அத்தியாயம் 27
அஞ்சலியின் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் முடியும் தருவாயில், விஜய் ஒரு மிகப்பெரிய திட்டம் போட்டிருந்தான். பல நாள் இடைவேளைக்குப் பிறகு, மனைவியோடு சற்று நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காகவே, யாருடைய தொல்லையும் இல்லாமல் கோவாவில் தனக்கென இருக்கும் ஒரு ரிசார்ட்டில் அறை முன்பதிவு செய்திருந்தான்.
இதை நேரடியாகச் சொன்னால் மனைவி வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள்; மேலும் தன்னை மனைவியிடம் இருந்து பிரிப்பதற்காகவே குடும்பத்தினர் சதி செய்கிறார்கள், அவளை மென்று விழுங்குவது போல தன்னை ஒரு கொடிய மிருகமாகச் சித்தரித்துவிட்டார்கள் என்று அவள் பயப்படக்கூடும் என்பதால், விஜய்க்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னுடன் படித்த நண்பனுக்குத் திருமணம் என்று பொய் சொல்லி அவளை அழைத்துச் செல்லத் திட்டம் தீட்டினான். அது பலிக்கவும் செய்தது. கீதாஞ்சலிக்குத் திருமணத்திற்காகப் பட்டுப் புடவை, சில சுடிதார்கள், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு லெஹங்கா என அசல் திருமணத்திற்குச் செல்வது போலவே அனைத்தையும் எடுத்து வைத்தாள். இதையெல்லாம் பார்த்து விஜய்க்குத் சிரிப்புதான் வந்தது; இந்த ஆடைகளுக்கு அங்கே விடுமுறைதான் என்று அவனுக்குத் தெரியும்.
லக்கேஜ் பேக்கிங் செய்துகொண்டு, அழகாகச் சமத்துப் பிள்ளையாக நின்ற மனைவியைப் பார்த்தபோது அவனுக்குப் பாவமாக இருந்தது.
“உனக்கும் என் கூட வர்றதுக்குச் சம்மதம் போல இருக்கு” என்று இழுவையாக அவளைப் பார்த்து அவன் கேட்க, அஞ்சலிக்குச் சற்று வெட்கம் வந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் “கிளம்பலாமா?” என்று கேட்டாள். அவன் மனைவியை அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்றான். இந்த முறை பொது விமானத்தில் பயணம் செய்ததால் அவளுக்கு நிம்மதி இல்லை. சீட் பெல்ட் கூட அணிய விடாமல் கீழே தள்ளிவிட்டால் என்ன செய்வது என்று பழைய நினைவுகளில் அவள் பயப்பட ஆரம்பிக்க, விஜய் அவள் நடுங்குவதைப் பார்த்து, தான் அவளை எவ்வளவு கஷ்டப்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்வுக்கு ஆளானான்.
இதோ அதோ என்று காலை விமானத்தில் ஏறியவர்கள், மதியம் 2 மணி அளவில் ரிசார்ட்டை வந்து சேர்ந்தனர். வந்த களைப்பில் முகம் கழுவிக்கொண்டு, முத்து முத்தாகப் பூத்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு வந்த மனைவியை, மென்று விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.
அவனின் செய்கை அவளுக்கு ஒருவிதக் கூச்சத்தை உருவாக்கியது. எதற்காக இப்படிச் செய்கிறான் என்று மெல்லத் திரும்பிப் பார்க்க, அவன் நின்ற கோலத்தைப் பார்த்து அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது போல் இருந்தது. கண்கள் தாகத்தோடு சிவந்து கிடக்க, அவன் இடுப்பைப்பற்றி இழுத்து, “ஹாப்பி ஹனிமூன் பேபி!” என்றான்.
அவள் கண்கள் சாசர் போல விரிந்தன. “ஹனிமூன் என்றால்… மீண்டும் தேன்நிலவு அன்று நடந்தது போல ஏதேனும் ஆகிவிடுமோ?” என்ற பயம்தான் அவளிடம் இருந்ததே தவிர, மகிழ்ச்சி இல்லை.
“பயப்படாதே… அன்னைக்கு மாதிரி எதுவும் நடக்காது. இது நமக்கான நாள், நமக்கான நேரம்,” என்று அவள் நெற்றியோடு முட்டி, அவளை அப்படியே கையோடு தூக்கிக்கொண்டு கட்டிலில் சரிய வைத்தான். அவன் பார்வை அவளையே துளைப்பதும், அவனது தீண்டலும் அவளுக்குள் ஒரு புது உணர்வை ஏற்படுத்தியது.
“ஸ்ஸீ…” என்று அவன் பலமாக அவள் இடையைப் பற்றி அழுத்தியதில், வலி தாளாமல் அவள் சிணுங்கினாள். அந்த வலியைப் போக்க, அவன் தன் இதழ்களால் அவளுக்கு மென்மையாக ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தான். அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாய உலகத்திற்குச் சென்றது போல் இருந்தது.
“ம்ம்… ஹாஆஆ…” என்று கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன் பக்கம் ஈர்த்தவன், ஆடைகளுக்கு விடுதலை அளித்துத் தூர வீசினான். வெள்ளைப் போர்வையை இருவர் மீதும் போர்த்திக்கொண்டு, அந்த அறை இருட்டிலும் பிரகாசமாகத் தெரிந்த மனைவியின் முகத்தைப் பார்த்து அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல் ஆட்டிப்படைத்து, நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, விஜய் அஞ்சலியின் மார்பில் தலை வைத்துப் படுக்க ஆரம்பித்தான். பல நாள் கழித்து நடந்த அந்தச் சங்கமம் தந்த மகிழ்ச்சியில் அவளும் உறங்கினாள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கே கண் விழித்த விஜய், அருகில் தன் மனைவியைக் காணாமல் தேடினான். அஞ்சலி பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிகைப்பூச் சூடி, நகைகள் அணிந்து சர்வ லட்சணமாக அவன் முன்பாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தாள்.
