Home ANTIHERO4) மோகங்கள் ❣️

4) மோகங்கள் ❣️

by sreejanovels
7 views

அத்தியாயம் 4

நேற்று சைட்டில் வேலை முடிந்ததும் மைவிழி, நிலா மற்றும் யாழ்மொழி ஆகியோர் ஆதித்யாவிடமும் ஆரியனிடமும் விடைபெற்றுக்கொண்டு நேரடியாகத் தங்கள் வீடுகளுக்கே சென்றுவிட்டனர். வர்மன் பேலஸில் விஸ்வநாத வர்மன் தங்களைப் பாராட்டியது பற்றியோ, கௌசல்யா தங்களுக்கு எதிராகச் சபதம் எடுத்திருப்பது பற்றியோ அவர்களுக்குத் துளியும் தெரியாது.

மறுநாள் காலை, ‘வர்மன் – சக்ரவர்த்தி’ ஒருங்கிணைந்த அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆதித்யா தன் கேபினில் அமர்ந்து நேற்றைய சைட் ரிப்போர்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை மைவிழியின் பெயருக்கு நேரே இருந்த அந்தப் புள்ளிவிவரங்களில் நிலைத்தது. ‘இவ்வளவு துல்லியமாக ஒரு பெண்ணால் சிந்திக்க முடியுமா?’ என்ற வியப்பு அவனுக்குள் மெல்ல ஒரு ஈர்ப்பை விதைத்துக் கொண்டிருந்தது.

அப்போது செழியன் பதற்றமாக உள்ளே நுழைந்தான். “ஆதி… ஒரு பிரச்சனை! நாம நேத்து அப்ரூவல் வாங்கின அந்த சைட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு உள்ளூர் கும்பல் இப்போ தகராறு பண்றாங்க. அங்கே இருக்குற பழைய குடோனை இடிக்கக் கூடாதுன்னு சொல்லி முன்னாடி வந்து நிக்கிறாங்க,” என்றான்.

ஆதித்யா ஆத்திரத்துடன் எழுந்தான். “வர்மன் குரூப் கிட்டயே விளையாடுறாங்களா? வா போலாம்,” என்று கிளம்ப, அங்கே ஆரியனும் அவனது தங்கைகள் மைவிழி மற்றும் யாழ்மொழியும் வந்தனர். பிசினஸ் பார்ட்னராக நிலாவும் அங்கே வந்திருந்தாள்.

மைவிழி நிதானமாகச் சொன்னாள், “ஆதித்யா, அவசரப்பட்டு அங்க போகாதீங்க. நேத்து யாழ்மொழி சொன்ன அந்த ஐடியா எப்படியோ லீக் ஆகியிருக்கு. அந்தப் பகுதி மக்களை யாரோ தப்பா தூண்டிவிட்டு இருக்காங்க. இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சதி இருக்குன்னு எனக்குத் தோணுது.”

ஆதித்யா அவளை ஒரு நிமிடம் ஊடுருவிப் பார்த்தான். “சரி, நாம எல்லாரும் சேர்ந்தே போய்ப் பேசலாம்,” என்றான்.

சைட்டில் நிலைமை மோசமாக இருந்தது. திரண்டிருந்த மக்கள் கற்களைத் தூக்கி எறியத் தயாராக இருந்தனர். ஆதித்யா கார் கதவைத் திறந்து இறங்க முயல, மைவிழி அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள். “ஆதித்யா… இப்போ நீங்க போனா கலவரம் ஆகும். நான் போய் பேசுறேன்,” என்று மைவிழி இறங்கினாள். அவளது துணிச்சலைக் கண்டு ஆதித்யா ஒரு நிமிடம் திகைத்து நின்றான்.

நிலாவும் அவளுக்குத் துணையாக இறங்கினாள். ஆரியன் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான். “நிலா, பத்திரம்! ஏதாவதுன்னா எனக்கு ஒரு சிக்னல் கொடு,” என்று அவன் சொல்ல, நிலா அவனுக்கு ஒரு தைரியமான புன்னகையைச் சிந்தினாள். பிசினஸில் கறாராக இருக்கும் நிலா, மக்களிடம் பேசத் துணிந்த அந்த வேகம் ஆரியனின் மனதை ஏதோ செய்தது.

