Home ANTIHERO5) அதிரூபன் 🔥

5) அதிரூபன் 🔥

by sreejanovels
8 views

அத்தியாயம் 5

    அந்த ஓவியத்தையும் கீழே அவள் அடையாளமாக குறிப்பிட்ட அந்த வசனத்தையும் பார்த்தவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கியது அவள் 14 வயதில் இளம் பெண்களுக்கு உண்டாகும் காதல் ஹார்மோன்கள் சுரக்கும் சமயம் ஏகப்பட்ட காதல் திரைப்படங்களைப் பார்த்து அனைத்து பெண்களும் கற்பனையில் தன்  காதலன் அல்லது கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற கனவு காணும் சமயம் அது அப்பொழுது அமிர்தா தனது அப்பா சிறு வயதில் தனக்காக ஏலம் எடுத்து வாங்கி வந்த அந்த ஓவியத்தை காலையில் கண்விழிக்கும் பொழுதும் இரவு கண் தூங்கும் பொழுது அதை ஒரு முறை பார்த்து விட்டு தான் அடுத்த வேலையை செய்வாள்.

அப்படி இருக்கும் பொழுது தான் தானும் தன் காதலன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்த ஓவியத்திற்கு தனது சிலைடு பின் உதவியோடு,

“அமிர்தாவும் அவளது கனவு நாயகன்”

என்று எழுதி வைத்திருந்தால் அதை பார்க்கும் போதெல்லாம் உடலெல்லாம் ஜிவ்வென்று ஏறும் அவளுக்கு. ஆனால் அதை வெளிப்படுத்தி சொன்னால் இந்த வயதில் இந்த ஆசையா என்று கேள்வி பேச்சுக்கு ஆளாகி விடுவோம் என்று அமைதியாகவே விட்டுவிடுவாள்.

தாய் தந்தை இல்லாத தனிமை அவளை மூழ்கடித்தது அவளுக்கு தெம்பு அந்த ஓவியம் தான் கீழ் வீட்டுக்காரர்கள் அவளுக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் வெறும் வயதான தம்பதிகள் அவர்களது பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்கள் மகன் மருமகள் இருவரும் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மூன்று வருடங்கள் கழித்து கடினமான சூழ்நிலை அவசியம் அவர்களுக்கு அந்த பணம் தேவைப்பட்டது இல்லை என்றால் யாரோ பெரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் தன் வீட்டை இடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த சமயத்தில் 5 லட்ச ரூபாய் பணத்திற்காக அந்த பழம்பெரும் ஓவியத்தை விற்று விட மனம் உடைந்து போனால் அதன் பிறகு காதல் ஆசை அவளுக்கு உணர்ந்ததே இல்லை கனவில் அந்த ஓவியத்தில் வரும் கதாநாயகனை போல் தன்னையும் ஒருவன் காப்பாற்றி செல்வான் என்ற எண்ணத்திலேயே அவள் காலங்கள் சென்றது. இதோ பல வருடங்கள் கழித்து அந்த ஓவியத்தை பார்த்த பிறகு அவள் மனம் வெகுண்டு எழுந்தது கண்களில் கண்ணீர்.

இந்த சாதாரண ஓவியத்துக்கு எதற்கு இவ்வளவு சீன் என்று அனைவருக்கும் தோன்றும் ஆனால் ஒரு விஷயத்தை நம் ஆத்மா ஒரு கலந்து விட்ட பின் அந்த விஷயத்திற்காக ஒரு துளி கண்ணீர் வராவிட்டால் வாழ்வில் என்ன பயன்.

அது ஓவியத்தை மென்மையாக வருடிக் கொண்டிருக்கும் பொழுது.

“இந்த பெயிண்டிங் உனக்கு புடிச்சிருக்கா??”

என்று குரல் வர திரும்பி பார்க்க அதிரூபன் தான் நின்று கொண்டிருந்தான்.

“சார் இந்த பெயிண்டிங் உங்களுக்கு??”.

என்று கண்கள் சுருக்கி கேட்க.

