Home ANTIHERO4) யட்சன் 😈

4) யட்சன் 😈

by sreejanovels
75 views

அத்தியாயம் 4

காயத்ரி டேவிட் இருவரும் ஒரு பிரத்தியேகமான தனி விமானத்தில் பயணம் செய்து அந்த அழகிய தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்.அங்கிருந்து ஒரு கார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணம் ஆகி கொண்டிருந்தது. மெக்சிகோ சிட்டியின் இரைச்சல் மிகுந்த தெருக்களைத் தாண்டி, டேவிட்டின் கார் கடற்கரைச் சாலைகளில் சீறிக்கொண்டிருந்தது.

காரின் ஜன்னல் வழியாகத் தெரிந்த நீல நிறக் கடல், சூரிய ஒளியில் வைரங்களைப் போல மின்னிக் கொண்டிருந்தது. ஆனால் காயத்ரியின் மனதுக்குள் ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருந்தது. தன் குடும்பத்தின் பாதுகாப்பு ஒருபுறம், அடையாளம் தெரியாத இந்த மாஃபியா தலைவனுடன் ஒரு தீவிற்குச் செல்வது மறுபுறம் என அவளது சிந்தனைகள் சிதறிக் கிடந்தன.டேவிட் அமைதியாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனது கண்கள் சாலையிலேயே நிலைத்திருந்தாலும், அவனது கவனம் முழுக்கக் காயத்ரியின் முக அசைவுகளிலேயே இருந்தது. அவளது பயத்தையும், குழப்பத்தையும் அவன் அவளது மௌனத்திலேயே வாசித்தான்.

“சாப்பாட்டு விஷயம்னா கவலைப்படாத… அங்க நம்ம ஊர் ஸ்டைல் உணவுகளும் கிடைக்கும்,” என்றான் டேவிட், அமைதியைக் கலைப்பதற்காக.காயத்ரி அவனைத் திரும்பிப் பார்த்தாள். “நம்ம ஊர் ஸ்டைலா? நீங்க என்ன இந்தியரா?”டேவிட் லேசாகப் புன்னகைத்தான்.

“என் தாத்தா இந்தியாவுல இருந்து வந்தவர் தான். இங்க பிசினஸ்காக வந்து மெக்சிகன் சிட்டிசன் ஆன என்னுடைய பாட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அப்புறம் எங்க அப்பா அவரும் மெக்ஸிகன தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.நாடு மாறி இருந்தாலும், நாங்க எல்லாரும் கிறிஸ்டின் அதான் என் பேர்ல இருக்கிற அந்த மில்லர்.

என்னதான் ரெண்டு தலைமுறையா இங்க இருந்தாலும், ரத்தத்துல இந்தியத்தனம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது. அதனால தான் உன்னைத் தெருவுல விட மனசு வரல போல,” என்று கேலியாகச் சொன்னான்.

ஒரு சிறிய தனியார் படகுத் துறையில் கார் நின்றது. அங்கே ஒரு அதிநவீன மோட்டார் படகு தயாராக இருந்தது. டேவிட் இறங்கிக் காயத்ரிக்குக் கதவைத் திறந்துவிட்டான்.

“அடேங்கப்பா! தனியா ஜெட்ல வர்றதுக்குக் காரு, அப்புறம் ஜெட்ல பயணம், மறுபடியும் கார்ல பயணம், இப்போ ஒரு மோட்டார் கப்பல்! ஆள் நல்லா வசதியா வாழ்ந்திருக்கான். இதுவே இப்படி இருக்கே, இன்னும் அந்தத் தீவுல என்னென்ன வித்தியாசமான, அற்புதமான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகுதோ? நல்லவனா கெட்டவனா?

ஒருவேளை இவனே ‘அம்மாவுக்கும் சாருக்கும் ஆபத்து’ அப்படின்னு சொல்லி கேம் ஸ்டார்ட் பண்ணி, என்னைத் தனியா இங்க கடத்திட்டு வந்துட்டானா? எதுவுமே புரியாமல் நான் பாட்டுக்கு இவன் கூட வந்துட்டேனே! தேவா ஸ்ரீ கணேஷா, நீதான் என்னைக் காப்பாத்தணும்!”

