அத்தியாயம் 18
முதலிரவு அறையின் ஜன்னல் வழியாக மலைக்காற்று ஜில்லிட்டு வீசிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த அறைக்குள் நிலவிய வெப்பம் காற்றில் கலந்திருக்கவில்லை; அது தென்னரசுவின் ஆவேசத்திலும், வைஷ்ணவியின் தவிப்பிலும் கலந்திருந்தது. விடியற்காலையில் உறங்கி எழுந்த தென்னரசு, கட்டிலில் அமர்ந்து தன் சட்டையை மாட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒருவிதமான ஆதிக்க கர்வம் இருந்தது. அவன் பார்வையில் வைஷ்ணவி ஒரு மனுஷியாகத் தெரியவில்லை, தான் வென்றெடுத்த ஒரு பொருளாகவே தெரிந்தாள்.
மெல்லக் கண் விழித்த வைஷ்ணவிக்கு உடல் முழுவதும் ஒருவிதமான வலி. நேற்றைய இரவு அவளுக்கு ஒரு கனவு போலவும் இருந்தது, அதே சமயம் ஒரு ரணமாகவும் இருந்தது. அவள் மெல்ல எழுந்து அமர்ந்து, கலைந்திருந்த தன் சேலையைச் சரி செய்துகொண்டாள்.
“என்ன புள்ள… விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு. இனிமேலும் தூங்குனா எங்க அம்மா சும்மா விடாது. எந்திரிச்சு போயி காபி கீபி போடு,” என்று அதிகாரத்தோடு சொன்னான் தென்னரசு.
வைஷ்ணவி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “எனக்கு ஒரு விஷயம் பேசணும் மாமா… எனக்கு வீட்ல சும்மா இருக்குறது பிடிக்கல. நம்ம ஊர்ல பள்ளிக்கூடம் இருக்குல்ல… நான் அங்க வேலைக்கு போறேன். அதுக்கு முன்னாடி பழைய ஸ்கூல்ல இருந்து என்னோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுக்கணும்.”
தென்னரசு சட்டெனத் திரும்பி அவளை முறைத்தான். அவன் சிரிப்பில் ஒரு எள்ளல் இருந்தது. “என்னது… வேலையா? ஏய்… இது மலை கிராமம் புள்ள. இங்க பொம்பளைங்க அடுப்பங்கரையிலயும், முடிஞ்சா காட்டு வேலையிலயும் தான் இருக்கணும். ஆம்பளைக்கு கீழ தான் பொம்பளைங்க இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? என் பேச்சை மீறி நீ எங்கேயும் போகக்கூடாது. வேணும்னா என் ஆத்தா கூட காட்டு வேலைக்கு போ. அங்க இருக்குற வேலையப் பாரு.”
வைஷ்ணவியின் முகம் சுருங்கியது. “இது என்ன நியாயம்? நான் கஷ்டப்பட்டு படிச்சது எதுக்கு?”
“எனக்கு அது போதும். இப்போ கிளம்பு,” என்று சொல்லிவிட்டு அவள் எதிர்பாராத வண்ணம் இதழில் முத்தமிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
‘இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை’என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு புலம்பிக்கொண்டேன் வெளியே வர
இதெல்லாம் முன்கூட்டி செய்த வேலை என்பதால் தென்னரசு தன் வேலையை டவுனுக்கு மாற்றிக்கொண்டு, மலை கிராமத்துக்குக் கீழே இருக்கும் ஃபேக்டரியில் வேலையில் சேர்ந்துவிட்டான். தென்னரசுவின் அம்மாவுடன் சேர்ந்து வைஷ்ணவி மலை மேலிருக்கும் வயல்வெளிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
‘இதெல்லாம் உனக்கு தேவை தான்’ என்பது போல், ரத்னா வழி அங்கிருந்து தன் வீட்டிற்கு புறப்பட்டு சென்று விட்டார்.
தன் மகன் பிடிவாத குணம் தெரிந்ததால் வைஷ்ணவியை எந்த ஒரு தொந்தரவும் ராக்காயி செய்யவில்லை .
தன் பேத்தி தனக்கே மருமகளாக வந்த பிறகு அவரால் எப்படி நடந்து கொள்வது என்று அவருக்கே புரியவில்லை.
