Home ANTIHERO4) அதிரூபன் 🔥

4) அதிரூபன் 🔥

by sreejanovels
9 views

அத்தியாயம் 4

ஏ.ஆர். இண்டஸ்ட்ரி என்ற மிகப்பெரிய ஆர்ச் மேனகாவை வரவேற்றது.

தனியாக ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனி கிளைகள் இல்லாமல், ஒரே இடத்தில் அனைத்து டிபார்ட்மென்ட்டுகளையும் வைத்து சகல வசதிகளோடு தனது சாம்ராஜ்யத்தை நடத்திக்கொண்டிருந்தான் அதிரூபன்.

ஆர்ச்சின் உள்ளே வந்தவுடன் பொது வாகனங்கள் எதுவும் உள்ளே வர அனுமதி கிடையாது. பிரத்தியேகமாக அந்தக் கம்பெனி வாகனங்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். மேலும், உள்ளே பல ஏக்கர் தூரத்தைக் கடந்துதான் ஒவ்வொரு கம்பெனிக்கும் செல்ல முடியும். அதனால், அமிர்தா எம்.டி-யை பார்க்க வேண்டும் என்று தனக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரைக் காண்பித்த பிறகுதான் செக்யூரிட்டி ஒரு பிரத்தியேக வாகனத்தைக் காட்டினார். ஏற்கனவே நான்கு நபர்கள் எம்.டி இருக்கும் பில்டிங்கிற்குச் செல்ல வேண்டும் என்பதால் அந்த வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அமிர்தாவும் அமர்ந்து கொள்ள அந்த வண்டி புறப்பட்டது. பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகுதான் அந்த பில்டிங் வந்தது. அதுவே ஏழு அடுக்குமாடி பில்டிங். அட்மினிஸ்ட்ரேஷன் மொத்தமும் அங்கேதான் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால், உள்ளே ஒரு நகரமே இருக்கிறது என்று சொல்லலாம்.

பணியாளர்களுக்குத் தேவையானது, ஊழியர்களுக்குத் தேவையானது என்று சகல வசதிகளோடு அமைக்கப்பட்டு இருந்தது அந்த நிர்வாகம்.

“ஹாய், ஐ அம் சுனிதா. திருச்சி மேனேஜ்மென்ட் ஹெட் அக்கவுன்ட் ஜாப்புக்கு வந்திருக்கேன். கம்பெனி இவ்ளோ பெரிய அட்மாஸ்பியரோடு இருக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கல. பை தி வே, யுவர் குட் நேம்?” என்று அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டாள்.

“ஐ அம் அமிர்தா. பெயிண்டிங் டிசைனர் ஜாப் ஆஃபர் பண்ணியிருக்காங்க,” என்று அமிர்தா கூறினாள்.

“கிரேட்! எனக்கு அப்பவே தெரியும். அதிரூபன் சார் அவ்ளோ சீக்கிரம் அவரோட ஆபீஸ் ஸ்டாஃபை சூஸ் பண்ண மாட்டார். டெக்னாலஜி இருந்தும் ஒரு ப்ரொபஷனல் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்டைக் கூப்பிட்டு வந்து அவரோட அட்வர்டைஸ்மென்ட் டிசைனுக்குக் கூப்பிட்டிருக்கார்னா, நிச்சயமா அவரோட அடுத்த லெவல் அட்வர்டைஸ்மென்ட் சூப்பராக, கிரியேட்டிவிட்டியாக, நிச்சயம் பலரால் பேசப்படக்கூடிய விஷயமா மாறப் போகுது. என்னோட வாழ்த்துக்கள். இன்கேஸ் நம்ம ரெண்டு பேரும் ஒரே பில்டிங், ஒரே ஃப்ளோரில் இருந்தா அப்பப்ப மீட் பண்ணிக்கலாம்,” என்று தன்மையாகப் பேச, இப்படிப் பேசிக்கொண்டு இருவரும் வரும்போது சரியாக பில்டிங் வந்துவிட்டது.