“இதுவா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஏலத்துல என்னோட செக்ரட்டரி இதை வாங்கிட்டு வந்தாங்க அந்த டைம் நான் அப்ராட்ல இருந்தேன் சோ என்னால அங்க போக முடியல இந்த பெயிண்டிங் படி உனக்கு தெரியுமா இது ஒரு பழைய கோவிலோட அந்த கோவில் கட்டுன அரசன் அவரது மனைவியோட போட்டோ அப்போ ஒரு ஓவர் இத அழகா வரைஞ்சு வச்சிருப்பாரு நீ நல்லா உத்து பார்த்து இருக்கியா டக்குனு பார்க்கும்பொழுது ராஜா ராணி இருக்கிற மாதிரி இருக்கும் ஆனா ஒத்துப் பார்த்தால் தெரியும் அந்த கோவிலோட அமைப்புல தான் அவங்களோட பெயிண்டிங் இருக்கும் அந்த அளவுக்கு அந்த ராஜா கஷ்டப்பட்டு கட்டின கோவில் அனைத்து எவ்ளோ மோசமான நிலையில் இருக்கு தெரியுமா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அந்த கோவிலோட மூளை வரிசைல காணாம போய் மறுபடியும் கிடைச்சிருக்கு கும்பாபிஷேகம் எல்லாம் நாம எம்பி மினிஸ்டர் எல்லாம் நடத்தினாங்களே??”.

என்று சொல்ல.

“அப்படிங்களா சரி நீங்க இதை யார்கிட்ட இருந்து ஏலம் எடுத்தீங்கன்னு தெரியுமா??”.

“ஐ டோன்ட் நோ பிகாஸ் நான் தான் சொன்னேன்ல அந்த டைம்ல நான் இங்க இல்ல என்னோட செக்ரட்டரி கிட்ட தான் கேக்கணும் எனக்கு பெயிண்டிங்ஸ் எல்லாம் பிடிக்கும்னு எப்பவுமே ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு பெயிண்டிங் வாங்கிட்டு வருது அவங்க வழக்கம் நான் அப்படித்தான் ஆர்டர் போட்டு இருக்கேன் அந்த டைம்ல இந்த பெயிண்டிங் வாங்கிட்டு வந்தாங்க இதனால அவங்க 10 லட்ச ரூபாய் என்கிட்ட போனஸ் வாங்க நாங்க பிகாஸ் இந்த பெயிண்டிங் என் மனசுல அப்படி ஒரு ஆழத்தை பதித்த விஷயம் அதனால்தான் இது என்னோட பர்சனல் டார்க் ரூம்ல இருக்கு”

என்று சொல்ல..

“இது ஆக்சுவலி அந்த கோவில் ஏலத்திலிருந்து எங்க அப்பா தான் இத வாங்கிட்டு வந்தாரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கஷ்டத்துக்காக நான் இதை ஏலத்துல விட்டுட்டேன் நான் கூட அந்த ஏலத்தில் பங்கேற்கல என் சார்பா எங்க வீட்டு டென்னண்ட் அங்கிள் தான் வந்திருந்தார் அவர் ரொம்ப நல்லவரு நீங்க கொடுத்த அஞ்சு லட்ச ரூபா பணத்தை அப்படியே எனக்கு கொடுத்தாரு என இந்த ஓவியம் என்னோட வாழ்க்கையில என் உணர்வுகளோட பின்னி பெனஞ்சது ஆனால் அந்த சூழ்நிலை எனக்கு வேற வழி தெரியல அதனாலதான் இதை விக்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சு ஆனா பாருங்கள அது உங்க கைக்கு வரணும்னு இருக்குது மறுபடியும் இதை நான் பாக்கணும்னு இருக்கு தினமும் இனிமே நான் இதை பார்ப்பேன்ல”

என்று சிறு குழந்தை போல் செல்ல.

‘அது சரி இவள நம்ம பக்கம் இழுக்கிறது ரொம்ப சுலபம் போல இந்த பெயிண்டிங் எனக்கு சாதகமா போச்சு என்னோட பழைய செகரட்டரி நீ பல்லாண்டு வாழ்க’

என்று மனதிற்குள்ளே பேசிக் கொண்டவர் ஒரு சிரிப்போடு.

