புன்னகை முகமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, மேனேஜிங் டைரக்டரைப் பார்க்க முடியவில்லை என்று நினைத்தாலும், சீக்கிரமாக இங்கிருந்து அப்பாயின்மென்ட் லெட்டர் வாங்கிச் சென்று விட வேண்டும் என்று ஒரு டென்ஷனில் இருந்தாள்.‌

“குட் மார்னிங் மிஸஸ் கீதாஞ்சலி விமல் விஜயன், டேக் யுவர் சீட்” என்று திரும்பிக்கொண்டு அவள் பெயரைச் சொல்லி அவளை அமரச் சொல்ல… கீதாஞ்சலிக்குக் குழம்பிவிட்டது. எப்போதும் தன் பெயர் அவனோடு இணைக்கப்படவில்லையே, எப்படி இவருக்குத் தெரியும் என்று குழப்பத்தோடு அமர்ந்திருக்க, அப்போது ரித்திக்…

“ஓகே கீதாஞ்சலி, இது உங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர். இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ண எல்லா கம்பெனியிலும் நீங்கதான் பெஸ்ட் எம்ப்ளாயி ஆஃப் தி இயர் வாங்கி இருக்கீங்க. இங்கேயும் அதே நடக்கும்னு நினைக்கிறேன். உங்களுடைய அக்கமடேஷன் என்னன்னு சொல்ல முடியுமா?” என்று சொன்னவுடன் அவளுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது தன்னுடைய மகன் தான்…

“சார், ஆக்சுவலி இங்க ஒர்க் பண்றவங்களோட குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக டே கேர் இருக்கிறதா சொல்லி இருக்கீங்களே??” என்று அவள் கேட்டதற்கு, விமலுக்குப் புருவம் சுருங்கிவிட்டது. எதற்காக அதைப் பற்றிக் கேட்கிறாள் என்று, இன்னும் தன்னை பார்க்கவில்லை, பார்த்தால் இந்த விஷயம் சொல்ல மாட்டாள் என்று அப்படியே திரும்பிக் கொண்டே இருந்தான் ஒரு கோப்பையை உருட்டிக்கொண்டு. அதே சமயம் ரித்திக் அவளைப் பார்த்து…

“ஆமாம் கீதாஞ்சலி, கண்டிப்பா இருக்குது. இங்க ஒர்க் பண்றவங்களோட சின்னக் குழந்தைகளுக்கு, ரெண்டு பேரும் வேலைக்குப்போற சமயத்துல குழந்தையைப் பார்த்துட்டு எங்கெங்கோ ஜாயின் பண்ணி விடுறதுக்கு, நம்ம கம்பெனியில் ஒர்க் பண்ற ஒர்க்கர் நிம்மதியா தன் குழந்தையைத் தங்களிடமே இருப்பதற்காகச் செய்து வைத்த வழிமுறைதான் இந்த டே கேர். சரி இதைப் பத்தி என்ன டவுட் இருக்கு? நாங்க தெரிஞ்சுக்கலாமா??” என்று அழுத்தி கேட்டவுடன் கீதாஞ்சலி சொல்லத் தயாராக இருந்தாள்.

“சார், எனக்கு ஒரு குழந்தை இருக்கான். ஒன்றரை வயசு ஆகுது. நானும் இதுக்கு முன்னாடி ஒருத்தவங்க வந்தாங்களே சுவாதி, ரெண்டு பேரும் தனியாக ஊட்டியில் இருந்தோம். ஊட்டியில் பெனிபிட் இல்லை எங்களுக்கு, அப்போ ஒரு ஆயம்மா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா எனக்குச் சென்னையில் யாரையும் தெரியாது. நானும் சுவாதி, என்னோட குழந்தை மூணு பேர் மட்டும்தான். குழந்தை எங்க பார்த்துக்குறது எப்படி பார்த்துக்குறதுன்னு தெரியாம இருந்தோம். ஆனா இந்த பெனிபிட் இருக்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உடனடியாக டிரான்ஸ்பர் கேட்டு இங்க வந்துட்டோம். எங்களுக்கு ஒரு நல்ல பெனிபிட் மாதிரி தெரியுது, அதனால்தான் கேட்கிறேன்” என்று சொல்ல, ரித்திக் அவளை மேலும்கீழுமாகப் பார்த்தான். ஒரு குழந்தைக்கு அம்மா போலவே இல்லை, கல்லூரி முடித்த சிட்டுக்குருவி போலவே இருக்கிறாள்.