மறுபுறம், மீனாட்சியின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. யாரிடமாவது மனது விட்டுப் பேச வேண்டும் என்று தோன்றியது. மறுநாள் திருமணம் ஆனால் அவளால் எதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அப்போது சரியாக அந்த நேரத்தில் வைஷ்ணவி அங்கு வந்தாள். இருவரும் ஊர் எல்லையில் இருக்கும் அந்தப் பழைய அம்மன் கோவில் மண்டபத்தில் அமர்ந்தார்கள்.
“வைஷு… என்னால முடியலடி. இந்த கல்யாணம் எனக்கு நரகமா தெரியுது. அந்த அதிரவனை என்னால மறக்கவே முடியல. ஆனா அப்பா பாக்குற மாப்பிள்ளையும் அவரை மாதிரியே தான் இருப்பாரு போல,” என்று சொல்லி விம்மி அழுதாள் மீனாட்சி. அதிரவனைப் பற்றிய ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாள்.
வைஷ்ணவி அவளை அணைத்துக் கொண்டாள். “மீனா… நீ அழுவாத. எனக்கு மட்டும் என்ன வாழுதாம்? இப்போ தான் காட்டு வேலைக்கு போயிட்டு வர்றேன். ஆனா, உன் வாழ்க்கை இப்படி ஆகக்கூடாது.”
வைஷ்ணவிக்கு ஒரு யோசனை தோன்றியது. மீனாட்சி அழுகையில் மூழ்கியிருக்க, அவளுக்குத் தெரியாமல் அவளது செல்போனை எடுத்து அதிரவனின் பர்சனல் எண்ணை ரகசியமாகப் பதிந்து கொண்டாள்.
அன்றிரவு, சென்னையில் அதிரவன் தன் அலுவலகத்தில் ஒரு மிகப்பெரிய பிசினஸ் டீலிங்கை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனது ஹோட்டலில் ஒரு பெரிய பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. எதிரி பிசினஸ்மேன் பொறாமையில் எரிந்து கொண்டிருந்தான். ஆனால் அதிரவன் மதுவில் மூழ்கியிருந்தான். மீனாட்சி தன்னைத் தேடவில்லை என்ற கோபம் அவன் உச்சந்தலையில் ஏறியிருந்தது.
அப்போது ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதிரவன் எரிச்சலுடன் போனை எடுத்தான். “யார் இது?”
“சார்… நான் வைஷ்ணவி பேசுறேன். மீனாட்சியோட தோழி. நாளைக்கு அவளுக்கு கல்யாணம். ஆனா அவளுக்கு விருப்பம் இல்ல. உங்களை நினைச்சு அழுதுட்டு இருக்கா. என்னை மாதிரி அவளும் இந்த மலைக்காட்டுல சீரழியக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவளை வந்து கூட்டிட்டுப் போங்க சார்,” என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தாள்.
அதிரவனின் கையில் இருந்த கண்ணாடி கோப்பை நொறுங்கியது. அவன் கண்களில் ஒரு மின்னல் வெட்டியது. “கல்யாணமா? என்னை ஏமாத்தப் பார்த்தியா மீனாட்சி… உனக்கு இருக்குடி பெரிய தண்டனை”
மறுநாள் காலை, முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மலை கிராமமே பரபரப்பாக இருந்தது. திடீரென்று கிராமத்தின் நுழைவாயிலில் பெரிய பெரிய கருப்பு நிற ஜீப்புகள் புழுதி பறக்க வந்து நின்றன. கிராமமே மிரண்டு பார்த்தது.
ஜீப்பிலிருந்து அதிரவன் கையில் ஒரு பெரிய துப்பாக்கியுடன் இறங்கினான். அவனது தோற்றம் ஒரு போர்க்கள வீரனைப் போல இருந்தது. நேராகத் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தவன், மணமேடையில் இருந்த மீனாட்சியின் கையைப் பற்றினான்.
“ஏலே தம்பி யாரு நீ திடீர்னு வந்து கல்யாணம் பண்ண கைய புடிச்சு இழுக்குற??”.