“இந்த ரூம் நீங்க வொர்க் பண்ற வரைக்கும் இது உங்க ரூம் ஓகேவா எல்லாமே உங்க இஷ்டம் போல தான் இருக்கும் சரி நான் ஒரு டீம் சொல்றேன் அது வழியா ஒரு பெயிண்டிங் வரைய முடியுமா என்னோட டெக்ஸ்டைல் விளம்பரத்துக்கு தான் இந்த டிரஸ் லேடிஸ் சம்பந்தப்பட்டது நைட்வியர் மாதிரி”.

என்று சொல்ல அமிர்தாவும் சிலர் பல ஓவியங்களை மனதில் வைத்துக் கொண்டு இதை வரைந்தால் நல்லா இருக்கும் என்று முடிவு செய்தவள் சரி என்று ஒப்புக்கொள்ள அங்கிருந்து அதிரூபன் சென்று விட்டேன் அமிர்தா பொறுமையாக முதலில் ஒரு ஸ்கெட்ச் பேனா எடுத்து ஒரு வெள்ளை தாளில் வரைய பிராக்டிஸ் செய்து சரியாக இறுதியில் வந்த ஓவியத்தை பார்த்து இதை வரையலாம் என்று பெரிய போர்வில் வரைந்து முடித்த அதற்கு வண்ணங்கள் தீட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

ரவுண்ட்ஸ் மீட்டிங் அனைத்து முடித்து வந்த அதிரூபன் அமிர்தாவின் அறைக்குள் நுழைய.

நீண்ட நேரம் நின்று கொண்டே ஓவியம் வரைந்து களைப்பில் அருகில் இருக்கும் டேபிள் மீது அமிர்தா கண் உறங்கிவிட.


மெல்ல கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த அதிரூபன், ஓவிய அறையில் பரவியிருந்த அமைதியை அனுபவித்தான். கண்ணோட்டம் முழுவதும் நிறைந்திருந்த விதவிதமான சித்திரங்கள், அவை அனைத்தும் உயிர் பெற்றவை போலவே தெரிந்தன. ஆனால் அந்தக் கணத்தில், அவன் பார்வை ஒரே ஒரு சித்திரத்தில் மட்டும் சிக்கியது — அது ஓவியமாக இல்லை, ஓவியராக இருந்த அமிர்தா தான்.

பொதுவாகவே தீவிரமாக வேலை செய்யும் அவள், இப்போது பீன்பேக் மீது சாய்ந்தபடியே தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது விரல்கள் இன்னும் ஒரு பச்சைத் தந்தியை பிடித்தபடியே இருந்தன; முகத்தில் ஒரு குழந்தையின் அமைதி. ஜன்னல் வழியாக ஊன்றிய மழைத்துளி ஒளி, அவளது முகத்தில் ஒரு அற்புதமான பிரகாசத்தைத் தரியது.

அந்த தருணத்தில், அதிரூபனின் உள்ளம் துடித்தது. அவன் இங்கு வந்தது வேலைக்காகத்தான். ஆனால் இப்போது, இந்த அமைதி, இந்த அழகு, இந்த சுத்தமான தருணம்—இவை அனைத்தும் அவனுக்கே ஒரு ஓவியமாகவே தெரிந்தது. “நிஜமான கலை இதுதானோ?” என்ற எண்ணத்துடன், துள்ளாமல் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.


எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி கண்கள் மூடிக்கொண்டாலும் அவள் மனக்கண் திறந்து கொண்டுதான் இருக்குமா அதேபோல அமிர்தாவுக்கும் ஏதோ ஒரு அசோகரிமா நிலை உணர கண்கள் திறந்து பார்க்கும் பொழுது தான் எதிரே தன்மையை பார்த்துக் கொண்டிருந்த அதிபனை பார்த்து சற்று அதிர்ந்து போய் எழுந்து நிற்க.

“சாரி நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தீங்க அதான் அமைதியா இருந்துட்டேன். லஞ்ச் டைம் வந்துருச்சு இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க??”.

“அது சார் அது வந்து ஆக்சுவலி இதோ நீங்க கேட்டா டீம் செட்டிங்ல நான் பெயிண்டிங் பண்ணி இருக்கேன் இத பாத்தீங்கன்னா நம்ம அடுத்த டிசைனர் டீமுக்கு அனுப்பிடலாம்”.

