அத்தியாயம் 20
அதிரவன் அதற்கு மேல் பேசவில்லை மீனாட்சி அதற்கு மேல் கேட்கவும் இல்லை..அன்றிரவு அதிரவனின் கண்களில் தெரிந்த அந்தத் துயரம் மீனாட்சியைத் தூங்க விடவில்லை. விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. பனிக்காற்று ஜன்னல் வழியாக ஊடுருவிக் கொண்டிருந்தது. அதிரவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்; மதுவின் மயக்கமா அல்லது மன அழுத்தத்தின் களைப்பா என்று தெரியவில்லை.
மீனாட்சி மெல்ல எழுந்து, நேற்று அதிரவன் சுட்டிக்காட்டிய அந்தச் சீனக் கட்டிடக்கலை கொண்ட பழைய அவுட் ஹவுஸையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள். ‘அதிரவன் ஏன் இப்படி இருக்கிறான்? அவனது முரட்டுத்தனத்திற்குப் பின்னால் இருக்கும் அந்த ரகசியம் என்ன?’ மெல்லக் கீழே இறங்கி வந்தவள், அந்தப் பழைய வீட்டின் திண்ணையில் அமர்ந்து அங்கிருந்த செடிகளைப் பராலித்துக் கொண்டிருந்த வேலக்காரி மாரியம்மாவிடம் சென்றாள்.
அந்தப் பெரிய பங்களாவில் அதிரவனின் சிறு வயது முதல் இருப்பவள் அவள்தான்.”மாரியம்மா…
அந்த வீடு ஏன் மத்த வீடுகள் மாதிரி இல்லாம ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு? அதிரவன் நேத்து அதைப்பத்தி சொல்லும்போது ரொம்பக் கலங்கிப் போயிட்டாரு,” என்று மீனாட்சி மெல்லக் கேட்டாள்.
மாரியம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். “அது தம்பியோட அம்மாவோட ஞாபகம்மா. தம்பியோட அப்பா பெரிய பிசினஸ்மேன். ஒருமுறை சீனாவுக்கு வியாபாரத்துக்குப் போனப்போ அங்க ஒரு சீனப் பெண்ணைப் பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
அவங்கதான் தம்பியோட அம்மா. அவங்களுக்காகவே சீனக் கலை முறைப்படி அந்த வீட்டை ஆசை ஆசையாக் கட்டிக் கொடுத்தாரு.”மீனாட்சி ஆச்சரியத்துடன் கேட்டாள், “அப்படியா? அப்புறம் ஏன் அந்த வீடு இப்போ இவ்வளவு வெறிச்சோடிப் போயிருக்கு?”
“ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான்மா இருந்தது. ஆனா, தம்பியோட அப்பாவுக்குப் பணத்தாசை அதிகமாயிடுச்சு. பிசினஸ், மீட்டிங்னு வெளிநாட்டிலேயே சுத்த ஆரம்பிச்சாரு. இங்க தம்பியோட அம்மா மொழி தெரியாத ஊர்ல, ஒரு சின்னக் குழந்தையையும் வச்சுக்கிட்டுத் தனியா தவிச்சாங்க. ரெண்டு பேருக்கும் இடையில சண்டை அதிகமாச்சு. தம்பி சின்னக் குழந்தையா இருக்கும்போதே இதையெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் வளர்ந்தான்.
ஒருநாள், அவங்க ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்தப்போ, மாடியில இருந்து தவறி விழுந்து இறந்துட்டாங்க. ஆனா, அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு ஊர் பேசும். அந்த வலியும், அப்பாவோட அலட்சியமும் தான் தம்பியை இப்படி ஒரு கல்லா மாத்திடுச்சுமா,” என்று மாரியம்மா சொல்லி முடிக்கையில் மீனாட்சியின் கண்கள் கலங்கியிருந்தன.
அதிரவன் ஏன் ‘கல்யாணம்’ என்றாலே வெறுக்கிறான், ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறான் என்பதற்கான விடை இப்போது மீனாட்சிக்குக் கிடைத்தது. அவன் ஒரு சிதைந்த குடும்பத்தின் மிச்சம்.