அமிர்தா தான் செல்ல வேண்டிய ஏழாவது மாடியில் இருக்கும் ஐந்தாவது அறைக்கு தன் பதட்டத்தைக் குறைத்துக்கொண்டு தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, கதவுக்கு வெளியே நின்று அனுமதி கேட்டாள். அனுமதி கிடைத்தவுடன் தனது ரெஸ்யூம் கோப்புடன் உள்ளே நுழைய,

தனது மிகப்பெரிய, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் முடிசூடா மன்னன் போல் தனது கருப்பு நிற கோட் அணிந்துகொண்டு ஒரு மேகசின் படித்துக்கொண்டிருந்தான் அதிரூபன்.

அவன் அமர்ந்திருக்கும் தோரணத்தைப் பார்த்து ஒரு நொடி அமிர்தாவின் மனம் சற்றுத் தடுமாறியது உண்மை. ஆனால், அதை ஒரு நொடியில் அவள் சுதாரித்துக்கொண்டாள். ஆனால், கள்வன் அவன் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது. ஒரு நொடி அவனைக்கவர்ந்து பார்த்திருந்தாலும் அந்தப் பார்வையைப் பார்த்தவன் ஆயிற்றே! நிச்சயம் இவளை தன் வசம் இழுத்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தால். பிறகு எதுவும் தெரியாததைப் போலவே புத்தகத்தை மடித்து ஓரமாக வைத்தவன்,

“ஹலோ அமிர்தா, வெல்கம் டு ஏ.ஆர். இண்டஸ்ட்ரி,” என்று சொல்லி இருக்கையைக் காட்டினான். ஒரு நன்றி தலையசைப்போடு அமிர்தா அமர்ந்துகொள்ள, அவள் கையிலிருந்து கோப்பையைப் பெற்றுக் கொண்டவன் ஏதோ கோப்புகளைச் சரிபார்ப்பது போல் அவளைத்தான் களவாடிக்கொண்டிருந்தான்.

பட்டாம்பூச்சி போல் அவ்வப்போது துடித்துக்கொண்டிருக்கும் அவள் இமைகள், எதையோ யோசித்து தன் முத்துப்பற்களால் தேன் சொட்டும் இதழைக் கடிக்கும் நொடி, தன் கை கடிகாரத்தை ஒருமுறை சரிபார்ப்பது போல் சரிசெய்து அவள் கண்கள் அங்கும் இங்கும் மலைப்பாய்வது என்று ஒவ்வொரு நொடியும் விடாமல் அவளைப் பார்வையால் பருகிக்கொண்டிருந்தான்.

இதற்கு மேல் இருந்தால் முடியாது என்பதுபோல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவன்,

“ஓகே அமிர்தா, ஆக்சுவலி ப்ரொபஷனல் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட் இந்தக் கம்பெனிக்கு புதுசு கிடையாது. ஆல்ரெடி ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க மேரேஜ் பண்ணி துபாய் செட்டில் ஆகிட்டாங்க. அதனால்தான் இந்த பெயிண்டிங் காம்பெடிஷனுக்கு நான் வந்தேன். எனக்குத் தேவையான ஒரு ப்ரொபஷனல் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்டுக்காக, உங்களோட பெயிண்டிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தப் பரிசு வாங்கிட்டு உன்னை அப்படியே அனுப்புவதற்கு விருப்பம் இல்ல. அதனாலதான் பரிசு வேற ஒருத்தவங்களுக்குக் கொடுத்துட்டு, உனக்கு ஒரு நல்ல ஃபியூச்சர் அமைச்சு கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன். இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ண அவங்க ஒரு டெமோ வீடியோ புதுசா வர ஸ்டாஃபுக்கு கொடுப்பதற்காக ப்ரெசென்ட் பண்ணியிருப்பாங்க. நீங்க என்ன பண்றீங்க, ரூம்குள்ள போங்க. அங்கதான் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட் ஒர்க் பண்ண ரூம். இனிமே அது உங்க கேபின் மாதிரி. உங்களுக்குத் தேவை என்னவோ, டபுள் டு டபுள் ஃபோர் நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க. நீங்க கேட்டது கிடைக்கும். உங்களுக்கு எல்லா பெசிலிட்டியும் இருக்கு. வெல்கம் டு அவர் கம்பெனி,” என்று பேசி முடித்து தன் கரங்களை நீட்ட, மரியாதை நிமித்தமாக தன் கரங்களைக் கொடுக்க, பஞ்சு போல் இருக்கும் கரங்களை ஒரு ஐந்து நிமிடம் பிடித்துக் கைகுலுக்கிவிட, அமிர்தா மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.

