Home ANTIHERO3) மோகங்கள் ❣️

3) மோகங்கள் ❣️

by sreejanovels
7 views

அத்தியாயம் 3

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலை நிலம் தகிக்கும் மதிய வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. டெண்டர் ஆர்கனைசர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்ய வரவிருந்ததால், இரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளும் அங்கே ஆஜராகியிருந்தனர்.

ஆதித்யாவும் செழியனும் அதிகாரிகளுடன் சிரியஸாக எதையோ விவாதித்துக் கொண்டிருக்க, ஆரியன் நிலப்படங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். நிலா ஒரு ஓரத்தில் இருந்த மரத்தடியில் அமைதியாக நின்றிருந்தாள். அவளுக்கு இந்த வெயிலும் தூசியும் பழகவில்லை என்றாலும், தன் அண்ணனுக்காக அங்கே வந்திருந்தாள்.

அப்போது ஒரு விலை உயர்ந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து ஸ்வேதாவும் ஸ்ருதியும் மிக நவீனமான உடைகளில் இறங்கினர். சைட் விசிட்டிற்குச் சம்பந்தமே இல்லாத பட்டுப் போன்ற உடைகளும், அதிகப்படியான ஒப்பனையுடனும் அவர்கள் வந்திருந்தது அங்கிருந்த வேலை ஆட்களையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஸ்வேதா நேராக ஆதித்யாவிடம் சென்று, “ஆதி… என்ன வெயில் இது? ஸ்கின் எல்லாம் டேமேஜ் ஆகிடும் போல இருக்கு. இங்க எதுக்கு இவ்வளவு நேரம் நிக்கணும்? நாம வேணும்னா ஒரு ஏசி கேரவன் வரவழைக்கலாமா? இல்லன்னா பிளான்ல இந்த இடத்தை அப்படியே விட்டுட்டு வேற இடத்துல பில்டிங் கட்டலாம்,” என்று பிசினஸ் அறிவே இல்லாமல் லூசுத்தனமாகக் கேட்க, ஆதித்யா அவளை ஒரு அலட்சியமான பார்வை பார்த்தான்.

ஸ்ருதி செழியனிடம் சென்று, “செழியா… இந்தப் பழைய கட்டிடத்தை எதுக்கு இடிக்கணும்? இதைப் பெயிண்ட் பண்ணி ஒரு கஃபே மாதிரி மாத்திடலாமே? பார்க்க கியூட்டா இருக்கும்,” என்று சிரிக்க, செழியன் நெற்றியைச் சுருக்கினான்.

அப்போது அங்கே வந்த டெண்டர் ஆர்கனைசர், “என்ன சார்… உங்க வீட்டுப் பெண்கள் இப்படிப் பேசுறாங்க? இந்த இடத்துல ஒரு கெமிக்கல் பிளான்ட் வரப்போகுது. இங்க போயி கஃபே பத்திப் பேசிட்டு இருக்கீங்க?” என்று கிண்டலாகக் கேட்டார்.

மைவிழி மெதுவாக முன்னே வந்தாள். “மன்னிக்கணும் சார்… அவங்க ஜஸ்ட் ஒரு ஐடியா சொன்னாங்க. ஆனா எங்க ரியல் பிளான் இதுதான். இந்தப் பழைய கட்டிடத்தோட அஸ்திவாரம் ரொம்பப் பலமா இருக்கு. இதை இடிக்காமலேயே நாம இதைக் கண்ட்ரோல் ரூமா மாத்திட்டா, கட்டுமானச் செலவுல 15% மிச்சமாகும். அதோட, இங்க இருக்குற மரங்களை வெட்டாமலே நாங்க ஃபேக்டரி டிசைன் பண்ணியிருக்கோம்,” என்று நேர்த்தியாகவும் பிசினஸ் லாஜிக்கோடும் விளக்கினாள்.

யாழ்மொழி தன் டேப்பை எடுத்து அதிகாரிகளிடம் காட்டினாள். “அதுமட்டும் இல்ல சார், இந்த ஏரியாவோட மண் தரம் பத்தின ரிப்போர்ட் இது. நீங்க எதிர்பார்க்குறதை விட அதிக எடையைத் தாங்குற சக்தி இந்த நிலத்துக்கு இருக்கு,” என்று மிகத் தெளிவான ஆதாரங்களைக் காட்டினாள்.