மறுபுறம், கள்ளிக்காட்டு கிராமத்தில் வைஷ்ணவி ஒரு போராட்டத்தையே நடத்திக் கொண்டிருந்தாள்.
“மாமா… இதோ பாருங்க, நான் பழைய ஸ்கூல்ல இருந்து என் சர்டிபிகேட்ஸ் கொரியர் பண்ணிட்டாங்க. நீங்க தடுத்தாலும் சரி, அடிச்சாலும் சரி… நான் நம்ம ஊர் ஸ்கூல்ல டீச்சர் வேலைக்குச் சேரப்போறேன்,” என்று பிடிவாதமாகத் தென்னரசுவின் முன்னால் நின்றாள்.
தென்னரசுவின் முகம் ஆத்திரத்தில் கறுத்தது. “ஏய்! என் கௌரவத்தைச் சோதிக்காத. ஊர் தலைவன் பொண்டாட்டி ஒருத்தன் கிட்ட கையேந்தி சம்பளம் வாங்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன்ல?”
“கௌரவமா? பொண்டாட்டியைக் கஷ்டப்படுத்துறதுல என்ன கௌரவம் இருக்கு? மீனாட்சி அங்க அதிரவன்கூட சந்தோஷமா இருப்பான்னு நினைச்சேன், ஆனா அங்கேயும் அவளுக்கு இதே நிலைமைதான் போல,” என்று வைஷ்ணவி கத்தினாள்.
“இந்த மனுசனோட மல்லுக்கட்டி போர் அடிக்குது”.என்று குழம்பிக் கொண்டிருந்த வைஷ்ணவி மீனாட்சிக்கு போன் செய்ய, மீனாட்சியும் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள்.
அன்று மாலை, மீனாட்சிக்கும் வைஷ்ணவிக்கும் போனில் நீண்ட உரையாடல் நடந்தது. இருவருமே தங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஆணாதிக்கப் போரை எண்ணி வருந்தினர்.
“மீனா… இவனுங்களுக்கு நம்ம அருமை தெரியணும்னா நாம இங்க இருந்து போகணும். என் அப்பாவோட பூர்வீக கிராமம் ஒன்னு நீலகிரி மலையடிவாரத்துல இருக்கு. அங்க யாருக்கும் தெரியாமப் போயிடலாம். வர்றியா?” என்று வைஷ்ணவி கேட்டாள்.மீனாட்சி ஒரு நிமிடம் யோசித்தாள்.
அதிரவன் மீது அவளுக்குக் காதல் இருந்தது, ஆனால் அவனது அதிகாரமும், திருமணத்தின் மீதான அவனது வெறுப்பும் அவளைச் சிதைத்தன. “வர்றேன் வைஷு… நாளைக்குக் விடியற்காலையில கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்துடு,” என்று முடிவெடுத்தாள்…..
..மாலையிலேயே அவனுக்கு இந்த இரவு டின்னர் சைனீஸ் அவுட் அவுஸில் என்று மெசேஜ் வந்திருக்க..அதிரவனும் சீக்கிரமாக மீட்டிங் முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.
இங்கு அதிரவனுக்குப் பிடித்த சீன உணவுகளைச் சமைத்து முடித்துவிட்டு, மீனாட்சி அவனுக்காகக் காத்திருந்தாள். அந்தச் சீன அவுட் ஹவுஸில் நிலவிய அமைதி, ஏதோ ஒரு பெரும் புயலுக்கு முந்தைய நிசப்தம் போல அவளுக்குத் தோன்றியது. அதிரவன் உள்ளே வந்தான். அவனது முகம் வழக்கமான அதிகாரத்தோடு இருந்தாலும், கண்களில் ஏதோ ஒரு தேடல் இருந்தது.
அவன் எதுவும் பேசவில்லை தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மீனாட்சி பார்க்க . அவள் கண்களால், சாப்பிடு என்று சொல்லி அவள் பரிமாறியவுடன், அவனும் உணவை சாப்பிட ஆரம்பித்தான் அவளுக்கும் மூட்டிவிட்டான்.சாப்பிட்டு முடித்ததும், இருவரும் அறைக்குள் சென்றனர்.