என்று கடவுள் மீது அவசர அப்ளிகேஷன் போட்டுவிட்டு, காயத்ரி அவனோடு படகில் பயணம் செய்யத் தயாரானாள். படகில் ஏறியதும், அதன் வேகம் அவளது கூந்தலைக் கலைத்துப் போட்டது. கடலின் உப்பு கலந்த காற்று அவளது முகத்தில் படர்ந்தது. சுமார் நாற்பது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, கண்களுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பச்சை நிறத் தீவு தெரிந்தது.

.அந்தப் படகு மெல்ல அலைகளைக் கிழித்துக்கொண்டு அந்தத் தீவின் கரையைத் தொட்டபோது, காயத்ரி ஆச்சரியத்தில் உழைந்து போனாள். அது ஒரு தீவு என்பதை விட, பூமியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஒரு சொர்க்கம் போலவே அவளுக்குத் தோன்றியது. கரையில் பளபளக்கும் வெண்மணல், நிலவொளியில் வெள்ளித் துகள்களாக மின்னிக் கொண்டிருந்தது.

தீவின் உட்புறத்திலிருந்து வீசிய காற்றில், கடல் உப்பின் வாசத்தோடு ஏதோ ஒரு பெயரறியாத காட்டுப்பூவின் நறுமணம் கலந்து வந்து அவளைத் தழுவியது.சுற்றிலும் வானுயர வளர்ந்து நின்ற தென்னை மரங்களும், அடர்ந்த பச்சை நிறப் புதர்களும் அந்தத் தீவிற்கு ஒரு இயற்கை அரணாகத் தெரிந்தன. மரங்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறந்த மின்மினிப் பூச்சிகள், ஏதோ கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் விளக்கேந்தி நிற்பது போன்ற பிரமையைத் தந்தன.

தூரத்தில் ஒரு சிறிய அருவி பாறைகளில் மோதி விழும் சத்தம், அந்த அமைதியான இரவில் ஒரு மெல்லிய இசையாக ஒலித்தது. காயத்ரி டேவிட்டின் கைகளைப் பற்றி அந்த மணலில் காலடி எடுத்து வைத்தபோது, அந்தத் தீவின் குளிர்ச்சி அவளது பாதங்கள் வழியாக இதயத்திற்குப் பாய்ந்தது. அதுவரை துப்பாக்கிச் சத்தங்களையும், ரத்த வாடையையும் மட்டுமே பார்த்திருந்த அவளது கண்களுக்கு, அந்தப் பச்சைப் பசேல் என்ற இயற்கை ஒரு பெரிய ஆறுதலாக அமைந்தது.

இருவரும் அதையெல்லாம் பார்த்தவாறு கடந்து வரஅங்கே ஒரு பிரம்மாண்டமான வெள்ளை நிற மாளிகை இருந்தது. அதைச் சுற்றி தென்னை மரங்களும், மெக்சிகோவின் தனித்துவமான காக்டஸ் செடிகளும் நிறைந்திருந்தன. படகு கரையைத் தொட்டதும், அங்கே நின்றிருந்த ராபர்ட் ஓடி வந்து அவர்களை வரவேற்றான்.”சார், எல்லாம் ரெடியா இருக்கு. காயத்ரி மேடம் தங்குறதுக்கு ரைட் சைடு அறையைத் தயார் பண்ணிட்டோம்,” என்றான் ஆல்பர்ட்.காயத்ரி டேவிட்டைப் பார்த்து

, “இங்க நான் என்ன பண்ணனும்? எவ்வளவு நாள் இப்படிப் பதுங்கி இருக்கணும்?” என்று கேட்டாள்.டேவிட் அவளை நோக்கி ஒரு படி நெருங்கி வந்தான்.

“பதுங்கி இருக்கிறதுன்னு சொல்லாதே… இது ஒரு சின்ன வெக்கேஷன். உன்னைப் பிடிக்க ஆண்டனி ஆளுங்க மெக்சிகோ முழுக்கத் தேடுவாங்க. ஆனா இந்தத் தீவு என்னோட கோட்டை. இங்க அவனோட நிழல் கூடப் பட முடியாது. இன்னொன்னு… இங்க இருக்கும்போது நீ என்னை டேவிட்னு கூப்பிட வேண்டாம். ராபர்ட்னு கூப்பிடு. வெளிய ஆளுங்க யாருக்காவது சந்தேகம் வந்தா, நாம ரெண்டு பேரும் டூரிஸ்ட்னு நினைச்சுக்கட்டும்,” என்றான்.