அதிகாரிகள் வியந்து போனார்கள். “வெரி குட்! வர்மன் சார், உங்க பார்ட்னர்ஸ் ரொம்பப் புத்திசாலியா இருக்காங்க. பிளான் அப்ரூவ்டு!” என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

ஆதித்யாவுக்கு ஒரு பக்கம் தன் திட்டம் ஜெயித்ததில் சந்தோஷம் இருந்தாலும், ஒரு பெண் தன் முன்னே இவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசியது அவனது ஆணவத்தைத் தூண்டியது. அவன் மைவிழியை ஒரு தீர்க்கமான பார்வையால் அளவெடுத்தான். மைவிழி அவன் பார்வையை எதிர்கொண்டாலும், அவனது அந்த முரட்டுத்தனமான ஆளுமை அவளுக்குள் ஒரு ரகசிய நடுக்கத்தை உண்டாக்கிக் கொண்டுதான் இருந்தது.

அவமானப்பட்ட ஸ்வேதாவும் ஸ்ருதியும் கோபத்தில் ஓரமாக ஓரிடத்திற்கு சென்று போன் போட்டு தன் அம்மாவிடம்

“அம்மா! அந்த மைவிழியும் யாழ்மொழியும் எங்களை ஆபிஸர்ஸ் முன்னாடி அசிங்கப்படுத்திட்டாங்க. ஆதித்யாவும் செழியனும் அவங்க பேசுறதை அப்படியே வாயைப் பொத்திட்டு கேட்டுட்டு நிக்கிறாங்க. இதையெல்லாம் பார்த்தா அந்தப் பொண்ணுங்க சீக்கிரம் இந்த வீட்டுக்குள்ள வந்துடுவாங்க போல இருக்கு,” என்று ஸ்வேதா அழுதுகொண்டே கம்ப்ளைன்ட் செய்தாள்.

கௌசல்யாவின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. ராஜேஸ்வரியையும் தர்ஷினியையும் பார்த்து, தங்கள் மகள்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் சொல்லி “பார்த்தீங்களா அண்ணி… அந்த வெண்ணிலாவோட பிள்ளைகள் இப்போவே நம்ம வீட்டுப் பொண்ணுங்களை அடக்கப் பார்க்குறாங்க. இன்னைக்கு அவமானப்பட்டது நம்ம வீட்டு கௌரவம்,” என்று ஏத்திவிட்டார்.

ராஜேஸ்வரி பயத்தோடு, “கௌசல்யா… விஸ்வநாதன் கிட்டப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம், இப்ப அவன் தான் வீட்டுக்கு எல்லாமே உன்னோட அப்பா என்ன சொன்னாலும் அவன் கேட்பான் அதே சமயம் வீட்டு பிள்ளைகளோட விருப்பமும் இருக்கு. நீ தேவை இல்லாம சும்மா சும்மா இதே பேசிகிட்டு இருக்காத” என்றார்.

“ஆமாம் கௌசல்யா நீ எதுக்கு சும்மா சும்மா பசங்க கலந்த பத்தி பேசுற?? இதுவரைக்கும் என் பசங்க கல்யாண விருப்பம் இருக்கு அப்படின்னு உன் பொண்ணுங்கள சுட்டிக்காட்டியும் வேற எந்த பொண்ணுகளையும் சுட்டிக்காட்டியும் கேட்டதே இல்லை.  நீ அடிக்கடி இதை பத்தி பேசுற இங்க பாரு, இந்த வீட்ல எல்லாமே ஒரு வயசுக்கு வந்தா அவங்க அவங்க விருப்பம் தான் எல்லாமே இதுல யாரும் தலையிட முடியாது அத்தை  வாங்க போலாம்”

என்று சென்றுவிட கௌசல்யாவுக்கு இன்னும் வன்மம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

“அந்த ஓடுகாலி வெண்ணிலாவோட பொண்ணுங்க இந்த வீட்டுக்குள்ள வரவிடமாட்டேன் யாரையும் வரவிடமாட்டேன் இந்த வர்மன் பேலஸ் மொத்தம் எனக்கே சொந்தம் ஆகணும்”.

என்று தனக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது நாமம் இந்த வீட்டு மனுஷ்தான் என்று பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் நோகாமல் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்.