நிலவொளி ஜன்னல் வழியாக உள்ளே விழுந்து, ஒரு மங்கலான வெளிச்சத்தை அறை முழுவதும் படரவிட்டிருந்தது. அதிரவன் பால்கனியில் நின்று அந்த இருளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.மீனாட்சி மெல்ல அவன் பின்னால் சென்று, அவனது அகலமான முதுகில் தன் முகத்தைப் புதைத்து அணைத்துக் கொண்டாள்.
அதிரவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் பின் நிதானமானான்.”ஏன் மீனாட்சி… இன்னைக்கு ஏன் இப்படி இருக்க?” என்று அவன் குரல் கரகரப்பாக ஒலித்தது.மீனாட்சி அவனை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டு,
“எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவீங்களா அதிரவன்? வாழ்க்கை முழுக்க இப்படியே என் கூட இருப்பீங்களா? கல்யாணம்ங்கிற சடங்கு தான் வேணாம்னு சொல்றீங்க… ஆனா எனக்கு நீங்க மட்டும் தான் வேணும்னு சொல்லுவீங்களா?” என்று விம்மித் தணிந்த குரலில் கேட்டாள்.
அதிரவன் மெல்லத் திரும்பி அவளைத் தன் பக்கம் இழுத்தான். அவளது கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பு அவனை ஏதோ செய்தது.
“மீனாட்சி… இந்த உலகம் சடங்குகளை நம்புது. ஆனா நான் உண்மையை மட்டும்தான் நம்புறேன். எனக்கு நீ மட்டும் தான். நீ இல்லாம என்னால இருக்க முடியாதுங்கிறது தான் நிஜம்,” என்று சொல்லி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
மீனாட்சி அவனது சட்டைப் பொத்தான்களை மெல்ல நீக்கினாள். அவளது விரல்கள் அவனது மார்பில் பட்டபோது, அதிரவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது. அவள் அவனது கண்களை நேராகப் பார்த்தாள்.
“அதிரவன்… நீங்க முரட்டுத்தனமான ஆம்பளைதான். ஆனா அந்த முரட்டுத்தனத்துக்குள்ள இருக்கிற காதலை நான் பார்த்திருக்கேன். இன்னைக்கு நான் உங்களை முழுசா நம்புறேன்,” என்று சொல்லி அவனது கழுத்தோரம் தன் இதழ்களைப் பதித்தாள்.
அதிரவனால் இனி தன்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு மெத்தையில் சாய்த்தான். அவனது முத்தங்கள் இப்போது ஆவேசமாக இல்லை; மாறாக ஒருவிதமான மென்மையையும், தவிப்பையும் சுமந்து வந்தன. மீனாட்சியின் ஆடைகளை அவன் ஒவ்வொன்றாகக் களையும் போது, அவனது கரங்கள் லேசாக நடுங்கின.
“நீ என் உயிர் மீனாட்சி… உன்னை யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது,” என்று அவன் முணுமுணுக்க, மீனாட்சி அவனைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள். அந்த அறையில் நிலவிய குளிர்ச்சியை அவர்களது உடல்களின் வெப்பம் விரட்டியடித்தது.
நெற்றி முத்தங்கள் முடிந்த பிறகு, இதழ்கள் ஆவேசமாக ஒன்றோடொன்று மோதி, பற்கள் கடிபட்டு ரத்தம் கசிய, இருவரும் ஒருவர் இதழை ஒருவர் சப்பி இழுத்துச் சுகமான அவஸ்தைக்குள் சென்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தவுடன், வீணைச் சிற்பமாக இருக்கும் அவளது தோற்றத்தைக் கண்டு ரசித்து அவன் புன்னகைக்க, அவள் கரங்கள் அவன் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்ததால் தன் உடலை மறைக்கக்கூட முடியாமல் அந்தப் பாவை நெளிந்து கொண்டிருந்தாள்.”என்கிட்ட காட்டுறதுக்கு என்ன கூச்சம்? இது எல்லாமே எனக்குத்தானே…” என்று கூறியவாறே, அவள் அங்கக் கலசங்களில் ஒன்றை எடுத்துப் பந்தாக உருட்டி விளையாடினான்.