மைவிழி மக்களிடம் சென்று, “பெரியவர்களே… நாங்க இந்த இடத்தை இடிக்கப் போறது இல்ல. இதோ பாருங்க, இந்த பழைய குடோனை அப்படியே மெயின்டெயின் பண்ணி, உங்க ஊர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிற மாதிரி ஒரு சென்டர் தான் ஆரம்பிக்கப் போறோம்,” என்று நிதானமாகப் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினாள். நிலா அங்கே இருந்த பெண்களிடம்

“எங்க தொழில் நிறுவனம் எப்போதும் சாமானிய மக்களா ஏமாற்றியது கிடையாது.  எங்க குடும்பத்தோட பல தலைமுறைக்கு முன்னால் அடிமட்டத்திலிருந்து எல்லாரும் உயர்ந்து வந்தாங்க. அதனால நிச்சயம் நீங்க எங்க கம்பெனி நம்பலாம் எங்களோட ப்ராஜெக்ட் மட்டும் நல்லபடியா முடிஞ்சா நிச்சியம் இங்கே இருக்கிற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏன் பெண்களுக்கு கூட வேலைவாய்ப்பு ஏதாவது ஒன்னு கிடைக்கும் அவங்க அவங்க கல்வி தகுதிக்கு ஏற்ற மாதிரி நாங்க சாமானிய மக்கள் வாழ்ற இடத்துல நிலம் அபகரிச்சு எதையும் செய்யல பல வருஷமா யாருக்கு உபயோகமில்லாத இடமா இருந்து அதை ப்ராஜெக்ட் நிறுவி நல்ல ஒரு விஷயத்தை செய்யலாம்னு இருக்கும் நிச்சயம் நீங்கள் துணியா இருக்கணும் என வீட்டு பெண்கள் சொல்றதுதான் ஆண்கள் செய்வாங்க”

என்று நிலா

மென்மையாகப் பேசி, அந்தத் திட்டம் நிறைவேறினால் அந்த ஊருக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளை விளக்கினாள். சில நிமிடங்களிலேயே அந்த மக்கள் கலைந்து சென்றனர்.

ஆதித்யா தூரத்திலிருந்தே மைவிழியைப் பார்த்தான். ‘எப்படி இவ்வளவு சுலபமாக ஒரு கூட்டத்தை இவளால் கையாள முடிகிறது?’ என்ற கேள்வி அவனுக்குள் ஒரு மதிப்பை உண்டாக்கியது.

அன்று மாலை வேலை முடிந்து, அனைவரும் தனித்தனியாகத் தங்கள் இடங்களுக்குக் கிளம்பினர்.

“எனக்கு சில பொருட்களை பர்சேஸ் பண்ண வேண்டி இருக்கு நான் அப்புறம் வரேன்”

என்று சொன்ன  யாழ்மொழி தன் காரை ஓட்டிக்கொண்டு ஒரு ஒதுக்குப்புறமான சாலையில் செல்லும்போது, ஒரு கறுப்பு நிறக் கார் அவளை வழிமறித்தது.

கௌசல்யா அனுப்பிய ஆட்கள் காரிலிருந்து இறங்கி யாழ்மொழியை மிரட்ட முயன்றனர். எப்படியாவது தன் சகோதரி பிள்ளைகள் தன் குடும்பத்தின் பக்கம் வரக்கூடாது என்று மிகப் பிடிவாத குணத்தோடு இருந்தவர் தப்பான முடிவை எடுத்து விட்டார்.

அங்கு வந்த ரவுடி கும்பல் யாழ் மொழியை பார்த்து

“என்னம்மா… ரொம்பத் துள்ளுற போல இருக்கு? சைட்டை விட்டு விலகிக்கோ, இல்லன்னா முகம் சிதைஞ்சுடும்,” என்று ஒருவன் அவளை நெருங்கினான்.

அப்போது மின்னல் வேகத்தில் ஒரு பைக் அங்கே வந்து நின்றது. ஹெல்மெட்டைக் கழட்டியபடி இறங்கியது செழியன்!

“யாழ்மொழி… ஓரமா நில்லு. இவங்களை நான் பார்த்துக்கிறேன்!” என்று செழியன் சொல்ல, அந்த ரவுடிகள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். செழியன் தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு களத்தில் இறங்கினான். தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த யாழ்மொழியின் இதயம் முதன்முதலாகச் செழியனுக்காகப் படபடத்தது.


அந்த ஒதுக்குப்புறமான சாலையில் ரவுடிகள் சூழ்ந்திருந்தபோது, செழியன் தன் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மிக நிதானமாக இறங்கினான். அவனது கண்களில் எப்போதும் இருக்கும் அந்த நக்கல் மறைந்து, ஒரு தீர்க்கமான ஆக்ரோஷம் குடிகொண்டிருந்தது.