காயத்ரிக்கு இது விசித்திரமாக இருந்தது. “டேவிட்ங்கிறது உங்க மாஃபியா பேரா? ராபர்ட்ங்கிறது உங்க நிஜப் பேரா?”டேவிட் ஒரு கணம் அமைதியானான். அவனது கண்களில் ஒரு மெல்லிய சோகம் வந்து மறைந்தது. “ராபர்ட்ங்கிறது எங்க அம்மா எனக்கு வச்ச செல்லப் பேரு. யாருக்கும் தெரியாது. இப்போ உனக்குத் தெரியும். இது ஒரு ரகசியமாவே இருக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு மாளிகைக்குள் சென்றான்.

அன்று மாலை, தீவின் கடற்கரையில் காயத்ரி தனியாக நடந்து கொண்டிருந்தாள். மணலில் அவளது கால்கள் புதைய, அலைகள் வந்து அவளது பாதங்களைத் தொட்டுச் சென்றன. அமைதியான அந்தச் சூழல் அவளுக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்தது. அப்போது தூரத்தில் டேவிட் (இப்போது ராபர்ட்) ஒரு டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கையில் ஒரு பந்துடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

கிளப்பில் பார்த்த அந்த கொடூரமான மாஃபியாவுக்கும், இப்போது இங்கே ஒரு சாதாரண மனிதனைப் போலச் சிரித்துக் கொண்டிருக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அவளது டிடெக்டிவ் மூளை அவனை ஒரு குற்றவாளியாகப் பார்த்தாலும், அவளது இதயம் அவனை ஒரு பாதுகாப்பு அரணாக உணரத் தொடங்கியது.ஆனால், அதே நேரத்தில் மெக்சிகோ சிட்டியின் ஒரு இருண்ட அறையில், ஆண்டனி தனது ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தான்.

“அந்த இந்தியப் பொண்ணு எங்கே? அவளையும் அந்த டேவிட்டையும் சேர்த்து ஒரே குழியில புதைக்கணும்! அந்தத் தீவை கண்டுபிடிங்கடா!”என்று சொன்னவுடன் அவனது அடி ஆட்கள் அடுத்த வேட்டையை தொடங்கினர்.ஆண்டனியின் வஞ்சம் அந்த அமைதியான தீவை நோக்கி நகரத் தொடங்கியது.

——–

அந்தத் தீவின் இரவு, மெக்சிகோ சிட்டியின் இரைச்சலான இரவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. மின்மினிப் பூச்சிகளின் ஒளியும், தூரத்தில் ஒலிக்கும் கடல் அலைகளின் ஓசையும் அந்த இடத்திற்கு ஒரு அமைதியான இசையைக் கொடுத்தன.காயத்ரி அந்தப் பெரிய மாளிகையின் பால்கனியில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

“இந்த ராபர்ட்… இல்லை டேவிட், இவன் உண்மையில் யார்? ஒரு கையில் ரத்தம், இன்னொரு கையில் கருணை… இது எப்படிச் சாத்தியம்?”அப்போது பின்னால் காலடிச் சத்தம் கேட்டது. கையில் இரண்டு தட்டுகளுடன் டேவிட் நின்றிருந்தான். அவன் அணிந்திருந்த வெள்ளை நிற மெல்லிய குர்தா அவனுக்கு ஒரு இந்தியக் கலை தந்தது.

“பசிக்கலையா? அங்கே பாரு… நிலா எவ்வளவு அழகா இருக்குன்னு,” என்றபடி அவளருகே வந்தான்.அவன் கொண்டு வந்த தட்டில் மெக்சிகன் ஸ்டைலில் செய்யப்பட்ட காரமான சிக்கன் வருவல், அதன் பக்கத்திலேயே நெய் மணக்கும் சாதமும் இருந்தது. “என்னது இது? சாப்பாட்டுல கூட இவ்வளவு முரண்பாடா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.”வாழ்க்கையே ஒரு முரண்பாடு தான் காயத்ரி. இந்தா சாப்பிடு,” என்று ஒரு தட்டை அவளிடம் நீட்டினான்.