“தேங்க்யூ, தேங்க்யூ சோ மச் சார். என்னோட ஃபேஷன் என்னுடைய ப்ரொபஷனா மாறினது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். நான் ஒரு குட் ஸ்டாஃபா இருப்பேன். நிச்சயம் என்னோட பெஸ்ட் கொடுப்பேன். ஆனா உங்க கேபின்குள்ள இருக்குற ரூம்தான் என்னுடைய கேபின் அப்படின்னு சொல்றீங்களே… இதான் எனக்கு…” என்று சங்கடத்தைத் தெரிவிக்க,

“உங்களுக்கே தெரியும், பெயிண்டிங்ன்றது எனக்கு ரொம்பப் பிடிக்கிற விஷயம். அதனால ஆர்ட்டிஸ்ட் மட்டும் எப்பவுமே என்னோட ரூம்குள்ளதான் இருப்பாங்க. ஐ மீன், என் கூட கிடையாது. நான் இருக்க ரூம்குள்ள இருக்கிற ரூம்க்குள்ள. பிகாஸ் அங்கதான் என்னுடைய எக்ஸ்க்ளூசிவ் பெயிண்டிங் எல்லாமே இருக்கு. நான் இதை யாருக்கும் ஷேர் பண்ண விரும்பல. எல்லாமே என்னை சார்ந்து, நான் இருக்கிற இடத்துல இருந்துச்சுன்னா சேஃப்டியா இருக்கும். ஒன் மோர் திங், இந்த ஆபீஸ்ல எல்லாரும் போன பிறகுதான் நான் லாஸ்ட்டா கிளம்புவேன். ஏன்னா, எல்லாருடைய சேஃப்டியும் முக்கியம். என்னோட திங்ஸ் சேஃப்டியும் முக்கியம். நான் இல்லாத நேரம் என் ரூம்க்குள்ள யாராவது வந்துட்டா என்ன பண்றது? எப்பவுமே நான் முன்னெச்சரிக்கையா இருப்பேன். எனக்குன்னு யாரும் கிடையாது. நான் ஒரு தனி மரம். வீட்டில் தனியா இருக்குறதுக்கு ஆபீஸ்க்கு வந்துடலாம். எனக்கு இருந்த சித்தப்பா இப்போ ட்ரிப் போயிருக்காரு. அவர் வருவதற்கு இன்னும் ரெண்டு மாசம் ஆகும். நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு எப்பவுமே ஃபீமேல் அசிஸ்டன்ட் இருப்பாங்க. நான் சொன்ன நம்பருக்கு கால் பண்ணா உங்களுக்குக் கூட இருப்பாங்க,” என்று சொல்லிவிட, அதற்கு மேல் அமிர்தா எதுவும் பேச முடியவில்லை. அவன் காண்பித்த அறைக்குள் செல்ல, அங்கு ஏற்கனவே ஒரு பெண் தயாராகத்தான் இருந்தாள்.

“ஹலோ மேம், ஐ அம் தீபதர்ஷினி. செக்யூரிட்டி ஃபார் யூ. ப்ரொபஷனல் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு செக்யூரிட்டி இருப்பாங்க. அது கம்பெனியோட ரூல். உங்களுக்கு எந்த ஒரு விஷயம் தேவை என்றாலும் என்னைக் கூப்பிடலாம். நான் உங்க கூடதான் இருப்பேன்,” என்று சொல்ல, அமிர்தாவுக்கு சரி, துணைக்கு ஒரு பெண் இருக்கிறாள், அதுவே போதும் என்று இருந்தது.

சிறிது நேரம் அமிர்தாவும் அவளும் பேசிக்கொண்டிருக்க, இதற்கு முன்பாக வேலை பார்த்தவர் கொடுத்த டெமோ வீடியோவை ஒருமுறை அமிர்தா பார்க்க, அதிரூபனின் திட்டங்களைப் பற்றி பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.