“என்ன தம்பி… ஹீரோ மாதிரி பைக்ல வந்து நிக்கிற? அவசரப்பட்டு மண்டையை உடைச்சுக்காத, ஓடிப் போயிடு,” என்று ஒருவன் கத்தியை எடுத்து மிரட்டினான். யாழ்மொழி பதற்றத்தில் கார் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள். “செழியா… இவங்ககிட்ட கத்தி இருக்கு, வேண்டாம்… நாம போலீஸுக்குப் போலாம்!” என்று கத்தினாள்.

செழியன் அவளைத் திரும்பிப் பார்த்தான். “மொழிவரி… நான் யாருன்னு உனக்கு இன்னும் தெரியல. அமைதியா அங்கே நில்லு,” என்று சொன்னவன், அடுத்த நொடி பாய்ந்தான். முன்னால் வந்தவனின் கையைப் பிடித்துத் திருகி, கத்தியைக் கீழே தட்டிவிட்டான். ஒரு பலமான மிதி அவன் வயிற்றில் விழ, அவன் தெறித்துச் சென்று விழுந்தான். செழியன் சளைக்கவில்லை. ஒருவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுச் சுழற்றி அடித்தான். அவனது ஒவ்வொரு அடியும் துல்லியமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.

கடைசி ரவுடியைச் செழியன் பிடரியில் பிடித்துத் தன் பைக்கின் மீது மோதச் செய்ய, அவன் மயங்கி விழுந்தான். செழியன் தன் சட்டையைச் சரி செய்தபடி யாழ்மொழியின் அருகில் வந்தான். அவனது மூச்சு பலமாக வாங்கிக் கொண்டிருந்தது. “என்ன… இன்னும் ஒரு மீம் ரெடி பண்ணலையா? செழியன் செஞ்ச சண்டையை லைவ் போட வேண்டியதுதானே?” என்று அவன் பழைய நக்கலுக்குத் திரும்பினான். யாழ்மொழிக்கு அழுகையும் சிரிப்பும் ஒன்றாக வந்தது. “உங்களுக்கு ரத்தம் வருது செழியா!” என்று அவனது கையில் இருந்த சிறு சிராய்ப்பைப் பார்த்துப் பதறினாள். அந்த ஒரு நொடி யாழ்மொழியின் இதயம் அவனிடம் முழுமையாகச் சரணடைந்தது.

“இந்த வர்மன் குடும்பத்து ஆட்களுக்கு ரத்தம் சிந்துவது கைவந்த கலை ஆனால், அது பிசினஸ் விலகிக்கு தான் .

முதன் முதலில் ஒரு அமுல் பேபி காக இந்த அழகான இளவரசனான இளஞ்செழியன் உனக்காக சிந்தி இருக்கான் அதனால தப்பில்ல தப்பில்ல”

என்று அவளை சமாதானம் செய்யும் விதமாக இது போல் பேச அவள் மென்மையாக சிரிக்க ஆரம்பித்தாள் ஏனோ அவளை அவன் மனம் நேசிக்கவும் செய்கிறது அவ்வப்போது இம்சையும் செய்ய சொல்கிறது.


அதே நேரம், ஆதித்யாவும் நிலாவும் வர்மன் பேலஸிற்கு வந்து சேர்ந்தனர். கார் ஓட்டும் போது ஆதித்யா அமைதியாக இருந்தாலும், அவனது மனது மைவிழியின் அந்தத் துணிச்சலான முகத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. பேலஸிற்குள் நுழைந்ததும் நிலா நேராகத் தன் அறைக்குச் சென்றாள். ஆரியன் இன்று காட்டிய அந்த அக்கறை அவளுக்குள் ஒரு புது உணர்வைத் தந்திருந்தது. ‘அவர் இவ்வளவு கனிவா பேசுவாருன்னு நான் நினைக்கல’ என்று நிலா தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

ஏனோ பல நாள் பழக்கம் இல்லை அவ்வப்போது பார்வையால் தான் இருவரும் பழகிக் கொள்கிறார்கள் ஏனோ அவன் காந்த பார்வை கந்தர்வ பார்வையாக அவளை ஈர்த்துக் கொள்கிறது.