இருவரும் பால்கனியில் அமர்ந்து நிலவொளியில் சாப்பிடத் தொடங்கினர். காயத்ரி ஒரு கணம் தன் கவலையெல்லாம் மறந்து அந்த உணவின் சுவையில் மூழ்கினாள். “ரொம்ப நல்லா இருக்கு. நீங்களா சமைச்சீங்க?”டேவிட் நிலவைப் பார்த்தபடி சொன்னான், “சமைக்கிறது ஒரு கலை. எதிரிகளை வீழ்த்துறதை விட, ஒருத்தரோட பசியைத் தீர்க்கிறது கஷ்டமான வேலை. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க…

‘டேவிட், உன் கையில ஆயுதம் இருந்தாலும் உன் மனசுல அன்பு இருக்கணும்’னு. ஆனா இந்த உலகத்துல அன்பு மட்டும் இருந்தா வாழ விட மாட்டாங்க.”காயத்ரி உணவை நிறுத்திவிட்டு அவனை உற்றுப் பார்த்தாள்.

“உங்க அம்மா இப்போ எங்க இருக்காங்க?”டேவிட்டின் முகம் சட்டென்று வாடியது. “அவங்க இப்போ இல்ல. ஆண்டனி மாதிரி சில மிருகங்களால நான் அவங்களை இழந்துட்டேன். அன்னைக்குத் தான் இந்த டேவிட் மில்லர் பிறந்தான். அநியாயக்காரங்களுக்கு எமனா, ஆனா அனாதைகளுக்கு அப்பனா இருக்கணும்னு அன்னைக்கு எடுத்த முடிவு தான் இது.”

காயத்ரிக்கு அவன் மேல் இருந்த அந்த ‘மாஃபியா’ பிம்பம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அவனது பேச்சில் இருந்த நேர்மையும், அந்த வலியை மறைக்க அவன் போடும் புன்னகையும் அவளை ஏதோ செய்தது.”ஸாரி… நான் உங்களைத் தப்பா நினைச்சிட்டேன்,” என்றாள் காயத்ரி மெல்லிய குரலில்.

“பரவாயில்லை. ஒரு டிடெக்டிவா நீ அப்படி நினைக்கிறது தான் சரி. ஆனா இப்போ நீ ஒரு டிடெக்டிவ் இல்லை. ஒரு வாரத்துக்கு நீ காயத்ரி மட்டும்தான். நானும் வெறும் ராபர்ட் தான்,” என்றான் அவன், அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி.அந்தத் தருணத்தில் இருவருக்கும் இடையே ஒரு மௌனமான நெருக்கம் உருவானது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத ஏதோ ஒன்று அந்தத் தீவின் காற்றில் கலந்தது. காயத்ரிக்கு முதல் முறையாக அந்தத் தீவு ஒரு சிறைச்சாலையாகத் தெரியவில்லை; அது ஒரு சொர்க்கமாகத் தெரிந்தது.மறுநாள் காலை, தீவில் ஒரு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அந்தத் தீவில் வசிக்கும் உள்ளூர் மீனவ மக்கள் கொண்டாடும் கிராமத்து பாரம்பரியத்தை போற்றும் விழாவாகும்.”இன்னைக்கு இங்க ஒரு திருவிழா நடக்கப்போகுது காயத்ரி. நாம ரெண்டு பேரும் டூரிஸ்ட் ஜோடி மாதிரி அங்க போகப்போறோம். ரெடியா இரு,” என்றான் டேவிட்.காயத்ரிக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. “திருவிழாவா? கண்டிப்பா வரேன்!”

ஆனால் அதே சமயம், மெக்சிகோ சிட்டியின் ஒரு ரகசிய இடத்தில், ஆண்டனியின் ஆட்கள் ஒரு வரைபடத்தை விரித்து வைத்துக் கொண்டிருந்தனர்.

“இந்தத் தீவு தான்… டேவிட் அந்தப் பொண்ணை இங்க தான் ஒளிச்சு வச்சிருக்கான். இன்னைக்கு நைட் வேட்டையை ஆரம்பிக்கிறோம்!”அமைதியான அந்தத் தீவில் புயல் வீசத் தயாராக இருந்தது.

You may also like

Leave a Comment

About Me

Featured