ஆனால் அதே சமயம் தன் வலப்பக்கம் முகம் சிவந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஒருவன் எப்பொழுது ருத்ரதாண்டவம் ஆடலாம் என்று காத்துக்கொண்டே இருந்தான். கீதாஞ்சலிக்கு ரித்திக் யார் என்று தெரியாது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்திருக்கும் சமயத்தில் இவன் வெளிநாட்டில் இருந்தான். அதன் பிறகுதான் நண்பன் வாழ்க்கையில் பல மாற்றங்கள். இது புரிந்துகொண்டவன் அவனை அருகில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பெண் விட்டுச் சென்றது மட்டும் இல்லாமல் ஒரு குழந்தையைப் பெற்று அது இருப்பது கூடச் சொல்லாமல் மறைத்து விட்டாளே என்று இவனுக்கும் மனதில் ஒரு ஆதங்கம் இருந்தது…

“ஓகே ஓகே கீதாஞ்சலி. ஐ நோ (I know). நீங்க அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வாங்கிட்டு ரிசப்ஷன்ல டே கேர் பத்திச் சொல்லுங்க. அவங்க ஒரு ஃபார்ம் கொடுப்பாங்க, அதை ஃபில்லப் பண்ணுங்க. இதுக்கு அமௌன்ட் பே பண்ணத் தேவையில்லை, அது ஃப்ரீதான். ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவளை அனுப்பி விட, அப்பாயின்மென்ட் லெட்டர் வாங்கிவிட்டு சுவாதியும் அவளும் ரிசப்ஷன் நோக்கிச் சென்றனர். அங்கே குழந்தையைச் சேர்ப்பதற்கான படிவத்தை நிரப்பிவிட்டு, திங்கட்கிழமை வந்து பணியைத் தொடரலாம் என்று சொல்ல அவர்கள் மகிழ்ச்சியாக அங்கிருந்து விடைபெற்றனர்…

இங்கே ஒருவன் அப்போதுதான் மெல்ல சீட்டைத் திருப்பிக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டிருந்தான்.. அவனிடம் செல்லலாமா வேண்டாமா என்று பயத்தில் இருந்தான் ரித்திக்… “விஜய்” என்று அவனிடம் நெருங்கி வர..

“நோ ஓஓஓ… அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சிருப்பா? என் குழந்தை இருக்கிறது கூட மறைச்சிருக்கா. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்? அவளை நான் சும்மாவே விடமாட்டேன். இப்பவே அவளைக் கொன்னு போட்டு என் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டே இருப்பேன். ஆனா அவ வேதனையை அனுபவிக்கணும். இரண்டு வருஷம் நான் பட்ட வேதனையை அவள் அனுபவிக்கணும். வலி என்றால் என்னவென்று அவளுக்குத் தெரியும்.” அன்று அவன் கத்திக் கூச்சல் போட…

“டேய், இப்படி அரக்கத்தனமா இருக்காத. அவளுக்கு என்ன கஷ்டமோ, உன்கிட்ட இது கூடச் சொல்லாம போயிருக்கான்னா அந்த அளவுக்கு நீ வேதனைப்படுத்தி இருக்க. உன் மேலேயும் தப்பு இருக்கு, சும்மா அவளையே குறை சொல்லாதே. இங்கே பாரு, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கக்கூடாது. பொறுமையா இந்த விஷயத்தைக் கையாள வேண்டும். கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப்போடு. அதுக்கப்புறம் பொறுமையாக எடுத்துச் சொல்லி லீகலா எந்த ஒரு ஆக்ஷனா இருந்தாலும் பார்க்கலாம், விடு” என்று அவனைச் சமாதானம் செய்துவிட்டு ரித்திக் மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட… விஜய் அங்கு இருக்காமல் தன் காரை எடுத்துத் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றுவிட்டான்…

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கே மிகப்பெரிய பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது வினுஷாவின் புகைப்படம்.. அதைப் பார்த்து ஒரு விரக்தி புன்னகையோடு.. “நீ சொன்னியே ஒரு விஷயம், அது இதுதானா? எல்லாருமே என்னை ஏமாத்திக்கிட்டே இருக்கீங்க. நீ முதல்ல என்னை விட்டுப் போன, அவ என்னை விட்டுப் போனது மட்டுமில்லாம என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறா. எல்லாருமே என்னை ஏமாத்துறாங்க. நான் இருக்கிறது யாருக்கும் பிடிக்கல போல. ஆனா நான் எதுக்கும் மனசு தளர விடமாட்டேன். இனி எனக்கானவள் அவதானே? நீதானே சொன்ன, அவளை எப்படி விட்டு வைப்பேன்?? அவளுக்கு ரெண்டு வருஷம் டைம் கொடுத்ததே பெரிய விஷயம், இனி அவளை விடக்கூடாது. ஆனா அந்த ராங்கி அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட வரமாட்டா. அதே சமயம் நான் பட்ட கஷ்டம் அவளும் பட வேண்டாம். இந்த விஜய் அவளுக்குக் கொடுக்கிற டார்ச்சரில் அவள் நொந்து நூலாகி என் காலில் வந்து விழணும்” என்று சபதம் போட்டுச் செல்ல…

இங்கே வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மெண்டுக்கு சுவாதி, அஞ்சலி, குழந்தை என்று மூவரும் மகிழ்ச்சியாக அந்த வீட்டிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்…


You may also like

Leave a Comment

About Me

Featured