மறுபுறம், **ஆரியனும் மைவிழியும் சக்கரவர்த்தி வீட்டிற்கு. சென்றனர். ஆரியன் சோபாவில் சாய்ந்தபடி, “மைவிழி, இன்னைக்கு நிலா அந்தப் பெண்களிடம் பேசின விதம் நிஜமாவே ஒரு பெரிய மாற்றம். அவளுக்குள்ள ஒரு நல்ல லீடர்ஷிப் இருக்குல்ல?” என்று கேட்டான். மைவிழி புன்னகைத்தாள். “நிச்சயமா அண்ணா ஆனா அவளை விட இன்னைக்கு ஆதித்யா நடந்துகிட்ட விதம் தான் எனக்கு ஆச்சரியம். அவன் கர்வத்தை விட பிசினஸ் முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டான்,” என்றாள். மைவிழிக்கு ஆதித்யா தன் கையைப் பிடித்துத் தடுத்த அந்தத் தருணம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

பின்ன சும்மாவா சில வருடங்களாக அவனை தானே மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் . அன்று அவள் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது வந்த சீப் கெஸ்ட் அவன் அவனைப் பார்த்ததிலிருந்து, தானும் பிசினஸ் உலகில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் என்று அவனைப் பற்றிய சதா ஸ்ரீராமஜெயம் என்பது போல் ஆதித்யா வர்மா, ஆதித்யா வர்மா என்று நினைத்து நினைத்து இதோ அவனோடவே அனல் பறக்கும் போட்டி களத்தில் இறங்கி இருக்கிறாள் . மேலும் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறாள் இதைவிட அவளுக்கு என்ன வேண்டும் என்பது போல் இருந்தது அவள் மனம்.

வர்மன் பேலஸில் கௌசல்யா தான் அனுப்பிய ஆட்கள் தோற்றுப் போன செய்தியை அறிந்து ஆத்திரத்தில் கத்தினார். ஸ்வேதாவும் ஸ்ருதியும் அங்கே வந்தனர். “அம்மா! அந்த யாழ்மொழியைச் செழியன் காப்பாத்திட்டாராம். இப்போ அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாப் பேசிட்டு இருக்காங்களாம், அடி வாங்கினவர் இல்ல ஒருத்தர் போன் பண்ணி சொன்னாரு எல்லாம் வேஸ்ட் பணத்த ரிட்டர்ன் குடு அப்படின்னு சொன்னா கூட அவனுக்கு பிளாக் பண்ணிட்டானுக” என்று ஸ்ருதி போட்டுக் கொடுத்தாள்.

கௌசல்யா தன் நகங்களைக் கடித்தார். “செழியனே அவளைக் காப்பாத்துவான்னு நான் நினைக்கல. இந்த ஆதித்யாவும் செழியனும் அந்தப் பொண்ணுங்க பின்னாடியே சுத்துறது எனக்குப் பிடிக்கல. விஸ்வநாத வர்மாவும் அவங்களை நம்ப ஆரம்பிச்சுட்டாரு. இனிமே இப்படிச் சின்னச் சின்ன வேலை செஞ்சா சரிப்படாது. அந்தப் பொண்ணுங்களோட கேரக்டரை அசிங்கப்படுத்தினா தான் நம்ம வீட்டு வாரிசுகள் அவங்களை வெறுப்பாங்க,” என்று ஒரு வஞ்சகமான திட்டத்தை வகுத்தார்.

“நாளைக்கு பிசினஸ்  ஒரு சக்சஸ் பார்ட்டி இருக்கு. அந்தப் பார்ட்டில தான் நம்ம விளையாட்டை ஆரம்பிக்கணும். அந்த மைவிழி, நிலா, யாழ்மொழி மூணு பேரோட கௌரவத்தையும் குலைக்கணும்,” என்று கௌசல்யா சிரித்த அந்தச் சிரிப்பு, வரப்போகும் பெரும் புயலுக்கு அறிகுறியாக இருந்தது.

தான் நினைத்தது நடக்க வேண்டும் தான் தவறாக நினைத்த விஷயங்கள் நிச்சயம் நடந்தே தீர வேண்டும். தனக்கென்று அனைத்து வசதிகளும் இருந்தும் பேராசைப்பட்டு இரண்டு பெண் குழந்தைகளையும், தவறான வழியில் வளர்த்து இப்பொழுது இன்னொரு வீட்டுப் பெண் அதாவது, தன் சொந்த சகோதரிகளே நடத்தை சரியில்லாதவர்கள் என்று பெரும்பழியைப் போல மனசாட்சி இல்லாத கௌசல்யா அடுத்த கட்டத்தை தீட்ட தொடங்கினார்.

_

You may also like

Leave a Comment

About Me

Featured