என்று அவள் வரைந்து வைத்த ஓவியத்தை பார்க்க.

‘டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் ஓவியத்தை வச்சு எவனாவது அட்வர்டைஸ்மென்ட் பண்ணுவானா ஏதோ ஒன்னு அடையறதுக்காக தான் உன்னை கூப்பிட்டேன் ஆனா நீ உன் கையில இருக்கிற திறமையை எனக்கு எக்ஸ்க்ளூசிவா கொடுக்கும்போது உன்னை யூஸ் பண்ணாம விடமாட்டேன் அமிர்தா உன்னோட திறமை என்னோட பிசினஸ்க்கு உதவும் நீ எனக்கு உதவுவ அதுக்கு நீயா என்கிட்ட வரணும் சரண்டர் ஆகணும் காலத்துக்கும் எனக்கு நீ அடிமையா இருக்கணும் அதான் எனக்கு வேணும்’

என்று இப்பொழுதே கற்பனையில் மிதக்க ஆரம்பிக்க.

“சார் எப்படி இருக்கு??”.
என்ற அமிர்தாவின் குரல் கேட்ட பிறகுதான் சுயநினைவுக்கு வந்தவன்.

“ஓகே ரொம்ப அழகா இருக்கு எதுனா டிசைனிங் டீமுக்கு அனுப்புறேன் உங்களுக்கு ஓகேன்னா நீங்க லான்ச் முடிச்சிட்டு நம்ம ரெஃபரன்ஸ் வீடியோ புக் பார்க்கலாம் இல்லனா நீங்க ஆப் டே லீவ் கூட இருக்கு எடுத்துக்கலாம் என்ன வந்த அன்னைக்கே உங்களுக்கு அவ்வளவு வேலை கொடுக்க எனக்கு மனசு வரல”.

என்று சொல்ல.

“அப்போ நான் கிளம்புறேன் சார் ஆக்சுவலா நான் எதுவுமே சொல்லாம அப்படியே வந்துட்டேன் போன் கூட இந்த சிக்கல் போக மாட்டேங்குது நான் நாளிலிருந்து ஒர்க்கிங் டைம்க்கு கரெக்டா வரேன்”.

என்று சொல்லி முடித்து விட.

“அப்படிங்களா சரி நான் என்ன ஏதுன்னு நெட்வொர்க் டீம் கிட்ட கேட்டு எல்லாத்தையும் சரி பண்றேன் வித் வைஃபை பெசிலிட்டியோட உங்களுக்கு இந்த ரூம் கிடைக்கும்”.

என்று சொல்லிவிட அமிர்தா அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.

அவள் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தவன் ஏதோ அமிர்தா மீது சாய்ந்திருப்பது போல் கண்களை மூடிக்கொண்டு அத தருணத்தை ரசித்தான்.

அவள் நீங்கிய இடத்தில் நான் சாய்ந்தபோது
மீதமிருந்தது — வெப்பமா, வாசனையா,  புரியவில்லை.
நேராக பாவனை செய்யும் இடமில்லை,
அவள் தூக்கத்தில் தவழ்ந்த ஓர் ஆசையின் தடவல் மட்டும்.

அங்கே அமர்ந்தவள் பின்னலம் போல,
அடிக்கடி நினைவில் மறையாத ஓர் ஓவிய அழகு,
மெல்லக் கூடும் இரண்டு விரல்களுக்கிடையில்
காதலும், காமமும் இரண்டுமே மூச்சடக்கிக் கொண்டிருந்தன.

தூரத்தில் ஒரு பனி, அருகில் ஒரு தீ.
நான் நடுவில் — அவள் நினைவில் உருகும் மெழுகாய்.
அவளின் பரவிய நீளம் நினைவில் பாய்ந்துகொண்டு,
முழு மனமும் உடலும் அவளால் நிரம்பியது.

அவள் இங்கு இல்லை, ஆனால்
நான் முழுக்க அவளாகி விட்டேன்.


You may also like

Leave a Comment

About Me

Featured