“என்னடி காலங்காத்தால இப்படி ஒரு கெட்டப்? என்ன ஆச்சு?” என்று சந்தேகமாகக் கேட்டான்.
“இன்னைக்குத் திருமண முகூர்த்தம் ஆறு டூ ஏழுன்னு சொன்னீங்களே… நான் ரெடி ஆயிட்டேன். கொஞ்ச நேரத்துல மண்டபத்துக்குப் போகணும். உங்களை நம்பி உங்க பிரண்டு பத்திரிகை வச்சிருக்காரு, போய் பார்க்கணும்ல? சீக்கிரம் ரெடி ஆகுங்க,” என்று அவள் சொல்ல, விஜய்க்குச் சிரிப்பு தாளவில்லை. சத்தமாகச் சிரித்துவிட்டான்.
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படிச் சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அஞ்சலி.
“என் பிரெண்டுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்குடி. சும்மா ‘ஹனிமூன்’னு சொன்னா நீ வரமாட்டேன்னுதான் அப்படி ஒரு பொய் சொன்னேன். ஆனா இந்த கெட்டப்ல கூட நீ சூப்பரா இருக்க,” என்று அவள் புடவை முந்தானையைப் பிடித்து இழுத்து, மீண்டும் அவளைக் கட்டிலுக்கு இழுத்தான். அனைத்தும் பித்தலாட்டம் என்று தெரிந்தும், அவன் நெஞ்சில் செல்லமாக அடித்துச் சிரித்துக்கொண்டே அவன் மார்பில் சரிந்தாள். அதுவே சம்மதம் என எடுத்துக்கொண்டு அவன் மீண்டும் அவளை ஆட்கொண்டான்.
“ஷ்ஷ்… ஹாஆஆ…” என இருவரும் இணைந்த திருப்தியில், ஒருவருடைய உயிர் மற்றவருடைய உயிரோடு கலந்து நிம்மதியாகத் துயின்றனர்.
“எப்படி இருந்துச்சுடி?” என்று அவள் கன்னத்தை வருடிக்கேட்டான் விஜய். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அதில் ஒரு வெற்றியைக் கண்டான் விஜய். அது என்னவென்று புரியாமல் அவன் பார்க்க, “என்னோட விஜய்… எனக்கே எனக்கான விஜய்… என்னைப் பூரணமா அவர் மனைவியா ஏற்றுக்கிட்டு என்கூட இருந்ததை எப்படிப் பிடிக்கலைன்னு சொல்ல முடியும்? அவ்வளவு பிடிச்சிருக்கு. ஆனா இதுல இப்படியெல்லாம் மாத்தி மாத்திப் பண்ணுவாங்கன்னு இப்பதான் புரியுது,” என்று அவன் கன்னத்தைக் கடிக்க, அந்த வேகம் அவனை மீண்டும் உயிர்த்தெழச் செய்தது.
மதியம் இரண்டு மணிக்கு மேல் பசி எடுத்த பிறகே இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகினர். இடைப்பட்ட நேரத்தில் அவளுக்குப் பழங்களைக் கொடுத்து, அவனும் உண்டு மகிழ்ந்தான். தங்கள் முதலாம் ஆண்டு திருமண தினத்திற்கு மூன்று மாதங்கள் முன்பாகவே, இந்தச் சங்கமத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்.
பிறகு மதிய உணவை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் அங்குள்ள கண்காட்சிக்குச் சென்றனர். இப்படியே அந்த வாரம் முழுவதும் ஒரு உடல், இரு உயிராகக் கலந்து, தங்கள் வருங்காலச் சந்ததிக்கு விதை போட்டுவிட்டுச் சென்னை வந்து சேர்ந்தனர். தேர்வுகள் முடிந்துவிட்டதால், விஜய் அவளைத் தன் உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த அக்கவுண்டிங் துறையில் வேலை செய்யப் பணித்தான். அவளும் தனக்கான அறையில் கணக்கு வழக்குகளைக் கற்றுக்கொண்டாள். அங்குள்ள சீனியர் அக்கவுண்ட்டரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றாள்.
பகலில் வேலை, இரவில் ஒருவரை ஒருவர் பிரியாத காதல் என வாழ்க்கை நகர்ந்தது. அஞ்சலி தன் கணவன் மொத்தமாக மாறித் தனக்கே சொந்தமாகிவிட்டான் என்ற நம்பிக்கையில் வாழ, விஜய்யும் அவளுடன் ஒரு அழகிய இல்லற வாழ்க்கையைத் திட்டமிட்டான்.
குடும்பத்தினர் ஒரு பக்கம், “இவர்கள் இருவரும் சமாதானமாகி ஜோடிக் கிளிகளாக வலம் வருகிறார்களே, இதுவே போதும்” என்று கனவு காண…
‘இப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுவேனா தங்கம்? இதோ வருகிறேன்’ என்று சனி பகவான் ராகு கேதுவோடு அணிவகுத்து வர, விதி இருவரையும் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்தது.