இதுவரை கூடலைப் பற்றி அறியாமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவளும், கூடல் கலையில் மன்மதன் பட்டம் பெற்றவனும் இணைந்து செய்யும் அழகிய கூடல் அங்கு அரங்கேறியது.அவளுக்கு இருந்த பயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கி, அதிரடியாக அவள் பெண்மைக்குள் அவன் நுழைந்துவிட, “ஐயோ அம்மா!” என்று பேரதிர்ச்சியோடு மீனாட்சி கண்களை விரித்தாள்.
அவளது இதழ்களுக்கு முத்தம் கொடுத்து, மெல்ல மெல்ல அவளுக்குள் தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தான் அதிரவன். எப்போதும் தோல்வியை ஒப்புக்கொள்ளாதவன், இதில் மட்டும் ஒப்புக்கொள்வானா என்ன? ஆனால், முதல்முறை பெண்மை உடைக்கப்பட்ட காரணத்தால் மீனாட்சியின் கண்களில் கசிந்த கண்ணீரைப் பார்த்தவுடன் அவன் விலகப் பார்த்தான்.
ஆனால், அவனை விடாமல் பிடித்து இழுத்துக்கொண்டவள், தன் இடையைத் தூக்கி அவனுக்கு வசதி செய்துகொடுக்க, அவ்வளவுதான்! இனி யார் பேச்சையும் கேட்காத வேங்கையாக அவள் மீது சரிந்து, தன் தீராத தாபத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தான்.அதிரவனின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு உரிமையும், ஆழமான காதலும் இருந்தது. மீனாட்சி வலியை விட, தான் நேசித்தவனின் முழுமையான அணைப்பில் இருப்பதன் சுகத்தை உணர்ந்தாள்.
அவளது மேனியில் அவன் பதித்த ஒவ்வொரு முத்தமும் அவனது கடந்த கால வலிகளைத் துடைப்பது போல் இருந்தது. அந்த இரவு அவர்களுக்குள் ஒரு புதிய பந்தத்தை உருவாக்கியது. அவனது முரட்டுத் தனமான ஆளுமை அவளது மென்மையில் கரைந்து போனது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இருவரும் வியர்வையோடு ஒருவரையொருவர் பின்னிப் பிணைந்து படுத்திருந்தனர். அதிரவன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு உறங்கிப் போக, மீனாட்சி மட்டும் உறங்காமல் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளது கண்கள் கலங்கியிருந்தன.
‘இவ்வளவு அன்பையும், காதலையும் வச்சுக்கிட்டு ஏன் அதிரவன் ஒரு பிடிவாதமான முரடனா இருக்கீங்க? இந்தத் தருணத்தை என் வாழ்நாள் முழுக்க என்னால மறக்க முடியாது. ஆனா உங்களுக்காகத்தான் நான் இந்த முடிவை எடுக்குறேன்,’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.அது ஒரு விடைபெறும் அணைப்பு என்பது அந்த உறக்கத்தில் இருந்த அதிரவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
***
விடியற்காலை நான்கு மணி. அதிரவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மீனாட்சி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, ஒரு சிறு பையில் தன் உடைகளை எடுத்துக்கொண்டாள். அந்தச் சீன அவுட் ஹவுஸைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு, சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.
அதே நேரம், வைஷ்ணவி தன் முகத்தைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு, தென்னரசுவின் கண்ணில் படாமல் வீட்டிலிருந்து தப்பி ஓடி,கீழே இருக்கும் கிராமத்தில் வயல் வேலைக்கு செல்லும் மக்கள் ஒரு வண்டியில் செல்ல அவளும் எப்படியோ அவர்களிடம் லிப்ட் கேட்டு தன்னை அடையாளப்படுத்தாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.அங்கிருந்து அவள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சேர. அதே சமயம் மீனாட்சி அங்கு வந்திருந்தாள்.
முதலில் வந்த வைஷ்ணவி நீலகிரிக்கு இரண்டு டிக்கெட் வைத்திருந்ததால் அவர்கள் ஏறும் பேருந்தில் அமர்ந்து கொண்டார்கள். மீனாட்சி வைஷ்ணவியை பார்த்து,
“இனி நாம வாழப்போற வாழ்க்கை நமக்கானது வைஷு,” என்று மீனாட்சி சொல்ல, இருவரும் அந்த நகரத்தை விட்டு வெகுதூரம் செல்லும் பேருந்தில் ஏறினர்.
———