“ஃபென்டாஸ்டிக்! இங்கே ஒர்க் பண்றது நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. அது மட்டும் இல்லாம எனக்கு ஒரு செக்யூரிட்டி எல்லாமே ஃபேன்டஸியா இருக்கு. எனிவே, இப்போதைக்கு எனக்கு எதுவும் தேவைப்படாது. எதுவா இருந்தாலும் நான் உன்னைக் காண்டாக்ட் பண்றேன் தீபா. நீங்க இப்போ உங்க ஒர்க்கை பார்க்கலாம்.”

“ஷுவர் மேடம். எதுவா இருந்தாலும் அந்த நம்பருக்கு போன் பண்ணுங்க. நான் எப்பவுமே உங்களுக்கு அவைலபிலா இருப்பேன். என்னோட ஒர்க்கூட இந்த அட்மினிஸ்ட்ரேஷன் சூப்பர்வைஸிங் தான். நான் அதை பார்க்கப் போறேன். இப்போ பாஸ் ரவுண்ட்ஸ் போயிட்டு வர டைம். ஒரு டூ ஹவர்ஸ் ஆர்ட்டிஸ்ட் கூடதான் இருப்பாரு. பிகாஸ் அவருக்கு பெயிண்டிங் மேல பயங்கர இன்ட்ரெஸ்ட். இங்கே பார்த்திருப்பீங்கதானே? சில எக்ஸ்க்ளூசிவ் பெயிண்டிங் எல்லாம் இருக்கு. அதெல்லாம் சார் எங்கேயும் சேல் பண்ணல. வேணும்னா, அது ஒரு ரவுண்ட்ஸ் பார்த்துட்டு வாங்க,” என்று சொல்ல, அமிர்தாவும் சரி என்று சொல்லி லிவிங் ரூமில் இருந்து உள்ளே இருக்கும் பெயிண்டிங் டார்க் ரூமுக்குச் சென்றாள்.

அந்த ரூமைப் பார்த்து அவள் மெய்மறந்து நின்றுவிட்டாள்.

“வாவ்! இந்த பெயிண்டிங் எல்லாம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஏலம் எடுத்தாங்கன்னு சொன்னாங்க. ஃபர்ஸ்ட் காப்பி எல்லாமே இவர்தான் வச்சிருக்காரு. ஆள் பெரிய இடம்தான்,” என்று ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ஓவியத்தைப் பார்த்து அப்படியே ஆணியடித்தது போல் நின்றுவிட்டாள்.

அவள் எண்ணங்கள் பல வருடங்களுக்கு முன்பாகச் சென்றது.

“அப்பா! எனக்காக இந்த பெயிண்டிங் வாங்கிட்டு வந்தீங்களா?” என்று பத்து வயது அமிர்தா தன் தந்தை சேஷாத்ரியிடம் கேட்டாள். பழங்கால கோவிலில் இருந்து வந்த பிரதான ஓவியம் ஒன்றை தன் மகளுக்காக ஏலம் எடுத்து ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டு வாங்கி வந்திருந்தார் அவர்.

பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு லட்சம் என்பது சற்று அதிகம் தான் அமிர்தாவின் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்து. தன் மகளுக்காக அது வாங்கி வந்தது. ஆனால், சேஷாத்திரி அவர் மனைவி இறந்த பிறகு, தன் வாழ்நாளைக் கடப்பதற்காக இந்த ஓவியத்தை தனது 17-வது வயதில் மீண்டும் ஏலத்திற்கு விட்டுவிட்டாள் அமிர்தா.

“இது சின்ன வயசுல அப்பா எனக்காக வாங்கி வந்த ஓவியமா? இல்ல வேற காப்பியா?” என்று யோசித்துக்கொண்டே அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்து ஞாபகம் வந்தவளாக புகைப்படத்தின் கீழே இருக்கும் ஒரு அடையாளத்தைப் பார்க்க, அவ்வளவுதான், உடல் தளர்ந்து போய் அப்படியே கீழே அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

அந்த ஓவியத்தில் இருப்பது அந்தக் பழங்கால கோவிலைக் கட்டிய மகாராஜா. அருகில் இருப்பது அவரது மனைவி. இருவரும் கண்ணியமான கணவன் மனைவி, சிறந்த காதலர்கள் என்று பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த ஓவியம். அதற்கு கீழே அமிர்தா யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்தது:

“அமிர்தாவும் அவளது கனவு நாயகனும்”


You may also like

Leave a Comment

About Me

Featured