ஆரியன் முழு இடத்தையும் சர்வே செய்து ஒரு வரைபடத்தை தானாக உருவாக்கி தன் சகோதரிகளிடம் கலந்து ஆலோசித்து  இதுதான் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி,  அவசர வேலையாக தன் சொந்த அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான் செல்லும்பொழுது செழியன் ஆதித்யாவுக்கு தலை அசைப்பு கொடுத்து நிலாவை ஓர பார்வையால் வருடி விட்டு சென்றான்.

அந்தத் தொழிற்சாலை தளத்தில் மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது. டெண்டர் அதிகாரிகள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, இரு தரப்பு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆதித்யா தன் கையில் இருந்த வரைபடத்தை விரித்து, “சார், இந்தப் பழைய கட்டிடங்களை இடிச்சுட்டுப் புதுசா ஒரு ஸ்ட்ரக்சர் கொண்டு வர்றதுதான் வர்மன் குரூப்போட பிளான். இதுதான் பாதுகாப்பு,” என்று கர்வத்தோடு சொன்னான்.

அப்போது மைவிழி குறுக்கிட்டாள். அவளது குரலில் ஒரு தெளிவான பிசினஸ் நுணுக்கம் இருந்தது. “மன்னிக்கணும் சார்… வெறும் கட்டிடத்தை இடிச்சுட்டுப் புதுசா கட்டுறது சுலபம் தான். ஆனா இந்த நிலத்தோட ‘சாய்ல் ஸ்ட்ரக்சர்’ படி பார்த்தா, வலது பக்கத்துல இருக்குற அந்தப் பழைய சுவர்களைத் தகர்க்காமலேயே நாம பலப்படுத்த முடியும். இதனால கட்டுமானச் செலவுல 15% குறையும். ஆதித்யா சொல்ற மாதிரி மொத்தமா இடிக்கணும்னு அவசியம் இல்ல,” என்று அவள் தொழில்நுட்ப ரீதியாகப் பேசினாள்.

ஆதித்யா அவளை முறைத்தான். “குறைஞ்ச செலவுல பண்றது மட்டும் பிசினஸ் இல்ல மைவிழி. நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா?” என்று அவன் தன் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் கேட்டான்.

அப்போது நிலா தன் டேப்பில் இருந்த ஒரு வரைபடத்தைக் காட்டி நிதானமாகப் பேசினாள். “அண்ணே, மைவிழி அக்கா சொல்றதுல ஒரு பெரிய லாஜிக் இருக்கு. நான் இந்த நிலத்தோட பழைய மேப்பை ஆய்வு பண்ணப்போ ஒரு விஷயம் கவனிச்சேன். இந்தத் தொழிற்சாலைக்கு அடியில பழைய காலத்து நீர் வழிப்பாதைகள் இருக்கு. நாம மைவிழி அக்கா சொன்ன அந்தச் சுவர்களைப் பாதுகாத்தா, அதை அப்படியே ஒரு ‘ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்’ சிஸ்டமா மாத்திடலாம். வருஷத்துக்கு பல லட்சம் லிட்டர் தண்ணியை நாம மிச்சப்படுத்தலாம். இது பிசினஸ் மட்டும் இல்ல, ஒரு சமூகப் பொறுப்பும் கூட!” என்று நிலா மிகத் தெளிவாக விளக்கினாள். நிலாவின் இந்த பிசினஸ் ஞானம் ஆரியனையே வியக்க வைத்தது.

யாழ்மொழியும் சளைக்காமல் தன் கருத்தைச் சொன்னாள். “அதுமட்டும் இல்ல சார்! இங்க இருக்குற ஒரு பழைய குடோனை இடிக்கிறதுக்கு பதிலா, அதை ஒரு ‘டிஜிட்டல் டேட்டா சென்டரா’ மாத்திட்டா, வர்மா குரூப்போட மொத்த கம்யூனிகேஷனையும் இங்கிருந்தே கண்ட்ரோல் பண்ணலாம். செலவு அப்படியே பாதியா குறையும்,” என்று அவள் புள்ளிவிவரங்களைக் காட்டினாள்.

“பரவாயில்லையே மொழிவரி… இதெல்லாம் எப்ப யோசிச்ச?” என்று செழியன் கிண்டலாகக் கேட்க, “நீங்க மீம்ஸ் பார்த்து சிரிச்சுக்கிட்டு  இருந்தப்ப நான் சைட்டை சர்வே பண்ணிட்டு இருந்தேன் செழியா!” என்று யாழ்மொழி நறுக்கென்று பதிலடி கொடுத்தாள்.