என்று அங்கிருப்பவர்கள் கேட்க மீனாட்சியின் பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதிரவன் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் லெமன் மீனாட்சி பெற்றோர்களை பார்த்து அழுத்தமாக,
“உங்க பொண்ணு என் கூட வர்றதுக்கு விருப்பம் இல்லைன்னா இங்கேயே விட்டுப் போறேன். ஆனா அவளுக்கு விருப்பம் இருக்குன்னு சொன்னா, நான் அவளை மட்டும்தான் கூட்டிட்டுப் போவேன். யாராவது வம்புக்கு வந்தா உயிரை எடுத்துடுவேன்!” என்று கர்ஜித்தான்.
மீனாட்சியின் தந்தை ஆவேசமாக முன்னே வர, அதிரவன் துப்பாக்கியைக் காட்டினான். மீனாட்சி ஒரு நிமிடம் தன் பெற்றோரைப் பார்த்தாள், மறுநிமிடம் அதிரவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அப்போது அனைவரும் புரிந்து கொண்டனர் இவள் வேலைக்கு செல்லும் சிறிது காலத்தில் ஒரு ஆண்மகனை பிடித்து விட்டாள் என்று..
மேலும் வாய்க்கு வந்தபடி சிலர் பேச.
“பெத்தவங்களை ஏமாத்திட்டியே பாவி… கௌரவம் போச்சு, குல கௌரவம் போச்சு!” என்று அவளது அம்மா சாபமிட்டார்.
பக்கத்தில் நின்றிருந்த வைஷ்ணவிக்குக் கோபம் வந்தது. “ஆமா… கௌரவம், கௌரவம்னு சொல்லி உங்க பொண்ணை பிடிக்காத இடத்துல கல்யாணம் பண்ணி என்ன லாபம்? அட்லீஸ்ட் அவ மனசுல என்ன இருக்குன்னு கேட்டீங்களா?” என்று சத்தமிட்டாள்.
தென்னரசுக்கு இப்போதுதான் ஊர் தலைவன் பதவி கிடைத்திருந்தது. ஊர் தலைவனின் மனைவி இப்படிப் பேசுவதைக் கண்டு மக்கள் முணுமுணுத்தனர். தென்னரசுவின் ஆணாதிக்கம் தலைதூக்கியது. “ஏய்! வாடி வீட்டுக்கு,” என்று வைஷ்ணவியைக் தரதரவென இழுத்துச் சென்றான்.
மீனாட்சி அதிரவனுடன் ஜீப்பில் ஏறிச் சென்றாள். ஜீப் கிளம்பும்போது மீனாட்சிக்கு ஒரு நிம்மதி இருந்தாலும், தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்த வலி இருந்தது. ஆனால் அதிரவனின் பிடிவாதமான பார்வை அவளை மிரள வைத்தது.
வீட்டிற்கு வந்த தென்னரசு, வைஷ்ணவியை அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டினான். “எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்துறயா? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. நீதான் அந்த மனுஷனுக்கு போன் பண்ணி வர சொன்னியா?”
வைஷ்ணவி நிமிர்ந்து நின்றாள். “நான்தான் அதிரவனுக்கு போன் பண்ணினேன். மீனாட்சி நல்லா இருக்கணும்னு நினைச்சேன். அது தப்பா?”
தென்னரசுவின் கை ஓங்கியது. ‘பளார்’ என்ற சத்தம் அறைக்குள் எதிரொலித்தது. வைஷ்ணவி கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் விழுந்தாள். “காதலிச்ச பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்,” என்று விரக்தியில் சிரித்தாள்.
அவள் முகம் பார்க்க முடியாமல் தென்னரசு அந்தத் சென்று விட்டான் ஆனால் தன் மனைவிதான் இதற்கெல்லாம் காரணத்திற்கு வாய் திறக்கவில்லை..
இங்கு அதிரவன் முக்கியமான அரண்மனை வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறான் அதுவும் அவள் பார்ப்பதற்கு மலை வாசிப்பேன் போல் உடை அணிந்து இருக்க,
“ஏங்க நம்ம தம்பி இந்த மாதிரி சமாச்சாரம் உள்ள பொண்ணுங்கள எல்லாம் பக்கத்துல இருக்குற கெஸ்ட் ஹவுஸில் தான் முடிக்கும் . புதுசா அரண்மனை வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்து இருக்கு??”
இது ஒரு பணி பெண் இன்னொரு பணிப்பெண்ணை பார்த்து கேட்க.