அதிகாரிகள் வியந்து போய், “வர்மன் சார்! உங்க பார்ட்னர்ஸ் மூணு பேரும் நிஜமாவே கில்லாடிங்க. இதோ அப்ரூவல் லெட்டர்!” என்று கொடுத்துவிட்டுச் சென்றனர்.

வெற்றியின் சந்தோஷத்தில் இருந்தபோது, ஸ்வேதா ஆதித்யாவிடம் வந்து, “ஆதி… என்ன புரியாத பாஷைல பேசிட்டிருக்கீங்க? எனக்குத் தலைவலிக்குது. நாம இப்போவே கிளம்பி ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாமா?” என்று கொஞ்சினாள். ஆதித்யா அவளைக் கடுமையாக முறைத்து, “ஸ்வேதா! இது பிசினஸ் சைட். அறிவா பேசத் தெரியலன்னா அமைதியா இரு. பசிச்சா வாய மூடிட்டு கார்ல போய் உட்காரு. இல்லன்னா டிரைவரை விட்டு உன்னை இப்போவே பேலஸுக்கு அனுப்பிடுவேன்,” என்று அதட்டினான். அவமானப்பட்ட ஸ்வேதாவும் ஸ்ருதியும் காரில் ஏறிக்கொண்டனர்.

அனைவரும் ஒன்றாக வர்மன் பேலஸிற்கு வந்து சேர்ந்தனர். ஸ்வேதாவும் ஸ்ருதியும் விஸ்வநாத வர்மனிடம் புகார் செய்யத் தொடங்கினர். ஆனால் ஆதித்யா உள்ளே நுழைந்ததும் தன் தாத்தாவின் கண்களைப் பார்த்து உண்மையைச் சொன்னான். “தாத்தா, இன்னைக்கு டெண்டர் கிடைச்சதுக்குக் காரணமே மைவிழி, நிலா மற்றும் யாழ்மொழியோட ஐடியாஸ் தான்.  ஆனா முடிவெடுக்க முன்னாடி அந்த ரெண்டு பொண்ணுங்களும் தன்னோட அண்ணன் கிட்ட கலந்து ஆலோசிட்டு, லாஸ்ட்டா ஆர்யாவோட சஜ்ஜசன் கேட்டு தான் மூணு பேரும் ஒத்துமையா அழகாக ப்ராஜெக்ட் காண பிளான் கொடுத்தாங்க.

நிலா சொன்ன அந்த வாட்டர் பிளான் நம்ம கம்பெனிக்கு ஒரு பெரிய மைல்கல். அவங்க மூணு பேரும் ரொம்பத் தெளிவா பிசினஸ் பண்றாங்க,” என்று பாராட்டினான்.

விஸ்வநாத வர்மன் முகம் மலர்ந்தார். “சபாஷ்! வர்மன் குடும்பத்துப் பெண்ணிற்குஅழகும் கௌரவமும் எப்பவுமே இருக்குதான். ஆனால், சும்மா சொல்லக்கூடாது சக்கரவர்த்தி வீட்டுக்கு பொண்ணுங்க கூட வர்மன் குழுமத்தை மெச்ச வைக்கிற அளவுக்கு அறிவும் இருக்குன்னு நிரூபிச்சிட்டாங்க. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு!” என்றார். (ஆயிரம் இருந்தாலும் தன் மகள் பெற்ற பிள்ளைகள் ஆயிற்றே தாத்தாவாக அவருக்கு பாசம் இல்லாமல் போகும்)

இதைக் கேட்டு ராஜேஸ்வரியும் தர்ஷினியும் நிம்மதியடைந்தனர். ஆனால் கௌசல்யா வஞ்சத்தோடு தன் மகள்களைப் பார்த்துக் கொண்டு, அந்தப் பெண்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினார்.

இரவு உணவின் போது, ஆதித்யாவுக்கு உணவு செல்ல மறுத்தது.

சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி அமைதியாக தன்னை நோக்கி சென்றான் ஏனோ இதுவரை தனக்கு நேரம் அவகாசம் தேவை இருக்கும் பொழுதெல்லாம் எத்தனையோ பெண்களை நாடி இருக்கிறான் ஆனால் ஏனோ இப்பொழுது மனம் முழுக்க என் உடல் பொருள் ஆவி எல்லாம் அந்த மைவிழியை பற்றிய அவன் சிந்தனைகள் சென்று கொண்டிருக்கிறது.


You may also like

Leave a Comment

About Me

Featured