“கூறு கெட்டவ மாதிரி பேசாத. நம்ம முதலாளி என்னைக்கு இந்த மாதிரி நல்ல வேலையெல்லாம் பார்ப்பாரு? நமக்கு எல்லா வசதியும் செஞ்சிருக்காரு. அதுக்காக அவர் நல்லவர் கிடையாது. அவர் குடுக்குற சம்பளத்துக்கு நம்மகிட்ட அந்த அளவுக்கு நம்ம உழைப்பை உறிஞ்சி எடுத்து வேலை வாங்கிட்டு இருக்காரு. இந்தப் பொண்ணைப் பார்க்கப் பாவமா இருக்கு. இந்த மனுஷன் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டான். ஏதோ ஒரு காரணம் இருக்கு. ஆனா, மாளிகைக்குள்ள ஒரு பொண்ணு வர்றதே இதுதான் முதல் தடவை. பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கு. நாம எதுவும் முடிவு பண்ண முடியாது. என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.”
என்று அந்தப் பெண் சொன்னவுடன், இதுதான் நிதர்சனம் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண்ணும் வாயை மூடிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால், இங்கே முதலாளியிடம் போட்டுக்கொடுத்து நல்ல பெயர் வாங்குவதற்காக இங்கே (சிலர்) நாக்கைத் தொங்கப் போட்டு இருக்கிறார்கள். எதற்குக் வாங்கிக் கட்டிக்க வேண்டும் என்று அமைதியாகிவிட்டனர்.
…
இங்கே அறைக்குள் அவளை அழைத்து வந்தவன், அங்கு இருக்கும் கட்டில் மேல் அவளைத் தள்ளிவிட்டு, அவளையே அக்னி கக்கும் பார்வை பார்த்தான்.
அவள் கண்களில் பயமில்லை. ஆனால், கண்கள் சிவந்து அவனை எரித்துவிடும் அளவிற்கு உக்கிரமாக இருந்தது. அந்த உக்கிரம்தான் மேலும் மேலும் அவளை இன்னும் துன்புறுத்த வேண்டுமென்று அவனுக்குத் தோன்றுகிறது.
“என்ன, உன்னோட மலைக் கிராமத்துக்குப் போயிட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு பாக்குறியா? நான் உனக்குக் கொடுத்த டைமை விடப் பத்து நாள் எக்ஸ்ட்ரா ஆயிடுச்சு. நீயா அனுசரிச்சுப் போனா இவ்வளவு பின்விளைவுகள் ஏற்பட்டிருக்காது. இப்போ நீ நினைச்சாலும் இந்த பேலஸை விட்டுப் போக முடியாது.”
என்று சவால் விட.
“உங்கள விரும்பியது என்னோட தப்புனு சொல்றத விட அது விதி. ஆனா நீங்க உங்க கூட பழகுற பொண்ணுங்க மாதிரி பத்தோடு 11 போல என்னையும் சேர்க்கக்கூடாது எனக்கு அது பிடிக்கல”.
என்று சொல்ல
“மீனாட்சி எதிர்பார்த்தது எது நடக்காது எனக்கு புடிச்ச மாதிரி தான் நடந்தாகணும் வேற வழி இல்ல நீ இதெல்லாம் பார்த்து தான் ஆகணும்”.
“நீங்க என் உடம்ப தொட வரும்போது ஒரே ஒரு விஷயம் மட்டும் யோசிச்சுக்கோங்க என் மனசையும் சேர்த்து அணைச்சா தான் நமக்குள்ள இருக்குற உறவு நிலைக்கும் “.
என்று அவள் விடாப்பிடியாக இருக்க.
“நீ என்ன மீன் பண்ணி சொல்றன்னு எனக்கு தெரியும் ஆனா அது மட்டும் நடக்காது”.
என்று அவன் சவால் விட்டு செல்ல இவள் பிடிவாதமாக இருக்க ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இவர்களுக்குள் அனைத்தும் எதிரும் புதிரும் தான் ஒருவரை ஒருவர் ஐந்து நிமிடம் அமர்ந்து பேசி க்கொண்டாலே பிரச்சினை தீர்ந்துவிடும்.
ஆனால் நீயா நானா என்ற எண்ணத்திலேயே இருவரும் தங்கள் அழகிய பந்தத்தை மறந்து விட்டார்கள்.